ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை

நீங்கள் இப்போது ஆனாபானாசதி தியானத்தையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  தியானம் செய்வதற்கு எவ்வாறு அமர வேண்டும். முதுகெழும்பை நேராக வைத்திருக்கும் முறை, உள்மூச்சு. வெளிமூச்சில் கவனமாக இருக்கும் முறை என்பன நாம் முன்னர் கற்றோம். நால்வகை சதிபட்டபான தர்மத்தினை விருத்தி செய்யும்போது விருப்பு, வெறுப்பு என்பவற்றுக்கு இடமளிக்காது  கிலேசங்களை அழிக்கும் வீரியம் கொண்டு, தர்ம அறிவு கொண்டு, விழிப்புணர்வினை பழக்கப்படுத்தும் முறையையே நாம் கற்கவுள்ளோம்.

நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக செய்யும் போதே நல்ல விழிப்புணர்வினை எம்மால் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல விழிப்புணர்வே வாழ்க்கை உய்த்துணர்விற்காக உபகாரம் செய்யும் என நாம் முன்னர் கற்றோம். உங்களால் நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள முடியாவிடில். இந்த தர்மத்தினை ஒருபோதும் உய்த்துணர முடியாது. நல் விழிப்புணர்வு எனும் விடயம் உங்கள் வாழ்விற்கு மிகவும் உபகாரமாக அமையும் முக்கியமான விடயமாகும்.

குருவை இனங்கண்டு கொள்ளுங்கள்.

இன்னுமொரு முக்கியமான விடயத்தை நாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ‘தியானம் செய்ய வேண்டுமானால் ஒரு விசேட குருவினை சந்தித்து அவரிடம் கர்மஸ்தானங்களை கற்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அது ஆபத்து’ (புத்த பகவான் ஒருபோதும் இவ்வாறு மொழியவில்லை) எனும் இந்த கருத்து பிற்காலத்தில்தான் பரவியுள்ளது. ஆனால் புத்த பகவான்  மொழிந்த தர்மத்தின்படி நாம் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டியது புத்த பகவானது நிகரற்ற தர்மத்தினையும் வினயத்தினையுமே (ஒழுக்கத்தினையுமே). புத்த பகவான் பரிநிர்வாணத்தினை அடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர், “பரிநிர்வாணத்தினை எய்த பின்னர் இதுவரை காலமும் பகவான் மொழிந்த தர்மத்தினையும் ஒழுக்கக்கோட்பாடுகளையும் வழிகாட்டியாக, குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மகா சங்கையரை பணித்தார். எனவே குரு தொடர்பாக எமக்கு எவ்வித பிரச்சினைகளும் எழ முடியாது. ஏனெனில் தெளிவாகவும் முறையாகவும் போதிக்கப்பட்ட பகவானது தர்மமே எமது குரு.

உண்மையான குரு யார்?

ஒரு நபர் எனும் ரீதியில் குரு என்பவர் புத்த பகவான் மொழிந்தருளிய உத்தம தர்மத்தினை போதிப்பவரா என நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர் கூறுவது புத்த பகவானால் போதிக்கப்பட்ட உத்தம தர்மம் என்றால் அங்கு புத்தபகவானது கருத்து, புத்த பகவானது மனப்பான்மை, இலட்சியம் என்பன தெளிவாக உணர முடியும். தன் தனிப்பட்ட கருத்துக்களை தர்மம் எனக்கூறாமல் புத்த பகவான் மொழிந்த தர்மத்தினை அந்த நபர்     உள்ளவாறே கூறுவதே அதற்கு காரணமாகும்.

சந்தேகிக்க வேண்டிய  சந்தர்ப்பம்

புத்த பகவானது தர்மத்தில் புத்த பகவான் தெளிவாகவே இந்த விடயத்தை மொழிந்துள்ளார். (ததாகதப்பவேதிதோ தம்ம வினயோ விவடோ விரோசதி நோ படிச்சன்னோ) தாதகரான புத்த பகவான் மொழிந்த உத்தம தர்மமும் வினயமும் (ஒழுக்கக்கோட்பாடுகளும்) வெளிப்படையாக இருக்கும்போதே பிரகாசிக்கும். மறைந்திருக்கும்போது பிரகாசிக்காது.

குரு முஷ்டிகள் இல்லை.

புத்த பகவான் யாருக்கும் தனிமையாக இரகசியமாக தியான உபதேசங்கள் செய்யவில்லை. இரகசியமாக தர்ம உபதேசங்கள் செய்யவில்லை. புத்தபகவான் மொழிந்த போதனைகள், தியானங்கள், ஒழுக்ககோட்பாடுகள் எனும் அனைத்துமே  சங்கீதியம் செய்யப்பட்டது. அங்கு ஒளிவு மறைவு என எதுவுமே இல்லை. புத்த பகவானது தர்மம் இரகசியங்கள் அற்றது. இதனாலேயே புத்த தர்;மம் ஷஏஹிபஸ்ஸிக| எனும் குணம் கொண்டதாக விளங்குகிறது. அதாவது ‘வாருங்கள் வந்து ஆராய்ந்து பாருங்கள்’ என அறைகூவல் விடுவதே புத்த பகவானது தர்மமாகும். இந்த குணம் கொண்ட தர்மத்தில் இரகசியங்கள் உபதேசங்கள் இல்லை. எங்கேயாயினும் தியானம் என கூறி இரகசிய அறிவுரைகள் செய்வார்களாயின் அங்கு தூய்மையான புத்த தர்மம் இருக்கும் என நீங்கள் ஏமாற வேண்டாம். அதுவே சந்தேகிக்க வேண்டிய இடமாகும்.

