எங்களது கதையையும் கொஞ்சம் கேளுங்கள்
01
அடிகிய வண்ணத்துப்ழுரூச்சி
எனது அப்பா அம்மாவை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது குழந்தை பருவம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் நான் ஒரு கொன்றை மரத்திலுள்ள பிஞ்சு இலை ஒன்றை கடித்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது நான் சிறியதொரு கம்பளிப+ச்சியாக இருந்தேன். அப்போது நான்
சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டின் மிதான விருப்பம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய்விட்டது. எனது உடம்பு வலிக்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் எனது வாயிலிருந்து ஏதோ ஒருவகையான திரவம் ஒன்று வெளியே ஊற்றியது. அப்போது.. நான் அந்த திரவத்தினை எனது உடம்பு முழுவதும் பூசிக்கொண்டேன். அதன் காரணமாக ஒரு கூடு போன்றதொரு சிறியவலையினால் எனது முழு உடலும் மறைந்துவிட்டது. அதன் பின் நான் தூங்கிவிட்டேன். நான் வெகுநேரமாக நன்றாக தூங்கினேன், என்றே நினைக்கிறேன். அந்நேரத்திற்குள் எனது உடல் முழுமையாக மாற்றமடைந்துவிட்டது போலும். அந்த கம்பளி
புழுவினது உடல் முழுவதுமாக மறைந்து அதற்கு மாறாக மிகவும் அழகிய செந்நிற கோடுகள் விழுந்த மஞ்சள் நிற இறக்கைகள் இருந்தன… என்னால் மேலும் அந்த கூட்டுக்குள் இருக்க முடியவில்லை. மிகுந்த முயற்சி செய்து ஒருவாராக அந்த கூட்டிலிருந்து வெளியிலே
வந்து விட்டேன். ஆஹா… என்ன அருமை நான் லாவகமாக எனது இறக்கைகளை அசைக்கும் போதே மேலே மிதந்து சென்றேன். ஹா… ஹா.. ! இப்போது என்னாலும் பறக்க முடியும். முன்பு போல் என்னால் இலைகளை உண்ண முடியாது. இப்போது என் வாயினுள் சிறியதொரு குழாய் ஒன்று இருக்கிறது. அதனால் மலர்களின் தேனை உறிஞ்சலாம். ஆகையால் மலர்களது தேனை தேடியவாறு நான் பல மலர்களை தேடிச்சென்றேன். ஆனால்… ஒரு பூவிலேனும் தேனிருக்கவில்லை.
அப்போது அழகிய மலர்கள் பூத்து குலுங்கும் ஒரு பூந்தோட்டம் இருக்கும் ஒரு வீட்டினை கண்டேன். நான் எனது அழகிய இறக்கைகளை அசைத்த வண்ணம் ஆனந்தத்துடன் அத்திசையை நோக்கி பறந்து சென்றேன். “அங்கே பார் அழகானதொரு வண்ணத்துப்பூச்சி… வாசீக்கிரம் பிடிப்போம்.” என சிறுவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். ஐயோ நான் மிகவும் பயந்துவிட்டேன். பயம் மேலிட்டு என்னை அறியாமலேயே பெரும் சத்தமிட்டேன். வேகமாக இறக்கைகளை அடித்து கொள்ள முடியாமல் தடுமாறினேன். இருப்பினும் மிகவும்
வீரியம் கொண்டு மேல் நோக்கி பறந்தேன். அருகில் இருந்த ஒரு மரத்தின் இலையின் பின்னால் மறைந்து கொண்டேன்… அப்போது
என்னை போன்றே இன்னுமொரு வண்ணத்துப்பூச்சி அலரும் சப்தம் கேட்டது. ‘ஐயகோ…ஆஹ்…மிகவும் வலிக்கிறது…என்னை விட்டுவிடுங்கள்’ என அந்த வண்ணத்துபூச்சி கதறிக்கொண்டிருந்தது. ஒரு சிறுவன் மிகவும் அழகியதொரு வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை இரு விரல்களால் இறுக பற்றியபடி இருந்தான். அந்த வண்ணத்துப்பூச்சியின் வேதனை தொடர்பாக எவ்வித கவலையும் அவனிடம் இருக்கவில்லை. நான் சீக்கிரமாகவே அவ்விடத்தினை விட்டு அகன்றுவிட்டேன். காடு போன்று காட்சியளித்த சிறிய புதர்கள் நிறைந்த ஒரு திறந்த வெளியை
நோக்கி நான் பறந்து வந்தேன். இன்னுமொரு வண்ணத்துப்பூச்சியின் அலறல் சப்தம் ஒன்றும் கேட்டது. என்னையறியாமலே நான் அலறல்
சப்தம் வந்த திசையை பார்த்தேன். சிறியதொரு முதலையை போன்ற கொடிய தோற்றமுடைய பயங்கரமானதொரு ஓணான் அந்த வண்ணத்துப்பூசியை வாயினால் இறுக பற்றியபடி மென்று விழுங்கியது. நான் மிகவும் அச்சம் கொண்டேன். அங்கிருந்தும் சீக்கிரமாகவே அகன்று விட்டேன். அதோ என்னை விடவும் மிகவும் அழகானதொரு வண்ணத்துப்பூச்சி ஒன்று பறந்து வருகிறது. அதனிடமாவது தேனிருக்கும் மலர்கள்
எங்குள்ளது என்று கேட்க வேண்டும். ஐயோ…ஈட்டியை போல் வேகமாக பறந்து வந்த ஒரு பறவை அந்த வண்ணத்துப்பூச்சியை
விழுங்கிவிட்டதே! நான் அதிர்ச்சியால் பெரும் சப்தமிட்டேன். ஐயோ…! நான் என்ன செய்வேன்…? எனக்கு மிகவும் பயமாக உள்ளது… பசி வயிற்றை கிள்ளுகிறதே… தேனிருக்கும் மலர்களுமில்லையே… என்ன செய்வேன்?
நான் இன்னும் வெகு தூரம் பறந்து சென்றேன். ஆ… இன்னுமொரு வண்ணத்துப்பூச்சி இப்பக்கமாக பறந்து வருகிறதே. அவதனிடமாவது கேட்க வேண்டும். ‘தோழரே! தேனிருக்கும் மலர்கள் இருக்கும் ஒரு இடத்தினை காணவில்லையா?
‘ஆ… உங்களுக்கு இன்னும் மலர் தேன் கிடைக்கவில்லையா? சரி… இன்னும் கொஞ்ச தூரம் அத்திசையை நோக்கி பறந்து செல்லுங்கள்.
இரயில் விதியின் அருகே தேனிருக்கும் மலர்கள் மலர்ந்துள்ளன. நானும் அங்கு தான் தேனை அருந்தினேன். இன்னும் அந்த மலர்களில்
தேனுள்ளது… ஆனால் வானத்தினை பாருங்கள். இருண்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யப்போகிறது… அதற்கு முன்னர்
முடியுமென்றால் சென்று பசியாறுங்கள்… நானும் சிக்கிரமாகவே அவ்விடத்தை அடைய வேண்டும் என பறந்து சென்றேன். தேன் நிறைந்திருக்கும் மலர்களை கண்ணால் காணக்கிடைத்தும் பருக முடியவில்லை. ஐயகோ! பாருங்கள்… மழை
வந்துவிட்டது… ஐயோ! எனது இறக்கைகள் நனைகின்றனவே…என்னால் பறக்க முடியவில்லையே… அந்த மரத்திற்காகவாவது
செல்ல வேண்டும். எனக்கு மிகவும் பசிக்கிறது. ஆனாலும் என்னால் இனியும் பறப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதே. என்னால் பறக்கவும் முடியவில்லை. நான் மழையிலே நன்றாக நனைந்துவிட்டேன்.இன்னும் சற்று நேரத்திலேயே நான் இறந்துவிடுவேன். நான் முற்பிறவிகளில் ஏதேனும் கொடிய பாவங்களை செய்திருக்க வேண்டும். அதனால்தான் வண்ணத்துப்பூச்சியாக பிறந்து இவ்வளவு துன்பத்தினை அனுபவிக்க நேரிட்டது. இனிமேல் ஒருபோதும் எனக்கு இம்மாதிரியான வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை என்றால் வேண்டாம்…! என்னை போல்
தாகத்தினாலும், பட்டினியாலும் எத்தனை வண்ணத்துப்பூச்சிகள் இறக்கின்றனவோ…? குழந்தைகளே… என்னை போன்ற வண்ணத்துப்ப+ச்சிகளை பிடிக்க
வேண்டாம். எமது இறக்கைகள் மிக மிக மென்மையானவை.
சீக்கிரமாகவே உடைந்துவிடும். அப்போது நாம் மிகுந்த வேதனையால்
துடித்து போகிறோம். எம்மீது கருணை காட்டுங்கள். குறைந்தபட்சம்
இந்த துரதிஷ்டம் மிக்க வண்ணத்துப்ப+ச்சி வாழ்க்கை முடிவுறுவதற்கு முன்னர் வயிறு நிறைய தேனை உட்கொள்ளுவதற்காவது தேனிருக்கும்
மலர்செடிகளை நடுங்கள். ஐயோ! அங்கே பாருங்கள். சிவப்பு நிற கொம்புகள் இருக்கும் கூரிய பற்கள் இருக்கும் கொடிய வகையான எறும்புகள் என்னை நோக்கி ஓடோடி வந்து கொண்டிருக்கின்றன. ஐயோ…! என்னால் பறக்கவும்
முடியவில்லையே… ஐயோ… வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள்… ஆ… ஆ…
அழகிய இறகுகள் இருந்தாலும் – அதில் வண்ணங்கள் நிறைந்திருந்தாலும்
பருகுவதற்கு தேனில்லையெனில் – எந்நாளும் பசியினது கொடுமையே
பறந்து பறந்து செல்லும் நான் – சிறிது காலம் வாழும் நான் எங்கு செல்வேன் என அறியாது – மரணத்தினையே நெருங்குகிறேன்.
என் மீது கருணை கொண்டு அழகில்லாவிடிலும் – தேனிருக்கும் மலர்களையே நட்டு வைப்பீர் சிறுவர்களே…!
02.
டிங் டிங் ஓசை எழுப்பும் அழகிய அணில்
மனிதர்களை பார்த்தாலே நான் அச்சம் கொள்வேன். ஒருநாள் எனது அம்மாவை ஒரு சிறுவன் பிடித்து கொண்டான். எனது அம்மாவின் கழுத்தினை இறுக பற்றிக்கொண்டான். ஷடிங் டிங0; என்று என் அம்மா தொடர்ந்து அலற
துவங்கினாள். நானும் நன்றாகவே பயந்துவிட்டேன். ‘டிங் டிங்’ என நானும்
அழ ஆரம்பித்தேன். அப்போது அவ்வீட்டில் இருந்த ஒரு அக்கா என்னை பார்த்து, ‘ஐயோ தம்பி இந்த அணில் அம்மாவை விட்டு விடுங்கள். அந்த
அணில் பிள்ளையும் அழுகிறது பாவம்…’
‘இல்லை… இல்லை நான் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த அணிலை பிடித்தேன்… நான் இந்த அணிலை அந்த கூட்டுக்குள் விடப்போகிறேன். வேண்டுமானால் இந்த சின்ன அணிலும் வராதா என்ன? ஹஹ் ஹா…’ என்று
பலத்த சிரிப்புடன் எனது அம்மாவை சிறியதொரு கூட்டுக்குள் அடைத்தான். ‘என்ட மகனே! நீ சீக்கிரமாக இவ்விடத்தை விட்டு ஓடிவிடு’ என அம்மா கதறினாள அம்மாவின் அழுகுரலை கேட்ட எனது அப்பாவும் ‘டிங் டிங்’ என சத்தமிட்டு
கீச்சிட்டுக் கொண்டிருந்தார். நான் அப்பாவிடம் ஓடிச்சென்றேன். அன்று எம்மிருவருக்கும் எவ்வித சந்தோஷமுமில்லை. நானும் அப்பாவும் எமது
கூட்டுக்குள் வந்து அழுதுகொண்டிருந்தோம். அன்று இரவு அப்பா என்னை அணைத்துகொண்டு ‘மகனே! நீ பிறப்பதற்கு முன் இரண்டு குட்டிகள்
எமக்கு பிறந்திருந்தன’ எனக்கூறிக்கொண்டு அழத்தொடங்கினார். முதலாவது குட்டி சிறிது காலத்திற்குள் நன்கு வளர்ந்துவிட்டான். நானும் உனது அம்மாவும் அந்த குட்டிக்கு நடை பழக்குவதற்காக இதோ இந்த கிளை வழியே அழைத்து சென்றோம். ஐயோ அப்போது அந்த குட்டி கால் தவறி கீழே விழுந்துவிட்டது. நானும் அம்மாவும் அழுதுக்கொண்டே கீழ் நோக்கி
ஓடினோம். ஆனாலும் எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை. அந்த வீட்டில் ஒரு கொடூரமான பூனை ஒன்று இருக்கிறது. அது ஒரு நொடியிலேயே எனது மகனை வாயிலே கௌவிக்கொண்டது. நாம் கதறி அழுதோம்.
ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த பூனை எனது மகனை… நறு நறு’ வென தின்று முடித்துவிட்டது.நாம் யாரிடம்தான் முறையிடுவது…? எமது இரண்டாவது குழந்தை பிறக்கும் போது நாம் வேறொரு மரத்தில் இருந்தோம். நாம் இந்த சூழலை மிகவும் வெறுத்தோம். ஆனாலும் நாம் வேறு
எங்குதான் செல்வது? நாம் கூடு கட்டிய மரம் உயரமானதல்ல. அன்று நானும் உனது அம்மாவும் உணவு தேடுவதற்காக கூட்டினை விட்டு
வெளியேறிவிட்டோம். மீண்டும் கூட்டிற்கு திரும்பிய எம்மால் மூச்சை உள்வாங்க முடியவில்லை. இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. பயங்கரமான கண்களும் அகலமான வாயும் இருந்த மிக நீளமான
உடலை கொண்டதொரு நாகம் கூட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது நாம் மிக சத்தமாக அனைவருக்கும் கேட்கும் வணணம் உதவிகேட்டு அலறினோம். ஆனால் எமது
அழுகுரலுக்கு யாருமே செவிசாய்க்கவில்லை. அயல் வீட்டில் இருந்த பாட்டி ஒருவர் ‘இந்த அணில்களோடு மிகவும் தொல்லையாக
இருக்கிறதே’ என்று எம்மையே சாடினாள். எம் இருவரால் அந்த பயங்கரமான பாம்புடன் போராட முடியாது என்பதை உணர்ந்த நாம் இருவரும் அது அங்கிருந்து நீங்கி செல்லும் வரையிலும் காத்திருக்க வேண்டியதாயிற்று. பாம்பு அவ்விடத்திலிருந்து நீங்கியவுடனேயே நமது பிள்ளையை பார்ப்பதற்காக ஓடோடிச்சென்றோம். இஹி… இஹி… அந்த பாம்பு எமது பிள்ளையை விழுங்கி சென்றுள்ளது. மகனே! நாம் மிகவும் பயத்துடனே வாழ்கிறோம். மழை பெய்தால்
நனைகிறோம். சற்று வேகமாக காற்று வீசினாலும் எமது கூடுகள் உடைந்து விடுகிறது. பெரிய பெரிய விலங்குகள் எம்மை
வேட்டையாடுகின்றன. உனது சித்தியை ஒரு பருந்துதான் தூக்கி சென்றது. நாம் மிகவும் பாவம் செய்தவர்களாவோம். அதனால்தான் இந்த மிருகலோகம் எனும் நரகத்தில் பிறந்திருக்கிறோம். அப்பா இவ்வாறு கூறிவிட்டு பொழுது புலரும் வரையிலும் அழுதுகொண்டே இருந்தார். நாம் அதிகாலையிலேயே அம்மாவை பூட்டி வைத்திருந்த கூடு இருக்கும் இடத்திற்கு சென்று சற்று சேய்மையில் இருந்தே அம்மாவை பார்த்து கொண்டிருந்தோம். அம்மாவால்
அங்கிருந்து தப்பித்து கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. எனது அம்மாவை கூட்டில் அடைத்த அந்த சிறுவன் எனது அம்மாவுக்கு சிறு பாண் துண்டினை அளித்தான்… நான் அப்பாவிடம் ‘அப்பா எனக்கும் பசிக்கிறது… அங்கே பாருங்கள்… அம்மாவும் பாண் சாப்பிடுகிறாள்.’என்று மிகுந்த பசியுடன் கூறினேன். கொஞ்சம் பொறுமையாக இரு.. அங்கே ஒரு மாமரம் இருப்பது தெரிகின்றதா? அங்கே ஒரு புற்றில் ஈசல்கள் நிறைந்திருந்தன. நாமிருவரும் அங்கு சென்று ஈசல்களைசாப்பிடுவோம்…’
நாமிருவருமே அங்கு சென்று அந்த ஈசல்களை சாப்பிட்டோம். எவ்வித சுவையுமே இல்லை. நாம் மீண்டும் அம்மா இருந்த இடத்திற்கு சென்றோம். ஷமகன் இங்கே வந்து பார். அந்த தட்டில் ஒரு பாண் துண்டு இருக்கிறது. நாம் அதை சாப்பிடுவோம். சுற்றும் முற்றும் பார்த்தோம்.
