அன்பின் விளைவுகள் (மெத்தா தியானம்) 2016-12-19T09:07:48+00:00

Project Description

அன்பின் விளைவுகள் (மெத்தா தியானம்)

மைத்ரீ தியானம் (ஜீவகாருண்ய தியானம்)

மைத்ரீ எனக்கூறப்டுவது தன் மீதும் பிறர் மீது கொண்ட முழு மனதுடனான நட்பாகும். தன் மீது ஒருவருக்கு விருப்பு அல்லது நட்பிருந்தால் அவர் தனது வாழ்வினை பாதுகாத்துக்கொள்வார். அதேபோல் அவர் ஏனையோர் மீதும் முழு மனதுடனான நட்பை கொண்டிருந்தால் அவர்களது வாழ்விற்கு தீங்கோ அல்லது இடையூரோ விளைவிக்க மாட்டார். எனவே தான் தன் மீதும் பிறர் மீது கொண்ட முழு மனதுடனான நட்பக்கு மைத்ரீ எனக்கூறுகிறோம்.

இது மனதினை அமைதிபடுத்தும் ஒரு அற்புதமான தியானமாகும். இந்த தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்வாராயின் அவருக்கு பதினொறு வகையான நல்விளைவுகள் கிடைக்கும் என பாக்கியமுள்ள புத்த பகவான் மொழிந்துள்ளார். அவை கீழ்வருமாறு.

இந்த தியானத்தை செய்யும் ஒருவர்,

சுகமாக துயில் கொள்வார்.

சுகமாக  துயிலெழுவார்.

உறங்கும் போது பயங்கர கனவகளை காணமாட்டார்.

அவர் ஏனைய மனிதர்கள் விரும்பும் ஒரு நபராவார்.

மனிதர்கள் அல்லாத அமனுஷ்யர்களும் விரும்பும் ஒரு நபராவார்.

அவரை தெய்வங்கள் பாதுகாப்பார்கள்

அவருக்கு தீ, நஞ்சு, விடம், மற்றும் ஆயுதங்களினால் தீங்கு ஏற்படாது.

அவரது உள்ளம் விரைவாக சமாதி நிலையை (ஒன்றிணையும்) அடையும்.

அவரது முகம் பிரகாசமாகும்.

சுய உணர்வுடனேயே மரணிப்பார்.

இவ்வாழ்வில் மோட்சத்தினை உறுதி செய்யாவிடில் (மோட்சப்பேறுகளை பெறாவிடில்) மரணத்தின் பின்னர் பிரம்மலோகத்தில் பிறப்பார்.

இந்த தியானத்தினை இருவகையாக செய்ய முடியும் என அனுருத்த சூத்திரத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

 1. அப்பமாண சேதோ விமுத்தி
 2. மஹக்கத சேதோ விமுத்தி

அப்பமாண சேதோ விமுத்தி என்றால் எவ்வித எல்லைகளும் இல்லாது திசைகளின் அடிப்படையில் மைத்ரீ மனதினை பரப்புதலாகும். அது பின்வருமாறு

நான் பகைமை அற்றவராக வேண்டும்

கோபம் அற்றவராக வேண்டும்

பொறாமை அற்றவராக வேண்டும்.

துன்பம் அற்றவராக வேண்டும்.

சுகமாக வாழ வேண்டும்.

ஷாந்தமிக்கவராக வேண்டும்.

என்னை போல வடக்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,

பகைமை அற்றவர்களாக வேண்டும்..

கோபம் அற்றவர்களாக வேண்டும்

பொறாமை அற்றவர்களாக வேண்டும்

துன்பம் அற்றவர்களாக வேண்டும்.

சுகமாக வாழ வேண்டும்.

ஷாந்தமிக்கவர்களாக வேண்டும்.

 1. என்னை போல வடகிழக்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 2. என்னை போல கிழக்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 3. என்னை போல தென் கிழக்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 4. என்னை போல தெற்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 5. என்னை போல தென் மேற்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 6. என்னை போல மேற்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 7. என்னை போல வட மேற்கு திசையில் வாழும் எல்லா உயிர்களும்,
 8. என்னை போல மேல் திசையில் வாழும்  எல்லா உயிர்களும்,
 9. என்னை போல கீழ் திசையில் வாழும் எல்லா உயிர்களும்,

என்றவாறு செய்வது அப்பமாண சேதோ விமுத்தியாகும். மஹக்கத சேதோ விமுத்தி என்றரால் சிறிது சிறிதாக மைத்ரீ குணத்தினை பரப்பும் எல்லையை விரிவுபடுத்த வேண்டும்.

நான் பகைமை அற்றவராக வேண்டும்

கோபம் அற்றவராக வேண்டும்

பொறாமை அற்றவராக வேண்டும்.

துன்பம் அற்றவராக வேண்டும்.

சுகமாக வாழ வேண்டும்.

ஷாந்தமிக்கவராக வேண்டும்.

என்னை போல இந்த வீட்டில் வாழும் எல்லா உயிர்களும்,

என்னை போல இந்த ஊரில் வாழும் எல்லா உயிர்களும்,

என்னை போல இந்த நகரில் வாழும் எல்லா உயிர்களும்,

என்னை போல இந்த பிரதேசத்தில் வாழும் எல்லா உயிர்களும்,

என்னை போல இந்த நாட்டில் வாழும். எல்லா உயிர்களும்,

என்னை போல இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும்,

என்னை போல எல்லா உயிர்களும்…..

இந்த தியானத்தை நால்வகை நிலைகளிலிருந்தும் (அமர்ந்த நிலை, நடக்கும் நிலை, நிற்கும் நிலை, சயன நிலை) செய்ய முடியும்.

இந்த தியானத்தை செய்வதால் மனம் ஷாந்தமடையும். கோபமும் தணிந்து விடும். எமது வாழ்விற்கு அளப்பரிய புண்ணியமும் சேரும்.

Video home page