அன்புள்ள அம்மா
பிக்குகளே! பிரம்மராஜர்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். முதல் ஆசான்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். கண்கண்ட தெய்வங்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். தானங்களை ஏற்க தகுதியுடைய உத்தமர்கள் என்பதுவும் பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். அதற்கு காரணம் என்ன? பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு மிகவும் உபகாரம் செய்தோராவர். பிள்ளைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களை போசித்தார்கள். இவ்வுலகின்
நன்மை தீமைகளை சுட்டிக்காட்டினார்கள்.
பிள்ளைகளின் பூஜைகளை ஏற்க தகுதியுடைய பெற்றோர், தம் பிள்ளைகள் மீது மிகவும் அனுதாபம் கொண்டவர்களே. ஆகையால் அறிவுள்ள பிள்ளைகள் தம் பெற்றோர்களை பூஜிப்பார்கள். பணிவிடை செய்வார்கள்.
-புத்த பகவான்-