Sabrahmma Sutta

சப்ரஹ்ம சூத்திரம்.
புண்ணியமிகு
ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் தம் பெற்றௌரை பூஜிப்பார்களாயின்இ அந்த குடும்பம் பிரம்மராஜாக்களை கொண்ட குடும்பமாகும். ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் தம் பெற்றௌரை பூஜிப்பார்களாயின்;இ அந்த குடும்பம் தன் முதல் ஆசான்களை கொண்ட குடும்பமாகும். குடும்பத்தின் பிள்ளைகள் தம் பெற்றௌரை பூஜிப்பார்களாயின்இ அந்த குடும்பம் முதல் தெய்வங்களை கொண்ட குடும்பமாகும். குடும்பத்தின்; பிள்ளைகள் தம் பெற்றௌரை பூஜிப்பார்களாயின்இ அந்த பிள்ளைகளை கொண்ட குடும்பம் தானங்களை ஏற்க மிகவூம் தகுதியூடைய உத்தமர்களை கொண்ட குடும்பமாகும்.
பிரம்மராஜர்கள் என்பது பெற்றௌரக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். முதல் ஆசான்கள் என்பது பெற்றௌருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். முதலிலே கிடைக்கும் தெய்வங்கள் என்பது பெற்றௌருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். தானங்களை ஏற்க தகுதியூடைய உத்தமர்கள் என்பதுவூம் பெற்றௌருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். அதற்கு காரணம் என்ன? பிக்குகளே! பெற்றௌர்கள் தம் பிள்ளைகளுக்கு மிகவூம் உபகாரம் செய்தோராவர். பிள்ளைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களை போசித்தார்கள். இவ்வூலகின் நன்மை தீமைகளை சுட்டிக்காட்டினார்கள்.
பெற்றௌர்கள் மகா பிரம்மராஜர்களே. முதன் ஆசான்களே. பிள்ளைகளின் பூஜைகளை ஏற்க தகுதியூடைய பெற்றௌர்இ தம் பிள்ளைகள் மீது மிகவூம் அனுதாபம் கொண்டவர்களே. ஆகையால் அறிவூள்ள பிள்ளைகள் தம் பெற்றௌர்களை பூஜிப்பார்கள். பணிவிடை செய்வார்கள்.
அவர்கள் தம் பெற்றௌர்களுக்கு உணவூஇ உடைஇ உறையூள் என்பனவற்றை அளித்து பூஜிப்பார்கள். தம் பெற்றௌர்களை நீராட்டி பணிவிடை செய்வார்கள். பாதங்களை பூஜிப்பார்கள்.
அவர்கள் தம் பெற்றௌர்களுக்கு செய்யூம் பணிவிடைகளின் காரணமாக இவ்வூலக வாழ்வின் போது ஞானமுள்ளவர்களின் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்கள். மறுவூலகில் சுவர்க்கத்தில் பிறந்து சுகம் அனுபவிப்பார்கள்.
-கௌதம புத்த பகவான்-