உங்களுடைய மனதுடன் ஒரு கலந்துரையாடல்

தர்மச்சுவை ஊற்றெடுக்கும்

தம்ம பதம்

  1. யமக வகை

 (இரு செய்யுள்களை கொண்ட பகுதி)

  1. மனோ புப்பங்கமா தம்மா

மனோசெட்டா மனோமயா

மனசா சே பதுட்டேன

பாசதி வா கரோதி வா

தத்தோ நங் துக்கமன்வேதி

சக்கங்வ வஹதோ பதங்.

ஆற்றும் அனைத்து பாவ புண்ணிய செயல்களுக்கும் மனமே

அடிப்படையாக உள்ளது. மனமே முதன்மை பெறுகிறது.

மனதாலேயே அனைத்தும் உருவாகின்றது. ஒருவர்

கொடிய உள்ளத்தை கொண்டு கொடிய வார்த்தைகளை

பிரயோகிப்பாராயின், பாவச்செயல்களை செய்வாராயின் அவரால்

சேகரிக்கப்படும் அந்த பாவமானது எருதினது பின்னே வரும்

வண்டியின் சக்கரத்தை போல் இடைவிடாது துன்பத்தினையே

அளித்த வண்ணம் பின்தொடரும்.

(ஜேதவனராமத்தில் சக்குபால தேரருக்காக போதிக்கப்பட்டதாகும்)

  1. மனோபுப்பங்கமா தம்மா

மனோசெட்டா மனோமயா

மனசா சே பசன்னேன

பாசதி வா கரோதி வா

தத்தோ நங் சுகமன்வேதி

சாயாவ அனபாயினி

ஆற்றும் அனைத்து பாவ புண்ணிய செயல்களுக்கும் மனமே

அடிப்படையாக உள்ளது. மனமே முதன்மை பெறுகிறது மனதாலேயே அனைத்தும் உருவாகின்றது. ஒருவர் நன்மையான

உள்ளத்தை கொண்டு நன்மையை விளைவிக்கும் வார்த்தைகளை

பிரயோகிப்பாராயின், புண்ணிய செயல்களையே செய்வாராயின்

அவரால் சேகரிக்கப்படும் அந்த புண்ணியமானது நீங்காத

நிழலை போல் பின்தொடர்ந்து வந்து இன்பத்தினையே தரும்.

(ஜேதவனராமத்தின் போது மட்டகுண்டலீயை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அக்கொச்சி மங் அவதி மங்

அஜினி மங் அஹாசி மே

யே தங் உபனய்ஹன்தி

வேரங் தெசங் ந சம்மதி

அவன் என்னை இகழ்ந்து தூற்றினான். என்னை அடித்தான்.

என்னை தோற்கடித்தான். எனது பொருளை கவர்ந்து கொண்டான்.

இது போன்ற எண்ணங்களை ஒருவன் சதா சிந்தித்து

கொண்டிருப்பானாயின் அவனுள்ளே இருக்கும் பகைமை ஒரு

போதும் தணியாது.

(ஜேதவனராமத்தில் துல்லதிஸ்ஸ தேரருக்காக போதிக்கப்பட்டதாகும்)

  1. அக்கொச்சி மங் அவதி மங்

அஜினி மங் அஹாசி மே

யே தங் ந உபனய்ஹன்தி

வேரங் தேசூபசம்மதி

அவன் என்னை இகழ்ந்து தூற்றினான். என்னை அடித்தான்.

என்னை தோற்கடித்தான். எனது பொருளை கவர்ந்து கொண்டான்.

இது போன்ற எண்ணங்களை ஒருவர் நினையாமல் குரோதத்தை

தோற்றுவித்து கொள்ளாமல் இருப்பாராயின் அவரது பகைமை

தணிந்துவிடும்.

(ஜேதவனராமத்தில் துல்லதிஸ்ஸ தேரருக்காக போதிக்கப்பட்டதாகும்.)

  1. நஹீ வேரேன வேரானி

சம்மன்தீத குதாசனங்

அவேரேன ச சம்மன்தி

ஏச தம்மோ சனன்தனோ

பகைமையால் பகைமையை அழிக்க முடியாது. பகைமை

கொள்ளாதிருப்பதன் மூலம்தான் பகைமை அழியும். பகைமை

கொள்ளாமலிருக்கும் போது பகைமை அழியும் என்பது தொன்று

தொட்டு வரும் உலக நியதியாகும்.

(ஜேதவனராமத்தில் ஒரு அரக்கியை முன்னிட்டு போதிக்கப்பட்டதாகும்)

  1. பரே ச ந விஜானன்தி

மயமெத்த யமாமஸே

யே ச தத்த விஜானன்தி

ததோ சம்மன்தி மேதகா.

இவ்வாறாக கலகம் செய்து கொண்டிருந்தால் நாம் தான்

அழிவுறுவோம், என்பதனை கலகம் செய்கின்றவர்கள்

உணரமாட்டார்கள். ஆனால் அவர்கள், இவ்வாறாக கலகம்

செய்வதால் நாம் அழிவுறுவோம் என்பதனை உணர்வார்களாயின்

அதன் காரணமாக அந்த கலகங்கள் தணிந்துவிடும்.

(கோசம்பி நகரின் போது கலகம் செய்துகொண்ட

சில பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுபானுபஸ்ஸிங் விஹரன்தங்

இந்திரியேசு அசங்வுதங்

போஜனம்ஹி அமத்தஞ்ஞ{ங்

குசீதங் ஹீன வீரியங்

தங் வே பஸஹதி மாரோ

வாதோ ருக்கங்வ துப்பலங்

தன் மனம் குழம்பிப்போகும் வண்ணம் எண்ணங்களுக்கு

இடமளித்தால் கண், காது, நாசி, நாவு, உடல், மனம் எனும்

புலன்களை அடக்கிக் கொள்ளாவிட்டால், உணவு உண்பதன்

உண்மையான அர்த்தம் என்னவென்பதனையும் அறியாவிட்டால்,

அவன் வீரியமற்ற சோம்பேறியாவான். மகா சூறாவளிக்கு

உட்பட்டதால் வேரறுந்த மரத்தை போன்று அவன் மாரனுக்கு

அடிபணிவான்.

(சேதவ்ய நகரின்போது சூளகால மஹாகால எனும்

இரு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அசுபானுபஸ்ஸிங் விஹரன்தங்

இந்திரியேசு சுசங்வுதங்

போஜனம்ஹி ச மத்தஞ்ஞ{ங்

சத்தங் ஆரத்த வீரியங்

தங் வே நப்பசஹதி மாரோ

வாதோ சேலங்வ பப்பதங்

ஒருவர், காமத்தின் மீதான மோகம் அழிந்துபோகும் வண்ணம்

அசுபமானவற்றை அசுபமானவையாகவே பார்ப்பாராயின்,

கண், காது, நாசி, நாவு, உடல், மனம் என்பவற்றை

கட்டுப்படுத்திக்கொள்வாராயின், உணவருந்துவதன் உண்மையான

அர்த்தத்தை அறிந்தவராயின், அவர் சத்தா* கொண்டவராவார்.

உன்னத எண்சீர் வழியில்** பயணிக்கும் துவங்கப்பட்ட வீரியம்

உடைய அவரை எவ்வளவு பெரிய சூறாவளி காற்று வீசினாலும்

அசையாது நிற்கும் மகா பாறையை போன்று மாரனால்

அசைக்கக்கூட முடியாது.

(சாவத்திய நகரில் சூளகால மகாகால என்போருக்காக போதிக்கப்பட்டது.).

  1. அனிக்கசாவோ காசாவங்

யோ வத்தங் பரிதஹெஸ்ஸதி

அபேதோ தமஸச்சேன

ந சோ காசாவமரஹதி

எவரேனும் ஒருவர் தம் மனதில், கிலேச கறைகளை கொண்டு

இந்த சீவரத்தை தரித்துக்கொண்டிருப்பாராயின், புலனடக்கம்

இல்லாத, உண்மையை பேசாத அந்த நபர் அரஹத் பதாகையான

இந்த சீவரத்தை (பிக்குமார் அணியும் துணி) தரிப்பதற்கு எவ்வித

தகுதியும் இல்லாதவராவார்.

(ராஜகிரிஹத்தின் தேவதத்தனுக்காக மொழியப்பட்டது)

*. மும்மணிகள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய பக்தி

**. மோட்சத்தினை அடையும் ஒரே வழி என பு.ப மொழிந்த பாதை. மேலதிக

விளக்கங்களுக்கு பத விளக்கத்தினை காண்க

  1. யோ ச வன்த கஸாவஸ்ஸ

சீலேசு சுசமாஹிதோ

உபேதோ தமசச்சேன

ச வே காசாவமரஹதி

சீவரத்தை தரித்திருப்பவர் கிலேச கறைகளை அழித்தவராயின்,

ஒழுக்கமிக்கவராயின், உளச்சமாதி மிக்கவராயின், புலனடக்கம்

கொண்டவராயின், உண்மையை மாத்திரமே பேசுபவராயின்,

உண்மையிலேயே அவர்தான் இந்த சீவரத்தை தரிக்க

தகுதியானவராவார்.

(ராஜகிருகத்தில் தேவதத்தனுக்காக மொழியப்பட்டது)

  1. அசாரே சாரமதினோ

சாரேசாஸாரதஸ்ஸினோ

தே சாரங் நாதிகச்சன்தி

மிச்சா சங்கப்ப கோசரா

இந்த உலகில் அர்த்தமற்ற பல விடயங்கள் இருக்கின்றன.

சிலருக்கு அவை அர்த்தம் நிரம்பியதாகவே தென்படும். சீலம்,

சமாதி, ஞானம் எனும் அர்த்தம் செறிந்தவற்றை அவர்கள்

அர்த்தமற்ற வீணான விடயங்களாகவே பார்ப்பார்கள். மூட

கருத்துக்களுக்கு அவர்கள் இரையாகியிருப்பார்கள். அவர்களுக்கு

அர்த்தம் நிரம்பியவை கிடைக்காது.

(வேலுவனராமத்தின்போது சஞ்சய பரிப்பிராஜனை நோக்கி மொழிந்தது)

  1. சாரங் ச சாரதோ ஞத்வா

அசாரங் ச அசாரதோ

தே சாரங் அதிகச்சன்தி

சம்மா சங்கப்ப கோச்சரா

சம்மா திட்டியினால் (நற்காட்சியினால்) சம்மா சங்ல்ப்பத்தினை

(நற்சிந்தனையை) உருவாக்கிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் சீலம், சமாதி, ஞானம் எனும் அர்த்தம் நிறம்பியவற்றை

அர்த்தம் நிரம்பியதாகவே அறிவார்கள். அர்த்தமற்றவற்றை அர்த்தமில்லாதன என்பதனையும் அறிவார்கள். எனவே அவர்கள்

துக்கமற்ற மோட்சத்தினை அடைவார்கள்.

(வேலுவனராமத்தின்போது சஞ்சய பரிப்பிராஜனை நோக்கி மொழிந்தது)

  1. யதாகாரங் துச்சன்னங்

வுட்டி சமதிவிஜ்ஜதி

ஏவங் அபாவிதங் சித்தங்

ராகோ சமதிவிஜ்ஜதி

ஒரு வீட்டினது கூறை பிழையான முறையில் அமைந்திருந்தால்

மழை பெய்யும்போது அந்த கூரையினூடாக மழைநீர் வீட்டினுள்ளே

வரும். சமத விபஸ்ஸனா என்பவற்றினால் பாதுகாக்கப்படாத

மனமும் அப்படித்தான். அந்த மனதினுள் ஆசை உட்புகும்.

(ஜேதவனராமத்தின்போது நந்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யதாகாரங் சுச்சன்னங்

வுட்டி ந சமதிவிஜ்ஜதி

ஏவங் சுபாவிதங் சித்தங்

ராகோ ந சமதிவிஜ்ஜதி

வீட்டினது கூறை முறையாக அமைந்திருந்தால் மழை நீர்

வீட்டினுள் வராது. சமத விபஸ்ஸனா தியானங்கள் மூலம் விருத்தி

செய்துகொண்ட மனமும் அப்படித்தான். அந்த மனதினுள்

ஆசை உட்புகாது.

(ஜேதவனராமத்தின்போது நந்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. இத சோச்சதி பெச்ச சோச்சதி

பாபகாரீ உபயத்த சோச்சதி

ஸோ சோச்சதி ஸோ விஹஞ்ஞதி

திஸ்வா கம்ம கிலிட்டமத்தனோ

பாவம் செய்தவன் இவ்வுலகிலும் சோகமடைவான். மறுவுலகிலும்

சோகமடைவான். இவ்வுலகம், மறுவுலகம் எனும் இரு உலகங்களிலும் சோகப்படுவான். தான் செய்த அகுசல*

கர்மங்களை கண்டு அவன் விசனமடைவான். துன்புறுவான்.

(ஜேதவனராமத்தின்போது சுந்த எனும் பன்றி

வேடனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. இத மோததி பெச்ச மோததி

கதபுஞ்ஞோ உபயத்த மோததி,

ஸோ மோததி ஸோ பமோததி

திஸ்வா கம்மவிசுத்தி மத்தனோ

புண்ணியம் செய்தவர் இவ்வுலகிலும் சந்தோஷமடைவார்.

மறுவுலகிலும் சந்தோஷமடைவார். அவர் இவ்வுலகம், மறுவுலகம்

எனும் இரு உலகங்களிலும் இன்புறுவார். தான் செய்த குசல**

கர்மங்களை கண்டு அவர் இன்புறுவார். பூரிப்படைவார்.

(ஜேதவனராமத்தின்போது தம்மிக எனும்

உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. இத தப்பதி பெச்ச தப்பதி

பாபகாரீ உபயத்த தப்பதி

பாபங் மே கதன்தி தப்பதி

பிய்யோ தப்பதி துக்கதிங் கதோ

பாவம் செய்தவனே இம்மையிலும் வருந்துவான். மறுமையிலும்

வருந்துவான். அவன் இருலோகங்களிலும் வருந்துவான். ‘ஐயோ!

நான் பாவங்கள் செய்தேனே!0என வருந்துவான். நரகத்தில் பிறந்த

பின்னர் அவன் மேலும் வருந்துவான்.

(தேவதத்தனுக்காக ஜேதவனராமத்தின் போது போதிக்கப்பட்டதாகும்)

*.பேராசை, கோபம், அறியாமை என்பனவற்றால், சிந்தனைய அடிப்படையாகக்

கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன அகுசலம் எனப்படும்.

**. நிராசை, கோபமின்மை, நல்லறிவு என்பனவற்றால், சிந்தனையை

அடிப்படையாகக் கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன

குசலம் எனப்படும்.ழூ.பேராசை, கோபம், அறியாமை என்பனவற்றால், சிந்தனைய அடிப்படையாகக்

கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன அகுசலம் எனப்படும்.

  1. இத நந்ததி பெச்ச நந்ததி

கதபுஞ்ஞோ உபயத்த நந்தத

புஞ்ஞங் மே கதன்தி நந்ததி

பிய்யோ நந்ததி சுக்கதிங் கதோ

நன்றாக புண்ணியங்களை செய்தவர்தான் இம்மையிலும்

இன்புறுவார். மறுமையில் இன்புறுவார். அவர் ஈருலோகங்களிலும்

இன்புறுவார். ஷநான் புண்ணியங்களை செய்துகொண்டேன்0 என

இன்புறுவார். சுவர்க்கத்தில் பிறந்த பின்னர் மேலும் இன்புறுவார்.

(ஜேதவனராமத்தின்போது சுமணா எனும் அரசகுமரியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பஹூம்பி சே சஹிதங் பாசமானோ

ந தக்கரோ ஹோதி நரோ பமத்தோ

கோபோவ காவோ கணயங் பரேசங்

ந பாகவா சாமஞ்ஞஸ்ஸ ஹோதி

தர்மத்தில் ஈடுபட தாமதமாகியவர் ஏனையோருக்கு எவ்வளவுதான்

தர்மத்தை போதித்தாலும், தான் அந்த தர்மத்தை பின்பற்றமாட்டார்.

அவர் பிறருக்கு உரித்தான மாட்டுத்தொழுவத்தை

பார்த்துக்கொள்ளும் ஒரு மேய்ப்பவனை போன்றவராவார். தன்

வாழ்வினுள் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஞானப்பேறுகளுக்கு

அவர் உரிமையாளராக மாட்டார்.

(ஜேதவனராமத்தின்போது தோழமைகொண்ட

இரு பிக்குகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அப்பம்பி சே சஹிதங் பாசமானோ

தம்மஸ்ஸ ஹோதி அனுதம்மசாரி

ராகங் ச தோசங் ச பஹாய மோஹங்

சம்மப்பஜானோ சுவிமுத்த சித்தோ

அனுபாதியானோ இத வா ஹுரங் வா

ச பாகவா சாமஞ்ஞஸ்ஸ ஹோதி

தர்மத்தை பின்பற்றும் ஒருவர், தர்மத்தை சிறிதளவு போதிக்கும்

ஒருவராகலாம். ஆனால் அவர் அந்த தர்மத்தில் நிலைத்திருந்து ஆசை, கோபம், அறியாமை என்பன நீக்கிக்கொள்வார். தர்ம

உய்த்துணர்வின் மூலம் அனைத்து துக்கங்களில் இருந்தும் நீங்கிய

ஒரு மனதை ஏற்படுத்திக்கொள்வார். இந்த உலகத்திலுள்ள,

பரலோகத்திலுள்ள எதன் மீதும் அவர் பிணைந்துபோக மாட்டார்.

தன் துறவுவாழ்வின் உத்தம ஞானப்பேற்று நிலைகளின்

உரிமையாளராவது இவ்வாறான பிக்குவே.

(ஜேதவனராமத்தின்போது தோழமை கொண்ட

இரு பிக்குகளை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(இரண்டு செய்யுள்களை கொண்ட யமக பகுதி முற்றும்)

02.அப்பமாத வகை

தாமதமின்மை தொடர்பாக மொழிந்த பகுதி

  1. அப்பமாதோ அமதபதங்

பமாதோ மச்சுனோ பதங்

அப்பமத்தா ந மீயன்தி

யே பமத்தா யதா மதா

தாமதமின்றி சீல, சமாதி, ஞானம் என்பன விருத்தி செய்பவர்

மோட்சத்தை அடைவார். காம சுகத்தில் திளைத்து

தாமதமாகுபவருக்கு மீண்டும் மீண்டும் கிடைப்பது மரணமே.

தாமதமின்றி தர்மத்தை பின்பற்றுவோர்கள் இறவாத நிலையை

(நிர்வாண மோட்சத்தை) அடைவார்கள். தாமதமாகுபவர்கள்

வாழ்ந்தாலும் பிணங்களை போன்றே வாழ்கிறார்கள்.

  1. ஏதங் விசேசதோ ஞத்வா

அப்பமாதம்ஹி பண்டிதா

அப்பமாதோ பமோதன்தி

அரியானங் கோசரோ ரதா

தாமதமின்றி தர்மத்தை பின்பற்றும் ஞானமுள்ளவர்கள் தாமதம்

மற்றும் தாமதமின்மையின் வேறுபாட்டினை நன்கு அறிவார்கள்.

எனவே அவர்கள் ஆரிய உத்தமர்களின் தங்குமிடமான போதி

அங்க தர்மங்களின் மீது விருப்பங்கொள்கிறார்கள். தாமதமின்மை

எனும் நற்குணத்தை எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.

  1. தே ஜாயினோ சாததிகா

நிச்சங் தழ்ஹபரக்கமா

புஸன்தி தீரா நிப்பானங்

யோகக்கேமங் அனுத்தரங்

அந்த ஞானமுள்ள ஆரிய சீடர்கள் எந்நேரமும் தியான

நிலைகளை மேம்படுத்துவார்கள். எந்நேரமும் பலத்த வீரியத்துடன்

தர்மத்தில் ஈடுபடுவார்கள். எனவே அனைத்து பவங்களுக்குமான

(விளைவு தரும் கர்மங்களுக்குமான) பிணைப்புக்களில் இருந்து

விடுதலையடைந்து உன்னதமான மோட்சத்தினை உறுதி

செய்வார்கள்.

  1. உட்டானவதோ சதிமதோ

சுசிகம்மஸ்ஸ நிசம்மகாரினோ

சஞ்ஞதஸ்ஸ ச தம்மஜீவினோ

அப்பமத்தஸ்ஸ யசோபிவட்டதி

ஒருவரிடம் துவங்கப்பட்ட வீரியம் இருக்குமாயின், நல்ல

சுயவுணர்வு இருக்குமாயின், அறிவினால் ஆராய்ந்து செயற்படும்

தன்மை இருக்கமாயின், புலனடக்கம் இருக்குமாயின், தார்மீகமான

வாழ்வை வாழ்வாராயின் அந்த தாமதமின்றிய உத்தமரின் கீர்த்தி

உயர்வாக பரவும்.

(வேலுவனத்தின்போது கும்பகோசனுக்காக போதிக்கப்பட்டது)

  1. உட்டானேனப்பமாதேன

சஞ்ஞமேன தமேன ச

தீபங் கயிராத மேதாவி

யங் ஓகோ நாபிகீரதி

ஞானமுள்ள ஆரிய சீடன் துவங்கப்பட்ட வீரியத்துடன்

தாமதமின்மையுடன் இருப்பார். கட்டுப்பாடுடையவராவார். தன்னை

நன்கு அடக்கிக்கொள்வார். கிலேச வௌ;ளத்தினால் ஒருபோதும்

மூழ்காத மோட்சம் எனும் தீவினை அவர் அதன் மூலமே

உருவாக்கிக்கொள்வார்.

(வேலுவனத்தின்போது சுள்ள பந்தக தேரருக்காக போதிக்கப்பட்டது)

  1. பமாதமனுயுஞ்ஜன்தி

பாலா தும்மேதினோ ஜனா

அப்பமாதன் ச மேதாவி

தனங் செட்டங்வ ரக்கதி

ஞானமற்ற பால குணம்கொண்ட மூட மக்கள் காம சுகத்தில்

திளைத்து தாமதத்தில் ஒட்டிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால்

ஞானமுள்ளவர்கள் இந்த தாமதமின்மை எனும் குணத்தை

தன்னிடமிருக்கும் மகா செல்வத்தை பாதுகாப்பதை போன்று

பாதுகாத்துக்கொள்வார்.

(ஜேதவனராமத்தினபோது ஒரு மூகூர்த்த விழாவினை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மா பமாதமனுயுஞ்ஜேத

மா காமரதிசன்தவங்

அப்பமத்தோ ஹி ஜாயன்தோ

பப்போதி விபுலங் சுகங்

(பல்வேறு கூத்துக்களினால் தாமதமாகும் சாதாரண மக்களை

போன்று) தாமதத்தினை விரும்பி வாழ வேண்டாம். இந்த

காமசுகத்தை விரும்ப வேண்டாம். காமத்தினோடு ஒன்றித்து வாழ

வேண்டாம். தாமதமின்றி தர்மத்தை பின்பற்றினால், தியானங்கள்

செய்தால் மகா சுகத்தை அடைய முடியும்.

(ஜேதவனராமத்தின்போது கேலிக்கூத்துக்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பமாதங் அப்பமாதேன

யதா நூததி பண்டிதோ

பஞ்ஞா பாசாதமாருய்ஹ

அசோகோ சோகினிங் பஜங்

பப்பதட்டோவ பும்மட்டே

தீரொ பாலே அவெக்கத

ஞானமுள்ள ஆரிய சீடன் தர்மத்தில் ஈடுபடவுள்ள தாமதத்தினை

தாமதமின்மையால் அழிப்பார். அப்போது அவர் ஞானம்

எனும் மாளிகைக்குள் பிரவேசிப்பார். மலை உச்சியில் ஏறிய

ஒருவர் கீழிருக்கும் மக்களை காண்பதை போன்று ஞானமெனும்

மாளிகையில் தான் சோகமற்று இருந்துகொண்டு சோகமடையும்

மக்களை காண்பார்.

(ஜேதவனராமத்தின்போது மகா காசியப்ப தேரருக்காக போதிக்கப்பட்டதாகும்)

  1. அப்பமத்தோ பமத்தேசு

சுத்தேசு பஹுஜாகரோ

அபலஸ்ஸங்வ சீகஸ்ஸோ

ஹித்வா யாதி சுமேதசோ

சுந்தரமான ஞானத்தினை உடைய முனிவர், தர்மத்தை

பின்பற்ற தாமதமாகும் மக்களின் மத்தியில் தாமதமாகாமல்

இருப்பார். நன்றாக உறங்கும் மக்களின் மத்தியில் உறங்காமல்

தியானம் செய்வார். அவர் பலவீனமான குதிரையை வென்று

முன்னேரிச்செல்லும் சக்திவாய்ந்த குதிரையை போன்று அந்த

மோட்சத்தினை உறுதி செய்வார்.

(ஜேதவனராமத்தின்போது இரு பிக்குமார்களுக்காக போதிக்கப்பட்டது)

  1. அப்பமாதேன மகவா

தேவானங் செடடதங் கதோ

அப்பமாதங் பஸங்ஸன்தி

பமாதோ கரஹிதோ சதா

அந்த தேவேந்திரன் மனிதனாக பூவுலகில் வாழும்போது

தாமதமின்றி நிறைய புண்ணியங்களை செய்துகொண்டதால்தான்

தேவர்களின் மத்தியில் உன்னத நிலையை அடைந்தார். புத்தர்கள்

தாமதமின்மையை வருணித்து பேசுவார்கள். தர்மத்தினை பின்பற்ற

தாமதமாகுதல் என்பது எந்நாளும் நிந்தனைக்குட்படுவதாகும்.

(வைசாலி நகரின்போது தேவேந்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அப்பமாதரதோ பிக்கு

பமாதே பயதஸ்ஸிவா

சங்யோஜனங் அனுங் தூலங்

டஹங் அக்கீவ கச்சதி

ஒரு பிக்கு தாமதமின்றி தர்மத்தில் ஈடுபடுவாராயின், தர்மத்தில்

ஈடுபடுவதற்கு தாமதிப்பதன் அபாயத்தை உணர்வாராயின்,

அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறும் தீயை போன்று

அவர் அனைத்து பிணைப்புக்களையும் அழித்துக்கொண்டு அந்த

மோட்சத்தை நோக்கியே செல்வார்.

(ஜேதவனராமத்தின்போது ஒரு பிக்குவை முன்னிட்டு போதிக்கப்பட்டது)

  1. அப்பமாதரதோ பிக்கு

பமாதே பயதஸ்ஸீ வா

அபப்போ பரிஹாணாய

நிப்பானஸ்ஸேவ சன்திகே.

பிக்கு தாமதமின்றி தர்மத்தில் ஈடுபடுவாராயின், தர்மத்தில்

ஈடுபடுவதற்கு தாமதிப்பதன் அபாயத்தை உணர்வாராயின், அவர்

ஒருபோதும் இழிநிலைக்கு உட்படமாட்டார். அந்த மோட்சத்தின்

அருகிலேயே அவர் இருப்பார்.

சாது! சாது!! சாது!!!

(தாமதமின்மை தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

  1. சித்த வகை

(மனம் தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. பந்தனங் சபலங் சித்தங்

துரக்கங் துன்னிவாரயங்

உஜுங் கரோதி மேதாவி

உசுகாரோ வ தேஜனங்

மனம் என்பது ஒவ்வொரு எண்ணங்களினாலும் சஞ்சலமடைந்து

கொண்டிருப்பதாகும். இந்த மனதை பாதுகாப்பது மிகவும்

கடினமாகும். தவறிழைப்பதிலிருந்து காத்துக்கொள்வதும் மிகவும்

கடினம். ஆனால் தர்மத்தை பின்பற்றும் ஞானமுள்ள ஒருவர்,

வளைந்துள்ள ஒரு அம்பை நேராக்கும் அம்பு செய்வோனை

போல் இந்த மனதை தர்மத்தின் மூலம் சீராக்கி;க்கொள்வார்.

(வாலிகா பர்வதத்தில் மேகிய தேரருக்காக போதிக்கப்பட்டது)

  1. வாரிஜோவ தலே கித்தோ

ஓகமோகத உப்பதோ

பரிபந்ததிதங் சித்தங்

மாரதெய்யங் பஹாதவே

தரையிலிட்ட மீன் துடி துடிப்பதை போன்று இந்த மனம்

ஒவ்வொரு எண்ணங்களினாலும் துடித்துக்கொண்டே இருக்கிறது.

இம்மாதிரியான சஞ்சலமடையும் மனதுடன் இருப்பதால், நன்கு

திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ள பாவமிகுந்த மாரனது இந்த

பிணைப்பிலிருந்து மீள வேண்டும்.

(வாலிகா பர்வதத்தில் மேகிய தேரருக்காக போதிக்கப்பட்டது)

  1. துன்னிக்கஹஸ்ஸ லஹுனோ

யத்த காம நிபாதினோ

சித்தஸ்ஸ தமதோ சாது

சித்தங் தன்தங் சுகாவஹங்

இந்த மனதினை நிந்தனை செய்து கட்டுப்படுத்துவது

கடினமானதாகும். ஒரு நொடியிலேயே மாறிவிடும். தன் இஷ்டப்படி

தான் ஆசைபடுவதன் பின்னாலேயே இந்த மனம் அலைந்து

கொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு மனதினை கட்டுப்படுத்துவது

எவ்வளவு சிறந்த விடயம்? நன்றாக பாதுகாத்துக்கொள்ளும்

மனதினால் பெரும் சுகத்தினை பெறலாம்.

  1. சுதுத்தசங் சுனிபுனங்

யத்த காம நிபாதினங்

சித்தங் ரக்கேத மேதாவி

சித்தங் குத்தங் சுகாவஹங்

மனதின் உண்மையான நிலையை அறிந்து கொள்வது

மிகவும் கடினமானதாகும். அதேபோல் இந்த உள்ளத்தின்

செயற்பாடு மிக மிக நுண்ணியமானதாகும். தன் இஷ்டப்படி

தான் ஆசைபடுவதன் பின்னாலேயே இந்த மனம் அலைந்து

கொண்டிருக்கிறது. ஞானமுள்ள ஒருவர் தான் இந்த மனதினை

தவறான பாதைக்கு செல்லாது பாதுகாத்துக்கொள்வார். நன்றாக

பாதுகாத்துக்கொள்ளும் மனதினால் பெரும் சுகத்தினை பெறலாம்.

(சாவத்தியத்தில் ஒரு பிக்குவை முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. தூரங்கமங் ஏகசரங்

அசரீரங் குஹாசயங்

யே சித்தங் சஞ்ஞமெஸ்ஸன்தி

மொக்கன்தி மாரபந்தனா

இந்த மனம் நீண்ட பயணங்கள் செல்லும். ஆனால்

தனிமையாகவே பயணிக்கும். மனதிற்கு உடம்பில்லை. ஆனால்

இந்த மனம் சரீரம் எனும் குகையினுள்ளே வசிக்கிறது. எவரேனும் இம்மாதிரியான மனதை அடக்கிக்கொள்வாராயின் அவரால்

மாரனது பிணைப்பிலிருந்து மீளலாம்.

(சாவத்திய நகரின் போது பாகினெய்ய சங்கரக்கித

தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அனவட்டித சித்தஸ்ஸ

சத்தம்மங் அவிஜானதோ

பரிப்லவ பசாதஸ்ஸ

பஞ்ஞா ந பரிப+ரதி

ஆசையினால் நனையாத மனம் கொண்டவருக்கு, கோபத்தினால்

பாதிப்படையாத மனம் கொண்ட ஒருவருக்கு, பாவ புண்ணியம்

எனும் இரண்டையும் இல்லாமல் செய்து கொண்டவருக்கு,

உறங்காமல் தியானம் செய்பவருக்கு எவ்வித அச்சமுமில்லை.

  1. அனவஸ்ஸுத சித்தஸ்ஸ

அனன்வாஹத சேதசோ

புஞ்ஞபாப பஹீனஸ்ஸ

நத்தி ஜாகரதோ பயங்

ஆசையினால் ஈரமாகாது, கோபத்தின் தாக்குதல்களுக்கு

உட்படாது, பாவ புண்ணியம் எனும் இரண்டினையும்

இல்லாதொழித்து, உறங்காமல் தியானம் செய்யும் ஒருவருக்கு

எவ்வித பயமும் இல்லை.

(சாவத்தியத்தில் சித்தஹத்த தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. கும்பூபமங் காயமிமங் விதித்வா

நகரூபமங் சித்தமிதங் டபெத்வா

யோதேத மாரங் பஞ்ஞாவுதேன

ஜிதங் ச ரக்கே அனிவேசனோ சியா

இந்த உடம்பு விரைவாகவே உடைந்து செல்லும் மட்பாண்டத்தை

போன்றது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும். நன்றாக

பாதுகாக்கும் ஒரு நகரத்தை போன்று இந்த மனதை பாதுகாக்க வேண்டும். ஞானம் எனும் ஆயுதத்தினால்தான் மாரனுடன்

போர்புரிய வேண்டும். கிலேச யுத்தத்தை வெற்றிபெற்று மனதை

பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒருபோதும் சன்சாரத்தில்

தங்குமிடம் அமைக்க வேண்டாம்.

  1. அசிரங் வத காயோ

படவிங் அதிசெஸ்ஸதி

ஜுத்தோ அபேத விஞ்ஞாணோ

நிரத்தங்வ கலிங்கரங்

நிச்சயமாகவே இந்த உடல் நீண்டகாலம் நிலைத்திருப்பதல்ல.

விஞ்ஞானம் வெளியேறிய பின்பு பயனற்ற மரக்கட்டையை

போன்று இந்த உடல் மண்ணிற்கு சொந்தமாகிவிடும்.

(சாவத்திய நகரின்போது பூதிகத்ததிஸ்ஸ தேரரை

முன்னிட்டு போதித்தாகும்)

  1. திசோ திசங் யங் தங் கயிரா

வேரி வா பன வேரினங்

மிச்சா பணிஹிதங் சித்தங்

பாபியோ நங் ததோ கரே

ஒரு திருடன் இன்னுமொரு திருடனுக்கு இளைக்கும் தீங்கினை

விட பகையாளி தன் பகையாளிக்கு இளைக்கும் தீங்கினை விட

மூட பார்வைகளை கொண்ட மனம் ஒருவரை பாவியாக்கும்.

(தீங்கு விளைவிக்கும்)

(கோசலநாட்டின்போது நந்த எனும் மந்தை

மேய்ப்பவனுக்காக போதிக்கப்பட்டதாகும்)

  1. ந தங் மாதா பிதா கயிரா

அஞ்ஞேவாபி ச ஞாதகா

சம்மா பணிஹிதங் சித்தங்

செய்யசோ நங் ததோ கரே

நன்மையான தர்மத்தில் இந்த மனதை நிலைநிறுத்தி வைத்தல் எனும் இந்த உத்தம செயற்பாட்டினை தன் தாய் செய்துகொடுக்க

மாட்டாள். தந்தை செய்து கொடுக்கவும் மாட்டார். வேறு

உறவினர்கள் செய்து கொடுக்கவும் மாட்டார்கள். இந்த

செயற்பாட்டினை ஒருவர் செய்து கொள்வதன் மூலமே உத்தம

நிலையை அடைய முடியும்.

சாது! சாது!! சாது!!!

(உள்ளம் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

04.புப்ப வகை

(மலர்களை உவமைப்படுத்தி

மொழிந்த பகுதி)

  1. கோ இமங் பட்டவிங் விச்செஸ்ஸதி

யமலோகங் ச இமங் சதேவகங்

கோ தம்மபதங் சுதேசிதங்

குசலோ புப்பமிவ பச்செஸ்ஸதி

இந்த பூமியை வெற்றிக்கொள்பவர் யார்? நரகத்தினை

வெற்றிக்கொள்பவர் யார்? தேவர்களையுடைய இந்த உலகினை

வெல்பவர் யார்..? திறமையான பூக்காரன் அழகிய மலர்களை

தேர்ந்தெடுத்து பறிப்பதை போன்று முறையாக போதித்த இந்த

தர்மத்தினை உய்த்துணர்ந்து கொள்பவர் யார்?

(சாவத்திய நகரின்போது பூமி தொடர்பாக பேசிக்கொண்டிருந்த ஐந்நூறு தேரர்களை முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. சேகோ பட்டவிங் விச்செஸ்ஸதி

யமலோகங் ச இமங் சதேவகங்

சேகோ தம்மபதங் சுதேசிதங்

குசலோ புப்பமிவ பச்செஸ்ஸதி

உன்னதமான மோட்சப்பாதையில் பயணிப்பவர்தான் இவ்

உலகை வெற்றிக்கொள்வார். நரகத்தினை வெல்பவரும் அவரே.

தேவர்களையும் உள்ளடக்கிய இந்த உலகத்தை வெல்பவரும்

அவரே. திறமையான பூக்காரன் அழகிய மலர்களை தேர்ந்தெடுத்து

கொய்வதை போன்று முழுமையாக போதிக்கப்பட்டுள்ள இந்த

தர்மத்தினை உய்த்துணர்பவரும் அவரே.

(சாவத்திய நகரின்போது பூமி தொடர்பாக பேசிக்கொண்டிருந்த ஐந்நூறு

தேரர்களை முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. பேணூபமங் காயமிமங் விதித்வா

மரீசிதம்மங் அபிசம்புத்தானோ

செத்வான மாரஸ்ஸ பபுப்பகானி

அதஸ்ஸனங் மச்சுராஜஸ்ஸ கச்சே

சாரமற்ற நுரையை போன்றதாகவே இந்த உடலைக்காண

வேண்டும். கானல் நீரின் இயல்பே இந்த வாழ்வில் உள்ளது

என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும். மாரனிடம் இருக்கும்

கிலேச பிணைப்புக்கள் எனும் மலர்மாலைகளை அழித்தொழித்து

மாரனால் ஒருபோதும் காண முடியாத மோட்சத்தை நோக்கியே

செல்ல வேண்டும்.

(சாவத்திய நகரின் கானல் நீரினை முற்கொண்டு தியானம் செய்த

ஒரு பிக்குவை முன்னிட்டு போதித்தது)

  1. புப்பானி ஹேவ பசிநன்தங்

ப்யாசத்த மனசங் நரங்

சுத்தங் காமங் மஹோகோவ

மச்சு ஆதாய கச்சதி

திறமையான பூக்காரன் மலர்களை பறிப்பதற்காக ஒவ்வொரு

செடிகளை நோக்கிச் செல்வதைப்போன்று இந்த காம சுகத்தில்

ஒட்டிக்கொண்டவரும் காமத்தினையே தேடிக்கொண்டு போவார்.

மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது வௌ;ளப்பெருக்கு வந்து

அவர்களை கடலுக்கு அடித்துச்செல்வதைப் போன்று மாரனால்

அவர்கள் நரகத்திற்கே இழுத்துச்செல்லப்படுவார்கள்.

(சாவத்திய நகரின்போது விடூடப சாக்கியனை முன்னிட்டு போதித்தது)

  1. புப்பானி ஹேவ பசிநன்தங்

ப்யாசத்த மனசங் நரங்

அதித்தங் யேவ காமேசு

அன்தகோ குருதே வசங் பூக்காரன் பூக்களை தேடித்தேடி ஊர் ஊராக செல்வதைப்போன்று

இந்த காமத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பவன் காம சுகத்தினையே

தேடியலைவான். அந்த காமத்தினால் எவ்வித திருப்தியையும் அடையாமலே இறுதியில் அவன் மாரனது பிடிக்குள்

அகப்பட்டுக்கொள்வான்.

(சாவத்திய நகரில் பதிபூஜிகா உபாசகியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யதாபி பமரோ புப்பங்

வண்ணகந்தங் அஹேடயங்

பலேதி ரசமாதாய

ஏவங் காமே முனீ சரே

மலரின் சுந்தரத்தினையும் சுகந்தத்தினையும் அழிக்காமலே

தேனீ மலரின் தேனை பருகிச்செல்கிறது. ஆரிய முனிவரும்

கிராமத்தினுள் பிண்டபாதம் செய்வது இப்படியே.

(சாவத்தி நகரின்போது மச்சரிய கோசிய சீமானை முன்னிட்டு போதித்தாகும்)

  1. ந பரேசங் விலோமானி

ந பரேசங் கதாகதங்

அத்தனோவ அவெக்கெய்ய

கதானி அகதானிச

ஏனையோரது பேச்சுக்களின் சரிபிழைகளை பார்க்கத்தேவையில்லை.

ஏனையோர் செய்தவற்றையும் செய்யாதவற்றையும் தேடிப்பார்க்க

தேவையில்லை. தன்னை பற்றி பார்த்துக்கொண்டாலே

போதுமானதாகும். தான் செய்தவற்றையும் செய்யாதவற்றையும்

பார்த்துக்கொண்டால் போதுமானதாகும்.

(சாவத்திய நகரின்போது பாதிக ஆஜீவகனை நோக்கி போதித்தது)

  1. யதாபி ருசிரங் புப்பங்

வண்ணவன்தங் அகந்தகங்

ஏவங் சுபாசிதா வாசா

அபலா ஹோதி அகுப்பதோ

மலர் ஒன்று இருக்கிறது. மிகவும் அழகானது. ஆனால் வாசனை

இல்லை. அதேபோன்றுதான் புத்த பகவான் மொழிந்தருளிய

தர்மம் கூட பின்பற்றாத ஒருவருக்கு பயனில்லாத விடயமாகும்.

