poya calendar

poya calendar tamil buddhist

பௌர்ணமி தினங்கள் | poya calendar

சீலங் யாவ ஜரா சாது
முதுமையடையும் வரை ஒழுக்கமாக வாழ்வதே சிறப்பாகும்

பேச்சு மற்றும் செயற்பாடு என்பனவற்றின் கட்டுப்பாடே சீலம் அதாவது ஒழுக்கம் எனப்படுகிறது. ஒருநாள் ஒரு தேவர் புத்த பகவானிடம் வந்து ‘பகவானே முதுமை அடையும்வரை எதனை பழக்கப்படுத்த வேண்டும்?’ என வினவினார்.அதற்கு புத்த பகவான், ‘ஒழுக்கத்தையே முதுமையடையும் வரை பழக்கப்படுத்த வேண்டும்’ என மறுமொழி அளித்தார். மனித உலகில் பிறந்த சிலர் சீலமுள்ளவர்களாக வாழ்ந்து மரணித்து சுவர்க்கத்தில் சென்று பிறப்பதனையும் ஒழுக்கமற்று துஸ்சீலர்களாக வாழ்ந்தவர்கள் மரணித்து நரகத்தில் சென்று பிறப்பதனையும் புத்த பகவான் கண்ணுற்றார். ஆனால் எம்மால், ஒருவர் மரணித்து அவர் எங்கு சென்று பிறந்தார்? அவருக்கு என்னவாயிற்று என்பதனை சொல்ல முடியாது. எனவே சாதாரண உலகத்தோருக்கு ஒழுக்கமாக வாழ்ந்தவர்களதும் ஒழுக்கமற்று வாழ்ந்தோர்களதும் வேறுபாட்டினை அறிய முடியாது. எனவே புத்த பகவானது தர்மத்தினை அறியாத மக்கள் சீலத்தின் உயர்வினை அறியாதுவாழ்வினை வீணாக கழித்து இறுதியில் வெறுங்கையுடன் மரணிக்கின்றனர்.

இவ்வாறான துரதிஷ்டசாலிகளினால் நால்வகை நரகங்கள் எந்நேரமும் நிரம்புகின்றன. அவர்கள் இந்த கணத்திலும் அந்த நரகங்களில் பிறந்து வார்த்தைகளினால் விபரித்துக்கூற முடியாதளவு துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். துன்பத்தினை விரும்பாத நீங்களும் இந்த சீலத்தினை சிறிது சிறிதாகவேனும் பழக்கப்படுத்திக்கொள்ள முயற்சியுங்கள். தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காத, இவ்வுலக வாழ்வினையும் மறுவுலக வாழ்வினையும் சுமுகப்படுத்தும் இந்த ஒழுக்கவிதிகளை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாது தேவர்களினதும் ஒப்பற்ற குருவான  புத்த பகவான் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இந்த சீலத்தை கடைபிடிக்குமாறு மிகவும் கருணையுடனே மொழிந்தருளினார்.

புத்த பகவான் இல்லறத்தாருக்காக மொழிந்தருளிய இந்த சீலம் பிரதானமாக இருவகைப்படும். பஞ்ச சீலம் மற்றும் உபோசத சீலம் என்பனவே அவையாகும்.  புத்த பகவானை சரணடைந்த  ஆரிய சீடன்   தனது நித்திய சீலமாக பஞ்ச சீலத்தை கடைபிடிக்க வேண்டும். அவை பின்வருமாறு

  1. பாணாதிபாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

உயிர்களை கொல்வதை தவிர்ப்பேன் எனும்  சீலத்தை அனுசரிப்பேன்.

  1. அதின்னாதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

திருட்டிலிருந்து தவிர்ப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. காமேசுமிச்சாசாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

தகாத காம செயலில் இருந்து தவிர்த்திருப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. முசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

பொய் சொல்வதிலிருந்து தவிர்த்திருப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. சுராமேரய மஜ்ஜபமா தட்டானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

மதுபானம், மற்றும் போதைப்போருள் பாவனையிலிருந்து தவிர்த்திருப்பேன்.

என்பனவாகும். அதேபோன்று புத்த பகவானை சரணடைந்த ஒரு இல்லறத்தான். அட்டமி, நவமி, அமாவாசை பௌர்ணமி எனும் விசேட தினங்களில் உயர்ந்த சீலமான உபோசத சீலத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த உயர்ந்த சீலம் எட்டு அங்கங்களை கொண்டதாகும். அவை பின்வருமாறு

இல்லறத்தானது உயர் (உபோசத) சீலம்.

  1. பாணாதிபாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

உயிர்களை கொல்வதை தவிர்ப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. அதின்னாதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

திருட்டிலிருந்து தவிர்ப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. அப்பிரம்மச்சரியா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

பிரம்மச்சரியமல்லாத வாழ்விலிருந்து தவிர்த்திருப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. முசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

பொய் சொல்வதிலிருந்து தவிர்த்திருப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. சுராமேரய மஜ்ஜபமா தட்டானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

மதுபானம், போதைப்போருள் பாவனையிலிருந்து தவிர்த்திருப்பேன்.

