இதோ நீங்கள் தேடும் தேவதூதன்!

01.தேவதூத சூத்திரம்

(மஜ்ஜிம நிகாயம்)

புண்ணியமிக்கவர்களே!

நாம் இன்று செவிமடுக்கப்போவது மிகவும் விசேடமான போதனை

ஒன்றையே! மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து போதித்த

முக்கிய போதனைகளில் இந்த போதனையும் அடங்கும். இந்த

போதனை ஷமஜ்ஜிம நிகாயம்0 எனும் புனித நூலில் அடங்குகிறது.

இந்த போதனையின் பெயர் தேவதூத சூத்திரமாகும்.

புதுஜ்ஜனரால்* நினைத்து கூட பார்க்க முடியாது.

நாம் இதுவரை அறிந்திராத பல விடயங்கள் இந்த போதனையில்

குறிப்பிடப்படுகிறது. கர்மம் மற்றும் கர்ம வினைப்பயன் தொடர்பாக

நம்பிக்கையற்றோருக்கு, உள்ளதை உள்ளபடி அறிய முடியாதோருக்கு

நினைத்து கூட பார்க்க முடியாத விடயம்தான் இந்த போதனையில்

கூறப்படுகிறது. அதுதான் நரகம். ஆம், இந்த போதனையில்

நரகத்தினை பற்றியே குறிப்பிடப்படுகிறது.

ஏமாற வேண்டாம்.

 இந்த நரகத்திலிருந்து உயிர்கள் நிரந்தரமாக மீள்வதற்காகவே

புத்த பகவ ரன் ஒருவ ர் தே ரன்றி த ர்மத்தினை அத ரவது

நாற்பேருண்மைகளை** போதிக்கிறார். பாருங்கள், இப்போது நாம்

மானிட உலகில் பிறந்திருக்கிறோம். நாம் இவ்வுலகத்திலுள்ள

பல விடயங்களுக்கு ஏமாறுகிறோம். நாம் அவ்வாறு ஏமாறியவை

பின்னாலேயே இடைவிடாது தொடர்ந்து, முதுமையடைகிறோம்.

திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறோம். எமது கர்மத்தின்

படி நாம் மரணித்து எங்கு சென்று பிறக்கின்றோம், என யாராலுமே

கூற முடியாது.

ஆனால் எமக்கு ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது. இந்த

மனதின் இயல்பினை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது

என்பதே அது. இந்த மனதில் நன்மை மற்றும் தீமை என இரு

பிரிவுகள் உள்ளன. நன்மையான பகுதியை எம்முள் தோற்றுவிப்பதற்கு

நாம் பெரும் சிரமத்தினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆனால் மனதின் தீமையான பகுதியை தோற்றுவிப்பதற்கு நாம் எவ்வித

சிரமத்தினையும் மேற்கொள்ள வேண்டியதில்லை.

* புத்த பகவான், ஸ்ரீ சத்தரமம், மஹா சங்கத்தினர் எனும் மும்மணிகளை சரணடையாதோர். மேலும் அறிந்துக்கொள்ள அருஞ்சொற்கள் பகுதியை பார்க்கவும்.

**. துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் மேலும்

அருஞ்சொற்கள் பகுதியை பார்க்கவும்;

செய்பவருக்கே சிரமம் தெரியும்.

பாருங்கள், சரியான முறையில் சீலத்தினை (ஒழுக்கத்தினை) நாம் எமது

வாழ்விற்கு பழக்கப்படுத்திக்கொள்வது எவ்வளவு கடினமான விடயம்.

மிகவும் முயற்சியுடனும் விரியத்துடனும்தான் அதனை செய்ய

வேண்டிதாக இருக்கிறது. உளச்சமாதி*நிலையாயினும் அப்படியே.

ஆனால் ஏதாவது தியதை செய்வது மிக எளிது. நாம் எமது

வாழ்க்கையையே மீண்டும் திரும்பி பார்த்தால் எமது வாழ்க்கையில்

நாம் தவறிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமது மனதில் தோன்றிய

தீய குணங்களின் தாக்கமே இருந்தது , என்பது தெளிவாகும். நன்றாக

தத்தமது வாழ்க்கை தொடர்பாக சிந்தித்து பாருங்கள்.

புத்தபகவான், ஷஇரும்பு அழிவுறுவது இரும்பிலேயே தோன்றும்

துருவினால்தான்.0 என மொழிந்துள்ளார். அவ்வாறே எமது வாழ்வு

அழிவுறுவதும் எம்முள்ளே தோன்றும் ஆசை, கோபம் மற்றும் அறியாமை

என்பவற்றினாலேயே. இந்த மனமாசுகள் எம்முள் இருப்பதனால் எம்

வாழ்க்கை முடிவுறும்போது எம்மால் சேகரிக்கப்பட்ட கர்மத்தினால்

நாம் நரகம் வரை இழுத்து செல்லப்படலாம். அவ்வாறில்லாவிடில்

மிருகலோகத்தில் பிறக்கச்செய்யவும் நாம் சேகரித்து கொண்ட கர்மம்

காரணமாகலாம்.

பரிசோதனை குழாயினூN;ட பார்த்தாலும் புலப்படாதன.

தர்மத்தினை பின்பற்றும் திறன் உள்ளவரால் இதனிலிருந்து மீள

முடியும். அவ்வாறில்லாவிடில் அதனிலிருந்து ஒருவர் மிள்வது

மிகவும் கடினமாகும். தன்னால் தன்னை பாதுகாத்து கொள்ளும்

செயற்பாடே இந்த தர்மத்தில் உள்ளது. இதனை விடாமுயற்சி,

தைரியம், வீரியம், மற்றும் தியாகத்துடனேயே செய்ய வேண்டியுள்ளது.

அதனால் இந்த தர்மத்தினை பழக்கப்படுத்துவது மிக மிக

கடினமானதாகும். புத்தபகவான் இந்த நரகத்தின் இயல்பினை

முற்றாக உணர்ந்திருந்தார். புத்தபகவான் நரகத்தினை கண்டது

சாதாரண கண்களினால் அல்ல. பரிசோதனை குழாயினூடாக அல்ல.

பரிசோதனை குழாய் ஒன்றினூடாகவோ அல்லது வேறுவிதமான

* உள்ளத்தின் ஒன்றிணைவு

எம் கண்களுக்கு புலப்படாத விடயங்கள் தெரியும்

நான்காம் படிமுறை தியானம் வரை தன் மனதை மேன்மைபடுத்திக்கொண்ட

புத்தபகவானால் உயிர்கள் மரணிப்பதனையும் மரணித்து மீண்டும்

பிறப்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு உயிர் மறைவதனை

எம்மால் காண முடியுமா? முடியாது. ஒருவர் மரணிக்கும் போது

அவரது இதயத்துடிப்பு நின்றுவிடும். இரத்த ஓட்டம் நின்றுவிடும்.

உடல் மரத்துபோய்விடும். அவ்வளவே எமக்கு தெரியும். அப்போது

நாம் அவர் மரணித்து விட்டதாக கூறுவோம்.

நாம் ஒருவரது உடலிலிருந்து பஞ்ச உபாதானஸ்கந்தங்கள்ழூ

வெளியேறுவதை கண்டிருக்கிறோமா? இல்லை. அப்படியாயின் எம்மால்

ஒருவரது உயிர் பிரிவதனை காண முடியாது. அதேபோல் மீண்டும்

ஒரு உயிர் பிறப்பதனையும் காண முடியாது. ஆனால் புத்தபகவான்

உயிர்கள் மரணிப்பதனையும் மரணித்து பிறப்பதனையும் காணக்கூடிய

ஞானத்தினை உடையவராக இருந்தார்.

போவதும் வருவதும் தெரியும்

புத்தபகவான் இதனை இவ்வாறுதான் பார்த்தார். கதவுகள்

திறந்தபடியான இருவீடுகள் இருக்கின்றன. அவ்விரு வீடுகளையும்

பார்த்தபடி ஒருவர் அவ்விடுகளுக்கு முன்னால் இருக்கிறார்.

அப்போது அவருக்கு தெரிகிறது. அந்த விடுகளுக்கு மனிதர்கள்

வருகிறார்கள், போகிறார்கள். வெளியே சென்றவர்கள். மிண்டும்

வீட்டினுள் செல்கிறார்கள். அவ்வாறு வீட்டினுள் செல்வோர் வீட்டினுள்

நடமாடுகிறார்கள். அந்த வீட்டினிலிருந்து மீண்டும் அடுத்த வீட்டுக்குள்

மாறிச்செல்கிறார்கள். அது போன்றதுதான் இந்த உயிரினங்களது

வாழ்க்கையுமாகும். சில உயிரினங்கள் மனம், வாக்கு, காயம்

என்பவற்றினால் நன்மையை செய்து நல்ல வாழ்வினை வாழ்கிறார்கள். அவர்கள் அந்தணர்கள், துறவிகளை தூற்றாது, தர்மத்தினை இகழாது,

மூட பார்வைகள்ழூ என்பன பின்பற்றாது வாழ்ந்து மரணிக்கின்றனர்.

அவர்கள்தான் மரணித்து சுவர்க்கத்தில் பிறப்பார்கள். அல்லது மீண்டும்

மனித உலகில் பிறவியெடுப்பார்கள்.

இவை இருந்தால் மாத்திரம் தான்

அவ்வாறாயின் நிங்கள் மரணித்த பின் ஏன் மனித உலகத்தில்

மிண்டும் பிறந்திர்கள்? காரணம் என்ன? மனம், வாக்கு உடல்

என்பவற்றினால் நன்மைகளை செய்ததினாலேயே. துறவிகளை ஏளனம்

செய்யாததினாலேயே. தர்மத்தினை ஏளனம் செய்யாததினாலேயே. மூட

பார்வை அற்று இருந்ததினாலேயே. அதேபோல் நீங்கள் மரணித்த

பின் சுவர்க்கத்தினை அடைய வேண்டுமானாலும் உங்களிடம் இந்த

இலட்சணங்களே இருக்க வேண்டும். உங்களிடம் இந்த இலட்சணங்கள்

இருப்பின் ஷநான் மரணித்த பின் சுவர்க்கத்தில்தான் பிறப்பேன்0 என

நினைத்து கொள்ளுங்கள்.

இறுதி சடங்கினால் ஒருவர் சுவர்க்கத்தினை அடையமாட்டார்.

அப்படியாயின், இறந்தவர் ஈமக்கிரியைகளினால் சுவர்க்கத்தினை

அடையமாட்டார். நாம் ஏன் ஈமக்கிரியைகளை செய்கிறோம்?

ஷமரணித்தவர் துன்பமனுபவிக்கும் இடத்தில் பிறந்திருந்தால் அவர்

அதிலிருந்து நிங்கி சுகம் அனுபவிக்க வேண்டும்0 என்றல்லவா?

எம்மால் அவ்வாறு செய்ய முடியுமா? முடியாது. அவ்வாறு நிகழுமாயின்

அதனை எமக்கு முதலில் அறியத்தருவது புத்தபகவானே. ஏனெனில்

அவர் பெருங்கருணை படைத்தவர். ஒருவர் மரணித்த பின்னராவது

இவ்வாறாக சுவர்க்கத்தில் பிறந்து சுகம் அனுபவிக்க முடியுமாயின்

அதனை புத்தபகவானே முதலில் கூறியிருப்பார்.

நேற்று நிகழ்ச்சியொன்றின் போது ஒருவர் என்னிடம் வந்து கேட்டார்.

ஷஇறந்தவருக்கு அதிகமாக புண்ணியம் கிடைப்பது அவரது சடலத்தை

தகனம் செய்யும்போதா? அல்லது புதைக்கும்போதா?0 என்று. ஷஇறந்தவருக்கு அது தேவையில்லாத விடயம். இறந்த பின்னர்

அவரது உடல் வாகனத்தில் நசுங்கினாலும் எந்தவித பிரச்சினையும்

இல்லை0 என்றேன். பிணங்களை பராமரிப்பதால் இறந்தவரை எவ்வாறு

சுவர்க்கத்தில் பிறக்கச்செய்ய முடியும்? பிணத்தினை நாய்கள்

இழுத்துச் சென்றாலும் பரவாயில்லை. முக்கியத்துவம் இருப்பது

பிணத்திலல்ல. அவர் வாழ்ந்த வாழ்க்கை முறையிலாகும்..

உடம்பினால் செய்யும் பாவம்

புத்தபகவான் ஷஇவ்வுலகில் வாழும் உயிர்கள் உடலினால் மூன்று

வகையான பாவங்களை செய்கின்றனர்0. என மொழிந்தார். அதில்

முதலாவதே ஷஷபாணாதிபாதா00 அதாவது உயிர்களை கொல்லுதலாகும்.

புத்த போதனைகளில் உயிர்களை கொல்வது தொடர்பாக பின்வருமாறு

குறிப்பிடப்பட்டுள்ளது. ஷலுத்தோ0 கொடூர மிகுந்த ஷலோஹிதபாணி0

இரத்ததிலான கரத்தினோடு ஷஹதபஹதே நிவிட்டோ0 அடித்து குத்தி

கொல்லும் மனப்பான்மையோடு ஷஅதயாபன்னோ சப்பபான பூதேசு0

உயிர்கள் மிது எவ்வித கருணையுமற்று ஒருவர் உயிர்களை

கொல்வாராயின் அது பாணாதிபாதா அதாவது உயிர் வதையாகும்.

களவும் உடலினால் செய்யும் பாவமாகும்…

அடுத்ததாக களவு தொடர்பாக விபரிக்கப்படுகிறது. ஊரிலாகட்டும்

நகரத்திலாகட்டும் தனக்கு உரியதல்லாததை திருடும் மனப்பான்மையில்

ஒருவர் எடுப்பாராயின் அது திருட்டாகும். ஒருவரது தோட்டத்திலிருந்து

பூக்கன்று ஒன்றினை உரியவரது அனுமதியின்றி எடுத்தாலும் அது

களவேயாகும். அதேபோல் இலஞ்சம் வாங்குதல், வஞ்சனை செய்தல்

என்பனவும் களவாகும்.

அடுத்ததாக புத்தபகவான் தகாத காமசெயல் தொடர்பாக விபரிக்கிறார்.

தாய், தந்தை, பெற்றோர், சகோதரன், சகோதரி, தர்மம், உறவினர்,

கணவன், மனைவி, என்போரால் பாதுகாக்கப்படும் ஒருவரோடு

எவராயினும் ஒருவர் காம செயலில் ஈடுபடுவாராயின் அது தகாத

காம செயலாகும். இவை உடம்பினை அடிப்படையாக கொண்டு

மேற்கொள்ளும் பாவ செயல்களாகும். பேசும் பாக்கியம் கிடைத்தது புறங்கூறுவதற்காக அல்ல.

அடுத்ததாக புத்தபகவான் வார்த்தையினால் செய்யும் நான்கு வகையான

பாவங்கள் தொடர்பாக குறிப்பிடுகிறார். முதலாவது பாவம் தான் பொய்

கூறல். எமக்கு பேசும் திறமை கிடைத்தது பொய்யுரைப்பதற்காக அல்ல.

உலகிற்கு நன்மையை விளைவிப்பதற்காகவே. நீங்கள் பாம்புகளை

கண்டிருப்பீர்கள். அவைகளது உலகில் வார்த்தைகள் இல்லை. அவை

மனிதர்களாக பிறந்திருக்கும் போது பொய்யுரைத்ததினாலயே அந்த

துர்ப்பாக்கியம் கிட்டியது.

அடுத்ததாக புறங்கூறல். நன்கு ஆராய்ந்து பாருங்கள். வீடுகளில்

பிரச்சினை ஏற்பட புறங்கூறுதலே காரணமாகவிருக்கும். அநேகமாக

சண்டை சச்சரவுகள், சந்தேகங்கள், குழப்பங்கள் என்பன ஏற்படவும்

இதுவே காரணமாக அமைகிறது. புறங்கூறும் அனைவருமே

வார்த்தையினால் பாவத்தினை தேடிக்கொள்கின்றனர். எமக்கு

பேசும் திறமையிருப்பது புறங்கூறுவதற்காக அல்ல. நிங்கள்

பேச முடியாதவர்களை பார்த்திருப்பிர்கள். அதேபோல் திக்கி

பேசுவோர்களையும் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம்

அவர்கள் வார்த்தையினால் சேகரித்துக்கொண்ட பாவங்களேயாகும்.

அர்த்தமற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

வார்த்தையினால் செய்யும் அடுத்த பாவம் தான் கொடிய சொற்களை

பிரயோகித்தல். புறங்கூறுவதால் ஏற்படும் பிரச்சினைகளின் போது

கொடிய (கெட்ட) வார்த்தைகளையே பிரயோகிக்கின்றனர்.

அடுத்தது தான் அர்த்தமற்ற பேச்சுக்கள். நடிகர்கள், விளையாட்டுக்கள்,

அரசியல்வாதிகள் தொடர்பான பேச்சுக்களை (32 வகையான

பேச்சுக்கள் இதிலடங்கும்.) பேசிக்கொண்டிருத்தல். இவையனைத்தும்

வார்த்தையினால் செய்யும் பாவங்களேயாகும்.

எமது கை கால்களிலே சக்தி இருக்கும் வரை எம்மால் இதனை

விளங்கிக்கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் எமது உடல்

சக்தியிழந்து, பலமற்று நாம் ஓரிடத்திற்கு வரையறுக்கப்பட்டதன்

பின்னர் அதாவது எமது இறுதி காலத்தில் எமக்கென்று நன்மை பயக்கும் ஒன்றுமே எஞ்சுவதில்லை. அன்றைய நாள் இதுவரை

உடலினாலும், வாக்கினாலும், மனதினாலும் சேர்த்துக்கொண்டவையை

பொதிசெய்து ஷஇந்தா! நி இதுவரை சேர்த்து கொண்டவையை

அள்ளிக்கொண்டு போ!0 என்று எமக்கு தரப்படும். அவற்றை எடுத்து

கொண்டுதான் நாம் செல்ல வேண்டியதாக இருக்கும்.