யாருமே தென்படவில்லை. மெதுவாக நாம் அதனை சாப்பிடுவதற்காக சென்றது மாத்திரம் தான். இரண்டு சிறுவர்கள் ‘பெரிய அணிலும்
குட்டி அணிலும் வந்துவிட்டன…’ என கத்திக்கொண்டு வீட்டிலிருந்து திடீரென வெளியில் குதித்து ஓடி வந்தனர். நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? என்னையுமறியாமல் நான் சிறுநீர் கழித்துவிட்டேன். நானும் அப்பாவும் பெரும் சத்தமாக கத்திக்கொண்டே மரத்திற்கு ஓடினோம். பய மிகுதியால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை. அப்போதுதான் அந்த வீட்டிலிருந்த
அந்த சிறுவர்களின் தந்தையார் வெளியில் வந்தார். ‘இங்கே பாருங்கள் பிள்ளைகள், பிராணிகளுக்கு சாப்பாடு கொடுப்பதாக இருந்தால்.
அவைகளை நிம்மதியாக சாப்பிட்டு போக விடுங்கள்… அந்த அணில் அம்மாவையும் அடைத்து கொண்டு… என்ன பெரிய பாவம்…? இந்த
அணிலை விட்டு விடுங்கள்… இனி இந்த அப்பாவி அணில்களுக்கு கூடு தேவையில்லை… இங்கே பாருங்கள் மகன்.. பிராணிகள் மீது கருணையோடு இருந்தால் அவை எம்மை கண்டு பயப்படாது. எம்
அருகில் வேண்டுமானாலும் வரும். அதனால் நல்ல பிள்ளைகள் போல் அந்த கூட்டை திறந்து விடுங்கள்”. அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன் அம்மாவை அடைத்து வைத்திருந்த கூட்டினை திறந்து விட்டான். ஹா… ஹா… அம்மா மின்னலை போல் அங்கிருந்த வெளியில் பாய்ந்து ஓடோடி எம்மிடம் வந்தார். நானும் அம்மாவிடம்
ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கொண்டேன். அம்மா எனக்கு மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் சிறிது காலத்தில் நல்லவர்களாகிவிட்டனர். ஒரு பலகையில் தினந்தோரும் எமக்காக உணவு வைத்தனர். அந்த
வீட்டில் ஒரு அக்கா இருந்தார் அவர் மிகவும் நல்லவர். ‘எனது குட்டி அணிலே வா… வந்து சாப்பிடு’ என அன்போடு அழைத்து உணவு
கொடுப்பார். ஒருநாள் எனது அம்மா எவ்வித பயமும் இல்லாமல் அந்த அக்காவின் அருகிலேயே சென்றார். ஷஅங்கே பாருங்கள் அப்பா…
அம்மா எந்த பயமும் இல்லாமலே அந்த அக்காவிடம் போய் அந்த பழத்துண்டையும் எடுத்து வருகிறார்…0 ஷகவனம்…பழத்தினை எடுத்ததும்
சீக்கிரமாக வந்துவிடுங்கள்0 என அப்பா உரக்க கத்தினார். ஒருநாள் அந்த வீட்டிலிருக்கும் சிறுவனிடம் அயல் வீட்டிலிருந்த ஒரு சிறுவன் ஏதோ கூறினான். அதற்கு அந்த சிறுவன் ‘ஏய்…விமல் எங்கள் வீட்டிற்கு கவண் கொண்டு வரத்தேவையில்லை. இங்கே அப்பாவியான அணில்கள் தான் வருகின்றன’ என கத்தினான்.
‘கவண் என்றால் என்ன அம்மா…’ என்றேன். ‘தெரியவில்லை மகன்… ஏதாவது சாப்பாடாகத்தான். இருக்கும்0 அன்று நானும் அம்மாவும்
அப்பாவும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த விமல் எனும் கொடூரமான சிறுவன் கவணை எடுத்து அதிலே கற்களை வைத்து எம்மை குறி வைத்தான். ‘மகனே! எம்மை கொல்ல போகிறார்கள்… வா ஓடிவிடுவோம்…’ நான் மிகவும் பயந்துவிட்டேன். மரத்தின் உயர்ந்த
கிளைகளை நோக்கி ஓடினேன். அவ்வாறு ஓடும் போது அப்பா கீழே விழுவதை கண்டேன். ‘அம்மா…அப்பா கீழே விழுந்துட்டார்’
என கத்தினேன் அம்மாவும் நானும் ஓடுவதை நிறுத்தி பயத்தினால் நடுங்கிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த கொடூரமான
சிறுவன் என் அப்பாவின் வாலால் தூக்கியெடுத்தான். ‘ஐயோ…எனது அப்பாவின் உடலிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஐயோ… எனது அப்பா இறந்துவிட்டார்…’ நானும் அம்மாவும் கதறியழுதோம்.
‘ம்… இலக்கு எப்படி? என அந்த கொடிய சிறுவன் பெருமிதம் கொண்டு சிரித்தான். அப்போது அந்த வீட்டிலிருந்த அக்கா வெளியே வந்தாள்.
நடந்ததை கண்டு அழுதாள். ‘ஐயோ இந்த அப்பாவி அணிலை ஏன் சாவடித்தீர்கள்…? விமல் நீ இனிமேலும் இங்கே வராதே. போய்விடு…
போ…’ என சத்தமிட்டாள். அந்த வீட்டிலிருந்த அப்பாவுக்கும் மிகுந்த கோபம். ‘விமல் அந்த கவணை இங்க கொண்டு வா’ என அந்த
கவணை பெற்று இரண்டு துண்டாக உடைத்து வீசினார். விமல் எனும் அந்த கொடிய சிறுவன் ஓடிவிட்டான். நாங்கள் மிகவும் அப்பாவிகளாவோம்… எம்மை இவ்வாறு இம்சிக்காதீர்கள்… எம்மை கூடுகளில் அடைக்க வேண்டாம். எமக்கு கருணை காட்டுங்கள். எம்மீது அன்பு செலுத்துங்கள். பூனைகள் நெறுங்க முடியாத இடங்களில் எமக்கும் கொஞ்சம் உணவு வையுங்கள். நாம் உங்களுக்கு தொல்லைகள் தருவதில்லை அல்லவா…?
‘டிங் டிங்’ என ஓசை எழுப்பினாலும் – முதுகில் மூவரியிருந்தாலும் அழகிய தோற்றமிருந்தாலும் – நாம் துன்பத்துடனே வாழ்கிறோம்.. மழையில் நனைந்து கொண்டும் – வெயிலில் காய்ந்துகொண்டு வாழ்கிறோம்..
அழகிய கூட்டிலிருந்தாலும் மரண பயத்துடயே இருக்கிறோம்… தவறேதும் செய்யாத நாம் – அப்பாவியான அணில்களாவோம்… சிறைப்படுவதை வெறுக்கின்ற எம்மை கூட்டினுள் அடைக்காதீர்… பரிவினை அளித்து – எமது சிறு வயிறுகள் நிரம்ப உணவு சிறிதளவை உவந்தளியுங்கள் – மேன்மைமிகு மாந்தர்களே!
03
அழகிய தேன்சிட்டு
எனது சிறகுகள் கருநீல நிறத்திலானவை. எனது கழுத்தும் கருநீல நிறத்தோடு மின்னிக்கொண்டு இருக்கிறது. என்னிடம் நீண்ட சொண்டு ஒன்றிருக்கிறது. அதனை கொண்டே நான் மலர்களின் தேனை அருந்துகிறேன். நான் அழகியதொரு தேன்சிட்டு என்பதால் எனது
வாழ்க்கையும் அழகானதொன்று என்றே நீங்கள் நினைப்பீர்கள். அவ்வாறு நீங்கள் நினைப்பதாயின் அது முற்றிலும் தவறாகும். நான் சிறு வயதிலிருக்கும் போதே எனது பெற்றோர்கள் ஏனைய விலங்குகளுக்கு இரையாகிவிட்டனர். சிறிது காலமாக நான் தனிமையாகவே
வாழ்ந்தேன். அண்மையில் தான் எனக்கு இந்த பெண் சிட்டு அறிமுகமானாள். பறவைகளின் உலகம் விசித்திரமானது. பல்வேறுபட்ட வண்ணங்களை உடைய பல்வகையான அலகுகளை உடைய வெவ்வேறு ஓசைகளை
எழுப்பும் சிறியவை பெரியவை என வேறுபாடுடைய பறவைகளும் இருக்கின்றன. ஆனால் இவ்வனைத்து வகையான பறவைகளினதும் வாழ்க்கை ஒருவிடயத்தில் ஒத்து போகிறது. அதுதான் துன்பங்கள் நிறைந்த
பயமிகுந்த வாழ்க்கை. நாம் வாழ்ந்து வந்த பிரதேசம் கோடைக்கு உட்பட்டது. மரஞ்செடி
கொடிகள் காய்ந்து விட்டன. மலர்செடிகள் இறந்து போயின. மிகவும் கடுமையான வெயிலாக இருந்தது. இந்த கடுமையான வெயிலில் எம்மால்
பறந்து செல்ல முடியாது. எனவே நாமிருவரும் அப்பிரதேசத்தினை விட்டு இங்கே வந்துவிட்டோம். பசுமையான மரங்கள் நிறைந்த பூக்கள் பூத்து குலுங்கும் பிரதேசத்தை நோக்கி பறந்து சென்றோம். செல்லும் வழியில் வண்ணத்துப்பூச்சியாக உருமாறவிருக்கும் கூட்டுப்புழுக்களை
ஆகாரமாக்கிக்கொண்டோம். சிறு சிறு வண்ணத்துப்பூச்சிகளையும் உணவாக
உட்கொண்டோம். ஆனாலும் அவை தேனை போல் இனிக்குமா என்ன? அன்று நாம் பறந்து செல்லும் வழியில் ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது.
ஓசை வந்த திசைக்கு நாம் மெதுவாக சென்று பார்த்தோம். அங்கே… அங்கே என்ன செய்தார்கள் தெரியுமா? கிளிகளின் சிறகுகளை ஒரு கொடிய
மனிதன் வெட்டிக்கொண்டிருந்தான். நாம் தூரத்திலிருந்தே அவர்கள் அறியாத வண்ணம் மெதுவாக பார்த்துக்கொண்டிருந்தோம்.
‘பாவி மனுசனே… ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ளேன். ஏன் இந்த மாதிரி அப்பாவி கிளிகளுடைய சிறகுகளை வெட்டி கூட்டில்
அடைத்து விற்கும் பாவ வேலைகளை செய்கிறாய்’ என்று ஒரு பாட்டி சத்தமிட்டாள். ஷபாவம் என்று என்ன செய்வது? நாமும் வாழ வேண்டும் தானே. எனக்கு வேறெந்த வேலையும் தெரியாதென்று
உனக்கு தெரியாதா? நாம் இவைகளை கொல்ல மாட்டோம் தானே… இன்னும் கொஞ்ச காலத்தில இவைகளுக்கு திரும்பவும் சிறகுகள்
வளர்ந்துவிடுமே…’ என்று அந்த கொடிய மனிதன் பதிலளித்தான். அங்கிருந்த ஒரு கிளிக்குஞ்சு தன் தாயிடம் ‘ஐயோ..அம்மா…எனக்கு மிகவும் வலிக்கிறது. என்னால் பறக்கவும் முடியவில்லை. அந்த பாவி மனுசன் என்னுடைய கழுத்தை இறுக்கி பிடித்ததால் மிகவும் வலிக்கிறது..’ அதற்கு தாய் கிளி ‘மகன் இங்க பார் அந்த பாவி என்னுடைய சிறகுகளை வெட்டும் போது அந்த கத்தி என்மீது பட்டதால் இன்னும் இரத்தம் வழிகிறது. நானும் மிகுந்த வேதனையிலேயே இருக்கிறேன். யார் தான் எமது வேதனையை உணர்வார்கள்..?
அங்கு இருபதிற்கும் மேற்பட்ட கிளிகள் இருந்தன. சில கிளிகள் கூட்டினுள்ளும் வேறு சில கூண்டிற்கு வெளி;புறமாகவும் இருந்தன. அந்த கிளிகளால் பறக்க முடியாது. அப்போது இந்த பெண் சிட்டு
என்னிடம் ‘எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எமது சிறகுகளையும் இவ்வாறு வெட்டிவிடுவார்களா’ எனக்கேட்டாள். அந்த மனுசன் அந்த கிளிகளை நசுக்கி பிடிப்பதை பார்… எம்மை எவ்வாறு பிடித்து சிறகுகளை எவ்வாறு வெட்ட முடியும்? இந்த பிடிக்கு ஈடுகொடுக்க
முடியாமல் நாம் இறந்தே போய்விடுவோம்.. பின்னர் சிறகுகளை வெட்டித்தான் என்ன பயன்?
ஷவாருங்கள் நாம் இங்கிருந்து சீக்கிரமாக போய்விடுவோம். எனக்கு பயமாக உள்ளது.0 இந்த பெண்சிட்டு மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள். எனவே நாம் சீக்கிரமாகவே அங்கிருந்து புறப்பட்டோம். வேறு ஒரு பிரதேசத்திற்கு வந்தோம். அங்கு முற்புதர்கள் நிறைந்த ஒரு சிறு காட்டை அடைந்தோம். பாம்புகளின் அபாயம் இருந்தாலும் என்ன செய்வது? இந்த பறவைகளாக பிறந்தால் துன்பமின்றி இன்பமேது?