புத்த பகவானது தர்மத்தில் இரகசியங்கள் இல்லை. பகவானது தர்மத்தின் எந்த பாகத்தினை வேண்டுமானாலும் வெளிப்படையாக பேசலாம். அங்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. பகவானது தர்மத்தினை திறந்தால் பிரகாசிக்கும். மூடி வைத்தால் பிரகாசிக்காது.

புத்த சாசனம் நீண்ட காலம் நிலைக்க வேண்டுமாயின்

ஒருநாள் ஆனந்த தேரர் புத்த பகவானிடம் இவ்வாறாக வினவினார். ‘பகவானே, இந்த புத்தசாசனம் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு காரணியாக அமையும் விடயங்கள் என்ன?’ என்று. அதற்கு பகவான் ‘நால்வகை சதிபட்டான தர்மங்களை விருத்தி செய்தல், நால்வகை சதிபட்டான தர்மங்கள் தொடர்பாக பேசுதல், நால்வகை சதிபட்டான தர்மங்களை பின்பற்றுதல், பயிற்சி செய்தல் எனும் இவ் விடயங்களை செய்யாவிடில் புத்த சாசனம் மறைந்துவிடும். நாம் இப்போது இங்கே கற்றுக்கொண்டிருப்பதுவும் நால்வகை சதிபட்டான தர்மங்களை பற்றியே.

ஆனாபானசதியின் முதலாவது படி

விழிப்புணர்வுடன் மூச்சினை உள்ளெடுப்பதும் வெளியே விடுவதும் தொடர்பாகவே நாம் இதுவரை பேசினோம்.  இவ்வாறாக நீங்கள் முழு கவனத்துடன் மூச்சினை உள்ளெடக்கும் போது  வெளியிடும்போது காலப்போக்கில் உங்கள் முழுக்கவனமும் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சில் நிலைக்க ஆரம்பிக்கும். மனம் எங்கும் சிதறாது முழுமையாக உங்கள் கவனத்தினை மூச்சின்; மீதே நிலைக்கச்செய்ய முடியும். இதுவே ஆனாபானசதி தியானத்தின் முதலாவது படியாகும்.

மூச்சுக்காற்றின் மாற்றங்கள்.

இவ்வாறாக மூச்சினை உள்ளெடுக்கும்போது வெளியிடும்போது மூச்சுக்காற்றில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்வதே ஆனாபானசதியின் இரண்டாவது படியாகும். சில மூச்சுக்காற்றுகள் நீளமானவையாக இருக்கும். சில மூச்சுக்காற்றுகள் குறுகியனவாக இருக்கும். நீங்கள் முழுக்கவனத்துடன் சுவாசிப்பதால் நீண்ட மூச்சினை உள்ளெடுக்கும்போது ஷநீண்ட மூச்சினை உள்ளெடுக்கிறேன்| என்பதனை உணர்ந்துகொள்வீர். நீண்ட மூச்சினை வெளியிடும்போது ஷநீண்ட மூச்சினை வெளியிடுகிறேன| என உணர்;ந்துகொள்வீர். குறுகியளவிலான மூச்சினை உள்ளெடுக்கும் போது ஷகுறுகிய மூச்சினை உள்ளெடுக்கிறேன்| என்பதனை உணர்ந்துகொள்வீர். குறுகிய மூச்சினை வெளியிடும்போது ஷகுறுகிய மூச்சினை வெளியிடுகிறேன்| என்பதனை உணர்ந்து கொள்வீர். இதனை உணர்ந்து கொள்வதற்கு மூச்சுக்காற்றின் மீது முழுக்கவனத்துடன் இருப்பதுவே காரணமாகும்.

இழைப்புளியின் உவமை

புண்ணியமிக்கவர்களே, இங்கு புத்த பகவான் ஆனாபானசதி தியானம் தொடர்பாக அழகிய உவமையை மொழிந்துள்ளார். திறமையானதொரு தச்சன் இருக்கிறார். அவர் தனது சீவுளியை எடுத்து நன்கு கையை நீட்டி பலகையை சீவுகிறார். இவ்வாறாக கை நீட்டி அவர் பலகை சீவும்போது ‘நான் இப்போது நன்கு கையை நீட்டி பலகையை சீவுகிறேன்’ என்பதனை அறிவார். சில வேளைகளில் அவர் கையை மடித்து சிறிதளவு பலகைளை சீவுகிறார். இவ்வாறாக பலகையை சீவும் அவர், ‘நான் இப்போது கையை மடித்து குறுகிய அளவில் பலகையை சீவுகிறேன்’, என்பதனை அறிவார். இது போன்றதே ஆனாபானசதி தியானமும்.