(சாவத்திய நகரின்போது சத்தபாணீ உபாசகரை முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. யதாபி ருசிரங் புப்பங்

வண்ணவன்தங் சகந்தகங்

ஏவங் சுபாசிதா வாசா

சபலா ஹோதி பகுப்பதோ

ஒரு மலர் இருக்கிறது. மிகவும் அழகியது. அதேபோன்று நறுமணம்

மிக்கதும் கூட. அதேபோன்று புத்த பகவான் மொழிந்தருளிய

தர்மத்தினை பின்பற்றும் ஒருவரால் அந்த தர்மத்திலிருந்து நல்ல

பெறுபேறுகளை பெற முடியும்.

(சாவத்திய நகரின்போது சத்தபாணீ உபாசகரை முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. யதாபி புப்பராசிம்ஹா

கயிரா மாலாகுணே பஹு

ஏவங் ஜாதேன மச்சேன

கத்தப்பங் குசலங் பஹுங்

திறமையான பூக்காரன் அழகிய மலர்களை சேர்த்து பல அழகிய

மலர்மாலைகளை கட்டுவதைப்போன்று மனித உலகில் பிறந்தவர்

குசலங்களையே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(சாவத்திய நகரின் போது விசாகா உபாசகியை முன்னிட்டு போதித்ததாகும்.)

  1. ந புப்பகந்தோ படிவாதமேதி

ந சந்தனங் தகரமல்லிகா வா

சதங் ச கந்தோ படிவாதமேதி

சப்பா திசா சப்புரிசோ பவாதி.

மலர்களின் வாசனை மேல் வளிமண்டலம் வரை பரவிச்செல்லாது.

சந்தனம், துவரை, மல்லிகை என்பன எவ்வளவு வாசனை

மிகுந்ததானாலும் மேல் வளிமண்டலம் வரை பரவிச்செல்லாது.

ஆனால் சத்புருஷர்களின் நற்குணங்களின் சுகந்தம் மேல்

காற்று மண்டலம் வரை பரவிச்செல்லும். சத்புருஷன் அனைத்து

திசைகளையும் சுகந்தமாக்குவார்.

(சாவத்திய நகரின்போது ஆனந்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சந்தனங் தகரங் வாபி

உப்பலங் அத வஸ்ஸிகி

ஏதேசங் கந்தஜாதானங்

சீல கந்தோ அனுத்தரோ

சந்தனம், துவரை, நீலோற்பலம், மல்லிகை எனும் மலர்களின்

வாசனையை விட குணசீலமிக்கவர்களின் சீலத்தின் சுகந்தம்

எத்தனை நறுமணம் உடையது?

(சாவத்திய நகரின்போது ஆனந்த தேரரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அப்பமத்தோ அயங் கந்தோ

யாயங் தகரசந்தனீ

யோ ச சீலவதங் கந்தோ

வாதி தேவேசு உத்தமோ

சந்தனம், துவரை,மல்லிகை போன்ற மலர்களின் வாசனை

கொஞ்சமே. ஆனால் நற்குணமுள்ளவர்களின் சீல சுகந்தம்

இவற்றிலும் மேலானதாகும். அந்த சுகந்தம் தேவலோகம் வரை

பரவிச்செல்லும்.

(வேலுவனராமத்தில் மகா காசியப்ப தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தேசங் சம்மபண்ண சீலானங்

அப்பமாத விஹாரினங்

சம்மதஞ்ஞா விமுத்தானங்

மாரோ மக்கங் ந விந்ததி

அந்த அரஹத் தேரர்கள் சீலமிக்கவர்கள். தாமதமின்றிதான்

தர்மத்தில் ஈடுபடுவார்கள். ஆரிய சத்திய உய்த்துணர்வின் மூலம்

அனைத்து துக்கங்களிலிருந்தும் நீங்கி இருக்கிறார்கள். அவர்கள்

பயணிக்கும் பாதையினை மாரனால் அறிந்துகொள்ள முடியாது.

(வேலுவனராமத்தில் கோதிக தேரரின் பரிணிப்பானத்தினை

முன்னிட்டு போதித்தாகும்)

  1. யதா சன்காரதானஸ்மிங்

உஜ்ஜிதஸ்மிங் மஹாபதே

பதுமங் தத்த ஜாயேத

சுசிகந்தங் மனோரமங்

பாதையின் ஓரங்களில் குப்பைகளை இடும் பெரிய சேற்றுக்குழிகள்

இருக்கின்றன. இந்த சேற்றில் அழகியதொரு தாமரை மலர்

மலர்கிறது. அந்த தாமரை சுகந்தம் மிக்கது. அழகியது.

  1. ஏவங் சன்காரபூதேசு

அந்தபூதே புதுஜ்ஜனே

அதிரோச்சதி பஞ்ஞாய

சம்மா சம்புத்த சாவகோ

பால குணம் படைத்த இந்த போதுஜ்ஜனரின் உலகமும்

குப்பைகளை இடும் சேற்றுக்குழியை போன்றதாகும். அந்த

சேற்றில் மலர்ந்த தாமரையை போன்றே பாக்கியமுள்ள புத்த

பகவானது சீடனும் ஞானத்தினால் பிரகாசிப்பார்.

(ஜேதவனராமத்தில் கரஹதின்னவை முன்னிட்டு போதித்தாகும்)

சாது! சாது!! சாது!!!

(மலர்களை உவமித்து மொழிந்த பகுதி முற்றிற்று)

  1. பால வகை

(அஞ்ஞான பாலனை முன்னிட்டு

 போதித்த பகுதி)

  1. தீகா ஜாகரதோ ரத்தி

தீகங் சன்தஸ்ஸ யோஜனங்

தீகோ பாலானங் சங்சாரோ

சத்தம்மங் அவிஜானங்

உறக்கமின்றி விழித்திருப்பவருக்கு இரவு மிகவும் நீளமானது.

சோர்வடைந்தவருக்கு ஒரு யோசனை தூரம் மிகவும் நீளமானது.

அதேபோன்றுதான் இந்த தர்மத்தினை உய்த்துணராத பால குணம்

கொண்டவனுக்கு இந்த சன்சாரப் பயணம் மிகவும் நீளமானது.

(ஜேதவனராமத்தில் ஒரு அரச சேவகனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சரங் சே நாதிகச்செய்ய

செய்யங் சதிச மத்தனோ

ஏகசரியங் தழ்ஹங் கயிரா

நத்தி பாலே சஹாயதா

தன்னை விட உயர்ந்த குணப்பண்புகளை கொண்ட ஒருவருடன்

பழக வேண்டும். அவ்வாறில்லாவிடில் தனக்கு சமமான

குணநலன்களை கொண்ட ஒருவருடன் பழக வேண்டும்.

இவ்வாறானவர்களை தேடிக்கொள்ள முடியாவிடில் மிகுந்த

வீரியத்துடன் தனிமையில் வாழ வேண்டும். பாவமிகுந்த

அசத்புருஷர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள கூடாது.

(சாவத்திய நகரின்போது மகா காசியப்ப தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. புத்தா மத்தி தனம்மத்தி

இதி பாலோ விஹஞ்ஞதி

அத்தாஹி அத்தனோ நத்தி

குதோ புத்தா குதோ தனங்

எனக்கு பிள்ளைகள் இருக்கின்றனர். என்னிடம் செல்வம்

இருக்கிறது. என்று அஞ்ஞான மூடன் அதனை நினைத்தே

பெருமிதம் கொள்வான். ஆனால் தனக்கு தானே இல்லாதபோது

பிள்ளைகள் எங்கே? செல்வம் எங்கே?

(சாவத்திய நகரின்போது ஆனந்த சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ பாலோ மஞ்ஞதி பால்யங்

பண்டிதோ வாபி தேன சோ

பாலோ ச பண்டிதமானி

ச வே பாலோதி வுச்சதி

எவரேனும் ஒரு அஞ்ஞான மூடன் தன் அறிவின்மையை

உணர்ந்துக்கொள்வாராயின் அவர் அறிவாளியாகுவதற்கு

காரணமாக அமைவது அந்த விடயமே. ஆனால் அஞ்ஞான

மூடன் தன்னை ஒரு மகா அறிவாளியை போன்று நினைத்துக்

கொண்டிருப்பானாயின் அவனை கண்டிப்பாக மகா மூடன் என்றே

கூற வேண்டும்.

(ஜேதவனராமத்தில் இரு திருடர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யாவஜீவம்பி சே பாலோ

பண்டிதங் பயிருபாசதி

ந சோ தம்மங் விஜானாதி

தப்பீ சூபரசங் யதா

ஒரு அஞ்ஞான மூடன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஞானமுள்ள

பண்டிதருடன் பழகினாலும் கறியின் சுவை அறியாத கரண்டியை

போன்று அவர் தர்மத்தினை உய்த்துணர்ந்துக் கொள்ளமாட்டார்.

(ஜேதவனராமத்தில் உதாய் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. முஹுத்தம்பி சே விஞ்ஞ{

பண்டிதங் பயிருபாசதி

கிப்பங் தம்மங் விஜானாதி

ஜிவ்ஹா சூபரசங் யதா

ஞானமுள்ள ஒருவர் சிறிது நேரத்திற்கேனும் ஞானமுள்ள

ஒருவருடன் பழகினால் கறியின் சுவையறிந்த நாவினை போன்று

அவர் மிகவும் வேகமாக தர்மத்தினை உய்த்துணர்ந்து கொள்வார்.

(ஜேதவனராமத்தில் பாடெய்ய பிக்குமார்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சரன்தி பாலா தும்மேதா

அமித்தேனேவ அத்தனா

கரொன்தா பாபகங் கம்மங்

யங் ஹோதி கடுகப்பலங்

அறிவற்ற அஞ்ஞான மூடன் தனக்கு தானே தீங்கு

விளைவித்துக்கொண்டு வாழ்கிறான். தன்னால் இயன்றளவு

பாவங்களை செய்து கொண்டே வாழ்கிறான். இறுதியில் அவனுக்கு

கொடூர வேதனைகளை அனுபவிக்கவே நேரிடும்.

(வேலுவனராமத்தில் சுப்பபுத்தன் எனும் சிரங்கு நோயாளியை

முன்னிட்டு போதித்தாகும்)

  1. ந தங் கம்மங் கதங் சாது

யங் கத்வா அனுதப்பதி

யஸ்ஸ அஸ்ஸுமுகோ ரோதங்

விபாகங் படிசேவதி

எதேனும் செய்த பின்னர் அது தொடர்பாக பின்வருந்த நேரிடுமாயின்,

கண்ணீர் சிந்திக்கொண்டு அதன் தீய விளைவுகளை அனுபவிக்க

வேண்டுமாயின் அவ்வாறான பாவங்களை செய்யக்கூடாது.

(ஜேதவனராமத்தில் ஒரு விவசாயியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தங் ச கம்மங் கதங் சாது

யங் கத்வா நானுதப்பதி

யஸ்ஸ பதீதோ சுமனோ

விபாகங் படிசேவதி

ஏதேனும் செய்த பின்னர் பின் வருந்த வேண்டியதில்லையாயின்

அதன் புண்ணிய விளைவுகளை இன்பத்தினால் திளைத்த

மனதுடன் அனுபவிக்க நேரிடுமாயின் அவ்வாறான புண்ணியங்களை

செய்துக்கொள்வது எவ்வளவு சிறந்த விடயம்.

(ஜேதவனராமத்தின் போது சுமண எனும் பூக்காரனை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. மதுவா மஞ்ஞதி பாலோ

யாவ பாபங் ந பச்சதி

யதா ச பச்சதி பாபங்

அத பாலோ துக்கங் நிகச்சதி

பாவிக்கு தான் செய்த பாவங்களின் விளைவு தராத வரை செய்யும்

பாவங்கள் தேனை போன்றே அவனுக்கு இனிக்கும். ஆனால்

என்றோ ஒருநாள் அந்த பாவங்கள் கொடிய வகையில் விளைவுகள்

தரும்போதுதான் அஞ்ஞான மூடன் துன்பத்திற்குள்ளாவான்.

(ஜேதவனராமத்தில் நந்த இளைஞனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மாசே மாசே குசக்கேன

பாலோ புஞ்ஜேத போஜனங்

ந சோ சன்கத தம்மானங்

கலங் அக்கதி சோளசிங்

அஞ்ஞான மூடன் தான் கிலேசங்களை அழிப்பதாக நினைத்து

மாதத்திற்கு ஒரு முறை புல் நுனியின் பூசப்பட்ட உணவை

உட்கொண்டாலும் அது தர்மத்தினை உய்த்துணர்ந்து சகல

கிலேசங்களையும் அழித்த அரஹத் தேரரது வாழ்வினை

பதினாறாக பிரித்து அதன் ஒரு பாகத்தை பதினாறாக பிரித்து

வரும் அளவிற்கு கூட பெறுமதியற்றதாகும்.

(ஜேதவனராமத்தில் ஜம்புக ஆஜீவனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந ஹி பாபங் கதங் கம்மங்

சஜ்ஜு கீரங் வ முச்சதி

டஹங் தங் பாலமன்வேதி

பஸ்மச்சன்னோவ பாவகோ

பால் சீக்கிரமாகவே தயிராகிவிடும்தான் ஆனால் ஒருவர் செய்த

பாவத்தின் விளைவு அவரை சீக்கிரமாகவே நாடி வராது.

சாம்பலினுள் புதைந்து இருக்கும் தீயை போல் இருந்து தகுந்த

காலத்தில் அவனை பின்தொடர்ந்து வந்து துன்பத்திற்குள்ளாக்கும்.

(வேலுவனராமத்தில் ஒரு பிரேத ஆத்மாவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யாவதேவ அனத்தாய

ஞத்தங் பாலஸ்ஸ ஜாயதி

ஹன்தி பாலஸ்ஸ சுக்கங்சங்

முத்தமஸ்ஸ விபாதயங்

அசத்புருஷனிடம் ஏதேனும் தொடர்பான கல்வியறிவு

அல்லது திறமை இருப்பின் அது அவனது அழிவிற்கே வழி

வகுக்கும். இறுதியில் அந்த அசத்புருஷன் தன் அறிவையும்

அழித்துக்கொள்வான். நற்குணங்கள் சிறிதளவேனும் இருந்தால்

அதனையும் அழித்துக்கொள்வான். அவன் அழிவை நோக்கியே

பயணிப்பான்.

(வேலுவனராமத்தில் ஒரு பிரேத ஆத்மாவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அசதங் பாவன மிச்செய்ய

புரெக்காரங் ச பிக்குசு

ஆவாசெசு ச இஸ்ஸரியங்

பூஜா பரகுலேசு ச

அஞ்ஞான பிக்கு விரும்புவதெல்லாம் மரியாதைகளையும்,

உபசாரங்களையும் பெற்றுக்கொள்வதற்கே. அவர் பிக்குகளுக்கு

மத்தியில் முதலிடம் பெறுவதற்கே விரும்புவார். எல்லா

இடங்களிலும் முதலிடம் பெறுவதற்கே விரும்புவார். தாயக*

குடும்பங்களில் இருந்தும் மரியாதைகளையும், உபசாரங்களையும்

பெற்றுக்கொள்வதற்கே விரும்புவார்.

*.புத்த பகவானது இல்லற சீடர்கள். பிக்கு பிண்குணீ என்போருக்கு உபசாரம்

செய்வோர்.

  1. மமேவ கதமஞ்ஞன்து

கிஹி பப்பஜிதா உபோ

மமேவ அதிவசா அஸ்ஸு

கிச்சாகிச்சேசு கிஸ்மிசி

இதி பாலஸ்ஸ சன்கப்போ

இச்சா மானோ ச வட்டதி

இல்லறத்தோர்களும் துறவறத்தோர்களும் என்னிடம் மட்டுமே

கேட்டறிந்து கொள்ள வேண்டும். அனைத்து விடயங்களும் என்

அறிவுறுத்தல்களின்படியே செய்ய வேண்டும் என பால குணம்

கொண்டவனே சிந்திப்பான். அதனாலேயே அவனுள் இருக்கும்

பாவ ஆசைகளும், அகம்பாவமும் வளரும்.

(ஜேதவனராமத்தில் சுதம்ம தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அஞ்ஞா ஹி லாப+பனிசா

அஞ்ஞா நிப்பாணகாமினி

ஏவமேதங் அபிஞ்ஞாய

பிக்கு புத்தஸ்ஸ சாவகோ

சக்காரங் நாபினந்தெய்ய

விவேகமனுப்ரூஹயே

இலாபம், உபசாரம், கீர்த்தி, புகழ் என்பன பெறுவதற்கு முயற்சி

செய்வது வேறு செயற்பாடு. மோட்சத்தை உறுதி செய்வது

வேறு ஒரு செயற்பாடு. புத்த பகவானது ஆரிய சீடன் இந்த

வேறுபாட்டினை நன்கு உணர்ந்தே இருப்பார். எனவே அவர்

இலாபம், உபசாரம், கீர்த்தி, புகழ் என்பனவற்றை விரும்பமாட்டார்.

தர்மத்தினை பின்பற்றுவதற்கும், தியானங்கள் செய்வதற்கும்

தேவையான ஓய்வினை பெறவே முயற்சிசெய்வார்.

(ஜேதவனராமத்தில் திஸ்ஸ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(அஞ்ஞான பால குணம் கொண்டவன் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

  1. பண்டித வகை

(ஞானமுள்ள சத்புருஷ* பண்டிதன் தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. நிதீனங்வ பவத்தாரங்

யங் பஸ்ஸே வஜ்ஜதஸ்ஸினங்

நிக்கய்ஹவாதிங் மேதாவிங்

தாதிசங் பண்டிதங் பஜே

தாதிசங் பஜமானஸ்ஸ

செய்யோ ஹோதி ந பாபியோ

பெறுமதியான புதையல் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டும் நல்ல

நண்பனைப்போன்று சத்புருஷ நண்பர் குறைகளை கண்டவுடன்

கருணையை முதற்கொண்டு அறிவுரைகள் செய்து அந்த தவறுகளிலில்

இருந்து மீள்வதற்கு உதவி செய்வார். இவ்வாறான ஞானமுள்ள

சத்புருஷர்களுடனே பழக வேண்டும். அவ்வாறான உத்தமர்களுடன்

பழகுவதால் நன்மையே விளையும். தீமை விளையாது.

(ஜேதவனராமத்தில் இராத தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஓவாதெய்யனுசாசெய்ய

அசப்பா ச நிவாரயே

சதங் ஹி சோ பியோ ஹோதி

அசதங் ஹோதி அப்பியோ

சத்புருஷ நண்பன் தவறுகளில் இருந்து மீள்வதற்காக அறிவுரைகள்

செய்வார். நன்மையானவற்றை பின்பற்ற உதவி செய்வார்.

பாவங்களை செய்யவிடாது தடுப்பார். இவ்வாறான சத்புருஷ

நண்பர்களை ஞானமுள்ளவர்கள் மிகவும் விரும்புவார்கள். ஆனால்

அசத்புருஷர்கள் விரும்பமாட்டார்கள்.

(ஜேதவனராமத்தில் அஸ்ஸஜீ புனப்பசுக எனும் இருவரை முன்னிட்டு போதித்ததாகும்)

* பத விளக்கப் பகுதியினை காண்க

  1. ந பஜே பாபகே மித்தே

ந பஜே புரிசாதமே

பஜேத மித்தே கல்யாணே

பஜேத புரிசுத்தமே

பாவ செயல்களை கொண்ட நண்பர்களுடன் பழக வேண்டாம்.

கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டவர்களுடனும் பழக வேண்டாம்.

சத்புருஷ நண்பர்களுடனேயே பழக வேண்டும். சீலம், சமாதி,

ஞானம் எனும் குணங்கள் கொண்ட உத்தமர்களுடனேயே பழக

வேண்டும்.

(ஜேதவனராமத்தில் சன்ன தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தம்மபீதி சுகங் சேதி

விப்பசன்னேன சேதசா

அரியப்பவேதிதே தம்மே

சதா ரமதி பண்டிதோ

தர்ம உய்த்துணர்வினால் மனதை அமைதியாக்கிக்கொள்ளும்

அறிவுள்ளவர்கள் தர்ம மகிழ்வுடன் சுகமாக வாழ்கின்றனர். அந்த

ஞானமுள்ள ஆரிய சீடன் புத்த பகவான் மொழிந்தருளிய அந்த

ஆரிய தர்மத்தினை எந்நாளும் விரும்புவார்.

(ஜேதவனராமத்தில் மகா கப்பின தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. உதகங் ஹி நயன்தி நெத்திகா

உசுகாரா நமயன்தி தேஜனங்

தாருங் நமயன்தி தச்சகா

அத்தானங் தமயன்தி பண்டிதா

வயலிற்கு நீர் இறைப்பவர்கள் தாம் விரும்பியபடி கால்வாய்களை

அமைத்து நீரை வயலுக்கு கொண்டு செல்வார்கள். கொல்லர்கள்

தத்தமது தேவைக்கேற்ப இரும்பினை செய்துகொள்வார்கள்.

தச்சர்கள் தம் தேவைக்கேற்ப தளபாடங்களை செய்து கொள்கிறார்கள். ஞானமுள்ளவர்களும் அப்படியே தம்மை

தர்மத்தின் வழி அடக்கிக்கொள்வார்கள்.

(ஜேதவனராமத்தில் பண்டித சாமணேர

சுவாமியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சேலோ யதா ஏககனோ

வாதேன ந சமீரதி

ஏவங் நின்தாபசன்சாசு

ந சமிஞ்ஜன்தி பண்டிதா

ஒரு கருங்கற்குன்று எவ்வளவு பலத்த காற்று வீசினாலும்

அசையாமல் இருப்பதை போல் அறிவுள்ள சத்புருஷர்கள் புகழ்ச்சி

மற்றும் இகழ்ச்சியின் முன்பு அசையாமல் இருப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் லகுண்டக பத்திய மகா தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யதாபி ரஹதோ கம்பீரொ

விப்பசன்னோ அனாவிலோ

ஏவங் தம்மானி சுத்வான

விப்பசீதன்தி பண்டிதா

ஆழ்ந்த நடுக்கடலின் நீரானது அசைவற்று, சஞ்சலமற்று

அமைதியாக இருப்பது போல ஞானமுள்ளவர்கள் இந்த

பரிசுத்தமான தர்மத்தை செவிமடுத்து தன் சஞ்சலமான மனதை

அமைதியாக்கி நிரந்தரமாகவே சாந்தமுடையவர்களாகின்றனர்.

(ஜேதவனராமத்தில் காணமாதாவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்பத்த சே சப்புரிசா வஜன்தி

ந காம காமா லபயன்தி சன்தோ

சுகேன புட்டா அத வா துகேன

நோச்சாவசங் பண்டிதா தஸ்ஸயன்தி

சத்புருஷ உத்தமர்கள் எல்லாவற்றின் மீதான ஆசையை  துறந்துவிடுவார்கள். தான் விரும்பிய விரும்பிவற்றை பெற வேண்டும்

எனும் அற்ப ஆசை கொண்டு அவர்கள் ஏமாற்றுப்பேச்சுக்களை

பேசமாட்டார்கள். எனவே சுகம் கிடைத்தாலும் துக்கம் கிடைத்தாலும்

ஞானமுள்ள உத்தமர்கள் அவ் இன்ப துன்பங்களுக்கேற்ப

தன்னிலையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

(ஜேதவனராமத்தில் பிச்சைக்காரர்களுக்கு குறைகூறிய

பிக்குமார்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந அத்தஹேது ந பரஸ்ஸ ஹேது

ந புத்தமிச்சே ந தனங் ந ரட்டங்

ந இச்செய்ய அதம்மேன சமித்திமத்தனோ

ச சீலவா பஞ்ஞவா தம்மிகோ சியா

ஞானமுள்ளவர் தனக்காகவும் பாவம் செய்யமாட்டார்.

பிறருக்காகவும் பாவம் செய்ய மாட்டார். அதார்மீகமாக கிடைக்கும்

பிள்ளைகள், வீடுவாசல், செல்வம் என்பனவற்றை அவர்

விரும்பமாட்டார். சுருங்கக்கூறினால் அதார்மீகமான முறையிலான

முன்னேற்றத்தை அவர் விரும்பமாட்டார். அவர் சீலமிகுந்தவராக

இருப்பார். ஞானமுள்ளவராகவும், தார்மீகமான வாழ்வினை வாழும்

ஒருவராகவும் இருப்பார்.

(ஜேதவனராமத்தில் தம்மிக தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அப்பகா தே மனுஸ்ஸேசு

யே ஜனா பாரகாமினோ

அதாயங் இதரா பஜா

தீரமேவானுதாவதி

இந்த மனிதர்கள் மத்தியில் சன்சாரத்திலிருந்து மீண்டு உன்னத

மோட்சம் எனும் அக்கரையை அடைவது மிகவும் சொற்ப

எண்ணிக்கையானோரே. ஏனைய அனைத்து புதுஜ்ஜனர்களும்*

இந்த சன்சாரத்திலேயே பயணிப்பார்கள். இக்கரைக்கே ஓடி

வருவார்கள்.

(ஜேதவனராமத்தில் தர்மத்தினை கேட்டல் தொடர்பாக

மொழிகையில் போதித்ததாகும்)

* பத விளக்க பகுதியினை காண்க

  1. யே ச கோ சம்மதக்காதே

தம்மே தம்மானுவத்தினோ

தே ஜனா பாரமெஸ்ஸன்தி

மச்சுதெய்யங் சுதுத்தரங்

ததாகதர் ஒருவரால் மிகவும் தூய்மையாக மொழியப்பட்ட

தர்மத்தின்படி எவரேனும் வாழ்வாராயின் அவர்கள் மீள்வதற்கு

மிகவும் கடினமான மாரனது பிடியிலிருந்து தப்பி சன்சாரத்தின்

விடுதலை எனும் உத்தம மோட்சத்தினை நோக்கியே

பயணிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தர்மத்தினை கேட்டல் தொடர்பாக

மொழிகையில் போதித்ததாகும்)

  1. கண்ஹங் தம்மங் விப்பஹாய

சுக்கங் பாவேத பண்டிதோ

ஓகாநோகங் ஆகம்ம

விவேகே யத்த துரமங்

ஞானமுள்ளவர் அகுசலங்களை (தீமைகளை) அழிப்பார்.

அதேபோன்று அவர் குசலங்களையும் (நன்மைகளையும்)

தன்னுள் விருத்தி செய்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர்

அவர் இல்லற வாழ்வினை துறந்து சாசனத்தினுள் நுழைவார்.

அதன் காரணமாக அவருக்கு சாதாரண உலகத்தோர் விரும்பாத,

கடினமான தனிமையான ஓய்வுநேரங்கள் கிடைக்கும்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தத்ராபிரதிமிச்செய்ய

ஹித்வா காமே அகிங்சனோ

பரியோதபெய்ய அத்தானங்

சித்தக்லேசேஹி பண்டிதோ

அந்த தனிமையான ஓய்வினை அவர் மிகவும் விரும்புவார்.

காமத்தினை துறந்து நிக்கிலேச (கிலேசங்கள் அற்ற) வாழ்வினை நோக்கி பயணிக்கும் அந்த ஞானமுள்ளவர் தன் மனதில் உள்ள

அனைத்து கிலேசங்களையும் அழித்து தூய்மையாக்கிக்கொள்வார்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குமாரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யேசங் சம்போதி அக்கேசு

சம்மா சித்தங் சுபாவிதங்

ஆதானபடிநிஸ்ஸக்கே

அனுபாதாய யே ரதா

கீணாசவா ஜுதீமன்தோ

தே லோகே பரிணிப்புதா

எவரேனும் ஒருவரது மனதில் போதியங்க தர்மங்கள் நன்கு

விருத்தியடைந்து இருக்குமாயின் அனைத்து விதமான

பிணைப்புக்களையும் அழித்து உபாதானங்கள் அற்ற

நிர்வாணமோட்சத்தினை உறுதி செய்திருப்பாராயின் ஆஸவங்களை

அழித்த அந்த அரஹத் உத்தமர் ஞானத்தினால் பிரகாசிப்பார்.

அவர்கள்தான் இவ் உலகில் உன்னத பரிநிர்வாணத்தினை

எய்துவார்கள்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(ஞானமுள்ள சத்புருஷனை பற்றி மொழிந்த பகுதி முற்றிற்று)

07.அரஹன்தக வகை

(அரஹத் உத்தமர்களை பற்றி மொழிந்த பகுதி)

  1. கதத்தினோ விசோகஸ்ஸ

விப்பமுத்தஸ்ஸ சப்பதீ

சப்பகன்தப்பஹீணஸ்ஸ

பரிழாஹோ ந விஜ்ஜதி

அரஹத் உத்தமரானவர் பிறவிப்பயணத்தை முடித்தவர்

ஆவார். சோகம் இல்லாமலேயே இருப்பார். அனைத்திலிருந்தும்

முழுமையாக நீங்கியவராகவே இருப்பார். அனைத்துவிதமான

கிலேச கட்டுக்களையும் அழித்தே இருக்கிறார். எனவே அவருள்

எவ்விதமான கிலேச தாகமும் இல்லை.

(ஜீவக மாஞ்சோலையில் ஜீவகனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. உய்யுன்ஜன்தி சதிமன்தோ

ந நிகேதே ரமன்தி தே

ஹங்சாவ பல்லலங் ஹித்வா

ஓகமோகங் ஜஹன்தி தே

அந்த அரஹத் உத்தமர்கள் நால்வகை சதிபட்டான

நிலைகளினுள்ளே தம் விழிப்புணர்வினை நிலைநிறுத்திக்

கொண்டுள்ளனர். சமத விபஸ்ஸனா எனும் தியானங்களிலேயே

தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். நால்வகை தானங்கள்* மீது

ஒட்டிக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர்கள் வசித்திருக்கும்

இடங்களிலிருந்து குளத்தினை விட்டு பறந்து செல்லும்

அன்னத்தினை போன்று எவ்விதமான பற்றுதலும் இன்றி

புறப்படுவார்கள்.

(வேலுவனராமத்தில் மகா காசியப்ப தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

*.சீவரம், பிண்டபாதம், உறையுள், ஔடதம் எனும் நால்வகையாகும்

  1. யேசங் சன்னிசயோ நத்தி

யே பரிஞ்ஞாத போஜனா

சுஞ்ஞதோ அனிமித்தோ ச

விமொக்கோ யஸ்ஸ கொசரோ

ஆகாசேவ சகுன்தானங்

கதி தேசங் துரன்னயா

அந்த அரஹத் உத்தமர்கள் தானங்களை சேகரித்து

வைத்துக்கொள்ள மாட்டார்கள். உட்கொள்ளும் தானத்தின்

யதார்த்தத்தினை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு

சூன்ய சமாபத்தி*, அனிமித்த சமாபத்திழூ மற்றும் மோட்சம்

என்பன மாத்திரமே நோக்கமாக இருக்கும். வானில் பறந்து

செல்லும் பறவைகளின் பயணப்பாதையை கண்டுபிடிக்க முடியாது.

அதேபோன்று அரஹத் உத்தமர்கள் பயணித்த பாதையினையும்

யாராலும் காண முடியாது.

(ஜேதவனராமத்தில் பேல்லட்டிசீச தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸாசவா பரிக்கீணா

ஆஹாரே ச அனிஸ்ஸிதோ

சுஞ்ஞதோ அனிமித்தோ ச

விமொக்கோ யஸ்ஸ கோசரோ

ஆகாசேவ சகுன்தானங்

பதங் தஸ்ஸ துரன்னயங்

அந்த அரஹத் உத்தமர்கள் அனைத்து கிலேசங்களையும்

அழித்தே இருக்கிறார்கள். உட்கொள்ளும் தானம் மீது மனதில்

எவ்வித பற்றும் இல்லை. அவர்களுக்கு சூன்ய சமாபத்தி,

அனிமித்த சமாபத்தி மற்றும் மோட்சம் என்பன மாத்திரமே

நோக்கமாக இருக்கும். வானில் பறந்து செல்லும் பறவைகளின்

பயணப்பாதையை கண்டுபிடிக்க முடியாது. அதேபோன்று அரஹத்

உத்தமர்கள் பயணித்த பாதையினையும் யாராலும் காண

முடியாது.

(வேலுவனராமத்தில் அனுருத்த தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

*.தியான நிலைகளாகும்.

  1. யஸ்ஸின்திரியானி சமதங் கதானி

அஸ்ஸா யதா சாரதினா சுதன்தா

பஹீணமானஸ்ஸ அனாசவஸ்ஸ

தேவாபி தஸ்ஸ பிஹயன்தி தாதினோ

திறமையான சாரதி தன் குதிரைகளை நன்கு

அடக்கிக்கொள்வதைப் போன்று எவரேனும் ஒருவர் தன்

புலன்களை நன்கு அடக்கிக்கொள்வாராயின் அகம்பாவத்தினை

அழித்த, கிலேசங்களை அழித்த, கவலையுறாத மனம் கொண்ட

அந்த அரஹத் தேரரை தேவர்களும் விரும்புவார்கள்.

(பூர்வாராமத்தில் மகா கச்சாயன தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. படவிசமோ நோ விருஜ்ஜதி

இன்தகீலூபமோ தாதி சுப்பதோ

ரஹதோவ அபேதகத்தமோ

சங்சாரா ந பவன்தி தாதினோ

அரஹத் தேரர் யாருடனும் முரண்படமாட்டார். அவர் தரணியை

போன்றவராவார். எண் வகை உலகதர்மங்களினால்*

சஞ்சலமடையமாட்டார்கள். உறுதியான கற்றூனைப்போன்று

நன்மையான ஒழுக்கத்துடன் கூடியவர்கள் சேறில்லாத

குளத்தினைப் போன்றவர்கள். இவ்வாறான அரஹத்

உத்தமர்களுக்கு சன்சாரப்பயணம் என்பது கிடையாது.

  1. சன்தங் தஸ்ஸ மனங் ஹோதி

சன்தா வாசா ச கம்ம ச

சம்மதஞ்ஞா விமுத்தஸ்ஸ

உபசன்தஸ்ஸ தாதினோ

அரஹத் உத்தமர்களிடம் இருப்பது குளிர்ச்சியான அமைதி ததும்பும்

மனமாகும். அவர்களுடைய பேச்சும் மிகவும் இனிமையானதாகவே

இருக்கும். உடலும் தணிந்ததாகவே இருக்கும். உய்த்துணர்வுடன் துக்கங்களிலிருந்து நீங்கிய ஷாந்தமான அரஹத் உத்தமர்கள்

இப்படித்தான்.

(ஜேதவனராமத்தில் மகா திஸ்ஸ தேரரின் சாமணேர சீடரை

முன்னிட்டு போதித்ததாகும்)

*இலாபம் நஷ்டம், யசசு அயசு, சுகம் துக்கம், நிந்தனை புகழ்

  1. அஸ்ஸத்தோ அகதஞ்ஞ{ ச

சந்திச்சேதோ ச யோ நரோ

ஹதாவகாசோ வன்தாசோ

ச வே உத்தம பொரிசோ

எவரேனும் ஒருவர் நம்பிக்கைகளை மீறிச்சென்று மோட்சத்தினை

உறுதி செய்தவராயின் பஞ்ச உபாதானஸ்கந்தங்களுக்கு

நன்றிக்கடன் செலுத்தாவிடில் படிச்சசமுப்பாதத்தின் தொடர்

சங்கிலிகளை உடைத்தெறிவாராயின் பிறக்கக்கூடிய அனைத்து

சந்தர்ப்பங்களையும் அழித்தவராயின் கிலேசங்களை வாந்தி

எடுத்தவராயின் உண்மையில் அவரே உத்தம மனிதர்.

(ஜேதவனராமத்தில் சாரிபுத்த மகா தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. காமே வா யதிவாரஞ்ஞே

நின்னே வா யதி வாதலே

யத்தாரஹன்தோ விஹரன்தி

தஹ் ப+மிங் ராமணெய்யகங்

ஊராகட்டும், வனாந்தரமாகட்டும், சமவெளியாகட்டும்,

அல்லது மலைக்குன்றாகட்டும், அரஹத் உத்தமர்கள்

எங்கு வசித்திருக்கிறார்களோ உண்மையாகவே அவ் இடம்

சுந்தரமானதாகும்.

(ஜேதவனராமத்தில் கதிரவனத்தின் ரேவத மகா தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ரமணீயானி அரஞ்ஞானி

யத்த ந ரமதீ ஜனோ

வீதராகா ரமிஸ்ஸன்தி

ந தே காம கவேசினோ

மகா வனாந்தரம் மிகவும் அழகானது. ஆனால் காம

சுகத்தினை தேடியலையும் உலகத்தோர் அந்த வனங்களை

விரும்பமாட்டார்கள். ஆசையினை முழுமையாக அழித்த மகா

முனிவர்கள் அந்த வனாந்தரங்களை மிகவும் விரும்புவார்கள்.

அவர்கள் காமசுகத்தினை தேடி அலையாததுதான் அதற்கு

காரணம். ஆயிரம் தொடர்பாக மொழிந்த பகுதி

சாது! சாது!! சாது!!!

(அரஹத் தேரர்கள் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

08.சஹஸ்ர வகை

(ஆயிரம் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொழிந்த பகுதி)

  1. சஹஸ்ஸம்பி சே வாசா

அனத்தபத சங்ஹிதா

ஏகங் அத்தபதங் செய்யோ

யங் சுத்வா உபசம்மதி

இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு நன்மை பயக்காத ஆயிரம்

வார்த்தைகளை பேசினாலும் எவ்வித பயனுமில்லை. ஆனால்

அர்த்தம் நிரம்பிய ஒரு சொல்லை கேட்டு ஒருவர் வாழ்வினை

அமைதிப்படுத்திக் கொள்வாராயி;ன் அந்த ஒரு வார்த்தைதான்

உத்தமமாகும்.

(வேலுவனராமத்தில் தம்பதாடிகனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சஹஸ்ஸமபி சே காதா

அனத்தபத சங்ஹிதா

ஏகங் காதாபதங் செய்யோ

யங் சுத்வா உபசம்மதி

இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு நன்மை பயக்காத

மூடபார்வை* கொண்ட ஆயிரம் சுலோகங்கள் கூறினாலும்

எவ்வித பயனுமில்லை. வாழ்வினை உய்த்துணரக்கூடிய ஒரே ஒரு

தர்மச்செய்யுளை கேட்டு ஒருவர் தன் வாழ்வினை அமைதிப்படுத்தி;க்

கொள்வாராயின் அந்த தர்மச்செய்யுளே உத்தமம்.

(ஜேதவனாராமத்தின்போது தாருசீரிய தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

*. பத விளக்க பகுதியை காண்க

  1. யோ சே காதா சதங் பாசே

அனத்தபத சங்ஹிதா

ஏகங் தம்மபதங் செய்யோ

யங் சுத்வா உபசம்மதி

இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு நன்மை பயக்காத

மூடபார்வை கொண்ட நூறு சுலோகங்கள் கூறினாலும் எவ்வித

பயனுமில்லை.வாழ்வினை உய்த்துணரக்கூடிய ஒரே ஒரு

தர்மபதத்தினை கேட்டு ஒருவர் தன் வாழ்வினை அமைதிப்படுத்தி;க்

கொள்வாராயின் அந்த தம்மபதமே உத்தமம்.

(ஜேதவனாராமத்தின்போது குண்டலகேசி தேரியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சஹஸ்ஸங் சஹஸ்ஸேன

சங்காமே மானுசே ஜினே

ஏகங் ச ஜெய்ய அத்தானங்

ச வே சங்காமஜுத்தமோ

எவரேனும் ஒருவர் ஆயிரம் போர்களை புரிந்து ஆயிரம்

பேரை தோற்கடித்து வெற்றி பெற்றாலும் அது உண்மையான

வெற்றியாகாது. எவரேனும் ஒருவர் இந்த கிலேசழூ யுத்தத்திலிருந்து

வெற்றிபெருவாராயின் அவர் ஆயிரம் போர்களை வெற்றிபெற்றவரை

விட உத்தமரானவர் ஆவார்.

(ஜேதவனாராமத்தின்போது குண்டலகேசி தேரியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அத்தா ஹவே ஜிதங் செய்யோ

யா சாயங் இதரா பஜா

அத்த தன்தஸ்ஸ போஸஸ்ஸ

நிச்சங் சஞ்ஞதசாரினோ

உண்மையிலேயே தன்னை வெற்றிக்கொள்வதே உன்னதமாகும்.

ஏனையோர் வேறு எவ் எவ் விடயங்களில் வெற்றி பெற்றாலும்

அதில் எவ்வித பயனுமில்லை. தன்னை தர்மத்தின்படி

அடக்கிக்கொண்டு, எந்நேரமும் புலனடக்கத்துடன் இருப்பவருக்கே

உண்மையான வெற்றி கிடைக்கும்.

(ஜேதவனாராமத்தின்போது ஒரு பிராம்மணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நேவ தேவோ ந கந்தப்போ

ந மாரோ சஹ ப்ரஹ்முனா

ஜிதங் அவஜிதங் கயிரா

ததா ரூபஸ்ஸ ஜன்துனோ

தேவர்களாலும் அப்படியானவரது வெற்றியை தடுக்க முடியாது.