  1. விகால போஜனா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

அகாலத்தில் உணவு உட்கொல்வதை தவிர்த்திருப்பேன்.

  1. நச்சகீத வாதித விசூக தஸ்ஸன மாலா கந்த விலேபன தாரண மண்டன வேரமணி சிக்காபதங் சமாதியாமி

ஆடல், பாடல், இசைத்தல், விகார காட்சிகளை பார்த்தல், மாலைகள், வாசனை திரவியங்கள் என்பன உபயோகித்தல், அலங்கரித்தல், தன்னை விசேடமாக அலங்கரித்துக்கொள்ளல் என்பனவற்றில் இருந்து தவிர்த்திருப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

  1. உச்சாசயன மஹாசயனா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

உயர்ந்த சொகுசான ஆசனங்கள், மற்றும் பெறுமதிமிக்க ஆசனங்கள் என்பன உபயோகிப்பதிலிருந்து தவிர்த்திருப்பேன் எனும் சீலத்தை அனுசரிப்பேன்.

இந்த உபோசத சீலத்தினை மீண்டும் மும்மணிகளை சரணடைந்து பஞ்ச சீலத்தினை ஏற்பதுடன் நிறைவுபடுத்தலாம்.

ஆரிய சீடனுக்கு முதல் துணையாக அமைவது சீலமே. அனைத்து நற்குணங்களுக்கு முதன்மையானதும், நன்மையான குணங்களுக்கு தாயை போன்றதும் சீலமே.

ஒழுக்கமற்ற வாழ்வினை வாழ்ந்தால் இவ்வாழ்வில் நிந்தனைகளையும் துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். மறுவாழ்விலும் நரகத்தில் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.  சீலமற்ற அஞ்ஞான மனிதன் அனைத்து இடங்களிலும் துன்பத்தினையே அனுபவிப்பான்.

வாழ்வினை நன்மையான பாதையில் செலுத்தினால், ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இவ்வாழ்விலேயே கீர்த்தியை பெற முடியும். மறுவாழ்வில் சுவர்க்கத்தில் பிறந்து சுகம் அனுபவிக்கவும் முடியும். சீலங்களை அனுஷ்டித்து மனதை ஒன்றிணைக்கும் ஞானமுள்ளவர் எங்கு சென்றாலும் இன்பத்துடன் இருப்பார்.

இந்த புத்த சாசனத்தில் சீலம் உயர்ந்ததாகும். அதனை விட உன்னமானது பிரக்ஞை எனும் ஞானமாகும். மனிதர்கள் மத்தியிலும் தேவர்கள் மத்தியிலும் சீலம், ஞானம் எனும் இரண்டினால் வெற்றி பெற முடியும். 

(சீலவ மகா தேரர்)

மாதம்

  • தை
  • மாசி
  • பங்குனி
  • சித்திரை 
  • வைகாசி 
  • ஆனி 
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாதி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி

வளர்ப்பிறை அட்டமி

  • தை. 05
  • மாசி. 04
  • பங்குனி 05
  • சித்திரை 03
  • வைகாசி 03
  •  ஆனி 01
  • ஆடி 30
  • ஆவணி. 29
  • புர. 28
  • ஐப்பசி. 27
  • கார்த்திகை. 26
  • மார்கழி. 26

பௌர்ணமி தினம்

  • தை. 12 
  • மாசி 10 
  • பங்குனி 12 
  • சித்திரை 10 
  • வைகாசி 10 
  • ஆனி 08 
  • ஆடி 08 
  • ஆவணி. 07 
  • புர. 05 
  • ஐப்பசி. 05 
  • கார்த்திகை. 03 
  • மார்கழி. 03 

தேய்பிறை அட்டமி

  • தை. 19
  • மாசி. 18
  • பங்குனி 20
  • சித்திரை 19
  • வைகாசி 18
  • ஆனி 17
  • ஆடி 16
  • ஆவணி. 15
  • புர. 13
  • ஐப்பசி. 12
  • கார்த்திகை. 10
  • மார்கழி. 10

Amawasei அமாவாசை

  • தை. 27
  • மாசி 26
  • பங்குனி 27
  • சித்திரை26
  • வைகாசி 25
  • ஆனி 23
  • ஆடி 23
  • ஆவணி. 21
  • புர. 19
  • ஐப்பசி. 19
  • கார்த்திகை. 17
  • மார்கழி. 17

மாதத்தின் நால்வகை போய தினங்களிலும் உயர் ஒழுக்கத்தினை கடைபிடிப்போம்.

poya calendar poya calendar poya calendar poya calendar poya calendar poya calendar poya calendar poya calendar