தியானம் என்றால் என்ன?

தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்வதற்கான விசேடமானதொரு முறையாகும். ‘மனதை மேன்மைப்படுத்தவும் விருத்தி செய்துகொள்ளவும் முடியும்’ என முதன்முதலாக புத்த பகவானே உலகிற்கு கூறினார். புத்தபகவான் தன் உள்ளத்தை பரிபூரணமாக விருத்தி செய்து அதற்கான வழியை ஏனையோருக்கு மொழிந்தருளினார். Meditaion

உங்களால் தியானத்தை விருத்தி செய்யக்கூடியதாக இருப்பின் உங்கள் மனம் விரைவாக மேன்மையடையும். அதற்காக நீங்கள் நன்றாக சிந்திக்க கூடியவராக இருக்க வேண்டும். உங்களிடம் சிந்தனைசெய்யும் திறன் இல்லாவிடில் மனதை விருத்தி செய்வது மிகவும் கடினமானதாகும். இவ்வுலகில் அதிகமானோர் மனதை விருத்தி செய்ய முனைவதில்லை. குறைவான எண்ணிக்கையை கொண்டோரே இந்த  மனத்தை மேன்மையடையச்செய்ய முயற்சி செய்கின்றனர். அவர்களுள் நீங்களும் ஒருவராகினால் அது உங்களுடைய அதிஷ்டமே! நீங்கள் மிக மிக விழிப்புணர்வோடும் மிகவும் கவனத்தோடும் இங்கு கூறப்படும் விடயங்களை ஆராயுங்கள். வாழ்வின் ஆழத்தையறியும் இந்த தியானம் தொடர்பாக இப்போது நாம் படிப்படியாக ஆராய்வோம். Meditaion

தியானம் செய்வதற்கு நீங்கள் தகுதியுடையவரா?

புத்த பகவான் பரிபூரணமாக மனதை மேன்மைபடுத்தியவர் என நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே உங்களது முதல் தகுதியாகும். இதுதான் சத்தா (பக்தி) எனப்படும். ஏனெனில் மனதை விருத்தி செய்யாத ஒருவரால் கூறப்பட்ட விடயங்களை வைத்து எம் மனதை விருத்தி செய்ய முடியாது. ஒருவரின் மனதை மேன்மைபடுத்துவதற்கு உதவுவது மனதை முற்று முழுதாக மேன்மை படுத்திய உத்தமர் ஒருவரின் உபதேசங்களே ஆகும். அதன்படி பார்க்கும் போது எமக்கு இவ்வுலகில் புத்த பகவானை தவிர வேறு ஒருவரையும் காண முடியாது. அந்தளவிற்கு புத்த பகவான் தனது மனதை விருத்தி செய்தார். அதனால் புத்த பகவான் மீது நம்பிக்கை கொண்டு புத்த பகவானால் மொழியப்பட்ட உபதேசங்கள் மற்றும் வாழ்க்கை தொடர்பாக அவர்  கூறிய கருத்துக்கள் என்பவற்றை அறிந்து கொண்டு அந்த விடயங்களுக்கேற்ப தம் வாழ்வினை நடத்தும் போது நீங்கள் தியானத்தினால் மனத்தை விருத்தி செய்யும் தகுதியை பெறுவீர்கள்

அரிதான சந்தர்ப்பம்.

இங்கு உங்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவதுதான் சிந்தனை செய்யும்இ பகுப்பாய்வு செய்யும் ஆற்றல். சிந்தனை செய்யும் திறன் உள்ளவரிடம் புத்த பகவானின் ஸ்ரீ சத்தர்மம் கிடைத்து அதன் மீது பக்தி ஏற்படுமாயின் அது தான் க்ஷண சம்பத்தியம் எனப்படும். இந்த க்ஷண சம்பத்தியம் மிக மிக அரிதானதாகும். புத்த பகவான் ‘இந்த க்ஷண சம்பத்தியம் அற்றவர்கள் நரகத்திலே துன்பமனுவிக்கிறார்கள்’ என மொழிந்துள்ளார். எம் மனித பிறவின் ஆயுளானது நிமிடத்திற்கு நிமிடம் எம்மை விட்டு  நீங்கிக்கொண்டே இருக்கிறது.

எமக்கு கிடைத்திருப்பது நோய்களுக்கு உள்ளாகும் மரணத்தினால் முடிவுறும் ஒரு நிலையற்ற வாழ்க்கையேயாகும்.அதனால் நாம் நோறுவதற்கு முன்னர், மரணமடைய முன்னர், எம் சுயநனவு அற்று போக முன்னர், எமது செவிகள் நன்றாக கேட்கும் திறனை கொண்டிருக்கும் போதே.. ஒரு விடயத்தை நன்கு பகுப்பாய்வு செய்யக்கூடிய திறன் இருக்கும் போதே உங்களுக்கு புத்த பகவானின் தர்மம் கிடைத்திருப்பின் நீங்கள் மிகவும் அதிஷ்டசாலியே!

இலட்சியத்தினூடாக மனதை கட்டியெழுப்புவோம்.

