நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம் 2017-01-09T11:28:59+00:00

Project Description

ஆனாபானசதி தியானத்தினுள் வேதனானுபஸ்ஸனத்தினையும் சித்தானுபஸ்ஸத்தினையும் விருத்தி செய்யும் முறை

மென்மேலும் இந்த ஆனாபானசதி தியானத்தினை விருத்தி செய்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இதுவரை உள்மூச்சு வெளிமூச்சு என்பன இலகுவாகும் வரை அறிந்துகொண்டீர்கள்.  உள்மூச்சு வெளிமூச்சு என்பன தணியும்போது உங்களுல் ஆனந்தம் தோன்றலாம். இவ்வாறு மகிழ்ச்சி தோன்றும்போது அந்த மகிழ்ச்சிக்கு ஆசைப்பட்டு; ஆனாபானசதி தியானத்தினை நிறுத்திவிட்டு மகிழ்ச்சிக்கு கவனம் செலுத்த வேண்டாம். அப்போது மனதில் உள்ள சமாதி இல்லாமல் போகும். அதனால் மேலும் தியானத்தினை விருத்தி செய்யும் வாய்ப்பு இல்லாமல் போகும். தோன்றிய இன்பத்தினை புரிந்துகொண்டு மூச்சினை உள்ளெடுக்க வேண்டும். இன்பத்தினை புரிந்துகொண்டு மூச்சினை வெளியிட வேண்டும்.

அதன் மூலம் நீங்கள் மூச்சின் மீது கொண்ட கவனம் சிதறாது. அநேகமானவர்கள் இவ்வாறு தியானம் செய்துகொண்டுபோகும் போது சமாதி தோன்றியது எனில், அவர்கள் இந்த சமாதி சுயமாக தோன்றியதாக நினைத்துக்கொள்வார்கள். சமாதி தோன்றுவதற்கு ஏதுவான காரணிகளான வீரியம், அறிவு, தர்ம ஞானம் என்பன இருந்ததாலயே அந்த சமாதி தோன்றிதென்று அவர்கள் மறந்துவிடுகின்றனர். உள்ளச்சமாதியில் இருந்து எழும்போது அந்த சமாதி இல்லாமல் போகும். இதனை அறியாதவர்கள், தியானத்தினை துவங்கும்போதே முன்பு இருந்த அந்த சமாதியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். எனவே ஆனாபானசதி எனும் தியானத்தின் மீது கவனம் செலுத்தாமல் சமாதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் தவிப்புடனே தியானத்தை செய்ய முற்படுவார்கள். ஆனாபானசதி தியானத்தின் மீது பவனம் செலுத்தாமல் உள்ளச்சமாதியை குறிக்கோளாகக்கொண்டு தியானம் செய்வதற்கு முற்படுவதால் சமாதி ஏற்படாது.

சமாதி இல்லை என கவலைப்பட வேண்டாம்.

சமாதி இல்லாமல் போனதால் கவலை ஏற்படும்.  ஒருவர், ‘நான் முன்னர் தியானம் செய்யும்போது எனது மனம் ஒருங்கிணைந்தது. இப்போது என் மனம் சமாதி நிலையை அடைவதில்லையே’ என்று கவலைப்படுவார். கவலை வந்தவுடன் பிரச்சினை ஆரம்பிக்கும். மனதில் ஏற்பட்ட அந்த கவலையை அடிப்படையாகக்கொண்டு மனம் சிதற ஆரம்பிக்கும். மனம் சிதறும்போது ஒருங்கிணையாது. ஒருங்கிணையாத மனம் தணியாது. மனம் அமைதியடையாதபோது சுவாசத்தின் மீது கவனம் செலுத்த முடியாது. அப்போது மனம் விழிப்புணர்வினை இழந்துவிடும். விழிப்புணர்வு அற்ற காரணத்தினால் மனம் சமாதியடையாது. எனவே தியானம் செய்பவர் மென்மேலும் கலக்கமடைவார். இதன் காரணமாகவே அவரால் சமாதியினை தோற்றுவித்துக்கொள்ள முடியாமல் போகும்.

சமாதி காரணங்களினாலயே தோற்றம் பெற்றது.

தியானம் செயயும்போது நீங்கள் இதனை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் உள்ள ஒன்றிணைவு எனும் சமாதி தோற்றம் பெறுவது காரணங்களினாலேயே. அதற்கான காரணங்கள் அற்றுப்போகும் போது அந்த சமாதியும் இல்லாமல் போய்விடும். எனவே ஒருவர் உள்ளெடுக்கும் மூச்சு வெளியிடும் மூச்சு என்பவற்றிலேயே தன் மனதை நிலைக்கச் செய்வாராயின் அவரால் அந்த சமாதியினை தன் மனதில் நிலைக்கச்செய்ய முடியும்.

