எம்முடன் வாழும் பிரம்மராஜர்கள் யார்?
புத்த பகவான் மகா கருணையினால் போதித்த பல போதனைகளில் பெற்றோரின் பெறுமதி தொடர்பாக மொழிந்த போதனைகள் இருக்கின்றன. அவற்றின் ஒன்றே இந்த சம்ரஹ்ம சூத்திரமாகும். சப்ரஹ்ம என்றால் பிரம்மனோடு வாழுதல் எனும் பொருளாகும். இங்கு புத்த பகவான் பிரம்மர்கள் என உவமைப்படுத்துவது எம் பெற்றோர்களையே.எம்முடன் வாழும் பிரம்மராஜர்கள் யார்?
பிரம்மராஜர்களுக்கு முக்கியமாக நான்கு குணங்கள் இருக்கின்றன. அவை முறையே : மெத்தா அதாவது அன்பு, முதிதா, அதாவது பொறாமையின்மை எனு;ம் குணம், கருணா என்பது கருணையாகும். உபேக்கா என்றால் நடுநிலை மனதுடையதாகும். புத்த பகவான், நம்மை ஈன்றெடுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த குணங்கள் இருப்பதாக மொழிந்துள்ளார். நன்றாக சிந்தித்து பாருங்கள் எம்மை பெற்றெடுத்து போசித்து வளர்க்கும் எமது பெற்றோர்களிடம் அன்பு இருக்கின்றதா இல்லையா? நிறையவே இருக்கிறது. அதேபோல் எமது பெற்றோர்கள் எமது முன்னேற்றத்தை கண்டு ஒருபோதும் பொறாமை கொள்வதில்லை. மாறாக மனம் மகிழ்ச்சியடைவார்கள். மென்மேழும் எமது முன்னேற்றத்தை எதிர்பார்ப்பார்கள். அதற்கு ஊக்குவிப்பார்கள். அதேபோல் எமது பெற்றோர்கள் எம்மீது கருணை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறாக எமக்கு. அன்பு, பொறாமையின்மை, கருணை எனும் குணங்களின் மூலம் உபகாரம் செ;யயும்; பெற்றோர்களை நாம் கடிந்து பேசுவதில்லையா? அவர்களது மனம் நோகும்படியாக நடந்து கொள்வதில்லையா? நாம் இவ்வாறு நடந்துகொள்ளும்; போது எமது பெற்றோர்கள் அவற்றை பொறுத்துக்கொள்வார்கள். நாம் அழிய வேண்டும் என நினைக்க மாட்டார்கள். இதுவே அவர்களது உபேக்கா குணமாகும்.
இவ்வாறான குணங்கள் கொண்ட பெற்றோர்களுக்கு நாம் பிரதியுபகாரம் செய்ய வேண்டிய முறைமை தொடர்பாகவே புத்த பகவான் இந்த போதனையில் மொழிந்துள்ளார். புத்த பகவான் மொழிகின்றார்.
புண்ணியமிகு பிக்குகளே!
ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் தம் பெற்றோரை பூஜிப்பார்களாயின் அந்த குடும்பம் பிரம்மராஜாக்களை கொண்ட குடும்பமாகும். ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் தம் பெற்றோரை பூஜிப்பார்களாயின்; அந்த குடும்பம் தன் முதல் ஆசான்களை கொண்ட குடும்பமாகும். குடும்பத்தின் பிள்ளைகள் தம் பெற்றோரை பூஜிப்பார்களாயின் அந்த குடும்பம் முதல் தெய்வங்களை கொண்ட குடும்பமாகும். குடும்பத்தின்; பிள்ளைகள் தம் பெற்றோரை பூஜிப்பார்களாயின் அந்த பிள்ளைகளை கொண்ட குடும்பம் தானங்களை ஏற்க மிகவும் தகுதியுடைய உத்தமர்களை கொண்ட குடும்பமாகும்.
பிக்குகளே! பிரம்மராஜர்கள் என்பது பெற்றோரக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். முதல் ஆசான்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். முதலிலே கிடைக்கும் தெய்வங்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். தானங்களை ஏற்க தகுதியுடைய உத்தமர்கள் என்பதுவும் பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். அதற்கு காரணம் என்ன? பிக்குகளே! பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு மிகவும் உபகாரம் செய்தோராவர். பிள்ளைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களை போசித்தார்கள். இவ்வுலகின் நன்மை தீமைகளை சுட்டிக்காட்டினார்கள்.
பெற்றோர்கள் மகா பிரம்மராஜர்களே. முதன் ஆசான்களே. பிள்ளைகளின் பூஜைகளை ஏற்க தகுதியுடைய பெற்றோர், தம் பிள்ளைகள் மீது மிகவும் அனுதாபம் கொண்டவர்களே. ஆகையால் அறிவுள்ள பிள்ளைகள் தம் பெற்றோர்களை பூஜிப்பார்கள். பணிவிடை செய்வார்கள்.
அவர்கள் தம் பெற்றோர்களுக்கு உணவு, உடை, உறையுள் என்பனவற்றை அளித்து பூஜிப்பார்கள். தம் பெற்றோர்களை நீராட்டி பணிவிடை செய்வார்கள். பாதங்களை பூஜிப்பார்கள்.
அவர்கள் தம் பெற்றோர்களுக்கு செய்யும் பணிவிடைகளின் காரணமாக இவ்வுலக வாழ்வின் போது ஞானமுள்ளவர்களின் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்கள். மறுவுலகில் சுவர்க்கத்தில் பிறந்து சுகம் அனுபவிப்பார்கள்.எம்முடன் வாழும் பிரம்மராஜர்கள் யார்?