மனதினால் செய்யும் பாவங்கள்.

 அடுத்ததாக மனதினால் செய்யக்கூடிய மூன்று வகையான

பாவங்களை புத்தபகவான் மொழிந்துள்ளார். நாம் அழகிய ஒரு

வீட்டினை கண்டதுமே ஷஆ! அந்த வீடு என்னுடையதாக இருந்தால்0

என தோன்றும். சொகுசான வாகனமொன்றினை கண்டாலும் ஷஅந்த

வாகனம் எனக்கு இருந்தால்0. என தோன்றும். அழகியதொரு

சேலையை கண்டாலும் ஷஅந்த சேலை எனக்கிருந்தால்..0 என

தோன்றும். அழகிய தோற்றமுடைய ஒருவரை கண்டாலும் ஷஎனக்கு

இவர் துணையாக அமைந்தால்..0 எனவும் தோன்றும். இவ்வாறு

ஏனையோருக்கு உரித்தானவற்றை பார்த்து ஏங்கிக்கொண்டு பெருமூச்சு

விட்டபடி வாழ்கிறோம். எமக்கு இவ்வாறான அனுபவங்கள் இல்லையா?

இருக்கின்றன. அப்படியாயின் பாருங்கள், எமது வாழ்வானது தீமையான

திசையை நோக்கியே செல்கின்றதல்லவா? இரும்பினிலே தோன்றும்

துருவானது எவ்வாறு அந்த இரும்பையே அழிக்கிறதோ அவ்வாறே

எம் வாழ்வினை அழிக்கவல்ல தீய சக்திகளும் எம்முள்ளேதான்

இருக்கின்றன.

மனதினால் செய்கின்ற இன்னுமொரு பாவத்தினை பற்றி புத்தபகவான்

விளக்கியுள்ளார். நாம், ஷஇவர்கள் நாசமாகத்தான் போக வேண்டும்.

ஷஅழிய வேண்டும்0 செய்யும் ஒரு காரியமும் சரிவரக்கூடாது.0 இவ்வாறு

நினைக்கும் சந்தர்ப்பங்கள் இல்லையா? இருக்கிறது. இவ்வாறாக

நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் மனதினால் பாவத்தினையே

சேகரிக்கிறோம்.

ஒவ்வொரு பிறப்பிலும் நான் உன்னை பழிவாங்குவேன்.

ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்கள் ஏனையோரின் புறங்கூறுதலை கேட்டு அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் பிரச்சினைகளை

ஏற்படுத்திகொண்டு மனதினால் இவ்வாறு நினைப்பார்கள். ஷநான்

ஒவ்வொரு பிறப்பிலும் உன்னை விரட்டி விரட்டி பழிவாங்காமல்

விட்டால் பார்த்துகொள்0 என்று. மனதினால் மட்டும் நினைத்துவிடாது

வார்த்தையினாலும் அதனை வெளிப்படுத்துகிறார்கள். அவ் அனைத்து

சந்தர்ப்பங்களிலும் அவர் மனதினால் மட்டுமல்லாது வார்த்தையினாலும்

பாவத்தை சேகரித்து கொள்கிறார்.

அடுத்ததாக மனதினால் பாவம் சேரும் மிகவும் பயங்கரமான

விடயம்தான் மூடபார்வைகள் . அந்த மூடபார்வைகளாவன.

ஒருவர், ஷதானம் அளிப்பதால் நல்விளைவுகள் ஏற்படும்0 என்பதனை

ஏற்றுகொள்ள மாட்டார். அதேபோல் ஷசேவையின் (பிரதிபலன்கள்)

விளைவுகள் உண்டு0 என்பதனை ஏற்றுகொள்ளார். இங்கு சேவை

எனப்படுவது தனது தொழிலாகும். அந்த தொழிலை ஒருவர்

சரிவரச்செய்வாராயின் அது மிகப்பெரிய புண்ணியமாகும். நாம்

ஆசிரியர்களை எடுத்து கொண்டால் அந்த தொழிலினூடாக ஒருவர்

மிகவும் புண்ணியத்தினை ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

வைத்திய தொழிலிலும் புண்ணியத்தினை சேகரித்து கொள்ளலாம்.

அலுவலக சேவகருக்கு கூட அப்படித்தான். வைத்தியசாலைகளில்

பணிபுரியும் தாதிமார்கள் கூட அவர்களுடைய அந்த தொழிலை

சரிவர செய்வதால் அளப்பரிய புண்ணியத்தினை தத்தமது வாழ்விற்கு

ஈட்டிக்கொள்ளலாம். அதேபோல் ஒரு வியாபாரி தன் வியாபாரத்தை

வஞ்சனையின்றி செய்வாராயின் அதன் மூலம் அவர் மரணத்தின்

பின்னர் சுவர்க்கத்தில் கூட பிறக்கும் அளவிற்கு புண்ணியத்தினை

சேகரித்து கொள்ளலாம். ஷசேவை செய்வதால் பாவம், புண்ணியம்

எனும் விளைவுகள் கிடைக்கும்0 என்பதனை ஒருவர் நம்ப வேண்டும்.

இதனை நம்பாவிட்டால் அவர் மூடபார்வைகள் கொண்டவராவார்.

அனைத்து உலகங்களும் இங்கு இல்லை…

அரும்பாடுபட்டு தம்மை ஈன்றெடுத்து, வளர்த்தெடுத்த பெற்றோர்கள்

தம் பிள்ளைகள் மீது அளவிட முடியாத அன்பினை கொண்டவர்கள்

என்பதனை ஏற்காதோரும் எம்மத்தியில் வாழ்கின்றனர். அதேபோல் ஒருவர் பெற்றோர்களுக்கு சேவை செய்வதில் பாவ புண்ணிய

விளைவுகள் உண்டென ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுவும் ஒரு

மூடபார்வையாகும்.அடுத்த மூடபார்வைதான், தாய் தந்தை அற்று

பிறக்கும் பிறவிகள் அதாவது ஓபபாதிக பிறப்புகள்ழூ உண்டு

என்பதனை ஏற்றுக்கொள்ளாமை

உலகம் என்பது நாம் காண்பவை மட்டுமல்ல.

அடுத்த மூடபார்வைதான், இவ்வுலகினை உய்த்தறிந்த துறவிகள்,

அந்தணர்கள் இல்லை. எனும் நிலைப்பாடு. சிலர் தம் கண்ணுக்கு

தெரிபவை மட்டும் தான் உலகம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கருத்து சரியா? பிழையா? பிழையாகும்.

புத்தபகவானுக்கு இவ்வுலகில் சாதாரண கண்களுக்கு புலப்படாத

பல விடயங்களை காணும் திறமையிருந்தது. புத்தபகவான் இவ்வாறு

போதித்தார். இவ்வாறான மூடபார்வைகளை கொண்டிருக்கும் ஒருவர்

புத்தபகவான் உட்பட பிக்கு, துறவிகளை நிந்தனை செய்வார்.

மோட்சத்திற்கு வழிகாட்டும் உன்னதமான தர்மத்தினையும் நிந்தனை

செய்வார். இவ்வாறு பலவகையான நிந்தனைகள் செய்து அதன்

விளைவால் நரகத்தில் பிறப்பார்.

ஐயோ! அம்மா..தீச்சுவாலைகள் என்னை சுட்டெரிக்கின்றன!

புத்தபகவான் நரகத்தினை பற்றி விபரிக்கிறார். நரகத்தில் பிறப்பது

ஷஷஓபபாதிக00 முறையிலாகும். ஒருவரின் இறுதி மூச்சு நிற்கும் போதே

நரகத்தில் பிறவி கிடைக்கும். நரகத்தில் அவர் பிறந்ததுமே அவரை

இயமனின் சேவகர்கள் வந்து பிடித்து கொள்வார்கள்.

இலங்கையில் நடந்த சம்பவொன்றை கூறுகின்றேன். ஒரு மகள்

இருந்தாள். அவள் ஒரு ஆசிரியை. அவள் காணி பிரச்சினை

ஒன்றுக்காக தன் தாயோடு பகைமை கொண்டிருந்தாள். அவள்

அதன் காரணமாக தனது தாயை ஏசிக்கொண்டும், தூற்றிக்கொண்டும்

பகைமை கொண்டிருந்தாள். இப்படி இருக்கும் போது அந்த மகளுக்கு புற்றுநோய் ஒன்று ஏற்பட்டது. ‘குணப்படுத்த முடியாது, இவரை

வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்”. என வைத்தியர்கள் கூறிவிட்டார்கள்.

இவள் நன்கு வாழும்போது தனது தாயை விட்டிற்குக்கூட வர

அனுமதிக்கவில்லை. ஷவீட்டிற்கு வந்தால் அடிதான் கிடைக்கும்0 என

கூறியிருந்தாள். ஆனால் மகள் நோயால் துன்புறும்போது தாய்தான்

பணிவிடை செய்தாள். இவ்வாறு இருக்கும் போது ஒருநாள் இந்த

மகள் படுத்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து பலத்த சத்தத்தோடு

ஷஷஅம்மா வீடு எரிகிறது… வீட்டினுள் தீ வருகிறது00 என கூச்சலிட்டாள்.

வீட்டினுள் வெயில் வருவதால் தான் இவ்வாறு கூச்சலிடுகிறாள் என்று,

அந்த தாய் கதவினை மூடினாள். இவ்வாறு மூடும் போது ஷஷஅம்மா,

சிவப்பு நிற ஆடை அணிந்தோர் வந்து என்னை இழுக்கின்றனர்

ஆ!!00 என கத்திக்கொண்டே மரணித்தாள். மரணத்தருவாயில் இருக்கும்

சிலருக்கு மனித உலகில் இருக்கும் போதே நரகத்தில் பிறப்பதற்கான

அறிகுறிகள் தோன்றுகின்றன.

எமக்கும் அப்படியான மரணம் நிகழ்ந்தால்..?

ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறில்லை. நல்ல

சுகமாக வயிறுமுட்ட சாப்பிட்டு தூங்குவார்கள். அந்த தூக்கதிலேயே

அவர் மரணிப்பார். இதை கேள்வியுறும் மக்களும் மரண சடங்கில்

வருணித்து பேசுவார்கள். ஷநல்ல மரணம் ஒன்று. சுகமாகவே

அவர் இறந்தார். எவ்வித வேதனையையும் அனுபவிக்கவில்லை.

அதிஷ்டமானதொரு மரணம்0 என்று . ஆனால் அவர் மரணத்தின்

பின் பிறப்பது எங்கே நரகத்தில்தான். அவர் அங்கு பிறந்த உடனே

அவரை இயமனின் சேவகர்கள் பிடித்து கொள்வார்கள். இதனிலிருந்து

புலப்படுவது என்னவெனில் அவருக்கு அதிலிருந்து மீள்வதற்கு எவ்வித

அவகாசமும் கிடையாது என்பதாகும்.

இயம அரசன்..

இவ்வளவு ஏன்? நாம் ஒரு சிறிய விடயத்தினை பார்ப்போம். நாம்

கனவு ஒன்றினை காண்கிறோம், என்று வைத்துக்கொள்வோம். அந்த

கனவினை காணும் போது எம்மால் அதனை தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. நாம் விரும்பாத ஒன்றை கனவில் காண்கிறோம். ஆனால்

அதனை எம்மால் அந்நேரம் நிறுத்த முடியாது. அந்த கனவினை

நாம் தொடர்ந்தும் காண்கிறோம். ஆம், நாம் விரும்பாவிட்டாலும்

அதனை காண வேண்டியதாக இருக்கிறது. பாருங்கள் எவ்வளவு

அநாத்மம் (எம்மால் கட்டுப்படுத்த முடியாத தன்மை) என்று. ஒருவர்

நரகத்தில்ஓபபாதிக முறையில் பிறந்தவுடனே இயமனின் சேவகர்களால்

அவர் இழுத்து செல்லப்படுகிறார். அவ்வாறு இழுத்து செல்லப்படும்

போது அவர் செய்த அனைத்து பாவங்களும் அவர் முன்னே

தென்படும். அவரை இயமனின் சேவகர்கள் இயம அரசனின் முன்

நிறுத்துவர். புத்தபகவான் ஷபுண்ணியமிகு பிக்குகளே! நரகத்தில்

பிறந்த ஒருவரிடம் இயமன் கேள்விகள் கேட்பார்0 என மொழிந்தார்.

இயமன் நரகத்தில் பிறந்த அவ்வுயிரிடம் பின்வருமாறு கேள்விகளை

கேட்பார். ஷநீ மனித உலகில் வாழும் போது முதலாவது தேவதூ

தனை காணவில்லையா?0

ஷஐயோ நான் காணவில்லையே!0

ஷஎன்ன? நீ மனித உலகில், தன்னுடைய மலம் மற்றும் சிறுநீரினை

உடலில் பூசிக்கொண்டபடி புரண்டிருக்கும் அக்கணம் பிறந்த

குழந்தைகளை கண்டதில்லையா?0

ஷபிரபுவே! நான் கண்டிருக்கிருக்கிறேன்.0

ஷஅப்படியாயின் உனக்கு ‘நானும் இவ்வாறு தான் பிறந்தேன்.

மீண்டும் மீண்டும் பிறக்கும் இயல்பினை உடையவனாகவே நான்

இருக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் பிறப்பதால் நான் செய்யும்

தவறான செயல்களை விடுத்து தர்மத்தில் ஈடுபட வேண்டும். என நீ

நினைக்கவில்லையா?0

நரகத்தில் பிறந்த இவ்வுயிர்க்கு தான் செய்த அத்தனை தவறுகளும்

கண் முன்னே தெரியும். அதனால் பொய்யுரைக்கவும் முடியாது.

அதனால் நரகத்தில் பிறந்தவர் பின்வருமாறு கூறுவார். ஷஐயோ

பிரபுவே! என்னால் தர்மத்தில் ஈடுபட முடியாமல் போய் விட்டது.

நான் தாமதமாகிவிட்டேன்0 அப்போது இயம அரசன் ஷஉனக்கு நன்மையான செயல்களை செய்ய

முடியாமல் போய் விட்டது. நீ தாமதமாகிவிட்டாய்! செய்வதற்கு வேறு

வழியில்லை. இந்த கர்மம் உன்னாலேயே செய்யப்பட்டது. உன்

தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர்,

சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால் செய்யப்படவில்லை.

அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை.

நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய

விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.0 என்று கூறுவார்.

முதியவர்களை கண்டதில்லையா?

அடுத்ததாக இயம அரசன் இரண்டாவது கேள்வியை கேட்பார்.

ஷமானுடனே! நீ இரண்டாவது தேவதூதனை கண்டதில்லையா?0

ஷசுவாமி நான் கண்டதில்லையே!0

ஷஏன் நி கண்டதில்லையா? 80-90 வயது கொண்ட நன்கு

முதுமையடைந்த, ஊன்றுகோலை ஊன்றிச்செல்லும் முதியோரை நீ

கண்டதில்லையா? முடி நரைத்து, பற்கள் விழுந்து, தோல் சுருங்கி,

கூன் விழுந்திருக்கும் முதியோரை நீ கண்டதில்லையா?0

ஷபிரபுவே! நான் கண்டிருக்கிறேன்0

ஷஅப்படியாயின் நி நினைக்கவில்லையா? நானும் இவ்வாறு

முதுமையடைவேன். நானும் பலவீனமடைவேன், என்னுடைய இந்த

கை கால்கள் தளர்ந்து போகும். அதனால் நான் இவ்வாறாக முதிர்ச்சி

அடைவதற்கு முதல் எப்படியாவது அதர்மத்திலிருந்து விலகி

தர்மத்தை பின்பற்ற வேண்டும். என்று நீ நினைக்கவில்லையா?0

ஷஐயோ பிரபுவே! என்னால் தர்மத்தில் ஈடுபட முடியாமல்

போய்விட்டது. நான் தாமதித்துவிட்டேன்0

ஷதாமதமாகியதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த கர்மம்

உன்னாலேயே செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள்,

உன் நண்பர்களால் செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள்,

துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை. நீயே இந்த கர்மத்தினை

சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே

அனுபவிக்க வேண்டும்.0 என்று கூறுவார்.

ஏன் நோயாளிகளை கண்டதில்லையா?

புத்தபகவான் அடுத்ததாக ஷஇவ்வாறு நரகத்தில் பிறந்த மனிதரிடம்

இயம அரசன் மூன்றாவது கேள்வியையும் கேட்பார்0 என மொழிந்தார்.

ஷமானுடனே! நீ மனித உலகில் இருக்கும் போது மூன்றாவது தேவதூ

தனை காணவில்லையா?0

ஷஐயோ! சுவாமி நான் கண்டதில்லையே!0

என்ன? நி நோயாளிகளை கண்டதில்லையா? தன்னுடைய

மலக்கழிவுகளிலேயே படுத்திருக்கும் நோயாளிகளை நீ கண்டதில்லையா?

ஏனையோரின் உதவியின்றி எழ முடியாத, உணவு உண்ண முடியாத,

நீராட முடியாத நோயாளிகளை நீ கண்டதில்லையா?

ஷபிரபுவே! நான் கண்டிருக்கிறேன்0

நீ கண்டவுடன் சிந்தித்திருக்க வேண்டுமல்லவா? ஷநானும் நோயுறும்

இயல்பினை கொண்டவன். நானும் இவ்வாறு ஒரு நாள் நோயால்

பீடிக்கப்படலாம். அதனால் நான் செய்யும் தவறான செயல்களை

தவிர்க்க வேண்டும். நானும் தர்மத்தின் படி வாழ வேண்டும்.0 என்று.