நீங்கள் இப்போது மனித உலகில் பிறந்திருக்கிறீர்கள். அத்தோடு நன்றாக சிந்திக்கும் ஆற்றலும் இருக்கிறது. இந்த சிந்திக்கும் ஆற்றலை நீங்கள் மென்மேலும் வளர்த்து கொள்ள வேண்டும். ஒருவர் தியானம் செய்வதற்கு, சீலம் (ஒழுக்கம்) போன்ற குணநலன்களை வளர்த்து கொள்வதற்கு, மனதை மேன்மை படுத்தி கொள்வதற்கு முயற்சி செய்யும் போது அது மிகவும் கடினமானதாகவே தோன்றும். நீங்கள் எதிர்பாராத வண்ணம் ஆரம்பித்த இடத்திலேயே இருப்பீர்கள். இதனை நன்கு உணர்ந்து கொண்டு ‘நான் கற்கும் இந்த தர்மத்தினை என் வாழ்வோடு ஒருங்கிணைத்து என் மனதை மேன்மை படுத்துவேன்’ என்று ஒரு திடமான இலட்சியத்தை மனதில் உருவாக்கிகொள்ளுங்கள்.

மனதை விருத்தி செய்வதன் நன்மைகள்.

மனம் விருத்தியடைவதன் மிக விசேடமான பிரதிபலன்தான் குணநலன்களின் விருத்தி. உங்கள் மனம் மேன்மையடையும் போது உங்களுள்ளே சிறந்த ஆளுமையொன்று உருவாகும். ஆளுமை விருத்தியடைவதால் நீங்கள் அபிமானமிக்கவராக மாறுவீர்கள். உங்களுல் தோன்றிய சிறந்த ஆளுமையினால் நீங்கள் மென்மேலும் மேன்மையடைவீர்களே தவிர கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். நீங்கள் இன்னுமொருவர் மீது பொறாமையடைய மாட்டீர்கள். அதனால் நீங்கள் இன்னுமொருவர் மீது கோபம் கொள்ளவோ பொறாமையடையவோ மாட்டீர்கள். ஏனையோரின் முன்னேற்றத்தை கண்டு மனங்கலங்க மாட்டீர்கள். மாறாக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த இயல்புகள் தான் உங்கள் மனவிருத்தியின் அறிகுறிகள்.

உங்கள் மனம் விருத்தியடைவதன் விளைவாக உங்களுள் குணநலன்கள் விருத்தியடையும். அதாவது நீங்கள் இன்னுமொருவரின் முன்னேற்றத்தை கண்டு இன்பமடைவீர்கள். ஏனையோரின் உயர்கல்வி நிலையை கண்டு, திறமைகளை கண்டு சந்தோசமடைவீர்கள். இவை உங்கள் மனம் விருத்தியடைகிறது என்பதற்கான அறிகுறிகளாகும். உங்களுள்ளும் இவ்விடயங்கள் வளர்ச்சியுறும். உங்களுள்ளும் விருத்தி செய்யக்கூடியதொரு உள்ளம் இருப்பதனை நீங்கள் அப்போது உணர்வீர்கள். மனதை விருத்தி செய்வதற்கான இரு தியான வகைகள் உண்டு. அந்த இருமுறைகளையும் புத்த பகவானே போதித்தார்.

தியானம் என்றால்…..

தியானம் என்பது எமது மனதை மேம்படுத்தும் ஒரு செயற்பாடாகும். எமது மனதை ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்க வைப்பதனை தியானம் எனக்கூறலாம். ஓழுங்கு முறையாக மனதினை செயற்படுத்துவதினால் அக வாழ்வு தூய்மைபெறும். அகவாழ்வு தூய்மைபெறுவதால் உங்களது வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக  சுகமானதாக மாறும். நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக  தைரியம் கொண்டவராவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் கொண்டவராவீர்கள். சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்வீர்கள். மனதை மேன்மை படுத்துவதால் இவ்வனைத்தையும் உங்களால் பெற முடியும். Meditaion

நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் மரணத்தையே நெருங்குகிறோம். ஆனால் நாம் எமது மனதினை மேன்மைபடுத்த இதுவரை முயன்றிருக்கிறோமா? இல்லை. மனதை மேன்மை படுத்த முயலாமை என்பது எமது வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டமாகும். இந்த நஷ்டத்திலிருந்து நீங்கி மனதினை மேன்மை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுயாதீன சிந்தனையாரக வேண்டும்.

சுயாதீனமான சிந்தனையுடைவராதல் எனும் காரணி இங்கு மிக முக்கியமானதாகும். சுயாதீன சிந்தனை என்றால்…?  ஆம்… நான் இப்போது புத்த பகவானது தர்மத்தினை உங்களுக்கு கூறுகிறேன். அந்த தர்மத்தினை செவிமடுக்கும் போது ‘ஆம்.. இது உண்மையே! இதனை எனது வாழ்வில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று புத்த பகவான் மீது கொண்ட நம்பிக்கையால் நீங்கள் சந்தேகமற்றவராக வேண்டும். அதனூடாக உங்களிடம் சுயாதீன சிந்தனை வளர ஆரம்பிக்கும். இவ்வாறு இருக்கும் போது யாரேனும் ‘ ஆ.. வேண்டாம் வேண்டாம்… தியானம் எல்லாம் ஏன் செய்ய வேண்டும்? நீங்கள் இல்லற வாழ்வை வாழும் ஒருவர்… வாழ்வின் யதார்த்தம் எல்லாம் எமக்கு தேவையில்லை… இது உங்களுக்கு வேண்டாத விடயம்’ என்று கூறினால் அப்போது இவர் கூறுவது பிழையான விடயம் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