காந்தருவர், பிரம்மர், ஏன் மாரானால் கூட அவரது வெற்றியை

தடுக்க இயலாது.

(ஜேதவனாராமத்தின்போது ஒரு பிராம்மணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மாசே மாசே சஹஸ்ஸேன

யோ யஜேத சதங் சமங்

ஏகங் ச பாவிதத்தானங்

முஹூத்தமபி பூஜயே

சா யேவ பூஜானா செய்யா

யங்செ வஸ்ஸசதங் ஹுதங்

ஆயிரக்கணக்கில் செலவழித்துக்கொண்டு மாதா மாதம் யாகம்

நிகழ்த்தினாலும், நூறு வருடங்கள் தொடர்ந்து யாகம் செய்தாலும்

மனதை முற்று முழுதாக தூய்மைப்படுத்திக்கொண்ட அரஹத்

தேரர் ஒருவருக்கு ஒரு கணம் ஒருவர் பூஜித்தால் நூறு

வருடங்களாக நடாத்திய அத்தனை பூஜைகளிலும் பார்க்க ஒரு

கணம் செய்த இந்த பூஜையே உன்னதமானதாகும்.

(வேலுவனாராமத்தின்போது சாரிபுத்த தேரரது மாமாவை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ ச வஸ்ஸஸதங் ஜன்து

அக்கிங் பரிசரே வனே

ஏகங் ச பாவிதத்தானங்

முஹுத்தமபி பூஜயே

ஸா யேவ பூஜானா செய்யோ

யங்சே வஸ்ஸசதங் ஹுதங்

எவரேனும் ஒருவர் நூறு வருடங்கள்ரக ஒரு வனாந்தரத்தில்

இருந்து கொண்டு அக்கினி பூஜைகள் நடத்தாமல் ஒரு கணமேனும்

அனைத்து மனமாசுகளையும் அழித்த மனதை மேன்மைபடுத்திய

ஒரு அரஹத் தேரரை பூஜிப்பாராயின் நூறு வருடங்களாக

தொடர்ந்து செய்த அக்கினி பூஜையை விட ஒரு கணம் அரஹத்

தேரருக்கு நிகழ்த்திய பூஜையே உயர்ந்ததாகும்.

(வேலுவனாராமத்தில் சாரிபுத்த தேரரது சகோதரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யங் கிஞ்சி யிட்டங் ச ஹுதங் வ லோகே

சங்வச்சரங் யஜேத புஞ்ஞபெக்கோ

சப்பம்பி தங் ந சதுபாகமேதி

அபிவாதனா உஜ்ஜுகதேசு செய்யோ

புண்ணியங்களை விரும்பும் ஒருவர் வருடந்தோரும் மகா யாகங்கள்,

சிறு யாகங்கள் என தானங்கள் அளித்தாலும் நேர் வழியில்

பயணித்த அரஹத் தேர தேரியருக்கு செய்யும் நமஸ்காரத்தின்

நான்கின் ஒரு பகுதிக்கு கூட அவை ஈடாகாது. அரஹத் தேர

தேரியருக்கு செய்யும் நமஸ்காரமே உன்னதமானதாகும்.

(வேலுவனாராமத்தின்போது சாரிபுத்த தேரரது நண்பரான ஒரு அந்தணரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அபிவாதன ஸீலிஸ்ஸ

நிச்சங் வத்தாபசாயினோ

சத்தாரோ தம்மா வட்டன்தி

ஆயு வண்ணோ சுகங் பலங்

சீலமிகுந்த உத்தமர்களுக்கு ஒருவர் வணங்குவாராயின் அறிவு,

குணம் என்பன முதன்மையாக்ககொண்டு பெரியோர்களுக்கு

ஒருவர் பணிவிடை செய்வாராயின் அவருள் ஆயுள், வர்ணம்,

சுகம், பலம் எனும் இந்நால்வகையும் விருத்தியடையும்.

(தீகலம்பக வனத்தில் தீகாயு குமரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே வஸ்ஸசதங் ஜீவே

    துஸ்ஸீலோ அசமாஹிதோ

ஏகாஹங் ஜீவிதங் செய்யோ

சீலவன்தஸ்ஸ ஜாயினோ

எவரேனும் சீலமற்றவராக, உள ஒருமைப்பாடு இல்லாமல் நூறு

வருடங்கள் வாழ்வதை விட சீலமுள்ளவராக, தியான நிலைகளை

விருத்தி செய்பவராக ஒருநாள் வாழ்வதே உயர்ந்ததாகும்.

(ஜேதவனராமத்தில் சங்கிச்ச தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே வஸ்ஸசதங் ஜீவே

துப்பஞ்ஞோ அசமாஹிதோ

ஏகாஹங் ஜீவிதங் செய்யோ

பஞ்ஞாவன்தஸ்ஸ ஜாயினோ

எவரேனும் ஞானமும், உளச்சமாதியுமின்றி நூறு வருடங்கள்

வாழுவதை விட ஞானத்தை ஏற்படுத்திக்கொண்டு சமத, விபஸ்ஸ

னா தியானங்களை விருத்தி செய்து கொண்டு ஒருநாள் வாழ்வதே

உயர்ந்ததாகும்.

(ஜேதவனராமத்தில் பானுகொண்டஞ்ஞ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே வஸ்ஸசதங் ஜீவே

குசீதோ ஹீன வீரியோ

ஏகாஹங் ஜீவிதங் செய்யோ

விரியமாரபதோ தழ்ஹங்

எவரேனும் மோட்சத்தினை அடைய முயற்சி செய்யாமல் சமத

விபஸ்ஸனா தியானங்கள் செய்வதற்கு முயற்சி செய்யாமல் நூ

று வருடங்கள் வாழ்வதை விட பலத்த வீரியத்துடன், சமதா

விபஸ்ஸனா தியானங்கள் செய்து கொண்டு ஒருநாள் வாழ்வதே

உயர்வானதாகும்.

(ஜேதவனாராமத்தில் சப்பதாச தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே வஸ்ஸசதங் ஜீவே

அபஸ்ஸங் உதயவ்யங்

ஏகாஹங் ஜீவிதங் செய்யோ

பஸ்ஸதோ உதயவ்யங்

எவரேனும் ஒருவர் பஞ்ச உபாதானஸ்கந்தங்களின்

தோற்றத்தினையும் அழிவினையும் விபஸ்ஸனா ஞானத்தினால்

காணாமால் நூறு வருடங்கள் வாழ்வதை விட பஞ்ச

உபாதானஸ்கந்தங்களின் அநித்தியத்தை ஆராய்ந்து கொண்டு

ஒருநாள் வாழ்வது மேன்மையானதாகும்.

(ஜேதவனராமத்தில் பட்டாசாரா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே வஸ்ஸசதங் ஜீவே

அபஸ்ஸங் அமதங் பதங்

ஏகாஹங் ஜீவிதங் செய்யோ

பஸ்ஸதோ அமதங் பதங்

எவரேனும் உயர்வான மோட்சத்தினை அடையாமல் நூறு

வருடங்கள் வாழுவதை விட அந்த உத்தம மோட்சத்தினை

உறுதி செய்து கொண்டு ஒருநாள் வாழ்ந்தால் கூட அதுவே

உத்தமமாகும்.

(ஜேதவனராமத்தில் கிசாகோதமியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே வஸ்ஸ சதங் ஜீவே

அபஸ்ஸங் தம்மமுத்தமங்

ஏகாஹங் ஜீவிதங் செய்யோ

பஸ்ஸதோ தம்மமுத்தமங்

எவரேனும் ஒருவர் உத்தம தர்மத்தினை உய்த்துணராமல் நூ

று வருடங்கள் வாழ்வதை விட இந்த நிர்மல தர்மத்தினை

உய்த்துணர்ந்து ஒருநாள் வாழ்ந்தாலும் அதுவே உயர்வாகும்

(ஜேதவனராமத்தில் பஹுபுத்த தேரியை முன்னிட்டு போதித்ததாகும்

சாது! சாது!! சாது!!!

(ஆயிரம் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொழிந்த பகுதி முற்றிற்று)

09.பாப வகை

(பாவங்கள் தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. அபித்தரேத கல்யானே

பாபா சித்தங் நிவாரயே

தந்தங்ஹி கரோதோ புஞ்ஞங்

பாபஸ்மிங் ரமதீ மனோ

தானம், சீலம், சமாதி எனும் நன்மையான விடயங்களை

சீக்கிரமாகவே செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று மனதை

பாவத்திலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான

தேவையின்றி தாமதமாகிக்கொண்டு புண்ணியங்களை

செய்வதாயின் தன்னையுமறியாமலே மனம் பாவங்களை விரும்பும்.

(ஜேதவனராமத்தில் சூலேககசாடக அந்தணரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. பாபங் சே புரிசோ கயிரா

ந தங் கயிரா புனப்புனங்

ந தம்ஹி சந்தங் கயிராத

துக்கோ பாபஸ்ஸ உச்சயோ

எவரேனும் ஒருவர் அறியாமையால் மனம், காயம், வாக்கு எனும்

மூன்று கதவுகளினால் ஏதேனும் பாவங்கள் செய்திருப்பாராயின்,

மீண்டும் மீண்டும் அந்த பாவத்தினை செய்ய வேண்டாம்.

அவ்வாறான பாவங்களை தொடர்பாக ஆசைக்கு கூட மனதிற்கு

இடமளிக்காதீர்கள். துக்கம் எனக்கூறுவது பாவத்தையே.

(ஜேதவனராமத்தில் செய்யக தேரரை முன்னிட்டு போதி;த்ததாகும்)

  1. புஞ்ஞங் சே புரிசோ கயிரா

கயிராதே தங் புனப்புனங்

தம்ஹி சந்தங் கயிராத

சுகோ புஞ்ஞஸ்ஸ உச்சயோ

எவரேனும் ஒருவர் சத்தாவுடன்கூடிய மனதுடன் மனம், வாக்கு,

காயம் எனும் மூன்று கதவுகளினால் புண்ணியங்கள் செய்தால்

மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியதும் அந்த புண்ணியச்

செயல்களையே. புண்ணியங்கள் செய்வதற்கு மனதில் விருப்பினை

தோற்றுவித்துக்கொள்ள வேண்டும். சுகம் எனக்கூறுவது இந்த

புண்ணியங்களே.

(ஜேதவனராமத்தில் லாஜா எனும் தெய்வத்தினை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பாபோபி பஸ்ஸதி பத்ரங்

யாவ பாபங் ந பச்சதி

யதா ச பச்சதி பாபங்

அத பாபோ பாபானி பஸ்ஸதிி

பாவம் செய்தவருக்கு தான், செய்த பாவங்கள் விளைவு தராதவரை

அந்த பாவங்கள் சுந்தரமானதாகவே தென்படும். ஆனால் அவை

கொடிய வகையில் விளைவுதர ஆரம்பிக்கும் போதுதான் அவர்

அந்த பாவசெயல்களின் உண்மையான இயல்பினை காண்பார்.

(ஜேதவனராமத்தில் அணேபிண்டு சீமானின் வீட்டில் வசித்த தேவதையை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பத்ரோபி பஸ்ஸதி பாபங்

யாவங் பத்ரங் ந பச்சதி

யதாச பச்சதி பத்ரங்

அத பத்ரோ பத்ரானி பஸஸ்தி

செய்த புண்ணியங்கள் விளைவுகள் தராதவரை அது அவருக்கு

நஷ்டமாகவே தென்படும். ஆனால் அவை விளைவுகளை

தரும்போதுதான் அந்த புண்ணியமிக்கவர் புண்ணியத்தின்

உண்மையான இயல்பினை இணங்கண்டுகொள்வார்.

(ஜேதவனராமத்தில் அணேபிண்டு சீமானின் மாளிகையில் இருந்த

தேவதையை முன்னிட்டு போதித்தாகும்.)

  1. மாபமஞ்ஞேத பாபஸ்ஸ

ந மங் தங் ஆகமிஸ்ஸதி

உதபிந்து நிபாதேன

உதகும்போபி பூரதி

பூரதி பாலோ பாபஸ்ஸ

தோக தோகம்பி ஆசினங்

‘இது ஒரு சிறு பாவம்தானே0 என்று, இந்த பாவத்தின் விளைவுகள்

தம்மை நோக்கிவராது என்று கண்டுகொள்ளாமல் இருக்க

வேண்டாம். நீர்த்துளிகள் ஒவ்வொன்றாக விழுந்தேனும் குடம்

நிரம்புவதுபோன்று அஞ்ஞான மூடன் கொஞ்சம் கொஞ்சமாக

ஏனும் பாவங்களை செய்யும்போது அந்த பாவங்கள் ஒன்றுசேர்ந்து

இறுதியில் அவரது முழு வாழ்வும் பாவங்களினால் நிறைந்து

போகும்.

(ஜேதவனராமத்தில் சங்கையரின் பொருட்களை கவனயீனமாக உபயோகித்த

பிக்குவை முன்னிட்டு போதித்தாகும்)

  1. மாபஞஞேத புஞ்ஞஸ்ஸ

ந மங் தங் ஆகமிஸ்ஸதி

உதபிந்து நிபாதேன

உதகும்போபி பூரதி

தீரோ புஞ்ஞஸ்ஸ

தோகதோகம்பி ஆசினங்

‘இது ஒரு சிறு புண்ணியம்தானே. இது விளைவு தராது என

நினைக்க வேண்டாம். நீர்த்துளிகள் ஒவ்வொன்றாக விழுந்தேனும்

குடம் நிரம்புவதுபோன்று ஞானமுள்ளவர், கொஞ்சம்

கொஞ்சமாக ஏனும் புண்ணியங்களை செய்யும்போது அந்த

புண்ணியங்கள் ஒன்றுசேர்ந்து இறுதியில் அவரது முழு வாழ்வும்

புண்ணியங்களினால் நிறைந்து போகும்.

(ஜேதவனராமத்தில் பிலாலபாதக சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. வாணிஜோவ பயங் மக்கங்

அப்பசத்தோ மஹத்தனோ

விசங் ஜீவிதுகாமோவ

பாபானி பரிவஜ்ஜயே

மிகுந்த செல்வமிருக்கும் வியாபாரியிடம் சேவகர்கள்

குறைவாகவிருந்தால் அவர் அபாயகரமான பயணங்களை

கைவிடுவார். வாழ்வதற்கு ஆசையுள்ள நபர் நஞ்சு விஷம் என்பன

உட்கொள்ளமாட்டார். அதுபோல் அனைத்து பாவங்களையும்

வாழ்விலிருந்து நீக்க வேண்டும்.

(ஜேதவனராமத்தில் மகாதன வியாபாரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பாணிம்ஹி சே வணோ நாஸ்ஸ

ஹரெய்ய பாணினா விஸங்

நாப்பணங் விசமன்வேதி

நத்தி பாபங் அகுப்பதோ

கையில் ஏதேனும் காயங்கள் இல்லாவிட்டால் அந்த கையினால்

எந்த விஷத்தினையும் கொண்டு செல்ல முடியும். கையில்

காயங்கள் இல்லாததால் அந்த விஷம் உடலுக்குள் செல்லாது.

அதேபோல் பாவங்கள் செய்யாத ஒருவருக்கு தீய விளைவு

கொடுக்க கூடிய பாவங்கள் இல்லை.

(வேலுவனாராமத்தின்போது குக்குடமித்த வேடனை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ அப்பதுட்டஸ்ஸ நரஸ்ஸ துஸ்ஸதி

சுத்தஸ்ஸ போஸஸ்ஸ அனங்கணஸ்ஸ

தமேவ பாலங் பச்சேதி பாபங்

சுகுமோ ரஜோ படிவாதங்வ கித்தோ

யாருக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காத, கிலேசங்களற்ற, மாசுகளற்ற ஒருவருக்கு எவரேனும் தீங்கு விளைவித்தால்

வானத்தை நோக்கி வீசும் தூசி வீசியவரை நோக்கி வருவதைப்

போன்று அந்த அஞ்ஞான மூடனை நோக்கியே தீய விளைவுகளும்

வரும்.

(ஜேதவனராமத்தில் ஒரு வேடனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. கப்பமேகே உப்பஜ்ஜன்தி

நிரயங் பாப கம்மினோ

சக்கங் சுகதினோ யன்தி

பரினிப்பன்தி அனாஸவா

சிலர் மீண்டும் கருவில் கருவுறுகிறார்கள். பாவம்

செய்துகொண்டவர்கள் மீண்டும் நரகத்தில் பிறக்கிறார்கள்.

புண்ணியம் செய்துகொண்டவர்கள் மீண்டும் சுவர்க்கத்தில்

பிறக்கிறார்கள். ஆனால் எண்சீர் மார்க்கத்தில் பயணித்த

மகா முனிவர்கள் ஆசவங்களை நீக்கிக்கொண்டு உன்னத

பரிநிர்வாணத்தினை அடைகிறார்கள்.

(மணீகார குலுபகதிஸ்ஸ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந அன்தலிக்கே ந சமுத்தமஜ்ஜே

ந பப்பதானங் விவரங் பவிஸ்ஸ

ந விஜ்ஜதீ சோ ஜகதிப்பதேசோ

யத்தட்டிதோ முச்செய்ய பாபகம்மா

ஏதாவது ஓரிடத்தில் மறைந்திருந்து, பாவ விளைவுகளிலிருந்து

மீள முடியுமாயின், அவ்வாறானதொரு இடம் வானத்திலும்

இல்லை. சமுத்திரத்திலும் இல்லை. மலைக்குகையினுள்ளும்.

இல்லை. அவ்வாறானதொரு இடம் உலகில் எங்குமே இல்லை

(ஜேதவனராமத்தில் மூன்று பிக்குமார்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந அன்தலிக்கே ந சமுத்தமஜ்ஜே

ந பப்பதானங் விவரங் பவிஸ்ஸ

ந விஜ்ஜதீ சோ ஜகதிப்பதேசோ

யத்தட்டிதங் நப்பசஹேத மச்சு

ஏதாவது ஓரிடத்தில் மறைந்திருந்து, மரணத்திலிருந்து மீள

முடியுமாயின், அவ்வாறானதொரு இடம் வானத்திலும் இல்லை.

சமுத்திரத்திலும் இல்லை. மலைக்குகையினுள்ளும். இல்லை.

அவ்வாறானதொரு இடம் உலகில் எங்குமே இல்லை.

(நீக்ரோதாராமத்தின்போது சுப்பபுத்த எனும் சாக்கியனை

முன்னிட்டு போதித்ததாகும்)

சாது!சாது!! சாது!!!

(பாவங்கள் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

10.தண்ட வகை

(தண்டனைகள் தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. சப்பே தசன்தி தண்டஸ்ஸ

சப்பே பாயன்தி மச்சுனோ

அத்தானங் உபமங் கத்வா

ந ஹனெய்ய ந காதயே

தண்டனை அனுபவிப்பதற்கு அனைவருமே அஞ்சுவார்கள்.

மரணத்திற்கும் அனைவரும் அஞ்சுவார்கள். எனவே தன்னை

உவமானமாகக்கொண்டு எந்த உயிரையும் கொல்ல வேண்டாம்.

கொல்வதற்கு வழி காட்டிடவும் வேண்டாம்.

(ஜேதவனராமத்தில் சப்பக்கிய தேரர்களுக்காக மொழிந்தது)

  1. சப்பே தசன்தி தண்டஸ்ஸ

சப்பேஸங் ஜீவிதங் பியங்

அத்தானங் உபமங் கத்வா

ந ஹனெய்ய ந காதயே

தண்டனை அனுபவிப்பதற்கு அனைவருமே அஞ்சுகின்றனர்.

அனைவரும் தத்தமது வாழ்வினை மிகவும் விரும்புகின்றனர்.

ஆகையால் தன்னை உவமானமாகக்கொண்டு எவ்வித உயிரையும்

கொல்ல வேண்டாம். கொல்வதற்கு வழிகாட்டவும் வேண்டாம்.

(ஜேதவனராமத்தில் சப்பக்கிய தேரர்களுக்காக மொழிந்தது)

  1. சுககாமானி பூதானி

யோ தண்டேன விஹின்சதி

அத்தனோ சுகமேசானோ

பெச்ச சோ ந லபதே சுகங்

அனைத்து உயிர்களும் சுகமாக வாழ்வதற்கே விரும்புகின்றன.

ஒருவர் தன்னுடைய சுகத்திற்காக ஏனைய உயிர்களை அடித்து

துன்புறுத்தி இம்சிப்பாராயின் அவர் பரலோகத்தில் சுகத்தினை

அடையமாட்டார்.

(ஜேதவனராமத்தில் சில சிறுவர்களுக்காக போதிக்கப்பட்டது)

  1. சுககாமானி பூதானி

யோ தண்டேன ந ஹின்ஸதி

அத்தனோ சுகமேசானோ

பெச்ச சோ லபதே சுகங்

அனைத்து உயிர்களும் சுகமாக வாழ்வதற்கே விரும்புகின்றன.

ஒருவர் அதனை அறிந்து தன்னுடைய சுகத்திற்காக ஏனைய

உயிர்களை இம்சிக்காது இருப்பாராயின் அவர் பரலோகத்தில்

சுகத்தினையே அனுபவிப்பார்.

(ஜேதவனராமத்தில் சில சிறுவர்களுக்காக போதிக்கப்பட்டது)

  1. மாவோச பருசங் கன்சி

வுத்தா படிவதெய்யுங் தங்

துக்கா ஹி சாரம்பகதா

படிதண்டா புசைய்யு தங்

யாரிடமும் கொடிய வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள். நீங்கள்

கடுஞ்சொற்களை பிரயோகிப்பீராயின் ஏனையோரும் உங்களுக்கு

கடுஞ்சொற்களையே பிரயோகிப்பார்கள். சச்சரவுகள் ஏற்படும்

பேச்சுக்களினால் துக்கமே தோன்றுகிறது. அதனால் உங்களுக்கே

பிரச்சினையாகும்.

(ஜேதவனராமத்தில் குண்டதான தேருக்காக போதிக்கப்பட்டது)

  1. ச வே நேரேசி அத்தானங்

கங்சோ உபஹதோ யதா

ஏச பத்தோசி நிப்பாணங்

சாரம்போ தே ந விஜ்ஜதி

சப்தம் தோன்றும் உலோக பாத்தித்தை உடைத்து

விட்டதை போன்று வார்த்தையை கட்டுப்படுத்தி வாழ்வினை

அமைதியாக்கிக்கொண்டால் அவர் தன்னுள்ளே தணிந்துவிடுகிறார்.

அப்போது சச்சரவுகள் தோன்றாது.

(ஜேதவனராமத்தில் குண்டதான தேருக்காக போதிக்கப்பட்டது)

  1. யதா தண்டேன கோபாலோ

காவோ பாச்சேதி கோசரங்

ஏவங் ஜரா ச மச்சு ச

ஆயுங் பாச்சென்தி பாணினங்

மந்தை மேய்ப்பவன் கம்பினால் மாடுகளை அடித்து புல்வெளிகளை

நோக்கி இழுத்து செல்வதை போல் முதிர்ச்சி, மரணம் எனும்

இவை இரண்டும் உயிர்களினது ஆயுளை முடித்துவிடுகின்றன.

(பூர்வாராமத்தில் பௌர்ணமி தினத்தன்று உயர்சீலம் தொடர்பாக

மொழியும்போது போதிக்கப்பட்டது)

  1. அத பாபானி கம்மானி

கரங் பாலோ ந புஜ்ஜதி

சேஹி கம்மேஹி தும்மேதோ

அக்கிதட்டோவ தப்பதி

ஞானமற்ற மூடன் எவ்வளவு பாவம் செய்தாலும் அதன்

அபாயத்தினை உணரமாட்டான். இறுதியில் அந்த ஞானமற்ற

மூடன் தீயினால் எரிவதைப்போன்று தான் செய்த கர்மங்களின்

விளைவினால் துன்புறுவான்.

(வேலுவனாராமத்தில் அஜகர பிசாசுக்காக போதிக்கப்பட்டது)

  1. யோ தண்டேன அதண்டேசு

அப்ப துட்டேசு துஸ்ஸதி

தஸன்னமஞ்ஞதரங் டானங்

கிப்பமேவ நிகச்சதி

ஆயுதங்களை தவிர்த்து அனைத்து உயிரினங்கள் மீதும்

அன்பினை பரப்பும் அரஹத் உத்தமருக்கு எவரேனும் கொடிய

மனதுடன் துன்புறுத்துவாராயின் அவர் பின்வரும் பத்து வகையான

துன்பங்களின் ஒரு துன்பத்தை சீக்கிரமாகவே அனுபவிக்க

கிடைக்கும்.

  1. வேதனங் பருசங் ஜானிங்

சரீரஸ்ஸ ச பேதனங்

கருகங் வாபி ஆபாதங்

சித்தக்கேபங் ச பாபுனே

கொடிய உடலியல் வேதனைகளை அனுபவிக்க நேரிடும்.

அப்படியில்லாவிட்டால் கை கால்களுக்கேனும் உபாதைகள்

ஏற்படலாம். அல்லது கொடிய நோய்கள் ஏற்படலாம். இல்லையேல்

மதி மயங்கி பித்து பிடித்துவிடும்.

  1. ராஜதோ வா உபஸ்ஸக்கங்

அப்பக்கானங் ச தாருணங்

பரிக்கயங் ச ஞாதினங்

போகானங் ச பபங்குரங்

அரசின் தண்டனைக்குரியவராவார். கொடிய குற்றங்களுக்கு

ஆளாகலாம். அல்லது உறவினர்களை இழக்கலாம். இல்லையேல்

தன்னுடைய சொத்துக்கள் அழிந்துபோகலாம்.

140.12. அத வாஸ்ஸ அகாரானி

அக்கி டஹதி பாவகோ

காயஸ்ஸ பேதா துப்பஞ்ஞோ

நிரயங் சோ உபபஜ்ஜதி

தன் வீடுவாசல்கள் தீக்கு இரையாகலாம். அந்த அஞ்ஞான மூடன்

மரணித்த பின்னர் நரகத்தில் பிறப்பான்.

(வேலுவனாராமத்தில் மொக்கல்லான தேரரை தாக்கிய கொள்ளையர்களை

முன்னிட்டு போதித்தாகும்)

  1. ந நக்கசரியா ந ஜடா ந பன்கா

நாநாசகா தண்டிலசாயிகாவா

ரஜோ ச ஜல்லங் உக்குடிகப்பதானங்

சோதென்தி மச்சங் அவிதிண்ண கன்கங்

பால குணமுடைய போதுஜ்ஜனர்கள் தூய்மையாக வேண்டும்

என நிர்வாணமாக தவம் செய்து, தலையில் சடை முடியுடன்

இருந்தாலும். பற்களில் பசை படிந்திருந்தாலும் பல்வேறுபட்ட

விரதங்களை மேற்கொண்டாலும், இருக்கை முறைகளில்

அமர்ந்தாலும் உடல் முழுவதும் சாம்பலையும் தூசியையும் படர

விட்டுக்கொண்டிருந்தாலும் கடின நிலைகளில் அமர்ந்திருந்தாலும்

அவர்கள் சந்தேகத்திலிருந்து நீங்காமல் வாழ்வதால் உண்மையான

தூய்மையை அடைய முடியாது.

(ஜேதவனராமத்தில் அனேக பொருட்களை உபயோகிக்கும் ஒரு பிக்குவை

முன்னிட்டு போதித்தாகும்)

  1. அலங்கதோ சேபி சமங் சரெய்ய

சன்தோ தன்தோ நியதோ பிரம்மசாரீ

சப்பேசு பூதேசு நிதாய தண்டங்

சோ பிராம்மணோ சோ சமணோ ச பிக்கு

அழகாக தன் உடலை அலங்கரித்து கொண்டிருந்தாலும் அவர்

தர்மத்தை பின்பற்றுவாராயின், சாந்தமானவராயின், புலனடக்கம்

உடையவராயின், மோட்சப்பாதையில் இறங்கியவராயின்,

பிரம்மச்சரியத்தை மேற்கொண்டவராயின், அனைத்து வகையான

ஆயுதங்களை துறந்தவராயின், அவர்தான் உண்மையான

பிரம்மணராவார். அவர்தான் உண்மையான பிக்கு

(ஜேதவனாராமத்தில் சந்ததி எனும் அமைச்சரை முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. ஹிரீ நிஸேதோ புரிசோ

கோசி லோகஸ்மிங் விஜ்ஜதி

யோ நிந்தங் அபபோததி

அஸ்ஸோ பத்ரோ காசாமிவ

எவராயினும் வெட்கத்தை அடிப்படையாகக்கொண்டு பாவங்களை,

அகுசலங்களை (தீமைகளை) செய்யாதிருப்பார்களாயின் அவர்கள்

மிகவும் குறைவே. மிகவும் திறமையான குதிரை சவுக்கடியை

விரும்பாமல் தன்னை திருத்திக்கொள்வதைப் போன்று அவர்கள்

ஏனையோரது நிந்தனைகளுக்கு அஞ்சி தன்னை தர்மத்தின்வழி

நெறிப்பத்துவார்கள்.

(ஜேதவனராமத்தில் பிலோதிக தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. அஸ்ஸோ யதா பத்ரோ கசானிவிட்டோ

ஆதாபினோ சங்வேகினோ

பவாத சத்தாய சீலேன ச விரியேனச

சமாதினா தம்மவினிச்சயேன ச

சம்பண்ண விஜ்ஜாசரணா பதிஸ்ஸதா

பஹஸ்ஸத துக்கமிதங் அனப்பகங்

 

தன்னுடைய தாமதம் எனும் காரணத்தினால் சாட்டையடி

வாங்கிய ஆஜானேய்ய (உயர்வகை) குதிரை இன்னும் இன்னும்

வீரியமுள்ளதாகும். அதேபோல் நீங்களும் இந்த சன்சார

பயணத்தை வெறுத்து, கிலேசங்களை அழிப்பதற்கே முயற்சிக்க

வேண்டும். சத்தாவுள்ள, சீலமுள்ள, சமாதி என்பன கொண்டு

விபஸ்ஸனா ஞானத்தின் மூலமே தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

உய்த்துணர்வும் நடத்தையும் ஒன்றாக இருக்க வேண்டும்.

நன்றாக சுயவுணர்வுடனும் அறிவுடனும் தர்மத்தினுள் மனதை

நிலைநிறுதிக்கொண்டு இந்த சன்சார பயணத்தை அழிக்க

வேண்டும்.

(ஜேதவனராமத்தில் பிலோதிக தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

 

  1. உதகங் ஹி நயன்தி நெத்திகா

உசுகாரா நமயன்தி தேஜனங்

தாருங் நமயன்தி தச்சகா

அத்தானங் தமயன்தி சுப்பதா

 

நீரை கொண்டு செல்பவர்கள் தமக்கு வேண்டிய வேண்டிய

திசைகளுக்கு கால்வாய்களை அமைத்து அந்த நீரை திசை திருப்பிக்கொண்டு செல்வார்கள். இரும்புக்கொல்லர்கள் தமக்கு

வேண்டிய வகையில் அம்புகளை செய்கிறார்கள். தச்சர்கள் தம்

விருப்பத்தின்படி மரதளபாடங்களை செய்து கொள்கிறார்கள்.

அதேபோன்று அறிவாளிகள் தர்மத்தின் மூலம் தம் மனதை

அடக்கிக்கொள்வார்கள்.

(ஜேதவனராமத்தில் சுக சாமணேர தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(தண்டனைகள் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

 

 

 

11.ஜரா வகை

(முதுமை அடைவது தொடர்பாக மொழிந்த போதனை)

 

  1. கோ னு ஹாசோ கிமானந்தோ

நிச்சங் பஜ்ஜலிதே சதி

அந்தகாரேன ஓனத்தா

பதீபங் ந கவெஸ்ஸத?

 

இந்த வாழ்க்கை ஆசை, கோபம், அறியாமை என்பவற்றுடன்

முதிர்ச்சியடைகிறது. நோய்நொடிகள், மரணம் சோகம், புலம்பல்கள்,

உடல் வேதனைகள், மன வேதனைகள், என்பவற்றினால்

எந்நேரமும் வாழ்க்கை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது

உங்களுக்கு என்ன சிரிப்பு? என்ன சந்தோஷம்? அஞ்ஞானம் எனும்

காரிருளில் மூழ்கியிருக்கும் நீங்கள் தீபத்தை தேடாதிருப்பது ஏன்?

(ஜேதவனராமத்தில் விசாகா உபாசகியின் தோழிகளை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. பஸ்ஸ சித்த கதங் பிம்பங்

அருகாயங் சமுஸ்ஸிதங்

ஆதுரங் பஹுசங்கப்பங்

யஸ்ஸ நத்தி துவங் டிதி

 

இப்போதாவது நன்கு பாருங்கள் அழகாக இந்த உடலை

அலங்கரித்துக்கொண்டிருந்தாலும் இந்த உடலில் இருப்பது

தசைகளோடு பின்னப்பட்டிருக்கும் ஒரு எழும்புக்கூடாகும். நோய்

நொடிகளின் உறைவிடமே இந்த உடலாகும். அஞ்ஞான மனிதன்

இந்த உடலை பற்றி பலாவாறான சுந்தர எண்ணங்களை மனதில்

கொண்டிருந்தாலும் இந்த உடல் நித்தியமற்றது. நிலையில்லாதது.

(வேலுவனராமத்தில் சிரிமா எனும் விலைமாதுவை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. பரிஜின்னமிதங் ரூபங்

ரோக நிட்டங் பபங்குரங்

பிஜ்ஜதி பூதிசந்தேஹோ

மரணன்தங்ஹி ஜீவிதங்

 

நால்வகை தாதுக்களால் தோன்றிய இந்த உடல் முதுமையடைந்து

அழிந்துபோகும். நோய்நொடிகளின் உறைவிடம் போன்றதே

இந்த உடல். விரைவாகவே அழிந்துவிடும். ஒன்பது கதவுகளால்

எந்நேரமும் அருவருப்பானவை வெளியேறிக்கொண்டே இருக்கிறது.

இந்த வாழ்க்கை மரணத்துடன் முடிவடைகிறது.

(ஜேதவனராமத்தில் உத்தரீ தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. யானிமானி அபத்தானி

அலாபூனேவ சாரதே

காபோதகானி அட்டீனி

தானி திஸ்வான கா ரதி?

 

கோடை காலங்களில் உடைத்து ஆங்காங்கு வீசப்பட்ட

சுரைக்காய்களை போன்றே இந்த மண்டையோடுகள் இருக்கின்றன.

இந்த மனித என்புகள் மணிப்புறாவின் நிறத்தினை ஒத்த (சாம்பல்)

நிறத்திலானவை இவற்றை கண்டும் காமத்தின் மீது என்ன

ஆசை..?

(ஜேதவனராமத்தில் அட்டிமானிக பிக்குமாரை முன்னிட்டு போதித்தாகும்)

 

  1. அட்டினங் நகரங் கதங்

மங்சலோஹித லேபனங்

யத்த ஜரா ச மச்சு ச

மானோ மக்கோ ச ஓஹிதோ

இந்த உடல் என்புகளினால் கட்டியெழுப்பி தசைகளை

இரத்தத்தினால் பூச்சுக்கள் பூசி உருவாக்கப்பட்ட நகரத்தினை

போன்றதாகும். முதுமையடைவும் மரணமடைவதும் இந்த உடலே.

 

அகம்பாவம் ஏற்படுவதும் இந்த உடலுக்கே. நன்றியுணர்ச்சி

இன்மையும் இந்த உடலுக்கே ஏற்படுகிறது.

(ஜேதவனராமத்தில் ரூபநந்தா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. ஜீரன்தி சே ராஜரதா சுசித்தா

அதோ சரீரம்பி ஜரங் உபேதி

சதங் ச தம்மோ ந ஜரங் உபேதி

சன்தோ ஹவே சப்பி பவேதயன்தி

 

விசித்திரமாக அலங்கரித்த ராஜ மங்கல தேர்கள் கூட ஒருநாளில்

உக்கி அழிந்து போகும். எவ்வளவு அலங்காரம் செய்தாலும்

இந்த உடலும் ஒருநாள் அழிந்து போகும். ஆனால் சத்புருஷனின்

குணநலன்கள் ஒருபோதும் அழிவதில்லை. ஷாந்தமிக்க முனிவர்கள்

சத்புருஷர்களுக்கு இவ்விடயத்தையே கற்றுக்கொடுக்கின்றனர்.

(ஜேதவனராமத்தில் மல்லிகா அரசியின் மரணத்தை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அப்பசுத்தாயங் புரிசோ

பலிவத்தோவ ஜிரதி

மங்சானி தஸ்ஸ வட்டன்தி

பஞ்ஞா தஸ்ஸ ந வட்டதி

 

சத்தர்மத்தினை (சத்புருச தர்மத்தினை) முறையாக அறிந்திராத

மூடன் எருமையை போன்று பருமனாவான். அவனது தசை

மட்டுமே வளரும். ஞானம் வளராது.

(வேலுவனராமத்தில் லாலுதாயி தேரரரை முன்னிட்டு போதித்தாகும்)

 

  1. அனேக ஜாதி சங்சாரங்

சந்தாவிஸ்ஸங் அனிப்பிசங்

கஹகாரகங் கவேசன்தோ

துக்கா ஜாதி புனப்புனங்

 

 

இந்த சன்சாரப்பயணத்தில் பல்வேறு வகையான துன்பங்களை

அனுபவித்துக்கொண்டு துன்பகரமான பயணத்தை நான்

பயணித்தேன். இந்த சன்சார துக்கத்தினை உருவாக்கும் தச்சன்

யார் என்பதையே நான் தேடியலைந்தேன். மீண்டும் மீண்டும்

பிறப்பதானது துக்கமே.

(மகா போதிவிருட்சத்தின் நிழலின்போது

பகவான் மொழிந்தருளிய உதான செய்யுள்)

 

  1. கஹகாரக! திட்டோசி

புன கேஹங் ந காஹசி

சப்பா தே பாசுகா பக்கா

கஹகூடங் விசங்கிதங்

விசங்காரகதங் சித்தங்

தண்ஹானங் கய மஜ்ஜகா

 

ஏய் தச்சனே! நான் உண்னை கண்டு பிடித்துவிட்டேன்.உன்னால்

எனக்காக மீண்டும் வீடுகளை கட்ட முடியாது. உனது

அத்தனை பலகைகளையும் நான் துண்டு துண்டாக உடைத்து

விட்டேன். கூரையின் பிரதான பலகையினையும் உடைத்து

ஒவ்வொரு புறமாக நான் வீசியெறிந்துவிட்டேன். இந்த மனதில்

சங்ஸ்காரங்கள் இல்லாமல் போய்விட்டது. தண்ஹா (பேராசை)

முழுமையாக அழிந்துவிட்டது.

(மகா போதிவிருட்சத்தின் நிழலின்போது

பகவான் மொழிந்தருளிய செய்யுள்கள்)

 

  1. அசரித்வா ப்ரஹ்மசரியங்

அலத்தா யொப்பனே தனங்

ஜின்னகொன்சாச ஜாயன்தி

கீனமச்சேவ பல்லலே

 

அறிவற்றவர்கள் இளமைக்காலத்தில் பிரம்மச்சரியத்துடன் கூடிய

மோட்சப்பாதையில் பயணிக்கமாட்டார்கள். குறைந்தபட்சம்

செல்வத்தினை கூட ஈட்டமாட்டார்கள். கடைசியில் முதுமையடைந்து

மீன்கள் இல்லாத சேற்று நிலத்தை பார்த்துக்கொண்டிருக்கும்

கிழட்டுக்கொக்குகளை போன்று பார்த்த திசையை பார்த்த

வண்ணம் இருப்பார்கள்.

 

  1. அசரித்வா ப்ரஹ்மசரியங்

அலத்தா யொப்பனே தனங்

சென்தி சாபாதிகி;த்தாவ

புராணானி அனுத்துனங்

 

அறிவற்றவர்கள் இளமைக்காலத்தில் பிரம்மச்சரியத்துடன் கூடிய

மோட்சப்பாதையில் பயணிக்கமாட்டார்கள். குறைந்தபட்சம்

செல்வத்தினை கூட ஈட்டமாட்டார்கள். அந்த அறிவற்றவர்கள்

எய்திய ஈட்டி விழுந்த இடத்திலேயே கிடந்து உக்கிப் போவதை

போன்று முன்னர் அனுபவித்த சுகங்களை நினைத்து நினைத்து

பெருமூச்சு விடுவார்கள்.

(இசிபத்தனராமத்தில் மஹாதன சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(முதுமை அடைவது தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்) 

 

 

 

 

12.அத்த வகை

(தன்னை பற்றி மொழிந்த பகுதி)

 

  1. அத்தானங் சே பியங் ஜஞ்ஞா

ரக்கைய நங் சுரக்கிதங்

தின்னமஞ்ஞதரங் யாமங்

படிஜக்கைய பண்டிதோ

தன் மீது அன்பு கொண்ட ஒருவன் தன்னைத்தானே பாதுகாத்து

கொள்ள வேண்டும். அறிவுள்ள ஒருவன் தனது சிறுவயது,

இளமை அல்லது முதுமை எனும் இம்மூன்று காலங்களின்

ஒரு காலத்திலாவது மனதினை மேன்மைபடுத்தும் குசல்களை

(நன்மைகளை) செய்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

(பேசகலா வனத்தில் போதிராஜ குமரனை நோக்கி மொழிந்தது)

 

  1. அத்தானமேவ பட்டமங்

பதிரூபே நிவேசயே

அதஞ்ஞமனுசாசெய்ய

ந கிலிஸ்ஸெய்ய பண்டிதோ

 

அனைத்து விடயங்களுக்கும் முன்பு நற்குணங்களில் தன்னையே

நிலைப்படுத்த வேண்டும்.அதன் பிறகே ஏனையோருக்கு

உபதேசிக்க வேண்டும். இவ்வாறாக செயற்பட்டால் ஞானமுள்ளவர்

அசுத்தமடையமாட்டார்.