ஷஐயோ பிரபுவே! என்னால் முடியாமல் போய்விட்டது.0

ஷதர்மத்தினை பின்பற்ற தாமதமாகியவருக்கு தீமையான விளைவுகளை

அனுபவித்தேயாக வேண்டும். இந்த கர்மம் உன்னாலேயே

செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி,

பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால்

செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள்

செய்யவில்லை. நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.0

என்று பதிலுரைப்பார். பாருங்கள். இயம அரசர் எவ்வாறு செய்த

தீய கர்மத்தினை ஒப்புவிக்கிறார் என்று. மனித உலகில் என்றால்

நாம் தவறொன்றினை செய்து ஏனையோர் மீது ஷஅவர் தான் இதனை

செய்தார்0 என குற்றத்தை சுமத்தி தப்பித்துவிடலாம். ஆனால் தனது

மனசாட்சியிலிருந்து தப்பிக்கமுடியாது. அப்படியாயின் நரகத்தில்

சென்று செயற்படுவது மனசாட்சியை அடிப்படையாக கொண்டே

என்பதனை உணரலாம்.

தண்டனை அனுபவிப்பதை கண்டதில்லையா?

 இயம அரசன் எனக்கூறப்படுபவர், ஒருவர் நரகத்தில் பிறந்ததுமே

தண்டனையை வழங்குவதில்லை. இயம அரசன் மீண்டும் நரகத்தில்

பிறந்த மானுடரை பார்த்து கேட்கிறார். ஷமானுடனே! நான்காவது

தேவதூதனை நீ காணவில்லையா?0 என்று.

ஷஐயோ சுவாமியே நான் கண்டதில்லையே!0

ஷஏன் நீ தண்டனை அனுபவிக்கும் மனிதர்களை கண்டதி;ல்லையா?

தவறுகளை செய்து அதன் விளைவாக சாட்டையடி வாங்கும்

மக்கள், கல்லடிபட்டு இறந்து போகும் மக்கள், கைகால் வெட்டப்படும்

மக்கள், சிறையிலடைக்கப்படுவோர், பல்வேறான சித்திர வகைகளை

கொடுத்து உயிருடன் எரிக்கப்படும் மக்களை கண்டதில்லையா?0 என்று

இயம அரசன் கேட்பார்.

நாம் வாழும் மனித உலகில் மனிதர்களை சித்திரவதை செய்வதை

நாம் கடந்த காலங்களில் கேட்டிருக்கிறோம். கண்களினால்

பார்த்தோர்களும் உள்ளனர். ஒருவரை நிலத்தில் சரிய வைத்து

ஒரு காதில் ஆணியை அடுத்த காதில் வெளிவருமாறு சுத்தியலால்

அடித்தல். மண்டையோடு சிதறும் வண்ணம் ஆணியை கொண்டு

சுத்தியலால் அடித்தல். போன்றவை அவற்றில் ஒரு சிலதான்.

மனித உலகில் சித்திரவதைகள் இப்படியென்றால் நரகலோகத்தில்

எவ்வாறானதாக இருக்கும்?

இயம அரசன் இந்த சித்திரவதைகளை விளக்கி கேட்கிறார். ‘உனக்கு இந்த தண்டனைகளை பார்த்து ஷஇந்த பிழைகளில் இருந்து

நான் மீள வேண்டும்0 என்று தோன்றவில்லையா?”

ஷஐயோ சுவாமியே! எனக்கு அவ்வாறு தோன்றவில்லையே!0

அப்போது இயம அரசன் ஷதர்மத்தினை பின்பற்ற தாமதமாகியவருக்கு

தீமையான விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். இந்த கர்மம்

உன்னாலேயே செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல. உன்

தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள்,

உன் நண்பர்களால் செய்யவில்லை. அல்லது வேறு தேவர்கள்,

துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை. நீயே இந்த கர்மத்தினை

சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே

அனுபவிக்க வேண்டும்.0 என்று கூறுவார்.

போதுஜ்ஜனரின் வாழ்க்கையானது ஒரு நீர் குவளையை போன்றதே…

புத்தபகவானது போதனை ஒன்றுள்ளது போதுஜ்ஜனர் தொடர்பாக.

அந்த போதனையில் புத்தபகவான் போதுஜ்ஜனரின்ழூ குணவியல்பினை

ஒரு நிர் குவளைக்கு உவமித்து கூறுகிறார். அதேபோல் ஆர்ய

(உன்னத) தர்மத்தினை பின்பற்றும் மோட்ச பாதையில் பயணிக்கும்

ஆர்ய சீடனின் வாழ்வினை ஒரு நதிக்கும் உவமித்து கூறியுள்ளார்.

புத்தபகவான் தம் சிடர்களிடம் வினவுகிறார். ஷபுண்ணியமிகு

பிக்குகளே! ஒரேயளவிலான இரு உப்பு கற்களை எடுத்து ஒன்றினை

நீர்க்குவளைக்கும் மற்றதை கங்கைக்கும் இட்டால் ஏற்படும் மாற்றம்

என்ன? என்று. அதற்கு பிக்குமார்கள் ஷபாக்கியமுள்ள பகவானே!

உப்புக்கல் இடப்பட்ட நிர்க்குவளையின் நிரானது விரைவிலேயே

உப்பு சுவையுள்ளதாக மாறும். ஆனால் கங்கையின் நீரில் அதனால்

மாற்றமேதும் ஏற்படுவதில்லை.0 என மறுமொழி தெரிவித்தனர். அதனை

செவிமடுத்த புத்தபகவான் ஷஇப்படித்தான் ஒரு சிறு பாவத்தை செய்த

போதுஜ்ஜனருக்கு நரகத்தில் பிறக்க அதுவே காரணமாகிறது. ஆனால்

மோட்சத்தினை சாட்ஷாத் (உறுதி) செய்துள்ள ஒரு ஆரிய சீடனுக்கு அது பாதிப்பு செலுத்தாது. பாருங்கள் தர்மத்தின் படி

தம் வாழ்வினை நடத்தும் ஒருவருக்கு கர்ம விளைவுகளில் இருந்து

எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கின்றது என்பதனை.

பிணங்களை கண்டதில்லையா?

அடுத்ததாக இயம அரசன் ஐந்தாவது தேவதூதனை பற்றி கேட்கிறார்.

ஷமானுடனே! நீ மனித உலகில் வாழும்போது ஐந்தாவது தேவதூ

தனை காணவில்லையா?0

ஷஐயகோ! நான் கண்டதில்லையே!0

ஷஏன் நீ மனிதர்கள் இறந்து கிடப்பதை கண்டதில்லையா? அழுகிய

பிணங்களை கண்டதில்லையா?0

ஷபிரபுவே! நான் கண்டிருக்கிறேன்0

அதனை பார்த்ததும் ஷநானும் ஒருநாள் இப்படி மரணிப்பேன் அல்லவா?

அவ்வாறு மரணிப்பதற்கு முன்பு நான் பாவசெயல்களிலிருந்து தவிர்ந்து

தர்மத்தின் படி வாழ வேண்டும். புண்ணியங்களை செய்ய வேண்டும்.

என்று ஏன் நீ நினைக்கவில்லை?0

ஷஐயோ! பிரபுவே என்னால் அவ்வாறு சிந்திக்க முடியாமல் போய்விட்டது.

நான் தாமதித்துவிட்டேன்.0

ஷஅப்படியாயின் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தர்மத்தில்

ஈடுபட தாமதித்தவனுக்கு எந்த துன்பத்தை அனுபவிக்க நேரிடுமோ

அதை நி இப்போது அனுபவித்தேயாக வேண்டும். இந்த கர்மம்

உன்னாலேயே செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல. உன்

தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள்,

உன் நண்பர்களால் செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள்,

துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை. நீயே இந்த கர்மத்தினை

சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே

அனுபவிக்க வேண்டும்.0 என்று இயம அரசர் அமைதியாகிவிடுவார். இவ்வாறு ஐந்து வகையாக தர்மத்தில் ஈடுபட தாமதமாகியதை

சுட்டிக்காட்டிய பின்பே அவர் மௌனமாவார். எந்த விதத்திலாவது

அந்த மானுடனை அவரால் காப்பாற்ற முடியுமாயின், அவர் இந்த

துன்பத்திலிருந்து காப்பார்.

அநித்திய தியானத்தின் மகிமை

நரகத்திற்கு சென்று இயம அரசரிடமிருந்து தப்பி வந்த ஒருவர்

இருக்கிறார். இவர் இப்போது பிக்குவாக துறவு பூண்டிருக்கிறார். இந்த

பிக்குவுக்கு நரகத்தில் நடந்தவை நினைவில் இருக்கிறது. அவர் மனித

உலகில் வாழும் போது ஷஅநித்திய0ழூ தியானத்தை செய்துள்ளார்.

இயம அரசன் இவ்வாறு ஐந்து கேள்விகளையும் கேட்டு இறுதியாக

ஷஏன் நீ இவ்வாறு செய்தாய்0 என கேட்டுள்ளார். ஷசுவாமியே! நான்

துறவு பூணுவதற்காகத்தான் இருந்தேன். அதற்கிடையில் மரணித்து

விட்டேன்0 என பதிலளித்துள்ளார். இவர் நரகத்தின் வாசல் வரை

சென்று தப்பியவராவார். தப்பிக்க காரணம்தான் அநித்திய தியானத்தை

செய்திருந்தமை ஆகும். இயம அரசர் கூறினாராம். ஷஉனக்கு நீ செய்த

புண்ணியம் ஒன்று உள்ளது. இந்த புண்ணியத்தினால் நீ மீண்டும்

மனித உலகில் பிறக்கலாம்0. என்று. அங்கிருந்த இன்னுமொருவர்

கூறியிருக்கிறார். ஷநீ மனித உலகில் பிறந்தாலும் அந்த மனித வாழ்வின்

அரைவாசி காலத்தில் மிகுந்த துன்பத்தினையே அனுபவிப்பாய்!0

என்று.

துன்பங்களை அனுபவித்தே துறவியானேன்.

அந்த பிக்குவானவர் கூறுகிறார், ஷநான் வாழ்வின் அரைவாசி காலத்தை

துன்பத்தினாலயே அனுபவிப்பேன்0. என கூறியது மாரனேழூ என்பதாக.

இவர் நரகத்திலிருந்து நீங்கி மனித உலகில் மிக மிக ஏழ்மையான

குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தினசரி குடிபோதையில்

வந்து தாயை துன்புறுத்துவாராம். இந்த பிக்குவை பாடசாலைக்கு

கூட அனுப்பியதில்லை. ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, ஒரு தொழிலைத்தேட ஆரம்பித்தார். அதன் விளைவாக

இவருக்கு பாண் பேக்கரி ஒன்றில் அடுப்பிற்கு விறகு போடும் தொழில்

கிடைத்தது. அதனால் இவர் வருடக்கணக்கில் நெருப்பினால் மிகுந்த

துன்பம் அனுபவித்துள்ளார். இவரின் சிறு வயதில் இருந்தே நரகத்தில்

இடம்பெற்ற சம்பவம் இவருக்கு அடிக்கடி ஞாபகம் வந்துள்ளது.

அதேபோல் சிறுவயதிலிருந்தே அவருக்கு துறவு பூண வேண்டும்

எனும் ஆசை இருந்தாலும் எவருமே அவரை துறவு பூணுவதற்காக

ஏற்றுக்கொள்ளவில்லை. நாற்பது வயது வரை பெரும் துன்பத்தினை

அனுபவித்து வாழ்ந்து தனது நாற்பதாவது வயதினில் பிக்குவாக

துறவறம் பூண்டார். வாழ்வின் பெரும்பகுதியை அவர் துன்பத்திலேயே

கடந்தார். இறுதியில் அவர் துறவு பு +ண்டாலும் நரகத்தில்

இடம்பெற்ற சம்பவம் நினைவிற்கு வருவதினால் அவரால் மனதினை

ஒருமுகப்படுத்தி தியானம் செய்தல், தர்மத்தினை அறிவால் ஆராய்தல்

போன்ற செயற்பாடுகளை செய்வது கடினமாக இருக்கிறது.;என

அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதிகமாக புண்ணியங்களை

செய்கிறார். அதனால் அவர் மரணத்தின் பின் சுவர்க்கத்தில் பிறப்பார்.

நூற்றிற்கு தொண்ணூற்றொன்பது வீதம் நால்வகை நரகத்தில் தான்.

நீங்கள் நினைக்கும் வகையில் இலங்கையில் வாழும் எத்தனை பேர்

மரணித்து சுவர்க்கத்தில் பிறப்பார்கள்? நூற்றிற்கு ஒரு தசம் என்ற

வீதத்திலேயே சுவர்க்கத்தில் பிறப்பார்கள். மீதி தொண்னூற்றொன்பது

தசம் ஒன்பது விதமானோர் நரகத்திலோ, மிருகலோகத்திலோ,

அல்லது பிசாசு உலகத்திலோ பிறப்பார்கள். காரணம் என்ன?

மூடபார்வையில் மூழ்கி இருப்பதாகும். தானமும் அளிப்பார்கள்,

சிலத்தினையும் அனுஷ்டிப்பார்கள். ஆனால் மூடபார்வைகளை,

மூடநம்பிக்கைகளை சரணடைந்து அவற்றிலேயே திளைத்துள்ளனர்.

புத்தபகவான் ஷமூடபார்வை கொண்டு வாழ்பவனுக்கு இருவகையான

பிறப்புக்களே உள்ளன என மொழிந்துள்ளார். ஒன்று மிருகலோக

பிறப்பு, இரண்டாவது நரகத்தில் பிறப்பது0. சம்மா திட்டி (தெளிவான

பார்வை) அற்று மூடபார்வை கொண்டு அவற்றை சரணடைபவர்கள்

நரகத்திலேயே பிறப்பார்கள். இறப்போர் அனைவரும் நரகத்தில்

பிறப்பதற்கான இரகசியம் இதுவேயாகும். துணிவு வேண்டும்.

நன்றாக சிந்தித்து பாருங்கள். இந்த மூடபார்வையை விடுத்து

மும்மணிகளை மாத்திரம் சரணடைவதற்கு ஒருவருக்கு ஆத்மபலம்

வேண்டும். ஒருவருக்கு இம்மாதிரியான நம்பிக்கைகளை விடுத்து

புத்தபகவானை சரணடைவதற்கு பெரும் போராட்டம் தன்னோடு தானே

செய்ய வேண்டியதாக இருக்கும். ஏன்? மனப்பயமே காரணம். ஏனெனில்

இவ்வளவு நாள் தான் நம்பிக்கொண்டிருந்தவையே கைவிட வேண்டும்.

ஒருவர் இவற்றை கைவிட்டு மும்மணிகளை சரணடைவாராயின்

அவருக்குதான் பாதுகாப்பு கிடைக்கிறது. மும்மணிகளை கைவிட்டு

ஒருவர் வேறு விடயங்களை சரணடைவாராயின், அது அவருக்கு

துர்ப்பாக்கியத்திற்கே வழி காட்டும். அதனால் தான் பெரும்பாலானோர்

மரணத்தின் பின்னர் நரகத்தில் பிறக்கின்றனர்.

பழுக்கக்காய்ச்சிய இரும்புக்கோல்

முன்பு கூறியதை போல் இயம அரசன் மௌனமாகியதன் பின்னர்

நரக வாசிகள் இந்த மனிதரை அவ்விடத்திலிருந்து இழுத்துச்

செல்வார்கள். இழுத்துச் சென்று தீயிலிடப்பட்ட பழுக்கக்காய்ச்சிய

இரும்புக்கோலினால் இடது கையில் குத்துவார்கள். வலது கையிலும்

கால்களிரண்டிற்கும் மார்பிற்கும் குத்துவார்கள். ஆனால், அவர் அந்த

கர்ம வினை அனுபவித்து தீர்க்கப்படும் வரை துடித்து கொண்டிருப்பாரே

அன்றி மரணிக்கமாட்டார்.

இவற்றை கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது.

அடுத்ததாக, அந்த மனிதனை அவ்விடத்திலிருந்து இழுத்தெடுப்பார்கள்.

எடுத்து என்ன செய்வார்கள்? கோடரி ஒன்றினால் கைகளையும்

கால்களையும் வெட்டுவார்கள். இவ்வாறு கைகால்கள் துண்டித்து

வேறாக்கிய போதும் வேதனையால் அவர் துடிப்பாரே தவிர

மரணிக்கமாட்டார். சற்று நேரத்தில் மிண்டும் இந்த கைகால்கள்

தாமாகவே அவரது உடம்பில் இணைந்து கொள்ளும். அவரை

நரகவாசி ஒருவர் மட்டும் துன்புறுத்துவதில்லை. பலர் ஒன்றாக சேர்ந்துதான் துன்புறுத்துவார்கள். அதன் பின்னர் இந்த மனிதரை

(நரகத்தில் பிறந்த நரக உயிரினை) இழுத்துச் சென்று நன்கு சூடாகிய

இரும்புத் தரையில் வைப்பார்கள். அத்தரையின் மிது இவரை

படுக்கச்செய்து வெப்பமிகுந்த சில்லுக்களையுடைய வாகனங்களில்

ஏறி; நரகவாசிகள் இவரின் உடலின் மேல் அங்குமிங்குமாக

பயணிப்பார்கள். நரகத்தில் பிறந்த மானுடன் வேதனையால் துடித்துக்

கொண்டும் கத்திக்கொண்டும் இருப்பான். ஆனால் மரணிக்கமாட்டான்

சொல்லொணா துன்பத்தை அனுபவிப்பான். அதன்பின்னர் இந்த நரக

உயிரினை தீக்கட்டிகள் இருக்கும் ஒரு மலையின் மீது அடித்து

துன்புறுத்திய வண்ணம் ஏறச்செய்வார்கள். இவ்வாறு ஏற்றி முடித்த

பின்னர் அந்த மலை உச்சியிலிருந்து அவரை ஒரு குழிக்குள் தள்ளி

விடுவார்கள். அது ஷலோகும்பு நரகம்0 எனப்படும். இந்த குழியில்

கொதித்துகொண்டிருக்கும் உலோகத்திரவம் நிரம்பியிருக்கும்.