இதனால் தங்களுக்கு தெளிவான மனதோடு இருக்கலாம். தங்களது மனதின் பெறுமதி தங்களுக்குரியதாகும். அதனால் வேறு ஒருவரது கருத்துக்களினால் தங்களது மனதினை அழித்துக்கொள்ளாதீர்கள். இன்னுமொருவரது கருத்துவாதங்களுக்கு செவிசாய்த்து தவறான பாதையில் பயணிக்க வேண்டாம். அதற்காக செய்ய வேண்டியதெல்லாம் இந்த தர்மத்தினை உய்த்துணர்ந்த கொள்வேன். அனைத்து துக்கங்களிலிருந்தும் மீள்வேன் எனும் திடமான இலட்சியத்தை ஏற்படுத்தி கொள்வதாகும். அந்த திடகாத்திரமான இலட்சியத்தின் மூலம் நீங்கள் புத்த பகவான் மீது நம்பிக்கையுடன் கூடிய பக்தி கொண்டவராவீர்கள். Meditaion

அபிமானம் மிக்க ஒருவர்…

நீங்கள் புத்த பகவான் மீது நம்பிக்கையுடன் கூடிய பக்தியை அடிப்படையாகக்கொண்டு புத்த சாசனத்தினுள்ள சிறிது சிறிதாக நுழையும் போது நீங்கள் பலம் மிக்க ஒருவாராகுவீர்கள். நீங்கள் சக்தி நிறைந்த உள்ளத்தினை கொண்டவாராவீர்கள். நியாயமான முடிவுகளை எடுக்கும் அபிமானம் மிக்க ஒரு நபராவீர்கள். இம்மாதிரியான அரிய வாய்ப்பினை தியானம் மூலமே பெற முடியும்.

தியானத்தின் பிரதான முறைகளை இணங்காண்போம்.

வாழ்விற்கு தியானத்தை பழக்கப்படுத்தி கொள்வதற்கான தகுதியை நாம் முன்னர் கற்றோம். அவை முறையே சுயாதீனமான சிந்தனையை உடையவாராதல்இ மனதினை மேன்மைபடுத்துவதன் பெறுமதியை உணர்ந்திருத்தல்இ இந்த அரிய வாழ்வு முடிவுறும் முன்பு அதனை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வருதல். மனதை மேன்மைபடுத்துவதற்கான அனைத்து முறைகளையும் உபதேசித்தருளிய புத்த பகவானது தர்மத்தின் மீது உங்களுல் இருக்கின்ற விருப்பம். எனும் இவ்வனைத்தையும் கருத்திற்கொண்டு நாம் தியானத்தின் பிரதான இரு முறைகளை கற்போம்.

அடிக்கடி செய்ய வேண்டிய தியானங்கள்.

அதில் முதலாவது தியான வகை ஷசமத’ தியானமாகும். இரண்டாவது விதர்ஷனா தியானமாகும். இவ் இரு தியான முறைகளும் வாழ்வினை உய்த்துணர்வதற்கு மிகவும் துணை செய்யும் என புத்த பகவான் ஆணித்தரமாக மொழிந்துள்ளார்.

புத்த பகவான் ‘சமதோ பிக்கவோ பாவேதப்போ’ இந்த சமத தியானத்தை விருத்தி செய்ய வேண்டும். மென்மேலும் பயிற்சி செய்ய வேண்டும். சமத தியானத்தினை செய்வதால் மனம் மேன்மையடையும். மனம் விருத்தியடையும் (விபஸ்ஸனா பிக்கவே பாவேதப்பா) புண்ணியமிகு பிக்குகளே! விபஸ்ஸனா தியானத்தையும் பயிற்சி செய்ய வேண்டும். விபஸ்ஸனா தியானத்தை பயிற்சி செய்வதால் ஞானம் விருத்தியடையும். Meditaion

விபஸ்ஸனா என்றால் ஏதேனும் ஒன்றினது உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தலாகும். ஞானம் என்றால் அதன் உண்மை நிலையை அவ்வாறே காணும் திறமையாகும். அப்படியாயின் சமத தியானம் பயிற்சி செய்வதால் மனதில் உள்ள பலவீனம் கவனச்சிதறல், மன உழல்வு என்பவை நீங்கி தர்மத்தினை உய்த்துணரும் வண்ணம் மனம் விருத்தியடையும். அதாவது ஏதேனும் ஒன்றினை உய்த்துணரக்கூடிய வண்ணம் மனம் தயாராகும். இந்த தயார் நிலையை சமத தியானத்தினூடாக பெற முடியும்.