(ஜேதவனராமத்தில் உபநந்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அத்தானங் சே ததா கயிரா

யதஞ்ஞ மனுசாசதி

சுதன்தோ வத தம்மேத

அத்தா ஹி கிர துத்தமோ

 

ஏனையோருக்கு நல்லுபதேசம் செய்வதைப்போன்றே தானும்

அந்த உபதேசங்களுக்கு ஏற்றாற்போல் வாழ வேண்டும்.

முதலில் தான் தர்மத்தின்படி அடங்கிய பின்னரே ஏனையோரை

தர்மத்தின்படி அடக்க முயற்சி செய்ய வேண்டும். தன்னை

தர்மத்தின்படி கட்டுப்படுத்துதல் என்பது இலகுவான விடயமல்ல.

(ஜேதவனராமத்தில் பதானிகதிஸ்ஸ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அத்தாஹி அத்தனோ நாதோ

கோஹி நாதோ பரோஸியா

அத்தனாவ சுதன்தேன

நாதங் லபதி துல்லபங்

 

தனக்கான புகலிடத்தை தானே அமைத்தும் கொள்ள

வேண்டும். தன்னைத் தவிர வேறு யார்தான் தனக்கு

புகலிடமாக இருப்பார்கள்? தா;மத்தின் மூலம், தன்னை நங்கு

அடக்கிக்கொள்வதனால் ஒருவர் தர்ம உய்த்துணர்வு எனும்

அரிய புகலிடத்தை பெறுவார்.

(ஜேதவனராமத்தில் குமார கஸ்ஸப தேரரின் தாயாரான பிக்குணியை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அத்தனாவ கதங் பாபங்

அத்தஜங் அத்தசம்பவங்

அபிமன்ததி தும்மேதங்

வஜிரங்வஸ்மமயங் மணிங்

 

மாணிக்கத்தினால் தோன்றிய வைரக்கல்லே மாணிக்கத்தை

அழிக்க வல்லது போல் தன்னுள் உருவாகிய, தன்னுள்ளே

தோன்றிய தானே செய்த பாவத்தின் விளைவினாலேயே மூடன்

துன்பத்தை அனுபவிக்கிறான்.

(ஜேதவனராமத்தில் மகாகால உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ அச்சன்த துஸ்ஸீல்யங்

மாலுவா சாலமிவோதனங்

கரோதி சோ ததத்தானங்

யதா நங் இச்சதீ திசோ

 

சால மரத்தை சுற்றிக்கொள்ளும் பெரிய இலைகளை கொண்ட

கொடிகளினால் இறுதியில் அந்த சால விருட்சம் முறிந்து

நிலத்தில் சரிந்துவிடும். அதேபோன்று முழுமையான துஸ்சீலரான

(ஒழுக்கமற்ற) ஒருவர், திருடன் இன்னுமொரு திருடனுக்கு

பாதிப்பு இழைப்பதனை விரும்புவதைப்போன்று தன்னுடைய

ஒழுக்கமி;ன்மையினால் தானே தனக்கு பெரும் பாதிப்பினை

தேடிக்கொள்வான்.

(ஜேதவனராமத்தில் தேவதத்தனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுகரானி அசாதூனி

அத்தனோ அஹிதானி ச

யங் வே ஹிதங் ச சாதுங் ச

தங் வே பரமதுக்கரங்

 

தனக்கு தீங்கு விளைவிக்கும் பாவங்களை செய்வது மிகவும்

இலகுவான காரியமாகும். ஆனால் ஏதேனுமு; ஒன்று தனக்கு

நன்மையை விளைவிக்குமாயின், தனக்கு சுகத்தை தருமாயின்

அவ்வாறான விடயங்களை செய்வது மிகவும் கடினமாகும்.

(வேலுவனாராமத்தில் தேவதத்தனை முன்னிட்டு போதித்தாகும்)

 

  1. யோ சாசனங் அரஹதங்

அரியானங் தம்மஜீவிதங்

படிக்கோசதி தும்மேதோ

திட்டிங் நிஸ்ஸாய பாபிகங்

பலானி கட்டகஸ்ஸேவ

அத்தகஞ்ஞாய பல்லதி

 

ஒரு அஞ்ஞான மூடன் தான் மூட பார்வைகளினுள் இருந்துகொண்டு

தார்மீகமாக வாழும் அரஹத் தேரர்களது தர்மத்தினை தடுத்தால்

மூங்கிலில் தோன்றும் பழமே அந்த மூங்கிலை அழிவிற்கு

உள்ளாக்குவதைப் போன்று அவனுடைய வாழ்வினை அழிவுக்கு

கொண்டு செல்லும்.

(ஜேதவனாராமத்தின்போது கால தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அத்தனாவ கதங் பாபங்

அத்தனா சன்கிலிஸ்ஸதி

அத்தனா அகதங் பாபங்

அத்தனாவ விசுஜ்ஜதி

சுத்தி அசுத்தி பச்சன்தங்

நாஞ்ஞமஞ்ஞோ விசோதயே

 

ஒருவர் அசுத்தமடைவது தான் செய்யும் பாவங்களினாலயே.

பாவங்கள் செய்யாமலிருப்பதனாலேயே ஒருவர் சுத்தமடையலாம்.

சுத்தமடைவதும் அசுத்தமடைவதும் தன்னுடைய பொறுப்பிலானது.

ஒருவரால் இன்னுமொருவரை சுத்தப்படுத்த இயலாது.

(ஜேதவனராமத்தில் சூளகால உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அத்ததத்தங் பரத்தேன

பஹுனாபி ந ஹாபயே

அத்ததத்தமபிஞ்ஞாய

சதத்தபசுதோ சியா

ஏனையோரின நலனுக்காகவே அயராது உழைத்து

தன்னுடைய நலனை இழந்துவிடக்கூடாது. தனக்கு நன்மையை

ஏற்படுத்தக்கூடியது எது என ஆராய்ந்து உணர்ந்து உண்மையான

நன்மை எனும் அரஹத்நிலையை அடைவதற்கே முயற்சி செய்ய

வேண்டும்.

(ஜேதவனராமத்தில் அத்ததத்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!!! சாது!!!

(தன்னை பற்றி மொழிந்த பகுதி முற்றும்)

 

 

 

 

13.லோக வகை

(உலகம் தொடர்பாக மொழிந்த பகுதி)

 

 

 

  1. ஹீனங் தம்மங் ந சேவெய்ய

பமாதேன ந சங்வசே

மிச்சாதிட்டிங் ந சேவெய்ய

ந சியா லோகவத்தனோ

இழிவான காமத்தினை தேடி அலையத் தேவையில்லை. தர்மத்தில்

ஈடுபடுவதற்கு தாமதித்தலாகாது. மூட பார்வைகளுக்கு இடமளி;க்க

கூடாது. சன்சாரப்பயணத்தினை நீளடையச் செய்யக்கூடாது.

(ஜேதவனராமத்தில் சாமணேர தேரர் ஒருவரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. உத்திட்டே நப்பமஜ்ஜெய்ய

தம்மங் சுசரிதங் சரே

தம்மசாரீ சுகங் சேதி

அஸ்மிங் லோகே பரம்ஹி ச

சோம்பலை விட்டு எழ வேண்டும. தாமதமின்றி நன்நடத்தை

கொண்ட இந்த தர்மத்தினை பயிற்சி செய்ய வேண்டும்.

தர்மத்தினை பின்பற்றுபவர் இவ்வுலம் மற்றுமு; பரலோகம் எனும்

இருலோகங்களிலும் சுகமாக இருப்பார்.

(நீக்ரோதாராமத்தில் சுத்தோதன மன்னரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தம்மங் சரே சுசரிதங்

ந நங் துச்சரிதங் சரே

தம்மசாரீ சுகங் சேதி

அஸ்மிங் லோகே பரம்ஹி ச

நன்நடத்தை கொண்ட இந்த தர்மத்தினை பயிற்சி செய்ய வேண்டும். ஒருபோதும் தீய நடத்தைகளை உடையவராக

வாழக்கூடாது. தர்மத்தினை பின்பற்றுபவர் இவ்வுலம் மற்றும்

பரலோகம் எனும் இருலோகங்களிலும் சுகமாக இருப்பார்.

(நீக்ரோதாராமத்தில் சுத்தோதன மன்னரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. யதா புப்புலகங் பஸ்ஸே

யதா பஸ்ஸே மரீசிகங்

ஏவங் லோகங் அவெக்கன்தங்

மச்சுராஜா ந பஸ்ஸதி

 

ஒருவர், அழிந்தொழிந்து போகும் நீர் குமிழியை போன்று இந்த

உலகத்தினை காணும்போது, கணத்தில் மறைந்துபோகும்

கானல் நீராக இந்த உலகினை பார்க்கும்போது அவர் மாரனது

கண்களுக்கு புலப்படமாட்டார்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குகளை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. ஏத பஸ்ஸதிமங் லோகங்

சித்தங் ராஜரதூபமங்

யத்த பாலா விசீதன்தி

நத்தி சங்கோ விஜானதங்

 

வாருங்கள், இந்த உலகின் உண்மை நிலையை வந்து

பாருங்கள். விசித்திரமாக அலங்கரித்து வைத்திருக்கும் ராஸ

குதிரை வண்டியை போன்றது. அஞ்ஞான மூடர்கள் இந்த

வெளித்தோற்றத்திற்கே ஏமாறுகிறார்கள். ஆனால் இதன் உண்மை

நிலையை உணர்ந்தவர்களுக்கு இந்த உலகத்துடன் எவ்வித

கொடுக்கல் வாங்கலும் செய்வதில்லை.

(வேலுவனாராமத்தில் அபயராஜ அரச குமாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. யோ ச புப்பே பமஜ்ஜித்வா

பச்சா சோ நப்பமஜ்ஜதி

சோ இமங் லோகங் பபாசேதி

அப்பா முத்தோவ சந்திமா

 

எவரேனும் ஒருவர் புற உலக விடயங்களில் மூழ்கி தர்மத்தை

பின்பற்ற தாமதித்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர்

பிற்காலத்தில் புற வேலைகளை குறைத்துக்கொண்டு தாமதமின்றி

தர்மத்தினை பயிற்சி செய்கிறார். அவர்தான் மேகங்கள் அற்ற

வானில் பிரகாசிக்கும் சந்திரனை போன்று இந்த உலகினை ஒளி

செய்வார்.

(ஜேதவனராமத்தில் சம்முஞ்ஜனீ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. யஸ்ஸ பாபங் கதங் கம்மங்

குசலேன பிதியதி

சோ இமங் லோகங் பபாசேதி

அப்பா முத்தோவ சந்திமா

 

எவராயினும் ஒருவர் தான் இதுவரை செய்திருந்த பாவங்களை ஆரிய

எண்சீர் வழியில் பயணிப்பதனூடாக தோற்றுவித்துக்கொள்ளும்

குசலங்களின் (நன்மைகளின்) பலத்தினால் மூடிவிடுகிறோரோ

அவர் மேகங்கள் அற்ற வானில் பிரகாசிக்கும் சந்திரனை போன்று

இந்த உலகினை ஒளி செய்வார்.

(ஜேதவனராமத்தில் அங்குலிமால தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. அந்தபூதோ அயங் லோகோ

தனுகெத்த விபஸ்ஸதி

சகுன்தோ ஜாலமுத்தோவ

அப்போ சக்காய கச்சதி

 

இந்த உலக உயிர்கள் மூடத்தனம் எனும் குருட்டுத்தனத்தினால்

அருளடைந்து இருக்கின்றனர். மிகவும் சொற்பமான

எண்ணிக்கையானோரே யதார்த்தத்தினை காண்கின்றனர்.

பறவைகளை பிடிக்கும் வேடனது வலையிலிருந்து சில பறவைகள்

மாத்திரமே விடுதலை அடையும். அதுபோன்று சுவர்க்கத்தில் பிறப்போரும் மிகவும் சொற்பமான எண்ணிக்கையானோரே.

(அக்காலவ எனும் ஆராமத்தில் நெசவாளரின் மகளை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. ஹங்ஸாதிச்சபதே யன்தி

ஆகாசே யன்தி இத்தியா

நீயன்தி தீரா லோகம்ஹா

ஜித்வா மாரங் சவாஹினிங்

 

அன்னங்கள் வானில் பறக்கின்றன. இருத்தி பலம் கொண்ட

அரஹத் தேரர்களும் வானில் நடந்து செல்கின்றனர். அந்த

ஞானமுள்ள மகா முனிவர்கள் மகா சேனையுடன் கூடிய மாரனை

தோற்கடித்து இந்த அனைத்து உலகங்களில் இருந்தும் விடுதலை

அடைந்து மோட்சத்தினை அடைகின்றனர்.

(ஜேதவனராமத்தில் முப்பது பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. ஏகங் தம்மங் அதீதஸ்ஸ

முசாவாதிஸ்ஸ ஜன்துனோ

விதிண்ணபரலோகஸ்ஸ

நத்தி பாபங் அகாரியங்

 

வாய்மை எனும் ஒரே ஒரு குண தர்மத்தினையும் மீறிச்சென்று,

பொய்யுரைக்கும் ஒருவருக்கு பரலோகம் தொடர்பாக எவ்வித

உணர்வும் இல்லை. எனவே அவரால் செய்ய முடியாத எவ்வித

பாவமும் இல்லை.

(ஜேதவனராமத்தில் சிஞ்சா எனும் பெண்ணை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. ந வே கதரியா தேவலோகங் வஜன்தி

பாலா ஹவே நப்பசஸங்ஸன்தி தானங்

தீரோ ச தானங் அனுமோதமானோ

தேனேவ சோ ஹோதி சுகீ பரத்த

 

கஞ்சத்தனம் உடையவர்கள் ஒருபோதும் தேவலோகம் செல்ல மாட்டார்கள். அசத்புருஷர்கள் ஒருபோதும தானமளிப்பதனை

ஆதரிக்க மாட்டார்கள். தானமளிப்பதனை ஆதரித்து பேசுவதும்

ஞானமுள்ளவர்களே.

(ஜேதவனராமத்தில் கோசலை மன்னனது மகா தானத்தினை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. பதவ்யா ஏகரஜ்ஜேன

சக்கஸ்ஸ கமனேன வா

சப்பலோகாதிபச்சேன

சோதாபத்திபலங் வரங்

 

முழு உலகினையும் வென்று மகா சக்கரவர்த்தி மன்னராவதனை

விட தேவலோகத்தில் பிறப்பதனை விட, அனைத்து

உலகங்களுக்கும் அதிபதியாவதனை விட சோதாபண்ண

நிலையை அடைவதே உத்தமம்

(ஜேதவனராமத்தில் அனேபிண்டு சீமானது மகனை

முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(உலகங்கள் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

14.புத்த வகை

(புத்த பகவான்மார் தொடர்பாக

மொழிந்த பகுதி)

 

  1. யஸ்ஸ ஜிதங் நாவஜீயதி

ஜிதமஸ்ஸ நோ யாதி கோசி லோகே

தங் புத்த மனன்த கோசரங்

அபதங் கேன பதேன நெஸ்ஸத?

 

இந்த கிலேச யுத்தத்தினை அவர் வென்று முடித்தாயிற்று.

அது ஒருபோதும் தோல்வியாகாது.அந்த மகா வெற்றியினை

தோல்வியடைச் செய்யக்கூடிய எதுவுமே அவரை பின்தொடராது.

சம்மா சம்புத்த பகவானது பிரக்ஞை எல்லையற்றது. அந்த

உத்தமர் பயணிக்கும் பாதை கிலேசங்களற்றது. இவ்வாறான

ஒருவரை எப்படி ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்..?

(போதி நிழலின்போது மாரனது புதல்விகளை நோக்கி போதித்ததாகும்)

 

  1. யஸ்ஸ ஜாலினீ விசத்திகா

தண்ஹா நத்தி குஹிங்சி நேதவே

தங் புத்த மனன்த கோசரங்

அபதங் கேன பதேன நெஸ்ஸத?

 

ஆசை என்பது வலையாகும். உயிர்களை பவத்தினுள்ழூ

(விளைவுகள் அளிக்கும் கர்மம்) சுற்றிவிடுவதால் அதற்கு

ஷவிசத்திகா0 எனவும் பெயர் உண்டு. (புத்த பகவானுள்) அவருள்

தண்ஹா (பேராசை) இல்லாததால் அவரை எந்த வகையிலும்

இன்னுமொரு பிறப்பினை நோக்கி கொண்டு செல்ல முடியாது.

சம்மா சம்புத்த பகவானது பிரக்ஞை எல்லையற்றது. அந்த

உத்தமர் பயணிக்கும் பாதை கிலேசங்களற்றது. இவ்வாறான

ஒருவரை எப்படி ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்?

(போதி நிழலின்போது மாரனது புதல்விகளை நோக்கியும் குரு

தேசத்தின்போது மாகந்தியாவை நோக்கியும் போதித்ததாகும்)

 

  1. யே ஜான பசுதா தீரா

நெக்கம்முபசமே ரதா

தேவாபி தேசங் பிஹயன்தி

சம்புத்தானங் சதீமதங

 

(புத்த பகவான்மார்கள்) அவர்கள் பிரக்ஞை மிகுந்தவர்கள்.

தியானங்களிலேயே வசிக்கின்றனர். அனைத்து உலகங்களிலிருந்தும்

நீங்கி மனதை முழுமையாக அமைதியாக்கிக்கொண்டு

அந்த நிர்வாண மோட்சத்திலேயே இருக்கின்றனர். மிகவும்

உயர்ந்தளவிலான சுயவுணர்வினைக் கொண்டிருக்கும் சம்மபத்த

ராஜனை தேவர்களும் விரும்புவார்கள்.

(கண்டப்ப விருட்ச நிழலின்போது யமாமஹ பாதிஹார்யத்தினை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. கிச்சோ மனுஸ்ஸ படிலாபோ

கிச்சங் மச்சான ஜீவிதங்

கிச்சங் சத்தம்ம ஸவனங்

கிச்சோ புத்தானங் உப்பாதோ

 

பல்வேறுபட்ட துயரங்களை அனுபவிக்கும் இந்த மனித வாழ்வு

கிடைப்பதே அரிதானதாகும். தூய்மையான உத்தம தர்மத்தினை

செவிமடுக்கக் கிடைப்பதும் அதனை விட அரிதானதாகும்.

புத்த பகவான்மார்களது தோற்றம் இவ் அனைத்திலும் பார்க்க

அரிதானதாகும்.

(வாரணாசி நகரின்போது ஏரகபத்தன் எனும் நாகராஜனை

முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. சப்ப பாபஸ்ஸ அகரணங்

குஸலஸ்ஸ உபஸம்பதா

சசித்த பரியோதபனங்

ஏதங் புத்தான ஸாஸனங்

 

மனம், வாக்கு, காயம் எனும் மூன்று கதவுகளினாலும் எவ்வித

அகுசலங்களையும் செய்யாதிருத்தல் முப்பத்தேழு வகையான

போதிசார் நல்லறங்கள் எனப்படும் குசலங்களையே செய்தல்

மற்றும் மனதினை ஆரிய பாதையினுள் செலுத்தி தூய்மை

படுத்திக்கொள்ளல்” எனும் இவையே அனைத்து புத்தர்மார்களதும்

போதனையாகும்.

(ஜேதவனராமத்தில் மகா ஆனந்த தேரர் வினவிய

ஒரு வினாவிற்கு பதிலாக பகவானால் மொழியப்பட்டது)

 

  1. கன்தீ பரமங் தபோ திதிக்கா

நிப்பாணங் பரமங் வதன்தி புத்தா

நஹி பப்பஜிதோ பரூபகாதீ

சமணோ ஹோதி பரங் விஹேடயன்தோ

 

உயர்ந்த தவம் என்பது பொறுமை எனும் மகா ஷாந்தியையே

குறிக்கும். புத்த பகவான்மார்கள் அந்த நிர்வாணமோட்சத்தினையே

உத்தமம் என மொழிவார்கள். ஏனையோரை அழிப்பவர் துறவி

அல்ல. ஏனையோரை துன்புறுத்துபவர் சிரமணர் அல்ல.

(ஜேதவனராமத்தில் மகா ஆனந்த தேரர் வினவிய

ஒரு வினாவிற்கு பதிலாக பகவானால் மொழியப்பட்டது)

 

  1. அனூபவாதோஅனூபகாதோ

பாதிமொக்கே ச சங்வரோ

மத்தஞ்ஞ{தா ச பத்தஸ்மிங்

பன்தங் ச சயனாஸனங்

அதிசித்தே ச ஆயோகோ

ஏதங் புத்தான சாசனங்

 

யாருக்கும் நிந்தனைகள் பரிகாசங்கள் செய்யக்கூடாது. யாருடைய

உயிரையும் அழிக்கக்கூடாது. பாதிமொக்க சீலத்தினால்

(துறவிகளுக்கான ஒழுக்கம்) தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு

கிடைக்கும் தானத்தினை சுயவுணர்வுடன் உட்கொண்டு

சேய்மையான காடுகளில் உள்ள வனங்களில் வசிக்க வேண்டும்.

உள்ளச் சமாதியை நன்கு விருத்தி செய்துகொள்ள வேண்டும்.

புத்த பகவான்மார்களது அறிவுரை இதுவாகும்.

(ஜேதவனராமத்தில் மகா ஆனந்த தேரர் வினவிய

ஒரு வினாவிற்கு பதிலாக பகவானால் மொழியப்பட்டது)

  1. ந கஹாபணவஸ்ஸேன

தித்தி காமேசு விஜ்ஜதி

அப்பஸ்ஸாதா துகா காமா

இதி விஞ்ஞாய பண்டிதோ

பொற்காசுகள் மழையாக பொழிந்தாலும் ஒரு தனி மனிதன்

பஞ்ச காமங்கள் நினைத்து திருப்தியடைய மாட்டான். இந்த

பஞ்சகாமங்களில் உள்ள சுகம் மிகவும் அற்பமே. துன்பங்களே

அதிகம். அறிவுள்ளவர் இந்த உண்மையை உணர்ந்துக்கொள்வார்.

  1. அபி திப்பேசு காமேசு

ரதிங் சோ நாதிகச்சதி

தண்ஹக்கயரதோ ஹோதி

சம்மா சம்புத்த சாவகோ

பகவானது ஆரிய சீடன், திவ்விய காமசுகத்தின் மீதுகூட

பற்றுதலை ஏற்படுத்திக் கொள்ளமாட்டார். சம்மா சம்புத்த

பகவானது சீடன் தண்ஹாவை (பேராசையை) முழுமையாக

அழிப்பதால் கிடைக்கும் அந்த நிர்வாணமோட்சத்தினையே

மிகவும் விரும்புவர்.

(ஜேதவனராமத்தில் தர்மத்தில் ஈடுபட வீரியம் செய்யாத

ஒரு பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பஹுங் வே சரணங் யன்தி

பப்பதானி வனானி ச

ஆராமருக்கசேத்யானி

மனுஸ்ஸா பயதஜ்ஜிதா

பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கும் அநேகமான மனிதர்கள்

புகலிடமாக மலைகளை சரண புகுகின்றனர். வனங்களை

சரணடைகின்றனர். மர மட்டைகளை சரணடைகின்றனர்.

  1. நேதங் கோ சரணங் கேமங்

நேதங் சரணமுத்தமங்

நேதங் சரண மாகம்ம

சப்ப துக்கா பமுச்சதி

இந்த மர மட்டைகள் கற்குன்றுகளை சரணடைவதில் எவ்வித

பயனுமில்லை. அந்த புகலிடம் உன்னதமாகாது. இவ்வாறாக

சரணடைவதால் ஒருக்காலும் அனைத்து துக்கங்களிலிருந்தும்

விடுதலையடைய முடியாது.

  1. யோ ச புத்தங் ச தம்மங் ச

சங்கங் ச சரணங் கதோ

சத்தாரி அரியசச்சானி

சம்மப்பஞ்ஞாய பஸ்ஸதி

எவரேனும் ஒருவர் உய்த்துணர்வுடன் புத்த பகவானை

சரணடைவராயின், ஸ்ரீ சத்தர்மத்தினையும் மஹா சங்கையரையும்

சரணடைவராயின், அவர் ஞானத்தினை விருத்தி செய்துகொண்டு

நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொள்வார்.

  1. துக்கங் துக்க ஸமுப்பாதங்

துக்கஸ்ஸ ச அதிக்கமங்

அரியஞ்சட்டங்கிகங் மக்கங்

துக்கூபசமகாமினங்

துக்கம் என்பது ஆரிய சத்தியமாகும். துக்கத்தின் தோற்றமும்

ஆரிய சத்தியமாகும். துக்கத்தினை மீறிச்செல்வதால் கிடைக்கும்

நிர்வாணமோட்சமும் ஒரு ஆரிய சத்தியமாகும். துக்கத்தினை

தணிக்கும் எண்சீர் வழியும் ஒரு ஆரிய சத்தியமாகும்.

  1. ஏதங் கோ சரணங் கேமங்

ஏதங் சரணமுத்தமங்

ஏதங் சரணமாகம்ம

சப்ப துக்கா பமுச்சதி

இந்த மும்மணிகள்தான் (புத்த பகவான், ஆரிய தர்மம், மகா

சங்கையர்) ஒரே பாதுகாப்பு, இந்த மும்மணிகள்தான் உன்னதமான

புகலிடம். இந்த மும்மணிகளை சரணடைவதன் மூலமே அனைத்து

துன்பங்களிலிருந்தும் நீங்க முடியும்.

(ஜேதவனராமத்தில் கோசலை மன்னனின் புரோஹித அந்தணனை

முன்னிட்டு போதித்தவையாகும்)

  1. துல்லபோ புரிசாஜஞ்ஞோ

ந சோ சப்பத்த ஜாயதீ

யத்த சோ ஜாயதீ தீரோ

தங் குலங் சுகமேததி

பரம உத்தமமான புருஷோத்தமர் ஒருவரது தோற்றம் மிக மிக

அரிதாகும். மகா பிரக்ஞை கொண்ட அந்த புருஷோத்தமர்

எக்குலத்தில் தோன்றுகிறாரோ அந்த பரம்பரையே சுகம் பெறும்.

(ஜேதவனராமத்தில் ஆனந்த தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. சுகோ புத்தானங் உப்பாதோ

சுகா சத்தம்ம தேசனா

சுகா சங்கஸ்ஸ சாமக்கி

சமக்கானங் தபோ சுகோ

புத்த பகவான்மார்களது தோற்றம் உலகிற்கு மகா சுகமாகும்.

தூய்மையான தர்மத்தினை போதிப்பதும் பெரும் சுகமாகும். அந்த

புத்த ராஜனது சீடர்களான சங்கையரது ஒற்றுமையும் சுகமாகும்.

இவ்வாறாக ஒற்றுமையுடன் வசிக்கும் சங்கையர் செய்யும்

தியானங்களும் தர்மத்தை பின்பற்றுதலும் சுகமாகும்.

(ஜேதவனராமத்தில் அநேகமான பிக்குமார்களை முன்னிட்டு போதித்ததாகும்)

 

  1. பூஜாரஹே பூஜயதோ

புத்தே யதி வ சாவகே

பபன்ச சமதிக்கன்தே

திண்ண சோகபரித்தவே

கிலேச குழப்பங்களை மீறிச்சென்ற சோக புலம்பல்களிலிருந்து

கரைசேர்ந்த புத்த பகவானுக்கோ அல்லது புத்த சீடர்களுக்கோ

அல்லது அவ்வாறான பூஜைக்குரிய உத்தமருக்கோ எவரேனும்

அன்னம், பான வகைகள் என்பன தானமளிப்பாராயின்,

  1. தே தாதிசே பூஜயதோ

நிப்புதே அகுதோபயே

ந சக்கா புஞ்ஞங் சன்காதுங்

இமெத்தம்பி கேனசி

எவ்விதமான திடுக்கிடுதலும் பயமும் அற்ற தணிந்த மனமுடைய

இவ்வாறான உத்தமர்களை பூஜிக்கும், உபசரிக்கும் ஒருவரது

புண்ணியம் இவ்வளவுதான் என அளந்து சொல்ல யாராலும்

முடியாது.

சாது! சாது!! சாது!!!

(புத்த பகவான்மார் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

 

 

 

15.சுக வகை

(சுகம் தொடர்பாக மொழிந்த பகுதி)

 

 

  1. சுசுகங் வத ஜீவாம

வேரினேசு அவேரினோ

வேரினோசு மனுஸ்ஸேசு

விஹாராம அவேரினோ

உண்மையாகவே நாம் மிகவும் சுகமாகவே வாழுகிறோம்.

ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டும் இவ் உலகில் நாம் எவர்

மீதும் பகைமை பாராட்டாது வாழுகிறோம். பகைமை கொண்ட

மாந்தர்கள் மத்தியில் நாம் பகைமையற்று சுகமாக வாழ்கிறோம்.

(சாக்கிய நாட்டில் சாக்கிய கோலியர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுசுகங் வத ஜீவாம

ஆதுரேசு அனாதுரா

ஆதுரேசு மனுஸ்ஸேசு

விஹராம அனாதுரா

உண்மையாகவே நாம் மிகவும் சுகமாகவே வாழுகிறோம்.

கிலேசங்களால் நோய்வாய்ப்பட்ட உலகத்தின் மத்தியில்

நாம் கிலேசங்களற்ற அந்த நோய்கள் எம்மை தீண்டாதவாறு

வாழ்கிறோம். கிலேசங்களால் நோயுற்ற மாந்தர்கள் மத்தியில்

கிலேசங்களற்று நோயுறாமல் இருப்பது நாமே.

(சாக்கிய நாட்டில் சாக்கிய கோலியர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுசுகங் வத ஜீவாம

உஸ்ஸுகேசு அனுஸ்ஸுகா

உஸ்ஸுகேசு மனுஸ்ஸேசு

விஹராம அனுஸ்ஸுகா

உண்மையாகவே நாம் மிகவும் சுகமாகவே வாழுகிறோம். காம

சுகத்தினை தேடிக்கொண்டு குழம்பிப்போய் இருக்கும் இந்த

உலகில் காம சுகத்தினை துறந்து எவ்விதமான குழப்பமுமின்றி

நாம் வாழுகிறோம். காமத்தினை தேடி அலையும் உலகில்

காமசுகத்தினை துறந்த நாம் எவ்வித குழப்பமும் இன்றி

அலைச்சலுமின்றி சுகமாக வாழுகிறோம்.

(சாக்கிய நாட்டில் சாக்கிய கோலியர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுசுகங் வத ஜீவாம

யேசங் நோ நத்தி கிஞ்சனங்

பீதி பக்கா பவிஸ்ஸாம

தேவா ஆபஸ்ஸரா யதா

உண்மையாகவே நாம் மிகவும் சுகமாகவே வாழுகிறோம். எம்முள்

துக்கத்தினை தோற்றுவிக்கும் எவ்வித கிலேசங்களும் இல்லை.

ஆபஸ்ஸர எனும் பிரம்மலோகத்தின் பிரம்மாக்களைப்போன்று

எம்மால் இன்பத்தினை உட்கொண்டு (உணவாகக்கொண்டு) வாழ

முடியும்.

(பஞ்சசாலா கிராமத்தின்போது மாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஜயங் வேரங் பஸவதி

துக்கங் சேதி பராஜிதோ

உபசன்தோ சுகங் சேதி

ஹித்வா ஜயபராஜயங்

போட்டியிடச் சென்று வெற்றி பெற்றால் பகைமைதான் தோன்றும்.

அதாவது வெற்றிபெற்றவர் மீது ஏனையோர் பகைமையும்

பொறாமையுமே கொள்வர். தோல்வியடைந்தவர் துக்கமடைவார்.

ஆனால் இந்த வெற்றி தோல்வி எனும் இரண்டினையும் கைவிட்ட

முனிவரே சுகமாக வாழ்வார்.

(சாவத்திய நகரில் கோசலை மன்னரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நத்தி ராகசமோ அக்கி

நத்தி தோஸசமோ கலீ

நத்தி கந்தாசமா துக்கா

நத்தி சன்திபரங் சுகங்

ஆசைக்கு சமமானதொரு தீயில்லை. கோபத்திற்கு சமமானதொரு

குற்றமுமில்லை. பஞ்ச உபாதானஸ்கந்தத்திற்கு ஒப்பிடக்கூடிய

வேறு துக்கமும் இல்லை. அந்த உத்தம மோட்ச சுகத்தினை

விட வேறு சுகம் ஏதுமில்லை.

(சாவத்திய நகரின் போது காம சுகத்தில் மூழ்கியிருந்த இளைஞனை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஜிகச்சா பரமா ரோகா

சங்கார பரமா துகா

ஏதங் ஞத்வா யதாபூதங்

நிப்பாண பரமங் சுகங்

இந்த பசி பெரும் துக்கமாகும். காரண காரியங்களால்

தோன்றியவைதான் மிகப்பெரிய துக்கம். இந்த உண்மையை

உய்த்துணர்ந்தால் அந்த மகா மோட்சம்தான் உன்னத சுகமாகும்.

(அலவ்வ நகரில் ஒரு உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஆரோக்யா பரமா லாபா

சன்துட்டி பரமங் தனங்

விஸ்ஸாசா பரமா ஞாதி

நிப்பானங் பரமங் சுகங்

நோய்களற்ற சுகாதாரமான வாழ்வே பெரும் இலாபமாகும்.

வாழ்வினை உய்த்துணர்வதால் கிடைக்கும் இன்பமே உத்தம

தனமாகும். நம்பிக்கைதான் உன்னத உறவினன். உன்னதமான

சுகம்தான் அந்த உத்தம மோட்சமாகும்.

(ஜேதவனராமத்தில் கோசலை மன்னரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பவ்வேக ரசங் பீத்வா

ரசங் உபசமஸ்ஸ ச

நித்தரோ ஹோதி நிப்பாபோ

தம்மபீதி ரசங் பிபங்

தனிமையான வாழ்வினால் கிடைக்கும் சுவையும் கிலேசங்கள்

அழிவதால் கிடைக்கும் அந்த மோட்சத்தின் சுவையையும்

அருந்திய பிக்கு அல்லலுறும் ஒருவரல்ல. பாவம் உள்ளவரும்

அல்ல.

(வைசாலி நகரின்போது திஸ்ஸ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சாஹு தஸ்ஸனமரியானங்

சன்னிவாசோ சதா சுகோ

அதஸ்ஸனேன பாலானங்

நிச்சமேவ சுகீ சியா

உத்தம குணங்கள் கொண்ட சத்புருஷர்களை காணக்கிடைப்பது

எவ்வளவு மேன்iமானதொரு விடயம். அவர்களுடன் ஒன்றாக

வாழ்க்கிடைத்தால் எந்நாளும் சுகம்தான். பால குணம் கொண்ட

அசத்புருஷர்களை காணக்கிடைக்காத காரணத்தினாலும்

உயிர்களுக்கு எந்நேரமும் சுகத்தினையே தரும்.

(பேலுவ நகரின்போது தேவேந்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பால சங்கதசாரீஹி

தீகமத்தான சோசதி

துககோ பாலேஹி சங்வாசோ

அமித்தேனேவ சப்பதா

தீரோ ச சுகசங்வாசோ

ஞாதீனங் வ சமாகமோ

அசத்புருஷ பால குணம் கொண்டோருடன் ஒன்றாக வாழ

நேரிட்டால் அது நீண்ட காலத்திற்கு துன்பமனுபவிக்க நேரிடும்.

அந்த அஞ்ஞானமிக்கவர்களுடன் வாழ் நேரிடுவது எந்நேரமும்

எதிரிகளுடன் வாழ்வதைப்போன்று துக்கத்தினையே தரும்.

ஆனால் ஞானமுள்ள சத்புருஷர்களுடன் வாழக்கிடைப்பது நல்ல

உறவினருடன் இருப்பது போன்று பெரும் சுகமாகும்.

(பேலுவ நகரில் தேவேந்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தஸ்மாஹி

தீரங் ச, பஞ்ஞங் ச பஹுஸ்ஸுதங் ச

தோரய்ஹ சீலங் வதவன்தமாரியங்

தங் தாதிசங் சப்புரிசங் சுமேதங்

பஜேத நக்கத்தபதங் வ சந்திமா

எனவேதான் பிரக்ஞையுள்ள, வாழ்வினை உய்த்துணர்வினை

பெற்ற, தர்மத்தினை நன்கு விருத்தி செய்துகொண்ட, வீரியமுள்ள,

ஒழுக்கமுள்ள, நன்நடத்தைகளை அறிந்த உத்தமர்கள்

இருக்கிறார்கள். ஆகாயத்துடன் தொடர்புற்றிருக்கும் சந்திரனை

போன்று இவ்வாறான சுந்தரமான ஞானமுள்ள சத்புருஷ்களுடன்தான்

பழக வேண்டும்.

(பேலுவ நகரில் தேவேந்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(சுகம் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

 

 

 

16.பிய வகை

(பிரியமாதல் தொடர்பாக மொழிந்த பகுதி)

 

  1. அயோகே யுஞ்ஜமத்தானங்

யோகஸ்மிங் ச அயோஜயங்

அத்தங் ஹித்வா பியக்காஹீ

பிஹேதத்தானுயோகினங்

பின்பற்றக்கூடாத பிழையானவற்றையே சிலர் பின்பற்றுகிறார்கள்.

பின்பற்ற வேண்டிய சதிபட்டானத்தினை பழக்கப்படுத்தல் போன்ற

உயரிய விடயங்களை பின்பற்றமாட்டார்கள். தான் விரும்புவதன்

ஓடி ஓடி நன்மையை இழந்துவிடுவார். ஆனால் நன்மையானவற்றை

பின்பற்றி சுகமனுபவிப்போரை கண்டதன் பின்னர் அவர்களும்

அந்த சுகத்தினை பெற்றுக்கொள்ள விரும்புவார்கள்.

(ஜேதவனராமத்தில் ஒரே குடும்பத்தில் இருந்து துறவு பூண்ட மூவரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மா பியேஹி சமாகஞ்சி

அப்பியேஹி குதாசனங்

பியானங் அதஸ்ஸனங் துக்கங்

அப்பியானங் ச தஸ்ஸனங்

தான் விரும்பும் நபர்களுடன் அளவுக்கு மீறி நட்பு வைத்துக்கொள்ள

வேண்டாம். விரும்பாதவர்களுடன் எவ்விதத்திலும் நட்பு பாராட்டத்

தேவையில்லை. பிரியமானவர்களை மென்மேலும் விரும்புவதால்

அவர்களை காணக்கிடைக்காவிடில் துக்கமே எற்படும். விரும்பாத

நபர்களை காணக்கிடைப்பதால் துக்கமே ஏற்படும்.

(ஜேதவனராமத்தில் ஒரே குடும்பத்தில் இருந்து துறவு பூண்ட மூவரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தஸ்மா பியங் ந கயிராத

பியாபாயோ ஹி பாபகோ

கன்தா தேசங் ந விஜ்ஜன்தி

யேசங் நத்தி பியாப்பியங்

எனவே எதன் மீதும் விருப்பம் கொள்ள வேண்டாம். அது

அப்படித்தான். பிரியமானவர்களை விட்டு பிரிய நேர்ந்தால்

அது ஒருவருக்கே துக்கத்தினையே தரும். ஆனால் எவரேனும்

ஒருவருக்கு பிரியமானவை பிரியமற்றவை என எதுவும் இல்லாவிடில்

அவருள் கிலேச கட்டுக்களுக்கு இடமில்லை.

  1. பியதோ ஜாயதி சோகோ

பியதோ ஜாயதீ பயங்

பியதோ விப்பமுத்தஸ்ஸ

நத்தி சோகோ குதோ பயங்

பிரியமாவற்றினாலேயே சோகம் தோன்றுகிறது.

பிரியமானவற்றினாலேயே பயமும் தோன்றுகிறது.

பிரியமானவற்றிலிருந்து விடுதலை அடைந்த ஒருவருக்கு

சோகமில்லை. பயம் எவ்வாறு தோன்றும்?

(ஜேதவனராமத்தில் ஒரு தந்தையை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பேமதோ ஜாயதி சோகோ

பேமதோ ஜாயதீ பயங்

பேமதோ விப்பமுத்தஸ்ஸ

நத்தி சோகோ குதோ பயங்

பாசம் வைத்திருக்கும் ஒன்றினால்தான் சோகமும் பயமும்

தோன்றுகிறது. பாசத்தில் இருந்து விடுதலை அடைந்த ஒருவருக்கு

சோகமில்லை. பயம் எவ்வாறு தோன்றும்?

