தம்மபதம்
எமது பரம குருவான பாக்கியமுள்ள புத்த பகவான் எம் மீது கொண்ட மகா கருணையினாலேயே இந்த உத்தம தர்மத்தினை மொழிந்தருளினார். அந்த மகா வழிகாட்டியின் சாசனமாகவே இந்த தர்மம் விளங்குகிறது. சுத்த (சூத்திர போதனைகள்), கெய்ய (போதனை மற்றும் செய்யுள் எனும் இரண்டும் உள்ளடங்கியவை), வெய்யாகரண (ஆரிய சத்தியங்களை மென்மேலும் பகுத்து மொழிந்திருக்கும் போதனைகள்), காதா (செய்யுள்கள்), உதான (முயற்சியின்றி சுயமாக உதிரும் வார்த்தைகள்), இதிவுத்தக (நிச்சயப்படுத்தி மொழிந்த போதனைகள்), ஜாதக (பகவானது முற்பிறப்பு வரலாறுகள்), அப்பூததம்ம (ஆச்சரியமிக்க புதினமான விடயங்கள் கொண்ட பகுதி), வேதள்ள (வினா விடை வடிவிலானவை) என இந்த மகா வழிகாட்டியின் சாசனம் ஒன்பது அங்கங்களை உடையதாக திகழ்கிறது.
தம்ம பதம் ‘காதா’ எனும் செய்யுள் வடிவிலான சாசனத்திற்கு உட்பட்டதாகும். இந்த உத்தம செய்யுள்களை மகா
வழிகாட்டியின் சாசனம் என்றழைப்பதற்கு காரணம் இந்தச் செய்யுள்களில் பொதிந்திருக்கும் விசேடமான
இயல்புகளினாலேயே. அதாவது, இந்த உத்தம செய்யுள்களின் பொருளை உணர்ந்து அதன்படி தமது வாழ்வினை
நல்வழிப்படுத்திக்கொள்ளும் ஓர் ஆரிய சீடனாலேயே இந்தத் துன்பப்பெருங்கடலான பிறப்பு இறப்பிலிருந்து மீண்டு
உன்னத மோட்சத்தினை உறுதி செய்ய முடியும். ஒரு சமயம் சஹம்பதீ எனும் மகா பிரம்மராஜன் பாக்கியமுள்ள
பகவான் முன் தோன்றி பாக்கியமுள்ள புத்த பகவானையும், பகவானது உத்தம தர்மத்தினையும், பகவானது ஆரிய
சங்கையரையும் புகழ்ந்து சில செய்யுள்களை உரைத்தார். அதன் ஒரு செய்யுளில் இவ்வாறு கூறப்படுகிறது.
”ஏகஸ்மிங் ப்ரஹ்மசரியஸ்மிங் – சஹஸ்ஸங் மச்சு ஹாயினங்”
”ஒரு தம்ம பதத்தில் மாறனை வென்று இருக்கும் ஆயிரம்
அரஹத் தேரர்கள் வீற்றிருக்கிறார்கள்”
(சம்யுக்த நிகாயம் 01)
அந்த உத்தம தம்மபதத்தினை வகைகளின் அடிப்படையில் இங்கு ஒலிவடிவமாக வழங்கியுள்ளோம். தர்மச்சுவையை உணர விரும்புபவர்கள் இந்த தர்மத்தினை செவிசாய்த்து கேட்பீராக!
இரு செய்யுள்களை கொண்ட பகுதி
யமக வர்க்கம், இருபது செய்யுள்களை கொண்டதாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் புத்த பகவான் மொழிந்தருளிய
இரு சோடிகளுடன் கூடிய செய்யுள்களே இப்பகுதியில்
தாமதமின்மை தொடர்பாக மொழிந்த பகுதி
இரண்டாவது வகை ‘அப்பமாத’ வகையாகும். அப்பமாத
என்றால் தாமதமின்மையாகும். அதாவது ஒருவர் குசல
தர்மதங்களை தோற்றுவித்துக் கொள்வதற்கு இருக்க
உள்ளம் தொடர்பாக மொழிந்த பகுதி
மனம் தொடர்பான அபூர்வ விடயங்களை நீங்கள் மூன்றாம்
பகுதிக்குரிய ‘சித்த’ எனும் பிரிவின் மூலம் அறிந்துகொள்ள
முடியும். இது பதினொரு செய்யுள்களைக் கொண்டது.
மலர்களை உவமைப்படுத்தி மொழிந்த பகுதி
நான்காவது பகுதி ‘புஷ்ப’ வகையாகும். பூக்களை
உவமைப்படுத்தி பகவான் மொழிந்தருளிய பதினாறு
செய்யுள்களை தர்மச்சுவை நனிச்சொட்ட சொட்ட கேட்கும்
அஞ்ஞான பாலன் தொடர்பாக மொழிந்த பகுதி
அடுத்தது ‘பால’ வகையாகும். இங்கு பாலகன் எனக்
குறிப்பிடப்படுவது சிறு குழந்தையை அல்ல. பகவானது
தர்மத்தில் பாலகன் எனக்கூறப்படுபவன்,
பண்டிதன் தொடர்பாக மொழிந்த பகுதி
மகா அரஹத் தேரர்கள் இந்த கீழ்த்தரமான பால குணம்
கொண்டவர்களை பற்றி கூறி முடித்த பின்னர் இடம்பெறும்
அடுத்த பகுதியில் மகா உன்னத குணங்களை கொண்ட
அரஹத் உத்தமர்கள் தொடர்பாக மொழிந்த பகுதி
மனக்கிலேசங்களை வேரறுத்த மகா சுந்தர குணங்கள்
கொண்ட உத்தமர்களை பற்றிக் கூறப்படும் பத்துச்
செய்யுள்களைக் கொண்டிருக்கும் ‘அரஹன்தக’
ஆயிரம் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொழிந்த பகுதி
ஆயிரம் என்றவகையில் விடயங்கள் விபரிக்கப்படும்
பதினாறு செய்யுள்கள் கொண்டதே ‘சஹஸ்ஸ’ வகையாகும்.
அதுபோன்று நூறு என்ற எண்ணிக்கை அடிப்படையிலான
பாவங்கள் தொடர்பாக மொழிந்த பகுதி
‘பாவம்’ என்பது விலக்கி வைக்க வேண்டியதொன்றாகும்.
எல்லா பாவங்களில் இருந்தும் நீங்குவதற்காகவே அனைத்து
புத்தர்மார்களும் தர்மத்தினைப் போதித்தார்கள். பாவத்தின்
தண்டனைகள் தொடர்பாக மொழிந்த பகுதி
அடுத்தது ‘தண்ட’ பகுதியாகும். தண்ட என்றால்
தண்டனையாகும். துன்புறுத்தப் பயன்படுத்தும் கம்பு, கட்டை
என்பவையும் தண்ட என்றே அழைக்கப்படும். ஞானமற்ற