இவ்வாறாக ஆனாபானசதி தியானத்தினை செய்து மனம் ஒருங்கிணையும் போது அவர் இன்பத்தினை அனுபவிப்பார். அந்த இன்பம் சாதாரணமானதல்ல. நாம் பாடல் ஒன்றை கேட்டு, பாடி, எங்கேனும் சுற்றுலாச் சென்று, சுவையானதொரு உணவை சாப்பிடுவதால் வரும் சந்தோஷம் கடினமானதாகும். ஆனால் உள்ளம் சமாதியடைவதால் கிடைக்கும் இன்பம் அதனிலிருந்து வேறுபட்டதாகும். மனம் அமைதியடைவதால், ஷாந்தமடைவதால் ஏற்பட்ட மென்மையான ஆனால் வலிமையானதொரு இன்பமாகும். தியானம் செய்பவர் இந்த இன்பத்தின் மீது ஒட்டிக்கொள்ளாது தியானத்தை தொடர வேண்டும்.

இப்போது சுகத்தினையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறாக உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றிலேயே மனதை நிலைநிறுத்திக்கொள்ளும்போது மனதை உற்சாகப்படுத்தும் இன்பம் எனும் உணர்வு சிறிது சிறிதாக தணிந்து சுகம் உணர ஆரம்பிக்கும். இந்த சுகம் உடலிலும் ஏற்படும், மனதிலும் ஏற்படும். இப்போது உங்கள் சுவாசம் இன்னும் இலகுவாக இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

தொடர்ந்தும் சுயவுணர்வுடனேயே இருங்கள்.

சிலர் இந்த தியானத்தினை செய்துகொண்டு சமாதியை விருத்தி செய்துகாள்ளும்போது அவர்கள் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துவதை மறந்து விடுகிறார்கள். இவ்வாறாக மறந்து அவர்கள் சுவாசத்தினை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவ்வாறாக தொடர்ந்தும் உள்ளச்சமாதியுடன் அவர்கள் செய்வதால் சிறிது நேரத்தில் அவர்களுக்கு சுவாசம் தொடர்பான எவ்வித உணர்வும் இருக்காது. எனவே ‘

நான் என்ன தியானம் செய்வதற்கு முயற்சித்தேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்’ என்பதையும் அறியாத நிலையை அடைவார். சுவாசம் என்பதனை உணர முடியாமல் இருப்பதற்கு காரணம் நாம் அதனை சுயவுணர்வுடன் காணாதிருப்பதே ஆகும். பல மணித்தியாலங்கள் வேண்டுமானாலும் சமாதியின் போது சுவாசத்தினை உணர முடியும். அதற்கு நாம் இது உள்மூச்சு வெளிமூச்சு என மனசிகாரம் செய்தல் மிக அவசியமாகும். சிலர் ஆனாபானசதி தியானம் செய்வதற்கு ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு சுவாசம் தொடர்பான உணர்வு இல்லாமல் போகும். அப்படியானவர்கள் தியானம் செய்வதற்கு ஆரம்பிக்கும்போதே ‘நான் சுவாசத்தின் மீது கவனமாக இருப்பேன். சுயவுணர்வுடன் இருப்பேன். சுவாசம் மீதான உணர்வு இல்லாமல் போக விடமாட்டேன்’என திடமான இலக்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறாக முன் அறிவிப்பு செய்யும்போது சுவாசம் தொடர்பான உணர்வு இல்லாமல் போகாது. இவ்வாறாக செய்யும்போதும் சுவாசம் தொடர்பான உணர்வு அற்றுப்போவதாயின் ‘இந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பனவற்றை நான் உணராவிடினும் இந்த சுவாசம் ஒன்றும் இல்லாமல் போகவில்லை. எனவே நான் இதனை அறிவினால் ஆராய்கிறேன்’ இவ்வாறாக நீங்கள் அறிவினால் அதனை உணரும்போது உள்மூச்சு வெளிமூச்சு என்பன என்னுள் இருக்கின்றன. என்பதனை நீங்கள் உணர்வீர்கள். இவ்வாறாக உள்மூச்சு வெளிமூச்சு என்பனவற்றை தொடர்ந்து கவனிப்பதற்காகவே இந்த ஆனாபானசதி தியானம் இருக்கிறது.

சித்த சங்ஸ்காரத்தினையும் உணர்ந்து கொள்ளுங்கள்;.