தியான முறைகள் இரண்டு…

விபஸ்ஸனா தியானம் வாழ்வின் உய்த்துணர்விற்கு துணை செய்யும். வாழ்வின் உய்த்துணர்வினை பெற்றுத்தருவது ஞானமாகும். ஞானம் என்றால் ஒன்றின் உண்மை நிலையை அவ்வாறே காணும் திறமையாகும். இந்த இரு தியான முறைகளை பிரிக்க முடியாது. புத்த பகவானது தர்மத்தினை பின்பற்றி வாழ்வினை உய்த்துணரும் ஒருவர் முதலில் சமத தியானத்தை செய்து அதன் பின்னர் மனதை விபஸ்ஸனா தியானத்திற்கு திருப்புவார். அல்லது முதலில் விபஸ்ஸனா தியானம் செய்து அதன் பின்பு மனதை சமத தியானத்திற்கு திருப்புவார். இவ்விரு தியான முறைகளும் ஒருங்கே விருத்தியாவோரும் உள்ளனர். சமத தியானத்தை முதன்மையாகக்கொண்டு விபஸ்ஸனா தியானத்தை பயிற்சி செய்வோர் ஷசமத புப்பங்கமா விபஸ்ஸனா’ எனக்குறிப்பிடப்படுவர். விபஸ்ஸனா தியானத்தை முதன்மையாகக்கொண்டு சமத தியானத்தை செய்வோர் ஷவிபஸ்ஸனா புப்பங்கமா சமதோ’ என்று குறிப்பிடப்படுவர். இவ்விரண்டும் ஒருங்கே விருத்தியாவோருக்கு ஷயுகனந்த’ என்று குறிப்பிடப்படுவர்.

மனம் தணிதல்…

அவ்வாறில்லாது முழுக்க முழுக்க விபஸ்ஸனா தியானம் மாத்திரம் செய்தவர்கள், சமத தியானம் மாத்திரம் செய்தவர்கள் எவரும் வீடுபேறு அடைந்த கூட்டத்தில் இல்லை. ஆகையால் நாம் இவ்விரு தியானங்கள் தொடர்பாகவும் மென்மேலும் கற்க வேண்டும். Meditaion

சமத தியானத்தினால் மனம் அமைதி பெறும்.

சமத தியானத்தினால் மனம் விருத்தியடையும். நீவரணங்களை தணித்து மனதை விருத்தி செய்வதே சமத என்பதாகும். இந்த சமத தியானம் மனதின் குழப்ப நிலையை இல்லாமல் செய்து அமைதிபெற வைக்கும்.

எமது ஐந்து எதிரிகளை இணங்காண்போம்.

புத்த பகவான் இந்த மனதை குழப்பும் ஐந்து விடயங்கள் இருப்பதாக மொழிந்துள்ளார். தர்மத்தில் பஞ்ச நீவரணம் என குறிப்பிடப்படுபவை அவையே. நீவரணம் என்றால், மனதின் விருத்தியை தடை செயயும், பிரக்ஞையை தோற்றுவிப்பதற்கு தடையாக இருக்கும், ஞானத்தை தடுக்கும், மன விருத்தியை மாற்றிவிடும், தன்னை தீய வழியில் செலுத்துவதற்காகும். இவ்வாறான நீவரணங்கள் ஐந்து இருப்பதாக புத்த பகவான் மொழிந்துள்ளார். அவை முறையே

காமச்சந்தம் : தான் விரும்பும் உருவங்கள், சப்தங்கள், மணங்கள், சுவைகள், ஸ்பரிஸங்கள் என்பவற்றின் மீது மனம் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும் இயல்பு

வியாபாதம் : தான் முரண்பட்ட விடயங்களில் அதாவது கண்ணால் கண்டவை, காதால் கேட்டவை, நாசியினால் நுகர்ந்தவை, நாவினால் சுவைத்ததை, உடலினால் உணர்ந்தவை இவை தொடர்பாக அடிக்கடி நினைவிற்கு வந்து மனம் முரண்படுதல். அந்த இயல்பு இங்கு வியாபாதம் எனப்படுகிறது.

தீனமித்த : மனதை விருத்தி செய்து கொள்ள முடியாத வண்ணம் சொம்பேறியாதல்  அல்லது உறக்கம் வருதல் என்பன.

உத்தச்ச குக்குச்ச : தான் தர்மத்தை பயிற்றுவிக்க எத்தணிக்கும் போது தன்னால் நிகழ்ந்த தவறுகள், பிழைகள் என்பனவற்றை நினைத்து கொண்டு கவலைப்படுதல். இவ்வாறு கவலைபட்டுக்கொண்டு மனம் உழழும் வண்ணம் மனம் செயற்படுதல்.

விசிகிச்சா : அடுத்ததுதான் ஷஇதனை பயிற்சி செய்தால் மனம் விருத்தியடையுமா? இல்லையா? என்னால் முடியுமா? என எந்நேரமும் பின்வாங்கும் மனப்பான்மையும் சந்தேகமுமாகும்.

இவைதான் எந்நேரமும் எமது மனதிலேயே இருந்து கொண்டு எமது மனவிருத்தியை தடுக்கும் தடைகளாகும்.

இவற்றை முழுமையாக அடக்கி மனதை சமாதி நிலைக்கு உட்படுத்தி கொடுப்பதற்கு சமத தியானங்கள் துணை செய்யும். எனவே இந்த சமத தியானங்களை நாம் கண்டிப்பாக எமது வாழ்வில் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஞானத்தின் உறைவிடம்

அடுத்த தியான வகைதான் விபஸ்ஸனா. இந்த விபஸ்ஸனா தியானமும் கண்டிப்பாக செய்ய வேண்டியதாகும். விபஸ்ஸனா தியானத்தினால் தான் ஏதேனும் ஒன்றினது உண்மையான இயல்பினை உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாகக்கூறினால் புத்த பகவான் ஷகாரணங்களால் தோன்றிய  அனைத்துமே அநித்தியமானவையாகும்’ என மொழிந்தார். அநித்தியம் என்றால் நிலையாமை என்பதாகும். அப்படியாயின் தோற்றம் பெற்றவற்றின் பிரதான இலட்சணம் அது அநித்தியம் என்பதே. தோன்றிய அனைத்திலும் இந்த அநித்தியம் எனும் இலட்சணம் இருக்குமாயின் உங்களிடமும் இவை இருக்கின்றன.

