கோபத்தை எவ்வாறு தவிர்க்க முடியும்?
எம் மனம் கோபத்தினால் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது. கோபம் என்பது பலவீனம் என அறிந்திருந்தும் அதனை தவிர்க்கும் முறையை நாம் சரியாக அறிந்தவர்களல்ல. கோபத்தை அழிப்பதற்காக புத்த பகவான் மொழிந்த விடயங்களில் சிலவற்றை அறிந்துகொள்ள பிரவேசியுங்கள்.
தானம் என்றால் என்ன?
தானம் தொடர்பாக பாக்கியமுள்ள புத்த பகவான் பல்வேறு விதமாக பல போதனைகளில் அழகாக மொழிந்துள்ளார். புண்ணியங்கள் ஈட்டிக்கொள்ளும் மூவகை வழிகளில் முதலாவதாக கூறப்படும் தானம் தொடர்பாக பகவான் மொழிந்தருளிய தர்மத்தினை அறிந்துக்கொள்வதன் மூலம் நாமும் தானம் என்றால் என்ன என்பதனை அறிந்து;க கொள்ள முடியும்.
அஹின்சக சூத்திரம்
மனம், வாக்கு, காயம் என்பனவற்றினால் பாவம் செய்யாதவர் அஹிம்சையானவராவார். மனம், வாக்கு, காயம் என்பனவற்றை பாதுகாத்து கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நால்வகை பேருண்மைகள்
இந்த உலகில் ஒருபோதும் மாற்றமடையாத மகா உண்மைகள் நான்கு இருக்கின்றன. இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் சுழலும் உயிர்கள் இந்த நாற்பேருண்மைகளை உய்த்துணர்வதினால் மாத்திரமே அனைத்து துக்கங்களில் இருந்து மீள முடியும்.
நகரூபம சூத்திரம்.
இன்றைய காலத்தினை போன்றே ஆதி காலத்திலும் ஒரு நகரத்தினை அமைக்கும் போது திட்டமிடப்பட்டே அமைக்கப்பட்டன. முறையாக திட்டமிடப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு நகரம் பாதுகாப்பு மிக்கதாகும். ஒரு நகரத்தினை போன்று ஒரு ஆரிய சீடன் தனது மனதை நன்கு தர்மத்தின்படி திட்மிட்டு கட்டியெழுப்ப வேண்டும்.
பட்டம அக்கந்தி சூத்திரம்.
மகா உத்தம புருஷர்கள் தவமாக கருதிய ஒரு உன்னத குணம் இருக்கிறது. அதுவே பொறுமை எனும் மகத்துவமான குணமாகும். இந்த பொறுமை எனும் குணத்தினை பழக்கப்படுத்துவதால் இவ்வுலகம் மறுவுலகம் என்பவற்றுக்கு கிடைக்கும் நல்விளைவு களை அறிந்துகொள்ளுங்கள்.
ஜரா சூத்திரம்
தேவர்களினதும் மனிதர்களினதும் ஒப்பற்ற பரம குருவான புத்த பகவான் சத்தா தேவ மனுஸ்ஸானங் எனும் குணம் கொண்டவராவார். அந்த தேவ மனிதர்களின் உன்னத குருவான பகவானிடம் ஒரு சமயத்தில் ஒரு தேவர் வினவிய கேள்விக்கு பகவான் அளித்த விடையே இந்த போதனையாகும்.
நிரய சூத்திரம்.
மனம் வாக்கு காயம் என்பனவற்றினால் பாவம் செய்தவர்கள் மரணித்த பின்னர் நரகத்தில் பிறப்பார்கள். இவ்வாறு நரகத்தில் பிறப்பதற்கு ஏதுவாக அமையுமு; காரணிகள் சிலவற்றினை அறிந்துகொள்வதற்கு இந்த போதனையை செவிமடுங்கள்.
சேக சூத்திரம்
புத்த பகவானை சரணடைந்த ஆரிய சீடனிடம் இருக்க வேண்டிய சக்திகள் ஐந்து இருக்கின்றன. மும்மணிகள் மீதான சத்தா (பக்தி), ஒழுக்கம், தர்ம ஞானம், கொடை,ஞானம் என்பனவே அவையாகும். மேலும் அறிந்துகொள்வதற்கு…
தானானிசங்ச சூத்திரம்
தானமளித்தல் எனும் விடயம் உலகின் உத்தமர்களால் வருணிக்கப்பட்டதொன்றாகும். தனக்குரியவற்றை ஏனையோரது நன்மைக்காக அளிப்பதனை தானம் என கூறலாம். இவ்வாறு தானமளிப்பதன் விளைவுகளை இந்த போதனையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
காம சூத்திரம்.
ஒரு தேவன் பகவானை வணங்கி பின்வருமாறு கேட்கிறார்
- நலன் விரும்பும் எதனை கொடுக்க் கூடாது?
- எதனை கைவிடலாகாது?
- சிறந்ததாக எதனை அவர் வெளியிட வேண்டும்?
- கீழ்த்தரமான எந்த விடயத்தை செய்யக்கூடாது?
அசுந்தரிக சூத்திரம்.
ஏனையோரை தூற்றுகிறவன் தான் வெற்றி கொண்டவனாகவை நினைக்கிறான். ஆனால் இவ்வாறு ஒருவர் தூற்றும் போது தன் மனதை அழுக்கடையச்செய்யாமல் பொறுமையுடன் இருப்பவரே உ;ணமையான வெற்றியாளராவார்.