சீவுளியால் பலகையை சீவும் மனிதர் அறிந்துகொள்வதைப்போன்றே ஆனாபானசதி தியானம் செய்பவர், தான்  நீண்ட மூச்சினை உள்ளெடுக்கும்போது ‘நான் இப்போது நீண்ட மூச்சினை உள்ளெடுக்கிறேன்’ என்பதனை அறிந்துகொள்வார். நீண்ட வெளிமூச்சினை விடும்போது ‘நான் இப்போது நீண்ட வெளிமூச்சினை விடுகிறேன்’ என்பதனை அறிந்துகொள்வார். அதேபோல் குறுகிய உள்மூச்சு எடுக்கும்போதும் குறுகிய வெளிமூச்சு விடும்போதும் அதனை நன்கு உணர்ந்து கொள்வார்.

உங்களது முயற்சியினாலும் அறிவினாலும் வீரியத்தினாலுமே செய்ய வேண்டும்.

புத்த பகவான் இதனை உணர்ந்து கொள்வதற்கு எவ்வளவு அழகானதொரு உவமையை மொழிந்துள்ளார் என்பதனை பார்த்தீர்களா? இவ்வாறாக உள்மூச்சு வெளிமூச்சு தொடர்பாக நன்கு உணர்ந்துகொள்ளும்போது தியானத்தில் உங்கள் மனம் நிலைத்திருக்கும். அதாவது உங்களால் மனதை சிதறவிடாது சுவாச காற்றிலேயே நிலைக்கச்செய்வதற்கு இப்போது உங்களால் முடியும். ஆனால் அதனை உங்களது வீரியம், முயற்சி, தர்மஞானம் என்பவற்றை கொண்டே செய்துகொண்டீர்கள்.

உங்களது முயற்சியை குறைத்த பின்னர் நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கே ஆளாகிவிடுவீர்கள். இடைவிடாது உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றின் மீது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் இவ்வாறாக சுவாசத்தின் மீது விழிப்புணர்வுடன் இருக்கும்போது நீண்ட மூச்சினை உள்ளெடுத்தல், நீண்ட மூச்சினை வெளியிடுதல், குறுகிய மூச்சினை உள்ளெடுத்தல், குறுகிய மூச்சினை வெளியிடுதல் என்பன மிகத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அப்போது உங்களால் முழுமையாக   சுவாசத்தின் இயல்பினை உணர்ந்து கொள்ள முடியும். அதாவது எவ்வாறு மூச்சு உட்செல்கிறது. மூச்சுக்காற்று உட்சென்று வெளியே வரும்போது நீங்கள் அந்த மூச்சுக்காற்று தொடர்பாக நன்கு உணர்ந்திருப்பீர்கள். அதேபோன்று வெளியிடும் மூச்சு தொடர்பாகவும் நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.

உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசமும் ஒரு உடலாகும்.

உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசம் ஒரு வகையான உடலே என தர்மத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனாலேயே தர்மத்தில் சப்பகாய படிசங்வேதி எனக்கூற காரணம். அதற்கு காரணம் இந்த சுவாசம் இந்த உடலுடன் பிணைந்து இருப்பதாகும். ஒன்றித்து இருப்பதாகும். அது காய சங்காரம் எனவும் தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றின் மீது முழுமையாக கவனம் செலுத்தி மூச்சினை உள்ளெடுப்பதுவும் வெளியடுவதும் தொடர்பாக அவதானத்தை செலுத்தி இந்த உள் மூச்சு வெளிமூச்சினை நன்கு உணர்ந்து கொண்டு சுவாசத்திலேயே மனதை நிலைக்கச்செய்யும்போது (பஸ்ஸம்பயங் காய சங்காரங்) உங்களது மனம் சமாதியடையும்போது உங்களது சுவாசக்காற்று இலகுவாகும். சுவாசம் இலகுவாகும்போது அந்த சுவாசத்தினையும் நன்கு உணர்ந்துகொண்டு அந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றில் மனதை நிலைக்கச்செய்ய வேண்டும். அதாவது மூச்சினை உள்ளெடுக்கும்போதும் அது இலேசாக இருக்கிறது. வெளியிடும் மூச்சும் இலகுவாக இருக்கிறது இதனை நன்கு உணர்ந்துகொண்டு மூச்சு எடுக்க வேண்டும். மூச்சினை வெளிவிட வேண்டும்.

இப்போது நீங்கள் ஆனாபானசதி எனும் தியானத்தினுள் மூச்சு எடுக்கும் முறை மூச்சினை வெளியிடும் முறை, நீண்ட மூச்சினை உள்ளெடுத்தல், நீண்ட மூச்சினை வெளியிடல், குறுகிய மூச்சினை உள்ளெடுத்தல், குறுகிய மூச்சினை வெளியிடல், சுவாசக்காற்றின் இலகுவான நிலை என்பன நன்கு உணர்ந்துகொண்டு ஆனாபானசதி தியானத்தினை மேலும் விருத்தி செய்துகொள்வதற்கு திறமையானவராவீர்.

தொடரும்…