இவ்வாறாக இந்த ஆனாபானசதி தியானத்தினை தொடர்ந்து பழக்கப்படுத்தும்போது சுக அனுபவிப்பு ஏற்டபடும்போது இந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பனவற்றினுள் சுக அனுபவிப்பினை நன்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பனவற்றினை நன்கு இனங்கண்டு கொள்ள முடியும். உள்மூச்சினை எடுக்கும்போது ‘இது உள்மூச்சு’ என்பதனை நன்கு உணருங்கள். வெளி மூச்சு விடும்போது ‘இது வெளிமூச்சு’ என நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறாக சுகத்தினை அனுபவித்துக்கொண்டு இனங்கண்டுகொண்டு உள்மூச்சு எடுப்பதும்  வெளிமூச்சு வெளிவிடுவதுமே ஷசித்த சங்ஸ்காரம்’ எனப்படுகிறது. சித்த சங்ஸ்காரம் என்றால் அனுபவித்தலும் இனங்கண்டுகொள்ளுதலாகும். மனதுடன் பிணைந்துள்ளதாலேயே அவை சித்த சங்ஸ்காரம் எனப்படுகிறது.

அறிந்துகொள்ளுதலும் பயற்சியும்.

மனதுடன் ஒன்றித்து இருக்கும் அனுபவிப்பினையும் இனங்காணலையும் புரிந்துகொண்டு மூச்சினை உள்ளெடுக்கும் போதும் வெளியிடும்போதும் இந்த அனுபவிப்பும், இனங்காணலும் கூட இலேசானதாகும். ஆனால் அந்த இலேசான உணர்வின் மீது கவனம் செலுத்தக்கூடாது. அதனை நன்கு உணர்ந்து மூச்சினை உள்வாங்க வேண்டும். புத்த பகவான் இந்த ஆனாபானசதி தியானத்தினை துவங்கும் ஒருவர்  ‘பஜானாதி’ அதாவது நன்கு உணர்ந்துகொள்ளும் திறனை கொண்டிருத்தல் வேண்டும். என மொழிந்துள்ளார். அதேபோல் புத்த பகவான் நீண்ட உள்மூச்சு மற்றும் வெளிமூச்சுகளுக்கும் பஜானாதி என மொழிந்துள்ளர். அதன் பிறகு பகவான் ‘சிக்கதி’ எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளார். சிக்கதி என்றால் பயிற்சி செய்தலாகும். பயிற்சி பெறுதல் என்பது மனதில் தோன்றும் பல்வேறு வகையான எண்ணங்களின் பின்னே செல்லாது உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தலேயே மனதினை நிலைக்கச்செய்வதற்கு முயற்சி செய்தலாகும். இந்த திறமையினாலேயே மேற்குறிப்பிட்ட பயிற்சியை பெற முடியும். இப்போது இந்த உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தினை முழுமையாக அறிந்துகொண்டு சுவாசிப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். சுவாசத்தின் தணிவை உணர்ந்து கொண்டே உள்மூச்சு வெளிமூச்சு எனும் இந்த சுவாசத்தில் முழுக்கவனத்தினை செலுத்த பயிற்சி செய்ய வேண்டும்.

சித்த சங்ஸ்காரங்களும் தணிந்துவிடும்.

இவ்வாறாக தணிவு ஏற்பட்டவுடன் மகிழ்ச்சி தோன்றும். அந்த மகிழ்ச்சியையும் அறிந்துகொண்டே தொடர்ந்தும் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சில் கவனம் செலுத்துவதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறாக பயிற்சி செய்யும் போது உடல் மற்றும் உளரீதியான இலகு நிலை தோன்றும். அதாவது பஸ்ஸத்தி தோன்றும். அப்போதுதான் சுகம் தோன்றும். இந்த சுகத்தினையும் அறிந்துகொண்டே உள்மூச்சு வெளிமூச்சின மீது கவனம் செலுத்த நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அடுத்ததாக இந்த உள்மூச்சு வெளிமூச்சு எனும் இரண்டினுள் தோன்றும் அனுபவிப்பினையும் இனங்காணலையும் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தில் நிலைநிறுத்த பயிற்சி செய்ய வேண்டும். இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சினுள் அனுபவிப்பு இனங்காணல் என்பன தணியும். இந்த தணிவினையும் உணர்ந்து கொண்டு உள்மூச்சு மற்றும் வெளிமூச்சில் கவனம் செலுத்த வேண்டும். காய சங்ஸ்காரம் எனும் உள்மூச்சு வெளிமூச்சு என்பன தணிந்து சித்த சங்ஸ்காரங்களான அனுபவிப்பு மற்றும் இணங்காணல் என்பன தணிந்த பின்னரும் தன் சுவாசத்தின் மீதே கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

மனம் உயர் தியான நிலைகளை அடையும்.

