இந்திரனாக பிறப்பதற்கு காரணமாக அமைந்த விரதங்கள்.
புண்ணியவர்களே நாம் புத்த பகவானின் ஸ்ரீ சத்தமர்த்தினையே அறிந்துகொள்ள போகிறோம்.
செயலினால்தான் உலகில் உன்னத நிலையை அடைய முடியும். ஆனால் சிலருக்கு செயல்களின் மீது நம்பிக்கை இல்லை. மாறாக அவர்கள் பிரார்த்தனைகளுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். இவ்வாறாக வேண்டுதல்களின் மூலம் யாராலும் உன்னத நிலையை அடைய முடியாது. இந்திரனாக பிறப்பதற்கு காரணமாக அமைந்த விரதங்கள்.
புத்த பகவான் வஜ்ஜி எனும் நாட்டின் வைசாலி நகரின் ஓர் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் போது மஹாலி எனும் லிச்சவி புத்த பகவானை காண வந்து அன்புடன் வணங்கி பகவானிடம் பின்வருமாறு கேட்டார். ”பகவானே நீங்கள் தேவேந்திரனை கண்டிருக்கிறீர்களா?’ என்று. அதற்கு புத்த பகவான் ‘ஆம் மஹாலி, நான் தேவேந்திரனை கண்டிருக்கிறேன். இதனை கேட்ட மஹாலிக்கு சந்தேகம். ”அப்படியானால் பகவானே நீங்கள் கண்டது தேவேந்திரனாக இருக்க முடியாது. அவரை போன்ற வேறு ஒருவராக இருக்கலாம்’ அப்போது புத்த பகவான், ‘மஹாலி நான் தேவேந்திரனையும் கண்டிருக்கிறேன். அவர் அதற்கு முற்பிறவியில் யாராக பிறந்திருந்தார் என்பதனையும் அறிவேன். அவர் இந்த தேவேந்திர நிலையை அடைவதற்கு முன்பு எங்கு பிறந்தார்? அவர் தேவேந்திர பதவியை அடைவதற்கு என்ன புண்ணியம் செய்தார் என்பதனையும் அறிவேன்’
மஹாலி அந்த தேவேந்திரன் முற்பிறப்பில் மனிதனாக வாழும்போது அவருடைய பெயர் ‘மக’ என்பதாகும். தேவேந்தரினுக்குரிய இன்னுமொரு பெயரும் இருக்கிறது. அதுவே மகவா என்பதாகும். தேவேந்திரனை தேவர்கள் மகவா என்றும் அழைப்பர். அதேபோல் இந்திரன் முற்பிறப்பில் மனிதனாக வாழும்போது அனைவருக்கும் முதலில் தானமளித்துள்ளார். எனவே அவருக்கு புரிந்ததன் எனும் இன்னுமொரு பெயரும் இருக்கிறது. ஏனையோருக்கு வீடுவாசல் போன்ற உறையுள் வசதிகளை அவர் செய்து கொடுத்துள்ளார். அதன் காரணமாக அவருக்கு இன்னுமொரு பெயரும் கிடைத்தது அதுவே ‘வாசவ’ எனும் பெயராகும். அதேபோல் அவர் மனிதனாக இருக்கும்போது முறையாக ஒழுங்குப்படுத்தி ஏனையோருக்கு தானங்கள் அளித்தார். எனவே அவருக்கு ‘சக்க’ எனும் பெயரும் உண்டு. தேவேந்திரனால் ஒரு கணத்தில் ஆயிரம் விடயங்களை காண முடியும். அதாவது அறிந்துகொள்ள முடியும். எனவே அவருக்கு ‘சஹஸ்ஸ நெத்த’ எனும் பெயரும் உண்டு. சஹஸ்ஸ என்றால் ஆயிரம் நெத்த என்றால் கண்கள் அதாவது ஆயிரம் கண்கள் கொண்டவர் எனும் பொருள் கொண்டதே இந்த பெயராகும். தேவேந்திரனுக்கு சுஜா எனும் பெயர் கொண்ட ஒரு அசுர மனைவி இருக்கிறாள். எனவே தேவேந்திரனுக்கு சுஜம்பதி எனும் இன்னுமொரு பெயரும் இருக்கிறது. தேவேந்திரன் இரு தேவலோகங்களுக்கு அதிபதியாவார். சாதும்மஹாராஜிகம், தாவதிங்ச எனும் இரு தேவேலோகங்களின் அதிபதியாதலால் தேவேந்திரனுக்கு ‘தேவானமிந்த’ எனும் பெயரும் உண்டு.
தேவேந்திரன் மனித உலகில் வாழும்போது ஏழு வகை விரதங்களை மேற்கொண்டிருந்தார். வாழ்வின் இறுதி வரை அவர் இந்த ஏழு விரதங்களை கடைபிடித்தார். அந்த விரதங்களின் புண்ணியத்தின் மகிமையினாலேயே அவருக்கு தேவேந்திர பதவி கிடைத்தது. தேவேந்திர நிலை என்பது ஒரு பதவியாகும். தேவேந்திரனே இந்த இருதேவ உலகத்திற்கும் அரசனாவார். எழுவகை விரதங்கள் எனும் புண்ணிய செயற்பாடுகளின் விளைவினாலேயே அவருக்கு இந்த தேவேந்திர பதவி கிடைத்தது. இந்திரனாக பிறப்பதற்கு காரணமாக அமைந்த விரதங்கள்.