சாயுங்காலத்தில் எமது பார்வை மங்கிவிடும். தெளிவாக எதனையும் காண முடியாது. அதனால் நாமும் இருள் சூழும் போதே புதர்களுக்குள்
சென்று மறைவாக இருந்து கண்களை மூடிக்கொள்வோம். ஆனால்
நிம்மதியாக உறங்கியதே இல்லை. சிறிய சப்தத்தினை கேட்டாலே மிகுந்த பயம் கொள்வோம். பொழுது விடியும் வரை நாம் உயிர்
வாழ்வோமா எனும் நம்பிக்கை எம்மிடம் சிறிதளவேனும் இல்லை. சூரியோதயத்துடன் எமது கண்கள் புலப்பட ஆரம்பிக்கும். அப்போது நாம் மெதுவாக புதர்களிலிருந்து, மறைந்திருந்த இலைகுலைகளிலிருந்து வெளியே வருவோம். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த
சந்தோஷத்தின் வெளி;ப்பாடு தான் நாம் எழுப்புகின்ற இனிய ஓசைகள். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம்தான் நிலைத்திருக்கும்.
சிறிது நேரத்தில் தாங்க முடியாத பசியால் துன்புறுவோம். ஏதேனும் உணவை தேடிக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவோம்.
எமது சகோதர பறவைகளில் பெரும்பாலானோர் அகாலத்திலேயே மரணம் அடைகின்றனர். மழையில் கொஞ்சம் நனைந்தவுடன்
நாம் நோய்களுக்கு ஆளாவோம். வெயில் அதிகமானாலும் நோயாளிகளாவோம். நாம் பெரும்பாலும் உயிருக்காக போராடுவது
இன்னுமொரு விலங்கிற்கு இரையாகும் போதுதான். நாம் நோயுற்றேதும் கீழே விழுந்துவிட்டால் கட்டெறும்புகள், செவ்வெறும்புகள் போன்ற எறும்புகளும் மற்றும் சிறு பூச்சிகளும் நாம் உயிருடன் ஓலமிடும்
போதே கடித்து சாப்பிட்டுவிடும். மரணத்தருவாயில் நாம் மிகவும் துயரனுபவிப்போம். தேனிருக்கும் மலர்களை தேடுவது மிகவும் கடினம். வாழ்நாளின்
பெரும்பகுதியை என்னை போன்ற பறவைகள் பசியுடனேயே காலம் நடத்த வேண்டியுள்ளது. சிற்சில வீடுகளில் மலர்செடிகள் இருக்கும்.
ஆனால் இன்று அனேகமான மலர்களில் தேனை அருந்தும் போது நாம் நோயுறுகிறோம். எனது இனத்தின் பெரும்பாலான பறவைகள் நச்சு மருந்து
தெளிக்கப்பட்ட செடிகளின் மலர்களில் தேனருந்தி இறந்து போயின.
ஒருநாள் நாம் இருவரும் ஒரு பெரிய பூந்தோட்டத்திற்கு சென்று மலர்களின் தேனை அருந்திக்கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒரு
இளைஞன் எம் இருவரையும் சுட்டிக்காட்டி ‘அங்கே பாருங்கள், அழகான இரண்டு சோடிகள்… பாருங்கள், மிகவும் அற்புதம். அங்கே… அந்த ஜோடிகள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன0 அப்போது அங்கிருந்த யுவதி ஷநானும் அடுத்த பிறவியில் ஒரு சிட்டாக பிறக்க
வேண்டும்… அப்போது என்னாலும் இவர்களை போல் சுதந்திரமாக பறக்க முடியும்… அங்கே பாருங்கள் கீச் கீச் என்று எவ்வளவு
சந்தோஷமாக பேசிக்கொள்கின்றன…’ மனித உலகில் எவரும் எம்மை புரிந்து கொள்வதில்லை. நாம் கீச்சிட்டது சந்தோஷத்திற்காக அல்ல. எமது துக்கத்தினையே பகிர்ந்து கொள்கிறோம். எமக்கு இந்த காலத்தில் மலர்களில் தேனும் இல்லை. கறையான்களும் இல்லை. புழுக்களும் மிகவும் குறைவு. நாம் மரணப்பீதியிலேயே இருக்கிறோம். எமக்கு வாழ்வதற்கு ஒரு
இடமில்லை. சாப்பிடுவதற்கும் ஒன்றுமில்லை. இவ்வாறான வாழ்வையா மனிதர்கள் விரும்புகிறார்கள். இந்த பெண் சிட்டு முட்டையிட உள்ளது. நாம் மிகவும் சிரமப்பட்டு
ஒரு கூட்டினை கட்டிக்கொண்டோம். யாராலும் எளிதாக காண முடியாத இடத்தில் தான் அதனை கட்டினோம். எனது மனைவி இரு முட்டைகளை இட்டாள். நாம் அன்று மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அவற்றை எம்மால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.
ஒருநாள் நாம் உணவு தேடி மீண்டும் வரும் வேளை யாரோ எமது கூட்டினை உடைத்திருந்தார்கள். முட்டையோடுகள் மட்டும் தான் எஞ்சியிருந்தது… நான் நினைக்கிறேன் ஏதேனும் ஒரு பாம்பாக இருக்கும். அன்றிலிருந்து நாம் கவலையாகவே இருக்கிறோம்.
ஒருநாள் இரவுவேளை குருவிகள் ஓலமிடும் சத்தங்கேட்டது. ‘கலவத்தான்0 என்று ஒரு மிருகம் இருக்கிறது. அந்த மிருகத்தினால் எந்தமரத்திலும் உச்சிவரை செல்ல முடியும். அது இரவு
வேளைகளில் மரங்களில் ஏறி கிளைகளில் தூங்கிக்கொண்டிருக்கும் பறவைகளை கழுத்தினாலேயே கௌவிக்கொன்று சாப்பிட்டுவிடும். அதன்பிடியிலிருந்து எந்த பறவையாலும் தப்ப முடியாது. குருவி கத்திக்கொண்டிருக்கும் போதே விழுங்கிவிடும். ஆந்தையும் குருவிகள் இருப்பிடத்தை அறிந்துகொண்டால் எவ்வாறாயினும் பிடித்து
சாப்பிட்டுவிடும். ஒருநாள் நாமிருவரும் தேன் தேடி வெகு தூரம் சென்றோம். அன்று எம்மால் பூந்தேன் தேடிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. மிகுந்த
பசியில் இருந்த நான் ஷநீ அந்த பக்கமாக சென்று பார்… நான் இத்திசையில் சென்று தேடுகிறேன்0 என்று சொன்னேன். நான் தேன் தேடிச்சென்றாலும் எனக்கு கிடைக்கவில்லை. பசியுடனே புதருக்குள்
வந்தேன். ஆனால் பெண் சிட்டு வந்திருக்கவில்லை. இரவு வெகு நேரமாகியும் வரவேயில்லை. நான் விடியும் வரை அழுது கொண்டே இருந்தேன். மறுநாள் எல்லா இடத்திலும் அவளை தேடிப்பார்த்தேன்.
ஆனால் கிடைக்கவில்லை. நான் மீண்டும் தனிமையாகிவிட்டேன். அந்த அப்பாவி பெண் சிட்டு எந்த மிருகத்திற்காவது உணவாகியிருப்பாள்.
இம்மாதிரியான துன்பம் மிகுந்த பறவை வாழ்க்கையை பெறுவதற்கு நாம் எவ்வளவு பாவம் செய்திருப்போம்…? கவலை நிறைந்தது எமது வாழ்க்கை – உணவு உறையுள் இல்லாத வாழ்க்கை
இனிமையான ஓசை எழுப்பி அழும் வாழ்க்கை… வண்ண இறக்கைகளால் மூடிய வாழ்க்கை
ஒருநாளும் வேண்டக் கூடாதது இந்த வாழ்க்கை – வெளித்தோற்ற அழகு அகத்தே இல்லாத வாழ்க்கை கரணம் அடித்து பறந்து போகும் வாழ்க்கை – எங்கே மடிந்து வீழ்வோம்
என அறியாத வாழ்க்கை.. தவறிழைத்து பாவம் செய்தோம் மனித வாழ்க்கையில் – அதன்
விளைவாலே எமக்கு கிடைத்தது இந்த பறவை வாழ்க்கை..
04.
குட்டிபாம்ழு
நாம் சிறிய வயதில் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் சுருண்டு
கிடந்தோம். நானும் எனது சகோதரர்களும் சின்ன சின்ன பூச்சிக்களை
சாப்பிட்டு தான் வளர்ந்தோம். எங்களது நாவின் நுனி இரண்டாக
பிரிந்து இருக்கிறது. சின்ன சின்ன பூச்சிகள் இருக்கும் இடத்தினை
இந்த நாக்கின் உதவியால் தான் அறிந்து கொள்வோம். பூச்சிகள்
இருக்கும் இடத்திற்கு சென்று நாம் நாவினை நீட்டுவோம். அப்போது
அந்த சின்ன சின்ன பூச்சிகள் எங்களது நாவில் ஒட்டிக்கொள்ளும்.
கொஞ்சம் பெரிய பூச்சிக்களை நாம் விழுங்கி விடுவோம்.
ஒருநாள் எங்களது அம்மா சந்தோஷத்துடன் புதருக்குள் வந்தாள்.
அவள் ஏதோ ஒரு பொதியினை வாந்தியெடுத்தாள். ம்ம்ம்.. அது
எங்களது அம்மா விழுங்கிய ஒரு எலி.. ஆஹா.. என்ன சுவையாக
இருந்தது. நாம் அனைவரும் அடித்து பிடித்து கொண்டு அதனை
சாப்பிட்டோம்.
எமக்கு நிலத்திலே ஊர்ந்து செல்லும் ஒரு வாழ்க்கையே கிடைத்துள்ளது.
எங்களுக்கு கால்கள் இல்லை. எமது வயிறு நிலத்தோடு ஸ்பரிசத்தே
இருக்கிறது. நாம் ஊர்ந்து போகும் போது மரத்தில் இருந்து ஒரு
இலை விழுந்தால் கூட அதனை நாம் உணர்ந்துவிடுவோம். மனிதர்கள்
நடமாடும் போது இன்னும் பெரிய பெரிய விலங்குகள் நடமாடும் போது
நிலம் அதிறும். அதனை எம்மால் உணர முடியும்.
ஒருநாள் அம்மா எங்களிடம் பதற்றத்தோடு ஷஎன்ட பிள்ளைகளே!
இனியும் நம்மால் இந்த புதருக்குள் இருக்க முடியாது. மழை
பெய்கிறது. அதனால் உள்ளே தண்ணீர் நிரம்பிவிடும். நாம் வெளியே
போய்விடுவோம்0 என்றார். நாமும் வெளியே வந்து தலை திரும்பிய
பக்கம் ஊர்ந்து சென்றோம்.
ஒருநாள் நான் காலை நேரத்திலேயே சாப்பாடு தேடி மெதுவாக
ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் கரடு முரடான நிலத்தினை
ஸ்பரிசம் செய்ய வேண்டியதாயிற்று. நான் அங்கேயே சுருண்டுக்
கொண்டிருந்தேன். அப்போது தவளைகளை பிடிப்பதற்கு இலேசாக
இருக்கும். அப்போது யாரோ ஒருவர் கம்பொன்றினை எடுத்து என் வயிற்றுக்கு கீழே வைத்து என்னை அசைத்தார்கள். நான் நன்றாக
பயந்துவிட்டேன். நான் அந்த கம்பி;ன் மீது படர்ந்து கொண்டேன். ஷஅப்பா
இது ஒரு விரியன் குட்டிதானே0 என கம்பை வைத்திருந்த சிறுவன்
கத்தினான். ஷஆம்.. மகன்… முற்பிறப்புக்களில் பாவம் செய்ததால்
கிடைத்த பிறப்புக்கள் தான்0 ஷஆனால் அப்பா விசம் நிறைஞ்ச
பாம்ப பாத்திட்டும் கொல்லாமல் இருந்தால் அது மடத்தனம் என்று
அன்று சிவா சொன்னான். அப்படி கொல்லாமல் விட்டால் அவை
பெரிதாகினால் இதைவிட கொடிய விடம் இருக்குமாம்… அதனால்
அப்பா நாம் இந்த விரியன் குட்டி பெரிதாக வளருவதற்கு முன்னர்
கொன்றுவிடுவோம்0.
ஷஇல்லை மகன் அப்படி சொல்லாதே. இப்போது நான் அந்த குட்டி
பாம்பை இந்த கம்பால் எடுத்து வேற எங்காவது தூரத்தில விட்டு
வருகிறேன். இந்த பாம்புக்கு கேட்கிற மாதிரி கந்த பரித்தத்தினையும்
சொல்ல போகிறேன்0 என்று அந்த பெரியவர் இனிமையான குரலில்
ஷவிரூபக்கேஹி மே மெத்தங் ஏராபதேஹி..0 என ஏதோ கூறினார். அதனை
அவர் சொல்லும் போது என்னிடமிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக
இல்லாமல் போய்விட்டது. என்னை ஏதாவது துன்புறுத்தினால்
கடிப்பேன், என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்
நான் நினைத்தது தவறு. இவர்கள் மிகவும் நல்லவராக அல்லவா
இருக்கிறார்கள்.
என்னிடம் விசப்பற்கள் இருந்ததாக எனக்கு இதுவரை தெரியாது.
சம்சாரத்தில் செய்த பாவங்களினால் தான் எனக்கு இந்த பாம்பு
வாழ்க்கை கிடைத்தது. எனது வாழ்க்கையின் இறுதிகாலம் மிகவும்
துக்கமாகவே அமையும். நான் யாரிடமாவது அடிவாங்கி சாகலாம்.
அப்படியில்லாவிட்டால்… பன்றிக்கோ ஒரு கீரிக்கோ உணவாகிவிடுவேன்.
அப்படியில்லாவிட்டால் எங்காவது சுகயீனமுற்று படுத்திருக்கும் போது
சின்ன சின்ன பூச்சிகள் என்னை உணவாக்கிக்கொள்ளும். எப்படியோ
நான் மிகுந்த வேதனையோடுதான் சாக வேண்டிவரும்…
மனிதர்களை காணும் போது சுருண்டு விடுவேன்.
காலில்லாமல் கவலையுடனே ஊர்ந்து செல்கிறேன்.
செய்த பாவம் பின்னால் வருவதால் பாம்பாக பிறந்தேனே.
விசப்பற்கள் இருப்பதாலயே சாகவும் போகிறேனே
பஞ்சபாவம் தச அகுசல் செய்து பாம்பாகி விட்டேனே.
சர்ப உலகில் அனுபவிக்கும் துயர் யார்தான் அறிவாரோ..?
எருதுவின் பின் கட்டப்பட்ட வண்டியினை போல் செய்த பாவங்கள்
பின்னே தொடர்ந்து வருகிறதே..!
05.
அழகான மீன் குட்டி
என்னால் உங்களை போல் நடக்க முடியாது. ஊர்ந்து செல்லவும்
முடியாது. பறக்கவும் முடியாது. பாய்ந்து செல்லவும் முடியாது.