உணவு வகைகள் வேகுவது போலவே தம் உடம்பும் வேகும்.

புத்தபகவான், உயிர்கள் இந்த கொதிக்கின்ற உலோக திரவ குழியில்

அனுபவிக்கும் துன்பத்தினை மிக அழகாக விளக்கிக் கூறியுள்ளார்.

நரகத்தில் பிறந்த அந்த நரக உயிர் இந்த குழியில் விழுந்ததன்

பின்னர் அவனின் உடல் நுரை போன்று ஆகிவிடும். அந்த குழியி;ன்

ஆழத்தில் அமிழ்ந்தும் மீண்டும் மேற்பரப்பின் மீது வருவதுமாக அவர்

ஆயிரக்கணக்கான வருடங்கள் அதில் அவிந்து கொண்டே இருப்பார்.

அதற்கான கர்மவினை முடியும் வரை அவர் அதிலே வார்த்தையால்

விபரித்துக் கூற முடியாத வண்ணம் துயரத்தை அனுபவித்தபடி

இறவாதிருப்பான். இந்த நரகத்தின் துன்பமனுபவிக்கும் காலம்

முடிந்த பின்னர் நரகவாசிகள் அவரை பெருந்தூண்டில்களினால்

பிடித்து மண்டபம் போன்று அமைந்த ஓரிடத்திற்கு விசுவார்கள்.

ஷமகா நரகம்0 என்பது அதன் பெயராகும். புத்தபகவான் அதனை

மேலும் விபரிக்கிறார். ஷஇதன் மேல் பாகம் கீழ் பாகம், இரண்டும்

முழுமையான இரும்பிலானது. நாற்புறச்சுவர்களும் இரும்பினலானது.

அதன் நாற்புறமும் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இது சிறியதொரு இடமல்ல. மிக மிக விசாலமானதாகும். இதனுள்

இந்த நரக உயிர் மட்டுமல்ல துன்புறுவது. கோடிக்கணக்கான பேர்

துன்பமனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு மகா நரகத்துள்

தூக்கி வீசப்பட்டோருக்கு தூரத்தே ஒரு கதவு திறப்பது தென்படும்.

அப்போது அதனுள் இருக்கும் அனைவரும் அந்தக்கதவினூடாக

வெளியேறிவிடலாம் எனும் நம்பிக்கையோடு அந்த திசையை நோக்கி

ஓடுவார்கள். அந்தக்கதவினை நெருங்கும் போது அந்த கதவினூ

டாக கொழுந்து விட்டு எரிகி;ற நெருப்பு உள்ளே வரும். அந்த

நெருப்பினால் தோல் எரிந்து, தசை எரிந்து, எழும்புகளிலிருந்து

புகை வெளிவரும்0, என புத்தபகவான் மொழிந்துள்ளார். இவ்வாறு

துன்பத்தினை அனுபவித்து கொண்டு அக்கதவினை அடையும் போது

அக்கதவு மூடப்படும்.

கர்மம் தீரும் வரை வேதனை அனுபவிப்பர்

அந்த கதவு மூடப்படும் போதே இன்னுமொரு பக்கம் கதவு

திறக்கும். மீண்டும் அவர்கள் இங்கிருந்து கதவு திறப்பட்ட திசையை

நோக்கி ஓடுவார்கள். தாங்க முடியாத வேதனையால் கூட்டமாக

கத்திக்கொண்டு அக்கதவினை நோக்கி செல்லும் போது என்ன

நடக்கும்? அவ்வாறே அந்த கதவினூடாகவும் கொழுந்து விட்டு

எரிகி;ற பெருநெருப்பு உள்ளே வரும். அந்த நெருப்பினால் தோல்

எரிந்து தசை எரிந்து, எழும்புகளிலிருந்து புகை வெளிவரும், என

புத்தபகவான் மொழிந்துள்ளார். இவ்வாறு துன்பத்தினை அனுபவித்து

கொண்டு அக்கதவினை அடையும் போது அக்கதவும் மூடப்படும்.

நாம் நினைப்போம், கிழக்கு நோக்கி ஓடும் போது கிழக்குத் திசை

கதவுதான் இப்போது மூடப்பட்டதென்று. மீண்டும் திரும்பி பார்க்கும்

போது மேற்கு திசையில் அமைந்த கதவு திறக்கப்படும். அத்திசையை

நோக்கி ஓடும் போதும் அந்த கதவினூடாக கொழுந்து விட்டு எரிகி;ற

நெருப்பு உள்ளே வரும். அந்த நெருப்பினால் தோல் எரிந்து தசை

எரிந்து, எழும்புகளிலிருந்து புகை வெளிவரும். என புத்தபகவான்

மொழிந்துள்ளார். இவ்வாறு துன்பத்தினை அனுபவித்து கொண்டு

அக்கதவினை அடையும் போது அக்கதவும் மூடப்படும். அங்கிருந்து திரும்பி பார்க்கும் போது தென் திசையில் ஒரு கதவு திறப்பது

தென்படும். அந்தத்திசையை நோக்கி ஓடும்போது முன்பு குறிப்பிட்டது

போன்றே அக்கதவும் மூடப்படும். அங்கிருந்து பார்க்கும் போது வடக்கு

திசையில் கதவு திறப்பதனை காண்பார்கள். மீண்டும் அத்திசையை

நோக்கி ஓடுவார்கள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக துன்பமே!

இங்கு கூற ப் படும் ஒரு கதவினை N ந ரக்கி ஓடுவதற்கு

பல்லாயிரக்கணக்கான வருடங்களாகும். இவ்வாறு அந்த நரகத்தில்

அனுபவிக்கும் காலம் முடிவடைந்து வரும்போது கிழக்கு திசையின்

கதவு திறப்பதனை காண்பார்கள். மீண்டும் அத்திசையை நோக்கி

தீயினால் எரிந்தபடி தோல் எரிந்து, தசை எரிந்து, நரம்புகள் எரிந்து,

எழும்புகளிலிருந்து புகை வெளிவரும் வண்ணம் ஓடுவார்கள். ஆனால்

இம்முறை அக்கதவு மூடப்படாது. அக்கதவிலிருந்து வெளியில்

விசியெறியப்பட்டு ஒரு பென்னம்பெரிய மலக்கழிவுக்குழியில்

விழுவார்கள்.

நாமறிந்த புழுக்கள் அல்ல அவை

புத்தபகவான், ஷஅந்த மலக்கழிவுக்குழியில் ஊசியை போன்ற ஒருவித

புழுக்கள் நிறைந்திருக்கும், என மொழிந்துள்ளார். இன்ஜெக்ஷன்

போடும் போது சருமத்தினையும் தசையினையும் ஊடுருவி ஊசி

உள்ளே போகும் போது ஏற்படும் நுண்ணிய வேதனையை நாம்

அனுபவித்திருப்போமல்லவா? அதேபோல் இந்த மலக்கழிவுக்குழியில்

வாழும் புழுக்கள் அந்த குழியில் விழுந்தவரின் உடலை மூடுவதாக

பற்றிகொள்ளும். அவ்வாறு உடலை மூடிக்கொண்டு கண்களை

துளையிடும், காதுகளை ஊடுருவிச்செல்லும். மூக்கினை துளையிடும்,

வாயை துளையிடும். கைகால்களையும் இவ்வாறு துளையிடும்.

அவ்வாறாக முழு உடம்பையும் தோல், தசை, நரம்பு, என்பு என்பன

ஊடுருவி சென்று என்பு மச்சையினை (சாற்றினை) உறிஞ்சி குடிக்கும்.

இந்த நரகம் ஷகூத நரகம்0 எனப்படும். அவர் அந்த துன்பத்தினை

அனுபவித்த வண்ணம் அதனிலிருந்து மீளும் வழியை தேடுவார்.

ஆயிரக்கணக்கான வருடங்கள் அதில் துன்பமனுபவித்தன் பின்னர் அதனிலிருந்து அவன் வெளியே வருவான். அவன் அதனிலிருந்து

வெளிவரும் போதே நரகவாசிகள் அவரை ஷகுக்குல0 என கூறப்படும்

நரகத்திற்கு வீசிவிடுவார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள் சில பௌத்த

விகாரைகளில் நரகத்தில் இருக்கும் மரங்கள் என ஒரு வகையான

மரத்தினை செதுக்கியிருப்பார்கள்.

பயத்தினை உண்டாக்க கூறிய கதைகளாகவே நினைத்தோம்.

நான் தர்மத்தினை அறிந்து கொள்ளும் வரை இவை எம்மை

பயமுறுத்துவதற்காக கூறிய கட்டுக்கதைகள் என்றே நினைத்தேன்.

ஆனால் புத்த போதனைகளை படிக்கும் போதுதான் இவை

புத்தபகவானாலேயே மொழியப்பட்டவை என தெரிந்து கொண்டேன்.

அப்போது தான் இவை உண்மையே என உணர்ந்துகொண்டேன்.

புத்தபகவான் இந்த போதனையில் ஷநரகத்தில் கூரிய பெரும்

முற்களையுடைய தீயினால் எரிந்து கொண்டிருக்கும் மரம் இருக்கிறது0

என மொழிந்துள்ளார். அந்த மரத்தில் அடித்து துன்புறுத்தி

ஏறவிடுவார்கள். அதற்கான கர்மவினை முடியும்வரை அந்த கொடிய

துன்பத்தினை அனுபவித்த பின்னர் இவர் அதனிலிருந்து ஒரு காட்டிற்கு

தூக்கி வீசப்படுவார்.

வாள் வனம்.

இப்போது அவர் அந்தக்காட்டினுள் ஓடுகிறார். அந்த வனத்தில் உள்ள

மரங்களிலிருப்பது இருபுறமும் வெட்டும் தன்மை கொண்ட ஒருவகை

இலைகளாகும். அவர் அந்த காட்டில் ஓடும்போது கூர்மையான அந்த

இலைகள் விழுந்து அவரது நாசி ,காதுகள், கை கால்கள், தலை

என்பன வெட்டுப்படும். இவ்வாறாக கைகால்களை அறுத்து கொண்டு

நாசி, காதுகள் என்பன அறுத்து கொண்டும் இவர் அந்த காட்டிலிருந்து

தப்புவதற்காக அங்கும் இங்குமாக வனம் முழுதும் ஓடுவார்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக இவ்வாறு திக்குத்தெரியாமல் அவர்

ஓடிக்கொண்டிருப்பார். இவ்வாறாக ஓடிக்கொண்டிருக்கையில், அவர்

அந்த காட்டில் கங்கையொன்றினை காண்கிறார். இந்த கங்கை

சுடுநீரினை கொண்டதாகும். அவர் அந்த வனத்திலிருந்து தப்புவதற்கு

வேறு வழி இல்லாததால் இந்த ஆற்றினுள் குதித்துவிடுகிறார். இவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் அதில் அவிந்து கொண்டிருக்கும் போது

நரகவாசிகள் அவனை மீனை தூண்டில் போட்டு மேலே எடுப்பது

போல் கொக்கிகளால் இழுத்து மேலே எடுப்பார்கள்.

இரும்பு கொக்கிகள்.

நரக வாசிகள் அவரை இவ்வாறு இழுத்து எடுத்த ஷஉனக்கு என்ன

வேண்டும்0 எனக் கேட்பார்கள். அதற்கு அவர் ஷசுவாமியே! எனக்கு

மிகவும் பசிக்கிறது0. ஷஆ! அப்படியா? இரு0 என்று அவரது வாயை

இரும்பு கொக்கிகளால் பிளந்து தீப்பந்தொன்றினை விடுவார்கள்.

புத்தபகவான் அதனை பின்வருமாறு விபரிக்கிறார். ஷஇந்த தீப்பந்தானது

அவரின் உதடுகள், நா, தொண்டை, மற்றும் குடலனைத்தையும் எரித்துக்

கொண்டு பின்புறமாக வெளியேறும்0 என்று. அவர் வேதனையால்

கத்திகொண்டிருப்பாரே தவிர இறக்கமாட்டார். அனுபவிக்க வேண்டிய

கர்மவினை முடியும் வரை அவருக்கு மீண்டும் மீண்டும் உடம்புகள்

தோன்றிக்கொண்டே இருக்கும்.

தாகத்திற்கு கிடைப்பது உலோக திரவமே..

அதன் பின்னர் மீண்டும் இவரை நரகவாசிகள் இழுத்துக் கொண்டு

போவார்கள். ஷஇப்போது உனக்கு என்ன வேண்டும்0 எனக் கேட்பார்கள்.

அதற்கு அவர் ஷசுவாமியே! எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது0

என்பார். ஷஆ! அப்படியா? இரு! என்று அவரது வாயை இரும்பு

கொக்கிகள் கொண்டு பிளந்து வாயினுள் கொதிக்கின்ற உலோகத்

திரவத்தினை ஊற்றிவிடுவார்கள். இந்த உலோகத்திரவம் அவரின்

உதடுகளை, நாவினை, தொண்டையினை மற்றும் குடலனைத்தையும்

எரித்து கொண்டு பின்புறமாக வெளியேறும். அவரின் தாகம்

இல்லாமல் போகும் வரை இவ்வாறு செய்துகொண்டேயிருப்பார்கள்.

அவர் வேதனையால் கத்திகொண்டிருப்பாரே தவிர இறக்கமாட்டார்.

அனுபவிக்க வேண்டிய கர்மவினை முடியும் வரை அவருக்கு மீண்டும்

மீண்டும் உடம்பு தோன்றிக்கொண்டே இருக்கும். புத்தபகவான் மேலும்

விபரிக்கிறார். ஷஇவ்வனைத்து துன்பங்களை அனுபவித்த பின்னரும்

இந்த மானுடன் வேதனையால் கதறக்கதற நரகவாசிகள் மீண்டும்

அவரை ஆறு பக்கங்களும் இரும்பினால் செய்யப்பட்ட மகா நரகத்திற்குள் வீசிவிடுவார்கள்.

இவற்றை காணும்போது யாருக்குத்தான் இவ்வாறு நினைக்கத் தோன்றாது

பாருங்கள், புத்தபகவான் நரகத்தின் இயம அரசன் நினைக்கும்

எண்ணங்களைக் கூட அறிந்து கொள்கிறார். புத்தபகவான் இவ்வாறு

மொழிகிறார். ஷபுண்ணியமிகு பிக்குகளே, இயம அரசனுக்கு, ஷபாவம்,

இந்த உயிர்கள் பாவங்களை செய்து பல்வேறு விதமாக கர்மத்தின்

படி துன்பங்கள் அனுபவிக்கின்றன. ஐயோ! என்னாலும் இந்த இயம

அரசர் எனும் பதவியிலிருந்து நீங்கி மனித உலகில் பிறந்து சம்மா

சம்புத்தபகவான் ஒருவருடைய தர்மத்தினை செவிமடுத்து உன்னதமான

மோட்சத்தினை அடைய முடியுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும்?0

என்று தோன்றுமாம்.

இவற்றை கூறி எவருக்கும் பயத்தினை உருவாக்க எவ்வித தேவையும் புத்தபகவானுக்கு

இருக்கவில்லை.

புத்தபகவான் ஒரு போதனையிலே பின்வருமாறு அழகாக

மொழிந்துள்ளார். இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் சத்தாழூ

இல்லாதவர்கள் இவற்றை சந்தேகிக்கலாம் என்றே. புத்தபகவான்

போதிக்கிறார், ‘(தங் கோ பன அஹங் பிக்கவே) புண்ணியமிகு

பிக்குகளே! நான் இவ்வாறு கூறும் விடயங்கள்… (நாஞ்ஞஸ்ஸ

சமணஸ்ஸ வா பிராஹ்மனஸ்ஸ வா சுத்வா வதாமி) நான்

யாரிடமும் கேட்டு தெரிந்து கொண்டவை அல்ல. (அபி ச்ச

யதேவ மே சாமஞ்ஞாதங்) நான் சுயமாக உய்த்தறிந்து கொண்ட

விடயங்களேயாகும். (சாமங் திட்டங்) நான் கண்டவையே! (சாமங்

விதிதங்) என்னால் உறுதி செய்யப்பட்டவையே. (தமேவாஹங் வதாமி)

இவற்றையே நான் உங்களுக்கு கூறுகிறேன்…” என்பதாக.

ஞானமுள்ளவர்களுக்கு மாத்திரமே புரியும்.

பாருங்கள், இப்போதனைகளை வாசிக்கும் போது சோவான்ழூ நிலையை அடைவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதனை உணர்ந்து

கொள்ளலாம். நடுநிலையிலிருந்து நீங்கள் உங்களை பற்றி நினைத்து

பாருங்கள். இவ்வாறாக இவ்வனைத்தும் கர்மத்தின் படியே நடக்கும்

என்றால் நாம் இதற்கு முன் நரகத்தில் பிறந்தவர்களா..? இல்லையா?

