உன்னதமான தலைமைத்துவத்தினை தெரிவு செய்வோம். Leadership

உன்இவ்வாறு நாம் சிந்தித்து பார்ப்போம். நாம் கடை ஒன்றில் ஒரு பொருளை கொள்வனவு செய்யப்போகிறோம். ஒரு மரத்தளபாடம்   என்று நினைப்போமே. உக்கிய, கறையான் பிடித்த,   அமர்ந்தால்   உடைந்து விழக்கூடிய பொருளை நாம் வாங்க விரும்புவோமா? நாம்   பார்ப்பது நீண்ட காலம் பாவனை செய்ய கூடிய உறுதியான பலம்
நிறைந்த மரதளபாடத்தையே ஆடை கொள்வனவு செய்யும் போது    தையல் பிரியாத நூல் இழுபடாத துணியை கொண்ட ஆடையைதான்    தெரிவு செய்வோம். தேங்காய் கொள்வனவு செய்யப்போனால் கூட    அந்த தேங்தாய் அழுகாத, காய்ந்திராத ஒன்றா என கவனிப்போம்.    ஒரு பொருளை கொள்வனவு செய்யும் போது இவ்வளவு விடயங்களை  ஆராயும் நாம் எம்மால் செய்யப்படும் பெரும்பாலான விடயங்களுக்கு   நேரடியாகவோ    மறைமுகமாகவோ பெரிதும் தாக்கம் செலுத்தும்    சமயத்தை தெரிவு செய்கையில் எவ்வளவு ஆராய்ந்து பார்க்க
வேண்டும் என்பதனை மறந்து விடுகிறோம்.   நாம் பின்பற்ற போகும் சமயத்தை தெரிவு செய்கையில் அறிவால்
நன்கு பகுப்பாய்வு செய்ய வேண்டும். நான் இவ்வாறு கூறுவது    பௌத்தர்களுக்கு மாத்திரம் இல்லை. பொதுவாக அறிவுள்ள    அனைத்து மக்களுக்கும்தான். மனிதர்கள் இவ்வாறு தான் சமயத்தை   தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறில்லாது கண்கள் தெரியாத    குருடனை போல் சமயத்தை தெரிவு செய்தால் தடி செல்லும்    திசையிலே பயணிக்க வேண்டியதாக இருக்கும். இப்படியாக அறிவை   பயன்படுத்தாது சமயத்தை பின்பற்றும் ஒருவருக்கு இவ்வாழ்வுக்கோ    அல்லது மறுவாழ்விற்கோ எவ்வித தீர்வும் கிடைக்காது. Leadership

Leadership