சுருக்கமாகச்சொன்னால் உங்களுடைய உலகத்தில் என்னால் வாழவும்
முடியாது. நிலத்திற்கு வந்தால் நான் இறந்துவிடுவேன். நான் நீரிலே
வாழ்கிறேன். ஆம்… நான் ஒரு மீன்!
நான் ஒரு நீர் தாங்கியில் இருக்கிறேன். என்னால் வேகமாக நீந்த
முடியும். என்னோடு இன்னும் விதம் விதமான மீன்கள் இருக்கின்றன.
நாம் வாழும் நீர்த்தாங்கியில் சிலவேளை பச்சைநிற பாசிகள் படிந்து
விடும் அப்போது எம்மால் இலகுவாக சுவாசிக்க முடியாது. எம்மை
வளர்க்கின்றவர்கள் மிகவும் நல்லவர்கள். எமது தாங்கியினுள் ஒரு
மோட்டரை பொருத்தியுள்ளனர். தாங்கிக்கொள்ள முடியாத வண்ணம்
அதிலிருந்து சத்தம் வரும் அதேவேளை அதிலிருந்து வளிக்குமிழ்களும்
வெளியே வரும். அந்த வழிக்குமிழ்கள் எமக்கு மிகவும் சுகமாக
இருக்கும்.
ஒருநாள் ஒரு சிறுவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். நான்
மிகவும் பயந்துவிட்டேன். என் பக்கமாக விரலை நீட்டி இவ்வாறு
கூறினான். ஷஅண்ணா அங்கே பாருங்கள்… இந்த மீனுக்கு கோல்ட்
பிஸ் என்று தானே பெயர்0
ஷஆம் தம்பி. இவற்றை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.
குராமின் மீனுக்குப்போல் பாசிகளை கொடுக்க முடியாது.0
அவர்கள் பேசுவது மிகவும் புதுமையாக இருக்கிறது. மீன்களுக்கு
வித விதமான பெயர்களை சூட்டியுள்ளனர். எது எப்படியோ எமக்கு
கொடுக்கும் சாப்பாடு மிகவும் சுவையானது. ஆனாலும் தாங்கியை
சுத்தப்படுத்தும் நாளை போன்று நாம் வெறுக்கின்ற வேறு நாளில்லை.
அன்றைக்கு நாம் மிகவும் அவஸ்தைப்படுவோம். எம்மை சிற்சிறு
வலைகளினால் வெளியே எடுப்பார்கள். நான் ஒருநாள் மூச்சு எடுக்க
முடியாமல் திணறிவிட்டேன். நான் மிகவும் வேகமாக துடித்ததால்
கிழே விழுந்துவிட்டேன். யாரோ என்னை இறுக்கிப்பிடித்தார்கள்.
எனக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. பிடித்து என்னை தண்ணீரில் போட்டார்கள். அதன் பிறகும் சிறிது நாட்கள் வரை என் உடம்பு
மிகவும் வலித்தது.
நாம் வாழும் தாங்கிக்கு மிகவும் கொடிய இனத்திலான மீன்களை
போட்டார்கள். ஐயோ… அந்த காலத்தில் நாம் மிகவும் துன்புற்றோம்.
அந்த கொடூரமான மீன்கள் எம் பின்னாலேயே துரத்தி துரத்தி வந்து
எம்மை கொத்தி துன்புறுத்தின. அவையின் பெயர் ஏதோ ஷசாரி கப்பி0
என்று கேள்விபட்டேன். அவை எம்மை துரத்தி துரத்தி வந்து எம்மை
கொத்தி விடுகின்றன. ஷஉங்களை விடமாட்டோம். சாகும் வரை
துரத்தி துரத்தி வருவோம்0 என கூச்சலிட்டுகொண்டு எம்பின்னாலேயே
நீந்தி வந்து எம்மை கடித்து துன்புறுத்தின. அதனாலேயே எனது
பெரும்பாலான நண்பர்கள் இறந்துவிட்டார்கள். நாம் மிகவும்
நோயுற்றோம். எம்மால் நீந்தவோ அல்லது சாப்பிடவோ முடியாமல்
போனது. நாம் ஷஎம்மை விட்டுவிடுங்கள்… எங்களை கொல்லாதீர்கள்0
என அழுதழுது கூறினோம்… எமது அதிஷ்டமோ என்னவோ மறுநாளே
அவர்களை எமது தாங்கியிலிருந்து அகற்றிவிட்டார்கள்.
ஒருநாள் எமது தாங்கிக்கு மிகவும் பெரிய இனத்திலான மீனினை
போட்டார்கள். அந்த மீன் மாமா எம்மிலும் பார்க்க மிகவும் பெரியவர்.
அவருக்கு பெரிய கண்கள் இருந்தன. அவரால் வேகமாக நீந்தவும்
முடியும். அவர் எம்மைபோல் நீர்தாங்கியில் பிறக்கவில்லையாம். அவர்
பெரியதொரு நதியில் இருந்திருக்கிறார். அவர் எம்மனைவரையும்
ஒன்றுகூட்டி இவ்வாறு கூறினார். ஷஉங்களுக்கு நினைத்துகூட பார்க்க
முடியாது. இம்மாதிரியான கொஞ்சம் தண்ணீரல்ல. விசாலமானதொரு
நதியிலிருந்தே நான் வந்தேன். அந்த நதியின் நீர் எந்நேரமும் வேகமாக
பள்ளத்தை நோக்கி பாய்ந்து கொண்டே இருக்கும். அதன் வேகம்
மென்மேலும் கூடும் சந்தர்ப்பங்களில் நாம் நதியோரங்களில் உள்ள
பாசிகளில் மறைந்து கொள்வோம்.
இந்த தாங்கியை போல் அல்ல. நதியில் வாழ்வது மிகவும் கடினம்.
மிகவும் கொடூரமான மீன்கள் இருக்கின்றன. ஒரு கொடிய மீன் எனது
அத்தனை பிள்ளைகளையும் சாப்பிட்டுவிட்டது. நாமும் ஏனைய
மீன்களது சிறு குட்டிகளையும் சாப்பிட்டுள்ளோம். ஆனால் பெரும்பாலும்
நாம் சாப்பிடுவது சேரும் பாசிகளையும் தான். ஒவ்வொரு நாட்களில்
மேலிருந்து புழுக்கள் நீரின் மேல் விழும். எனது பல நண்பர்கள்
அந்த புழுக்களை விழுங்கினார்கள்… மிகவும் விந்தையான விடயம்
என்னவென்றால் அந்த புழுக்ளை விழுங்கியவுடனே தொண்டையில்
ஒரு கொக்கி சிக்கிக்கொள்ளும். அதன் பிறகு எதுவும் செய்ய
முடியாது. ஏதோ நூல் போன்ற ஒன்றினால் அந்த புழுவை சாப்பிட்ட
மீன் நீருக்கு மேலே சென்றுவிடும். அவர்கள் யாருமே மீண்டும் திரும்பி
வரவேயில்லை.
நான் அழகான மீன் என்பதால் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும்
தப்பிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஹா..ஹா… இல்லை
என்றால் என்னால் இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கவும் முடியாது. வேறு
சில நாட்களில் பெரிய பெரிய வலைகளை வீசி எம்மை பிடித்து
கொள்வார்கள். எனது பல நண்பர்கள் அதில் மாட்டிக்கொண்டார்கள்.
கூட்டமாக சென்று மாட்டிக்கொண்ட அவர்கள் ஒருபோதும் திரும்பி
வரவேயில்லை. எங்கு போனார்கள் என்று இதுவரையிலும் தெரியாது…
ஆ.. ஆ.. கதை கேட்டது போதும். இப்போது எல்லோரும் எனது
முதுகை சொரிந்து விடுங்கள்0
நாமும் அவரது முதுகு வலிக்காதபடி மெதுவாக கொத்திக்கொண்டிருந்தோம்.
எமது இந்த மீன் வாழ்வில் எவ்வித சந்தோஷமும் இல்லை. சில
மின்கள் சாப்பிடாமல் அழுதழுது இருந்தே மடிந்து போகின்றன.
நாம் மிகவும் துரதிஷ்டமானவர்கள். சிறிதளவேனும் சந்தோஷமாக
இருப்பது உருவம் அழகாக இருந்தால் மாத்திரம் தான். ஆனால்
நாம் எந்நேரத்தில் மரணிப்போம் என்று எமக்கே தெரியாது. சம்சார
பயணத்தில் செய்த பாவங்களினாலேயே இம்மாத்திரியான துன்பமான
வாழ்வு எமக்கு கிடைத்தது.
வேகமாக நீந்தினாலும் சிறிதளவே இன்பம்…
அழகிய நிறமிருந்தாலும் துக்கமே மீதமுள்ளது…
சுவையாக இருக்கும் என நம்பி விழுங்கினால்
அது தூண்டிலாகவே இருக்கும்…
அப்படி அதுவே இருந்தால்…
மரணம் நிச்சயமே…
சன்சாரத்தில் செய்த பாவங்களினால்…
துன்பமே சொத்தாகியது.
பிறந்த பிறந்து செல்வதை தவிர வேறொன்றும் அறிந்திலேன்…
எவ்வளவு காலம் எப்படி இருந்தாலும் இந்த நீரினுள்ளே…
புண்ணியங்கள் செய்ய முடியாது…
இந்த பிறப்பு நரகத்திற்குரியதே…
06.
சின்ன யானை குட்டியே
நான் சிறிய வயதில் இருக்கும் போது நாம் அனைவரும்
ஒன்றாகவே இருந்தோம். எனது அம்மாவும் மாமாமார்கள் இருவரும்
நானும் பற்றை முற்புதர்கள் நிறைந்த வறண்ட வலய கானகம்
ஒன்றிலேயே இருந்தோம். ஷமகனே.. நீ என்னருகிலேயே இரு… எங்கும்
தனியாக செல்லக்கூடாது0 என்று அம்மா அடிக்கடி அறிவுறுத்துவாள்.
நானும் அம்மாவின் கால்களுக்கிடையிலும் தும்பிக்கையும் சுற்றி
சுற்றியே இருந்தேன். ஒரு சில நாட்களில் அம்மா என்னை ஒரு
வாவிக்கு அழைத்து செல்வாள். நாம் தண்ணீரில் இறங்கி மிகவும்
சந்தோஷமாக இருப்போம். அப்போது அம்மா தும்பிக்கையால் நீரெடுத்து
என் மீது தெளிப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள்
நான் அம்மாவிடம் ஷஅம்மா என் அப்பா எங்கே..? என்று கேட்டேன்.
அப்போது அம்மா சத்தமாக அழத்தொடங்கினார். அம்மாவின் அழுகை
சத்தத்தை கேட்ட எனது மாமாமார்களும் ஓடோடி வந்தார்கள்.
ஷமகனே… உனது அப்பாதான் இந்த காட்டிலேயே இருந்த அழகான
யானைராஜா… அழகான வௌ;ளை நிறத்திலான மின்னும் தந்தங்கள்..
ஹ்ம்ம்.. தந்தங்களுக்கிடையே தும்பி;க்கையை சுழன்றுகொண்டு
நடக்கும் போது உனது அப்பா மிகவும் கம்பீரமாக இருப்பார். உனது
அப்பாவை நினைத்து நான் மிகவும் பெருமைபட்டுள்ளேன். ஐயோ..
இந்த மனிதர்கள் மிகவும் கொடியவர்கள் என் மகனே.. அவர்கள்
எம்மை வேட்டையாடுவதற்காக எத்தனிக்கிறார்கள் என்பதனை நாம்
உணர்ந்துகொண்டோம். நாம் காட்டினுள் மறைந்து கொண்டுதான்
இருந்தோம். மிகவும் பயத்துடனே இருந்தோம். ஒருநாள் நாம்
மாலைநேரத்தில் வாவிக்கு நீராடுவதற்கு சென்றோம். அன்று அந்த
கொடிய மனிதர்கள் வந்தார்கள். தூரத்தில் இருந்தே உனது
அப்பாவை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டார்கள். நான் அதனை
நன்கு கேட்டுக்கொண்டேன். ஷஅங்கு பாருங்கள்.. அமைச்சரே… ஆ…
ஆ.. அதுதான். அதுதான் நமக்கு வேண்டியது. ஒரு தந்தமே ஆறு
ஏழு அடி நீளமிருக்கும். மிகவும் பெறுமதியானதாக இருக்கும்0 என
அவர்கள் பேசிக்கொண்டார்கள். அதனை கேட்டவுடனே எனது உடம்பு
சிலிர்த்து போயிற்று. எனக்கு இந்த ஆபத்தினை நன்கு விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் உனது அப்பாவிடம் கூறினேன்.
ஷஇங்கே பாருங்கள், நாம் இந்த காட்டை விட்டு வேறு எங்காவது
செல்வோம். எனது மனம் பயத்தினால் நடுங்குகிறது… அந்த மனிதர்கள்
உங்களை பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள். எனக்கு பைத்தியமே
பிடித்துவிடும் போலிக்கிறது0 என்று. அப்போது உனது அப்பா ஷநாம்
வேறு காட்டினை எங்கு தேடுவது..? மனிதர்களால் எம்மை இலகுவாக
கண்டுபிடித்து கொள்ள முடியாதபடி மறைந்து வாழ்வதற்குதான்
இருக்கிறது.0
மகனே… உனது மாமாமார் இருவரும் அப்பாவை சுற்றியபடியே
இருந்தார்கள். ஆனாலும் உனது அப்பாவை காப்பாற்ற முடியவில்லையே…
ஐயோ… ஒருநாள் அந்த கொடிய மனிதர்கள் அப்பாவை
சூழ்ந்துகொண்டார்கள். ஏதோ ஒரு குழாய் மூலம் தீப்பந்தொன்றை
எய்தார்கள். பாரியதொரு சப்தம் கேட்டது. அந்த தீப்பந்து உனது
அப்பாவின் நெற்றியிலேயே வந்து பட்டது. அப்பா கீழே விழுந்தார்
நான் கதறிக்கொண்டு ஓடினேன். தூரத்தில் இருந்து உனது அப்பாவை
பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா நிலத்தில் மண்டியிட்டு தந்தங்களை
நிலத்தில் மோதிக்கொண்டு அழுதழுது உயிரிழுக்கிறார்… ஐயோ…
நான் எப்படி அவரருகிள் நெருங்குவேன்..? இஹி… இஹி…
ஷநான் எப்படியாவது மனிதர்கள் எனும் ஜாதியில் ஒருவரையேனும்
கொல்லுவேன்0 என மாமா சத்தமாக பிளிரினார். ஷஎங்களுக்குத்தான்
இந்த வனாந்தரம் சொந்தம்… பாவிகளே… போய் தொலையுங்கள்…
என்று உங்கள் மாமா அன்று கத்தினார்… அப்போது அந்த மனிதர்கள்
மாமாவின் பக்கமும் அந்த தீப்பந்து விடும் குழாயை திருப்பினார்கள்.
ஷதம்பி… அந்த கொடியவர்கள் எம்மையும் கொன்றுவிடுவார்கள்.
வா சீக்கிரமாக சென்றுவிடுவோம்.0 என்று நான் ஓலமிட்டேன். நாம்
விரைவாகவே அந்த இடத்தைவிட்டு விலகி தூரச்சென்றுவிட்டோம்.