ஆம். பிறந்தவர்களே. இங்கு கூறப்பட்ட வேதனைகளையும்

அனுபவித்தவர்களே. ஆனால் எமக்கு இவை ஒன்றும் நினைவில்

இல்லை. எப்படியாவது நாம் செய்த புண்ணியத்தினால் மனித உலகில்

மனிதர்களாக பிறந்து விட்டோம். இவ்வனைத்து துன்பங்களிலிருந்தும்

நிங்கி வந்து நாம் மிண்டும் மூடபார்வைகளில் அல்லவா மூழ்கி

இருக்கிறோம்? பாருங்கள் புண்ணியவான்களே! இவ்வாறான

துன்பசாகரத்தில் பயணிக்கும் எமக்கு மூடபார்வைகளினால் உள்ள

பயன் என்ன? இயம அரசனிடம் செல்லுகையில், ஐயோ! இவர்

அறியாமையால் தானே பாவம் செய்தார். இவரை விட்டுவிடுவோம்,

என நினைப்பாரா? இல்லை. நரகத்தில் பிறந்தவரது சடலத்தை,

எரித்தார்களா? புதைத்தார்களா? இல்லை தூக்கி வீசினார்களா? என

பார்ப்பாரா இல்லை. மாறாக நரகத்திற்கு சென்ற போது, பார்க்கும்

ஒரே ஒரு விடயம் மனதினால் நினைத்தவை, உடம்பினால் செய்தவை,

வார்த்தையினால் பேசியவை என்பன தவிர வேறொன்றுமில்லை.

எம் அனைவரினதும் நிம்மதி மோட்சம் ஒன்றே…

இப்படியாக எமது வாழ்வினை பார்க்கும்போது எமது வாழ்விற்கு

தர்மம் ஒன்றுதான் ஒரே புகலிடம். அதனைதவிர வேறொன்றுமில்லை.

ஆம்.. வேறெந்த பாதுகாப்புமில்லை. ஏனெனில் எமது வாழ்வு எவ்வாறு

முடிவுறும் என்பதனை நாமறியோம். நாம் எங்கிருந்து வந்து மனித

உலகில் பிறந்தோம்? என்பதனையும் அறியோம். இருப்பினும் இப்போது

நாம் மனிதர்களாக பிறந்துள்ளோம். எமது மூதாதையர் எமக்கு

மூடபார்வைகளை பழக்கிக் கொடுத்திருந்தனர். நாமும் மூடர்களாக

அவர்களை பின்பற்றியபடி அவற்றினை தலையில் தூக்கியபடி

அவ்வாறே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் எமது அதிஷ்டவசத்தால் எமக்கு புத்தபகவான் ஒருவர்

கிடைத்தார். அவரது உத்தம தர்மம் கிடைத்தது. அந்த தர்மம்

எமக்கு கிடைத்திராவிடில் இன்னும் நாம் குருடர்கள் போலவே வாழ

வேண்டியிருக்கும். நகத்தினால் எடுக்கப்பட்ட மண் போன்று குறைவான எண்ணிக்கையானோரே…

நாம் மரணித்து இன்னுமோர் இடத்தில் பிறக்கும் வரை நாம் அதனை

அறியோம். புத்தபகவான் தன் திருக்கரத்தின் பெருவிரல் நகத்தின் மீது

கொஞ்சம் மண்ணை எடுத்தவாறு இவ்வாறு மொழிந்தார். ஷஷநரகத்தில்

பிறந்த ஒருவர் மீண்டும் மனித உலகில் பிறப்பதாயின் அது எனது

கரத்தின் பெருவிரல் நகத்தின் மீதிருக்கும் சிறிதளவான மண்ணைப்

போன்று மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே00 என்று. அதன்

அர்த்தம் என்ன? நரகத்தில் விழுந்த எவரும் மிண்டும் மனித

உலகிற்கு வருவதில்லை என்பதாகும். இதனையிட்டு புத்தபகவான்

இன்னுமொரு உவமையை மொழிந்துள்ளார். நிங்கள் சிலவேளை

அந்த உவமையை கேட்டிருக்கலாம். அதுதான், ஒரு கண் தெரியாத

கடலாமை ஒன்று ஏர் துவாரத்தினூடாக வானத்தினைப் பார்ப்பது

போன்று மனித வாழ்வினை ஒருவர் பெற்றுக்கொள்வதாயின் அது மிக

அரிதானதே என்பதாகும்.

இறக்கும் அனைவருமே மனித பிறவி கிட்டும் வரை அந்தரத்தில் சுற்றி திரிபவர்களா?

ஷசம்யுக்த நிகாயம்0 எனும் புனித நூலில் ஷஜிக்கல0 எனும்

சூத்திரத்தில் புத்தபகவான், ஷஷஒரு மனிதன் நரகத்தில் பிறந்து

மீண்டும் மனித பிறவியை எய்துவதை விட கடலாமை ஒன்று ஏர்

துவாரத்தின் வழியே வானத்தை பார்ப்பது இலகுவானது” என்று

மொழிந்துள்ளார். எமது உறவினர்கள், நண்பர்கள் எத்னையோ பேர்

மரணித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மீண்டும் மனித பிறவி

கிட்டும் வரை அவகாசத்தில் சுற்றி திரிகிறார்கள், என்றே நாம்

நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்பது அதற்கு

முற்றிலும் மாறுபட்டதாகும். மனித வாழ்வில் அவரது இறுதி மூச்சு

நிற்கும் போதே ஒருவர் ஒரு முட்டையினுள் சென்று பிறக்கிறார் அதற்கு

ஷஅண்டஜ0 சூழலில் (முட்டையினுள் பிறக்கும் பிறவிகளை குறிப்பிடும்

பாளி சொல்) பிறத்தல் எனக்கூறப்படும். அவ்வாறில்லாவிடில் ஒரு

ஈரலிப்பான சூழலில் பிறப்பார். அதாவது மலக்கழிவு குழிகளில்,

ஏனைய உயிர்களின் வயிற்றுக்குடல்களில், பழுதடைந்த உணவுகளில்

சென்று பிறப்பார். அவ்வாறு ஈரலிப்பான சூழலில் பிறப்பதனை ஷசங்சேதஜ பிறப்புகள்0 என புத்தபகவான் குறிப்பிட்டுள்ளார். சிலர் மனித

உலகில் இறுதி மூச்சு நிற்கும் போதே நரகத்தில் பிறந்துவிடுவார்கள்.

சிலர் பிரேத உலகத்தில் பிறந்திருப்பார்கள். சிலர் தேவர்களாக

பிறந்திருப்பார்கள். இதனை ஷஓபபாதிக பிறப்புக்கள்0 என புத்தபகவான்

மொழிந்துள்ளார்.

ஆதி புலப்படாத நீண்ட சன்சாரத்தில் பயணிக்கும் பயணிகளே நாம்!

மனித உலகில் பிறக்கவிருக்கும் ஒருவர் வேண்டுமானால் சில குறுகிய

காலம் அவகாசத்தில் இருக்கக்கூடும். ஆனால் உயிர்கள் ஒவ்வொரு

பிறவிகளில் பயணிப்பதானது மனித வாழ்விலிருந்து நரகத்திற்கு,

அதிலிருந்து மிருக உலகிற்கு, அங்கிருந்து பிரேத (பிசாசு) உலகிற்கு,

அங்கிருந்து சிலநேரம் மீண்டும் மிருகலோகத்தில் பிறக்க நேரிடும்.

இவ்வாறாக சில உயிர்கள் பல கோடி வருடங்கள் நால்வகை

நரகங்களிலே பிறந்து அரிதாகவே மனித உலகிலோ அல்லது

தேவ உலகிலோ பிறக்க முடியும். இவ்வாறு நாம் சம்சாரத்தில்

பயணிப்பதனை அர்த்தமுள்ளதென நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாம் இப்போதே மோட்சமடைய தேவையில்லை! நால்வகை நரகங்களுக்கே போக

வேண்டும்.

இவை தோன்றுவது படிச்சசமுப்பாதத்திலாகும் (காரணகாரிய

செயற்பாட்டினிலாகும்.) இந்த துக்கத்தினை ஒருவர் உய்த்தறிந்தால் அவர்

படிச்சமுப்பாதத்தினை உய்த்தறிந்தவராவார். படிச்சமுப்பாதத்தினை

உய்த்தறிந்தால் அவர் துக்கத்தினை உய்த்தறிந்தவராவார்.

அதனால் தான் புத்தபகவான், ஷதலை தி பற்றி எரியும் போது

அதனை அணைப்பதற்காக எடுக்கும் முயற்சியிலும் பார்க்க ஒருவர்

நாற்பேருண்மைகளை உய்த்துணர முயற்சி எடுக்க வேண்டும்0 என

மொழிந்தார்.

நிங்கள் சிலவேளை கேட்டிருப்பிர்கள். சிலருக்கு, ஷதர்மத்தின் படி

வாழுங்கள்0 எனக்கூறும் போது அவர்கள் ஷஐயோ எங்களுக்கு

நேரமில்லையே! என்று கூறுவார்கள். எங்களுக்கு இன்னும் காலம்

இருக்கிறது. இப்போதே முடியாது, எங்களுக்கு ஓய்வு நேரமே இல்லை. பின்பு எவ்வாறுதான் இவற்றை செய்ய முடியும்? எமக்கு

இப்போதே மோட்சமடைய முடியாது. இன்னும் வேலை இருக்கிறது.

என கூறுபவர்களை நிங்கள் பார்த்திருப்பிர்கள். அப்படியாயின்

புத்தபகவானும் ஷநேரம் கிடைக்கும் போது தர்மத்தினை நிங்கள்

பழக்கப்படுத்துங்கள்0 என கூறியிருக்கலாமே! அவ்வாறில்லாமல்

தலை தீ பற்றி எரியும் போது அதனை அணைப்பதற்காக எடுக்கும்

முயற்சியிலும் பார்க்க ஒருவர் நாற்பேருண்மைகளை உய்த்துணர

முயற்சி எடுக்க வேண்டும், என கூறுவதற்கு காரணம் புத்தபகவான்

இந்த சன்சார பயணத்தின் பயங்கரத்தினை கண்டதனாலேயே ஆகும்.

நால்வகை நரகங்களில் வீழ்வதற்கு சிறு பாவம் போதும்

நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொண்டிராத ஒருவருக்கு

நரகத்தில் பிறப்பதற்கான சந்தர்ப்பமே அதிகம். அதனால்தான் நான்

போதுஜ்ஜனரின் வாழ்வு நீர் குவளைக்கும் மோட்சத்தினை சாட்ஷாத்

(உறுதி) செய்துள்ள ஒரு ஆரிய சீடனுடைய வாழ்வினை கங்கைக்கும்

ஒப்பிட்டு புத்தபகவான் மொழிந்த உவமையை கூறினேன். கங்கையை

போன்ற மனம் படைத்த ஒருவருக்கு தான் ஓரளவேனும் பாதுகாப்பு

கிடைக்கின்றது.

விளக்கேற்றாவிட்டாலும் இரவிற்கு அஞ்சாதீர்கள்

ஒரு சில வேளைகளில் நாம் எமக்கு பாதுகாப்பிற்காக ஏற்படுத்திகொள்ளும்

விடயங்களே எம்மை அச்சத்திற்கும் உள்ளாக்குகின்றன. என்னிடம்

நேற்று ஒருவர், ஷசுவாமியே, நான் வருடக்கணக்காக ஒரு வகையான

விளக்கு பூஜையை செய்கிறேன். நான் இந்த தர்மத்தினை

பின்பற்றும் போது அது ஒரு மூடபார்வைகள் என்பதனை உணர்ந்து

கொண்டேன். இப்போது நான் அதனைவிட்டு நீங்க வேண்டும் என

நினைக்கிறேன். ஆனால் பயமாக இருக்கிறது0 எனக்கூறினார்.

பாருங்கள் , புண்ணியவான்களே! தனக்கு பாதுகாப்பிற்காக செய்த

விடயமே தற்போது பயத்திற்கும் காரணமாகியுள்ளது. பார்த்தீர்களா?

மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதால் இருக்கிற அபாயத்தினை. பலனில்லாத மூட பார்வைகள்.

பாருங்கள், தனக்கு பாதுகாப்பிற்கு செய்து கொண்ட மூடபார்வைகள்

தனக்கே எவ்வாறு பயத்தினை உருவாக்குகிறது, என்பதனை. இந்த

மூடபார்வைகளினால் எத்தனை பேர் தர்மத்தினை உய்த்தறியும்

வாய்ப்பினை இழந்திருப்பார்கள்? இவற்றை செய்தபடி வாழ்ந்து

இறுதியில் மிருகலோகத்திலோ அல்லது பிரேதலோகத்திலோ பிறக்க

வேண்டியதுதான். பிரேதலோகத்தில் பிறந்தாலாவது ஏனையோரது

புண்ணியங்களையாவது ஏற்றுக்கொள்ளலாம். நரகத்தில் பிறந்தால்

அதுவும் இல்லை.

அனைவராலும் புண்ணியத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒருநாள் ஷஜானுஸ்ஸோனி0 எனும் அந்தணன் புத்தபகவானிடம்

ஷபாக்கியமுள்ள பகவானே! இறந்தவர்களுக்கு புண்ணியம் கிட்டுவதற்கு

புண்ணியங்களை வழங்குவார்கள். இறந்த அனைவராலும் இவ்வாறு

வழங்கப்படும் புண்ணியத்தினை பெற்றுகொள்ள முடியுமா?0 என்று

கேட்டார். அதற்கு புத்தபகவான் ஷஇல்லை0 என மொழிந்தார். அத்தோடு

ஷஇறந்தவர் நரகத்தில் பிறந்திருப்பாராயின் அவர் திப்பந்துகளை

சாப்பிட்டு கொண்டிருக்க வேண்டியதுதான். அவரால் புண்ணியத்தினை

பெற முடியாது. இறந்தவர் மிருகலோகத்தில் பிறந்திருப்பாராயின், அவர்

பிறந்த இடத்திற்கு ஏற்றாற்போல் உணவினை உட்கொண்டிருப்பாரே

தவிர புண்ணியத்தினை பெற முடியாது. அதேபோல் இறந்தவர் மனித

உலகில் பிறந்திருப்பாராயின், அந்த உணவினை உட்கொண்டபடி

இருப்பாரே தவிர, அந்த புண்ணியத்தினை பெற முடியாது.;

இறந்தவர் தேவ உலகில் பிறந்திருப்பாராயின் திவ்விய உணவினை

உட்கொண்டபடி திவ்விய சுகத்தில் திளைத்திருப்பாரே அன்றி, அந்த

புண்ணியத்தினை பெறும் தேவை அவருக்கு இருக்காது. இறந்தவர்

பிரேத உலகில் பிறந்தால் மாத்திரம் தான் புண்ணியத்தினை

ஏற்றுக்கொள்ளலாம்0, என மொழிந்தருளினார்.

தனக்கு தானே துணை

இறந்த அனைவரும் பிரேத உலகில் பிறப்பார்கள் என நினைக்கிறீர்களா? ஒரு போதும் இல்லை. ஏனையோரை விடுத்து நாம் எம்மை பற்றி

நினைத்து பார்ப்போம். எம்மோடு வாழும் அனைவரையும் எம்மால்

சுவர்க்கத்தில் பிறக்கச்செய்யவதற்கு முடியாது. ஆனால் நாம் எம்மை

பற்றி நினைத்து எம்மை பாதுகாப்பதற்கு முயற்சி செய்யவேண்டும்.

இப்படித்தான் தன்னை பாதுகாக்க வேண்டும். மும்மணிகள் மிது

அசைக்க முடியாத நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும்.

அப்படிப்பட்டவர்களது பாதுகாப்பினை புத்தபகவான் பின்வறுமாறு

உறுதிபடுத்தியுள்ளார் ஷயே கேசி புத்தங் சரணங் கதாஸே ந தே

கமிஸ்ஸன்தி அபாயங்0 எவராயினும் ஒருவர் புத்தபகவானை முழு

மனதோடு சரணடைவாராயின் ஸ்ரீ சத்தர்மத்தினை சரணடைவாராயின்

ஆரிய சங்கையரை சரணடைவாராயின் அவர் நரகத்தில் பிறக்கமாட்டார்

என்று. அத்தோடு ஷபஹாய மானுஸங் தேஹங்0 மனித தேகத்தினை

நீங்கியதும் ஷதேவகாயா பரிபூரெஸ்ஸந்தி0 தேவ உலகில் பிறப்பார்)

என்று.

மீண்டும் மனிதனாக பிறந்தால்..

நாம் நினைப்பதனை போல் தேவ உலகத்தில் பிறப்பது இலகுவானதல்ல.

மனித உலகில் பிறப்பதுவும் இலகுவானதல்ல. நாம் செய்த ஏதேனும்

புண்ணியத்தின் விளைவாக நாம் மீண்டும் மனிதராக பிறக்கும் போது

மூடபார்வைகள்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தோமென்றால்

அது எமது அழிவேயாகும்.

இருளை அகற்றும் ஒளி

ஒளியையும் இருளையும் ஒன்றாக வைக்க முடியுமா? முடியாது.

ஒளி இருக்கும்போது இருள் அகன்று விடும். இருள் சூழும் போது

ஒளி அகன்றுவிடுகிறது. அதேபோல் மூடநம்பிக்கைகளை கொண்டு

புத்தபகவானை சரணடைய முடியாது. சம்மா திட்டி (தெளிவான

பார்வை) என்றால் அது மட்டும்தான். அதனில் மூடபார்வைகளுக்கு

இடமில்லை. மூடபார்வைகளையும் சம்மா திட்டியையும் கலந்து

கொண்டு இவற்றினை செய்ய முடியாது. ஐயோ! எம்மை விட்டு போகாதீர்கள்.