அநித்தியமானவை அநித்தியமே…

எம் வாழ்க்கை முழுவதும் இந்த இயல்புதான் இருக்கிறது. நீங்கள் இவ் அனைத்தையும் விரும்பினாலும் விரும்பாவிடினும் அநித்தியமானவற்றை அநித்தியமாகாமல் உங்களால் தடுக்க முடியாது. அநித்தியமானவை அநித்தியமாகும் போது அழுது புலம்புவதற்கு காரணம் இதுவே. அநித்தியமானவை அநித்தியமாகும் போது அழுது புலம்பாமல் இருப்பீராயின் உங்களுல் வாழ்க்கை தொடர்பான புரிந்துணர்வு இருக்கிறது. அதனாலயே அநித்தியமானவை அநித்தியமானது என்பதனை காணும் திறமை, அநாத்மமானவை அநாத்மமே (அநாத்மம் என்றால் தன் வசத்தில் வைத்திருக்க முடியாத, உரிமையாளர் இல்லாதவை அதாவது ஆத்மம் இல்லாமை) என காணும் திறமை, துக்கமானவை துக்கமானவையே என காணும் திறமை எனும் இவ் விடயங்களே அநித்திய தத்துவத்திற்கு உரியதாகும்.

சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி பயணியுங்கள்.

நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வை கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது சிறிது சிறிதாக இவற்றை உணர்ந்து கொள்ள முடியும். ஒரு விடயத்தை துள்ளியமாகவும் ஊடுருவியும் பார்க்கக்கூடிய திறன் தோன்றும். அந்த திறமையே ஞானம் அல்லது பிரக்ஞை எனப்படுகிறது. இந்த ஞானத்தை தன்னுள் தோற்றுவித்துக்கொள்ளும் வண்ணம் மனதை விருத்தி செய்யும் முறையே விபஸ்ஸனா எனப்படுகிறது.

நீங்கள் இவ்விடயத்தில் நன்கு அறிவினை பயன்படுத்த வேண்டும். எவரேனும் உங்களிடம் ‘ஆ.. ஆ… அநித்திய தியானம் ஒன்றும் செய்ய தேவையில்லை. நீங்கள் இல்லற வாழ்வை வாழ்பவர். இது உங்களுக்குரிய விடயமல்ல.’ என்று கூறலாம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நீங்கள் சுயாதீனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஷஇவர் மூடநம்பிக்கை கொண்டவர். இவர் யதார்த்தத்திற்கு நேர்மறையாக சிந்திக்கிறார். இவர் மன மேன்மைக்கு தடையாக இருப்பவர். இவரென்றால் ஞானம் விருத்தியடைவதை விரும்பாதவர்’ என உணர வேண்டும்.

மும்மணிகளின் மீது பக்தி ஏற்படுத்திக்கொள்வோம்.

அந்த கருத்துக்களை புறக்கணித்து நீங்கள் இவ்வாறு சிந்திக்க வேண்டும். ஷபுத்த பகவான் மகா கருணை கொண்டவர். புத்த பகவான் வாழ்க்கை அழிந்துபோகும் விதத்திலான போதனைகளை ஒருபோதும் போதிக்கவில்லை. அவற்றை புதுஜ்ஜனரே (மும்மணிகளை அறியாத யதார்த்தத்தை உணராதோர்) கூறுவார்கள். புத்த பகவான் புதுஜ்ஜனரல்ல. புத்த பகவான் கிலேசங்களற்ற (மனமாசுகள் அற்ற) உத்தமர் ஒருவரே. புத்த பகவான் மொழிந்த தர்மம் புதுஜ்ஜன நிலையை தகர்தெறிப்பதாகும். ஒருவரை உன்னத நிலைக்கு உட்படுத்துவதாகும். புத்த பகவானது சீடர்களான சங்கத்தினர் புதுஜ்ஜன நிலையை கைவிட்டு அரஹத் நிலைக்கு பயணிக்கும் சீடர் குழாமாவார்கள். ஆகையால் நான் சரணடைந்த மும்மணிகளுக்குத்தான் இந்த அநித்திய தத்துவம் உரித்தானது. எவராயினும் இந்த அநித்தியம் எனும் தத்துவங்கள் முக்கியம் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர் மும்மணிகளை சரணடையாதோர்களே.

