ஷ்ரத்தா கல்வி புலமைப்பரிசில் செயற்றிட்டம்
வாழ்வினை கட்டியெழுப்பல், தமது கடமைகளை நிறைவேற்றுதல், தான் வாழும் சமூகத்திற்கு சுமையாக வாழாதிருத்தல் எனும் அனைத்து முக்கிய காரணிகளுக்கும் அடிப்படையாக அமைவது கல்வியே ஆகும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு முறையான கல்வியை அளித்து அவர்களை ஒரு உன்னத நிலைக்கு கொணர்வித்தல் எனும் விடயத்தினை செய்வதற்கு செய்யும் சேவை அளப்பரியதாகும்.
ஆனால் பல்வேறு பொருளாதார இன்னல்களின் மத்தியில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்குவது கடினமான முயற்சியாகவே இருக்கிறது. அதனாலேயே இவ்வாறான பொருளாதார இன்னல்களை எதிர்நோக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் கல்விக்கு உதவிக்கரமாக அமையும் பொருட்டு துவங்கப்பட்டதே இந்த புலமைப்பரிசில் செயற்றிட்டமாகும். அவர்களுக்கு நீங்களும் வளர்ப்பு தந்தையாகலாம்… வளர்ப்பு தாயாகலாம்… தமது எதிர்காலத்தினை வெற்றி கொள்ள எத்தணிக்கும் அந்த பிள்ளைகளுக்கு உங்களது உதவிக்கரத்தினை அளிக்க நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்…
தொடர்பு கொள்ளுங்கள் 071 232 88 46 மின்னஞ்சல் முகவரி: charity@shraddha.lk
குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் வாழும், கற்றல் செயற்பாடுகளில் திறமை கொண்ட மாணவ மாணவியர் பொருளாதார பிரச்சினைகளினால் தமது கல்வியினை தொடர முடியாத துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகின்றனர். அதேபோன்று இவ்வாறான குடும்பங்களில் வாழும் மாணவர்களுக்கு உதவி செய்யும் அரசுசார் மற்றும் அரசு சாராத அமைப்புகள் மிக மிக குறைவான எண்ணிக்கையே என்று கூறலாம். நற்பண்புகளும் அறிவும் நிறைந்த சந்ததியை உருவாக்குவதற்கான குறைந்த வருமானமுடைய, திறமையான மாணவர்களுக்கு உபகாரம் செய்வதானது காலத்தின் தேவையாக உள்ளது.
அதேபோன்று தற்போதைய கற்கைமுறைகளினால் பலதரப்பட்ட கல்வி மேதைகள் உருவாகினாலும் நற்பண்புகள் கொண்ட, மனிதாபிமானமுடைய மேதைகளின் தோற்றம் மிகவும் அரிதே. ஆகையால் பொருளாதார பிரச்சினைகளால் அல்லலுறும் மாணவ மாணவியர்க்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டும் நற்பண்புகளினால் வளம்பெற்ற எதிர்கால சந்ததியினரை தேசத்திற்கு அளிப்பதற்குமான ‘ஷ்ரத்தா’ தொலைக்காட்சி, வானொலி என்பவற்றின் தோற்றுவிப்பாளாரான பூஜைக்குரிய கிரிபத்கொடை ஞானானந்த தேரர் அவர்களின் ஆசிர்வாதத்தினால் இந்த புண்ணியமிகுந்த செயற்றிட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
ஷஷ்ரத்தா| புலமைப்பரிசில் செயற்றிட்டத்தின் ஆரம்ப பின்ணணி இதுவாகும்.
- கல்வி திணைக்களத்திற்கு செயற்றிட்ட பிரேரணையை சமர்பித்தல். மத்திய அரசு மற்றும் மாகாண அரசு என்பவற்றினால் நிர்வகிக்கப்படும் அனைத்து பாடசாலைகளினதும் பெயர் பட்டியல், முகவரி உட்பட அவசியமான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளல்.
- அனைத்து பாடசாலைகளுக்கும் ‘ஷ்ரத்தா’ புலமைபரிசில் செயற்றிட்டம் தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்தல். புலமைபரிசில் பெற தகைமையுள்ள மாணவர்களின் கையெழுத்தினாலேயே எழுதப்பட்ட கடிதத்தினை ‘ஷ்ரத்தா’ ஊடக நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும்படி கோருதல்.
