புண்ணியங்களை எப்படி செய்ய வேண்டும்?
புண்ய கிரிய வத்து சூத்திரம்.
நாம் இன்று புத்த பகவானின் ஒரு அழகிய போதனையே கற்கவுள்ளோம். அதன் பெயர் ஆகும். இதன் மூலம் புத்த பகவான்இ ஒருவர் செய்யும் புண்ணியங்களுக்கு அமைய அவர்களுக்கு அதன் விளைவுகள் கிடைக்கும் விதத்தினையே போதித்துள்ளார். சிலர் அதிகமான அளவில் புண்ணியங்கள் செய்வார்கள். சிலர் தம் வாழ்நாளில் சிறிதளவே புண்ணியங்கள் செய்வார்கள். இவர்களது புண்ணியங்களின் விளைவு சமமானதா அல்லது வேறுபட்டதா? உண்மையிலேயே அது வேறுபட்டதாகவே இருக்கிறது. புத்த பகவான் புண்ணியங்கள் செய்யும் மூன்று பிரதான முறைகளை மொழிந்துள்ளார். அவையாவன: தானம், சீலம், தியானம் என்பனவாகும்.
தானம் என்றால் தனக்குரியவற்றை ஏனையோரது நன்மைக்காக அளிப்பதாகும். சீலம் என்றால் ஒழுக்கமாகும். இல்லறத்தோரது நித்திய சீலமான பஞ்ச சீலத்தினாலும் பௌர்ணமி தியனங்களில் அனுசரிக்க வேண்டிய உபோசத சீலத்தினாலும் இல்லறத்தோர் நிறைய புண்ணியங்களை தனது வாழ்விற்கு சேகரித்துக்கொள்ள முடியும். புத்த சாசனத்தில் துறவு பூண்ட ஒருவர் சாமணேர பத்து சீலங்களையும் உபசம்பதா சீலத்தினாலும் ஒருவர் புண்ணியங்களை சேகரித்துக்கொள்ள முடியும்.புண்ணியங்களை எப்படி செய்ய வேண்டும்?
இல்லறத்தோரது பஞ்ச சீலத்தில் ஐந்து அங்கங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு முறையே.
- உயிர்களை கொல்லாமை
- களவு எடுக்காமை
- தகாத காமத்தில் ஈடுபடாமை
- பொய் உரைக்காமை
- மது, போதை பொருள் என்பன உபயோகிக்காமை என்பனவாகும்.
அதேபோல் மும்மணிகளை சரணடைந்த ஒரு உபாசகன், அல்லது உபாசகி பௌர்ணமி தினங்களின்போது இந்த ஐந்து பஞ்ச சீலத்திலும் உயர்வான இட்டாங்க உபோசத சீலத்தினை அனுசரிப்பார். அந்த எட்டு அங்கங்களும் பின்வருமாறு
- உயிர்களை கொல்லாமை
- களவு எடுக்காமை
- பிரம்மசரிய வாழ்வினை கடைப்பிடித்தல்
- பொய் உரைக்காமை
- மது, போதை பொருள் என்பன உபயோகிக்காமை
- அகாலத்தில் உணவு உட்கொல்லாமை
- ஆடல், பாடல், இசைத்தல், விகார காட்சிகளை கண்டு களித்தல், மாலைகள், வாசனை திரவியங்கள், என்பன உபயோகித்தல், தன்னை விசேடமாக அலங்கரித்துக்கொள்ளல் என்பனவற்றில் இருந்து தவிர்த்திருத்தல்
- உயர், சொகுசான ஆசனங்களை தவிர்த்திருத்தல்
என்பனவாகும்.
புத்த பகவான் இந்த போதனை மூலம் பின்வருமாறு விளக்குகிறார்.
ஒருவர் தானம், சீலம், எனும் இரு வகையில் சிறிதளவு புண்ணியங்களை செய்கிறார். ஆனால் அவர் தியானங்களின் மூலம் சிறிதளவு கூட புண்ணியங்களை செய்வதில்லை. அவர் இரண்டு புண்ணியங்களை சிறிதளவிலாக செய்துள்ளார். அவர் சிறிதளவு தானமளித்துள்ளார். சிறிதுகாலம் சீலத்தினை அனுசரித்துள்ளார். இவ்வாறானவர்கள் மரணித்து மீண்டும் மனித உலகில் வந்து பிறக்கும் போது அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக பிறக்கமாட்டார்கள். அவர்களுக்கு கிடைக்கும செல்வமும் செல்வாக்கும் சிறிதளவிலானதாகவே இருக்கும். அதற்கு காரணம் அவர் தன் முற்பிறவிகளில் சிறிதளவிலேயே தானமளித்துள்ளார். சீலம் அனுசரித்துள்ளார். புண்ணியங்களை சிறிதளவே செய்துள்ளார்.
அதேபோல் இன்னுமொருவர் இருக்கிறார். அவர் அதிகமாகவும் இல்லாது குறைவாகவும் இல்லாது புண்ணியங்கள் செய்து கொள்கிறார். அவர் மரணித்து மீண்டும் மனித உலகில் பிறக்கும் போது மத்திய நிலையிலான செல்வங்களும் செல்வாக்கும் உடையவராக பிறப்பார்.புண்ணியங்களை எப்படி செய்ய வேண்டும்?