ஒருவர் இறந்துவிட்டார். அவரை சுற்றி அவரது உறவினர்கள் ஒப்பாரி

வைத்தபடி இருக்கின்றனர். அப்போது நினைவில் புத்தபகவானே

வரவேண்டும். அவரது தர்மமே நினைவில் வரவேண்டும். ஷநான் இப்போது

பிரியமானவர்களின் பிரிவின் துயரத்தினை அல்லவா அனுபவிக்கிறேன்..

இன்னும் எத்தனை பிறப்புக்களுக்கு நான் இதனை அனுபவிக்க

வேண்டும்..? வெகு சிக்கிரமாகவே இந்த சன்சாரத்திலிருந்து மிள

வேண்டும்0 எனும் எண்ணம் நினைவில் வர வேண்டும்.

நிங்கள் மரண விடுகளில் ஷபிரியமானவர்களிடமிருந்து பிரிவது

துன்பத்தினையே தருகிறது. அதனைத்தானே புத்தபகவான் மொழிந்தார்..

அது உண்மையே..அந்த உண்மையை நான் உணருகிறேன்..0

எனக்கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஷஐயோ எங்களை

விட்டு போகாதீர்கள்! இனிமேல் எப்போது வருவீர்கள்? சொல்லுங்கள்!0

என பிணத்தை கட்டிபிடித்து அழுவதையே நாம் பார்த்திருக்கிறோம்.

அதில் உறைந்திருப்பது அஞ்ஞானமே. யதார்த்தத்திலிருந்து

முற்றிலும் மாறுபட்டதாகும். தவறுதலாக சரி திடீரென்று அந்த பிணம்

எழுந்து ஷசரி சரி அழுக வேண்டாம் நான் வந்து விட்டேன்தானே!0

எனக்கூறினால் எப்படியிருக்கும்..? கும்பிட்டுக்கொண்டு திசை தெரியாமல்

ஓடிவிடுவார்கள் ஷஐயோ! நாம் சும்மா தான் சொல்லி பார்த்தோம்0

என கூறுவார்களாயிருக்கும். ஆம்… அப்பேர்பட்டதொரு அழுகையே

மக்களிடம் இருக்கிறது.

ஞாபகப்படுத்தி அழ வேண்டிய விடயங்கள் இதோ..!

தமது வாழ்வினை உய்த்துணர்வோடும் ஞானத்தோடும் பார்க்கும்

ஒருவருக்கு அழ வேண்டுமானால் அழ வேண்டிய விடயங்கள் இவையே!

ஆம் எமது மனதில் தோன்றும் பாவ சிந்தனைகளை நினைத்தே அழ

வேண்டும். பஞ்ச நீவரணங்களைழூ (மன ஒருமைபாட்டினை தடுக்கும்

ஐந்து விடயங்கள்) நினைத்தே அழ வேண்டும். நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொள்ள முடியாததை நினைத்தே அழ வேண்டும். எம்

வாழ்வில் உள்ள பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு இருக்கும் ஒரே

வழி நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொள்வதாகும். அதுவே

எமக்குள்ள ஒரே பாதுகாப்பு, அரவணைப்பு மற்றும் புகலிடமுமாகும்.

இதனை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் இந்த கௌதம

புத்தபகவானது புத்த சாசனத்திலேயே உன்னதமான சத்தியத்தை

உய்த்துணர்ந்து கொள்வோம், என திடமான ஒரு இலட்சியத்தினை

ஏற்படுத்தி கொள்வோம்.

சாது! சாது!! சாது!!!

02.அனுத்தரிய சூத்திரம்

புண்ணியமிக்கவர்களே!

நாம் இன்று கற்பது ஷஅங்குத்தர நிகாயம0; எனும் புனிதமான நூலில்

அடங்கியுள்ள ஒரு போதனையாகும். இந்த போதனையின் பெயர்

ஷஅனுத்தரிய0 சூத்திரமாகும். அதன் அர்த்தம்தான் உன்னத நிலைக்கு

உட்படுத்துவதாகும். புத்தபகவான் அதனை பின்வருமாறு மிக அழகாக

மொழிகிறார். நாம் எமது வாழ்வில் பல்வேறான இடங்களுக்கு செல்கின்றோம்.

குளங்கள், வாவிகள், குன்றுகள், மிருகங்கள் என்பனவற்றை

பார்க்க செல்கின்றோம். திரைப்படங்களை பார்க்க செல்கின்றோம்.

உற்சவங்களை பார்க்க செல்கின்றோம். புதுவருட கொண்டாட்டங்களில்

கூத்துக்களை பார்க்க செல்கின்றோம். ஆடல் பாடல்களை பார்க்க

செல்கின்றோம். இம்மாதிரியாக நாம் பல்வேறுபட்ட விடயங்களை

காணச்செல்கின்றோம்.

இவற்றை பார்ப்பதால் என்ன பயன்?

புத்தபகவான் மொழிகிறார். ஒரு சிலர் மூடபார்வைகள் கொண்ட

துறவிகளை காணச் செல்கின்றனர் . அவர்களை காண செல்வதால்

எமக்கு ஏற்படும் நன்மைகள்தான் என்ன? அதேபோல் ஆடல்

பாடல்களை பார்ப்பதாலோ அல்லது மிருகங்களை பார்ப்பதாலோ

ஏற்படும் நன்மைதான் என்ன? ஒருசிலர் நாடுகளை, நகரங்களை பார்க்கச்

செல்கின்றனர். வேறுசிலர் சமுத்திரங்களை பார்க்கச் செல்கின்றனர்.

புத்தபகவான் மொழிகின்றார். ஷஇவ்வாறு பார்க்கச் செல்பவை

இழிவானவையாகும், சிறுபிள்ளைத்தனமானதாகும்., போதுஜ்ஜனருக்கே

(மும்மணிகளை சரணடையாதவருக்கே) உரித்தானதாகும். (அனரியோ)

உன்னதமற்றவையாகும். (அனத்தசங்ஹிதோ) அர்த்தமற்றதாகும்.0

காதலின் சின்னம் ஒரு கல்லறையா?

இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதொரு கல்லறை இருக்கின்றது.

அதுதான் தாஜ்மஹால். புத்தபூமி வணங்குவதற்கு செல்லும் அநேகமான

எமது நாட்டவரும் அந்த கல்லறையை பார்க்கச் செல்வார்கள்.

நானும் ஒருநாள் அந்த கல்லறையை பார்க்கச் சென்றேன். அங்கு

சென்றவுடனே நான் ஷஇதனை பார்ப்பதால் என்ன பயன்?0 என்று

நினைத்தேன். அன்றிலிருந்து நான் அந்த கல்லறையை பார்ப்பதை

விட்டுவிட்டேன். அன்றிலிருந்து நான் எவரையும் அந்த கல்லறையை

பார்க்கச் செல்லுமாறு கூறியதில்லை. 25,000 அடிமைகளின்

உதவியாலே அந்த கல்லறை கட்டப்பட்டது. அப்பாவி மக்களின் கண்ணீரினாலேயே கட்டப்பட்டது. ஆனால் அதனை பார்வையிடும்

எவருக்கும் இது தோன்றுவதில்லை. அது எதன் சின்னம்? காதலின்

சின்னம். அதேபோல் அந்த கல்லறையை போல் இன்னுமொன்றினை

உருவாக்க கூடாது என அதனை நிர்மாணித்த பொறியியலாளரின்

கண்களும் குருடாக்கப்பட்டன. அப்படியாயின் அது இழிவானதல்லவா?

சிறுபிள்ளைதனமானதல்லவா? ஆம் போதுஜ்ஜனருக்கு உரித்தானதாகும்.

உன்னதமற்றதாகும். திமைகளை விளைவிப்பதாகும். ஆனால்

உலகத்தோரால் வருணிக்கப்படுபவை இவையே! அதற்கு காரணம்தான்

அவற்றை விட சிறந்த எதனையும் அவர்கள் அறிந்திராமையாகும்.

பார்க்க வேண்டுமாயின் பாருங்கள்..

புத்தபகவான், ஷஒருவர் புத்தபகவானையோ அல்லது புத்த

சீடனையோ காணச்சென்றால் அவர் தனது வாழ்விற்கு அர்த்தத்தை

தேடிக்கொள்கிறார். வாழ்விற்கு மிகவும் தேவையானதை தெரிந்து

கொள்கிறார்0 என மொழிந்தார்.

புத்தபகவானது காலத்திலே ஷமிதிலை0 எனும் நகரிலே மிகவும்

செல்வாக்குடைய மதிப்பிற்குரிய ஒரு அந்தணர் இருந்தார். அவரது

பெயர் பிரம்மாயு. அவருக்கு அப்போது 120 வயது நிரம்பியிருந்தது.

அவர் 120 வயது வாழ்ந்ததால் அவருக்கு புத்தபகவானை காணும்

வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறில்லாது அவரது ஆயுட்காலம் எண்பதோ

அல்லது தொண்ணூறாகவோ இருந்திருந்தால், அவருக்கு அந்த

பாக்கியம் கிட்டியிருக்காது.

ஆராய தேவையில்லை. என்னிடம் இருக்கிறது.

இவர் புத்தபகவானை காணச்சென்று பகவானது 32 வகையான

மகா புருட இலட்சிணைகளை ஆராய்ந்தார். புத்தபகவான் தனது 32

வகையான புருட இலட்சணங்களையும் அவருக்கு காணச்செய்தார்.

ஆனாலும் இந்த அந்தணர் புத்தபகவானையே கண்ணிமைக்காது

பார்த்து கொண்டு இருந்தார். அப்போது புத்தபகவான் ‘புண்ணியமிகு பிராம்மணரே! நீங்கள் தேடும் 32 வகையான மகா புருட இலட்சணங்களும்

என்னிடம் இருக்கிறது. அது தொடர்பாக சந்தேகம் கொள்ளாதீர்கள்.0

எனக்கூறினார். அந்த அந்தணரிடம் புத்தபகவான், ‘புண்ணியமிகு

அந்தணரே! உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய அனைத்தினையும்

நான் உய்த்துணர்ந்து கொண்டேன். அழிக்க வேண்டியவற்றை

அழித்துவிட்டேன். மனதிலிருந்து நிக்க வேண்டியவற்றை நிக்கி

விட்டேன். பூரணப்படுத்த வேண்டிய விடயங்கள் அனைத்தினையும்

நான் முழுமையாக பூரணப்படுத்திவிட்டேன். அதனால் நான் ஷபுத்த0

என அறிவீராக” என மொழிந்தார்.

சந்தேகமின்றி தர்மத்தினை செவிமடுங்கள்.

அதன்பிறகு மிண்டும் புத்தபகவான் அந்த அந்தணரை பார்த்து,

ஷபுண்ணியமிகு பிராம்மணரே! இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும்

நன்மையை விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக ஏதாவது

சந்தேகங்கள் இருப்பின் என்னிடம் கேளுங்கள்0 என்றார்.

பிரம்மாயு அந்தணன் கண்களால் காணவேண்டிய உன்னதமானதை

கண்டார். ஆம் மேன்மை பொருந்திய புத்தபகவானை கண்களால்

கண்டார். அவர் புத்தபகவானிடம், ஷஇவ்வுலகில் பிராம்மணன் என

அழைக்கப்படுபவர் யார்? இவ்வுலகில் ஞானத்தினால் பரிபூரணமடைந்தவர்

எனக்கூறப்படுபவர் யார்? இவ்வுலகில் முழுமையடைந்தவராக

கருதப்படுபவர் யார்? புத்த எனப்படுபவர் யார்? முனிவர் எனப்படுபவர்

யார்?0 எனக்கேட்டார்.

சத்தாயுடன் சரணடைகிறேன்

புத்தபகவான் பின்வருமாறு விபரிக்கிறார். ஷ ஒருவருக்கு எல்லைகளற்ற

முற்பிறப்புக்களை காண முடியுமாயின், உயிர்கள் மரணிப்பதனையும்

மரணித்து சுவர்க்க நரகங்களில் பிறப்பதனையும் காண முடியுமாயின்,

மனமாசுகளை முற்றாக அழித்தவராயின், அதேபோல் பிறப்பு, இறப்பு

எனும் சன்சாரத்திலிருந்து முழுமையாக நீங்கியவராயின் அவரே புத்தர்

என அழைக்கப்படுபவராவார்.0 என மொழிந்தார். பிரம்மாயு அந்தணர்,

தான் இப்போது நின்று கொண்டிருப்பது ஒரு புத்த பெருமகன் முன்னிலையில் என்பதனை உணர்ந்தார். உடனே இருகைகூப்பிய

வண்ணம் புத்தபகவானது திருப்பாதங்களில் விழுந்தார். தன்

இருகைகளாலும் பகவானது திருப்பாதங்களை வருடிய வண்ணம்,

ஷசுவாமியே! நான்தான் பிரம்மாயு என அழைக்கப்படும் அந்தணன்0,

ஷசுவாமியே! நான்தான் பிரம்மாயு என அழைக்கப்படும் அந்தணன்0,

ஷசுவாமியே! நான்தான் பிரம்மாயு என அழைக்கப்படும் அந்தணன்0 என

மூன்றுமுறை கூறலானார். புத்தபகவான் அவரை எழச்செய்து உன்னத

தர்மத்தினை போதித்தார். இந்த போதனை முடிவுறும் போது பிரம்மாயு

அந்தணன் சோவான்ழூ நிலையை எய்தி இருந்தார்.

வயது வித்தியாசமில்லை.

பிரம்மாயு அந்தணர் புத்தபகவான் உட்பட பிக்குமார்களுக்கு ஏழு

நாட்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்கினார். சிறிது காலத்திற்கு

பின்னர் அவர் மரணமடைந்தார். பிக்குமார்கள் புத்தபகவானிடம்

அவர் மரணத்தின் பின் எங்கு பிறந்தார் எனக்கேட்டனர். அதற்கு

புத்தபகவான் ஷபிரம்மாயு அந்தணன் மரணிக்கும் போது அநாகாமி

நிலையை அடைந்திருந்தார்0 எனக்கூறினார். தனது 120 வது

வயதில்தான் பிரம்மாயு அந்தணர் தர்மத்தினை உய்த்துணர்ந்து

கொண்டார். புத்தபகவானை கண்டு வெகு நாட்களாகவில்லை.

ஆனால் அவர் உத்தம நிலையை அடைந்தார். கண்களால் காணும்

விடயங்களில் புத்தபகவான் ஒருவரை காண்பதே உன்னதத்தை தரும்.

அவ்வாறில்லாவிடில் புத்தசீடரை காண்பதே உன்னதத்தை தரும்.

இதுதான் தஸ்ஸனானுத்தரியம். அதாவது காண்பதனால் உன்னத

நிலையை அடைதலாகும்.

இருளில் கண்டாலும்..

உன்னதமானதை இருளில் பார்த்தாலும் மேன்மையே! புத்த பகவான்,

ஒருநாள் தர்மத்தினை போதித்து வரும் வேளையில் இரவுப்பொழுதாகி விட்டது. பகவான் வருகைதரும் வழியில் குயவர்களுடைய மட்பாண்டங்கள்

சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் வீடுகள் இருந்தன. அவ்வாறானதொரு

வீட்டில் ஒரு பர்ணசாலை இருந்தது. அதனைப் பார்த்த புத்தபகவான்

அந்த பர்ணசாலையின் உரிமையாளரிடம் ஷபுண்ணியமிக்கவரே! நான்

இன்று இரவு இந்த அறையில் தங்கிக்கொள்ளவா?0 எனக்கேட்டார். அதற்கு

அந்த குயவன், ஷசுவாமியே! தாராளமாக தங்கிக்கொள்ளுங்கள்0 என

அனுமதித்தான். அந்த அறையில் சிறு பாய் துண்டொன்று இருந்தது.

புத்தபகவான் அதனை விரித்து அதில் அமர்ந்திருந்தார்.

புத்தபகவானுக்காக துறவு பூண்ட ஒரு மன்னன் இருந்தார். அவரது

பெயர் ஷபுக்குசாதி0 அவர் மன்னராக இருக்கும் போது ஷஇவ்வுலகில்

புத்தப்பெருமகன் ஒருவர் தோன்றி தர்மத்தினை போதிக்கிறார்0 எனும்

செய்தி கிடைத்தது. இவர் அப்போதே தனது அரச பதவியை துறந்தார்.

தனியாகவே புத்தபகவானுக்காக துறவு பூண்டார். அந்த துறவியும்

புத்தபகவான் அன்றிரவு தங்கியிருந்த பர்ணசாலையின் அருகே

அமைந்துள்ள பாதையில் சென்று கொண்டிருந்தார். இருள் சூழவும்

அவர் எங்காவது தங்குவதற்கு முடிவு செய்தார். அப்போது புத்தபகவான்

தங்கியிருந்த பர்ணசாலையை அவரும் கண்டார். இவரும் அந்த

குயவனிடம் தங்குவதற்கு அனுமதி கேட்டார். அந்த குயவன் ஷநான்

உங்களுக்கு தங்குவதற்கு அனுமதிக்கலாம். ஆனால் நீங்கள் வரும்

முன்பு ஒரு துறவி இங்கு வந்து தங்கினார். அவர் அனுமதித்தால் நீங்கள்

இங்கு தங்கலாம்0 எனக்கூறினார்.