(ஜேதவனராமத்தில் விசாகா மகா உபாசகியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ரதியா ஜாயதி சோகோ

ரதியா ஜாயதீ பயங்

ரதியா விப்பமுத்தஸ்ஸ

நத்தி சோகோ குதோ பயங்

விருப்பினால் சோகம் தோன்றுகிறது. விருப்பினால்தான் பயமும்

தோன்றுகிறது. விருப்பிலிருந்து விடுதலை அடைந்த ஒருவருக்கு

சோகமில்லை. பயம் எவ்வாறு தோன்றும்?

(வைசாலி நகரின்போது லிச்சவி இளவரசர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. காமதோ ஜாயதி சோகோ

காமதோ ஜாயதீ பயங்

காமதோ விப்பமுத்தஸ்ஸ

நத்தி சோகோ குதோ பயங்

காமங்களினால் சோகம் தோன்றுகிறது. காமங்களினாலேயே

பயமும் தோன்றுகிறது. காமங்களிலிருந்து விடுதலை அடைந்த

ஒருவருக்கு சோகமில்லை. பயம் எவ்வாறு தோன்றும்?

(ஜேதவனராமத்தில் அனித்திகந்த குமாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தண்ஹாய ஜாயதி சோகோ

தண்ஹாய ஜாயதீ பயங்

தண்ஹாய விப்பமுத்தஸ்ஸ

நத்தி சோகோ குதோ பயங்

ஆசையினாலேயே சோகம் தோன்றுகிறது. ஆசையினாலேயே

பயமும் தோன்றுகிறது. ஆசையிலிருந்து விடுதலை அடைந் த

ஒருவருக்கு சோகமில்லை. பயம் எவ்வாறு தோன்றும்?

(ஜேதவனராமத்தில் ஒரு அந்தணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சீலதஸ்ஸன சம்பண்ணங்

தம்மட்டங் சச்சவாதினங்

அத்தனோ கம்ம குப்பானங்

தங் ஜனோ குருதே பியங்

எவரேனும் ஒருவர் சீலமிக்கவராயின், நால்வகை பேருண்மைகளை

காணுபவராயின், தர்மத்தினுள் நிலைத்திருப்பவராயின்,

சத்தியவாதியானவராயின், இந்த நன்னடத்தை கொண்ட

வாழ்வினை வாழும் ஒருவரை மக்களும் விரும்புவார்கள்.

(வேலுவனராமத்தில் ஐந்நூறு பிள்ளைகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சன்தஜாதோ அனக்காதே

மனசா ச புடோ சியா

காமேசு ச அப்படிபத்தசித்தோ

உத்தங் சோதோதி வுச்சதி

மோட்சத்தின் மீது ஆசை கொண்ட ஒருவர் யாரிடமும் கூறாவிடிலும்,

அவர் மனதினால் அந்த மகா மோட்சத்தினை ஸ்பரிசம்

செய்வாராயின் அவருடைய மனம் காமங்களில் ஒட்டிக்கொள்ளாது.

அவரே மேல்நோக்கி பயணிப்பவர் எனக் கூறப்படுபவர் அவரே.

(ஜேதவனராமத்தில் அனாகாமீ நிலையை எய்திய ஒரு தேரரை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. சிரப்பவாசிங் புரிசங்

தூரதோ சொத்திமாகதங்

ஞாதிமித்தா சுஹஜ்ஜா ச

அபினந்தன்தி ஆகதங்

நிறைய நாட்களுக்கு பின்னர் வெளிநாட்டில் இருந்து ஒருவர் பல

யோசனை தூரத்தினை கடந்து சுகமாக திரும்பி வரும்போது

அவருடைய உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்போர் அவரை

அன்புடன் வறவேற்பார்கள்.

(வாராணாசியின் போது நந்திய உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ததேவ கதபுஞ்ஞம்பி

அஸ்மா லோகா பரங் கதங்

புஞ்ஞானி பதிகண்ஹன்தி

பியங் ஞாதிங் வ ஆகதங்

 

புண்ணியங்களை செய்து கொண்டாலும் அப்படித்தான்.

இவ்வுலகினை விட்டு பரலோகம் செல்லும்போது தான் இதுவரை

செய்த புண்ணியங்கள் தன்னை தூரப்பிரதேசத்தில் இருந்து வரும்

பிரியமான ஒருவரை உறவினர்கள் வரவேற்று ஏற்பதைப்போன்று

வரவேற்கும்.

(வாராணாசியின் போது நந்திய உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(சுகம் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

 

 

 

17.கோத வகை

(குரோதம் தொடர்பாக மொழிந்த பகுதி)

 

  1. கோதங் ஜஹே விப்பஜஹெய்ய மானங்

சஞ்ஞோஜனங் சப்பமதிக்கமெய்ய

தங் நாமரூபஸ்மிங் அசஜ்ஜமானங்

அகிஞ்சனங் நானுபதன்தி துக்கா

இந்த குரோதத்தினை அழிக்க வேண்டும். இந்த அக்ம்பாவத்தினை

விசேடமாக அழிக்க வேண்டும். அனைத்து பிறவிக்கட்டுக்களையும்

மீறிச்செல்ல வேண்டும். நாமரூபத்தில் ஒட்டிக்கொள்ளாத

கிலேசங்களற்ற நபரின் பின்னே துக்கம் பின்தொடர்ந்து வராது.

(நீக்ரோதாராமத்தில் ரோஹீனி எனும் குமரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ வே உப்பதிதங் கோதங்

ரதங் பன்தங்வ தாரயே

தமஹங் சாரதிங் ப்ரூமி

ரஸ்மிக்காஹோ இதரோ ஜனோ

எவராயினும் ஒருவர் தன்னுள்ளே தோன்றிய குரோதத்தினை

அழித்துவிட்டால் அவர் வேகமாக பயணிக்கும் குதிரை வண்டியினை

கட்டுப்படுத்தி சரியான பாதையில் இட்டவர் போலாவார். அவரையே

நான் சிறந்த சாரதி என்பேன். ஏனையோர் வெறும் மூக்குக்கயிறை

மாத்திரமே பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

(அக்காலவ சேதியத்தின்போது ஒரு பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அக்கோதேன் ஜினே கோதங்

அசாதுங் சாதுனா ஜினே

ஜினே கதரியங் தானேன

சச்சேன அலிகவாதினங்

 

குரோதத்தினை குரோதம் கொள்ளாதிருப்பதன் மூலமே ஜெயிக்க

முடியும். தீமையை நன்மையினாலேயே ஜெயிக்க முடியும்.

உலோபித்தனத்தினை தானமளிப்பதன் மூலமே ஜெயிக்க முடியும்.

பொய் உரைப்பவனை சத்திய வார்த்தைகளினாலேயே ஜெயிக்க

முடியும்.

(வேலுவனராமத்தில் உத்தரை குமரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சச்சங் பணே ந குஜ்ஜெய்ய

தஜ்ஜாப்பஸ்மிம்பி யாசிதோ

ஏதேஹி தீஹி டானேஹி

கச்சே தேவான சன்திகே

வாய்மையையே பேச வேண்டும். கோபங்கொள்ளக்கூடாது.

எவரேனும் ஏதேனும் கேட்டால் தன்னிடம் சிறிதளவே இருந்தாலும்

தானமளிக்க வேண்டும். இம் மூன்றினையும் பழக்கப்படுத்தினால்தான்

தேவர்கள் மத்தியில் பிறக்கலாம்.

(ஜேதவனராமத்தில் மகா மொக்கல்லான அரஹத் தேரரை

முனனிட்டு போதித்ததாகும்)

  1. அஹின்சகா யே முனயோ

நிச்சங் காயேன சங்வுதா

தே யன்தி அசுசுதங் டானங்

யத்த கன்த்வா ந சோசரே

இந்த முனிவர்கள் மிகவும் அஹிம்சையானவர்கள். எந்நேரமும்

உடலை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். ஏதேனும்

ஓரிடத்திற்கு சென்று சோகமில்லாமல் இருக்க முடியுமாயின் அந்த

சோகங்களற்ற மரணமற்ற உன்னத மோட்சத்தினை நோக்கியே

அவர்கள் பயணிப்பார்கள்.

(சாகேத நகரில் சாகேத எனும் அந்தணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சதா ஜாகரமானானங்

அஹோரத்தானுசிக்கினங்

நிப்பானங் அதிமுத்தானங்

அத்தங் கச்சன்தி ஆசவா

 

எந்நேரமும் உறக்கத்தினை கட்டுப்படுத்தி இரவு பகல் எனும்

இருவேளைகளிலும் தர்மத்தினை பின்பற்றும் மோட்சத்தில்

ஒட்டியிருக்கும் சுந்தர மனம் கொண்ட உத்தமர்களது அனைத்து

கிலேசங்களும் அழிந்தொழிந்து விடும்.

(ராஜகிருகத்தின்போது புண்ணா எனும் பணிப்பெண்ணை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. போராணமேதங் அதுல

னேதங் அஜ்ஜதனாமிவ

நின்தன்தி துண்ஹீமாசீனங்

நின்தன்தி பஹுபாணினங்

மிதபாணிம்பி நின்தன்தி

நத்தி லோகே அனந்திதோ

புண்ணியமிக்க அதுல. இன்று மட்டுமல்ல. பண்டைய

காலத்திலிருந்தே இப்படித்தான். அமைதியாக இருந்தாலும்

ஏசுவார்கள். அதிகமாக பேசினாலும் ஏசுவார்கள். அளவுடன்

பேசினாலும் ஏசுவார்கள். இந்த உலகில் நிந்தனைக்கு

உட்படாதவர்கள் யாருமே இல்லை.

  1. நசாஹு ந ச பவிஸ்ஸதி

ந சேதரஹி விஜ்ஜதி

ஏகன்தங் நிந்திதோ போசோ

ஏகன்தங் வா பசங்சிதோ

வெறும் நி;ந்தனைகளை மட்டும் பெற்றவரோ அல்லது புகழை

மாத்திரமே பெற்றவரோ முற்காலத்தில் இருக்கவுமில்லை.

இக்காலத்திலும் இல்லை. எதிர்காலத்தில் இருக்கப்போவதுமில்லை.

  1. யங் சே விஞ்ஞ{ பசங்சன்தி

அனுவிச்ச சுவே சுவே

அச்சித்தவுத்திங் மேதாவிங்

பஞ்ஞாசீலசமாஹிதங்

ஞானமுள்ள ஒருவர் எவரேனும் ஒருவரை புகழ்ந்து பேசுவாராயின்

அவரது தூய்மையான வாழ்வு, ஞானம், சீலம் (ஒழுக்கமிகுந்த

வாழ்க்கை), உளச்சமாதி, பிரக்ஞை என்பன நன்கு ஆராய்ந்து

பார்த்து அறிந்த பின்னரே அவ்வாறு புகழ்ந்து பேச வேண்டும்.

  1. நெக்கங் ஜம்போனதஸ்ஸேவ

கோ தங் நிந்திதுமரஹதி

தேவாபி நங் பசங்சன்தி

ப்ரஹ்முனாபி பசங்சிதோ

இவ்வாறானவர் தூய்மையான பொன்னாலான உருவத்தினை

போன்று ஜொலிப்பார். அவ்வாறானவரை நிந்தனைக்கு உட்படுத்த

யார் தான் தகுதியானவர்? அவரை தேவர்களும் புகழுவார்கள்.

பிரம்மர்கள் கூட புகழுவார்கள்.

(ஜேதவனராமத்தில் அதுல எனும் உபாசகரை முன்னிட்டு போதித்தவையாகும்)

  1. காயப்பகோபங் ரக்கெய்ய

காயேன சங்வுதோ சியா

காயதுச்சரிதங் ஹித்வா

காயேன சுசரிதங் சரே

இந்த உடலை சினங்கொள்ள விடாது பாதுகாத்துக்கொள்ள

வேண்டும். உடலினை கட்டுப்படுத்தி கொண்டவராக இருக்க

வேண்டும். உடலின் செய்யும் தீமையான செயல்களில் இருந்து

(உயிர்களை கொல்லுதல், களவு எடுத்தல், தகாத காம செயலில்

ஈடுபடுதல்) விடுபட்டு நன்மையானவற்றை செய்தல் வேண்டும்.

(வேலுவனராமத்தில் சப்பக்கிய பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. வசீபகோபங் ரக்கெய்ய

வாசாய சங்வுதோ சியா

வசீதுச்சரிதங் ஹித்வா

வாசாய சுசரிதங் சரே

பேச்சினை சினங்கொள்ள விடாது பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பேச்சினை கட்டுப்படுத்தி கொண்டவராக இருக்க வேண்டும்.

பேச்சின் மூலம் செய்யும் தீமையான செயல்களில் இருந்து (பொய்

சொல்லுதல், புறங்கூறுதல், கொடிய வார்த்தைகளை பேசுதல்,

அர்த்தமற்ற பேச்சுக்களை பேசுதல்) விடுபட்டு மனதினால் நன்மை

வேண்டும்.

(வேலுவனராமத்தில் சப்பக்கிய பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மனோபகோபங் ரக்கெய்ய

மனசா சங்வுதோ சியா

மனோதுச்சரிதங் ஹித்வா

மனசா சுசரிதங் சரே

இந்த மனதினை சினங்கொள்ள விடாது பாதுகாத்துக்கொள்ள

வேண்டும். மனதினை கட்டுப்படுத்தி கொண்டவராக இருக்க

வேண்டும். மனதினால் செய்யும் தீமைகளில் இருந்து (பிறர்

உடமைகளின் மீது ஆசை கொள்ளுதல், கோபம், பிழையான

பார்வை) விடுபட்டு நன்மையானவற்றில் மனதை ஈடுபடுத்த

வேண்டும்.

(வேலுவனராமத்தில் சப்பக்கிய பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. காயேன சங்வுதா தீரா

அதோ வாசாய சங்வுதா

மனசா சங்வுதா தீரா

தே வே சுபரிசங்வுதா

பிரக்ஞையுள்ளவர் உடலினாலும் கட்டுப்பட்டவராவார்.

பேச்சினாலும் மனதினாலும் கட்டுப்பட்டவராவார். இவ்வாறான

ஞானமுள்ளவர்கள் கண்டிப்பாக தன்னை மிகவும் சிறப்பான

முறையில் கட்டுப்படுத்திக்கொள்வார்கள்.

(வேலுவனராமத்தில் சப்பக்கிய பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(குரோதம் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

18.மல வகை

(துரு தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. பண்டுபலாசோவ தானிசி

யமபுரிசாபி ச தங் உபட்டிதா

உய்யோகமுகே ச திட்டஸி

பாதெய்யம்பி ச தே நவிஜ்ஜதி

உங்களது வாழ்வு நன்கு பழுத்த இலையை போன்று

உதிர்ந்து போவதற்கு தயாராகத்தானே இருக்கிறது. இப்போது

உங்களது அருகில் யம தூதர்களும் வந்திருக்கிறார்கள். நீங்கள்

அழிவின் வாசல் வரை வந்துள்ளீர்கள் அல்லவா? பரலோக

வாழ்வின் செலவிற்காக எவ்வித புண்ணியமும் செய்தது போல்

தென்படவுமில்லை

(ஜேதவனராமத்தில் முதுமையடைந்த ஒரு உபாசகரை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. சோ கரோதி தீபமத்தனோ

கிப்பங் வாயாம பண்டிதோ பவ

நித்தன்தமலோ அனங்கணோ

திப்பங் அரிய பூமிமேஹிசி

தனக்கு புகலிடமாக தன்னுள் ஒரு தீவினை

உருவாக்கிக்கொள்ளுங்கள். சீக்கிரமாக வீரியம்

செய்யுங்கள். பிரக்ஞையுள்ளவராகுங்கள். கிலேச துருவினை

நீக்கி நிக்கிலேசமானவராகுங்கள். திவ்வியமான ஆரிய பூமிக்கு

வாருங்கள்.

(ஜேதவனராமத்தில் முதுமையடைந்த ஒரு உபாசகரை

முன்னிட்டு போதித்ததாகும்

  1. உபனீதவயோ ச தானிசி

சம்பயாதோசி யமஸ்ஸ சன்திகே

வாசோபி ச தே நத்தி

அன்தரா பாதெய்யம்பி ச தே நவிஜ்ஜதி

இப்போது நீங்கள் நன்கு முதுமையடைந்து இருக்கிறீர்கள்

அல்லவா? மரணத்தருவாயில் அல்லவா இருக்கிறீர்கள்.

யமனின் அருகிலே சென்றுவிட்டீர்கள். உங்களது வாழ்விற்கும்

மரணத்திற்கும் இடையில் வெகு காலமில்லை. ? பரலோக

வாழ்வின் செலவிற்காக எவ்வித புண்ணியமும் செய்தது போல்

தென்படவுமில்லை

(ஜேதவனராமத்தில் முதுமையடைந்த ஒரு உபாசகரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சோ கரோஹி தீபமத்தனோ

கிப்பங் வாயாம பண்டிதோ பவ

நித்தன்தமலோ அணங்கணோ

ந புன ஜாதிஜரங் உபேஹிஸி

தனக்கு புகலிடமாக தன்னுள் ஒரு தீவினை

உருவாக்கிக்கொள்ளுங்கள். சீக்கிரமாக வீரியம் செய்யுங்கள்.

பிரக்ஞையுள்ளவராகுங்கள். கிலேச துருவினை நீக்கி

நிக்கிலேசமானவராகுங்கள். மீண்டும் இந்த பிறப்பும் இறப்பும்

கொண்ட இந்த உலகிற்கு வரவேண்டாம்.

(ஜேதவனராமத்தில் முதுமையடைந்த ஒரு உபாசகரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அனுபுப்பேன மேதாவி

தோகதோகங் கணே கணே

கம்மாரோ ரஜதஸ்ஸேவ

நித்தமே மலமத்தனோ

பொற்கொல்லன் பொன்னில் இருக்கும் துருவினை கொஞ்சம்

கொஞ்சமாக அகற்றி பொன்னை தூய்மைப்படுத்துவதைப்போன்று

ஞானமுள்ளவர் சிறிது சிறிதாக வாய்ப்பு கிடைக்கும்போதே

மனதினை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(ஜேதவனராமத்தில் ஒரு அந்தணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அயஸா வ மலங் சமுட்டிதங்

ததுட்டாய தமேவ காததி

ஏவங் அதிதோன சாரினங்

சககம்மானி நயன்தி துக்கதிங்

இரும்பினில் தோன்றும் துருவே அந்த இரும்பினை அழிக்க

வல்லது போல் நல்வகை சதிபட்டான தர்மத்தினுள் தன்னை

நிலைக்கச்செய்யாமல் அன்னம், சீவரம், உறையுள், ஔடதம்

என்பனவற்றை மாத்திரம் அனுபவித்துக்கொண்டு வாழும் ஒருவரது

கர்மமே அவரை நால்வகை நரகங்களுக்கு இழுத்துச்செல்லும்.

(ஜேதவனராமத்தில் திஸ்ஸ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அசஜ்ஜாய மலா மன்தா

அனுட்டான மலா கரா

மலங் வண்ணஸ்ஸ கோசஜ்ஜங்

பமாதோ ரக்கதோ மலங்

அடிக்கடி பாராயணம் செய்யாவிடில் மனனம் செய்துகொண்டவைக்கு

துருப்பிடிக்கும் (மறந்துபொகும்). முயற்சியுடன் வேலை

செய்யாவிடில் வீட்டு வாசல்களின் வேலைகள் துரு பிடித்துவிடும்

(பயனற்றுபோகும்). சோம்பலுடன் இருந்தால் உடல் அழகு

துருப்பிடித்துவிடும்(கெடடுப்போகும்). வயல்வெளி என்பன

பாதுகாப்பவர் அவற்றை பாதுகாப்பதில் தாமதமாகினால் அவை

துருப்பிடிக்கும் (அழிந்துவிடும்).

(ஜேதவனராமத்தில் லாலுதாயி எனும் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மலித்தியா துச்சரிதங்

மச்சேரங் தததோ மலங்

மலா வே பாபகா தம்மா

அஸ்மிங் லோகே பரம்ஹி ச

ஒழுக்கத்தினை கெடுத்துக்கொள்வது பெண்ணிற்கு இழுக்காகும்.

தானமளிப்பவருக்கு உலோபித்தனம் இருப்பது இழுக்காகும்.

பாவமிகுந்த அகுசலங்கள் இவ் உலகம் மற்றும் மறு உலகம்

எனும் இரு உலகங்களுக்கும் இழுக்காகும்.

(ஜேதவனராமத்தில் ஒரு குல புத்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ததோ மலா மலதரங்

அவிஜ்ஜா பரமங் மலங்

ஏதங் மலங் பஹத்வான

நிம்மலா ஹோத பிக்கவோ

இவ் அனைத்து துருவிலும் பார்க்க அதி பயங்கரமான துரு

இருக்கிறது. அதுவே அஞ்ஞானம். புண்ணியமிகு பிக்குகளே,

இந்த அஞ்ஞானம் எனும் மகா துருவினை இல்லாதொழித்து

விடுங்கள். நிர்மலமானவர்களாகுங்கள்.

(ஜேதவனராமத்தில் ஒரு குல புத்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுஜீவங் அஹிரிகேன

காகசூரேன தங்சினா

பக்கந்தினா பகப்பேன

சன்கிலிட்டேன ஜீவிதங்

பாவங்கள் செய்வதற்கு வெட்கம் கொள்ளாத, காகத்தினை

போன்று ஏனையோரிடமிருந்து பிடுங்கி சாப்பிடும், நன்றியில்லாத,

தன்னிச்சையாக செயற்படும், இழுக்கடைந்த வாழ்வினை வாழும்

ஒருவருக்கு இந்த இலாப உபசாரங்களின் மத்தியில் மிகவும்

இலகுவாக வாழ முடியும்.

(ஜேதவனராமத்தில் துல்லசாரிக தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. ஹிரிமதா ச துஜ்ஜீவங்

நிச்சங் சுசிகவேசினா

அலீனேனா பகப்பேன

சுத்தா ஜீவேன பஸ்ஸதா

ஆனால் பாவங்கள் செய்வதற்கு வெட்கிப்பாராயின், எந்நேரமும்

தூய்மையான வாழ்வினை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பாராயின்,

முரட்டுத்தனம் இல்லாமல் தன்னிச்சையாகவே நடந்துகொள்ளாமல்

இருப்பாராயின், நன்மையான வாழ்வினை வாழும், தூய்மையான

சீலமுள்ள வாழ்வின் பெறுமதியை அறிந்தவராயின், அந்த பிக்கு

மிகவும் கஷ்டத்துடன் தான் வாழ நேரிடும்.

(ஜேதவனராமத்தில் துல்லசாரிக தேரரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. யோ பாணமதிபாதேதி

முசாவாதங் ச பாசதி

லோகே அதின்னங் ஆதியதி

பரதாரங் ச கச்சதி

எவரேனும் பிற உயிர்களை கொல்வாராயின், பொய்

உரைப்பாராயின், திருடுவாராயின், தன் மனைவி அல்லது கணவன்

அல்லாத வேற்று நபர்களுடன் காமத்தில் ஈடுபடுபவராயின்,

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுராமேரய பானங் ச

யோ நரோ அனுயுஞ்ஜதி

இதேவ போசோ லோகஸ்மிங்

மூலங் கணதி அத்தனோ

அதேபோல் மதுபானம், போதைபொருள் என்பன பாவிப்பாராயின்,

அவர் தன் வாழ்விலுள்ள குசல் (நன்மையான) வேர்களை இந்த

வாழ்விலேயே அழித்துக்கொள்பவராவார்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஏவங்போ புரிச ஜானாஹி

பாபதம்மா அசஞ்ஞதா

மா தங் லோபோ அதம்மோ ச

சிரங் துக்காய ரந்தயுங்

புண்ணியமிக்க புருசரே, பாவம் என்பது கட்டுபாடுகள் இல்லாமல்

போகும் ஒன்றாக அறிந்துகொள்ளுங்கள். இந்த மனதில் தோன்றும், ஆசை, கோபம். என்பனவற்றால் உங்களை நீண்ட காலம் துயர்

அனுபவிக்க நேரிடும் நரகத்திற்கு இழுத்துச்செல்ல அனுமதிக்க

வேண்டாம்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு உபாசகரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ததாதி வே யதா சத்தங்

யதா பசாதனங் ஜனோ

தத்த வே மன்கு யோ ஹோதி

பரேசங் பான போஜனே

ந சோ திவா வா ரத்திங் வா

சமாதிங் அதிகச்சதி

ஒருவர் தன் ஷ்ரத்தாவின் (மும்மணிகளின் மீதான பக்தியின்)

அளவிற்கே, விருப்பின் அளவிற்கே தானமளிப்பார். எனவே

இவ்வாறாக ஏனையோர் தானமளிக்கும் போது அது தொடர்பாக

மனம் நொந்துக்கொள்வதாயின் அவரால் இராக்காலத்திலோ

அல்லது பகற்காலத்திலோ உளச்சமாதியை ஏற்படுத்திக்கொள்ள

முடியாது.

(ஜேதவனராமத்தில் திஸ்ஸ எனும் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ சேதங் சமுச்சின்னங்

மூலகச்சங் சமூஹதங்

ச வே திவா வா ரத்திங் வா

சமாதிங் அதிகச்சதி

ஒருவரால் இந்த மனம் நொந்துகொள்ளுதலை முதலிலேயே

இல்லாதொழித்துக் கொள்ள முடியுமாயின், உண்மையிலேயே

இராக்காலத்திலோ அல்லது பகற்காலத்திலோ எக்காலத்தில்

வேண்டுமானாலும் அவரால் உளச்சமாதியை ஏற்படுத்திக்கொள்ள

முடியும்.

(ஜேதவனராமத்தில் திஸ்ஸ எனும் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நத்தி ராகசமோ அக்கி

நத்தி தோசசமோ கஹோ

நத்தி மோஹ சமங் ஜாலங்

நத்தி தண்ஹா சமா நதீ

ஆசைக்கு நிகரான வேறு தீயில்லை. கோபத்திற்கு நிகரான வேறு

பிடிப்பு இல்லை. அறியாமைக்கு நிகரான வேறு வலையில்லை.

தண்ஹாவிற்கு (பேராசைக்கு) நிகரான நதியுமில்லை.

(ஜேதவனராமத்தில் ஏழு உபாசரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுதஸ்ஸங் வஜ்ஜமஞ்ஞெசங்

அத்தனோ பன துத்தசங்

பரேசங் ஹி சோ வஜ்ஜானி

ஓபுணாதி யதா பூசங்

அத்தனோ பன சாதேதி

கலிங் வ கிதவா சடோ

ஏனையோரது தவறுகள் என்றால் மிகவும் தெளிவாக தெரியும்.

ஆனால் தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய தவறைக்கூட காண

முடியாது. அவர் மேலிடத்தில் இருந்து குப்பைகளை புடைப்பதைப்

போன்று ஏனையோரது குறைகளையே தேடிக்கொண்டிருப்பார்.

ஆனால் தன்னுடைய பெரிய தவறுகளையும் இலைகுலைகளால்

தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் வேடனைப் போன்று

மறைத்துக்கொண்டிருப்பார்.

(பத்திய நகரில் மெண்டக சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பரவஜ்ஜானுபஸ்ஸிஸ்ஸ

நிச்சங் உப்ஜான சஞ்ஞினோ

ஆசவா தஸ்ஸ வட்டன்தி

ஆரா சோ ஆஸவக்கயா

ஏனையோரது தவறுகளையென்றால் தேடிக்கொண்டிருப்பது,

ஏனையோரை குறைகூறிக்கொண்டிருப்பதென்றால், அவருள்

ஆசவங்கள் மாத்திரமே வளரும். ஆசவங்கள் அழிப்பதென்றால்

அவருக்கு மிகவும் சேய்மையானதாகவே இருக்கும்.

(ஜேதவனராமத்தில் உஜ்ஜானசஞ்ஞீ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஆகாசே பதங் நத்தி

சமணோ நத்தி பாஹிரே

பபஞ்சாபிரதா பஜா

நிப்பபஞ்சா ததாகதா

பறவைகளின் பாதச்சுவடுகளை வானில் காண முடியாது.

அதேபோல் ஞானப்பேறுகளை பெற்ற துறவிகளை புத்த

சாசனத்திலன்று வேறு இடங்களில் காண முடியாது. இந்த

உயிர்கள் அகுசலங்களையே சிந்தித்துகொண்டு அவற்றிலேயே

ஒட்டுண்டு இருக்கின்றன. ஆனால்

ததாகத புத்த பகவான்மார்கள் அகுசல சிந்தனைகள் அற்றே

இருக்கின்றனர்.

(பகவான் பரிநிர்வாணம் எய்தும் சந்தர்ப்பத்தில் சுபத்திரன் எனும்

பரிப்பாஜகனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஆகாசே பதங் நத்தி

சமணோ நத்தி பாஹிரே

சங்காரா சஸ்ஸதா நத்தி

தத்தி புத்தானங் இஞ்ஜிதங்

பறவைகளின் பாதச்சுவடுகளை வானில் காண முடியாது.

அதேபோல் ஞானப்பேறுகளை பெற்ற துறவிகளை புத்த

சாசனத்திலன்று வேறு இடங்களில் காண முடியாது. காரண

காரியங்களால் தோற்றம் பெற்ற எதுவுமே நிரந்தரமில்லை. இந்த

நிரந்தரமற்றவை மாற்றமடையும் போது புத்த பகவான்மாரது

உள்ளத்தில் எவ்வித கலக்கமும் ஏற்படாது.

(பகவான் பரிநிர்வாணம் எய்தும் சந்தர்ப்பத்தில் சுபத்திரன் எனும்

பரிப்பாஜகனை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(அஞ்ஞான துரு தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

 

 

19.தம்மட்ட வகை

(தர்மத்தில் நிலைத்திருப்பது

தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. ந தேன ஹோதி தம்மட்டோ

யேனத்தங் சஹசா நயே

யோ ச அத்தங் அனத்தங் ச

உபோ நிச்செய்ய பண்டிதோ

எவரேனும் ஒரு நீதிபதி அநீதியான முறையில் தீர்ப்பு

அளிப்பாராயின், அவரது தீர்ப்பு தர்மத்தில் நிலைத்ததல்ல.

ஆனால் ஞானமுள்ளவர் நீதி அநீதி என்பன நன்கு அறிந்தே

தீர்ப்பு அளிப்பார்.

(ஜேதவனராமத்தில் ஒரு நீதிபதியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அசாஹசேன தம்மேன

சமேன நயதீ பரே

தம்மஸ்ஸ குத்தோ மேதாவி

தம்மட்டோதி பவுச்சதி

சாதாரண முறையில் தர்மத்தில் நிலைத்திருந்து ஒருவர்

வழக்குகளில் முடிவெடுப்பாராயின், தர்மத்தில் தன்னை

பாதுகாத்துக்கொள்ளும் அந்த ஞானமுள்ளவர் தீர்ப்புக்களிலும்

தர்மத்தில் நிலைத்திருப்பார் என்றே கூற வேண்டும்.

(ஜேதவனராமத்தில் ஒரு நீதிபதியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந தேன பண்டிதோ ஹோதி

யாவதா பஹு பாசதி

கேமீ ஆவேரோ அபயோ

பண்டிதோதி பவுச்சதி

கூட்டத்தின் மத்தியில் கற்றவன் போன்று வாயாடித்தனமான

பேசுவதால் மாத்திரம் ஒருவர் அறிவாளியாகமாட்டார். ஆனால்

எவரேனும் ஒருவர் யாரையும் அச்சத்திற்கு உட்படுத்தாவிடில்,

பகைமை ஏற்படும் பஞ்ச மகா பாதகங்களை செய்யாவிடில்

அகுசலங்களில் (தீமைகளில்) இருந்து நீங்கி பயமின்றி

இருப்பாராயின் அவரே உண்மையான அறிவாளியாவார்.

(ஜேதவனராமத்தில் சப்பக்கிய பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந தாவதா தம்மதரோ

யாவதா பஹுபாசதி

யோ ச அப்பம்பி சுத்வான

தம்மங் காயேன பஸ்ஸதி

ச வே தம்மதரோ ஹோதி

யோ தம்மங் நப்பமஜ்ஜதி

எவரேனும் ஒருவர் அனைத்து இடங்களிலும் தர்மத்தினை

போதித்து செல்வதால் மாத்திரம் அவர் தர்மத்தினை உள்தாங்கிய

பிக்குவாக மாட்டார். ஆனால் தர்மத்தினை சிறிதளவே கேட்டாலும்

அவ்வாறு கேட்ட அந்த தர்மத்தினை தன்னுள் பயிற்சி செய்து

அந்த உத்தம தர்மத்தினை தன்னுள் காண்பாராயின், தர்மத்தில்

ஈடுபட தாமதமாகாத அவர் உண்மையிலேயே தர்மத்தினை

தன்னுள் தாங்கியவராவார்.

(ஜேதவனராமத்தில் ஏகோதான தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந தேன தேரோ ஹோதி

யேனஸ்ஸ பலிதங் சிரோ

பரிபக்கோ வயோ தஸ்ஸ

மோகஜின்னோதி வுச்சதி

எவரேனும் ஒரு பிக்கு முடி நரைத்து முதுமையடைந்தார் எனும்

ஒரு காரணத்தினால் மாத்திரம் அவர் ஷஸ்தவிர0 (மூத்த பிக்கு)

என குறிப்பிட முடியாது. வயது மாத்திரமே முதிர்ந்து சென்ற

அவரை வெறுமையான (தர்மத்தினை உட் தாங்கியிராத) கிழ

மனிதர் என்றே குறிப்பிட வேண்டும்.

(ஜேதவனராமத்தில் லகுண்டக பத்திய எனும்

தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யம்ஹி சச்சங் ச தம்மோ ச

அஹிங்சா சஞ்ஞமோ தமோ

ச வே வன்தமலோ தீரோ

தேரோ இதி பவுச்சதி

ஒருவருள் சத்தியமும் தர்மமும் இருக்குமாயின், அஹிம்சையும்,

கட்டுப்பாடும் புலனடக்கமும் இருக்குமாயின், அவர் உண்மையிலேயே

ஆசை, கோபம், அறியாமை எனும் கிலேசங்களை வாந்தியெடுத்த

ஞானமுள்ள ஒருவராவார்.

அந்த பிக்குவே ஷஸ்தவிர0 என அழைக்க தகுதியானவராவார்.

(ஜேதவனராமத்தில் லகுண்டக பத்திய எனும் தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந வாக்கரண மத்தேன

வண்ணபொக்கரதாய வா

சாதுரூபோ நரோ ஹோதி

இஸ்ஸுகீ மச்சரி சடோ

குரல் இனிமையாக இருக்கின்றது என்று, உருவம் அழகாக

இருக்கிறது என்று, ஒருவர் நல்லவராக மாட்டார். அவருள்

பொறாமை, கஞ்சத்தனம், கபடத்தனம் என்பவை இருக்குமாயின்

அவர் நல்லவராக மாட்டார்.

(ஜேதவனராமத்தில் பெருமளவிலான பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ சே தங் சமுச்சின்னங்

மூலகச்சங் சமூஹதங்

ச வன்ததோசோ மேதாவி

சாதுரூபோதி வுச்சதி

எவரேனும் இந்த (மேற்குறிப்பிடப்பட்டுள்ள) குறைபாடுகளை

முதலிலேயே அழித்திருப்பாராயின், அவர் அந்த குறைபாடுகளை

வாந்தியெடுத்த ஞானமுள்ளவராவார். ஷநல்ல மனிதர்0 என

குறிப்பிடத்தகுந்தவர் அவரே.

(ஜேதவனராமத்தில் பெருமளவிலான பிக்குமாரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந முண்டகேன சமணோ

அப்பதோ அலிகங் பணங்

இச்சாலோபசமாபண்ணோ

சமணோ கிங் பவிஸ்ஸதி

நன்கு தலை மயிர் தாடி என்பன சிரைத்து இருந்தார் என்பதற்காக

ஒருவர் சிரமணர் (பிக்கு) ஆக மாட்டார். அவருள் சீலம்

(ஒழுக்கம்) இல்லையாயின், பொய் உரைப்பாராயின், பாவமிகுந்த

ஆசைகளுடன் உலோபித்தனத்துடன் வாழ்வாராயின் அவர் எவ்

வகையில் சிரமணராக முடியும்?

(ஜேதவனராமத்தில் ஹத்தக தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ ச சமேதி பாபனி

அணுங்தூலானி சப்பசோ

சமிதத்தா ஹி பாபானங்

சமணோதி பவுச்சதி

எவரேனும் சிறியதாகட்டும் அல்லது பெரியதாகட்டும் இந்த

அனைத்து பாப அகுசலங்களையும் அழித்துவிடுவாராயின் அதன்

காரணமாகவே அவர் சிரமணர் என அழைக்கப்படுவார்.

(ஜேதவனராமத்தில் ஹத்தக தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந தேன பிக்கு ஹோதி

யாசதா பிக்கதே பரே

விஸ்ஸங் தம்மங் சமாதாய

பிக்கு ஹோதி ந தாவதா

பிண்டபாதம் செய்து (வீடு வீடாகச்சென்று ஐயமேற்றல்)

ஏனையோர் அளிக்கும் உணவை ஏற்றே மிகுந்த காலம்

வாழ்ந்தார் என்பதனால் ஒருவர் ஷசிரமணர்0 (பிக்கு) ஆக மாட்டார்.

பாவமிகுந்த செயற்பாடுகளை பழக்கப்படுத்திக்கொண்டிருக்கும்

வரை அவர் ஒரு பிக்கு என குறிப்பிட முடியாது.

(ஜேதவனராமத்தில் ஒரு பரிப்பாஜக அந்தணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோத புஞ்ஞங் ச பாபங் ச

பாஹெத்வா ப்ரஹ்மசரிய வா

சங்காய லோகே சரதி

ச வே பிக்கூதி வுச்சதி

எவரேனும் இந்த சாசனத்தில் நற்குணதர்மங்களை விருத்தி

செய்து உய்த்துணர்வுடனேயே பாவ புண்ணியங்களை துறந்து

பிரம்மச்சரிய வாழ்வினை மேற்கொள்வாராயின், அறிவுடன்

உலகத்தோருடன் பழகுவாராயின், அவரே பிக்கு ஆவார்.

(ஜேதவனராமத்தில் ஒரு பரிப்பாஜக அந்தணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந மோனேன முனீ ஹோதி

மூழ்ஹரூபோ அவித்தசு

யோ ச துலங்வ பக்கய்ஹ

வரமாதாய பண்டிதோ

பிரக்ஞை அற்றவர் முட்டாள்தனமாக பேசாமல் இருந்து

மௌனத்தினை கடைபிடித்தார் என்பதால் முனிவர் ஆகமாட்டார்.

ஞானமுள்ளவர் தராசில் நிறுத்து எடுப்பதை போன்றே

உன்னதமானதை தேர்வு செய்துகொள்வார்.

(ஜேதவனராமத்தில் சில தபஸ்விகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பாபானி பரிவஜ்ஜேதி

ச முனீ தேன சோ முனீ

யோ முனாதி உபோ லோகே

முனீ தேன பவுச்சதி

பாவமிகுந்த அகுசலங்களை (தீமைகளை) ஒருவர்

அழித்துகொள்வாராயின், அவர்தான் முனிவர் என

குறிப்பிடத்தகுந்தவர். புற வாழ்வினையும் அகவாழ்வினையும்

அறிவினால் நன்கு பகுப்பாய்வு செய்து உய்த்துணரல் எனும் இக்

காரணத்தினாலேயே அவர் முனிவர் எனப்படுகிறார்.

(ஜேதவனராமத்தில் சில தபஸ்விகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந தேன அரியோ ஹோதி

யேன பாணானி ஹின்சதி

அஹின்சா சப்பபாணானங்

அரியோதி பவுச்சதி

எவரேனும் உயிர்களை இம்சிப்பாராயின், அவருக்கு ஆரிய எனும்

பெயர் இருந்தாலும் அவர் ஆரியரல்ல. அனைத்து உயிர்கள்

மீதும் அஹிம்சை கொண்டிருப்பவரே ஆரிய எனப்படுவார்.

(ஜேதவனராமத்தில் ஆரிய எனும் மீனவனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந சீலப்பத மத்தேன

பாஹுஸச்சேன வா புன

அத வா சமாதிலாபேன

விவிச்ச சயனேன வா

பணிவிடைகள் செய்து ஒழுக்கமாக வாழ்ந்து, தர்மத்தினை

கற்று தர்ம ஞானத்தினை ஏற்படுத்திக்கொண்டு, உளச்சமாதியை

ஏற்படுத்திக்கொண்டு சேய்மையில் அமைந்துள்ள வனங்களில்

வசித்திருப்பதால் மாத்திரம் வாழ்க்கை பரிபூரணமாகியது என

எண்ண வேண்டாம்.

(ஜேதவனராமத்தில் பெருமளவிலான பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. புசாமி நெக்கம்ம சுகங்

அபுதுஜ்ஜன சேவிதங்

பிக்கு விஸ்ஸாசமாபாதி

அப்பத்தோ ஆசவக்கயங்

புண்ணியமிகு பிக்குகளே, புதுஜ்ஜனரால் பெற்றுக்கொள்ள

முடியாத, மகா உத்தமர்களால் மாத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடிய

காமங்களினால் கிடைக்காத நிஷ்காமிய சுகம் இருக்கிறது.

