உங்களுடைய மனதுடன் ஒரு கலந்துரையாடல்

புத்தகம் :- உங்களுடன் உரையாட வேண்டும் என்ற எண்ணம் என்னில் நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் தங்களை போன்றே எனக்கும் வேலைப்பழு அதிகமாகியதால் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. இந்த பலதரப்பட்ட வேலைகளினால் சுகம், துக்கம் என்ற அனுபவிப்புகளே எமது மனதில் கரைபுரண்டோடுகிறது
என்றே நான் கூறுவேன்.

அக்காலங்களில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தீர்கள் அல்லவா? மிக்க மகிழ்ச்சியால் உங்கள் அழகிய வதனம் சிவந்து உடல் குலுங்க குலுங்க புன்னகைத்தீர்களல்லவா? ஆனால் இன்று கருமேகத்தால் சூழப்பட்ட விசும்பை போல் பல்வேறு சிந்தனைகளினால் உங்கள் வதனம் தென்படுகிறதே! எதிர்பார்த்த
எதிர்பார்ப்புகள் சிதறுண்டதா? மணலினால் கட்டியெழுப்பிய மாளிகையை போல் கண்ட கனவுகள் உடைந்துவிட்டதா? அல்லது பிரியமானவற்றிலிருந்து பிரியும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதா? மனதில்
எரிந்து கொண்டிருக்கும் தீயினது புகையை போன்று, நீங்கள் விடும் பெருமூச்சினை நான் உணருகிறேன்.

நான் :- வாழ்விற்கு வசந்தகாலம் உதயமாகும் என்று எவ்வளவு காலம் காத்து கிடந்தேன்? எனது வாழ்வு இன்னும் இளையுதிர் காலத்திலேயே இருக்கிறது. எந்நாளும் சுகத்தினையே எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த சுகபோகங்களும் இன்பமும் என்னை முழுமையாக மறந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.
புத்தகம் :- நீங்கள் நீண்ட காலமாக நினைத்து கொண்டிருந்தவை இன்னும் நிறைவேறவில்லையா? நீங்கள் அன்று போலவே இன்றும், நாளை பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறீர்கள். Free Buddhist Dhamma Book in tamil 

நான் :- சந்தோஷம் இல்லை என்றும் கூற முடியாது. சிலநேரங்களில் மனம் ஆனந்தத்தால் குதூகலித்து போகிறது. அப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் இடையிடையே பிரகாசித்து அணைந்து போகும் மின்விளக்கினை போல் அந்த இன்பமும் உடனடியாக இல்லாமல் போகிறது. அண்மையில் ஒருநாள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டேன். சுவை மற்றும் வாசனை மிகுந்த விதவிதமான
உணவு வகைகள், இனிமையான காட்சிகள், இதமான சங்கீதம், ஆடல் பாடல் என அனைத்தும் இருந்தும்… மீண்டும் அதே பழைய பிரச்சினை தோன்றி… ம்ம்…. மிகுந்த மன உழைச்சலோடு தான் அதுவும் முற்றுப்பெற்றது. மனதினை இவ்வளவு துன்புறுத்தும் இவ்வகையான பார்ட்டிக்களினால் கிடைக்கும் இலாபம் தான் என்ன?

புத்தகம் :- உங்களது மனதில் அநேகமான விடயங்கள் முட்டி மோதிக்கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். நீங்கள் ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பதற்கு காரணமும் இதுவே. என நினைக்கிறேன். சிலநேரங்களில் சோகத்தினால் பெருமூச்சு விடுகிறீர்கள். ஆனால் அடுத்த கணம் உங்களது கண்களிலிருந்து கோபாக்கினி வெளிப்படுகிறது. மீண்டும். வாடிய முகத்தோடு ஆழ்ந்த சிந்தனையுனுள் மூழ்கிவிடுகிறீர்கள். உங்களது உடலும்
பலவீனமுற்றதாக தென்படுகிறதே..! Free Buddhist Dhamma Book in tamil 

Free Buddhist Dhamma Book in tamil