இப்போது உங்களது மனம் புத்துணர்ச்சி அடையும். இவ்வாறாக புத்துணர்ச்சி நிலையை அடையும் போதும்  உள்மூச்சு மற்றும் வெளிமூச்சில் கவனம் இருக்க வேண்டும். அப்போது மனம் மென்மேலும் ஒன்றிணையும். மென்மேலும் ஒன்றிணையும் போதும் உங்களது கவனம் முழுவதும் சவாசத்தின் மீதே இருக்க வேண்டும். அப்போது உங்களது மனதின் ஐவகை நீவரணங்களும் (காம இச்சை, முரண்பாடு, தூக்கம், மன உளழ்வு அல்லது மன சஞ்சலம் மற்றும் ஐயம்) தணிந்து மனம் தியான நிலையை அடையும். இந்த ஆனாபானசதி தியானத்தின் மூலம் ஒருவருக்கு இலகுவாகவே முதலாவது தியான நிலையை அடைய முடியும். பஞ்ச நீவரணங்கள் தணியும் முதலாவது தியான நிலையை நீண்ட நேரம் நிலைக்கச்செய்து தியானிக்கும் ஒருவருக்கு எவ்வித எண்ணங்களுமற்ற அதாவது மனசிகாரம் அற்ற இரண்டாவது தியான நிலையையும் தன்னுள் தோற்றுவித்துக்கொள்ள முடியும். இந்த இரண்டாவது தியான நிலையில் நீண்ட நேரம் மனதினை நிலைக்கச்செய்து தியானிக்கும் ஒருவருக்கு மூன்றாவது தியான நிலையையும் தன்னுள் தோற்றுவித்துக்கொள்ள முடியும். இந்த மூன்றாவது தியான நிலையில் நீண்ட நேரம் மனதினை நிலைக்கச்செய்து தியானிக்கும் ஒருவருக்கு நான்காவது தியான நிலையையும் தன்னுள் தோற்றுவித்துக்கொள்ள முடியும்.

இல்லற வாழ்வை வாழும் எமக்கு தியான நிலைகள்??

தியான நிலைகள் எனும் சொல்லைக் கேட்கும் போது சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். ‘நாம் இல்லற வாழ்வினை வாழ்பவர்கள். எமக்கு ஏன் இந்த தியான நிலைகள்’ என்று. அதற்கு காரணம் என்ன? உங்களை சுற்றியிருப்பவர்கள் தர்மத்தினை அறியாதவர்களாக இருப்பதுவும் நீங்கள் தர்மத்தின் மீது கொண்ட நம்பிக்கை அற்றுபோதல் மற்றும் நீங்கள் புத்த பகவானது தர்மத்தினை எவ்வாறு நடைமுறை வாழ்வினுள் பழக்கப்படுத்த வேண்டும் என்பதனை அறியாமை எனும் காரணிகளாகும். இவைகளேயன்றி அது தர்மத்தின் குறைபாடல்ல. எமது நாட்டில் ஆயிரக்கணக்கானோர் சமாதி உடையவர்களாக, தியான நிலைகள் கொண்டவர்களாக இல்லற வாழ்வினை வாழ்வோர்கள் உள்ளனர். எனவே நீங்கள் எவ்வித சந்தேகத்தினையும் கொள்ளத் தேவையில்லை. புத்த பகவானது தர்மத்தினை அறிவினால் ஆராய்ந்து முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனவே உங்களால் உளச்சமாதியை ஏற்படுத்திக்கொள்ள கூடிய சந்தர்ப்பத்தில் அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நாம் இன்னும் சமத தியானத்தினை விருத்தி செய்யும் முறை தொடர்பாகவே பேசினோம். இவ்வாறாக நீங்கள் உங்களது மனதினை பயிற்சி செய்யும் போது சமத தியான வகையை தன்னுள் விருத்தி செய்துகொள்ள முடியும்.

ஆனால் உங்களுள் உள ஒன்றிணைவு எனும் சமாதி தோன்றாவிடில்

இந்நாட்டில் பல முறைகள் இக்காலத்தில் கற்பிக்கப்படுகின்றன. ‘ஐயோ… இது என்ன வாருங்கள் என்னிடம். நான் ஐந்து நிமிடத்திலேயே உங்களது மனதினை ஒன்றிணையச்செய்கிறேன்’ ‘உங்களால் அரை மணித்தியாலயம் சமாதியுடன் இருக்க முடியுமாயின் நான் உங்களை முதலாம் தியான நிலைக்கு தள்ளிவிடுகிறேன்’ என கூறுவோர்கள் பலர் இருக்கிறார்கள். இவ்வாறான முட்டாள்தனமான பேச்சுக்களுக்கு ஏமாற வேண்டாம். மனதில் உள்ள பஞ்ச நீவரணங்கள் தணியும் வரை உள்ளத்தின் சமாதி ஏற்படாது. பஞ்ச நீவரணங்கள் தணியும் போது உளச்சமாதி தோன்றும். விழிப்புணர்வும் மேன்மையடையும்.

தொடரும்…