மறுநாள் நாம் மீண்டும் அந்த இடத்திற்கு சென்றோம். இஹி… இஹி…
அப்பா அவருடைய இரத்தத்தின் மேலேயே செத்துக்கிடந்தார்… அந்த
அழகான தந்தங்கள் இரண்டும் இருக்கவில்லை. நான் அங்கேயே
அழுதுகொண்டிருந்தேன். அப்போது நீ என் வயிற்றில் இருந்தாய்…
நான் மிகவும் வேதனை அனுபவித்தேன் என் மகனே..! எனது
வாழ்க்கை தனிமையாகிவிட்டது… அந்த தனிமையை யாராலும் போக்க முடியாது. இஹி… இஹி…0 அன்று எமது அம்மா வெகு
நேரமாகவே அழுதுகொண்டிருந்தார். நானும் அழுதேன். இந்த
காட்டில் சுவையான சாப்பாடே இல்லை. புதிய கொழுந்துகள்
கொண்ட தாவரங்கள் இல்லை என்றே கூறலாம். அதனால் நாம்
நால்வரும்… இரகசியமாக கிராமத்தினுள் செல்வோம். கிராமத்தை
நெருங்கும் போதே வாசம் வரும்… ம்ம்ம்… அந்த வாசம் வருவது
நெல்லிருந்து. நாம் இரவுவேளைகளில் திருட்டுத்தனமாக நெல்லை
சாப்பிடுவதற்கு கிராமத்தினுள் நுழைவோம். ஒரு நெற்கட்டினை எடுத்து
தும்பிக்கையால் பலமாக ஒரு முறை மூச்சை உள்வாங்கினால்
அனைத்து நெல்மணிகளும் வாயினுள்ளே சென்றுவிடும். அவை மிகவும்
சுவையாக இருக்கும். அப்போது மனிதர்கள் தீப்பந்தங்களை எடுத்து
வந்து கூச்சலிடுவார்கள். உடனே நாம் காட்டுக்குள் ஓடிவிடுவோம்.
ஒருநாள் அம்மா மிகவும் சந்தோஷமாக என்னிடம் வந்தார். அவர்
தனது வாயினுள் வைத்திருந்த மஞ்சள் நிறமான பெரியதொரு காயை
கொடுத்தார். மகனே இதை சாப்பிடு… இது மிகவும் சுவையானது.
மனிதர்கள் இதனை பூசணிக்காய் என்று சொல்வார்கள். ஷநானும்
அதனை வாயினுள் வைத்து கடித்தேன். ம்ம்ம்…பூசணிக்காய்
மிகவும் சுவையானது தான்…0 ஷமகனே… நீ வராதே…நான் இன்றும்
இரவு கிராமத்துக்கு சென்று உனக்கும் பூசணிக்காய் கொண்டு
வருகிறேன்.0 என்று மாமாமார் இருவரும் அம்மாவும் சென்றார்கள்.
வெகுநேரமாகவில்லை. மாமாமார் இருவரும் அழுதுகொண்டு ஓடோடி
வந்தார்கள். ஷமகனே..! எல்லாமே முடிந்துவிட்டது… உனது அம்மா
செ…த்…து…விட்டார்…0 ஷஐயோ… மாமா… சொல்லுங்கள்… சொல்லுங்கள்…
எனது அம்மாவிற்கு என்ன நடந்தது..? சொல்லுங்கள்…0
ஷமகனே… நாம் பூசணிக்காய் தோட்டத்திற்கு செல்லும் வழியில் அதன்
வேலியோரத்திலேயே ஒரு பெரிய பூசணிக்காய் இருந்தது. உனது
அம்மா ஆசையோடு அதனை எடுத்து வாயினுள் போட்டுக்கொண்டாள்.
அதனை கடித்தது மாத்திரம் தான்… ஷடோங்0 எனும் பாரிய சப்தத்துடன்
அந்த பூசணிக்காய் வாயினுள் வெடித்தது… மகனே… ஐயோ…நினைத்து
கூட பார்க்க முடியவில்லையே… உனது அம்மாவின் தும்பிக்கை
கழன்று வீசுப்பட்டது… ஐயோ.. வாயினுள் இருந்த பற்கள் எல்லாமே
நாற்புறமும் வீசப்பட்டது. அம்மா அங்கேயே சரிந்து விழுந்துவிட்டார். அம்மா இன்னும் துடி துடித்து கொண்டு இருக்கிறார்… ஐயோ..0நாம்
அன்று இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தோம். எமக்கு என்ன
நடக்கிறதே என்றே எனக்கு புரியவில்லை. நாம் அதிகாலையிலேயே
அம்மாவை பார்க்கச்சென்றோம். மாமாமார் எனக்கு முன்பே அங்கு
சென்றுவிட்டனர். ஷமகனே.. உனது அம்மா இன்னும் சாகவில்லை.
அங்கிருந்து எழுந்து கஷ்டப்பட்டு இங்கு வரையும் வந்திருக்கிறார்.
அங்கு விழுந்துகிடப்பது உனது அம்மாதான்.0
நாம் அவ்விடத்திற்கு ஓடோடிச்சென்றோம்… நினைப்பதற்கே கஷ்டமாக
இருக்கிறது. அம்மாவின் தும்பிக்கை இருக்கவில்லை. என்னை
அன்போடு அணைத்துக்கொண்ட அந்த தும்பிக்கை இருக்கவில்லை.
என்னை பாசத்தோடு நீராட்டிய அந்த தும்பிக்கை இருக்கவில்லை…
வாயும் இருக்கவில்லை. சின்ன சின்ன ப+ச்சிகள் அம்மாவின்
காயத்தினை சுற்றி பறந்துகொண்டிருந்தன. அவை அந்த காயங்களை
சாப்பிட்டுக்கொண்டிருந்தன. கண்கள் இரண்டும் மூடப்பட்டிருந்தன…
ஆனால் அவற்றிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஐயோ…
நான் என்ன செய்வேன்… எனது அம்மா… நாம் அழுதபடியே திரும்பி
வந்தோம்.
நான் வனத்தில் தனிமையாகிவிட்டேன். நான் தனியாகவே காட்டில்
அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். இப்படியிருக்கும் போது
ஒருநாள் என்னை மனிதர்கள் சூழ்ந்துகொண்டார்கள். என்னை
கயிறுகளினால் கட்டினார்கள். என் அருகிலேயே வந்தார்கள். எனக்கு
மிகவும் பயமாக இருந்தது… இதயமே வெடித்துவிடுவது போல்
இருந்தது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அங்கிருந்த
ஒரு நல்லவர் என்னிடம் ஷசின்ன குட்டியே.. நாம் உனக்கு ஒன்றும்
செய்யமாட்டோம். எம் அனைவருக்கும் உன் மீது அன்பு இருக்கிறது…
நாம் உங்களை கொல்பவர் அல்ல. பாதுகாப்பவர்கள்… நீ இப்போது
வழி தவறிவிட்டாய்… நீ பயப்படாதே… உன்னை நாம் அன்புடன்
பார்த்துக்கொள்வோம். என்று எனது தலையை அன்புடன் தடவினார்.
அப்போது என் பயம் இல்லாமல் போய்விட்டது. என்னை அவர்கள்
ஒரு வாகனத்தில் ஏற்றி மிகுந்த தூரம் கொண்டு வந்தார்கள்.
இவ்வாறுதான் நான் இங்கு வந்தேன். என்னை போன்ற ஏராளமான
யானைக்குட்டிகள் இங்கு இருக்கின்றன. எம்மனைவருக்கும் அம்மா
அப்பா இல்லை. சில மனித பிள்ளைகள் எம்மை பார்த்து ஏளனம் செய்கின்றனர். அப்படி ஏளனம் செய்யும்போது எனக்கு மிகவும்
கவலையாக இருக்கும். அவர்களுக்கு அம்மா அப்பா இருவரும்
இருக்கிறார்கள். எனக்கு யாருமே இல்லையே… பெரிய யானைகள்
கூட இங்கு கவலையாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எந்நேரமும்
வனாந்தரத்தின் சுகத்தை பற்றியே பேசிக்கொள்வார்கள். மிண்டும்
எப்போது காட்டிற்கு செல்வது என்றுதான் பேசிக்கொள்வார்கள். ஆனால்
எனக்கோ காடு என்றாலே பயம்தான். காட்டிற்கு சென்று… எனக்கும்
தந்தங்கள் வந்தால்… மனிதர்கள் என்னையும் கொன்றுவிடுவார்கள்.
பூசணிக்காய்களில் வெடிமருந்துகளை வைத்துக்கொடுத்தால்… எனது
அம்மாவிற்கு நடந்தது எனக்கும் நடந்துவிடும்… நெற்களை சாப்பிட
சென்றால் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகிவிட வேண்டியதுதான்.
ஒருநாள் சிலர் என்னிடம் வந்து என்னை சுட்டிக்காட்டி
பேசிக்கொண்டார்கள். ஷநாம் இந்த குட்டிக்கு சிதா என பெயர்
சூட்டினோம். நன்றாக வளர்ந்துவரும்0. ஷநிங்கள் சொல்வது சரி…
அழகான குட்டிதான்… இந்த குட்டியை அமைச்சருக்காக ஒதுக்கி
வையுங்கள். அவரது தோட்டங்களில் வேலைகள் இருக்கின்றன…0
ஐயோ எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது… நான் இந்த கொடிய
மனிதர்கள் மத்தியில் எவ்வாறு தனிமையில் வாழ்வேன்..? அதைவிட
எமது சரணாலயத்திலேயே வாழ்ந்துவிடலாம். ஐயோ என்னை எங்கும்
கொண்டு செல்ல வேண்டாம்… என்னால் தனிமையில் வாழ முடியாது…
எனக்கு பயமாக இருக்கிறது… ஐயோ…
அழுகாதே அழுகாதே – சிறிய குட்டி யானையே…
சன்சாரம் இப்படித்தான் – எமது குட்டி யானையே…
பாவம் செய்தால் நாம் எவரும் நரகத்திலே பிறந்திடுவோம்…
சுகத்தை விரும்பினாலும் துக்கத்திலேயே விழுந்திடுவோம்…
சரீரத்தினால் பெரிதானாலும் அப்பாவியாகவே இருக்கிறாய்…
மனதில் உள்ள சோகங்கள் உலகில் யார் தான் அறிவாரோ..?
மனிதனாக பிறந்தவுடன் பாவங்கள் செய்யாதீர்…
புண்ணியம் ஈட்டும் தருணத்தை கை நழுவ விடாதீர்…
07.
பசுக்கன்று
பசுக்கன்று அதன் தாயை ஆச்சரியத்துடன் பார்த்து
கொண்டிருக்கிறது. ஷஇன்று அம்மாவிற்கு என்ன நடந்தது..?
பதற்றத்தோடும் பயத்தோடும்..? கண்களையும் பெரிதாக்கிக்கொண்டு
தொட்டிலுக்குள் அங்கும் இங்குமாக செல்கிறார்..?
ஷமகன்.. உனக்கு வருகிறதா.. எமது வாடை..? மாட்டு வாடை
வருகிறதா..? அங்கே.. அங்கே பார்… உனக்கு தெரிகிறதா…? அங்கு…
வௌ;ளை தொப்பிகளை தலையில் ஒட்டிக்கொண்டு வரும் இருவரை
கண்டாயா..? அவர்களிடமிருந்து தான் எமது இனத்தின் இரத்தவாடை
வருகிறது… ஐயோ..! மகன்.. எனக்கு பயமாக இருக்கிறது..! என்னை
கொல்லுவதற்கு கொண்டு போகப்போகிறார்கள்…
ஷஇல்லை அம்மா அப்படி ஒன்றும் நடக்காது… நீங்கள் எனக்கு கூட
கொடுக்காமல் இந்த வீட்டாருக்கு எந்நாளும் பால் கொடுத்தீர்கள்…
அவர்கள் எங்களை கொல்ல விடமாட்டார்கள்…0
அம்மாவிற்கு நான் சொல்வது கூட கேட்கவில்லை… அவ்வளவிற்கு
பயந்திருந்தாள்… ஐயோ..! அம்மா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
இவர்கள் எம்மருகில் வருகிறார்கள்… எனது இதயம் வேகமாக துடிக்க
ஆரம்பித்தது. ஐயோ… என் அம்மா கதகிறாரே…
ஷஉம்பே… உம்பே… ஐயோ.. என்னால் வர முடியாது… எனக்கு சின்ன
குட்டி ஒன்றும் இருக்கிறது… ஐயோ.. உங்களுக்கு வேண்டியளவு
பால் தருகிறேன்… என்னை கொல்ல விடாதீர்கள்… ஐயோ… என்னை
காப்பாற்றுங்கள்…0 என்று அம்மா கதறியழ ஆரம்பித்தார். ஆனால்
அவருடைய சத்தத்தினை யாரும் காதில் வாங்கவில்லை.
அந்த தொப்பி போட்ட இருவரும் இந்த விட்டில் இருக்கும்
பெரியவரிடம் பணம் கொடுத்தார்கள். அவர் அதனை சிரித்து கொன்டே
எடுத்துகொண்டார். அந்த இருவருக்கும் எவ்விதமான இரக்கமோ
கருணையோ இருக்கவில்லை. சிறிதளவேனும் அனுதாபமுமின்றி
அம்மாவை… கயிற்றினால் இழுத்தார்கள்… அம்மா கால்களை நிலத்தில்
ஆழமாக ஊன்றிக்கொண்டு உடலை உறுதியாகக்கிக்கொண்டு அவர்களுக்கு ஈடு கொடுக்காமல் இருந்தார்… ஐயோ… அங்கே எனது
அம்மாவை ஒரு பிரம்பால் வேகமாக தொடர்ந்து அடித்தார்கள். அங்கே…
அங்கே… அந்த அனுதாபமற்ற மனிதன் எனது அம்மாவின் வாலை
பிடித்து பலமாக மடித்தான்..! அம்மாவின் பின்புறத்திலிருந்து சாணமும்
சிறுநீரும் வீசியது… ஷஆஹ் ஆஹ்… அம்மா…0 என கதறுகிறார். ஐயோ…
என அம்மா எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறார்… அம்மா என்னை
திரும்பி திரும்பி பார்க்கும் போதே அவர்கள் இழுத்து சென்றார்கள்…
நான் என்ன செய்வேன்..? நான் மிகவும் மனமுடைந்து போய்விட்டேன்.