ஷ்ரத்தா புலமைபரிசில் செயற்திட்டத்திற்கு அனுசரணை பெற்றுக்கொள்ளல்
க.பொ.த சாதாரண பரீட்சை வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1100 வரையிலான புலமைபரிசில் தொகையும் உயர்தரம் அல்லது பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 வரையிலும் வழங்கப்படும்.
இப்புலமைபரிசிலுக்கு கீழ்காணும் முறைகளில் ஒரு முறை மூலம் உதவலாம்.
(அ) மாதாந்தம். ரூ.2000 அல்லது ரூ.1100 வழங்குவதன் மூலம் ஒரு மாணவர்கான மாதாந்த புலமைபரிசில் தொகையை வழங்குதல். இங்கு குறிப்பிட்ட மாணவருக்கான ஒரு வருட புலமைபரிசில் பணத்தொகையை ஒரே தடவையாக / தவணை முறை / மாதாந்தம் ஷ்ரத்தா புலமைபரிசில் நிதியத்திற்கு வழங்கலாம். அதனை வருடந்தோறும் அணுசரணை பெற்றோர்களால் கொண்டு நடத்த முடியும். புலமைப்பரிசிலுக்கான நிதியுதவி வழங்க முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படின்அ தனை அறிவித்து இதிலிருந்து நீங்கி கொள்ளவும் முடியும்.
(ஆ) தான் விரும்பும் அளவிலான பணத்தினை ‘ஷ்ரத்தா’ புலமைபரிசில் நிதியக்கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் ‘ஷ்ரத்தா’ புலமைபரிசில் செயற்றிட்டத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு உதவி செய்தல்.
மாதாந்தம் ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.2000 பணத்தினை அந்த மாணவர் பின்வருமாறு உபயோகிக்க வேண்டும்.
- போக்குவரத்து செலவுகள், அன்றைய நாளாந்த செலவுகள் மற்றும் கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு ரூ.1650 ஐ பயன்படுத்த வேண்டும்.
- புலமைபரிசில் பெறும் அந்த மாணவர் தான் விரும்பும் ஏதேனும் ஒரு புண்ணிய செயலினை செய்தற்கு ரூ.100 ஐ பயன்படுத்த வேண்டும். தன் குடும்பத்தினருக்காக ரூ.100 ஐ செலவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.
- ‘ஷ்ரத்தா’ புலமைபரிசில் செயற்றிட்டத்தின் கடித பரிமாறுதல்களுக்காக ரூ.50 ஐ பயன்படுத்த வேண்டும்.
- அந்த மாணவர் / மாணவியர்க்கு நற்பண்புகளை விருத்தி செய்யும் வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டல் நூல் ஒன்றினை அளிப்பதற்காக ரூ.100 எம்மால் ஒதுக்கிக்கொள்ளப்படும்.
மாதாந்தம் ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.1100 பணத்தினை அந்த மாணவர் பின்வருமாறு உபயோகிக்க வேண்டும்.
- போக்குவரத்து செலவுகள், அன்றைய நாளாந்த செலவுள் மற்றும் கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு ரூ.820 ஐ பயன்படுத்த வேண்டும்.
- புலமைபரிசில் பெறும் அந்த மாணவர் தான் விரும்பும் ஏதேனும் ஒரு புண்ணிய செயலினை செய்தற்கு ரூ.75 ஐ பயன்படுத்த வேண்டும்.
- தன் குடும்பத்தினருக்காக ரூ.75 ஐ செலவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஷ்ரத்தா புலமைபரிசில் செயற்றிட்டத்தின் கடித பரிமாறுதல்களுக்காக ரூ.50 ஐ பயன்படுத்த வேண்டும்.
• அந்த மாணவர் / மாணவியர்க்கு நற்பண்புகளை விருத்தி செய்யும் வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டல் நூல் ஒன்றினை அளிப்பதற்காக ரூ.100 எம்மால் ஒதுக்கிக்கொள்ளப்படும்.
• .அதேபோன்று புலமைபரிசில் பெறும் மாணவர் / மாணவியர் வசிக்கும் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடாத்தப்படும் மேலதிக வகுப்புக்களின் ஆசிரியர்களுடன் ‘ஷ்ரத்தா’ ஊடகம் கலந்துரையாடி, ஓர் இணக்கப்பாட்டின் மூலம் புலமைபரிசில் பெறும் மாணவருக்காக இலவசமாக அந்த வகுப்புக்களில் கலந்து கொளவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தல்.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புலமைபரிசில் பெறும் மாணவ மாணவியருக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் அப்பியாச புத்தகங்களையும் வழங்குதல்.