ஷநானும் அந்த சுகத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்0 என

நினைக்க வேண்டும். உன்னதமான அரஹத் (மீண்டும் பிறவாத

நிலை) நிலையை உறுதி செய்யும் வரை இந்த பவத்தினை

(விளைவு தரும் கர்மங்கள்) நம்ப வேண்டாம்.

(ஜேதவனராமத்தில் பெருமளவிலான பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(தர்மத்தில் நிலைத்திருப்பது தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

 

 

 

  1. மக்க வகை

(மோட்சப்பாதை தொடர்பாக

 மொழிந்த பகுதி)

  1. மக்கானட்டங்கிகோ செட்டோ

சச்சானங் சதுரோ பதா

விராகோ செட்டோ தம்மானங்

த்விபதானங் ச சக்குமா

பின்பற்ற வேண்டிய செயற்பாடுகளுக்கிடையே பரம

உத்தமமானது. சத்தியங்களின் மத்தியில் பரம உத்தமமான

சத்தியம் நாற்பேருண்மைகளாகும். தர்மங்களின் மத்தியில் பரம

உத்தமமானது இச்சைகளற்ற மோட்சமாகும். இருகால் கொண்ட

மனிதருள் பரம உத்தமமானவர் தர்ம விழிகளையுடைய புத்த

பகவானே.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஏசோவ மக்கோ நத்தஞ்ஞோ

தஸ்ஸனஸ்ஸ விசுத்தியா

ஏதங் ஹி தும்ஹே படிபஜ்ஜத

மரஸ்ஸேதங் பமோஹனங்

ஆரிய சத்திய உய்த்துணர்வின் மூலம் தூய்மையாக

வேண்டுமெனில் இந்த வழி மாத்திரமே உள்ளது. வேறு வழிகள்

இல்லை. நீங்களும் இந்த வழியிலேயே பயணியுங்கள். இந்த

வழியில் பயணிப்பதன் மூலமே மாரனை ஏமாற்ற முடியும்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஏதங் ஹி தும்ஹே படிபன்னா

துக்கஸ்ஸன்தங் கரிஸ்ஸத

அக்காதோ வே மயா மக்கோ

அஞ்ஞாய சல்லசத்தனங்

நீங்கள் இந்த ஆரிய எண்சீர் வழியினையே பின்பற்றி இந்த சன்சார

துக்கத்தினை முடிவுக்கு கொண்டு வாருங்கள். ஆசை, கோபம்,

அறியாமை போன்ற அனைத்து கிலேசங்களையும் வேருடன்

பிடுங்கி எறியும் இந்த வழியினை எனது உறுதிபடுத்தப்பட்ட

உய்த்துணர்வின் மூலமே போதிக்கிறேன்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தும்மேஹி கிச்சங் ஆதப்பங்

அக்காதாரோ ததாகதா

படிபன்னா பமொக்கன்தி

ஜாயினோ மாரபந்தனா

புண்ணியமிகு பிக்குகளே, அனைத்து துக்கங்களில் இருந்து

மீளுவதற்கு வீரியம் செய்து உன்னத மோட்சத்தினை

உய்த்துணர வேண்டியது நீங்களே. அதற்காக ததாகதரால்

செய்வது மோட்ச மார்க்கத்தினை மொழிவது மாத்திரமே.

இந்த மோட்ச மார்க்கத்தினை பின்பற்றினால், தியானங்களை

விருத்தி செய்தால், இந்த மாரனது பந்தத்திலிருந்து விடுதலை

அடைந்துவிடலாம்.

  1. சப்பே சன்காரா அனிச்சாதி

யதா பஞ்ஞாய பஸ்ஸதீ

அத நிப்பிந்ததி துக்கே

ஏச மக்கோ விசுத்தியா

காரணங்களால் ஒழுங்கமையப்பட்ட அனைத்துமே அழிந்துவிடும்.

அநித்தியமாகிவிடும் என ஒருநாள் பிரக்ஞையினால்

உய்த்துணரும்போது அன்றுதான் இந்த துக்கத்தின் மீது வெறுப்பு

தோன்றும். மோட்சத்திற்கான மார்ககமும் அதுவே.

(ஜேதவனராமத்தில் ஆயிரத்து ஐந்நூறு பிக்குமாரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்பே சன்காரா துக்காதி

யதா பஞ்ஞாய பஸ்ஸதி

அத நிப்பிந்ததி துக்கே

ஏச மக்கோ விசுத்தியா

காரணங்களால் தோன்றிய அனைத்துமே துக்கம் என ஒருநாள்

பிரக்ஞையினால் உய்த்துணரும்போது அன்றுதான் இந்த

துக்கத்தின் மீது வெறுப்பு தோன்றும். மோட்சத்தினை காணும்

மார்க்கமும் அதுவே.

(ஜேதவனராமத்தில் ஆயிரத்து ஐந்நூறு பிக்குமாரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்பே தம்மா அனத்தாதி

யதா பஞ்ஞாய பஸ்ஸதி

அத நிப்பிந்ததி துக்கே

ஏச மக்கோ விசுத்தியா

அனைத்துமே அநாத்தம் (தன் வசத்தில் வைத்திருக்க முடியாது)

என ஒருநாள் பிரக்ஞையினால் உய்த்துணரும்போது அன்றுதான்

இந்த துக்கத்தின் மீது வெறுப்பு தோன்றும். மோட்சத்தினை

காணும் மார்க்கமும் அதுவே.

(ஜேதவனராமத்தில் ஆயிரத்து ஐந்நூறு பிக்குமாரை

 முன்னிட்டு போதித்ததாகும்)

  1. உட்டான காலம்ஹி அனுட்டஹானோ

யுவா பலீ ஆலசியங் உபேதோ

சங்சன்ன சன்கப்பமனோ குசீதோ

பஞ்ஞாய மக்கங் அலசோ ந விந்ததி

வீரியம் செய்ய வேண்டிய நேரத்தில் வீரியம் செய்யாவிடில்,

உடலில் பலமிருக்கும்போது சோம்பலுடன் இருந்தால், இழிவான

விடயங்களையே நினைத்துக்கொண்டிருந்தால், முயற்சியற்று

இருந்தால் அந்த சோம்பேறியால் ஞானத்தினை விருத்தி செய்யும் ஆரிய மார்க்கம் கிட்டாது போய்விடும்.

(ஜேதவனராமத்தில் பதானகம்மிகதிஸ்ஸ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. வாசானுரக்கீ மனசா சுசங்வுதோ

காயேன ச அகுசலங் ந கயிரா

ஏதே தயோ கம்மபதே விசோதயே

ஆராதயே மக்கங் இசிப்பவேதிதங்

பேச்சினை கட்டுப்படுத்திக்கொண்டால், மனதை

கட்டுப்படுத்திக்கொண்டால், உடலாலும் அகுசலங்கள்

செய்யாவிட்டால், இவ்வாறாக கர்மம் சேரும் மூன்று வழியையும்

தூய்மைப்படுத்திக் கொண்டால் அவரால் அரஹத் ரிஷிமார்களால்

உய்த்துணர்வுடனேயே மொழிந்த மோட்ச மார்க்கத்தினை

பூரணப்படுத்திக்கொள்ள முடியும்.

(வேலுவனராமத்தில் சூகர எனும் பிரேத ஆத்மாவை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோகா வே ஜாயதீ பூரி

அயோகா பூரிசன்கயோ

ஏதங் த்வேதா பதங் ஞத்வா

பவாய விபவாய ச

ததத்தானங் நிவேசெய்ய

யதா பூரி பவட்டதி

உண்மையிலேயே சமத மற்றும் விபஸ்ஸனா தியானங்கள் மூலமே

பிரக்ஞை விருத்தியடையும். தியானம் செய்யாவிடில் பிரக்ஞை

அழிந்துவிடும். எனவே முன்னேற்றத்திற்கும் பின்னேற்றத்திற்கும்

காரணமாக அமையும் இவ் இரு விடயங்களை உணர்ந்து

கொள்ள வேண்டும். பிரக்ஞை விருத்தியடையும் மார்க்கத்தினையே

வாழ்விற்கு உபயோகிக்க வேண்டும்.

(ஜேதவனராமத்தில் போதில தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. வனங் ஜிந்தத! மா ருக்கங்

வனதோ ஜாயதீ பயங்

ஜெத்வா வனங் ச வனதங் ச

நிப்பனா ஹோத பிக்கவோ

புண்ணியமிகு பிக்குகளே, இந்த கிலேச வனத்தினை வெட்டி

அழித்துவிடுங்கள். ஆனால் வனத்திலுள்ள மரங்களை வெட்ட

வேண்டாம். கிலேச வனத்தினால்தான் பயம் தோன்றும். மகா

கிலேச வனத்தினையும் சிறு கிலேச வனத்தினையும் வெட்டி

அழித்துவிடுங்கள். கிலேச வனங்கள் அற்ற ஒருவராகுங்கள்.

(ஜேதவனராமத்தில் முதுமையான சில பிக்குமாரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யாவங் வனதோ ந சிஜ்ஜதி

அனுமத்தோபி நரஸ்ஸ நாரிசு

படிபத்த மனோவ தாவ சோ

வச்சோ கீரபகோவ மாதரீ

பெண் தொடர்பாக ஆணின் மனதில் சிறிதளவேனும் ஆசை

அழியாமல் இருக்குமாயின் தாய் பசுவின் பின்னால் ஓடி பால்

குடிக்கும் கன்றினைப்போன்று அதன் பின்னே மனம் ஓடும்.

(ஜேதவனராமத்தில் முதுமையான சில பிக்குமாரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. உச்சின்த சினேஹமத்தனோ

குமுதங் சாரதிகங் வ பாணினா

சன்தி மக்கமேவ ப்ரூஹய

நிப்பானங் சுகதேன தேசிதங்

குமுத மலரை கையினால் பறித்து விடுவதைபோன்று தன்னுள்

இருக்கும் ஆசையை பிரக்ஞையினால் பறித்து விட வேண்டும்.

ததாகதரால் மோட்சமார்க்கம் முழுமையாக போதிக்கப்பட்டுள்ளது.

எனவே மோட்சத்தினை தரும் இந்த ஆரிய மார்க்கத்திலேயே

பயணிக்க வேண்டும்.

(ஜேதவனராமத்தில் மகா சாரிபுத்த தேரரது ஒரு சிஷ்ய தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. இத வஸ்ஸங் வஸிஸ்ஸாமி

இத ஹேமன்த கிம்ஹிசு

இதி பாலோ விசின்தேதி

அன்தராயங் ந புஜ்ஜதி

நான் இந்த மாரி காலத்தில் இங்குதான் தங்குவேன்.

குளிர்காலத்திலும் இங்கேயே இருக்க வேண்டும். கோடை

காலத்திலும் இங்கேயேதான் இருக்க நேரிடு;ம். வாழ்க்கை

தொடர்பாக இவ்வாறாக நினைத்துகொண்டு இருப்பவருக்கு தனது

வாழ்விற்கு நேரவுள்ள பிரச்சினைகள் தொடர்பான எந்தவொரு

அறிவும் இருக்காது.

(ஜேதவனராமத்தில் ஒரு வியாபாரத்தலைவரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தங் புத்த பசு சம்மத்தங்

ப்யாசத்த மனசங் நரங்

சுத்தங் காமங் மஹோகோவ

மச்சு ஆதாய கச்சதி

சிலர் தமது மனைவி மக்களை பற்றி , தனக்குரிய மிருகங்களை

பற்றி மனதினால் பிணைந்த அவற்றிலேயே திழைத்து

வாழ்கின்றனர். நடுராத்திரியில் வந்த வௌ;ளத்தின் மூலம்,

உறங்கிக்கொண்டிருக்கும் கிராமம் கடலுக்கு அடித்து இழுத்து

செல்வதைப்போன்று இறுதியில் மாரன் அவர்களை மரணத்திற்கு

இழுத்து செல்வான்.

(ஜேதவனராமத்தில் கிசாகோதமியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந சன்தி புத்தா தாணாய

ந பிதா நபி பந்தவா

அன்தகேனாதிபன்னஸ்ஸ

நத்தி ஞாதீசு தாணதா

மாரனால் அடிமைப்படுத்தப்பட்ட உயிருக்கு பாதுகாப்பானதொரு

இடம் மனைவி மக்களால் கிடைப்பதில்லை. தந்தையால்

கிடைப்பதில்லை. உறவினரால் கிடைப்பதில்லை. எந்த

உறவினராலும் அவருக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்காது.

(ஜேதவனராமத்தில் பட்டாசாரா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஏதமத்தவசங் ஞத்வா

பண்டிதோ சீலசங்வுதோ

நிப்பான கமனங் மக்கங்

கிப்பமேவ விசோதயோ

இந்த யதார்த்தத்தினை உணர்ந்த ஞானமுள்ளவர் தன்னை

சீலத்தினால் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வெகு விரைவில்

தன் மோட்ச பாதையை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(ஜேதவனராமத்தில் பட்டாசாரா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(மோட்ச மாரக்கம் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)

 

 

21.பகிண்ணக வகை

(தர்ம விடயங்கள் கலந்து உள்ள பகுதி)

 

 

  1. மத்தா சுக பரிச்சாகா

பஸ்ஸே சே விபுலங் சுகங்

சஜே மத்தா சுகங் தீரோ

சம்பஸ்ஸங் விபுலங் சுகங்

மிகப்பெரிய சுகத்தினை எதிர்பார்க்கும் ஒருவர் அதனை

அடைவதற்காக சிறு சுகத்தினை கைவிடுபவராக இருக்க

வேண்டும். பிரக்ஞையுள்ளவர் மகா சுகமான மோட்ச சுகத்தினை

விரும்பி மிகவும் அற்பமான காம சுகத்தினை கைவிடுவார்.

(வேலுவனராமத்தில் புத்த பகவானது முற்பிறவி வாழ்க்கைளை

 முன்னிட்டு போதித்ததாகும்)

02 பரதுக்கூபதானேன

அத்தனோ சுகமிச்சதி

வேர சங்சக்க சங்சட்டோ

வேரா சோ ந பரிமுச்சதி

ஏனையோருக்கு துன்பங்கள் கொடுத்து தான் மட்டும் சுகமனுபவிக்க

நினைத்தால் அவர் பகைமையுடன் சேர நேரிடும். அந்த

பகைமையிலிருந்து இலகுவில் விடுதலை அடைய முடியாது.

(சாவத்திய நகரில் கோழியினது முட்டை சாப்பிட்ட பெண்ணை

முன்னிட்டு போதித்ததாகும்)

03 யங் ஹி கிச்சங் ததபவித்தங்

அகிச்சங் பன கயிரதி

உன்னலானங் பமத்தானங்

தேசங் வட்டன்தி ஆசவா

எவரேனும் தர்மத்தினை பின்பற்றுதல் போன்ற செய்ய வேண்டிய

உத்தம விடயங்களை கைவிட்டு செய்யக்கூடாதன செய்வாராயின்,

அகந்தை மிகுந்து தாமதத்துடன் இருக்கும் அவருள் வளருவது

கிளேசங்கள் மாத்திரமே.

(பத்திய நகரில் பத்திய தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

04 யேசங் ச சுசமாரத்தா

நிச்சங் காயகதாசதி

அகிச்சங் தே ந சேவன்தி

கிச்சே சாதச்சகாரினோ

சதானங் சம்பஜானானங்

அத்தங் கச்சன்தி ஆசவா

ஆனால் எவரேனும் ஒருவர் காயானுபஸ்ஸனத்திலேயே எந்நேரமும்

மிகவும் சிறப்பான முறையில் விழிப்புணர்வுடன் இருப்பாராயின் அவர்

செய்யக்கூடாதன செய்வதற்கு முற்படமாட்டார். செய்யவேண்டியன

மாத்திரமே எந்நேரமும் செய்வார். மிகவும் சிறப்பான முறையில்

விழிப்புணர்வுடன் வசிக்கும்போது, அவர்களுடைய கிலேசங்களை

அழிந்துவிடும்.

(பத்திய நகரில் பத்திய தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மாதரங் பிதரங் ஹன்த்வா

ராஜானோ த்வே ச கத்தியே

ரட்டங் சானுசரங் ஹன்த்வா

அனீகோ யாதி ப்ராஹ்மணோ

சன்சார துக்கத்தினை தோற்றுவிக்கும் இந்த தண்ஹா எனும்

தாயையும் அஹங்காரம் எனும் தந்தையையும் அழிக்க வேண்டும்.

மரணத்தின் பின் நிரந்தரமாகலாம் எனும் சாசுவத வாதத்தினையும்

மரணத்தின் பின்னர் எதுவும் இல்லை எனும் உச்சேத வாதம்

எனும் இரு அரசர்களையும் அழிக்க வேண்டும். அக மற்றும்

புற நிறுவனங்கள் எனும் நாட்டினையும் அங்கு தலைவராக

வீற்றிருக்கும் நந்திராகத்தினையும் அழிக்க வேண்டும். இவ்

அனைத்தையும் பிரக்ஞையினால் அழித்து துக்கமின்றி இருக்கும்

அரஹத் பிராமணர் மோட்சத்தினை நோக்கியே செல்வார்.

(ஜேதவனராமத்தில் லகுண்டக பத்திய எனும் தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மாதரங் பிதரங் ஹன்த்வா

ராஜானோ த்வே ச சொத்தியே

வெய்யக்க பஞ்சமங் ஹன்த்வா

அனீகோ யாதி ப்ராஹ்மணோ

சன்சார துக்கத்தினை தோற்றுவிக்கும் இந்த தண்ஹா எனும்

தாயையும் (அஸ்மிமானம் ) அகங்காரம் எனும் தந்தைiயும்

அழிக்க வேண்டும். மரணத்தின் பின் நிரந்தரமாகலாம் எனும்

சாசுவத வாதத்தினையும் மரணத்தின் பின்னர் எதுவும் இல்லை

எனும் உச்சேதம வாதம் எனும் இரு பிராம்மண அரசர்களையும்

அழிக்க வேண்டும். சந்தேகம் ஐந்தாவதாக இருக்கும் பஞ்ச

நீவரணங்கள் எனும் புலிகளின் நடைபாதையையும் அழிக்க

வேண்டும். இவ்வாறானவற்றை அழித்து துக்கங்களற்ற அரஹத்

பிராமணர் மோட்சத்தினை நோக்கியே செல்வார்.

(ஜேதவனராமத்தில் லகுண்டக பத்திய எனும் தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுப்பபுத்தங் பபுஜ்ஜன்தி

சதா கோதமசாவகா

யேசங் திவா ச ரத்தோ ச

நிச்சங் புத்தகதா சதி

எவரேனும் இரவும் பகலும் எந்நேரமும் புத்தானுஸ்ஸதி

தியானத்தில் ஈடுபடுவாராயின் கௌதம புத்த பகவானது அந்த

சீடர்கனள் எந்நாளும் புத்துணர்ச்சியுடனே கண்விழிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தாருசாடிக எனும் சிறு குழந்தையை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுப்பபுத்தங் பபுஜ்ஜன்தி

சதா கோதமசாவகா

யேசங் திவா ச ரத்தோ ச

நிச்சங் தம்மகதா சதி

எவரேனும் இரவும் பகலும் எந்நேரமும் தம்மானுஸ்ஸதி

தியானத்தில் ஈடுபடுவாராயின் கௌதம புத்த பகவானது அந்த

சீடர்கள் எந்நாளும் புத்துணர்ச்சியுடனே கண்விழிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தாருசாடிக எனும் சிறு குழந்தையை

 முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுப்பபுத்தங் பபுஜ்ஜன்தி

சதா கோதமசாவகா

யேசங் திவா ச ரத்தோ ச

நிச்சங் சங்ககதா சதி

எவரேனும் இரவும் பகலும் எந்நேரமும் சங்கானுஸ்ஸதி

தியானத்தில் ஈடுபடுவாராயின் கௌதம புத்த பகவானது அந்த

சீடர்கள் எந்நாளும் புத்துணர்ச்சியுடனே கண்விழிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தாருசாடிக எனும் சிறு குழந்தையை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுப்பபுத்தங் பபுஜ்ஜன்தி

சதா கோதமசாவகா

யேசங் திவா ச ரத்தோ ச

நிச்சங் காயகதா சதி

எவரேனும் இரவும் பகலும் எந்நேரமும் காயானுபஸ்ஸனா

தியானத்தில் ஈடுபடுவாராயின் கௌதம புத்த பகவானது அந்த

சீடர்கள் எந்நாளும் புத்துணர்ச்சியுடனே கண்விழிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தாருசாடிக எனும் சிறு குழந்தையை

 முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுப்பபுத்தங் பபுஜ்ஜன்தி

சதா கோதமசாவகா

யேசங் திவா ச ரத்தோ ச

அஹின்சாய ரதோ மனோ

எவரேனும் இரவும் பகலும் எந்நேரமும் அஹிம்சையை விரும்பும்

மனதுடன் இருப்பாராயின் கௌதம புத்த பகவானது அந்த

சீடர்கள் எந்நாளும் புத்துணர்ச்சியுடனே கண்விழிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தாருசாடிக எனும் சிறு குழந்தையை

 முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுப்பபுத்தங் பபுஜ்ஜன்தி

சதா கோதமசாவகா

யேசங் திவா ச ரத்தோ ச

பாவனாய ரதோ மனோ

எவரேனும் இரவும் பகலும் எந்நேரமும் சமத விபஸ்ஸனா

தியானங்களில் விரும்பிய மனதுடன் இருப்பாராயின் கௌதம

புத்த பகவானது அந்த சீடர்கள் எந்நாளும் புத்துணர்ச்சியுடனே

கண்விழிப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் தாருசாடிக எனும் சிறு குழந்தையை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. துப்பப்பஜ்ஜங் துரபிரமங்

துராவாசா கரா துகா

துக்கோ சமான சங்வாசோ

துக்கானுபதிதத்தகு

தஸ்மா ந சத்தகு சியா

துக்கானுபதிதோ சியா

புத்த சாசனத்தில் துறவறத்தை பெறல் கடினமானதாகும்.

துறவறத்தை மேற்கொண்டவர் அந்த துறவறத்தில் அதாவது நால்

சதிபட்டான தர்மங்களில் தன்னை நிலைத்து வைத்துக்கொள்ளலும்

துறவில் விருப்புடன் வாழ்தலும் கடினமாகும். இல்லற வாழ்வை வாழ்வது மிகவும் துக்கமாகும். சமமான கருத்துக்கள் அற்றோருடன்

சேர்ந்து வாழுதலும் மிகவும் துக்கமாகும். சன்சாரம் எனும்

பாலைவத்தில் விழுதலும் துக்கமாகும். எனவே சன்சாரம் எனும்

பாலைநிலத்தில் விழாதவராக இருக்க வேண்டும். ஆம் சன்சார

துக்கத்தில் விழாத ஒருவராக வேண்டும்.

(வைசாலி நகரின்போது வஜ்ஜிபுத்தகன் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சத்தோ சீலேன சம்பன்னோ

யசோ போக சமப்பிதோ

யங் யங் பதேசங் பஜதி

தத்த தத்தேவ பூஜிதோ

புத்த பகவான் , ஸ்ரீ சத்தர்மம், ஆரிய சங்கையர் எனும் மும்மணிகள்

மீது சத்தாவினை நிலைக்கச்செய்து ஒழுக்கமுள்ளவராக

வாழும் பகவானது இல்லற சீடன் யஸசும் போகங்களையும்

உடையவராக இருந்தால் அவர் எங்கு சென்றாலும் அவ்வாறு

செல்லும் இடமெல்லாம் சிறப்பினை பெறுவார்.

(ஜேதவனராமத்தில் சித்த எனும் இல்லறத் தலைவரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தூரே சன்தோ பகாசென்தி

ஹிமவன்தோவ பப்பதோ

அசன்தெத்த ந திஸ்ஸன்தி

ரத்திங் கித்தா யதா சரா

ஷாந்தமுள்ள ஒருவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பகவானது

ஞானத்திற்கு அவர் தூரத்தே இருக்கும் இமய மலையை

போன்று தென்படுவார். ஆனால் அஞ்ஞானமுள்ளவர் அவ்வாறு

தென்படமாட்டார். அவர் இரவு காலத்தில் எய்த ஒரு அம்பினை

போன்றவராவார்.

(ஜேதவனராமத்தில் சூள சுபத்திராவை முன்னிட்டு போதித்தாகும்)

  1. ஏகாசனங் ஏகசெய்யங்

ஏகோ சரமதந்திதோ

ஏகோ தமயமத்தானங்

வனன்தே ரமிதோ சியா

தனிமையாகவே இருக்க வேண்டும். தனிமையாகவே உறங்கவும்

வேண்டும். எவ்வித சோம்பலும் அற்று தனிமையாக இருந்து

தன்னை அடக்கிக்கொண்டு வனத்தில் விருப்புடன் வசிக்க

வேண்டும்.

(ஜேதவனராமத்தில் ஏகவிஹாரிக தேரரை முன்னிட்டு

போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(தர்ம விடயங்கள் கலந்திருக்கும் பகுதி முற்றும்)

 

 

 

22.நிரய வகை

(நரகம் தொடர்பாக மொழிந்த பகுதி)

 

 

  1. அபூதவாதி நிரயங் உபேதி

யோ சாபி கத்வா ந கரோமீதி சாஹ

உபோபி தே பெச்ச சமா பவன்தி

நிஹீனகம்மா மனுஜா பரத்த

ஏனையோருக்கு பொய் குற்றம் சாட்டுபவர் நரகத்தில்தான் பிறக்க

நேரிடும். தான் ஏதேனும் பாவம் செய்து அதனை செய்யவில்லை

என கூறுபவரும் நரகத்தில்தான் பிறக்க நேரிடும். கீழ்தரமான இழி

செயல்களை செய்யும் இந்த இருவகையானோரும் மரணித்து

நரகத்தில் பிறப்பதனூடாக இவர்கள் இருவரும் சமமான நிலை

அடைவார்கள்.

(ஜேதவனராமத்தில் சுந்தரீ எனும் பெண் தவசியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. காசாவகண்டா பஹவோ

பாபதம்மா அசஞ்ஞதா

பாபா பாபேஹி கம்மேஹி

நிரயங் தே உபபஜ்ஜரே

எவ்வித ஒழுக்கமமற்ற, பாவமிகுந்த அகுசலங்கள் நிறைந்த

அநேகமானோர்கள் சீவரத்தை மாத்திரம் கழுத்துடன்

போர்த்திக்கொண்டு இருக்கின்றனர். அந்த பாவிகள் தான்

செய்துகொள்ளும் அபார பாவச்செயல்களினால் அவர்கள்

நரகத்திலேயே சென்று பிறப்பார்கள்.

(வேலுவனாராமத்தின்பொது பிரேத உலகில் பிறந்து

துன்புறும் சிலரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. செய்யோ அயோகுலோ புத்தோ

தத்தோ அக்கிசிகூபமோ

யங் சே புஞ்ஞெய்ய துஸ்ஸீலோ

 ரட்டபிண்டங் அசஞ்ஞதோ

கட்டுப்பாடுகள் இன்றி ஒழுக்கமற்றவர்களாக இருந்துகொண்டு

தாயகர்கள் (பக்தர்கள்) அளிக்கும் அன்ன பானங்களை ஏற்று

அவற்றை உட்கொண்டு இருப்பதை விட நெருப்பு தெறிக்கும்

சூடான இரும்பு குண்டுகளை உட்கொள்வது மிகவும் சிறந்ததே.

(வைசாலி நகரின்போது வக்குமுதா நதியோரத்தில் வாழ்ந்த சில தேரர்களை

முன்னிட்டு மொழிந்ததாகும்)

  1. சத்தாரி டானானி நரோ பமத்தோ

ஆபஜ்ஜதி பரதாரூப சேவீ

அபுஞ்ஞலாபங் ந நிகாமசெய்யங்

நிந்தங் ததியங் நிரயங் சதுத்தங்

ஏனையோரின் பெண்களுடன் உறவு கொள்ளும் தாமதமிக்க

மனிதன் நான்கு வகையான தொல்லைகளுக்கு முகங்கொடுக்க

நேரிடும். முதலாவதாக அவனை நோக்கி பாவம் வந்து சேரும்.

மனத்தடுமாற்றம் காரணமாக இன்பமாக இருக்க முடியாது.

மூன்றாவதாக ஏனையோரின நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும்.

நான்காவதாக அந்த பாவி நரகத்திலேயே பிறக்க நேரிடும்.

(சாவத்திய நகரில் கேம எனும் சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அபுஞ்ஞலாபோ ச கதீ ச பாபிகா

பீதஸ்ஸ பீதாய ரதீ ச தோகிகா

ராஜா ச தண்டங் கருகங் பணேதி

தஸ்மா நரோ பரதாரங் ந சேவே

பாவங்களையே சேகரித்து கொண்டவரது பிறப்பும்

பாவமிகுந்ததாகவே இருக்கும். பயத்தினால் நடுங்கிக்கொண்டு

பாவத்தினால் நடுங்கும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில்

உறவு கொள்வதால் கிடைக்கும் சுகம் மிகவும் சொற்பமே. அந்ததவறின் காரணமாக அரசிடம் பிடிபட்டால் தண்டனைக்கு ஆளாக

நேரிடும். எனவே ஞானமுள்ள மனிதர் தன் மனைவியல்லாத

வேறு பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

(சாவத்திய நகரில் கேம எனும் சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. குசோ யதா துக்கஹிதோ

ஹத்தமேவானுகன்ததி

சாமஞ்ஞங் துப்பராமட்டங்

நிராயாயுபகட்டதி

தவறான முறையில் குசதண (ஒரு புல் வகை) பிடித்தால்

அது பிடித்தவர் கையையே காயப்படுத்திவிடும். தவறான

முறையில் பழக்கப்படுத்தும் துறவறமும் ஒருவரை நரகத்திற்கே

இழுத்துச்செல்லும்.

(ஜேதவனராமத்தில் ஒரு அடக்கமிலாத பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யங் கிஞ்சி சிதிலங் கம்மங்

சங்கிலிட்டங் ச யங் வதங்

சன்கஸ்ஸரங் ப்ரஹ்மசரியங்

ந தங் ஹோதி மஹப்பலங்

உறுதியான எண்ணமில்லாமல் கவனயீனமாக அனுஷ்டிக்கும்

சீலம் இருப்பின், அழுக்கு படிந்த ஏதேனும் விரதங்கள் இருப்பின்,

சந்தேகத்திற்கிடமான தூய்மையற்ற துறவறம் இருப்பின் இவை

எதிலுமே சிறந்த பலனை எதிர்பார்க்க முடியாது.

  1. கயிரா சே கயிராதேதங்

தள்ஹமேனங் பரக்கமே

சிதிலோ ஹி பரிப்பாஜோ

பிய்யோ ஆகிரதே ரஜங்

சீலம் மற்றும் ஏனைய குணதர்மங்கள் என்பன விருத்தி செய்ய

வேண்டுமாயின் அவற்றை மகா பராக்கிரமத்துடனும் வீரியத்துடனுமே

செய்ய வேண்டும். துறவை இலேசானதாக எடுத்துக்கொண்டால் கிலேசங்களே அவரது வாழ்வில் வழிந்தோடும்.

  1. அகதங் துக்கதங் செய்யோ

பச்சா தபதி துக்கதங்

கதங் ச சுகதங் செய்யோ

யங் கத்வா நானுதப்பதி

பாவமிகுந்த அகுசலங்களை செய்யாமலிருப்பதே சிறப்பாகும்.

இல்லாவிடில் பிற்காலத்தில் வருந்த வேண்டியதாகும். ஏதேனும்

ஒன்றை செய்ய பின்னர் அது தொடர்பாக வருந்தும் நிலை

ஏற்படாதாயின் அவ்வாறான குசல தர்மங்களையே செய்ய

வேண்டும்.

(ஜேதவனராமத்தில் பொறாமை மிகுந்த ஒரு பெண்ணை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. நகரங் யதா பச்சன்தங்

குத்தங் சன்தரபாஹிரங்

ஏவங் கோபேத அத்தானங்

கணோ வோ மா உபச்சகா

கணாதீதா ஹி சோசன்தி

நிரயம்ஹி சமப்பிதா

அகமும் புறமும் ஒருங்கே பாதுகாக்கும் தூரத்தே இருக்கும் ஒரு

நகரத்தை போன்று தனது வாழ்வினையும் தீமையில் விழாது

பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த உத்தம வாய்ப்பினை

நீங்கள் நழுவவிட்டுக்கொள்ளாதீர்கள். இந்த உன்னத வாய்ப்பினை

இழந்தால் நரகத்திலே மீண்டும் துன்பம் அனுபவிக்கவே நேரிடும்.

(ஜேதவனராமத்திற்கு புதிதாக வந்த அநேக பிக்குமாரை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. அலஜ்ஜிதாயே லஜ்ஜன்தி

லஜ்ஜிதாயே ந லஜ்ஜரே

மிச்சாதிட்டிசமாதானா

சத்தா கச்சன்தி துக்கதிங்

உடல் அங்கங்களை மறைத்து வைத்திருப்பதற்கு வெட்கப்பட

அவசியமில்லை. (நிகண்டர்கள் அதற்கும் வெட்கிப்பார்கள்)

ஆடையின்றி இருப்பதை நினைத்தே வெட்கம் கொள்ள வேண்டும்.

(நிகண்டர்கள் ஆடையின்றி இருப்பதற்கு வெட்கித்துக்கொள்ள

மாட்டார்கள்) மூட பார்வை கொண்ட மனிதர்கள் மரணித்து

நரகத்திலேயே பிறப்பார்கள்.

(ஜேதவனராமத்தில் நிகண்டர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அபயே ச பயதஸ்ஸினோ

பயேசாபயதஸ்ஸினோ

மிச்சாதிட்டிசமாதானா

சத்தா கச்சன்தி துக்கதிங்

பயமற்ற இந்த மோட்சத்தினை நினைத்து இந்த நிகண்டர்கள்

அஞ்சுகிறார்கள். அஞ்ச வேண்டியவற்றை பழக்கப்படுத்துவது

தொடர்பாக (இந்த நிகண்டர்களுக்கு) எவ்வித பயமுமில்லை. மூட

பார்வையை பழக்கப்படுத்தும் உயிர்கள் நரகத்திலேயே பிறக்க

நேரிடும்.

(ஜேதவனராமத்தில் நிகண்டர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அவஜ்ஜே வஜ்ஜமதினோ

வஜ்ஜே சாவஜ்ஜ தஸ்ஸினோ

மிச்சா திட்டி சமாதானா

சத்தா கச்சன்தி துக்கதிங்

பிழையற்ற ஆரிய தர்மம் தொடர்பாக மூட பார்வை கொண்டவர்கள்

தவறானதாகவே எண்ணுகிறார்கள். ஆனால் தவறான

அதர்மத்தினை அவர்கள் சரியானதாகவே நினைப்பார்கள். மூட

பார்வை கொண்ட உயிர்கள் நரகத்திலேயே பிறப்பார்கள்.

(ஜேதவனாராமத்தின்போது வேற்று சமயத்தவரை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. வஜ்ஜங் ச வஜ்ஜதோ ஞத்வா

அவஜ்ஜங் ச அவஜ்ஜதோ

சம்மா திட்டி சமாதானா

சத்தா கச்சன்தி சுக்கதிங்

தவறானதை தவறானதாக உணர்ந்து சரியான தர்மத்தினை

சரியானதாக உணர்ந்து சம்மா திட்டியை பழக்கப்படுத்தும்

உயி;ர்கள் சுவர்க்கத்திலேயே பிறப்பர்.

(ஜேதவனாராமத்தின்போது வேற்று சமயத்தவரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(நரகம் தொடர்பாக மொழிந்த போதனை முற்றும்)

  1. வரமஸ்ஸதரா தன்தா

ஆஜானீயா ச சிந்தவா

குஞ்ஞரா ச மஹாநாகா

அத்த தன்தோ ததோ வரங்

குதிரைகளிளும் சைந்தவ குதிரைகள், உயர் வகை குஞ்சரங்கள்

என்பன அடக்குவதே மிகவும் சிறந்தது. ஆனால் தன்னை

அடக்குவதே இவ் அனைத்தையும் விட உத்தமமானதாகும்.

(குரு தேசத்தின்போது மாகந்தியா எனும் அந்தண பெண்ணை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந ஹி ஏதேஹி யானேஹி

கச்செய்ய அகதங் திசங்

யதாத்தனா சுதன்தேன

தன்தோ தன்தேன கச்சதி

தான் இதுவரை ஒருபோதும் சென்றிராத மகா மோட்சத்தினை

நோக்கி வாகனங்களினால் செல்ல முடியாது. தன்னை நன்றாக

அடக்கிய பின்னர் அந்த அடங்கிய மனதின் மூலமே செல்ல

இயலும்.

(சாவத்திய நகரின்போது யானை அடக்கும் வித்தை தெறிந்த

ஒரு தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தனபாலகோ நாம குஞ்சரோ

கடுகப்பபேதனோ துன்னிவாரயோ

பத்தோ கபலங் ந புஞ்சதி

சுமரதி நாகவனஸ்ஸ குஞ்சரோ

அரச மாளிகையில் தனபாலன் எனும் பெயர்கொண்ட ஒரு

யானை இருந்தது. அந்த மதம் பிடித்த யானையை யாராலும்

அடக்க முடியவில்லை. தன் தாய் யானை இருக்கும்

வனாந்தரத்தினை பற்றியே அது நினைத்துக்கொண்டிருந்தது.

ராஜபோஜனங்கள் எதையுமே அது சாப்பிடிவில்லை. தன் தாயையே நினைத்துக்கொண்டு தாயிற்கு பணிவிடை செய்வது

எப்போது என்றே நினைத்துக்கொண்டு இருந்தது.

(சாவத்திய நகரின்போது ஒரு வயது முதிர்ந்த அந்தணரை

முன்னிட்டு போதித்தாகும்)

  1. மித்தீ யதா ஹோதி மஹக்கசோ ச

நித்தாயிதா சம்பரிவத்தசாயீ

மஹாவராஹோவ நிவாபபுட்டோ

புனப்புனங் கப்பமுபேதி மன்தோ

எவரேனும் நன்றாக சாப்பிட்டு குடித்து தூங்குவதையே

விரும்புவாராயின், இரு புறங்களும் புரண்டு புரண்டு தூங்குவாராயின்

அவர் பன்றியை போன்றவாராவார். அந்த அஞ்ஞான மூடன்

மீண்டும் மீண்டும் பிறப்பதற்காக கருப்பையை நோக்கி வருவான்.

(ஜேதவனராமத்தில் கோசலை மன்னரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. இதங் புரெ சித்தமசாரி சாரிகங்

யேனிச்சகங் யத்தகாமங் யதாசுகங்

ததஜ்ஜஹங் நிக்கஹெஸ்ஸாமி யோனிசோ

ஹத்திபமபின்னங் விய அங்குசக்கஹோ

முன்பு இந்த மனம் தான் விரும்பிய விரும்பியவற்றின் பின்னாலயே

சுற்றிச்சுற்றி சென்றது. தன் இஷ்டப்படி சுகமாக அலைந்து

திரிந்தது. ஆனால் நான் இன்று அதனை யோனிசோ மனசிகாரம்

(அறிவினால் ஆராய்தல்) எனும் அங்குசத்தினை கையில் எடுத்து

மதம் பிடித்த யானையை அடக்குவதைப்போன்று இந்த மனதினை

பாவத்திலிருந்து தவிர்த்துக்கொள்கிறேன்.

(ஜேதவனாராமத்தின்போது சானு எனும் சாமணேர தேரரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அப்பமாதரதா ஹோத!

சசித்த மனுரக்கத!

துக்கா உத்தரதத்தானங்

பன்கே சத்தோவ குஞ்சரோ

தாமதமின்மையையே விரும்ப வேண்டும். தன்னுடைய மனதையே

நன்றாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சேற்றில் அமிழும் மகா

யானை ஒன்று மிகவும் வீரியத்துடனும் மிகவும் முயற்சியுடனும்

வெளியே வருவதைப்போன்று இந்த கிலேசங்கள் எனும் சேற்றில்

இருந்து நாம் வெளி வர வேண்டும்.

(சாவத்திய நகரில் பத்தேகரத எனும் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சசே லபேத நிபகங் சஹாயங்

சத்திங் சரங் சாது விஹாரி தீரங்

அபிபுய்ய சப்பானி பரிஸ்ஸயானி

சரெய்ய தேனத்தமனோ சதீமா

இடத்திற்கு தகுந்த அறிவு கொண்ட ஞானமுள்ள நன்நடத்தை

கொண்ட ஒரு நண்பருடன் பழகக்கிடைக்குமாயின் அனைத்து

தொல்லைகளையும் நீக்கி அறிவுடனும் விழிப்புணர்வுடனும்

அவருடன் இன்பமாக பழக வேண்டும்.

(கோசம்பி நகரில் ஐந்நூறு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நோ சே லபேத நிபகங் சஹாயங்

சத்திங் சரங் சாது விஹாரி தீரங்

ராஜாவ ரட்டங் விஜிதங் பஹாய

ஏகோ சரே மாதங்கரஞ்ஞேவ நாகோ

இடத்திற்கு தகுந்த அறிவு கொண்ட ஞானமுள்ள நன்நடத்தை

கொண்ட ஒரு நண்பருடன் பழக கிடைக்காவிடில் வென்ற

தேசத்தினை கைவிட்டுச்செல்லும் அரசனைப்போன்று, கூட்டத்தில்

இருந்து விலகி தனித்தே வாழும் மாதங்கம் எனும் மகா

யானையை போன்று தனிமையாக இருக்க வேண்டும்.