புண்ணியத்தின் சந்திப்பு

புக்குசாதி துறவி புத்தபகவானிடம் ஷபுண்ணியமிக்கவரே! நான் இங்கு

தங்குவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?0 எனக்கேட்டார். புத்தபகவான்

ஷதாராளமாக தங்கிக்கொள்ளுங்கள்0 என அனுமதித்தார். இந்த புக்குசாதி

புத்தபகவானுக்காக துறவுபூண்டு புத்தபகவானை காணச்செல்லும் வழியில்

தான் இந்த சம்பவம் இடம்பெறுகிறது. அக்காலத்தில் மின்விளக்குகள்

இல்லை. இருவரும் இருளில்தான் இருந்தார்கள். அப்போது அந்த

புக்குசாதி துறவி அறையில் ஒருபுறத்தில் பத்மாசன முறையில் அமர்ந்து

அமைதியாக இருந்தார். அப்போது புத்தபகவான் அவருடன் பேசவேண்டும்

என நினைத்து ஷநீங்கள் எங்கு செல்கிறீர்கள்?0 எனக்கேட்டார். ஷநான் சாவத்திய நகரிற்கு செல்கிறேன்0

ஷஅங்கு எதற்காக செல்கிறீர்கள்?0

ஷபுத்தபகவானை காண்பதற்காக0

ஷஇதற்கு முன்பு நீங்கள் அவரை பார்த்திருக்கிறீர்களா?

ஷஇல்லை0

ஷஒருவேளை நீங்கள் அவரை பார்த்தால் இணங்கண்டு கொள்வீர்களா?0

ஷமுடியாது. என்னால் அந்த உத்தமரை இணங்காண முடியாது0

ஷநீங்கள் துறவு பூண்டது யாருக்காக?0

ஷநான் துறவு பூண்டது அந்த உத்தமருக்காகவே0

இர்திக்களைழூ காண்பிக்கவில்லை.

அதன் பின்னர் புத்தபகவான், இவர் தனக்காகவே துறவு பூண்டு

தன்னை காணும் நோக்கில் வந்தவர் என்பதனை அறிந்து கொள்கிறார்.

புத்தபகவான், ஏன் இர்திக்களைழூ செய்வதற்கு முயற்சிக்கவில்லை?

அப்படி பகவான் செய்திருந்தால் அந்த துறவி புத்தபகவான் மீது ஷஇவர்

என்ன ஒரு மாயாவியா?0 என சந்தேகம் கொண்டிருப்பார். பாருங்கள்,

புத்தபகவானின் உய்த்துணர்வு எப்படியானதென்று. அதன் பின்னர்

புத்தபகவான் இவரிடம், ஷஎனது கருத்துக்களை கேட்பதற்கு நீங்கள்

விரும்புகிறீர்களா?0 எனக்கேட்டார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவே

புத்தபகவான் அமிர்த்தத்திலும் இனிய தர்மத்தினை மொழிந்தருளினார்.

அந்த தர்மபோதனை முடிவுறும் போது புக்குசாதி அநாகாமி

நிலையினை எய்தினார். இறுதியில் புத்தபகவானின் திருப்பாதங்களை

வணங்கி, ஷபகவானை அறியாமல் ஒரு தோழனுடன் உரையாடுவதை போல் பேசிவிட்டேன். அறியாமையினாலேயே அவ்வாறு செய்தேன்.0

எனக்கூறினார்.

இருளில் பார்த்தாலும் சரியானதையே பார்த்தார்.

இருளில் கண்டாலும் உன்னதமானதை அல்லவா கண்டார்? பாருங்கள்,

நாம் காணும் விடயங்களில் புத்தபகவான் ஒருவரை காண்பதே எம்மை

உன்னத நிலைக்குட்படுத்தும். அதேபோல் புத்த சீடர் ஒருவரிடமாவது

இந்த தர்மத்தினை செவிமடுக்க கிடைத்தால் அது உன்னத நிலைக்கே

வழிவகுக்கும். அதுவே தஸ்ஸனானுத்தரியம். அதாவது காண்பதனால்

அடைகின்ற உன்னத நிலையாகும்.

மனிதர்கள் புழுக்கள் போலாகிவிட்டனர்.

இரண்டாவது விடயம் தான் சவனானுத்தரியம். அதாவது செவிமடுப்பதால்

அடைகின்ற உன்னத நிலையாகும். நாம் பாடசாலை செல்லும்

பருவத்திலிருந்தே செவிமடுத்து கொண்டிருக்கிறோம். ஆசிரியர்களும்

எமக்கு கற்று தருகிறார்கள். நாமும் கற்றுக்கொள்கிறோம்,

எழுதுகிறோம், இதுவரையிலும் உன்னதமடைந்தோமா? இல்லையே.

அதேபோல் நாம் கதைகளை கேட்கிறோம். பேய் பிசாசுக்கதைகளை

கேட்கிறோம். இன்னும் எத்தனையோ வகையான கதைகளை

கேட்கிறோம். மேன்மையடைந்தோமா? இல்லை. எங்கேயாவது இசை

நிகழ்ச்சிகள் நிகழவிருப்பதாக அறிந்தால் அங்கு ஓடிச்செல்கிறோம்.

மழையில் நனைந்தபடி வெயிலில் காய்ந்தபடி நின்று அவற்றை

கேட்கிறோம். அதனால் உன்னதநிலையை அடைந்தோமா? இல்லை.

அவற்றை கேட்டு இரண்டு துண்டாக வெட்டப்பட்ட புழுக்களை

போல் துள்ளி ஆடுகிறோம். இசை நிகழ்ச்சி இறுதியில் அயர்வும்

சோர்வும் மாத்திரமே எஞ்சுகிறது. முடிவில் வீட்டிற்கு வந்து நன்றாக

கண்னயர்ந்து விடுகிறோம். அப்படியாயின் இவ்வாறு கேட்டதில் நாம்

உன்னதம் அடைந்தோமா? இல்லை.

சிறுபிள்ளைதனமான விடயங்களை கேட்க வேண்டாம்.

புத்தபகவான் மொழிந்தார், ஷஇம்மாதிரியான விடயங்களை கேட்டாலும்

இன்னுமொருவருக்கு கேட்கச்செய்தாலும் அதனால் உன்னதத்தையை பெற முடியாது. அது ஏன்? ஏனெனில் அவ்வாறு கேட்கும்

விடயங்கள் சிறுபிள்ளைதனமானவை, இழிவானவை. போதுஜ்ஜனருக்கு

உரித்தானவை, தீமைகளை விளைவிப்பவை. இவ்வாறானவற்றினை

செவிமடுப்பதால் வாழ்வினை உய்த்துணர முடியாது. வாழ்வினை

உய்த்துணர்ந்து கொள்வதற்கு, முழுமையாக துன்பங்களிலிருந்து

நீங்குவதற்கும் உன்னதம் பொருந்திய தர்மத்தினையே செவிமடுக்க

வேண்டும்0. என்று.

உன்னதமானதை செவிமடுங்கள்.

புத்தபகவான் மொழிந்தார், ஷஒருவர் புத்தபகவானையோ அல்லது புத்த

சீடரையோ காணச்சென்று அவர்களுக்கு செவிசாய்ப்பாராயின், அவர்

உன்னதமானதை அறிந்து கொள்வார்0. என்று. உன்னதமான விடயம்

எது? அதுதான் நாற்பேருண்மைகள். இந்த நாற்பேருண்மைகளை

செவிமடுக்க முடியாவிட்டால் அவர் செவிமடுப்பதன் மூலம்

உன்னதநிலையை அடையமாட்டார். எமக்கு தெரியும் புத்தபகவானது

காலத்தில் எண்ணற்றோர் இந்த தர்மத்தினை செவிமடுத்து உன்னத

நிலையை அடைந்தார்கள0; என்று.

எதிர்பாராத வகையிலான சந்திப்பு

புத்தபகவானது, ஷசாரிபுத்த மகா தேரர்0 மற்றும் ஷமொக்கல்லான மகா

தேரர்0 எனும் உன்னதம் மிகுந்த சீடர்கள் இல்லற வாழ்வின்போது

உபதிஸ்ஸ மற்றும் கோலித என அழைக்கப்பட்டனர் (புத்தபகவானை

சரணடைய முன்பு இவ்விருவரும் தபசிகளாக இருந்தனர்). அக்காலத்தில்

இவர்கள் அநேகமானோரின் கருத்துக்களை கேட்கச்சென்றனர்.

இவர்கள் அதனால் உன்னதநிலையை அடைந்தார்களா? இல்லை.

ஒருநாள் உபதிஸ்ஸ தபசி ஒரு பாதையின் வழியாக பயணிக்கும்

போது அமைதியான சாந்தமான நடத்தையையுடைய ஒரு பிக்குவை

கண்டார். அவர் தான் அரஹத அஸ்ஸஜி; மகா தேரர். அவர்

உணவருந்தி ஓய்வெடுக்கும் நேரம் வரை, உபதிஸ்ஸ தபசி அவரை

பின்தொடர்ந்தார். ஓய்வெடுக்கும் அஸ்ஸஜி தேரரிடம் உபதிஸ்ஸ

தவசி பின்வருமாறு வினவுகிறார். ஷசுவாமியே! உமது சாந்தமான

நடத்தையை கண்டு நான் மகிழ்ச்சிடைகின்றேன். தங்களது குரு யார்?0 என்று. அதற்கு அஸ்ஸஜி தேரர், ஷஎனது குரு சாக்கிய வம்சத்தவர்.

அவர்தான் சித்தார்த்த கௌதம சம்மா சம்புத்தபகவான்0 என்றார்.

ஷஅவர் என்ன போதிக்கிறார்?0

ஷஎனக்கு விபரிக்க தெரியாது. மிகவும் அண்மைய காலத்திலேயே

நான் இந்த புத்த சாசனத்தில் துறவு பூண்டேன்0

ஞானமிருந்தால் ஒரு வார்த்தை கூட போதும்.

அதனை கேட்ட உபதிஸ்ஸ தபசி ஷவிபரமாக கூற முடியாவிடில்

சுருக்கமாகவேனும் கூறுவீராக0 என இரந்து நின்றார். ஷஅப்படியாயின்

நான் சுருக்கமாக கூறும் விடயத்தினை நீங்கள் விபரமாக உணர்ந்து

கொள்வீராக0 என்றார்.

(யே தம்மா ஹேதுப்பவா) காரணங்களால் தோன்றிய ஏதேனும்

இருப்பின் (தேஸங் ஹேது ததாகதோ ஆஹ) அவ்வாறு தோன்றும்

விடயத்தின் காரணத்தை புத்தபகவான் கற்றுத்தந்தார். (தேஸங் ச

யோ நிரோதோ) அக்காரணத்தை நீக்கும் முறையையும் கற்றுத்தந்தார்.

(ஏவங் வாதி மஹா சமணோ) அந்த மகா உத்தமர் இதனையே

கற்றுத்தருகிறார்.

அதனை செவிமடுத்தவுடனேயே, நாற்பேருண்மைகளை தன்னுள்ளே

உய்த்தறிந்து கொள்ளும் பாக்கியம் உபதிஸ்ஸ தபசிக்கு

இருந்தது. அப்படியாயின் நீங்கள் இப்போது செவிமடுப்பதன் மூலம்

உன்னதமடைவதனை உணர்ந்திருப்பீர்கள். இவ்வாறாக உன்னத

நிலையை அடைய வேண்டுமாயின் காணும் விடயங்களோ கேட்கும்

விடயங்களோ சாதாரணமான விடயங்களாக இருக்க முடியாது.

ஆடை மரப்பட்டைகளிலாக இருந்தாலும் ஞானமிருந்தால் பிரகாசிக்கலாம்.

புத்தபகவானது காலத்தில் ஷதாருசீரிய0 என அழைக்கப்படும் ஒருவர்

இருந்தார். மரப்பட்டைகளையே ஆடையாக அணிந்தவர். இதனிலிருந்து

நாம் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்ளலாம். அதுதான்  அணிந்திருக்கும் ஆடை முக்கியமானதல்ல. அதன் நிறம் கருப்பானாலும்

வௌ;ளையானாலும் பரவாயில்லை. ஏன் மரப்பட்டையானாலும் அது

முக்கியமில்லை. முக்கியமானது அணிந்திருக்கும் ஆடையா? இல்லை.

ஞானம் தான் முக்கியம். ஞானமின்றி பொன்னாடையை அணிந்திருந்தாலும்

பயனில்லை. தாருசீரிய என்பவர் பல்லாயிரம் மைல்கள் தொலைவில்

இருந்து புத்தபகவானை காண நடந்தே வந்தார். இவர் புத்தபகவான்

வசித்திருந்த ஆச்சிரமத்திற்கு வரும்போது புத்தபகவான் காலை

உணவிற்காக பிண்டபாதம் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.

ஷதாருசீரிய0 புத்தபகவானை கண்டவுடனேயே ஷநான் தேடும் நபர்

இவர்தான்0 என அடையாளம் கண்டுகொண்டார். புத்தபகவானை

இனங்கண்டு கொண்டு புத்தபகவானிடம் ஷசுவாமியே! நான் வெகு

தொலைவில் இருந்து தங்களை காண வந்துள்ளேன்… எனக்கு

தர்மத்தை உபதேசிப்பீராக0 என்று கூறினார்.

எந்நேரத்தில் மரணம் வருமோ தெரியாது.

புத்தபகவான் ஷபுண்ணியமிக்கவரே! நான் இப்போது உணவிற்காக

பிண்டபாதம் செல்லும் நேரம். இப்போது தர்மம் போதிக்கும் நேரமல்ல0,

என்றார். அப்போது தாருசிரிய, ஷபாக்கியமுள்ள பகவானே! நான்

வெகு தொலைவில் இருந்து வந்தேன். எனது உயிருக்கோ அல்லது

தங்களது உயிருக்கோ ஏதேனும் ஆபத்து கூட ஏற்படலாம். எனவே

அதற்கு முன் தர்மத்தினை போதித்தருளுவீராக!0 என மும்முறை

வேண்டி நின்றார். புத்தபகவான் இவரது பாவ புண்ணியங்களை நன்கு

ஆராய்ந்து பார்த்தார். இவ்வாறு புத்த ஞானத்தினால் ஆராயும் போது

தாருசீரிய என்பவரின் ஆயுள் மிகவும் குறுகிய நேரத்தில் முடிவுறுவதை

உணர்ந்தார். ஆனால் இந்த குறுகிய நேரத்தில் தர்மத்தினை

முழுமையாக உய்த்துணரும் திறமை இவரிடம் இருப்பதனையும்

உணர்ந்தார். அதனால் சிக்கிரமாக தர்மத்தினை உய்த்துணர்ந்து

கொள்ளக்கூடிய வகையில் தர்மத்தினை போதிக்க வேண்டும் என

பகவான் நினைத்தார். நிரந்தரமாக விடுதலை அடைதல்

புத்தபகவான் ஷபுண்ணியமிகு தாருசீரிய! கண்ணால் கண்டால் கண்டது

மாத்திரம்தான். செவிமடுத்தால் செவிமடுத்தது மாத்திரம்தான்.

நுகர்ந்தால் நுகர்ந்தது மாத்திரம்தான். சுவை அனுபவித்தால்

அனுபவித்தது மாத்திரம்தான். உடலின் ஸ்பரிசம் உணர்ந்தால்

உணர்ந்தது மாத்திரம்தான். நினைத்தால் நினைத்தது மாத்திரம்தான்..

நிங்கள் ஏதேனும் ஒன்றினை நினைத்தாலோ, எதிர்பார்த்தாலோ

அல்லது ஆராய்ந்தாலோ அவை அக்கணமே முடிவுறுகிறது.

அங்கு எதும் தோன்றாவிடில் நீங்கள் அங்கில்லை. அவ்விடத்தில்

நீங்கள் இல்லாவிடில் அதேபோல் வேறு இடத்திலும் இல்லாவிடில்

அதற்கிடையிலும் நீங்கள் இல்லை. அப்போது நீங்கள் அனைத்து

துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றவராவீர்கள்,0 என

மொழிந்தருளினார்.

இவ்வாறு கூறப்பட்ட வார்த்தைகளில் புதைந்திருக்கும் ஆழம்

எத்தகையது என்றால் பாஹிய தாருசிரிய அவ்வார்த்தைகளை

கேட்டவுடன் அவ்விடத்திலே நின்று சிந்தனை செய்வதற்கு துவங்கினார்.

புத்தபகவான் என்ன மொழிந்தார் என்று தன் அறிவினால் பகுப்பாய்வு

செய்ய ஆரம்பித்தார். இறுதியில் அவ்விடத்திலேயே உன்னதமான

அரஹத்ழூ நிலையையும் அடைந்தார்.

எந்த விடயமானாலும் அறிவினால் ஆராய வேண்டும்.

நாம் இங்கு வரும் புண்ணியவர்களிடம் விழிப்புணர்வு என்றால் என்ன

என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சுயவுணர்வு என பதிலளித்தார்கள்.

சுயவுணர்வு என்றால் என்ன என கேட்கும்போது விழிப்புணர்வு என

பதிலளித்தார்கள். இதிலிருந்து தெளிவாகும் ஒரு விடயம் தான்

அவர்கள் தர்மத்தினை செவிமடுத்தாலும் அந்த தர்மத்தினைபகுப்பாய்வு செய்வதில்லை என்பதாகும். செவிமடுத்த விடயங்களோடு

திருப்தி அடைந்து விடுகிறார்களே தவிர கேட்ட விடயத்தினை

ஆராய்வு செய்வதில்லை. ஆனால் பாருங்கள், ஞானமுள்ளவரது

வேறுபாட்டினை, சிறு விடயமானாலும் அறிவினால் ஆராய்ந்து

விபரமாக பகுப்பாய்வு செய்து இறுதியில் வாழ்வினையும்

உய்த்துணர்ந்து கொள்கிறார்கள். செவிமடுப்பதன் மூலம்

உன்னதமடையும் முறை இதுவே. இதுதான் சவணானுத்தரியம்.இந்த

புண்ணியவான்களுக்கு நான் இப்போது இரு விடயங்களை கூறினேன்.