அம்மாவின் வாசம் இன்னும் இவ்விடத்தில் இருக்கிறது. எனது
அம்மா என்னை பாசத்துடன் தடவிக்கொடுத்தாள். அன்போடு பால்
கொடுத்தாள்… இனி இவை எதுவுமே எனக்கில்லையே… ஐயோ… எனது
அம்மா… என்று சத்தமிட்டு அழத்தொடங்கினேன்… நான் எதனையும்
சாப்பிடவில்லை. தண்ணீர் கூட குடிக்கவில்லை. உம்பே.. உம்பே…
எனது அம்மாவை தா… அம்மாவை தா…0
நான் அழுது கொண்டே இருந்தேன். பின்னேரத்தில் நாமிருந்த வீட்டுக்கு
முன் ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்தவர் என்னையே
பார்த்தபடி அந்த வீட்டுக்கு வந்தார். அவரிடமென்றால் இரத்தவாடை
வீசவில்லை. மாறாக ஏதோ சௌம்மியமான ஒரு வாசம் வந்தது…
ஆம்… அது அன்பினது வாசம்… அவரை பார்த்தவுடனே மிகவும்
நல்லவர் போல் தோன்றியது. அவர் அந்த வீட்டில் இருந்தவர்களோடு
ஏதோ பேசினார். என்னிடமும் வந்தார். ஆ… குட்டி இங்கே இருக்கிறது
என்ன..? குட்டியை தேடித்தான் நான் இங்கு வந்தேன்…
அப்போது இந்த வீட்டில் இருக்கும் அப்பா அவரிடம் ஷஐயா.. கொஞ்சம்
பணத்தட்டுபாடாகியது… அதான் பசுவை விற்றேன். ஆனால் அந்த
நேரத்தில் இருந்து இந்த குட்டி அழுதுகிட்டே இருக்கு…0
ஆமாம்.. பசுவும் கதறியழுது கொண்டேதான் தெருவில் போய்
கொண்டிருந்தது. பசுவின் கதறலை கேட்டுத்தான் நானும் தெருவிற்கு
வந்து பார்த்தேன். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதனால்
அந்த பசுவை நான் விடுவித்தேன். அவர்கள் பெருந்தொகையான
பணத்தினை கேட்டார்கள். பரவாயில்லை என்று காப்பாற்றிவிட்டேன்.
பசு இப்போது எமது தோட்டத்தில் இருக்கிறது. அதுவும் அழுது
கொண்டேதான் இருக்கிறது. எங்களால் அதன் அழுகையை நிறுத்த முடியவில்லை. அப்போது அந்த சோனகர்கள் இருவரும்தான் குட்டி
ஒன்றிருப்பதாகவும் அதனாலேயே பசு அழுது கொண்டிருப்பதாகவும்
கூறினார்கள். அந்த விபரத்தின்படிதான் நான் இங்கு வந்தேன்.
இந்த கன்றினை எனக்கு கொடுங்கள். நான் அன்புடன் வளர்கிறேன்.
உங்களால் இதன் அழுகையை நிறுத்த முடியாது. என்னால் அந்த
தாய் பசுவினது அழுகையை நிறுத்த முடியவில்லை.
அவர்களது கலந்துரையாடலை என்னால் முழுமையாக புரிந்து
கொள்ள முடியவில்லை. நான் அழுதுகொண்டே இருந்தேன். அந்த
ஐயா!
இந்த வீட்டு அப்பாவிடம் பணம் கொடுத்து இவ்வாறு கூறினார்.
ஷநான் உங்களிடம் சிறு விடயத்தினை கூறுகிறேன். கஷ்ட காலங்களில்
இந்த அப்பாவி மிருகங்களை பணமாக்கும் நோக்கத்தோடு மட்டும்
வளர்த்து விடாதீர்கள். இந்த அப்பாவிகளை இறைச்சிக்காக விற்று
விடாதீர்கள். ..0
என்னை அந்த பெரியவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வெகு
தூரம் கொண்டு சென்றார். நான் போகும் போதும் அழுது கொண்டே
போனேன். எங்கோ ஒரு தோட்டத்திற்கு என்னை கூட்டிச்சென்றார்.
ஆ…ஆ… எனது அ..ம்..மா… ஆம்.. எனது அம்மாவின் குரல் எனக்கு
கேட்டது.. அம்மா கவலையால் கதறிக்கொண்டிருக்கிறார். வாகனத்தை
நிறுத்தியவுடனே நான் கிழே குதித்து விட்டேன். அம்மாவிடம்
ஓடோடிச்சென்றேன்… அம்மா என்னை மாறி மாறி முத்தமிட்டாள்…
அம்மாவின் மடியிலிருந்து பால் சொரிந்தது.. நான் ஓடிச்சென்று
வேண்டியளவு பால் குடித்தேன்… அம்மாவின் முதுகு முழுவதும்
காயங்கள் நிரம்பியிருந்தது. வாலின் இடைப்பகுதி உடைந்திருந்தது.
அந்த வேதனையையும் பொறுத்துக்கொண்டு அம்மா என்னை அன்புடன்
நாவினால் வருடினாள்… அழுகையை நிறுத்தி சந்தோஷப்பட்டாள்.
மேலும் நான் ஏன் அழ வேண்டும்?
ஷமகன்… உனது அப்பாவையும் அந்த விட்டிலிருந்தவர்கள்
விற்றுவிட்டார்கள. அவரும் கதறிக்கொண்டிருக்கும் போது தான்
கொல்வதற்காக இழுத்து சென்றார்கள். இம்முறையென்றால் நாம்
ஒருவாராக மரணத்திலிருந்து தப்பிவிட்டோம்… மகன்.. நாம் இந்த சம்சாரத்தில் எருது வாழ்வில் பிறந்து எத்தனை முறை கழுத்து அறுபட்டு
இறந்திருப்போம்? நாம் சம்சாரப்பயணத்தில் பாவம் செய்தவர்கள்.
அந்த பாவ விளைவுகள் தான் எம்மை சுற்றிச்சுற்றி வருகிறது. இந்த
வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கருணை கொண்டவர்கள்… எந்நாளும்
மாலை நேரங்களில் அழகாக பிரித் படிக்கிறார்கள். இந்த வீட்டில்
உள்ள அனைவருமே எம்மை அன்புடன் கவனித்துகொள்கிறார்கள்.
நாம் பாவங்கள் செய்துவிட்டோம் சன்சார பயணத்திலேயே…
எவ்வித சுகமும் இல்லை இந்த பசு வாழ்வினிலே…
துயரமே நிரம்பும் இன்பமல்ல இந்த வாழ்வினில்…
மரண பயத்தினால் கண்ணீரே வடிக்கின்றோம்…
தாயாக மாறி பால் சொரிந்தாலும்…
கன்றிற்கு மீதம் வைத்த பாலை பெற்றுக்கொண்டாலும்…
பரவாயில்லை நான் கோபித்து கொள்ளவில்லை…
பின்பு ஏன் என்னை இறைச்சிக்காய் விற்றீர்கள்…
உண்பதற்கு புல்லை வெட்டி வைத்தீர்…
நனையாமலிருக்க கொட்டில் அமைத்தீர்…
தாகத்திற்கு நீரை தந்தீர்…
பின்பு என்னை கொல்வதற்கு ஏன் சம்மதித்தீர்…?
பயங்கர சன்சாரம் என்னவென்று உரைத்தார் பகவான்…
எனவே எம்மை விற்காது பொறுத்திருங்கள்…
பாவம் செய்தவன் பின்னே துன்பங்கள் விரைந்து செல்லும்…
எனவே மனித வாழ்வின் உன்னத பயனை அடைவீர்…
08.
கா.. கா.. என கரையும் காகம்
எனது முழு உடம்பும் கறுப்பு நிறமாகும். எவருமே என்னை
விரும்புவதில்லை. எனது குரல் இனிமையானதும் இல்லை. நான்
எதையும் சாப்பிடுவேன். என்னை காகம் என்று அழைப்பார்கள். நாம்
மரங்களின் மீது கூடுகள் அமைப்போம். ஷகாக்.. காக்… என்று தொடர்ந்து
கரைந்தால் எமது காகக்கூட்டம் நொடியில் ஒன்று சேர்ந்து விடும். நான்
சிறு வயதில் இருக்கும் போது எனது அம்மா என்னிடம் ஷ மகனே…
நாம் இழி குல பறவைகள். அதனால்தான் எம்மால் தாங்கிக்கொள்ள
முடியாத பசி வருகிறது. என்னால் இனிமேலும் உனக்கு சாப்பாடு
தேடித்தர முடியாது. இனி உன்னை நீயே பார்த்துக்கொள்…0 என்று
கூறினார்.
அன்றிலிருந்து நான் தனிமையாகவே வாழ்கிறேன். நாம் மழையில்
நனைகிறோம். வெயிலில் காய்கிறோம். ஒருசில மனிதர்கள் எம்மை ஒரு
மரக்கிளையில் கூட இருக்கவிடுகிறார்கள் இல்லை. கற்களால் அடித்து
துரத்திவிடுகின்றனர். நான் சிறியவனாக இருக்கும் போது என்னோடு
இன்னும் இரண்டு குஞ்சுகள் எம் கூட்டில் இருந்தன. எனது அம்மா
எம்மூவருக்கும் சமமான அளவில் சாப்பாடு கொடுத்தாள். ஆனால்
அந்த இரண்டு குஞ்சுகளும் காக்..காக்.. என்று கரையவில்லை. அம்மா
சற்று கோபமாக… ஷ ஏன்.. என்னவாயிற்று உங்களால் காக்..காக்…
என்று கரைய முடியாதா என்ன? ஏனையோர் எமது சத்தத்தினை
விரும்பாவிட்டாலும் எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. ஆ..
இப்போது கரையுங்கள் பார்ப்போம்… நான் முதலில் கத்துகிறேன்
அதை கேட்டு நீங்களும் கரைய வேண்டும்…0
ஷகாக்..காக்..0 என்று அம்மா சப்தமாக கரைந்தார். அப்போது நானும்
பதிலுக்கு ஷகாக்..காக்..0 என்று கத்தினேன். அப்போது அந்த குஞ்சுகள்
இரண்டும் சப்தமாக ஷகூ..கூ…0 என்று கூவின. அம்மாவுக்கு மிகவும்
கோபம் வந்தது.
‘ஆ..! மீண்டும் ஒருமுறை சத்தமிடு பார்போம்… காக்…காக்… என்று
கத்த முடியாத நீங்களெல்லாம் காகங்களே இல்லை. காகம் போல்
நடிக்கும் குயில்களே..! நான் கொடுத்தவற்றை சாப்பிட்டும் குரல் மட்டும் எப்படி இனிமையாகியது என்றுதான் புரியவில்லை… போ… போ…
இங்கிருந்து ஓடிவிடுங்கள். என அம்மா அவர்களை கொத்துவதற்கு
ஆரம்பித்தார். அந்த இரண்டு குஞ்சுகளும் எமது கூட்டினை விட்டு
பறந்து சென்றன. நாம் பின்னாலேயே துரத்திக்கொண்டு போனோம்
ஆனால் அவையிரண்டும் ஒரு புதருக்குள் மறைந்துவிட்டன.
அம்மா என்னிடம், ஷமகனே.. இதனை நன்றாக நினைவில்
வைத்துக்கொள் இந்த குயில் இருக்கிறதே அது நம்மை போலல்ல.
மிகவும் நயவஞ்சகமானது. குயில்களுக்கு கூடு கட்டத்தெரியாது.
திருட்டுத்தனமாக வந்து எம்கூட்டினுள் முட்டையிடும். நான் இட்ட
முட்டைகள் என்றே நான் நினைத்தேன். எனது குஞ்சுகள் என்றுதானே
கஷ்டப்பட்டு சாப்பாடு தேடி ஊட்டினேன்… நான் நன்றாக ஏமாறிவிட்டேன்.
மகன் அந்த குயில் எனும் வஞ்சகமான பறவையை எங்கு கண்டாலும்
கொத்திக்கொன்றுவிடு…0
அன்றிலிருந்து நான் எங்கேனும் ஒரு குயிலை பார்த்தால் அதனை
கொத்தி துரத்திவிடுவேன். என்னிடமிருந்து எந்த குயிலாலும் தப்ப
முடியாது. எமது வாழ்க்கை பசியை திர்க்கும் முயற்சியிலேயே
கழிந்துவிடுகிறது. ஒருநாள் ஒரு வீட்டின் முற்புறத்தில் சுவையானதொரு
உணவு பாத்திரத்தை வெளியில் வைத்திருந்தார்கள். எமக்காகவே
வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் வேகமாக பறந்து
சென்று அதன் மேலே இருந்த அப்பளத்தை எடுத்து வேறிடம் பறந்து
சென்றேன். அது பெரிதாக இருந்தேதொழிய உள்ளே எதுவுமே
இல்லை. நான் மீண்டும் திரும்பி வரும்போது அனைத்து காகங்களும்
அந்த பாத்திரத்தை சுற்றி அடித்து பிடித்து கொண்டு சாப்பிட்டு
கொண்டிருந்தனர். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. எனக்கு
எதுவுமே இல்லை. ஐயோ… இந்த பசியை தாங்கமுடியவில்லையே.
முழு உடம்பும் எரிவதை போல் உள்ளது.
வேறு ஏதாவது கிடைக்கும் என்று நான் அந்த வீட்டு முற்றத்தில்
காத்துகிடந்தேன். அப்போது அந்த வீட்டில் இருக்கும் ஒரு முதியவர்
தன் பேரனை அழைத்து என்னை சுட்டிக்காட்டினார்.
ஷஅங்கே இருக்கிறதல்லவா அந்த காகம்தான் அப்பளத்தை
தூக்கிச்சென்றது. இந்த காகங்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும்
போதாது. அதை சாப்பிட்டு முடித்தவுடனே திரும்பி வந்திருக்கிறது பார்த்தாயா? நம்முடைய புத்த பகவான் இந்த காகங்களை பற்றி மிக
அழகாக போதித்துள்ளார்.
ஷதாத்தா எனக்கும் அதை சொல்லித்தாருங்கள்0
ஷபுண்ணியமிகு பிக்குகளே! இந்த காகம் பத்து பாவகுணங்களை
கொண்டது. எவருடைய நற்குணத்தையும் விரும்பாது. அதனை
அழித்துவிடும். எவ்வித அருவருப்புமிக்கதையும் சாப்பிட்டுவிடும்.
எந்நேரமும் சந்தேகத்துடனேயே இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும்
போதாது. கொடியது. கருணையற்றது. பலவினமானது. இழிவான
சப்தத்தை உடையது. சுயவுணர்வு அற்றது.
ஷதாத்தா ஏன் இந்த காகங்கள் இவ்வளவு இழிவான நிலைக்கு
ஆளாகின்றன?0
ஷமகன், முற்பிறவிகளிலே மிகவும் பாவம் செய்தவர்கள் மரணித்த
பின்னர் நரகலோகத்தில் பிறப்பார்கள். நரகத்தில் பிறந்து மிகவும்
துன்பமனுபவிப்பார்கள். இவ்வாறாக கோடிக்கணக்கான வருடங்கள்
நரகத்தில் துன்புற்ற பின் மிதமிருக்கும் பாவ விளைவினை
அனுபவிப்பதற்காக காகங்களாக மிருகலோகத்தில் பிறப்பார்கள்.
காகமாக பிறந்து, இறந்து மிண்டும் மிண்டும் காகங்களாகவே
பிறப்பார்கள். செய்யும் பாவங்கள் இவ்வாறான விளைவுகளைத்தான்
தரும்.
நான் அந்த பெரியவர் கூறியவற்றை கேட்டுக்கொண்டு தான் இருந்தேன்.
என் மீதே எனக்கு கவலையாக இருந்தது. ஷஅவ்வாறென்றால் நான்
இழிவான இந்த காகமாக பிறப்பதற்கு காரணம் முற்பிறவிகளில் செய்த
பாவமாகும். சில மனிதர்களை எம் பெயரை சொல்லியே திட்டுவார்கள்.
ஷஅவன் ஒரு காகத்தை போன்று எம்மை சுரண்டிசாப்பிடுகிறான்0
இவ்வாறானவற்றை கேட்கும் போது எனக்கு மிகவும் கவலையாக
இருக்கும்.