சஞ்சலமடையாது முன்னோக்கி பயணியுங்கள்…

அப்படியாயின் நீங்கள் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சமத தியானம் என்பது மனதை அமைதிபடுத்தும்இ பஞ்ச நீவரணங்களை அடக்கும்இ உளச்சமாதியை மேன்மைபடுத்தும் ஒரு தியானமாகும். சமத தியானத்தின் மூலம் உருவாக்கிக்கொள்ளும் சமாதி அதிகளாவான நேரம் தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு ‘த்யான’ அதாவது சமாதிப்படிநிலைகள் எனப்படும். இவ்வாறாக மனதின் சமாதியை முதலாம் படிமுறைஇ இரண்டாம் படிமுறைஇ மூன்றாம் படிமுறை நான்காம் படிமுறை என்றவகையில் விருத்திசெய்ய முடியும். விபஸ்ஸனா தியானத்தை செய்வதால் பிரக்ஞை அதாவது ஞானமே வளரும். ஒருவருள் இந்த ஞானம் வளர வளர அவருக்கு இந்த வாழ்வில் உள்ள அனாவசிய பந்தங்கள்இ வாழ்க்கை தொடர்பாக குறிப்பிடப்படும் தேவையற்ற கருத்துக்கள்இ மர்மமான கருத்துகக்கள்இ மூட நம்பிக்கைகள் எனும் இவ் அனைத்தும் இல்லாமல் போய் யதார்த்த உய்த்துணர்விற்காக ஒழுங்கமையும்.

அப்படியாயின் சமத தியானம் மனதின் மேன்மைக்கு துணை செய்யும். விபஸ்ஸனா தியானம் ஞானம் விருத்தியடைவதற்கு துணை செய்யும். புத்த பகவானது தர்மத்தல் இந்த சமத மற்றும் விபஸ்ஸனா எனும் இரு தியான வகைகளையும் மேன்மைபடுத்தக்கூடிய ஒரு தியான முறை இருக்கிறது. அது தான் சதுர் சதிபட்டானம். அந்த சதிபட்டானத்தை கடைபிடிக்க வேண்டிய முறை தொடர்பாக இனி பார்ப்போம்.

 இப்போது நீங்கள் ஒரு விடயத்தை நன்கு நினைவில் வைத்துகொள்ளுங்கள். சமத மற்றும் விபஸ்ஸனா என இரு தியான முறைகள் உண்டு. அந்த இரண்டுமே நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவையாகும். இந்த இரண்டு தியான முறைகளையுமே பயிற்சி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

சம்மா சதி என்றால் என்ன…?

நாம் இதுவரை தியானம் செய்வதற்கு ஒருவருள் இருக்க வேண்டிய தகுதிகள் என்னவென்றே ஆராய்ந்தோம். அதேபொல் சமத விபஸ்ஸனா தியானங்கள் தொடர்பாகவும் அறிந்துகொண்டோம். சமத விபஸ்ஸனா எனும் இவ் இரு தியான வகைகளும் வாழ்விற்கு மிக அத்தியாவசியமானவை. இதனை நாம் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்பதனையும் அறிந்துகொண்டோம்.

காலத்திற்கு சொந்தமாகாத அழகிய தர்மம்.

நாம் இப்போது இந்த தியானத்திற்கு இன்றியமையாத ஒரு விடயம் தொடர்பாக புத்த பகவான் மொழிந்தருளிய ஒரு போதனையையே கற்கப்போகிறோம். பகவான் எமது வாழ்வினை எல்லா முறைகளிலும் எவ்வாறு மேன்மையுறச்செய்ய வேண்டும் என்பதனை அழகாக மொழிந்துள்ளார். புத்த பகவான் மொழிந்தருளிய உத்தம தர்மத்தின் ஒரு குணமே அகாலிகம் என்பதாகும். அதன் பொருள்தான் இந்த தர்மம் காலாவதியாகாதது. பகவான் உன்னத பரிணிர்வானம் எய்தி பல நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும் இன்றும் எம்மால் பகவான் மொழிந்த முறையில் தர்மத்தை பின்பற்றினால் அதன் பெறுபேறுகளை பெற முடியும் என்பதாகும். இறந்தகாலத்திலும் இந்த தர்மத்தை பின்பற்றுவதால் பெறுபேறுகளை பெறக்கூடியதாக இருந்தது. அது இன்றும் முடியும். எதிர்காலத்திலும் முடியும். எனவேதான் இந்த தர்மம் அகாலிக எனும் குணம் படைத்ததாக திகழ்கிறது.

பிரச்சினையின் மாற்றம் இல்லை.

இந்த தர்மம் ஏனைய வியடங்களை போன்று காலாவதியாகாதது. ஏனைய விடயங்கள் அவ்வாறில்லை. குறிப்பிட்டதொரு காலத்தி;றகு அதன் பெறுமதி மேலோங்கியிருக்கும் அதே சமயம் இன்னுமொரு காலத்திற்கு அது பெறுமதியற்றதாகிவிடுகிறது. புத்த பகவான் மொழிந்த தர்மம் அவ்வாறல்ல. பகவானது தர்மம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும்.

புத்த பகவானது வாழ்ந்திருந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இன்றைய மக்களுக்கும் பெரும் வேறுபாடுகள் இல்லை. அக்காலத்தில் மனிதர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருந்திருதால் அவை இன்றும் இருக்கின்றன. அன்றைய மனிதர்களுக்கு ஏதேனும் திறமைகள் இருந்தது என்றால் அவை இன்றைய மனிதர்களிடமும் இருக்கின்றன. எனவே திறமைகளை மேம்படுத்தவும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கும் புத்த பகவானது தர்மம் இன்றைக்கும் துணையாக அமைகிறது. அந்த தர்மம் அறிவியல்பூர்வமானது. வாழ்க்கையை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் காண உதவி செய்கிறது.

விழிப்புணர்வு மிகவும் முக்கியம்.

