புத்த பகவான் மொழிந்தருளிய முதலாவது தர்ம போதனை

தம்மசக்க பவத்தன சூத்திரம்

ஏவங் மே சுதங் ஏகங் சமயங் பகவா பாராணசியங் விஹரதி இசிபதனே மிகதாயே. தத்ர கோ பகவா பஞ்சவக்கியே பிக்கூ ஆமன்தேசி தம்மசக்க பவத்தன சூத்திரம்

என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசி இசிபத்தன எனும் மான்கள் அபய பூமியில் தரித்திருந்தார். அச்சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் ஐந்து பிக்குமார்களை நோக்கி இந்த தம்மசக்க பவத்தன சூத்திரத்தை மொழிந்தருளினார். தம்மசக்க பவத்தன சூத்திரம்

த்வே மே பிக்கவே, அன்தா பப்பஜிதேன ந சேவிதப்பா

புண்ணியமிகு பிக்குகளே, துறவிகளால் மேற்கொள்ளக்கூடாத அந்தங்கள் இரண்டு உள்ளது.

யோசா’யங் காமேசு காமசுகல்லிகானுயோகோ ஹீனோ கம்மோ போதுஜ்ஜனிகோ அனரியோ அனத்தசங்ஹிதோ

(துறவறத்தை மேற்கொண்டவர்) இந்த காமத்தினோடு, காம சுகத்தின் மீது ஒட்டி உறவாடி வசிப்பாராயின் அது இழிவானதாகும். கீழ்த்தரமானதாகும். போதுஜ்ஜனர் பழக்கப்படுத்தும் ஒன்றாகும். உத்தம மனிதர்கள் பழக்கப்படுத்தாத ஒன்றாகும். அர்த்தமற்றதாகும்.

யோசா’யங் அத்தகிலமதானுயோகோ துக்கோ அனரியோ அனத்தசங்ஹிதோ

(துறவை மேற்கொண்டவர்) தன்னை வருத்திக்கொள்ளும் ஏதேனும் செயற்பாடுகளை தன் விடுதலை மார்க்கமாகக்கொண்டு செய்வாராயின்   அது துக்கத்திற்குரியதாகும். உத்தம மா மனிதர்கள் பழக்கப்படுத்தாததாகும். அர்த்தமற்றதாகும். தம்மசக்க பவத்தன சூத்திரம்

ஏதே தே பிக்கவே, உபோ அன்தே அனுபகம்ம மஜ்ஜிமா படிபதா ததாகதேன அபிசம்புத்தா சக்குகரணீ ஞானகரணீ உபசமாய அபிஞ்ஞாய சம்போதாய நிப்பாணாய சங்வத்ததி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த இரு அந்தங்களுக்குள் பிரவேசிக்காது, ததாகதரால் மத்தியஸ்த செயற்பாடு உய்த்துணரப்பட்டது. இந்த மத்தியஸ்த செயற்பாடு தர்ம விழிகளை பெற்றுக்கொடுக்கும். அறிவை தோற்றுவிக்கும். உள்ளத்தணிவை ஏற்படுத்தும். விசேட ஞானத்தினை தரும். உய்த்துணர்வினை ஏற்படுத்தும். மோட்சத்திற்காகவே வழி வகுக்கும்.

கதமா ச சா பிக்கவே, மஜ்ஜிமா படிபதா ததாகதேன அபிசம்புத்தா சக்குகரணீ ஞானகரணீ உபசமாய அபிஞ்ஞாய சம்போதாய நிப்பாணாய சங்வத்ததி?

புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரால் உய்த்துணரப்பட்ட, தர்ம விழிகளை பெற்றுக்கொடுக்கும், அறிவை தோற்றுவிக்கும், உள்ளத்தணிவை ஏற்படுத்தும், விசேட ஞானத்தினை தரும், உய்த்துணர்வினை ஏற்படுத்தும், மோட்சத்திற்காகவே வழி வகுக்கும் அந்த மத்தியஸ்த செயற்பாடு என்றால் என்ன? தம்மசக்க பவத்தன சூத்திரம்

அயமேவ அரியோ அட்டங்கிகோ மக்கோ. செய்யதீதங்: சம்மாதிட்டி சம்மாசங்கப்போ சம்மாவாசா சம்மாகம்மன்தோ சம்மா ஆஜீவோ சம்மாவாயாமோ சம்மாசதி சம்மாசமாதி

அது என்றால் இந்த ஆரிய எண் சீர் வழியேயாகும். அவையாவன, நற் பார்வை, நற் சிந்தனை, நல் வார்த்தை, நற் செயல், நல் ஜீவனோபாயம், நல் வீரியம், நல்ல விழிப்புணர்வு, நல் உளச்சமாதி எனும் இவையே ஆகும்.

அயங் கோ சா பிக்கவே, மஜ்ஜிமா படிபதா ததாகதேன அபிசம்புத்தா சக்குகரணீ ஞானகரணீ உபசமாய அபிஞ்ஞாய சம்போதாய நிப்பாணாய சங்வத்ததி

புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரால் உய்த்துணரப்பட்ட, தர்ம விழிகளை பெற்றுக்கொடுக்கும், அறிவை தோற்றுவிக்கும், தணிவை ஏற்படுத்தும், விசேட ஞானத்தினை தரும், உய்த்துணர்வினை ஏற்படுத்தும், மோட்சத்திற்காகவே வழி வகுக்கும் அந்த மத்தியஸ்த செயற்பாடு இதுவே.

இதங் கோ பன பிக்கவே, துக்கங் அரியசச்சங். ஜாதி’பி துக்கா ஜரா’பி துக்கா வ்யாதி’பி துக்கோ மரணம்பி’துக்கங் அப்பியேஹி சம்பயோகோ துக்கோ பியேஹி விப்பயோகோ துக்கோ யம்பிச்சங் ந லபதி தம்பி துக்கங் சங்கித்தேன பஞ்சுபாதானக்கந்தா துக்கா.

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கம் எனும் ஆரிய சத்தியமாகும். பிறப்பு துக்கமாகும். முதுமையடைவது துக்கமாகும். நோய் நொடிகள் ஏற்படுவதும் துக்கமாகும். மரணமடைவதும் துக்கமாகும். பிரியமற்ற நபர்களுடனும் பிரியமற்ற வஸ்துக்களுடனும் சேர்ந்து வாழ்தல் துக்கமாகும். பிரியமான நபர்கள், பிரியமான வஸ்துக்கள் என்பன இல்லாது பிரிந்து வாழ்தலும் துக்கமாகும். விரும்பும் ஏதேனும் இருப்பின் அவை கிடைக்காமையும் துக்கமாகும். சுருங்கக்கூறின் இந்த பஞ்ச உபாதானஸ்கந்தங்களுமே துக்கமாகும்.

இதங் கோ பன பிக்கவே, துக்கசமுதயங் அரியசச்சங். யாயங் தண்ஹா போனோபவிகா நந்திராக சஹகதா தத்ரதத்ராபிநந்தினி. செய்யதீதங்: காம தண்ஹா பவ தண்ஹா விபவ தண்ஹா

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியமாகும். மறு பிறவியினை ஏற்படுத்திக்கொடுக்கும், விருப்புடன் ஒட்டிக்கொள்ளும், அவ் அவ் இடத்தினை இன்பத்தோடு ஏற்றுக்கொள்ளும் தண்ஹா இருப்பின் அதுவே துக்கத்தின் தோற்றமாகும். அவையாவன, காம தண்ஹா, பவ தண்ஹா, விபவ தண்ஹா என்பவையாகும். தம்மசக்க பவத்தன சூத்திரம்

இதங் கோ பன பிக்கவே, துக்க நிரோதங் அரியசச்சங் யோ தஸ்ஸாயேவ தண்ஹாய அசேசவிராகநிரோதோ சாகோ படிநிஸ்ஸக்கோ முத்தி அனாலயோ.

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியமாகும். (மேற்குறிப்பிட்ட) அந்த தண்ஹாவே மீதமின்றி விருப்பின்றி இல்லாமல் போகுமாயின், கை விடுவதாயின், அழியுமாயின், அந்த தண்ஹாவிலிருந்து மீள்வதாயின் விருப்பு இல்லாமல் போவதாயின் அதுவே துக்கத்தின் அழிவாகும்.

