மகா அரஹத் பாஹிய தாருசீரியன் A Monk

கௌதம புத்த பகவான் இந்த உலகில் தோன்றிய காலத்தில் பிறந்த பாஹிய தாருசீரியன் எனும் பெயர்கொண்ட குமரன், இந்த புத்த சாசனத்தில் மிகவும் விரைவாக தர்மத்தினை உய்த்துணர்ந்தவர்களின் முதன்மையானவர் ஆவார். இந்த உத்தமரது வாழ்வினை பல்வேறு விதமாக நாம் ஆராய்ந்து பார்க்க முடியும். பாஹிய தாருசீரியரது
சன்சாரப் பயணக்கதையை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த சன்சாரப்பயணத்தின் நீளத்தினையும் அபாயகரமான தன்மையினையும் எம்மால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பாஹிய குமரனுக்கு பதுமுத்தர புத்த பகவானது காலத்திலேயே உன்னதமான மோட்சத்தினை உய்த்துணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்ததனை இந்த கதையை வாசிக்கும்போது எம்மால் உணரமுடிகிறது. ஆனால் அதனை பற்றி நினையாத
பாஹிய எதிர்வரும் காலங்களில் தோன்றும் புத்த பகவானது சாசனத்தில் விரைவாக தர்மத்தினை உய்த்துணர்ந்து கொள்ளும் சங்கையர் மத்தியில் தான் முதன்மைபெற வேண்டும் என்றே விரும்பினார். அதன் காரணமாகவே அவருக்கு ஒரு இலட்ச கற்ப காலங்களுக்கு இந்த பயங்கரமான சன்சாரத்தில் பயணிக்க வேண்டியதாயிற்று. காசியப்ப புத்த பாகவானது காலத்திலேயும் தன் உயிரை பொருட்படுத்தாது உத்தம மோட்சத்தை
உறுதி செய்வதற்காக அறும்பாடுபட்டார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதன் பின்னர் எமது புத்த பகவானது காலத்தில் பாஹிய எனும் பெயரில் பிறந்து தான் ஒரு அரஹத் தேரர் என பொய்யாக நடித்து மக்களின் உபசரிப்புக்களை பெற்றார். முற்பிறவி ஒன்றில் நண்பராக இருந்த ஒரு பிரம்மரது உதவி கிடைக்காவிடில் முற்கூறிய பாவங்களை செய்ததால் மரணத்தின் பின்னர் நரகத்தில் பிறக்கும் நிலையும் அவருக்கு
இருந்தது. இவ்வாறான நிலையிலிருந்து உலகின் அதியுன்னத நிலையான அரஹத் நிலையை அடைந்த, விரைவாகவே தர்மத்தினை உய்த்துணர்ந்தோருள் முதன்மை நிலையை பெற்ற மகா பாஹிய தாருசீரிய அரஹத் தேரருக்கு எமது நமஸ்காரமாகட்டும்.