எமது பசி அடங்காததே எமது மிகப்பெரிய பிரச்சினை. எம்மை
எவ்வளவு திட்டினாலும் பரவாயில்லை. எமக்கு சாப்பிட ஏதாவது
கொடுத்தால் அது போதும். முன்பெல்லாம் நெய் கலந்த பால்
சோறு கிடைக்கும்… எனக்கு நினைவிருக்கிறது. ஒருநாள் எனக்கு
நெய்சோறு உருண்டை ஒன்று கிடைத்தது. ஆஹா… அன்றுதான் என் வயிறு குளிர்ந்தது. ஒருசிலர் எம்மை படங்களாக வரைந்து
போதி விருட்சங்களிலே தொங்கவிடுகிறார்கள். அவர்களுக்கு எம்மால்
கிரகம் பிடித்துள்ளதாம். அதற்கு செலவு செய்கின்ற பணத்தினால்
எமக்கு நெய் கலந்த பாற்சோறு கொடுத்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். பசியினால் சதா எரிந்துகொண்டிருக்கும் எமது வயிறுகளை
ஒருகணமேனும் குளிர வைக்க முடியுமானால் அது எமக்கு மிகவும்
ஆறுதலாக இருக்கும்.
ஐயோ சம்சாரத்தில் பாவம் செய்த காக்கையரே…
பசியினால் வயிறு எரியும் பாவமுள்ள காக்கையரே…
கருணையே இன்றி மென்மேலும் பாவம் செய்யும் காக்கையரே…
தப்பிக்க வழியில்லையா துக்கத்திலிருக்கும் காக்கையரே…
மனித உலகில் பாவம் செய்து நரகில் பிறப்போர்…
அனுபவிக்கும் துயரினை விபரிக்க மொழிகள் இல்லையாம்
இழிவான காக்கையாக பிறந்தது அதன் இறுதி பாவத்தினை
போக்கவே…
மாந்தர்களே, பாவங்களை செய்திடாதீர் இனிமேலும்…
பொறுமையை காத்திடுவீர் நன்மை பின்தொடருமே…
பெற்றோர் குருவை வணங்கிடுவாய்…
புண்ணியம் செய்பவரே மீண்டும் மனுலோகத்தில் பிறந்திடுவீர்…
09.
அழகிய ஜிம்மி
எனது பெயர் ஜிம்மி நான் எனது சிறிய வயதில் வேறு வீட்டில்
இருந்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் இங்கு வந்தேன். இந்த
வீட்டில் உள்ள அனைவரும் என்மீது அன்பு கொண்டவர்கள். ஆனால்
எனக்கு சுதந்திரம் என்பது கிடையாது. என்னை ஒரு கூட்டில்
அடைத்து வைத்திருக்கிறார்கள். என்னை வெளியே எடுத்தால் உடனே
சங்கிலியால் கட்டிப்போடுவார்கள். அப்போது நான் மிகவும் சத்தமாக
அவர்களிடம் ஷஎன்னை கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்..0 கத்துவேன்.
அப்போது எனது வீட்டார் வந்து… ஷஜிம்மீ.. என்ன சத்தம்..? வாயை
மூடு0 என அதட்டுவார்கள். அப்போது எனக்கு மிகவும் கவலையாக
இருக்கும். ஆனால் எனக்கு கோபம் வந்ததென்றால் இந்த இடத்திலேயே
மலங்கழித்துவிடுவேன்.
ஒருநாள் ஒரு செல்வந்த பெண்மணி சங்கிலியால் கட்டப்பட்ட
ஒரு பெரிய நாயை எமது விட்டுக்கு கொண்டு வந்தார். நான்
அன்று அதற்கு உடன்படவேயில்லை. நான் பலத்த சத்தத்தோடு
குரைத்தேன்.. உறுமினேன்… ஷஇந்த வீட்டில் என்னை தவிர வேறு
நாய்களுக்கு இடமில்லை0 என கத்தினேன். அந்த செல்வந்த
பெண்மணி என்னை பார்த்து இவ்வாறு கூறினார். ஷஆ… உங்களது
நாயும் கொஞ்சம் முரட்டுத்தனமானது தான்.. இந்த நாயும் இப்போது
இப்படியிருப்பதற்கு என்ன? முரட்டுத்தனமான நாய்தான்… நான் இந்த
டாசனுக்கு மிகவும் செலவுசெய்கிறேன்… டாசனுக்கு அடிக்கடி நோய்
வரும்… வீட்டுச்சாப்பாடை கூட கொடுக்க மாட்டேன். கடைகளிலுள்ள
நாய்களுக்கான சாப்பாட்டை மட்டும்தான் கொடுப்பேன்… நான் டாசனை
நிராட்டுவேன்… உடம்பை சிப்பால் சிவிவிடுவேன்… வாச பவ்டர்
வகைகளை போட்டுவிடுவேன்… இது என்னோடு எனது கட்டிலிலே
தான் தூங்கும்… ஹி..ஹி…0
ஷஐயோ… எங்களால் அப்படிச்செய்ய முடியாது… நாய்களோடு
தூங்கினால் செல்லுகளோடுதான் எழும்ப வேண்டும் என்று பழமொழி
கூட இருக்கிறதே..
ஷஇல்லை.. இல்லை அப்படிச்சொல்ல வேண்டாம். இப்போ பாருங்கள் இந்த டாசன்.. என்ன டாலிங்…? உன்ட உடம்புல உண்ணிகள்
இல்லைதானே..! நான் என்ட டாசன் டாலிங்கு நாட்டு;புற நாய்களை
காண்பதற்கு கூட இடமளிக்க மாட்டேன. டாசன் ஒரு ஜர்மன் நாய்தானே..
இல்லையா செல்லம்…0 உண்மையிலேயே அந்த செல்வந்த பெண்
தன் டாசன் மிது மட்டும் தான் பாசமாக இருக்கிறார். என்னை
முறைத்துதான் பார்த்தார். அந்த பெண்ணை கண்டவுடன் எனக்கு
கோபம்தான் வருகிறது.
ஒருநாள் என்னை எனது சங்கிலியிலிருந்து அவிழ்த்து விட்டார்கள்.
எனக்கு அன்று மிகவும் சந்தோஷம். நான் தோட்டம் முழுவதும்
சந்தோஷமாக ஓடித்திரிந்தேன். வாயிற்கதவு மூடியிருந்தது. அதனால்
வெளியே செல்ல முடியவில்லை. நான் வாயிற்கதவின் துவாரம்
வழியாக வெளியே வீதியை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது
தெருநாய் ஒன்று அந்த வழியாக போய் கொண்டிருந்தது. நான் அதனை
அழைத்தேன். ஷவள்..வள்…ஏய்… இங்கே வா… நீ.. எங்கே போகிறாய்?0
ஷஅம்மாடி! நான் எவ்வளவு பயந்துவிட்டேன்..! இங்கு… எனக்கு
தெரிந்த ஒரு பெட்டை நாய் இருக்கிறது… அவளை பார்க்க போய்
கொண்டிருக்கிறேன். அவள் என்னை விரும்புகிறாள்.0
விரும்புகிறாள்… அப்படியென்றால்..?
ஐயோ… நீ பெரிய வீட்டில் இருந்தாலும் தெருநாய்களான எமக்கு
இருக்கும் சுதந்திரம் இல்லையே. காவலனைப்போல் குரைத்து
கொண்டிருப்பதுதான் உன் வேலை. நாம் அப்படியல்ல. எமக்கு
நண்பர் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். நாம் எமது எல்லைகளை
வரையறுத்திருக்கிறோம். எமது பிரதேசத்தில் வேறு நாய்களை
நடமாடுவதற்கு கூட விடமாட்டோம். நாம்தான் வேண்டிய நள்ளிரவில்
கூட்டம் கூட்டமாக தெருக்களில் செல்வது. அந்த தைரியம் எமக்கு
மட்டும்தான் இருக்கிறது. ஆனால் ஒரு பிரச்சினை இருக்கிறது. எமக்கு
சரியான வேளைகளில் சாப்பாடு கிடைக்காது. ஒருசில நாட்களில்
சாப்பிட்டாலும் சாப்பிடாதது போலத்தான். கொஞ்சம் சாப்பாடுதான்
கிடைக்கும். நாம் பசியினால் மிகவும் அவஸ்தைபடுவதுண்டு. ஒருநாள்
நானிருக்கும் வீட்டில் என்னை கடுமையாக அதட்டினார்கள். ஷஆ..
இப்போதுதான் வருகிறாயா..? நல்லா தெருநாய்களோடு ஊரேல்லாம்
அலைஞ்சு திரிஞ்சு இப்பதான் வீடு நினைவு வந்ததா? உனக்கு இனி சாப்பாடில்லை.0 என்று சொன்னார்கள். சொன்னது போலவே எனக்கு
சாப்பாடும் கிடைக்கவில்லை. அன்று முழுவதும் கவலையினால்
அழுதுகொண்டே இருந்தேன்.
ஷஎன் பெயர் ஜிம்மி… உன்னுடைய பெயர் என்ன?
ஜிம்மி… எனக்கு என்ட பெயர் என்னவென்று தெரியாதே… ம்ம்ம்…
விட்டில் உள்ளவர்கள் என்னை இஜுஹ்.. என்று கூப்பிடுவார்கள்.
இஜுஹ்.. என்பதுதான் என் பெயராக இருக்க வேண்டும். ஷபோ0
என்றவுடன் நான் போய்விடுவேன். அந்த வீட்டில் உள்ள பிள்ளைகள்
கருணையே இல்லாதவர்கள். என்னை அடித்து துன்புறுத்துவார்கள்.
அதனால்தான் நான் அன்பினை தேடி அங்கும் இங்கும் அலைகிறேன்.
ஷஐயோ… சாப்பாடில்லாத அன்பு எனக்கென்றால் வேண்டவே வேண்டாம்.
இந்த தனிமையான வாழ்வு அதை விட எவ்வளவோ மேல்.. இஜுஹ்…
அங்கே பார் இன்னுமொரு நாய் வருகிறது. ஷஐயய்யோ…சீச்சீ… சிறங்கு
பிடித்திருக்கிறது… கிழ நாயொன்று… அது போதாதென்று ஒரு கால்
நொண்டி வேறு… ஏய்… கிழவனே… இங்கே வா…0
அப்போது அந்த கிழ நாய் நன்றாக பயந்துவிட்டது. விதியின்
மறுபக்கத்திலிருந்தே என்னோடு பேசியது.
ஹ்ஹா… நானும் உன்னை போன்று அழகாக இருந்த காலம்
ஒன்றிருந்தது. அந்த காலத்தில் எனக்கு நல்ல சாப்பாடும் கிடைத்தது.
எனது பூர்வ ஜென்ம கர்மத்தினால் எனக்கு சொறி பிடித்துவிட்டது.
இப்போது யார் என்னை பார்த்தாலும் விரட்டி விரட்டி அடிக்கின்றனர்.
என்னை காணும் போதே கல்லால் அடிக்கின்றனர்… மனிதர்களை
விடுங்கள் ஏன் நாய்கள் கூட என்னை கவனிப்பதில்லை. ஐயோ…
ம்ம்… என் முழு உடம்பும் எரிகிறது. புழுக்கள் துளையிடுகின்றன.
தூக்கமே இல்லை. மூலை முடுக்குகளில் கூட என்னை இருப்பதற்கு
விடுகிறார்கள் இல்லை. காரித்துப்பி என்னை விரட்டிவிடுகின்றனர்.
அப்போது இஜுஹ் இப்படிச்சொன்னது.
ஷஐயோ ஜிம்மி நீ இந்த கிழ நாயுடன் பேசாதே… முன்னர் இந்த
பிரதேசத்திற்கே இவர்தான் தாதா… எல்லா நாய்களையும் அடிபணிய
வைத்துக்கொண்டிருந்தது. சொறி பிடித்த பிறகுதான் இது பணிவுள்ளதாக
மாறியிருக்கிறது… ஷஆம்.. ஆம்… உண்மைதான்.. மனித உலகில் எனையோரை
அடக்கிக்கொண்டு செருக்குடன் வாழ்வோர் நாய் உலகில் பிறந்தால்
இப்படித்தானாம்…0
ஷஜிம்மி அந்த கதையை விடுங்கள்… நான் சுவையாக சாப்பிட்ட
ஒருநாள் கூட எனக்கு ஞாபகம் இல்லை. வீதியோரங்களில் உள்ள
குப்பைளை கூட கிளறி சாப்பிட ஏதாவது கிடைக்குமா என பார்ப்போம்.
அந்த அளவிற்கு தாங்க முடியாத பசிதான0;
ஷஎனக்கு அந்த தொல்லைகளெல்லாம் இல்லை. இங்கு எனக்கு மூன்று
வேளைகளும் நல்ல சாப்பாடு கிடைக்கிறது0
அப்போது என் வீட்டுப்பெண்மணி என்னை அழைத்தார்.
ஷஜிம்ம… எங்கே இந்த ஜிம்மி..? ஏய் ஜிம்மி… அங்கு என்ன செய்கிறாய்..?
இங்கு வா… இந்த சாப்பாட்டை சாப்பிடு…
ஷஆ… என்னை கூப்பிடுகிறார்… நான் போகிறேன்… எனது சாப்பாடு
தயார்… பவ்… பவ்…0 என்று சந்தோஷமாக திரும்பி வந்து எனது
சாப்பாட்டினை சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது அந்த விட்டில்
இருந்த பாட்டி வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அவர் என்னை பார்த்து இவ்வாறு கூறினார்.
ஷமகளே… எமது நாயை பாருங்கள்… இந்த மேரியுடைய ஜர்மன் நாயை
போன்று அதி சொகுசு இல்லையென்றாலும் ஜிம்மி சுகமாகத்தான
வாழ்கிறது… நேரத்திற்கு சாப்பாடு கிடைக்கிறது… சுத்தமாக இருக்கிறது…
நாம் எல்லோரும் அதன் மீது அன்பு வைத்திருக்கிறோம்… ஆனால்
நாய் ஜென்மத்தில் பிறந்த பெரும்பாலான நாய்களுக்கு இம்மாதிரியான
சுகமான வாழ்க்கை கிடைக்காது…0
ஷஏன் அம்மா எல்லா நாய்களுக்கும் சுகுமான வாழ்வு கிடைப்பதில்லை?0
ஷமகள் இது தொடர்பாக புத்த பகவான் மிகத்தெளிவாக போதித்துள்ளார்.
இப்படித்தான் போதித்துள்ளார்… மனித உலகில் ஒருவர் பிறக்கிறார்
அவர் பாவ புண்ணியங்களை நம்பாதிருக்கிறார். அவர் தன்
இஷ்டப்படி வாழ்கிறார். தீய நண்பர்களோடு பழகுகிறார். உயிர்களை
கொள்கிறார். திருடுகிறார். தீய நடத்தைகளை உடையவராகிறார்.
பொய் உரைக்கிறார். புறம் பேசுகிறார். ஏனையோரின் மத்தியில் வேற்றுமையை தோற்றுவிக்கும் படி பேசுகிறார். ஏனையோரின் மனம்
புண்படும் வண்ணம் பேசுகிறார். இவ்வாறானவர்கள் மரணித்த பின்னர்
நாய்களாக பிறக்கின்றனர். ஆனால் ஒருசிலர் மேற்கூறப்பட்ட வகையில்
தீய வாழ்வை வாழ்ந்தாலும் ஏனையோருக்கு உதவி செய்வார்கள்.