இதங் கோ பன பிக்கவே, துக்கநிரோதகாமினிபடிபதா அரியசச்சங். அயமேவ அரியோ அட்டங்கிகோ மக்கோ. செய்யதீதங்: சம்மாதிட்டி சம்மாசங்கப்போ சம்மாவாசா சம்மாகம்மன்தோ சம்மா ஆஜீவோ சம்மாவாயாமோ சம்மாசதி சம்மாசமாதி.

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்க அழிவிற்கான செயற்பாடு எனும்; ஆரிய சத்தியமாகும். அதுவே இந்த ஆரிய எண்சீர் வழியாகும். அவையாவன, நற்பார்வை, நற்சிந்தனை, நல் வார்த்தை, நற் செயல், நல் ஜீவனோபாயம், நல் வீரியம், நல்ல விழிப்புணர்வு, நல் உளச்சமாதி எனும் இவையே.

இதங் துக்கங் அரியசச்சந்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கம் எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது. தம்மசக்க பவத்தன சூத்திரம்

தங் கோ பனிதங் துக்கங் அரியசச்சங் பரிஞ்ஞெய்யந்தி மே பிக்கவே, , புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கம் எனும் ஆரிய சத்தியத்தினை பரிபூரணமாக உய்த்துணர வேண்டும்  என எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்கங் அரியசச்சங் பரிஞ்ஞாதன்தி மே பிக்கவே, , புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கம் எனும் ஆரிய சத்தியம் என்னால்  பரிபூரணமாக உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது என எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

இதங் துக்கசமுதயங் அரியசச்சன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்கசமுதயங் அரியசச்சங் பஹாதப்பன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியத்தினை பரிபூரணமாக அழிக்க வேண்டும்  என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்க சமுதயங்  அரியசச்சங் பஹீனந்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் என்னால்  பரிபூரணமாக அழிக்கப்பட்டது என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

இதங் துக்கநிரோதங் அரியசச்சன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்க நிரோதங் அரிய சச்சங் சச்சிகாதப்பன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கத்தின் அழிவு  எனும் ஆரிய சத்தியத்தினை உறுதிபடுத்த வேண்டும்  என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்க நிரோதங்  அரியசச்சங் சச்சிகதந்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கத்தின் அழிவு  எனும் ஆரிய சத்தியம் என்னால்  பரிபூரணமாக உறுதி செய்யப்பட்டது என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

இதங் துக்கநிரோதகாமினிபடிபதா அரியசச்சன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்க அழிவிற்கான மார்க்கம் எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்கநிரோதகாமினிபடிபதா அரிய சச்சங் பாவேதப்பன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்க அழிவிற்கான மார்க்கம்  எனும் ஆரிய சத்தியத்தினை பயிற்சி செய்ய வேண்டும்  என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

தங் கோ பனிதங் துக்கநிரோதகாமினிபடிபதா அரியசச்சங் பாவிதன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி

புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்க அழிவிற்கான மார்க்கம்  எனும் ஆரிய சத்தியம் என்னால்  பரிபூரணமாக பயிற்சி செய்யப்பட்டது என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.

யாவகீவஞ்ச மே பிக்கவே, இமேசு சதுசு அரியசச்சேசு ஏவங் திபரிவட்டங் த்வாதசாகாரங் யதாபூதங் ஞானதஸ்ஸனங் ந சுவிசுத்தங் அஹோசி. நேவதாவா’ஹங் பிக்கவே, சதேவகே லோகே சமாரகே சப்ரஹ்மகே சஸ்ஸமணப்ராஹ்மணியா பஜாய சதேவ மனுஸ்ஸாய அனுத்தரங் சம்மாசம்போதிங் அபிசம்புத்தோ பச்சஞ்ஞாசிங்.