இந்த தர்மம் ஒருவருக்கு வாழ்க்கையை பரந்த நோக்கத்தோடு பார்ப்பதற்கு உதவுகிறது. இதற்கான அடிப்படை அறிவை அளிப்பது சதிபட்டானமாகும். சதி என்றால் சுயஉணர்வு பட்டானம் என்றால் நிலைநிறுத்துவதாகும். சுய உணர்வை நிலைநிறுத்தல் என்றால் இந்த வாழ்வினை நல்ல விழிப்புணர்வு மற்றும் கவனிப்புடன் அவதானிக்கும் முறையாகும். பொதுவான வாழ்க்கையில் ஒருவருக்கு தம் அன்றாட செயற்பாடுகளை செய்துகொள்வதற்கு சுயவுணர்வு அவசியமானதாகும். நாம் வீதியில் நடக்கும் போது ஒதுங்கி நடக்கிறோம். மஞ்சள் கோட்டின் வழியே வீதியை கடக்கிறோம். இவையனைத்தையும் நாம் சுயஉணர்வுடனே செய்கிறோம்.

உங்களுள்ளும் சம்மா சதி இருக்கிறதா…?

சுயஉணர்வின்றி போனால் நாம் செய்யும் ஒருவிடயததைக்கூட நாம் அறிந்துக்கொள்ள முடியாது. இவ்வாறாக எம்முள் இருக்கும் இந்த சாதாரண உணர்வினையே நாம் விருத்தி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறாக சுயவுணர்வினை மேன்மைப்படுத்திக்கொள்ளும் போது நாம் இந்த சுயவுணர்வினை சம்மா சதி என குறிப்பிடுவோம்.

நால்வகை உணர்வுகளினால் சம்மபா சதி மேன்மையுறும். அப்படியாயின் நாம் அன்றாட செய்றபாடுகளை செய்யும் போது இருப்பது வேறு வகையான உணர்வாகும். அது சம்மா சதி அல்ல. இந்த உணர்விலிருந்த நாம் எவ்வளவுதான் சுயவுணர்வுடன் அன்றாட வேலைகளை செய்தாலும் ஆடைகளை அணிந்தாலும் அது சம்மா சதி வரை விருத்தியடையாவிட்டால் அந்த மனம் யதார்த்தத்தை உய்த்துணர ஒழுங்கமையாது.

ஆனால் புத்த பகவான் மொழிந்தருளிய சதிபட்டானத்தில் இருப்பது பரிபூரணமான சம்மா சதியாகும். சம்மா திட்டி இன்றி சம்மா சதி தோற்றுவித்துக்கொள்ள முடியாது. எனவேதான் இந்த சம்மா திட்டி எனும் நற்பார்வை எமது வாழ்விற்கு இன்றியமையாததாக இருக்கிறது.

சம்மா திட்டியின் அறிகுறிகள்.

சம்மா திட்டி தொடர்பாக புத்த பகவான் இவ்வாறு மொழிந்தார். அதிகாலை பொழுதில் இருளகன்று கிழக்கு திசையிலே ஒளி தோன்ற ஆரம்;பிக்கும். இந்த ஒளி தோன்றும்போது கதிரவன் தோன்றப்போகிறான்  என்பதனை நாம் உறுதியாக அறிந்துகொள்கிறோம்.

புத்த பகவான் மொழிகிறார். மெய்ஞானம் அற்ற வாழ்க்கை காரிருளை போன்றது என்று. இந்த காரிருள் மிகுந்த வாழ்வில் கதிரவன் தோன்ற ஆரம்பிப்பது சம்மா திட்டியின் மூலமே. சம்மா திட்டியின் மூலம்தான் அந்த வாழ்வு விடியலை நோக்கிச்செல்கிறது. காரிருளில் மூழ்கியிருக்ம் எமது வாழ்வினையும் சம்மா திட்டியை உருவாக்கிக்கொள்வதன் மூலம் ஒளிமயமாக்கிக்கொள்ளலாம். அந்த சம்மா திட்டியை அடிப்படையாகக்கொண்டு இந்த நால்வகை சதிபட்டானத்தை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

சம்மா திட்டி என்றால் நற்காட்சிதானா…?

நம் நாட்டில் உள்ளவர்கள் சம்மா திட்டி என்றால் நற்காட்சி எனும் சொல் மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் புத்த பகவான் சம்மா திட்டி என நாற்பேருண்மைகள் தொடர்பான ஞானத்தையே குறிப்பிடுகிறார். அதாவது புத்த பகவானது தர்மத்தின் படி இந்த வாழ்வை பார்ப்பதாகும்.

இந்த வாழ்வில் இருப்பது காணர காரிய செயற்பாடாகும். (படிச்ச சமுப்பாதமாகும்) அனைத்திலும் இருப்பது காரணங்கள் இல்லாமல் போவதால் அதன் விளைவுகள் இல்லாமல் போகும் எனும் இயற்கையானதொரு நியதியாகும். ஆரிய எண் சீர் வழியால் இதனை பூரணமாக செய்ய முடியும்.

வாழ்வினூடாக இந்த விடயங்களை உணர்ந்து கொள்ளும் ஒருவர் சம்மா திட்டியுடன் கூடிய ஒருவராவார். அவரால் சிறப்பான முறையில் சுணவுணர்வினை கொண்டு நடத்த முடியும். அதுவே சதிபட்டானமாகும்.

ஏனோ தானோ என்று செய்யாதீர்கள்.