ஏழைகளுக்கு தானமளிப்பார்கள். இவ்வாறானவர்கள் நாய்களாக
பிறந்தாலும் முற்பிறவியில் தானமளித்த காரணத்தினால் தட்டுப்பாடின்றி
உணவு கிடைக்கும்.
இந்த நாய்கள் மத்தியில் கூட வேறுபாடுகள் இருக்கிறது என்பது
உங்களுக்கே புரிந்துகொள்ளலாம் அல்லவா..? அழகாக முடி இருக்கும்
நாய்கள் இருக்கின்றன… நல்ல கம்பீரமான தோற்றமுடைய நாய்கள்
இருக்கி;றன. குட்டையான நாய்கள் இருக்கின்றன. குரைக்கும் போது
அதரும் சப்தமுடைய நாய்கள் இருக்கின்றன. இழிவான சப்தமுடைய
நாய்கள் இருக்கின்றன. எவ்வளவு வேறுபாடுகள்..? இப்போது சிந்தித்து
பார்.. நன்றாக சாப்பிட்டு சுகமாக வாழும் நாய்கள் மிகக்குறைவே.
பெரும்பாலான நாய்கள் இருப்பதற்கு தகுந்த இடமோ அல்லது
சாப்பிடுவதற்கு சாப்பாடோ இல்லாமலேயே இருக் கின்றன. அவை
மனிதர்களின் அடி உதைகளுக்கும் ஏச்சுக்களுக்குமே ஆளாகின்றன.
எமது தர்மத்தில் இவ்வாறும் குறிப்பிடப்படுகிறது. ஷமானேன மக்கடோ
ஹோதி… அதிமானேன குக்குரோ ஹோதி என்று. மகளே மக்கட
என்றால் மந்தியாகும் அதாவது ஒருவர் செருக்கின் காரணமாக
மந்தியாக பிறக்கலாம். அதித செருக்கின் காரணமாக நாயாக
பிறக்கக்கூடும். இங்கு குக்குர என பாலி மொழியில் குறிப்பிடப்படுவது
நாயையே. இவற்றையெல்லாம் அறியாத மூடர்கள் ஷஐயோ… இந்த
மனித வாழ்க்கையை விட பணக்கார வீட்டில் நாயாக பிறக்கவிருந்தால்
எவ்வளவு நல்லம்? என்று சொல்லிக்கொள்வார்கள். அது மிகவும்
பாரதூரமான ஒரு எண்ணமாகும். எங்கு பிறந்தாலும் சுகம் கிடைப்பது
புண்ணியத்தினாலாகும். புண்ணியம் இல்லையென்றால் சுகம்
கிடைக்காது.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்கள் கூறுவதை
கேட்டுக்கொண்டேன். என்னை பற்றி நினைக்கும் போது எனக்கே
கவலையாக இருந்தது. இதற்கு முற்பிறவிகளில் நானும் மனிதனாக
பிறந்திருப்பேன். ஆனால் புண்ணியம் செய்துகொள்ளவில்லை. சீலம்
அனுஷ்டிக்கவில்லை. நற்பண்புகளை வளர்த்து கொள்ளவில்லை. அதனால்தான் இந்த மிருக உலகில் பிறக்க வேண்டியதாயிற்று.
ஜிம்மி நீ இனி பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.
நாய் செய்கைகளை கொண்டே இருக்க வேண்டும்.
சங்கிலி கட்டிய தடியை சுற்றியே இருக்க வேண்டும்.
கூட்டினுள்ளே முழு வாழ்வையும் கழிக்க வேண்டும்.
நோய் பசிப்பிணி உரிய வாழ்வினில்…
வெயிலில் மழையில் துன்புறும் வாழ்வு…
வீதி வீதியாக அலையும் வாழ்வு…
கர்மத்தினாலேயே கிடைத்த நாய் வாழ்வு…
புண்ணிய பாவமே என்றும் நிறுக்கப்படுகிறது…
செய்ததை விட வேறெதுவும் கிடைக்காது…
அதனால் பாவங்களை தவிர்த்திடுவீரே…
மிருலோகத்தில் பிறக்கும் வழியை அடைத்திடுவீரே…
10.
குரங்கு சாகசங்கள்
எமது வாழ்வு மிகவும் துன்பகரமானது. நாம் பிறந்தது மரங்களின்
மேலே. இருப்பதுவும் மரங்களின் மீதுதான். என்றாவது இறப்பதாயினும்
அதுவும் மரங்களின் மீதுதான். எம்மை குரங்குகள் என அழைப்பார்கள்.
எமது ஒரு குழுவில் அண்ணளவாக முப்பது பேர் இருப்போம்.
இலைகுலைகளை சாப்பிட்டு சாப்பிட்டு இப்போது வெறுத்துவிட்டது.
நாம் களவுத்தனமாக கிராமங்களுக்கு செல்வோம். தோட்டங்களிலுள்ள
பழங்கள், இளநிர், பலா, ஈரப்பலா என்பவற்றை நாம் விரும்பிய
வண்ணம் சாப்பிடுவோம்.
நான் இந்த குரங்கு கூட்டத்திலே இருந்தாலும் இல்லாதவன்
போலாகிவிட்டேன். நான் கிழவனாகிவிட்டேன். முன்பு போல் பாய்வதற்கு,
தாவுவதற்கு என்னால் முடியாது. என் உடம்பு மிகவும் பலவீனமுற்று
இருக்கிறது. கிராமத்தில் ஒரு மாமரத்தில் ஏறி மாம்பழம் ஒன்றை
பறித்து சாப்பிட்டேன். அதனை கண்ட ஒரு சிறுவன் கல்லால் என்னை
அடித்தான். அந்த கல் என் முதுகில் பட்டு இன்னும் வேதனையாக
இருக்கிறது.
ஒருநாள் எமது கூட்டத்தில் பெருங்கூச்சல் சப்தம் ஒன்று கேட்டது. நான்
அருகில் சென்று விசாரித்து பார்த்தேன். ம்ம்ம்… வழமை போன்றுதான்…
புதிய தலைமைத்துவத்திற்காக அடித்து பிடித்து கொண்டிருக்கின்றனர்.
தலைமைத்துவத்திற்காக கூட்டத்தில் உள்ள பலம்பொருந்திய இரு
குரங்குகள் சண்டையிட்டுக்கொள்ளும். இந்த சண்டையில் இறுதியில்
ஒரு குரங்கு இறந்துவிடும். அல்லது கூட்டத்தை விட்டு ஓடிவிடும். மற்ற
குரங்கு வெற்றியடைந்துவிடும். வெற்றிபெற்ற குரங்கிற்கு அடிபணிந்தே
கூட்டத்தின் ஏனைய குரங்குகள் இருக்க வேண்டும். இந்த குரங்குகள்
காமத்தினாலும் கோபத்தினாலும் பெரிதும் துன்பமனுபவிக்கின்றன.
ஒருநாள் எமது குரங்குகள் மனிதர்கள் நடமாடும் ஒரு இடத்திற்கு
சென்றன. இந்த குரங்குகளின் நடத்தையை பார்த்த மனிதர்கள் எம்மை
பலவாறாக திட்டினார்கள்.
‘ஐயோ அங்கே பாருங்கள்… சீச்சீ… இந்த குரங்குகளுக்கு வெட்கம்
என்பதே கிடையாது… கேவலமான குரங்குகள்… இங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கூட ஒரு பயமில்லை. கெட்டமுறையில்
நடந்துகொள்கின்றன0
ஷஆம் மகன்… குரங்குகளுக்கு வெட்கம் பயம் என்பன கிடையாது.
செருக்கினால் கிடைத்த வாழ்க்கை அல்லவா? இந்த குரங்குகளுக்கு
கீழ்தரமான குணங்கள் கிடைப்பதற்கு காரணமே அவை மனிதர்களுடைய
பரிகாசத்திந்கு ஆளாகுவதற்காகத்தான்… அவை ஒரு தோட்டத்தினுள்
வந்தால் அந்த முழு தோட்டத்தினையும் நாசம் செய்துவிடும்..
மரங்களில் ஒரு காய் கூட மீதம் இருக்காது. கூரையில் உள்ள
ஓடுகளை உடைத்து நாசமாக்கிவிடும். மனிதர்களுடைய கோபத்தை
தூண்டும் வேலைகளையே செய்கின்றன. இந்த குரங்குகள் பழிவாங்கும்
குணம் கொண்டவை. அவை மனிதர்களுக்கு எதிராக ஒன்றுக்கொன்று
செய்த வண்ணமே இருக்கின்றன0
நான் அவர்கள் அறியாத வண்ணம் மரத்தின் பின்னால் மறைந்திருந்து
இவற்றை கேட்டுக்கொண்டிருந்தேன். மனிதர்கள் எம்மை பற்றி நிறைய
விடயங்கள் பேசுகிறார்கள்.
ஷமகனே… இந்த குரங்குகளை விட மந்திகள் நல்லம். குரங்குகளை
விட சற்று உயர்ந்த கருத்த உடம்புள்ள மிருகங்களே மந்திகள். சில
மனிதர்கள் இந்த மந்திகளின் இறைச்சியையும் சாப்பிடுவார்களாம்.
எம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது.
மகன்.. ஒருநாள் ஒருவர் மந்தி ஒன்றை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்.
அந்த மந்தி தன் வயிற்றை தடவிப்பார்க்கும் போது இரத்தம்
வலிகிறதாம். இப்போது இந்த மந்தி கைகளிரண்டிலும் இரத்தத்தை
தடவிக்கொண்டு அதனை சுட்ட அந்த மனிதனிடம் காட்டிக்கொண்டு
ஷஐயோ… ஏன் என்னை இப்படி செய்தாய்… இந்த இரத்தம் தான் உன்
உடலிலும் ஓடுகிறது… ஏன் இவ்வாறு செய்தாய்0 என கதறியபடியே
மரணித்ததாம்..0
எமது கூட்டத்தின் ஒரு பெண் குரங்கின் கூச்சலினால் எனக்கு அந்த
கதையை முழுமையாக கேட்க முடியாமல் போய்விட்டது. நானும்
வேகமாக அவ் இடத்திற்கு சென்றேன்.
ஷதாத்தா… எனது பிள்ளையை அந்த சாத்திரக்காரன் தூ
க்கிச்செல்கிறானே… ஐயோ…’
ஷஅடி குரங்கே… எமது குட்டிகளை அந்த சாத்திரக்காரன் தூக்கிச்சென்ற
முதல் தடவை இதுவல்ல. இதற்கு முன்னரும் பல முறை எமது
குட்டிகளை தூக்கிச்சென்றுள்ளான்… நான் ஒருநாள் எமது அப்படி
தூக்கிச்சென்ற ஒரு குட்டியை கண்டேன். எமது குட்டிக்கு மனித
உடைகளை அணிவித்து கால்களில் சலங்கைகளை கட்டி அந்த
சாத்திரக்காரன் தோளிலே தூக்கிச்சென்று கொண்டிருந்தான்..0
அ ப் ப டி ய ர . . ? எ மது கு ட் டியு ம் மனித ர் க ளே ர டு இ ரு ந்து
கெட்டுப்போய்விடுவானோ தெரியாது..0
அடி குரங்கே.. இனிமேலும் கெடுவதற்கு என்ன இருக்கிறது..? மனித
உலகில் கெடுதலான வாழ்வை வாழ்ந்ததால் தான் இ;போது நீயும் நானும்
நாம் அனைவருமே இந்த இழிவான குரங்குகளாக பிறந்துள்ளோம்…
கொஞ்சம் சிந்தித்து பார்.. மழைக்காலம் வந்தால் மரங்களில் மேல்
உட்கார்ந்து மழையில் நனைந்து கொண்டும் நடுங்கிக்கொண்டும்
பல நாட்கள் உட்கார்ந்து இருக்கிறோம். இரவிலும் தூக்கமில்லை.
பகலிலும் தூக்கமில்லை. அங்கே பார் இந்த பெண் குரங்கின் குட்டியை
நேற்று இரவு பெரிய பாம்பு ஒன்று விழுங்கிவிட்டது.. அவள் இன்னும்
அழுதுகொண்டே இருக்கிறாள். சென்ற வாரம் எமது கூட்டத்தின்
பெரிய குரங்கை கொன்றாயிற்று. பொறாமையிலும் பழிவாங்குதலிலும்
வரையறைகளே இல்லை.
ஷவாயை மூடிக்கொண்டு பேசாமல் போய்விடு கிழவா… உன்னுடைய
இந்த கிழ உபதேசங்கள் எனக்கு தேவையில்லை… நான் இன்னுமொரு
குட்டியை பெற்றெடுப்பேன்…0 என்று இந்த பெண் குரங்கு என்னை
ஏசிக்கொண்டே சென்றுவிட்டாள்.
எனக்கு இந்த குரங்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. இந்த குரங்குகள்
மிகவும் முரட்டுத்தனமானவை.. திருடுவதற்கு மிகவும் திறமையானவை..
அருவருப்பாகவும் கீழ்தரமாகவும் நடந்தகொள்வதற்கும் அப்படித்தான்.
வெட்கம் ஒருதுளிNனும் இல்லை. ஒரு வீட்டினுள் பாய்ந்தால் அந்த
வீட்டை நாசம் செய்த பின்பு தான் மறுவேலை. முன்னர் நானும் அவ்வாறு
செய்ததுண்டு. ஆனால் மனிதர்கள் எம்மை பற்றி பேசுவதையெல்லாம்
கேட்ட பின்பு நாம் செய்வது தவறு என்று புரிகிறது. மனித உலகில்
பிற்பதற்கு தான் எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால்… நான்
எவ்வாறு மனித உலகில் பிறப்பேன்..? அதற்கான புண்ணியம் எனக்கு இருக்கிறதா..? இஹி.. .இஹி.. மீண்டும் எனக்கு இந்த இழிவான குரங்கு
வாழ்க்கை கிடைக்குமோ..?
மீண்டும் மீண்டும் குரங்கு வாழ்கையே…
செய்த கர்மங்கள் தன்னையே சுற்றி சுற்றி வரும்…
புண்ணியமற்ற நரகத்திலிருந்து எவ்வாறு மீளுவதோ…
தவறு செய்தால் தோல்வியுறவே வேண்டும்…
கேலிக்கூத்து செய்வதனால் உணவு கொஞ்சம் கிடைத்திடுமே…
மனிதர்களின் ஏளனத்திற்கு தினமும் ஆளாக வேண்டிடுமே…
மரஞ்செடி மற்றும் பழங்களை ஏன் நாசம் செய்கிறீரோ…
மனிதர்களிடம் அடிபடுவது செய்த பாவங்களினாலயே…
மனிதர்களாக வாழ்ந்த வாழ்வு கையிழந்து போயிற்று…
மீண்டும் மீண்டும் குரங்காகவே நீங்களும் பிறந்திடுவீர்…
எம்மனைவருக்கும் குரங்குகளே ஒரு சிறந்த பாடம்…
இந்த பயங்கர சன்சாரத்திலிருந்து நீங்கள் நீங்கும் வழி எங்கோ
குரங்குகளே…