புண்ணியமிகு பிக்குகளே, இந்த நாற்பேருண்மைகள் தொடர்பாக இவ்வாறு மூன்று வகையாகவும் பனிரெண்டு முறைகளாகவும் உண்மை நிலை எனும் ஞான பார்வை பரிசுத்தமாக என்னால் உய்த்தறியப்படவில்லையோ அதுவரை காலத்திற்கும் புண்ணியமிகு பிக்குகளே, தேவர்கள், பிரம்மர்கள், மாரன், சிரமணர்கள், அந்தணர்கள் உட்பட்ட இந்த தேவ மனிதர்களின் மத்தியில் நான் மகா உத்தம சம்மாசம்போதி நிலையை அடைந்தேன் என உறுதியளிக்கவில்லை. (தெரிவிக்கவில்லை)

யதோ ச கோ பிக்கவே, இமேசு சதுசு அரியசச்சேசு ஏவங் திபரிவட்டங் த்வாதசாகாரங் யதாபூதங் ஞானதஸ்ஸனங்  சுவிசுத்தங் அஹோசி. அதாஹங்  பிக்கவே, சதேவகே லோகே சமாரகே சப்ரஹ்மகே சஸ்ஸமணப்ராஹ்மணியா பஜாய சதேவ மனுஸ்ஸாய அனுத்தரங் சம்மாசம்போதிங் அபிசம்புத்தோ பச்சஞ்ஞாசிங்

புண்ணியமிகு பிக்குகளே, இந்த நாற்பேருண்மைகள் தொடர்பாக இவ்வாறு மூன்று வகையாகவும் பனிரெண்டு முறைகளாகவும் உண்மை நிலை எனும் ஞான பார்வை பரிசுத்தமாக என்னால் உய்த்தறியப்பட்டதோ அப்போதே புண்ணியமிகு பிக்குகளே, தேவர்கள், பிரம்மர்கள், மாரன், சிரமணர்கள், அந்தணர்கள் உட்பட்ட இந்த தேவ மனிதர்களின் மத்தியில் நான் மகா உத்தம சம்மாசம்போதி நிலையை அடைந்தேன் என உறுதியளித்தேன். (தெரிவித்தேன்)

ஞானஞ்ச பன மே தஸ்ஸனங் உதபாதி, அகுப்பா மே சேதோ விமுத்தி அயமன்திமா ஜாதி நத்திதானி புனப்பவோ’தி

என்னுள் ஞான தரிசனம் தோன்றியது. இந்த மனதின் விடுதலையானது ஒருபோதும் மாற்றமடையாதது. இதுவே எனது இறுதி பிறப்பாகும். இனி எனக்கு ஒருபோதும் மறுபிறவி என்பது கிடையாது.

இதமவோச பகவா. அத்தமனா பஞ்சவக்கியா பிக்கு பகவதோ பாசிதங் அபினந்துன்தி

பாக்கியமுள்ள பகவான் இந்த தம்மசக்க பவத்தன சூத்திரத்தை மொழிந்தருளினார். இதனை செவிமடுத்த இந்த ஐந்து பிக்குமாரும் மிகவும் அகமகிழ்ந்தனர். பாக்கியமுள்ள பகவான் மொழிந்தருளிய இந்த போதனையை மிகவும் இன்பத்துடன் ஏற்றுக்கொண்டனர். தம்மசக்க பவத்தன சூத்திரம்

இமஸ்மிஞ்ச பன வெய்யாகரணஸ்மிங் பஞ்ஞமானே ஆயஸ்மதோ கொண்டஞ்ஞஸ்ஸ விரஜங் வீதமலங் தம்ம சக்குங் உதபாதி, யங் கிஞ்சி சமுதய தம்மங் சப்பங் தங் நிரோததம்மன்’தி

இந்த தம்மசக்கபவத்தன சூத்திரத்தை பகவான் மொழிந்தருளிய போது மகா கொண்டஞ்ஞ தேரர் காரணங்களால் தோன்றிய ஏதேனுமு; இருப்பின் அவ் அனைத்தும் காரணங்கள் அற்றுப்போகும் போது அழிந்துவிடும் இயல்பிலானவை எனும் கிலேசங்களற்ற அஞ்ஞான துருக்களற்ற தர்ம விழிகள் தோன்றியது.