(கோசம்பி நகரின்போது ஐந்நூறு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஏகஸ்ஸ சரிதங் செய்யோ

நத்தி பாலே சஹாயதா

ஏகோ சரே ந ச பாபானி கயிரா

அப்பொஸ்ஸுக்கே மாதங்கரஞ்ஞேவ நாகோ

தனிமையாக இருப்பதே உத்தமம். பாவ புண்ணிய நம்பிக்கையற்ற

அஞ்ஞான மூடர்களுடனான பழக்கம் தேவையில்லை. தனிமையாக

இருக்கும் போது பாவங்கள் செய்யப்படாது. கூட்டத்தில் இருந்து

ஒதுங்கிய மாதங்க எனும் யானை கூட்டத்தோடு வாழ்வது

முயற்சிக்காமல் வனத்தில் தனிமையாக இருப்பதைப்போன்று

தன்மையாகவே இருக்க வேண்டும்.

(கோசம்பி நகரில் ஐந்நூறு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அத்தம்ஹி ஜாதம்ஹி சுகா சஹாயா

துட்டி சுகா யா இதரீதரேன

புஞ்ஞங் சுகங் ஜீவித சன்கயம்ஹி

சப்பஸ்ஸ துக்கஸ்ஸ சுகங் பஹானங்

உபகாரம் தேவைப்படும்போது உதவுவதற்கு முன்வரும்

நண்பர்களே சிறப்பு. கிடைத்ததை இட்டு மகிழ்ச்சியடைவதும்

சிறப்பே. வாழ்க்கை முடிவுறும்போது புண்ணியமே சுகமாக

அமையும். அனைத்து பிறப்பு இறப்பு துக்கத்தினையும்

அழித்துவிடுவதும் சுகமாகும்.

(இமய மலையின் போது மாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுகா மத்தெய்யதா லோகே

அதோ பெத்தெய்யதா சுகா

சுகா சாமஞ்ஞதா லோகே

அதோ ப்ரஹ்மஞ்ஞதா சுகா

இந்த உலகில் தாயிக்கு பணிவிடை செய்தல் சுகமாகும்.

தந்தைக்கு பணிவிடை செய்தலும் சுகமாகும். சிரமணர்களுக்கு

பணிவிடை செய்தலும் சுகமாகும். அரஹத் உத்தமர்களுக்கு

பணிவிடை செய்தலும் சுகமாகும்.

  1. சுகங் யாவ ஜரா சீலங்

சுகா சத்தா பதிட்டிதா

சுகோ பஞ்ஞாய படிலாபோ

பாபானங் அகரணங் சுகங்

வயது முதுமையடையும் வரை சீலம் அனுஷ்டிப்பது சுகமாகும்.

மும்மணிகளின் சரணத்தில் நிலைப்பதுவும் சுகமாகும். ஆரிய

சத்தியங்களை உய்த்துணர்ந்து கொள்ளுதலும் சுகமாகும்.

பாவங்கள் செய்யாததுவே சுகமாகும்.

(இமய மலையின் பொது மாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(மகா யானையை உவமைபடுத்தி மொழிந்த பகுதி முற்றும்)

 

 

 

 

 

 

24.தண்ஹா வகை

(பேராசை தொடர்பாக மொழிந்த பகுதி)

 

  1. மனுஜஸ்ஸ பமத்தசாரினோ

தண்ஹா வட்டதி மாலுவா விய

சோ ப்லவதி ஹுராஹுரங்

பலமிச்சங்வ வனஸ்மிங் வானரோ

தர்மத்தில் ஈடுபடுவதற்கு தாமதமாகியவரின் வாழ்வில் பேராசை

மரத்தினை சுற்றிக்கொண்டு வளரும் கொடியை போன்று

படர்ந்துகொள்ளும். அவர், வனத்தில் வசிக்கும் குரங்கு

பழங்களை சாப்பிட ஆசைகொண்டு மரத்திற்கு மரம் தாவுவதைப்

போன்று பிறப்பிற்கு பிறப்பு தாவிக்கொண்டிருப்பார்.

(ஜேதவனராமத்தில் கபில எனும் மீனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யங் ஏசா சஹதீ ஜம்மீ

தண்ஹா லோகே விசத்திகா

சோகா தஸ்ஸ பவட்டன்தி

அபிவட்டங் வ பீரணங்

உலகிலுள்ள பல்வேறு விடயங்களில் ஒட்டிக்கொள்ளும்

இயல்பிலானதால் விசத்னிகா என அழைக்கப்படும் இந்த இழிவான

பேராசை மூலம் யாரேனும் மூழ்கடிக்கப்பட்டால் அந்த நபரது

வாழ்வில் பெரும் மழையில் நனைந்து துளிர் விடும் வெட்டிவேர்

செடியை போன்று சோகம் வளரும்.

(ஜேதவனராமத்தில் கபில எனும் மீனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ சே தங் சஹதீ ஜம்மிங்

தண்ஹங் லோகே துரச்சயங்

சோகா தம்ஹா பபதன்தி

உதபின்துவ பொக்கரா

இந்த உலகில் மீறிச்செல்ல மிகவும் கடினமான இழிவான இந்த

பேராசையை எவரேனும் அடக்கினால் , மீறிச்சென்றால் தாமரை

இலை மீது தங்கியிராத நீர்த்துளியை போன்று அவருள் இருக்கும்

சோகமும் இல்லாமல் போகும்.

(ஜேதவனராமத்தில் கபில எனும் மீனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தங் வோ வதாமி பத்தங் வோ

யாவன்தெத்த சமாகதா

தண்ஹஙாய மூலங் கணத

உசீரத்தோ வ பீரணங்

மா வோ நளங் வ சோதோ வ

சோதோவ மாரோ பஞ்ஜி புனப்புனங்

இப்போது இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் நன்மை

உண்டாகட்டும். நான் உங்கள் அனைவருக்கும் ஒரு அறிவுரை

செய்கிறேன். வெட்டிவேரின் பயன் பெற விரும்புவோர் அந்த

வெட்டிவேர் செடியினை முழுமையாக வேருடன் பிடுங்குவது

போல் இந்த இழிவான பேராசையினையும் வேருடன் பிடுங்கி

எறிந்துவிடுங்கள். ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கும் மூங்கில்

மரங்கள் வௌ;ளத்தினால் அடித்து இழுத்து செல்லப்படுவதைப்

போன்று பாவமிகுந்த மாரன் உங்களை மீண்டும் மீண்டும்

அழிக்காமல் இருக்கட்டும்.

(ஜேதவனராமத்தில் கபில எனும் மீனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யதா பி மூலே அனுபத்தவே தழ்ஹே

ஜின்னோபி ருக்கோ புனரேவ ரூஹதி

ஏவம்பி தண்ஹானுசயே அனூஹதே

நிப்பத்ததி துக்கமிதங் புனப்புனங்

வேர் உறுதியாக இருக்கும், நன்கு வளர்ந்த மரம் எத்தனை

தடவை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் துளிர் விட்டு வளரும்.

அதேபோல் இந்த மனதில் உள்ள பேராசைவினை முழுமையாக

அழிக்காத வரையில் இந்த சன்சார (பிறப்பு இறப்பு) துக்கம்

மீண்டும் மீண்டும் தோன்றும்.

(வேலுவனராமத்தில் ஒரு பெண் பன்றிக்குட்டியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ சத்திங்சதி சோதா

மனாபஸ்ஸவனா பூசா

வாஹா வஹன்தி துத்திட்டங்

சன்கப்பா ராகநிஸ்ஸிதா

பிரியமான, விருப்பமான விடயங்களின் மூலம் இந்த அறுவகை

புலன்களில் இருந்தும் முப்பத்தியாறு வகையாக பேராசை எனும்

நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த பேராசையில் சிக்கிக்கொண்டு

ஆசை மேலிட்ட சிந்தனைகளில் பிணைந்து போயிருக்கும்

அஞ்ஞான மூடன் நரகத்தில் சென்றுதான் நிற்பான்.

(வேலுவனராமத்தில் ஒரு பெண் பன்றிக்குட்டியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சவன்தி சப்பதி சோதா

லதா உப்பிஜ்ஜ திட்டதி

தங்ச திஸ்வா லதங் ஜாதங்

மூலங் பஞ்ஞாய ஜின்தத!

இந்த கண், காது, நாசி, நாவு, உடல், மனம் எனும் அறுபுலன்களின்

மூலமும் பேராசை எனும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்

பிறகு இந்த பேராசை முழு வாழ்விலும் பாரிய கொடியை போன்று

படர்ந்து கொள்கிறது. தன்னுள் தோன்றும் இந்த பேராசை எனும்

கொடியை இனங்கண்டு அதனை பிரக்ஞை எனும் ஆயுதம்

கொண்டு வேரறுக்க வேண்டும்.

(வேலுவனராமத்தில் ஒரு பெண் பன்றிக்குட்டியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சரிதானி சினேஹிதானி ச

சோமனஸ்ஸானி பவன்தி ஜன்துனோ

தே சாதசிதா சுகேசினோ

தே வே ஜாதிஜரூபகா நரா

இந்த உயிர்களுக்கு ஆசையின் காரணமாக தான்

எடுத்துக்கொள்ளும் விடயங்கள் மூலம் இன்பம் கிடைக்கின்றதுதான்.

இவ்வாறு கிடைக்கும் இந்த இன்பத்தின் இனிமைக்கு உயிர்கள்

பிணைந்து போகின்றனர். அதன் பின்னர் அந்த இன்பத்தினையே

தேடி அலைகின்றனர். இவ்வாறான உயிர்கள் உறுதியாகவே

இந்த பிறப்பு, முதுமை மரணம் கொண்ட சன்சாரத்திலேயே

பயணிப்பார்கள்.

(வேலுவனராமத்தில் ஒரு பெண் பன்றிக்குட்டியை

 முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தசினாய புரக்கதா பஜா

பரிசப்பன்தி சசோவ பாதிதோ

சங்யோஜன சங்கசத்தா

துக்கமுபென்தி புனப்புனங் சிராய

இந்த உயிர்கள் பேராசையை முதன்மையாகக்கொண்டு

பயணிக்கும் இந்த பிறவிப்பயண வலையில் சிக்கிக்கொண்ட

முயலைப் போன்று பயத்தினால் நடுங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

கிலேச பிணைப்புக்களில் சிக்கிய உயிர்கள் நீண்ட காலமாக

இந்த முதுமை மரணம் என்பன கொண்ட சன்சார துக்கத்திலேயே

மீண்டும் மீண்டும் விழுகின்றனர்.

(வேலுவனராமத்தில் ஒரு பெண் பன்றிக்குட்டியை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தசிணாய புரக்கதா பஜா

பரிசப்பன்தி சசோவ பாதிதோ

தஸ்மா தசிணங் வினோதயே

பிக்கு ஆகன்கீ விராகமத்தனோ

இந்த உயிர்கள் பேராசையை முதன்மையாகக்கொண்டு பயணிக்கும்

இந்த பிறவிப்பயண வலையில் சிக்கிக்கொண்ட முயலைப்

போன்று பயத்தினால் நடுங்கிக்கொண்டே இருக்கின்றனர். எனவே

பேராசை இல்லாத உன்னத மோட்சத்தினை விரும்பும் பிக்கு

இந்த பேராசையையே அழிக்க வேண்டும்.

(வேலுவனராமத்தில் ஒரு பெண் பன்றிக்குட்டியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ நிப்பனதோ வனாதிமுத்தோ

வனமுத்தோ வனமேவ தாவதி

தங் புக்கல மேத பஸ்ஸத

முத்தோ பன்தனமேவ தாவதி

எவரேனும் ஒருவர் இல்லற வாழ்க்கை எனும் கிலேச

வனாந்தரத்திலிருந்து விடுதலையடைந்து ஆரண்யத்தில் வாசம்

செய்ய விரும்புவார். இல்லற பந்தங்களில் இருந்து விடுதலை

அடைந்திருக்கும் அவர் மீண்டும் கிலேச வனாந்தரமான

இல்லத்திற்கே ஓடுகிறார். பந்தங்களில் இருந்து விடுதலையடைந்து

மீண்டும் பந்தங்களின் பின்னே ஓடும் இந்த நபரை பாருங்கள்.

(வேலுவனராமத்தில் துறவை துறந்த ஒரு பிக்குவை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந தங் தள்ஹங் பந்தனமாஹு தீரா

யதாயசங் தாருஜங் பப்பஜங் ச

சாரத்த ரத்தா மணிகுண்டகேசு

புத்தேசு தாரேசு ச யா அபேகா

எவரேனும் ஒருவரை இரும்பு சங்கிலிகளினால் கட்டியிருந்தாலும்,

மரத்திலே கட்டிப்போட்டிருந்தாலும், பலத்த கயிறுகட்டியிருந்தாலும்

பிரக்ஞைமிகுந்தவர்கள் பலத்த கட்டுகள் என்று இவற்றை கூற

மாட்டார்கள். ஆபரணங்கள், வீடு வாசல், மனைவி மக்கள்

என்பவற்றின் மீது பற்றுக்கொண்டு, அவற்றில் எதிர்பார்ப்புக்களுடன்

இருப்பாராயின்…

(சாவத்திய நகரில் சில சிறைக்கைதிகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஏதங் தள்ஹங் பந்தனமாஹு தீரா

ஓஹாரினங் சிதிலங் துப்பமுஞ்சங்

ஏதம்பி செத்வான பரிப்பஜன்தி

அனபெக்கினோ காம சுகங் பஹாய

ஞானமுள்ளவர்கள் அதனையே பாரிய கட்டு பாரிய பந்தம்

எனக்கூறுவார்கள். இது இலகுவாக தென்பட்டாலும் நரகம்

வரை இழுத்துச்செல்லுவதும் இந்த கட்டுக்களே, மீள்வதற்கு

கடினமானதும் இந்த கட்டுக்களே. பஞ்ச காம சுகத்தினை

கைவிட்டு, அதன் மீது எதிர்பார்ப்புக்கள் அற்ற ஞானமுள்ளவர்கள்

மோட்சத்தினை எதிர்பார்த்து துறவு பூணுவார்கள்.

(சாவத்திய நகரில் சில சிறைக்கைதிகளை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யே ராக ரத்தானுபதன்தி சோதங்

சயங் கதங் மக்கடகோவ ஜாலங்

ஏதம்பி செத்வான வஜன்தி தீரா

அனபெக்கினோ சப்ப துக்கங் பஹாய

அஞ்ஞானி இந்த ஆசையில் ஒட்டிக்கொண்டு பேராசை எனும்

வௌ;ளத்தில் வீழ்ந்திருப்பது, தானே பின்னிக்கொண்ட வலையின்

நடுவே இருக்கும் சிலந்தியை போன்றே. ஆனால் அறிவுள்ளவர்கள்

அனைத்து துக்கங்களையும் துறப்பதற்காக காமங்களின்

மீது எதிர்பார்ப்புக்கள் வைத்திராது கிலேச பந்தங்களை

அகற்றிக்கொண்டு மோட்சத்தினை நோக்கியே செல்வார்.

(வேலுவனராமத்தில் கேமா எனும் பட்டத்தரசியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. முஞ்ச பூரே முஞ்ஞ பச்சதோ

மஜ்ஜே முஞ்ச பவஸ்ஸ பாரகூ

சப்பத்த விமுத்த மானசோ

ந புன ஜாதிஜரங் உபேஹிசி

இறந்தகாலத்தினை நினைத்து வருந்துவதை விடுங்கள்.

எதிர்காலம் தொடர்பாக கனவு காணுவதை விடுங்கள்.

நிகழ்காலத்தினுள் பிணைந்து போவதை விடுங்கள். இந்த

பவத்திலிருந்து நீங்குபவராகுங்கள். எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட

ஒருவராகுங்கள். மீண்டும் மீண்டும் இந்த பிறப்பு, முதுமை, நோய்,

மரணம் கொண்ட உலகிற்கு வராத ஒருவராகுங்கள்.

(இராஜகிருகத்தில் உக்கசேன எனும் சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. விதக்க பமதிதஸ்ஸ ஜன்துனோ

திப்பராகஸ்ஸ சுபானுபஸ்ஸினோ

பீய்யோ தண்ஹா பவட்டதி

ஏச கோ தள்ஹங் கரோதி பந்தனங்

சிலர் எந்நேரமும் காமம் தொடர்பான சிந்தனைகளையே சிந்தித்து

கொண்டிருப்பார்கள். பலத்த காம எண்ணங்கள் கொண்ட

மனதுடன் (அசுபமானவற்றை) சுபமானவையாகவே பார்த்துக்

கொண்டிருப்பார். அப்போது அவருள் பேராசையே வளரும்.

இறுதியில் அந்த பேராசை எனும் பந்தம் மிகவும் உறுதியாகவிடும்.

(ஜேதவனராமத்தில் ஒரு இளமையான பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சிதக்கூபசமே ச யோ ரதோ

அசுபங் பாவயதி சதா சதோ

ஏச கோ வ்யான்திகாஹிதி

ஏச செச்சதி மார பந்தனங்

காமங்கள் கொண்ட எண்ணங்களை தணித்து, அசுப தியானத்தில்

மனதை ஒட்டவைத்துக்கொண்டு எந்நேரமும் அசுப தியானத்தினை

செய்பவராயின் அவருள் இருக்கும் இந்த பேராசை அழிந்துவிடும்.

அவர் மாரனது பிணைப்புக்களை வெட்டியகற்றிவிடுவார்.

(ஜேதவனராமத்தில் ஒரு இளமையான பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நிட்டங்கதோ அசன்தாசி

வீத தண்ஹோ அனங்கனோ

அச்சின்தி பவசல்லானி

அன்திமோயங் சமுஸ்ஸயோ

எவராயினும் ஒருவர் மோட்சமார்க்கத்தின் இறுதிவரைக்கும்

பயணித்திருப்பாராயின், அவருள் எவ்வித பதற்றமும் இல்லையாயின்,

பேராசை இல்லையாயின், கிலேசங்கள் இல்லையாயின், பவம்ழூ

எனும் ஆணிகளை பிடுங்கி எறிந்தவராயின், அவருக்கு இருப்பது

இந்த இறுதி சரீரம் மாத்திரமே.

(ஜேதவனராமத்தின் போது பாவமிகுந்த மாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. வீத தண்ஹோ அனாதானோ

நிருத்திபத கோவிதோ

அக்கரானங் சன்னிபாதங்

ஜஞ்ஞா புப்பபரானி ச

சவே அன்திமசாரீரோ

மஹாபஞ்ஞோ மஹாபுரிசோதி வுச்சதி

ஒரு பிக்கு பேராசையை அழித்தவராயின், மோட்சத்திற்கான

பாதையை கூறுவதற்கு திறமையானவராயின், முன் பின் பதங்களை

சரியாக, எழுத்துக்களையும் ஒழுங்குப்படுத்திக்கொண்டு முறையாக

தர்மத்தினை கூறுவாராயின், உண்மையாகவே அவர் சுமந்திருப்பது

இறுதி சரீரத்தினையே. மகா ஞானி, மகா பிரக்ஞையுள்ளவர்,

மகா புருஷோத்தமர் என்று அவரையே குறிப்பிட வேண்டும்.

(ஜேதவனராமத்தில் பாவமிகுந்த மாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்பாபிபூ சப்பவிது ஹமஸ்மி

சப்பேசு தம்மேசு அனூபலித்தோ

சப்பங் ஜஹோ தண்ஹக்கயோ விமுத்தோ

சயங் அபிஞ்ஞாய கமுத்திசெய்யங்

நான் அனைத்து கிலேசங்களையும் அழித்துவிட்டேன். நான்

அனைத்தையும் உய்த்துணர்ந்துவிட்டேன். எதன் மீதும் எனக்கு

ஆசையில்லை. அனைத்தையும் கைவிட்டேன். பேராசையை

முழுமையாக அழிந்துவிட்டேன். சன்சார (பிறவிப்பயண)

துக்கத்திலிருந்து முழுமையாக விடுதலையடைந்துவிட்டேன்.

*.பத விளக்க பகுதியை பார்க்க.

எவ்வித குருவினது உபதேசமுமின்றி சுயமான ஞானத்தினால்

யதார்த்தத்தினை உய்த்துணர்ந்த நான் யாரைத்தான்

குருவாக ஏற்பது?

(புத்தகயா மற்றும் வாரணாசிக்கு இடையே உபக எனும்

ஆஜீவகனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்பதானங் தம்மதானங் ஜினாதி

சப்பங் ரசங் தம்மரசோ ஜினாதி

சப்பங் ரதிங் மத்தரதீ ஜினாதி

தண்ஹக்கயோ சப்ப துக்கங் ஜினாதி

அனைத்து தானங்களை தோற்கடித்து தர்ம தானமே

வெற்றிகொள்ளும். அனைத்து சுவைகளையும் தோற்கடித்து

தரம்சசுவையே வெற்றிகொள்ளும். அனைத்து விருப்புக்களையும்

தோற்கடித்து தர்மத்தின் மீது கொண்ட விருப்பே வெற்றிக்கொள்ளும்.

அனைத்து துக்கங்களையும் தோற்கடித்து தண்ஹாவினை

(பேராசையினை) அழிப்பதே வெற்றிக்கொள்ளும்.

(ஜேதவனராமத்தில் தேவேந்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஹனன்தி போகா தும்மேதங்

நோ வே பாரகவேசினோ

போகதண்ஹாய தும்மேதோ

ஹன்தி அஞ்ஞேவ அத்தனங்

சொத்து சுகம் என்பன அஞ்ஞான மனிதனை அழித்துவிடுகிறது.

ஆனால் சன்சாரத்தில் இருந்து நீங்கி, மோட்சத்தினை நோக்கி

செல்பவரை இவைகளால் அழிக்க முடியாது. அஞ்ஞான மனிதன்,

சொத்து சுகம் என்பவற்றின் மீது கொண்ட ஆசையினால்

அழிவது, தானே பிறரை ஏவி தன்னையே அழித்துக்கொள்வது

போன்றதாகும்.

(ஜேதவனராமத்தில் அபுத்தக எனும் சீமானை முன்னிட்டு போதித்தாகும்)

  1. திணதோசானி கெத்தானி

ராகதோசா அயங் பஜா

தஸ்மா ஹி வீதராகேசு

தின்னங் ஹோதி மஹப்பலங்

வயலின் நெற்களுக்கு நோய்கள் ஏற்படுவது போன்று இந்த

உயிர்களும் காம இச்சை எனும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

எனவேதான் ஆசையை முற்றும் அழித்த மகா முனிவர்களுக்கு

அளிக்கும் தானம் மகா புண்ணிய விளைவுகளை கொடுக்கிறது.

(தாவதிங்ச தேவலோகத்தில் அங்குர எனும்

தேவ புத்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. திணதோசானி கெத்தானி

தோசதோசா அயங் பஜா

தஸ்மா ஹி வீததோசேசு

தின்னங் ஹோதி மஹப்பலங்

வயலின் நெற்களுக்கு நோய்கள் ஏற்படுவது போன்று இந்த

உயிர்களும் கோபம் எனும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

எனவேதான் கோபத்தினை முற்றும் அழித்த மகா முனிவர்களுக்கு

அளிக்கும் தானம் மகா புண்ணிய விளைவுகளை கொடுக்கிறது.

(தாவதிங்ச தேவலோகத்தில் அங்குர எனும்

தேவ புத்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. திணதோசானி கெத்தானி

மோஹதோசா அயங் பஜா

தஸ்மா ஹி வீதமோஹேசு

தின்னங் ஹோதி மஹப்பலங்

வயலின் நெற்களுக்கு நோய்கள் ஏற்படுவது போன்று இந்த

உயிர்களும் அறியாமை எனும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

எனவேதான் அறியாமையை முற்றும் அழித்த மகா முனிவர்களுக்கு

அளிக்கும் தானம் மகா புண்ணிய விளைவுகளை கொடுக்கிறது.

(தாவதிங்ச தேவலோகத்தின்போது அங்குர எனும்

தேவ புத்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. திணதோசானி கெத்தானி

இச்சாதோசா அயங் பஜா

தஸ்மா ஹி விகதிச்சேசு

தின்னங் ஹோதி மஹப்பலங்

வயலின் நெற்களுக்கு நோய்கள் ஏற்படுவது போன்று

இந்த உயிர்களும் இழிவான ஆசைகள் எனும் நோயினால்

பீடிக்கப்பட்டுள்ளனர். எனவேதான் இழிவான ஆசைகளை முற்றும்

அழித்த மகா முனிவர்களுக்கு அழிக்கும் தானம் மகா புண்ணிய

விளைவுகளை கொடுக்கிறது.

(தாவதிங்ச தேவலோகத்தின்போது அங்குர எனும்

தேவ புத்திரனை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(பேராசை தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

 

 

 

25.பிக்கு பகுதி

(உண்மையான பிக்கு தொடர்பாக மொழிந்த பகுதி)

 

 

  1. சக்குனா சங்வரோ சாது

சாது சோதேன சங்வரோ

காணேன சங்வரோ சாது

சாது ஜிவ்ஹாய சங்வரோ

கண்களை, காதுகளை, நாசியினை, நாவினை அடக்கிக்கொள்வது

எவ்வளவு சிறந்த விடயம்!

(ஜேதவனாராமத்தின்போது ஐந்து தேரர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. காயேன சங்வரோ சாது

சாது வாசாய சங்வரோ

மனசா சங்வரோ சாது

சாது சப்பத்த சங்வரோ

சப்பத்த சங்வுதோ பிக்கூ

சப்பதுக்கா பமுச்சதி

உடலை அடக்கிக்கொள்வது எவ்வளவு சிறந்த விடயம்.

வார்த்தையை அடக்கிக்கொள்வது எவ்வளவு சிறந்த விடயம்,

மனதை அடக்கிக்கொள்வது எவ்வளவு சிறந்த விடயம் இவ்

அனைத்தையும் அடக்கிக்கொள்வது எவ்வளவு சிறந்த விடயம்.

அனைத்திலும் தன்னை கட்டுப்படுத்தி அடக்கிக்கொண்ட பிக்கு

அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுதலை அடைவார்.

(ஜேதவனாராமத்தில் ஐந்து தேரர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஹத்த சஞ்ஞதோ பாத சஞ்ஞதோ

வாசாய சஞ்ஞசதோ சஞ்ஞதுத்தமோ

அஜ்ஜத்தரதோ சமாஹிதோ

ஏகோ சன்துசிதோ தமாஹு பிக்கு

(ஒருவர்) இரு கைகளும், கால்களும், மனமும் உன்னத முறையில்

அடக்கி, உள்ளச்சமாதியினுள் ஒட்டிக்கொண்டிருப்பாராயின்,

தனிமையில் இன்பமாக இருப்பாராயின் அவரே ஷபிக்கு0

எனப்படுவார்.

(ஜேதவனராமத்தில் ஒரு பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ முகசஞ்ஞதோ பிக்கு

மன்தபாணி அனுத்ததோ

அத்தங் தம்மங் ச தீபெதி

மதுரங் தஸ்ஸ பாசிதங்

எவரேனும் ஒரு பிக்கு தன் வாயினை அடக்கி, சத்தியத்தினை

உய்த்துணர உதவும் பேச்சுக்களை பேசுவாராயின்,

பணிவானவராயின், அவரால் தர்மத்தின் அர்த்தத்தினை

பிரகாசிக்கச்செய்ய முடியும். அவரது பேச்சு மிகவும் இனிமையானது.

(ஜேதவனராமத்தில் கோகாலிக எனும் பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. தம்மாராமோ தம்மரதோ

தம்மங் அனுவிசின்தயங்

தம்மங் அனுஸ்ஸரங் பிக்கு

சத்தம்மா ந பரிஹாயதி

தர்மத்தினுள் வாழும், தர்மத்தினையே விரும்பும். தர்மத்தினையே

நினைத்துக்கொண்டிருக்கும், தர்மத்தினையே நினைவுகூறும் அந்த

பிக்கு ஒருக்காலும் தர்மத்தினால் குறைவடையமாட்டார்.

(ஜேதவனராமத்தில் தம்மாராம எனும் பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சலாபங் நாதிமஞ்ஞெய்ய

நாஞ்ஞேசங் பிஹயங் சரே

அஞ்ஞேசங் பிஹயங் பிக்கு

சமாதிங் நாதிகச்சதி

தனக்கு கிடைத்ததை இழிவானதாக நினைக்கக்கூடாது.

ஏனையோருக்கு கிடைப்பதை நினைத்து ஆசை கொள்ளக்கூடாது.

ஏனையோருக்கு கிடைப்பதை நினைத்து ஆசைகொள்ளும்

பிக்குவால் உள்ளச்சமாதியை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

(வேலுவனாராமத்தில் ஒரு தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அப்பலாபோபி சே பிக்கு

சலாபங் நாதிமஞ்ஞதி

தங் வே தேவா பசங்சன்தி

சுத்தாஜீவிங் அதந்திதங

பிக்குவிற்கு ஏதேனும் சிறிதளவும் கிடைக்கலாம். ஆனால் தனக்கு

கிடைக்கும் கொஞ்சத்தினை ஏளனமாக நினைக்க கூடாது. தூ

ய்மையான வாழ்வை வாழும் சோம்பலற்ற அந்த பிக்குவை

தேவர்களும் புகழ்வார்கள்.

(வேலுவனாராமத்தில் ஒரு தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்பசோ நாமரூபஸ்மிங்

யஸ்ஸ நத்தி மமாயிதங்

அசதா ச ந சோசதி

ச வே பிக்கூதி வுச்சதி

இந்த நாமரூபங்கள் (அருவுருவம்) தொடர்பாக மமதை பரிபூரணமாக

ஒருவருக்கு இல்லாவிடில், அந்த இல்லாமல் போன மமதத்தை

நினைத்து அவர் சோகம் கொள்ளமாட்டார். அவ்வாறானவரே

பிக்கு எனப்படுவார்.

(சாவத்திய நகரில் பஞ்சக்கதாயக எனும் அந்தணரை

 முன்னிட்டு போதித்ததாகும்)

  1. மெத்தாவிஹாரி யோ பிக்கு

பசன்னோ புத்தசாசனே

அதிகச்சே பதங் சன்தங்

சன்காரூபசமங் சுகங்

ஒரு பிக்கு மைத்ரீ (அன்பினை பரப்பும் தியானம்) தியானத்தை

செய்துகொண்டு வசிப்பாராயின், புத்த சாசனம் தொடர்பாக

அசையாத விருப்புடன் வாழ்வாராயின், அனைத்து சங்ஸ்காரங்களும்

தணிவதால் ஏற்படும் பரம சுகமான ஷாந்தமான அந்த மகா

மோட்சத்தினை அடைய அந்த பிக்குவால் முடியும்.

  1. சிஞ்ச பிக்கு இமங் நாவங்

சித்தா தே லஹுமெஸ்ஸதி

செத்வா ராகஞ்ச தோசஞ்ச

ததோ நி;ப்பானமேஹிசி

புண்ணியமிகு பிக்கு, இந்த வாழ்க்கை எனும் கப்பலில் உள்ள

இழிவான சிந்தனை எனும் நீரை இறைத்துவிடுங்கள். நீரை

இறைத்துவிட்ட கப்பல் இலேசானது. ஆசை, கோபம், அறியாமை

எனும் மும்மலங்களையும் நீக்கிக்கொண்டு உங்களால்

மோட்சத்தினை அடைய முடியும்.

  1. பஞ்ச சின்தே பஞ்ச ஜஹே

பஞ்ச சுத்தரிபாவயே

பஞ்ச சங்காதிகோ பிக்கு

ஓகதிண்ணோதி வுச்சதி

முதல் முதன்மையான ஐந்து சங்யோஜங்களையும் அழிக்க

வேண்டும். இறுதி சங்யோஸன தர்மங்களையும் அழிக்க

வேண்டும். சிரத்தை, வீரியம், விழிப்புணர்வு, உளச்சமாதி,

பிரக்ஞை என்பன விருத்தி செய்ய வேண்டும். ஆசை, கோபம்,

அறியாமை, ஆணவம், தவறான பார்வை எனும் ஐந்தினையும்

துறக்க வேண்டும். அந்த பிக்குவே இந்த துன்பப்பெருங்கடலில்

இருந்து கரையேறியவராவார்.

  1. ஜாய பிக்கு மா ச பமாதோ

மா தே காமகுணே பமஸ்ஸு சித்தங்

மா லோஹகுலிங் கிலீ பமத்தோ

மா கந்தி துக்கமிதன்தி டய்ஹமானோ

புண்ணியமிகு பிக்கு (நீங்கள்) தியானம் செய்யுங்கள். தர்மத்தி;ல்

ஈடுபட தாமதமாக வேண்டாம். உங்களுடைய இந்த மனதினை

பஞ்ச காமத்தில் உழல விட வேண்டாம். தாமதமாகி இறுதியில்

நரகத்தில் பிறந்து தீப்பந்துகளை உண்ணும் ஒருவராக வேண்டாம்.

அந்த கொடிய தீயில் எரிந்துகொண்டு ஐயோ இது மிகவும்

துன்பம்” என கதறும் ஒருவராக வேண்டாம்.

  1. நத்தி ஜானங் அபஞ்ஞஸ்ஸ

பஞ்ஞா நத்தி அஜ்ஜாயதோ

யம்ஹி ஜானங் ச பஞ்ஞங் ச

ச வே நிப்பானசன்திகே

பிரக்ஞை இல்லாதவருக்கு தியான நிலைகள் இல்லை. தியான

நிலைகளை மேம்படுத்தாதவருக்கு பிரக்ஞையும் இல்லை.

எவரேனும் ஒருவருள் பிரக்ஞையும் தியான நிலைகளும்

ஒருங்கே இருக்குமாயின் அவரே மகா மோட்சத்திற்கு அருகே

இருப்பவராவார்.

  1. சுஞ்ஞாகாரங் பவிட்டஸ்ஸ

சன்த சித்தஸ்ஸ பிக்குனோ

அமானுசீ ரதீ ஹோதி

சம்மா தம்மங் விபஸ்ஸதோ

தனிமையான குடிலுக்கு செல்லும் அமைதியான பிக்கு பஞ்ச

உபாதானஸ்கந்தங்களை அறிவினால் ஆராயும்போது அந்த

தர்மத்தின் மீது அந்த பிக்குவினுள் தோன்றும் விருப்பமானது

அனைத்து மனித உணர்வுகளையும் மீறிச்செல்வதாகும்.

  1. யதோ யதோ சம்மசதி

கந்தானங் உதயப்பயங்

லபதீ பீதிபாமொஜ்ஜங்

அமதங் தங் விஜானதங்

இந்த பஞ்ச உபாதானஸ்கந்தங்களின் தோற்றத்தினயும

அழிவினையும் விபஸ்ஸனா மூலம் விருத்தி செய்வது

எம்முறையிலாகட்டும் அவ் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனதில்

இன்பம் நஜறைவான ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். யதார்த்தத்தினை

உய்த்துணர்ந்த ஒருவருக்கு அது அமிர்தமாகும்.

  1. தத்ராயமாதி பவதி

இத பஞ்ஞஸ்ஸ பிக்குனோ

இந்திரியகுத்தி சந்துட்டி

பாதிமொக்கே ச சங்வரோ

இந்த புத்த சாசனத்தில் ஞானமுள்ள பிக்கு பஞ்ச

உபாதானஸ்கந்தங்களை அநித்தியமாக அறிவினால்

ஆராயும்போது இந்த மூன்று விடயங்களும் அடிப்படையாக

அமையும். புலனடக்கம், பாதிமொக்க கட்டுப்பாட்டு சீலம். மற்றுமு;

கிடைத்ததையிட்டு மகிழ்தல் எனும் இம் மூன்றுமாகும்.

17 மித்தே பஜஸ்ஸு கல்யாணே

சுத்தாஜீவே அதந்திதே

படிசன்தாரவுத்தெய்ஸ்ஸ

ஆசாரகுசலோ சியா

ததோ பாமொஜ்ஜ பஹுலோ

துக்கஸ்ஸன்தங் கரிஸ்ஸஸி

தர்மத்தினை கலந்துரையாடுங்கள். தூய்மையான

நடத்தையுடையவராக இருப்பதற்கு திறமையானவராக இருங்கள்.

அதன் மூலம் தர்மத்தில் புத்துணர்வினை ஏற்படுத்திக்கொண்டு

இந்த துக்கங்களை முடிவிற்கு கொண்டுவரும் ஒருவராகுங்கள்.

அதேபோல் தூ;மையான ஜீவனோபாயத்தினையுடைய சோம்பலற்ற

சிறப்பான சத்புருஷ நண்பர்களுடன் பழக வேண்டும்.

  1. வஸ்ஸிகா விய புப்பானி

மத்தவானி பமுஞ்சதி

ஏவங் ராகங் ச தோசங் ச

விப்பமுஞ்செத பிக்கவோ

வாடிய மல்லிகை மலர் காம்பிலிருந்து நழுவி கீழே விழுவதைப்

போன்று புண்ணியமிகு பிக்குகளே, இந்த ஆசையையும்

கோபத்தினையும் உங்கள் மனதிலிருந்து விட்டுவிடுங்கள்.

(ஜேதவனராமத்தில் ஐந்நூறு பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சன்தகாயோ சன்தவாசோ

சன்தவா சுசமாஹிதோ

வன்தலோகாமிசோ பிக்கு

உபசன்தோதி வுச்சதி

உடல் சாந்தமானதாயின், பேச்சும் சாந்தமானதாயின்,

உள்ளம் சமாதிமிக்கதாயின், பஞ்ச காமத்தின் மீதான ஆசை

அற்றிருப்பதாயின், அந்த பிக்குவையை சாந்தமான பிக்கு

எனப்படுவார்.

(ஜேதவனராமத்தில் சன்தகாய தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அத்தனா சோதயத்தானங்

படிமாசே அத்தமத்தனா

சோ அத்தகுத்தோ சதிமா

சுகங் பிக்கு விஹாஹிசி

புண்ணியமிகு பிக்குவே தானே தனக்கு குற்றஞ்சாட்டிக்கொள்ள

வேண்டும். தானே தன்னை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தானே தன்னை பாதுகாத்துக்கொண்டு நல்ல விழிப்புணர்வுடன்

சுகமாக வாழ வேண்டும்.

(ஜேதவனராமத்தில் நங்ககுல தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

21 அத்தாஹி அத்தனோ நாதோ

அத்தா ஹி அத்தனோ கதி

தஸ்மா சஞ்ஞமயத்தானங்

அஸ்ஸங் பத்ரங்வ வாணிஜோ

தானே தனக்கு புகலிடம். பயணிக்கும் பயணத்திற்கு

காரணமாகுவதும் தானே தான். எனவே திறமையான வியாபாரி

தன் சுந்தரமான குதிரையை பாதுகாப்பதைப்போன்று தன்னை

தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

  1. பாமொஜ்ஜ பஹுலோ பிக்கு

பசன்னோ புத்தசாசனே

அதிகச்செ பதங் சன்தங்

சன்காரூபசமங் சுகங்

தர்மத்தினை பின்பற்றுவதால் மிகவும் சந்தோசமாக வாழ்வினை

கழித்து சம்புத்த சாசனம் தொடர்பாக அசையாத விருப்புடன்

வாழும் பிக்கு அதன் காரணமாகவே அனைத்து சங்ஸ்காரங்களின்

அழிவினால் ஏற்படும் சாந்தமிகு மோட்சத்தினை அடைவார்.

(ஜேதவனராமத்தில் வக்கலீ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ ஹவே தஹரே பிக்கு

யுஞ்ஜதி புத்தசாசனே

சோ இமங் லோகங் பபாசேதி

அப்பா முத்தோவ சந்திமா

அந்த பிக்கு பிள்ளை பருவத்தினராக இருக்கலாம். ஆனால்

முறையாக புத்த சாசனத்தில் ஈடுபடுபவராயின், மேகங்களில்

இருந்து விலகிய பௌர்ணமி நிலவினைப்போன்று அந்த பிக்குவே

இந்த உலகினை ஒளியூட்டுவார்.

(பூர்வாராமத்தில் சுமண சாமணேர தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

 (பிக்கு தொடர்பாக போதிக்கப்பட்ட பகுதி முற்றிற்று)

26.பிராமண வகை

(உண்மையான பிராமணர் தொடர்பாக மொழிந்த பகுதி)

  1. ஜின்த சோதங் பரக்கம்ம

காமே பனுத ப்ராஹ்மண

சங்காரானங் கயங் ஞத்வா

அகதஞ்ஞ{ ஸி ப்ராஹ்மண

புண்ணியமிகு பிராமணரே, மனதில் வீரியத்தை ஏற்படுத்திக்கொண்டு

இந்த தண்ஹா எனப்படும் பேராசை பிரவாகத்தினை உலர

விடுங்கள். காமத்தின் மீதான இந்த இழிவான ஆசையை

அழித்துவிடுங்கள். புண்ணியமிகு ப்ராஹ்மணரே, இந்த

சங்ஸ்காரங்களின் அழிவினை அறிவினால் உய்த்துணர்ந்து இந்த

பஞ்ச உபாதானஸ்கந்தங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தாத

ஒருவராகுங்கள்.

