உயிர்களாகிய நாம் பிறந்து மடிந்து பயணிக்கும் இந்த பிறவிப்பயணத்தின் அபாயமானது, இனம், மதம், குலம், நிறம், மற்றும் பிரதேச வாரியாக வேறுபடுவதில்லை என்றே புத்த பகவான் போதித்துள்ளார். நாம் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு மனம், வாக்கு காயம் என்பவற்றால் சேகரித்துக் கொள்ளும் கர்மத்தின் அடிப்படையிலே நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது அனைத்து உலகங்களுக்கும் பொதுவான நியதியாகும்.
அஞ்ஞானத்தால் மூடப்பட்டு, வேட்கையால் பிணையப்பட்டிருக்கும் இந்த உயிர்கள் கர்மம் எனும் திருகாணியால்; இறுகியிருக்கும் வரை இந்த பிறவிப்பயணத்திலிருந்து மீள முடியாது என்றும், அதனிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி தம் சுய ஞானத்தால் உய்த்துணர்ந்து போதித்தருளிய உன்னத எண்சீர் வழியைக் கொண்ட தர்மமே என்றும் புத்த பகவான் போதித்துள்ளார்.
அறிவு, வீரியம், விடாமுயற்சி என்பன கொண்டவர்கள் தம் மனதை மேன்மை படுத்துவதற்கான காரணிகளை வளர்ப்பதற்கும், மனதை மாசுபடுத்தும் விடயங்களை அழிப்பதற்குமான நேரான வழியை எடுத்துக்காட்டும் பகவானது தர்மத்தினை வெளிக்கொனரும் எம் நோக்கமானது, இனம், மதம், குலம், மொழி எனும் வரையறைகளை மீறிச்சென்றதேயாகும்.
உலகில் எந்த இனத்தில் பிறந்தாலும் எவ்விதமான நம்பிக்கையை கொண்டிருந்தாலும் புத்த பகவானால் போதிக்கபட்ட கண், காது, நாசி, நாவு, உடல், மனம் என்பவனற்றினூடாக உலகத்தோடு பிணைந்து வாழும் உயிரானது அனைத்து துக்கங்களிலிருந்தும் மீள்வதானது அந்த ஆறு புலன்கள் மீதுள்ள அஞ்ஞானத்தை போக்குவதிலையே தங்கியுள்ளது.
புத்த பகவானது நிர்மலமான அகத்தே ஊற்றெடுத்த மோட்ச பிரவாகத்தை பருகும் நோக்கமுடைய புண்ணியமிக்கவர்களுக்கு இப்போது எம் தாய் மொழியிலேயே அதற்கான வழியை அறிந்துக்கொள்ள முடியும். எத்தகையோரது கருத்துக்களாலும் மாசு படியாத, காலங்காலமாக தேரவாத பௌத்த முனிவர்களால் தம் உயிருக்கும் மேலாக பாதுகாத்து கொண்டு வரப்பட்ட புத்த பகவான் போதித்த அதே தர்மத்தை, பின்வரும் இணையத்தளம் மற்றும் செயலிகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
மஹாமெவ்னா தியான ஆச்சிரமம்
இல.369
இராஜசிங்க மாவத்தை
ஹேவாகம
கடுவலை