பவத்திதே ச பன பகவதா தம்மசக்கே பும்மா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங் ஏதங் பகவதா பாராணசியங் இசிபதனே மிகதாயே அனுத்தரங் தம்மசக்கங் பவத்திதங் அப்பதிவத்தியங் சமணேன வா ப்ராஹ்மணேன வா தேவேன வா மாரேன வா ப்ரஹ்முனா வா கேனசி வா லோகஸ்மின்தி

எமது பாக்கியமுள்ள புத்த பகவானால் வாரணாசி இசிபத்தனை மான்கள் அபய பூமியில் அதி உத்தம தம்ம சக்கம் நிகழ்த்தப்பட்டது. அதனை எந்த சிரமணராலோ, அந்தணராலோ, மாரனாலோ, தேவராலோ, பிரம்மராலோ, அல்லது வேறு யாராலோ மாற்ற முடியாது என பூமியை வசிப்பிடமாக கொண்ட தேவர்கள். தர்ம ஓசை எழுப்பினார்கள். தம்மசக்க பவத்தன சூத்திரம்

பும்மானங் தேவானங் சத்தங் சுத்வா சாதும்மஹாராஜிகா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

மண்ணுலக தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த சாதும்மஹாராஜிக தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

சாதும்மஹாராஜிகானங் தேவானங் சத்தங் சுத்வா தாவதிங்சா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங் …

சாதும்மஹாராஜிக தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த தாவதிங்ச தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

தாவதிங்சானங் தேவானங் சத்தங் சுத்வா யாமா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங் …

தாவதிங்ச தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த யாம தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

யாமானங் தேவானங் சத்தங் சுத்வா துசிதா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

யாம தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த துசித தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

துசிதானங் தேவானங் சத்தங் சுத்வா நிம்மாணரதி தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

துசித தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த நிம்மாணரதீ  தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

நிம்மாணரதினங் தேவானங் சத்தங் சுத்வா பரனிம்மிதவசவத்தினோ  தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

நிம்மாணரதீ தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த பரனிம்மிதவசவத்தி தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

பரனிம்மிதவசவத்தீனங் தேவானங் சத்தங் சுத்வா ப்ரஹ்மபாரிசஜ்ஜா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

பரனிம்மிதவசவத்தி தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த ப்ரஹ்மபாரிசஜ்ஜ தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

ப்ரஹ்மபாரிசஜ்ஜானங் தேவானங் சத்தங் சுத்வா பிரஹ்மபுரோஹிதா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

ப்ரஹ்மபாரிசஜ்ஜ தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த பிரஹ்மபுரோஹித தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

பிரஹ்மபுரோஹிதானங்  தேவானங் சத்தங் சுத்வா மஹாபிரஹ்மா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

பிரஹ்மபுரோஹித தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த மஹாபிரஹ்ம தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

மஹாபிரம்மானங் தேவானங் சத்தங் சுத்வா பரித்தாபா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

மஹாபிரஹ்ம தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த பரித்தாப தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

பரித்தாபானங் தேவானங் சத்தங் சுத்வா அப்பமாணாபா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

பரித்தாப தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த அப்பமாணாப தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

அப்பமாணாபானங்  தேவானங் சத்தங் சுத்வா ஆபஸ்ஸரா  தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

அப்பமாணாப தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த ஆபஸ்ஸர தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

ஆபஸ்ஸரானங் தேவானங் சத்தங் சுத்வா பரித்தசுபா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

ஆபஸ்ஸர தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த பரித்தசுப தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

பரித்தசுபானங் தேவானங் சத்தங் சுத்வா அப்பமாணசுபா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

பரித்தசுப  தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த அப்பமாணசுபா தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

அப்பமாணசுபானங் தேவானங் சத்தங் சுத்வா சுபகி;ண்ஹகா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

அப்பமாணசுப தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த சுபகி;ண்ஹக தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

சுபகிண்ஹகானங் தேவானங் சத்தங் சுத்வா வேஹப்பலா  தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

சுபகிண்ஹக  தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த வேஹப்பல தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

வேஹப்பலானங் தேவானங் சத்தங் சுத்வா அவிஹா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