ஏனோ தானோ என்று நினைத்து ஒரு மரக்கன்றை நாட்டினால் கூட அதிலிருந்து சிறந்த பலனை எதிர்பாரக்க முடியுமா…? இல்லையே. அதேபோன்றுதான் ஏனோ தானோ என்று தியானம் செய்து அதிலிருந்து பலன்களை எதிர்பார்க்க முடியாது. எனவே நாம் தியானம் என்றால் என்ன? நாம் ஏன் தியானம் செய்ய வேண்டும்…? தியானத்தை எவ்வாறு செய்ய வேண்டும்? அதன் அவசியம் என்ன? அதனால் கிடைக்கும் விளைவுகள் என்ன? அதனை செய்வதால் என்ன கிடைக்கும்…? எனும் இவ் விடயங்கள் தொடர்பாக அறிந்திருத்தல் மிக அவசியமாகும்.

வாழ்க்கைக்கு….

எமது வாழ்க்கை நாம் காணும் விடயங்களுக்குள் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. பெரும்பாலானோர் நோய் நொடிகளில் இருந்து சுகம் பெறுவதற்கு, ஞாபக சக்தியை மேம்படுத்திக்கொள்வதற்கு, சுகாதாரமான வாழ்வை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒழுங்காக செயற்பாடுகளை செய்வதற்கே தியானம் அவசியம் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிடுங்கள். வாழ்வினை உய்த்துணர்ந்து சகல துக்கங்களில் இருந்து விடுதலை அடைவதே முக்கியமான தேவையாக இருக்க வேண்டும் என புத்த பகவான் மொழிந்துள்ளார். அதனடிப்படையில் நாம் தியானம் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உன்னதமான இலட்சியம்.

வாழ்வை உய்த்துணரும்போது மேற்கூரிய அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அவர் உளச்சுகாதாரத்தினை உணரும் ஒருவராகிறார். சிறந்த ஞாபக சக்தி உடையவராவார். அவர் ஒருபோதும் கவலை கொள்ளாத ஒருவராகிறார்.

அப்படியாயின் நீங்கள் தியானம் செய்வதன் மூலம் உலகியல் ரீதியாக எதிர்பார்க்கும் அனைத்தையும் தியானத்தின் மூலம் வாழ்வை உய்த்துணரும்போது கிடைக்கிறது. எனவே நீங்கள் தியானம் செய்வதன் குறிக்கோளாக ஞாபகச்சக்தியை மேம்படுத்துவதோ அல்லது உடல், உள சுகாதாரத்தையோ கொள்ள வேண்டாம். ஆரிய சீடனான நீங்கள் தியானம் செய்வதன் குறிக்கோளாக சகல துக்க நிவாரணியே கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இதனை நால்வகை சதிபட்டான தர்மத்தின் மூலமாக செய்து கொள்ள முடியும். நால்வகை சதிபட்டான தர்மத்தின் மூலம் சுயவுணர்வினை மேம்படுத்த முடியும் என்பதனை நீங்கள் இப்போது அறிவீர்கள். நாம் முன்னர் கற்றுக்கொண்டதை போன்று எம்மிடம் இயல்பாக சுயவுணர்வு இருக்கிறது. அது சாதாரணமான ஒரு உணர்வே. அது சம்மா சதியல்ல. உங்களுடைய மனதில் உள்ள வேதனைகளை அந்த சுயவுணர்வினால் நீக்க முடியாது. அதே போன்று சாதாரணமான அந்த சுயவுணர்வினால் வாழ்வை உயத்துணரவும் முடியாது. சோகத்தினதால் வழியும் கண்ணீரை அந்த சுயவுணர்வினால் துடைக்க முடியாது. சிதறிக்கிடக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதற்கு அந்த சுயவுணர்வினால் முடியாது. இவை அனைத்தையும் சம்மா சதியினாலயே செய்ய முடியும். அந்த சம்மா சதி சதிபட்டான தர்மத்தை மேம்மபடுத்துவதால் தான் விருத்தி செய்து கொள்ள முடியும்.

உங்களுக்குனும் ஒரு குறிக்கோள்.

புத்த பகவான் சதிபட்டானத்தை மேம்படுத்தும் முறைகள் நான்கினை போதித்துள்ளார்.

  1. காயானுபஸ்ஸனம் (உடல் மீது சுய உணர்வினை நிலைத்து வைக்கும் முறை)

  2. வேதனானுபஸ்ஸனம் (அனுபவிப்பின் மீது சுய உணர்வினை நிலைத்து வைக்கும் முறை)

  3. சித்தானுபஸ்ஸனம் (மனதின் மீது சுய உணர்வினை நிலைத்து வைக்கும் முறை)

  4. தம்மானுபஸ்ஸனம் (தர்ம உய்த்துணர்விற்கு அவசியமான காரணிகள் மீது உணர்வினை நிலைத்து வைக்கும் முறை)

சதிபட்டானத்தின் ஒரே இலக்கு நாற்பேருண்மைகளை உய்த்துணர்வதாகும். அதாவது வாழ்வினை உய்த்துணர்ந்து கொள்வதாகும். தர்ம உய்த்துணர்வையே நோக்கமாக கொண்ட நால்வகை சதிபட்டான தர்மத்தினை தியானங்களின் மூலமாக இனி நாம் கற்போம்.

What is Meditaion