(ஜேதனராமத்தின்போது சத்தா நிறைந்த ஒரு பிராமணரை

முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யதா த்வயேசு தம்மேசு

பாரகு ஹோதி ப்ராஹ்மனோ

அதஸ்ஸ சப்பே சங்யோகா

அத்தங் கச்சன்தி ஜானதோ

மோட்சப்பாதையில் பயணிக்கும் பிராமணன் சமதா மற்றும்

விபஸ்ஸனா தியானங்களின் உச்சத்திட்கே செல்லும் நாளில் இந்த

அனைத்து பற்றுக்களும் இல்லாமல் போகும். அதன் காரணமாக

யதார்த்தத்தினை உய்த்துணர்ந்து கொள்வதால் அவர் உத்தம

அரஹத் நிலையை அடைவார்.

(ஜேதவனாராமத்தில் முப்பது பிக்குமாரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ பாரங் அபாரங் வா

பாராபாரங் ந விஜ்ஜதி

வீதத்தரங் விசங்யுத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

ஒரு பிக்குவிற்கு இக்கரை எனும் உள்ளக உலகங்கள் (கண்,

காது, நாசி நாவு, உடல், மனம்) புற உலகங்கள் எனும் அக்கரை

எனும் இவ் இரு கரைகளுக்கும் பிணைந்து போகாத எதுவும்

இல்லாவிடில் அவர் கிலேசங்களால் ஏற்படும் இன்னல்களை

துறந்தவராவார். கிலேசங்களிலிருந்து விலகி இருப்பவராவார்.

அவரையே நான் உண்மையான பிராம்மணன் என்பேன்.

(ஜேதவனாராமத்தின்போது பாவமிகுந்த மாரனை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஜாயிங் விரஜமாசீனங்

கதகிச்சங் அனாசவங்

உத்தமத்தங் அனுப்பத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

அவர் தியான நிலைகளை விருத்தி செய்வாராயின், கிலேச

மாசுக்கள் அற்றவராயின், விருத்தி செய்ய வேண்டிய

மோட்சப்பாதையை பரிபூரணமாக விருத்தி செய்தவராயின், ஆஸ

வங்கள் இல்லாதவராயின், உத்தம அர்த்தமாகிய மோட்சத்தினை

அடைந்தவராயின், அவரையே நான் உண்மையான பிராம்மணன்

என்பேன்.

(ஜேதவனாராமத்தில் ஒரு பிராமணரை முன்னிட்டு போதித்தாகும்)

  1. திவா தபதி ஆதிச்சோ

ரத்திங் ஆபாதி சந்திமா

சன்னத்தோ கத்தியோ தபதி

ஜாயீ தபதி ப்ராஹ்மணோ

அத சப்பமஹோரத்திங்

புத்தோ தபதி தேஜசா

சூரியன் பகலில் ஜொலிக்கும். சந்திரன் இரவில் ஜொலிக்கும.;

இராஜ ஆபரணங்களை அணிந்த மன்னன் தன் சேனை புடைசூழ

இருக்கும் போதே ஜொலிப்பார். தியான நிலைகளை விருத்தி

செய்துகொள்ளும்போதே உண்மையான அந்தணர் (பிக்கு)

ஜொலிப்பார். ஆனால் இரவு பகல் எனும் எவ்வேளையும் புத்த

பகவானே தன் தேஜசினால் ஜொலிப்பார்.

(ஜேதவனராமத்தில் மகா ஆனந்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பாஹிதபாபோதி ப்ராஹ்மணோ

சமசரியா சமணோதி வுச்சதி

பப்பாஜயத்தனோ மலங்

தஸ்மா பப்பஜிதோதி வுச்சதி

ஒருவர், தன் மனதில் உள்ள அனைத்து பாவங்களை

நீக்கியதாலேயே பிராமணன் எனப்படுவார். தர்மத்தினை பின்பற்றி,

தன்னை நன்மையில் செலுத்துவதாலயே ஒருவர் சிரமணர்

எனப்படுகிறார். தன்னுள் இருக்கும் அனைத்து கிலேசங்களையும்

அழிப்பதாலேயே ஒருவர் பிக்கு எனப்படுகிறார்.

  1. ந ப்ராஹ்மணஸ்ஸ பஹரெய்ய

நாஸ்ஸ முஞ்சேத ப்ராஹ்மணோ

தீ ப்ராஹ்மணஸ்ஸ ஹன்தாரங்

ததோ தீ யஸ்ஸ முஞ்சதி

அரஹத் முனிவர் எனப்படும் உண்மையான பிராமணரை

துன்புறுத்தக்கூடாது. அரஹத் பிராமணர் கோபம் கொள்ளும்

இயல்பினை வென்றவராவார். அரஹத் பிராமணரை

துன்புறுத்துவருக்கு நிந்தனைகளாகட்டும். அதேபோன்று

அரஹத் பிராமணர் தொடர்பாக கோபம் கொள்பவர்களுக்கும்

நிந்தனைகளாகட்டும்.

(ஜேதவனராமத்தில் சாரிபுத்த மகா தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ந ப்ராஹ்மணஸ்ஸேதத கிஞ்சி செய்யோ

யதா நிசேதோ மனசோ பியேஹி

யதோ யதோ ஹிங்சமனோ நிவத்ததி

ததோ ததோ சம்மதிமேவ துக்கங்

அரஹத் பிராமணருள் இருக்கும் பொறுமை ஒரு மாபெரும்

குணமாகும். கோபம் கொள்ளும் இயல்புடையவன் தான் கோபம்

கொள்வதாலேயே இன்புறுவான். அரஹத் முனிவர் அவருடைய

அந்த இம்சிக்கும் மனதை தவிர்ப்பதற்கு உதவுவார். இதனால்

அந்த கோபம் கொண்ட மனிதனின் குரோத மனதை தடுப்பதால்

அவருக்கு கிடைக்கவிருக்கும் துக்கமும் தடுத்தது போலாகும்.

(ஜேதவனராமத்தில் சாரிபுத்த மகா தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ காயேன வாசாய

மனசா நத்தி துக்கதங்

சங்வுதங் தீஹி டானேஹி

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் வார்த்தை, உடல், உள்ளம் எனும் இம்மூன்று

கதவுகளினால் அகுசலங்களை செய்யாவிடில், இந்த மூன்று

இடங்களை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பாராயின் அவரையே நான்

உண்மையான பிராமணன் என்பேன்.

(ஜேதவனாராமத்தில் பிரஜாபதீ கௌதமீ தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யம்ஹா தம்மங் விஜானெய்ய

சம்மாசம்புத்த தேசிதங்

சக்கச்சங் தங் நமஸ்ஸெய்ய

அக்கிஹுத்தங்வ ப்ராஹ்மணோ

சம்மா சம்புத்த பகவானால் முழுமையாகவும் முறையாகவும்

குறைவின்றி போதிக்கப்பட்ட இந்த தர்மத்தினை ஒருவர் எவர்

மூலமாக கற்றறிந்து கொண்டாரோ அவர் தனக்கு பகவானது

தர்மத்தினை கற்றுக்கொடுத்த குருவினை பிராமணர்கள் தீயினை

வணங்குவதை போன்று சிறப்பாக போற்றி வணங்குவார்.

(ஜேதவனாராமத்தின்போது மகா சாரிபுத்த தேரரை முன்னிட்டு

போதித்ததாகும்)

  1. ந ஜடாஹி ந கொத்தேன

ந ஜச்சா ஹோதி ப்ராஹ்மணோ

யம்ஹி சச்சங் ச தம்மோ ச

சோ சுசீ சோவ ப்ராஹ்மணோ

ஜடா முடி தரிப்பதனாலயோ, பிறந்த குல கோத்திரம்

என்பதனாலயோ ஒருவர் பிராமணராக மாட்டார். எவருள் ஆரிய

சத்தியங்கள், தர்மம் மற்றும் தூய்மையான வாழ்வு என்பன

இருக்கிறதோ அவரையே நான் உண்மையான பிராமணன்

என்பேன்.

(ஜேதவனாராமத்தில் ஜடில எனும் பிராமணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. கிங் தே ஜடாஹி தும்மேத

கிங் தே அஜினசாடியா

அப்பன்தரங் தே கஹணங்

பாஹிரங் பரிமஜ்ஜசி?

ஞானமில்லாதவரே, இந்த ஜடா முடியை தரித்திருப்பதன் பயன்

என்ன? இந்த புலித்தோலை தரித்திருப்பதன் பயன் என்ன?

தன்னுள் கிலேசங்களை நிறைத்துக்கொண்டு புறத்தோற்றத்தினை

அலங்கரிப்பதன் பயன் என்ன?

(வைசாலி நகரில் குஹக எனும் பிராம்மணரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. பங்சுகுலதரங் ஜன்துங்

கிசங் தமனிசன்ததங்

ஏகங் வனஸ்மிங் ஜாயத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

மயானத்தில் இருந்து எடுத்த துணிகளினால் தைத்த சீவரத்தைதான்

தரித்துள்ளார். உடல் மிகவும் மெலிந்துள்ளது. உடலில் உள்ள

நரம்புகளும் புடைத்து வெளியே தெரிகின்றன. தனிமையாகவே

வனத்தினுள் பிரவேசித்து தியானம் செய்யும் அவரையே நான்

உண்மையான பிராமணன் என்பேன்.

(கிஜ்ஜகூட பர்வதத்தில் கிசாகோதமீ எனும்

தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நசாஹங் ப்ராஹ்மணங் ப்ரூமி

யோனிஜங் மத்திசம்பவங்

போவாதி நாம சோ ஹோதி

ச வே ஹோதி சகிங்சனோ

அகிங்சனங் அனாதானங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

அந்தண பெண்ணின் வயிற்றில் கருவுற்று பிறந்ததால் நான் ஒருவரை

பிராம்மணன் எனக் கூறமாட்டேன். ஷஉத்தமர0 ஷஉத்தமர்0

என தன்னை கூறிக்கொண்டாலும் அவர் கிலேசமுள்ளவராவார்.

ஷஉத்தமர்0 என்பது அவர் தனக்கு கூறிக்கொள்ளும் ஒரு பெயர்

மாத்திரமே. எவரேனும் ஒருவருள் கிலேசங்கள் இல்லாவிடில்

உபாதானங்கள் (பிணைப்புகள்) இல்லாவிடில் பிராமணர் என

கூறவேண்டியவர் அவரே.

(சாவத்திய நகரின்போது இரு பிராமணர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சப்ப சங்யோஜனங் ஜெத்வா

யோ வே ந பரிதஸ்ஸதி

சங்காதிகங் விசஞ்ஞ{த்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் அனைத்து பிணைப்புக்களையும் அழித்து பயமற்று

பதற்றமற்று அனைத்து கிலேசங்களையும் மீறிச்சென்ற,

கிலேசங்களுடன் ஒன்றிக்காத அந்த நிக்கிலேச உத்தமரையே

நான் பிராம்மணன் என்பேன்.

(வேலுவனாராமத்தில் உக்க எனும் சீமானை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. செத்வா நத்திங் சரத்தங் ச

சந்தாமங் சஹனுக்கமங்

உக்கித்தபளிகங் புத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

குரோதம் எனும் கயிற்றை வெட்டியகற்றி, தண்ஹா எனப்படும் மகா

ஆசையை இருகிய கட்டுக்களை அவிழ்த்துவிட்டு, மூட பார்வை

எனும் மகா சங்கிலியை உடைத்தெறிந்து அஞ்ஞானம் எனும்

பூட்டுக்களை உடைத்து ஆரிய சத்தியங்களை உய்த்தறிந்த

மகா முனிவரையையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் இரு பிராமணர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அக்கோசங் வதபந்தனங் ச

அதுட்டோ யோ திதிக்கதி

கந்திபலங் பலானீகங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

ஏனையோர் ஆக்ரோசம், செய்யும்போதும், தன் உடலை பல்வேறு

வகையாக துன்புறுத்தும் போதும் கூட ஒருவர் அவ் எதற்குமே

கோபம் கொள்ளாது பொறுமையுடன் இருப்பாராயின், அந்த

பொறுமையையே தன் பலமாக கொண்டிருப்பாராயின் அந்த

அரஹத் மகா முனிவரையே நான் பிராமணர் என்பேன்.

(வேலுவனராமத்தில் அக்கோசக பரத்துவாசரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அக்கோதனங் சதவன்தங்

சீலவன்தங் அனுஸ்ஸுதங்

தன்தங் அன்திம சாரீரங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

அவர் கோபம் கொள்ளமாட்டார். தன் கடமைகளை சரி

வரச்செய்பவர். சீலமிகுந்தவர். ஆசையை துறந்தவர். புலனடக்கம்

கொண்டவர். தன் இறுதி சரீரத்தையே கொண்டிருக்கிறார். அந்த

அரஹத் முனிவரையே நான் பிராமணர் என்பேன்.

(வேலுவனாராமத்தில் மகா சாரிபுத்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. வாரி பொக்கர பத்தேவ

ஆரக்கேரிவ சாசபோ

யோ ச லிப்பதி காமெசு

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

தாமரை இலையில் தங்காத நீரைப்போன்று, ஊசிமுனைமேல்

தங்காத கடுகைப்போன்று ஒருவர் காமத்தில் நிலைக்காவிட்டால்.

அவரையே நான் உண்மையான பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் உப்பலவண்ணா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

20 யோ துக்கஸ்ஸ பஜானாதி

இதேவ கயமத்தனோ

பன்னபாரங் விசங்யுத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் இந்த சன்சாரத்துக்கம் இவ் வாழ்விலேயே முடிவுற்றது

என்பதனை அறிவாராயின், கிலேச பாரங்களை வீசியெறிந்த,

கிலேசங்களுடன் சேராத அந்த அரஹத் உத்தமரையே நான்

பிராமணர் என்பேன்.

(ஒரு பிராம்மணரை முன்னிட்டு போதித்ததாகும்)

21 கம்பீரபஞ்ஞங் மேதாவிங்

மக்காமக்கஸ்ஸ கோவிதங்

உத்தமத்தன் அனுப்பத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

அவருள் ஆழ்ந்த ஞானம் இருக்கிறது. சிறந்த அறிவாளி. சரி

எது பிழை எது என்பதனை அறிந்து கொள்ள திறமையானவர்.

வாழ்வில் கிடைக்க வேண்டிய உயரிய அர்த்தமான அரஹத்

நிலையையும் அடைந்திருக்கிறார். அவரையே நான் பிராமணர்

என்பேன்.

(கிச்சகூட பர்வதத்தில் கேமா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அசங்சட்டங் கஹட்டேஹி

அனாகாரேஹி சூபயங்

அனோகசாரிங் அப்பிச்சங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

இல்லறத்தார், துறவறத்தார் எனும் யார் மீதும் அவர் மனதில்

எவ்வித பந்தமும் இல்லை. அவர் ஆசையை துறந்தே இருக்கிறார்.

கிடைத்ததை இட்டு மகிழும் சரளமான வாழ்வினை வாழ்பவர்.

அவரையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் பப்பாரதிஸ்ஸ எனும் தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. நிதாய தண்டங் பூதேசு

தசேசு தாவரேசு ச

யோ ந ஹன்தி ந காதேதி

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

திடுக்கிடும் திடுக்கிடாத அனைத்து உயிர்கள் மீதும் கொண்ட

கருணையினால் ஆயுதங்களை துறந்து, தானும் உயிர்களை

கொல்லாது பிறர் மூலமும் கொல்லுவித்துக்கொள்ளாத அவரையே

நான் பிராமணர் என்பேன்.

(சாவத்திய நகரில் ஒரு தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அவிருத்தங் விருத்தேசு

அத்த தண்டேசு நிப்புதங்

சதானேசு அனாதானங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எதிர்க்கும் தன்மையுடைய மக்கள் மத்தியில் யாருடனும்

விரோதம் கொள்ளாது, ஆயுதங்கள் ஏந்தும் மக்கள் மத்தியில்

அமைதியான மனம் கொண்டு,பந்தங்கள் நிறைந்த மனமுடைய

மக்கள் மத்தியில் எவ்வித பந்தங்களுமில்லாமல் இருக்கும் அந்த

அரஹத் பிக்குவையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் நான்கு சாமணேர தேரர்களை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ ராகோ ச தோஸோ ச

மானே மக்கோ ச பாதிதோ

சாசபோரிவ ஆரக்கா

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

ஆசை, கோபம், அறியாமை, அகங்காரம், ஏனையோர் குணங்களை

அழிக்கும் இயல்பு என்பன ஊசிமுனை மேல் தங்காத கடுகு

போன்று எவர் மனதில் இருந்து நீங்குகிறதோ அந்த அரஹத்

தேரரையே நான் பிராமணர் என்பேன்

(வேலுவனராமத்தில் மஹாபன்தக தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. அகக்கசங் விஞ்ஞாபனிங்

கிரங் சச்சங் உதீரயே

யாய நாபிசஜே கஞ்சி

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

கொடிய வார்த்தைகளை பிரயோகிக்காவிடில், இவ்வுலக மறுவுலக

நன்மையை தரும், இனிமையான, நன்மையை விளைவிக்கும்

சத்தியத்தை பேசுவாராயின், யாரையும் கோபமூட்டாவிடில், அந்த

அரஹத் பிக்குவையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் பிளிந்திவச்ச மகா தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோத தீகங் வ ரஸ்ஸங் வா

அணுங் தூலங் சுபாசுபங்

லோகே அதின்னங் நாதியதி

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் உலகில் உள்ள நீளமான, குறுகியதான, சிறியதான,

பெரியதான, அழகியதான, அவலட்சணமானதான எதுவுமே

தனக்கு கொடுக்கப்படாவிடில் அதனை எடுக்காத அந்த அரஹத்

தேரரையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் ஒரு தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஆசா யஸ்ஸ ந விஜ்ஜன்தி

அஸ்மிங் லோகே பரம்ஹி ச

நிராசயங் விசஞ்ஞ{த்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனுமு; ஒருவருள் இவ்வுலகம் தொடர்பாகவோ இல்லை

மறுவுலகம் தொடர்பாகவோ எவ்வித ஆசையுமு; இல்லாவிடில்,

ஆசைகள் துறந்தவராயின், கிலேசங்கள் இல்லாவிடில், அந்த

அரஹத் தேரரையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் மகா சாரிபுத்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸாலயா ந விஜ்ஜன்தி

அஞ்ஞாய அகதங்கதி

அமதோகதங் அனுப்பத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவருள் தண்ஹா (பேராசை) இல்லாவிடில்,

சந்தேகங்கள் இல்லாவிடில், அந்த மகா மோட்சத்தினை உறுதி

செய்தவராயின் அந்த அரஹத் தேரரையே நான் பிராமணர்

என்பேன்.

(ஜேதவனராமத்தில் மகா மொக்கல்லான தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோத புஞ்ஞங் ச பாபங் ச

உபோ சங்கங் உபச்சகா

அசோகங் விரஜங் சுத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் இவ் வாழ்விலேயே பாவம் புண்ணியம் எனும்

இரண்டையும் இல்லாமல் செய்து கொள்வாராயின், அவர்

சோகங்கள் அற்றவராவார். கிலேசங்கள் அற்றவர். தூய்மையானவர்

அந்த அரஹத் தேரரையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் ரேவத தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சந்தங்வ விமலங் சுத்தங்

விப்பசன்னமநாவிலங்

நந்தீ பவபரிக்கீணங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

ஒருவர் இருக்கிறார் அவர் முழு சந்திரனை போன்று நிர்மலமானவர்.

தூய்மையானவர். மிகவும் சௌம்மியமானவராவார். குழப்பங்கள்,

பதற்றம் என்பன அற்றவர். மீண்டும் மீண்டும் பிறப்பதற்கான

ஆசையை துறந்தே இருக்கிறார். அந்த அரஹத் தேரரையே நான்

பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் சந்தாஹ தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோ இமங் பழிபதங் துக்கங்

சங்சாரங் மோஹமச்சகா

திண்ணோ பாரகதோ ஜாயி

அனேஜோ அகதங்கதி

அனுபாதாய நிப்புதோ

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் இந்த கிலேச சேற்றுக்குழியில் இருந்து மீளும்

கடினமான பயணத்தை பயணித்து முடித்தவராயின், மாயையும்

அறியாமையும் நிரம்பிய சன்சாரத்தினை மீறிச்சென்றவராயின்,

அவர் துக்கத்திலிருந்து கரையேறியவராவார். தியான நிலைகள்

உள்ள அவர் ஒரு நிக்கிலேசி (கிலேசங்களற்றவர்) ஆவார்.

சந்தேகங்கள் அற்றவர். எதற்குமே பிணைந்து போகாமல்

தணிந்தவராவார். அந்த அரஹத் தேரரையே நான் பிராமணர்

என்பேன்.

(குண்டவதான வனத்திலே சீவலி தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோத காமே பஹத்வான

அனாகாரோ பரிப்பஜே

காமபவபரிக்கீணங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவர் காமங்களை துறந்து இந்த புத்த சாசனத்திலே

துறவுபூண்டு, காம தண்ஹா( காமங்களின் மீதான ஆசை) பவ

தண்ஹா (மீண்டும் மீண்டும் பிறப்பதற்கான ஆசை), விபவ

தண்ஹா (நிலவாமைக்கான ஆசை) என்பன அழித்தவராயின்

அந்த அரஹத் தேரரையே நான் பிராமணர் என்பேன்.

(ஜேதவனராமத்தில் சுந்தர சமுத்த தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யோத தண்ஹங் பஹத்வான

அனாகரோ பரிப்பஜே

தண்ஹா பவ பரிக்கீணங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவர் காமங்களை துறந்து இந்த புத்த சாசனத்திலே

துறவுபூண்டு, பவ தண்ஹாவை (மீண்டும் மீண்டும் பிறப்பதற்கான

ஆசையை) அழித்தவராயின் அந்த அரஹத் தேரரையே நான்

பிராமணர் என்பேன்.

(வேலுவனராமத்தில் ஜோதிய தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஹித்வா மானுஸகங் யோகங்

திப்பங் யோகங் உபச்சகா

சப்ப யோக விசங்யுத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் மனித பற்றுக்களை கைவிட்டு, தேவலோகங்களுக்கு

இருக்கும் பற்றுதல்களையும் மீறிச்செல்வாராயின், அனைத்து

கிலேச பந்தங்களிலிருந்தும் விலகிய அந்த அரஹத் முனிவரையே

நான் பிராமணர் என்பேன்.

(வேலுவனராமத்தில் ஒரு பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. ஹித்வா ரதிங் ச அரதிங் ச

சீதிபூதங் நிரூபதிங்

சப்ப லோகாபிபூங் வீரங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

காமத்திற்கு இருக்கும் விருப்பத்தினை விடுத்து, தியானங்கள்

செய்வதற்கு இருக்கும் வெறுப்பை துறந்து, தணிந்து நிக்கிலேசி

ஆவாராயின், அனைத்து உலகங்களையும் கட்டு;ப்படுத்திய அந்த

வீரியமிகுந்த அரஹத் முனிவரையே நான் ஷபிராமணர்0 என்பேன்.

(வேலுவனராமத்தின் போது ஒரு பிக்குவை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. சுதிங் யோ வேதி சத்தானங்

உப்பத்திங் ச சப்பசோ

அசத்தங் சுகதங் புத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவர் உயிர்களின் பிறப்பையும் இறப்பையும்

அனைத்து முறைகளிலும் உய்த்துணர்ந்து கொள்வாராயின், எந்த

பிறப்பிற்கும் மனம் விரும்பாவிடில், சுந்தரமான மோட்சப்பாதையில்

பயணித்தாராயின், ஆரிய சத்தியங்களை உய்த்துணர்ந்தவராயின்,

அந்த அரஹத் முனிவரையே நான் ஷபிராமணர்0 என்பேன்.

(வேலுவனராமத்தில் வங்கீச தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ கதிங் ந ஜானன்தி

தேவா கந்தப்பமானுசா

கீணாசவங் அரஹன்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவர் பயணித்த பாதையை தேவர்களாலும்,

மனிதர்களாலும், காந்தருவர்களாலும் கண்டுபிடிக்க முடியாவிடில்,

ஆஸவங்கள் அற்ற அந்த அரஹத் தேரரையே நான் ஷபிராமணர்0

என்பேன்.

(வேலுவனராமத்தில் வங்கீச தேரரை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. யஸ்ஸ புரே ச பச்சா ச

மஜ்ஜே ச நத்தி கிஞ்சனங்

அகிஞ்சனங் அனாதானங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவருக்கு இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம்

எனும் முக்காலங்கள் தொடர்பாக எவ்வித கிலேசங்களும்

இல்லாவிட்டால், அவர் ஒரு நிக்கிலேசியாவார். உபாதானங்கள்

(பிணைந்து போதல்) அற்றவராவார். அந்த அரஹத் முனிவரையே

நான் ஷபிராமணர்0 என்பேன்.

(வேலுவனராமத்தில் தம்மதின்னா தேரியை முன்னிட்டு போதித்ததாகும்)

  1. உசபங் பவரங் வீரங்

மஹேசிங் விஜிதாவினங்

அனேஜங் நஹாதகங் புத்தங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

அவர் உயர்குல எருதினைப்போன்று உத்தமமானவர்.

வீரியமுள்ளவர். ஒரு மகா ரிஷி. மாரன் உட்பட அவனது

சேனைகளை தோற்கடித்து வெற்றிப்பெற்றவர். நிக்கிலேசமானவர்.

கிலேசங்களை கழுவி விட்டவர். ஆரிய சத்தியங்களை

உய்த்துணர்ந்து கொண்டவர். அந்த அரஹத் முனிவரையே நான்

ஷபிராமணர்0 என்பேன்.

  1. புப்பே நிவாசங் யோ வேதீ

சக்காபாயங் ச பஸ்ஸதி

அதோ ஜாதிக்கயங் பத்தோ

அபிஞ்ஞாவொசிதோ முனி

சப்ப வோசித வோசானங்

தமஹங் ப்ரூமி ப்ராஹ்மணங்

எவரேனும் ஒருவர்தான் முன்னர் வாழ்ந்த பிறப்புக்களை

உய்த்துணர்ந்து கொண்டாராயின், தேவலோகம் நரகம் என்பன தன்

தெய்வீக கண்களினால் காணுவாராயின், அதேபோன்று பிறப்பினை

முடித்துக்கொண்டு அரஹத் நிலையை அடைந்தவராயின், இந்த விசேட ஞானங்களை பெற்ற அவர் ஒரு மகா முனிவராவார்.

அனைத்து கிலேசங்களையும் அழித்து மோட்சபாதையை

பரிபூரணமாக பயணித்து முடித்தவராவார். அந்த அரஹத்

முனிவரையே நான் ஷபிராமணர்0 என்பேன்.

(சாவத்திய நகரில் தேவங்கிக பிராம்மணரை முன்னிட்டு போதித்ததாகும்)

சாது! சாது!! சாது!!!

(பிராமணர் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றிற்று)

 

 

 

 

 

 

 

 

 

அருஞ்சொற்கள்

 

  1. மும்மணிகள் – புத்தபகவான், ஸ்ரீ சத்தர்மம், ஆரிய மகா

சங்கத்தினர்

  1. புதுஜ்ஜனர் – மும்மணிகளை சரணடையாதவர்,

தர்மத்தினை அறியாதவர். வாழ்க்கையின் யதார்த்தத்தை

உணராதவர். இப்படிப்பட்டவர் தன் தாய் தந்தையை

கொலை செய்வதற்கோ அல்லது அரஹத் பிக்குமாரை

கொலை செய்வதற்கோ தயங்கமாட்டார். புத்தபகவான்

ஒருவரது திருவுடலின் குருதியை தீய எண்ணம் கொண்டு

திண்டத்தயங்காதவர். சங்க பேதம் செய்ய தயங்காதவர்.

இவ்வியல்புகளை கொண்டவராக இருப்பவரே போதுஜ்ஜனர்

என புத்தபகவான் மொழிந்துள்ளார்.

  1. அரஹத் – ஆசை, கோபம், அறியாமை எனும்

மனவழுக்குகளையும் அதன் படிவுகளையும் முற்றாக

நீக்கியவர். மீண்டும் பிறவி எடுக்காத நிலையை எய்தியவர்.

  1. பஞ்ச உபாதானஸ்கந்தங்கள் – காலத்திற்கும்

அவகாசத்திற்கும் இடைப்பட்ட உருவம், அனுபவிப்பு,

இனங்காணல், சிந்தனை, விஞ்ஞானயம் எனும் ஐந்தின் மீது

கொண்ட பற்றுதலாகும்.

  1. ஆர்ய தர்மம் – புத்தபகவான் போதித்த தர்மம்

  2. மூட பார்வைகள் (திருஷ்டிக்கள்):

*. தானம் அளிப்பதில் விளைவுகள் இல்லை.

*. பூஜைகளில் விளைவுகள் இல்லை

*. சேவை மற்றும் பணிவிடை செய்வதில்

விளைவுகள் இல்லை.

*.கர்மம் மற்றும் கர்மபலன்கள் இல்லை.

*.இவ்வுலகம் என்று ஒன்றில்லை.

*.மறுவுலகம் என்று ஒன்றில்லை.

*. தாய் என்பவள் விசேடமானவள் அல்ல.

*. தந்தை என்பவர் விசேடமானவர் அல்ல.

*. தாய் தந்தை இல்லாது, முட்டையினுள் பிறவாது,

ஈரலிப்பான இடத்தில் இல்லாது எடுக்கும் பிறவிகள் அதாவது

ஓபபாதிக பிறப்புக்கள் உண்டு என்பதனை நம்பாதிருத்தல்

*.இவ்வுலக உண்மைகளை உய்த்துணர்ந்து ஆசை,

கோபம், அறியாமை என்பன முற்றாக நீக்கிய, சாதாரண மனித

தன்மையை மீறிய உத்தமர்கள் இருக்கிறார்கள், என்பதனை

நம்பாதிருத்தல். இவையே புத்தபகவான் மூடபார்வைகளாக

மொழிந்தருளியுள்ளார்.

  1. சம்மா திட்டி அல்லது தெளிவான பார்வை.

*.தானம் அளிப்பதில் விளைவுகள் உண்டு

*. பூஜைகளில் விளைவுகள் உண்டு

*.சேவை, பணிவிடை செய்வதில் விளைவுகள் உண்டு

*.கர்மம் மற்றும் கர்மபலன்கள் உண்டு

*.இவ்வுலகம் என்று ஒன்றுள்ளது

*.மறுவுலகம் என்று ஒன்றுள்ளது.

*.தாய் என்பவள் விசேடமானவள்.

*.தந்தை என்பவர் விசேடமானவர்.

*.தாய் தந்தை இல்லாது, முட்டையினுள் பிறவாது,

ஈரலிப்பான இடத்திலில்லாது எடுக்கும் பிறவிகள் உண்டு

அதாவது ஓபபாதிக பிறப்புகள் உண்டு என்பதை

ஏற்றுக்கொள்ளல்.

*.இவ்வுலக உண்மைகளை உய்த்துணர்ந்து ஆசை, கோபம்,

அறியாமை என்பன முற்றாக நீக்கிய, மனித தன்மையை மீறிய

உத்தமர்கள் இருக்கிறார்கள் என்பதனை நம்புதல். இவையே

புத்தபகவான் தெளிவான பார்வை அதாவது சம்மா திட்டி

என மொழிந்தருளியுள்ளார்.

  1. சதுரார்ய சத்தியங்கள் அதாவது நான்கு பேருண்மைகள்

*. துக்கம் – பிறப்பு, முதுமை, நோயுறல், மரணம்,

பிரியமற்றவைகளுடன் பிரியமற்ற நபர்களுடன் சேர்ந்து வாழல்,

பிரியமானவை மற்றும் பிரியமான நபர்களை பிரிந்து வாழல்,

விரும்புபவை கிடைக்காமை, சுருங்கக்கூறின் இந்த பஞ்ச

உபாதானஸ்கந்தங்களும் துக்கத்திற்குரியனவே

*. துக்கத்தின் தோற்றம் : காம தண்ஹா (காமத்தின் மீதான

ஆசை)

பவ தண்ஹா : மீண்டும் மீண்டும் பிறப்பதற்கான ஆசை

விபவ தண்ஹா : நிலையாதிருப்பதற்கான ஆசை

*. துக்க நிவாரணம் துக்கத்தி;ன் அழிவு அதாவது மோட்சம்

*. துக்க நிவாரண மார்க்கம். : மோட்சத்தை அடைவதற்கான

மார்க்கம் இதுவே எண்சீர் மார்க்கமாகும்.

  1. நீவரணங்கள் எனப்படுவது மன ஒன்றிணைவை தடுக்கும் ஐந்து விடயங்கள் என புத்தபகவான் மொழிந்துள்ளார். அவை

பின்வறுமாறு:

*. காமச்சந்தம்: கண்களுக்கு சுகம் தரும் உருவங்கள்,

காதிற்கு இனிமையான சப்தங்கள், இனிமையான நறுமணங்கள்,

இனிமையான சுவைகள், இதம் தரும் உடலுணர்வுகள்,

மனதிற்கு இனிய எண்ணங்கள் தொடர்பாக சிந்தித்து

கொண்டிருத்தல்.

*.வியாபாதம்: மனதிற்கு கோபம் உருவாகும்

விடயங்கள் தொடர்பான சிந்தனைகள்

*.தீனமித்த: சோம்பல் மற்றும் தூக்கக் கலக்கம்.

*.உத்தச்ச குக்குச்ச: மன உழல்வு மற்றும் மன

ஒடுக்கம்.

*.விசிகிச்சா: தர்மம் தொடர்பான சந்தேகம். இவையே

ஐவகையான நீவரணங்களாகும்.

  1. சம்மா சம்புத்தபகவான் – தன் சுய ஞானத்தினாலேயே

துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்க நிவாரணம், துக்க

நிவாரண மார்க்கம் எனும் நாற்பேருண்மைகளை உய்த்தறிந்து

மோட்சத்தை உறுதிசெய்தவர். அஞ்ஞானத்தை முழுமையாகவே

இல்லாதொழித்தவர். ஆசை, கோபம், அறியாமை என்பன

முற்றுமுழுதாக நிக்கியவர். இவ்வாறாக தான் உன்னத

நிலையை அடைந்து ஏனையவர்களும் இந்நிலையை

அடைவதற்காக தர்மத்தை போதிப்பவர்.

  1. பச்சேக புத்தபகவான் : தன் சுய ஞானத்தினாலேயே

துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்க நிவாரணம், துக்க

நிவாரண மார்க்கம் எனும் நாற்பேருண்மைகளை உய்த்தறிந்து

மோட்சத்தை உறுதிசெய்தவர். அஞ்ஞானத்தை முழுமையாகவே

இல்லாதொழித்தவர். ஆசை, கோபம், அறியாமை என்பன

முற்றுமுழுதாக நீக்கியவர். ஆனால் இந்த புத்தர் நிலையை

அடைந்த புத்தபகவான் ஒருவரால் ஏனையோருக்கு தர்மத்தை

உபதேசிக்க முடியாது.

  1. மாரன்: உயிர்களை சன்சாரத்தில் பிணைத்து

வைத்திருப்பவன். உயிர்கள் மோட்சம் அடைவதை

விரும்பாதவன். தடுப்பவன். புத்தபகவான் மாரனை பமத்தபந்து

என கூறியுள்ளார். அதன் பொருள் தர்மத்தை பின்பற்ற

தாமதமாகியவர்களின் உறவினன் என்பதே.

  1. சோவான் நிலை: விடுபேற்றின் முதலாவது நிலை.

மனதிலுள்ள சக்காய திட்டி, சீலப்பத பராமாசம், சந்தேகம்

என்பவற்றை நிக்கியவர். இப்பேற்றினை அடைந்தவர்

ஒருபோதும் நால்வகை நரகங்களில் பிறக்கமாட்டார்.

அதேபோல் கூடியபட்சம் ஏழு பிறவிகளிலே மோட்சத்தை

அடைந்து விடுவார்.

  1. அநாகாமி: மனமாசுகளில் மூன்றில் இரண்டினை

முற்றாக நீக்கியவர். அதாவது ஆசை மற்றும் கோபத்தினை

முழுமையாக நீக்கியவர். ஒரு பிறவியை பிரம்ம உலகத்தில்

பிறந்து அங்கேயே பரிநிர்வாணம் அடையும் உத்தமர்.

  1. சத்தா – தமிழில் இதனை பக்தி என்று மொழிபெயர்த்தாலும்

இது வெறும் பக்தி மட்டுமல்ல. சத்தஹதி ததாகதஸ்ஸ

சம்போதிங் அதாவது புத்தபகவானது ஞானத்தினை

ஏற்றுக்கொள்வதுதான் தர்மத்தில் சத்தா எனப்படுகிறது.

புத்தபகவான் போதித்த தர்மத்தினை செவிமடுத்து அதனை

அறிவினை முதற்கொண்டு ஆராயும், ஒருவரால் மாத்திரமே

இந்த சத்தாவை தன்னுள் தோற்றுவித்து கொள்ள முடியும்.

இவ்வாறாக தோன்றிய சத்தாதான் இந்த தர்மத்தினை

பின்பற்றுவதற்கு பாரிய உந்துதலாக இருக்கிறது.

  1. முழுமையாக, தெளிவான சொற்பிரயோகங்களுடன்

பரிபூரணமாக போதிக்கப்பட்ட இந்த தர்மம் மோட்சத்தையே

இலக்காக கொண்டது. அந்த மோட்சத்தை அடையும் வழிக்கு

துணைசெய்யும் 37 விடயங்கள் உள்ளன. அவை துக்கத்தை

அழிப்பதற்கு துணை செய்வனவாகும் அவை முறையே.

பின்வருமாறு

 சத்தாரோ சதிபட்டான – நால்வகை விழிப்புணர்வு நிலைகள்

  1. காயானுபஸ்ஸனா – உடல் தொடர்பான விழிப்புணர்வு

  2. வேதனானுபஸ்ஸனா – அனுபவிப்புகள் தொடர்பான

விழிப்புணர்வு

  1. சித்தானுபஸ்ஸனா – மனம் தொடர்பான விழிப்புணர்வு

  2. தம்மானுபஸ்ஸனா – தர்மம் தொடர்பான விழிப்புணர்வு

* நால்வகை வீரியம்

0 5 . ம ன தி ல் இ து வ ரை பி ற வ ர த அ கு ச ல ங் க ளை

தோற்றுவிக்காதிருப்பதற்கு வீரியம் செய்தல்

  1. மனதில் பிறந்திருக்கும் அகுசலங்களை அழிப்பதற்கு

வீரியம் செய்தல்

  1. மனதில் இதுவரை பிறவாதிருக்கும் குசலங்களை

தோற்றுவிப்பதற்கு வீரியம் செய்தல்

  1. மனதில் பிறந்திருக்கும் குசலங்களை நிலைத்து

வைப்பதற்கு வீரியம் செய்தல்.

இர்தி பாதங்கள்

தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்வதற்கான

  1. சந்த – விருப்பம்

  2. சித்த – இலட்சியம்

  3. விரிய – வீரியம் இடைவிடாத முயற்சி

  4. வீமன்சா – அறிவினால் அராய்தல்

பஞ்ச இந்திரியம்

  1. சத்தா 14. வீரியம் 15. சதி 16. சமாதி 17.பஞ்ஞா

பஞ்ச பலம்

  1. சத்தா 19. வீரியம் 20. சதி 21. சமாதி 22.பஞ்ஞா

எழுவகை போதி அங்க தர்மங்கள்

  1. சதி (விழிப்புணர்வு) போதியங்கம்

  2. தம்மவிசய போதியங்கம்

  3. வீரிய போதியங்கம்

  4. ப்ரீதி போதியங்கம்

  5. பஸ்ஸத்தி போதியங்கம்

  6. சமாதி போதியங்கம்

  7. உபேக்கா போதியங்கம்

எண்சீர் மார்க்கம்

  1. சம்மா திட்டி – நற்பார்வை

  2. சம்மா சங்கல்ப்பம் – நற்சிந்தனை

  3. சம்மா வாச்சா – நற்பேச்சு

  4. சம்மா கம்மந்த – நற்காரியம்

  5. சம்மா ஆஜீவ – நல்ல ஜீவனோபாயம்

  6. சம்மா வாயாம – நன்முயற்சி

  7. சம்மா சதி – நல்ல விழிப்புணர்வு

  8. சம்மா சமாதி – நல்ல மன ஒருங்கிணைவு

  9. காமம் :

கண்களுக்கு தெரியும் பிரியமான, விருப்பமான உருவங்கள்

காதுகளுக்கு கேட்கும் பிரியமான, விருப்பமான சப்தங்கள்

நாசியினால் உணரப்படும் பிரியமான, விருப்பமான மணங்கள்

நாவினால் சுவைக்கப்படும் பிரியமான, விருப்பமான சுவைகள்

உடலினால் உணரப்படும் பிரியமான, விருப்பமான ஸ்பரிசங்கள்

என்பனவே தர்மத்தில் காமம் எனக்குறிப்பிடப்படுகின்றன.

 

நமோ புத்தாய!

Free Buddhist Dhamma Book in tamil