வேஹப்பல தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த அவிஹ தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

அவிஹானங்  தேவானங் சத்தங் சுத்வா அதப்பா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

அவிஹ தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த அதப்ப தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

அதப்பானங் தேவானங் சத்தங் சுத்வா சுதஸ்ஸா தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

அதப்ப தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த சுதஸ்ஸ தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

சுதஸ்ஸானங் தேவானங் சத்தங் சுத்வா சுதஸ்ஸீ தேவா சத்தமனுஸ்ஸாவேசுங்…

சுதஸ்ஸ தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த சுதஸ்ஸீ தேவர்கள் தர்ம ஓசை எழுப்பினர்.

சுதஸ்ஸீனங் தேவானங் சத்தங் சுத்வா அகனிட்டகா  தேவா சத்தமனுஸ்ஸாவேசுங். ஏதங் பகவதா பாராணசியங் இசிபத்தனே மிகதாயே அனுத்தரங் தம்மசக்கங் பவத்திதங்; அப்பதிவத்தியங் சமணேன வா ப்ராஹ்மணேன வா தேவேன வா மாரேன வா ப்ரஹ்முனா வா கேனசி வா லோகஸ்மின்’தி

சுதஸ்ஸீ தேவர்களது தர்ம ஓசையை செவிமடுத்த அகனிட்டக தேவர்கள்;, எமது பாக்கியமுள்ள புத்த பகவானால் வாரணாசி இசிபத்தனை மான்கள் அபய பூமியில் அதி உத்தம தம்ம சக்கம் நிகழ்த்தப்பட்டது. அதனை எந்த சிரமணராலோ, அந்தணராலோ, மாரனாலோ, தேவராலோ, பிரம்மராலோ, அல்லது வேறு யாராலோ மாற்ற முடியாது என தர்ம ஓசை எழுப்பினார்கள்.

இதிஹ தேன கணேன தேன முஹுத்தேன யாவ ப்ரஹ்மலோகா சத்தோ அப்புக்கஞ்சி. அயஞ்ச தசசஹஸ்ஸீ லோகதாது சங்கம்பி சம்பகம்பி சம்பவேதி

அந்த கணத்திலேயே அந்த முகூர்த்தத்திலேயே இந்த அனைத்து பிரம்ம லோகங்கள் மத்தியிலும் இந்த தர்ம ஓசை பரவிச்சென்றது. பத்தாயிரம் உலக மண்டலங்களும் அதிர்ச்சியடைந்தன. மிகவும் அதிர்ந்தன. பலமாக அதிர்ச்சியடைந்தன.

அப்பமாணோ ச உழாரோ ஓபாசோ லோகே பாதுரஹோசி அதிக்கம்ம தேவானங் தேவானுபாவன்’தி

தேவர்களது தேவத்துவத்தையும் விஞ்சிய வரையறுக்க முடியாத மகா ஒளியொன்று உலகமெங்கும் பரவிச்சென்றது.

அத கோ பகவா  உதானங் உதானேசி:

அச் சமயத்தில் பாக்கியமுள்ள பகவான் ஒரு உதானத்தினை மொழிந்தருளினார்.

அஞ்ஞாசி வத போ கொண்டஞ்ஞோ அஞ்ஞாசி வத போ கொண்டஞ்ஞோதி.

கொண்டஞ்ஞ பிக்கு உறுதியாக உய்த்துணர்ந்தார். கொண்டஞ்ஞ பிக்கு உறுதியாக உய்த்துணர்ந்தார்.

இதிஹிதங் ஆயஸ்மதோ கொண்டஞ்ஞஸ்ஸ அஞ்ஞாகொண்டஞ்ஞொத்வேவ நாமங் அஹோசீ’தி

இவ்வாறாக கொண்டஞ்ஞ தேரருக்கு அஞ்ஞாகொண்டஞ்ஞ எனுமு; நாமமும் கிடைத்தாயிற்று.

ஏதேன சச்சேன சுவத்தி ஹோது

இந்த சத்தியத்தின் பலத்தினால் அனைவருக்கும் நன்மை கிடைப்பதாக !