முதலாவது தஸ்ஸனானுத்தரியம். இரண்டாவது சவணானுத்தரியம்.

கிடைக்கும் விடயங்களில் உன்னதமானது.

மூன்றாவது இலாபானுத்தரியம். அதாவது தனக்கு கிடைக்கும்

விடயங்களில் உன்னத நிலையை அடைவதாகும். சிலருக்கு

பிள்ளைகள் கிடைப்பார்கள். அவ்வாறு பிள்ளைகள் கிடைத்ததும் ஷஇந்த

உலகிலுள்ள அழகான பெயரை நான் எனது குழந்தைக்கு வைப்பேன்0 என

நினைப்பார்கள். அதன் பிறகு பிறந்த நேரத்தினையும் எடுத்துக்கொண்டு

பெயர் வைப்பதற்கு எழுத்துக்களை அறிந்து கொள்ள அங்கும் இங்கும்

ஓடுவார்கள். அதன் பின்னர் ஜாதகத்தினை தயாரிப்பதற்கு ஓடுவார்கள்.

இவ்வனைத்தினையும் செய்துகொண்டு அரும்பாடுபட்டு வளர்க்கும்

பிள்ளைகளினாலே ஒருநாளைக்கு அந்த பெற்றோர்கள் துயரமும்

அனுபவிப்பார்கள். தாம் அன்புடன் வளர்த்த பிள்ளைகளினாலேயே

அழவும் நேரிடும். சில நேரங்களில் சில தாய்மார்கள் தான் பெற்ற

பிள்ளைகளை நினைத்து துயரம் மேலிட்டு ஷஇந்த பிள்ளைகளை பெற்ற

இந்த வயிறுகூட எனக்கு வேண்டாம்0 எனக்கூறும் சந்தர்ப்பங்களும்

உண்டு. ஆனால் அந்த குழந்தை பிறந்த அக்கணம் அவ்வாறு

நினைக்கவில்லை. பெரும் பாக்கியமாகவே கருதினார்கள்.

சிலருக்கு கணவர்மார்களோ, மனைவிமார்களோ கிடைப்பார்கள்.

அப்போது ஷஎனக்கு தான் இவ்வுலகில் மிகவும் நல்ல கணவன்

கிடைத்திருக்கிறார்.0 ஷஎனக்குதான் மிகவும் நல்ல மனைவி

கிடைத்திருக்கிறாள்0 என்று கூறிக்கொள்வார்கள். ஆனால் திருமணம்

முடிந்து ஓரிரு மாதங்களில் ஒருவருக்கொருவர் முகத்தை காணக்கூட விரும்பாதவர்களாக மாறிவிடுவார்கள். என்னிடம் ஒரு தாய் ஷஐயோ

சுவாமி, நான் என் கணவரை என் கண்கண்ட தெய்வமாகவே

நினைத்து திருமணம் முடித்தேன். ஆனால் நான் அவரால்

மிகவும் துயரங்களை அனுபவித்தேன். எனக்கு இப்போது தான்

புரிகிறது, நான் தெய்வமாக நினைத்த என் கணவர் என்னுடைய

சன்சார பயணத்தில் பின்தொடர்ந்து வந்த ஒரு எதிரி என்பதை0

எனக்கூறினார். பாருங்கள் அவருக்கு கிடைத்ததை. அவருக்கு

அது கிடைக்கும்போது அவ்வாறு நினைக்கவில்லை. அப்போது

அவர் அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். அதேபோல்தான்

வீடு, வாசல், நிலம், வாகனம் என்பனவும் கிடைக்கும். கிடைக்கும்

போது இன்பமாக அதனை ஏற்றுக்கொண்டாலும் போகப்போக அது

பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது. புத்தபகவான் இவ்வாறு

விபரிக்கிறார், ஷஇவ்வாறு கிடைக்கும் விடயங்கள் இழிவானவை,

சிறுபிள்ளைதனமானவை, போதுஜ்ஜனருக்கே உரித்தானதாகும்.

(அனரியோ) உன்னதமற்றவையாகும். (அனத்தசங்ஹிதோ)

அர்த்தமற்றவையாகும்.0 என்று.

சத்தா இல்லாவிடில் ஏழையே!

ஆனால் ஒருவருக்கு சத்தா (மும்மணிகள் மிதான அசைக்க

முடியாத நம்பிக்கை) என்பது கிடைக்குமாயின் அதுதான் கிடைக்கும்

விடயங்களில் உன்னதமானதாகும். எம் நாட்டில் பெரும்பாலானோருக்கு

இந்த சத்தா எனும் விடயம் பொதுவாக இல்லை என்றே கூறலாம்.

பொதுவாக எமது நாட்டில் ஒரு கருத்து உள்ளது. ஷசத்தா கொண்டவன்

முட்டாள், ஞானமுள்ளவன் தந்திரமானவன்0 என்று. அது தவறாகும்.

ஒருபோதும் ஞானமுள்ளவன் தந்திரமானவனல்ல. அதேபோல்

புத்தபகவான் மீது சத்தா (சத்தா) கொண்டவன் முட்டாளுமல்ல. இங்கு

சத்தா எனக்கூறப்படுவது புத்தபகவானது நிகரற்ற ஞானத்தின் மீதான

அசைக்க முடியாத திடகாத்திரமான நம்பிக்கையாகும். இம்மாதிரியான

உறுதியற்ற, நம்பிக்கையற்ற சத்தா இருந்தால் அதுதான் முட்டாள்தனம்.

மர்மமான இரகசிய முறைகள் இல்லை. இங்கு அனைத்துமே வெளிப்படையானவையே!

ஒரு நாள் ஒரு பிள்ளை தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு

பேசினாள். சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்யும் ஒரு

பிள்ளை என்றுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த பிள்ளை

ஷசுவாமியே! எனக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ள வேண்டியதாக

இருக்கிறது. ஆனால் எனக்கு அதற்கு முகங்கொடுக்க பயமாக

இருக்கிறது. வேறு ஏதாவது மந்திர தந்திர மூலமாக என்னை

குணப்படுத்த முடியுமா?0 என்று கேட்டாள். எவ்வாறு நான் மந்திர

தந்திர மூலமாக அந்த பிள்ளையை குணப்படுத்துவது? அதனால் நான்

அந்த பிள்ளைக்கு கூறினேன், ஷமகளே இந்த வாழ்க்கை தொடர்பாக

நீங்கள் சிந்திக்கும் முறை பிழையானது.0 என்று. மீண்டும் இந்த

பிள்ளை என்னிடம் சத்திர சிகிச்சை இல்லாமல் ஏதேனும் மர்ம

முறையில் என்னை குணப்படுத்த முடியாதா? எனக்கேட்டாள். அதற்கு

நான் ஷஎவரும் சத்திர சிகிச்சைகள் செய்வதற்கு விரும்ப மாட்டார்கள்.

சத்திர சிகிச்சைகளின் போது எமது உடலை வெட்டுவார்கள,;

தையல் போடுவார்கள், அதேபோல் மிகுந்த வேதனை அனுபவிக்க

வேண்டும். மகள், நீங்கள் மட்டுமல்ல அனைவரும் சத்திர சிகிச்சைகள்

மேற்கொள்ளாது குணமடையவே விரும்புவார்கள். அவ்வாறு

விரும்புவதால் அப்படி செய்ய முடியாதல்லவா? என்னால் உங்களது

உடலை குணப்படுத்த முடியாது. ஆனால் உள்ளத்தை குணப்படுத்த

முடியும்0 என்று கூறினேன். நான் அவ்வாறு கூறிய விடயங்கள் அந்த

பிள்ளைக்கு புரியவில்லை.

ஞானமுள்ளவர்களின் தெரிவு

அதன் பிறகு நான், ஷ’மகள், வேறு மதத்தை பின்பற்றும்

ஒருவர் உங்களிடம், ஷவாருங்கள் எங்களிடம் நாம் உங்களை

குணப்படுத்துகிறோம்0 என்று கூறினால் அது உங்கள் தேவையை

பூர்த்தி செய்வதாக அமையும் தானே” என்று கேட்டேன். அதற்கு

அந்த பிள்ளை எதுவும் கூறவில்லை. நான் மீண்டும், ஷஅப்படி ஒரு

சந்தர்ப்பம் ஏற்பட்டால் நீங்கள் மதம் மாறுவீர்களா?0 என்று கேட்டேன். நான் இந்த பி;ள்ளைக்கு மீண்டும் இவ்வாறு விபரித்து கூறினேன்.

‘மகள்! தான் பின்பற்றும் சமயத்தினை உடம்பினை அடிப்படையாக

கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டாம். அறிவை பயன்படுத்தி தெரிவு

செய்யுங்கள். எவராயினும் ஷஉங்களது நோயை குணப்படுத்துகிறேன்0

என்று ஏமாற்ற முடியும். அவ்வாறு ஏமாற்றி அவர்களது கட்டுப்பாட்டில்

உங்களை வைத்திருக்கவும் முடியும். ஷநீங்கள் வாக்களித்துள்ளீர்கள்

அந்த உறுதி மொழியை மிறினால் உங்களுக்கு துன்பம் மேல்

துன்பம் தான் வரும்0 என்று கூறி மென்மேலும் அந்த சமயத்திலேயே

உங்களை சிறைப்படுத்தி வைக்கலாம். அதனால் அந்த நிலைக்கு

நீங்கள் ஆளாக வேண்டாம்” என்று கூறினேன். அதை கூறிவிட்டு அந்த

பிள்ளையின் முகவரியை பெற்றுக்கொண்டு பிரித் செய்யப்பட்ட நூல்

ஒன்றினை தபாலில் அனுப்பி வைத்தேன்.

ஏமாற வேண்டாம்.

சத்தா (மும்மணிகள் மிதான அசைக்க முடியாத நம்பிக்கை)

அற்றவர்களின் கதியை பாருங்கள். அவர்கள் தர்மம் எதற்காக

உள்ளது? என்று கூட தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால்

இவர்கள் தம்மை பௌத்தர்களாக அறிமுகப்படுத்தி கொள்பவர்கள்.

இவர்களை எளிதாகவே ஏனையோர்களால் ஏமாற்ற முடியும். பாருங்கள்

கிடைக்கும் விடயங்களில் உன்னதமான விடயம் கிடைக்காவிட்டால்

எவ்வளவு நஷ்டம் என்று.ஒருநாளும் நோயுறாத வண்ணம் இந்த

உடலை வைத்திருக்க முடியுமா? முடியாது. எம்மனைவருக்கும்

கட்டாயம் நோய்கள் ஏற்படும். பெரும்பாலும் அந்த நோய்களின்

காரணமாகவே எமது மரணமும் நிகழும். எம் அனைவருக்குமே

என்றாவது ஒருநாள் குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படும். அந்த

நோய்கள் ஏற்பட்டவுடன் எந்த மருத்துவத்தினாலும் குணப்படுத்த

முடியாமல் போய் அதன் காரணமாகவே மரணித்தும் போகலாம். ஒருவர்

உள்ளம், உள விருத்தி, குணநலன்கள், ஞானம் என்பவை தொடர்பாக

சிந்திக்காமல் இவற்றை தம் வாழ்விலிருந்து தூக்கி வீசிவிட்டு இந்த

உடலை மாத்திரம் கவனத்திற்கொண்டு வாழ்வாராயின் அவருக்கு இந்த சத்தா எனும் அரிய விடயம் கிடைக்காது போய்விடும்.

நோயற்ற வாழ்வு எப்போதும் இருக்குமா?

நாம் இவ்வாறு சிந்திப்போம். ஒருவர் இவ்வாறு கூறுகிறார் ‘வாருங்கள்

நான் உங்களது எல்லா நோய்களையும் குணப்படுத்துகிறேன்” என்று.

பிறந்த உயிர்கள் நோயுறும் என்பதனை உணராத ஞானமற்ற ஒருவர்

அந்த கூற்றுக்கு ஏமாறுவார். ஆனால் உயிரினங்கள் நோயுறும்

இயல்பினை கொண்டுள்ளன. அதனை நிறுத்த முடியாது, என

உணர்ந்த ஒருவருக்கு தடிமன் ஏற்பட்டால் கொத்தமல்லி போன்ற

மூலிகைகளை பயன்படுத்தவும் அதைவிட பெரிய நோய்கள் ஏற்பட்டால்

மருந்து மாத்திரைகளை எடுக்கவும் முடியும். அவ்வாறில்லாமல் மந்திர

தந்திரங்களை தேடியலையமாட்டார்.

நோயுறும் துன்பம் அனைவருக்கும் பொதுவானதே!

புத்தபகவானுக்கு வயிற்றுக் கோளாறு ஒன்று ஏற்பட்டது. ஆனந்த தேரர்

அவர்கள் அதனை ஜீவக வைத்தியரிடம் தெரியப்படுத்தினார். ஜீவக

வைத்தியர் மூன்று நீல அல்லி மலர்க்கட்டுக்களை புத்தபகவானிடம்

கொடுத்தார். கொடுத்து, ஷபாக்கியமுள்ள புத்தபகவானே! இந்த நீல

அல்லி மலர் கொத்துக்களிலிருந்து ஒரு மலர்கொத்தினை ஒரு

முறை நுகர்ந்து பாருங்கள், அப்போது ஒரு முறை வயிற்றுப்போக்கு

ஏற்படும். அதன்பின் இரண்டாவது மலர்கொத்தினை ஒரு முறை

நுகர்ந்து பாருங்கள், அப்போது இரண்டாவது முறையாகவும்

வயிற்றுப்போக்கு ஏற்படும். மீண்டும் மூன்றாவது மலர்கொத்தினை ஒரு

முறை நுகர்ந்து பாருங்கள், அப்போது மூன்றாவது முறையாகவும்

வயிற்றுப்போக்கு ஏற்படும்0 என்று கூறி மூன்று நீல அல்லி மலர்

கொத்துக்களையும் கொடுத்தார். பாருங்கள், புத்தபகவானும்

மூலிகைகளை பயன்படுத்தியுள்ளார்.

கானல் நீருக்கு ஏமாறுவது போல் ஏமாற வேண்டாம்.

சாதாரண மக்கள் மர்ம முறைகளில் நோய்களை குணப்படுத்த

சிந்திக்கும் போது இந்த உடலை அவர்கள் நித்தியமானதாகவே

பார்ப்பார்கள். அவர்களுக்கு, ஷஇந்த உடல் மண்ணாகும் இயல்பினை கொண்டது0 எனும் விடயம் மறந்து போகும். ஷஇந்த உடல் துர்நாற்றம்

வீசி அழிந்து போகும் ஒன்று0 எனும் விடயம் மறந்துவிடும். இந்த

உடலில் இருப்பது மிகவும் அருவருப்பான விடயங்கள் என்பதனை

அறியாதவராகி விடுவாரகள். இறுதியில் அவருக்கு சத்தா எனும்

அரிய விடயம் நிலைக்காமல் போய்விடும். அதற்கு காரணம் என்ன?

அவருக்கு வாழ்க்கை தொடர்பான புரிந்துணர்வு இல்லாமையே ஆகும்.

அதனால் எவராவது நோய்களை குணப்படுத்துவேன், என்று கூறினால்

அவர் பின்னே ஓட வேண்டியதுதான்.

மும்மணிகளை சரணடைந்து இறந்து சுவர்க்கத்தில் பிறப்பேன்.

மனிதர்கள் அறிவற்றவர்களாக இருப்பது அழிவையே உண்டாக்கும்.

முதலாவது இழப்பு தனக்குத்தான் ஏற்படும். அதற்கு காரணம்.

எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஏமாறுவதற்கு தான் தயாராக இருப்பதே.

காரணம்? அறிவற்ற நிலையே. அறிவினை பயன்படுத்துபவருக்கு

தெரியும் ஷஇறந்தாலும் பரவாயில்லை, நான் மும்மணிகளை

சரணடைந்துள்ளேன். அதனால் சுவர்க்கத்திலேயே பிறவி எடுப்பேன்0

என்று. இதுதான் சத்தா (சத்தா) எனும் இலாபம். சத்தா என்பது

உன்னதமான இலாபமாகும். கிடைக்கும் விடயங்களில் உன்னதமானது

புத்தபகவானின் நிகரற்ற ஞானத்தின் மீது கொண்டுள்ள அசைக்க

முடியாத திடகாத்திரமான நம்பிக்கையேயாகும். பாளி மொழியில்

ஷசத்தா0 எனப்படுவது இவ்வகையான சத்தாயாகும். இந்த சத்தாயானது

கண்மூடித்தனமானது அல்ல.

சத்தா (சத்தா) கொண்டவனது அடையாளம் தான் அவர் புத்தபகவானது

எல்லையற்ற ஞானம் சத்தியமே என ஏற்றுக்கொள்வார். அவர் மொழிந்த

தர்மத்தினை செவிமடுக்கும் போது இது உண்மையே என உணர்ந்து

கொள்வார். நான் அண்மையில் ஒருநாள் களுத்துறை பிரதேசத்திற்கு

தர்ம போதனை ஒன்றிற்காக சென்றிருந்தேன். ஒரு பத்திரிக்கையில்

பின்புறத்தில் ஒரு மனிதர் விளக்கொன்றினை கையிலேந்தி கொண்டு

இருக்கும் ஒரு படம் போடப்பட்டிருந்தது. அது ஒரு விந்தையான

விளக்கு ஒன்று என்றும் குறிப்படப்பட்டிருந்தது. அலடினின் அற்புத

விளக்கைத்தான் கையில் வைத்திருந்தாரோ, என்று எனக்கு தெரியாது. மேலும் அந்த படத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

விளக்கை கையிலேந்தி இருக்கும் இந்த படத்தை வீட்டில் ஓரிடத்தில்

பொருத்தி ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் கௌரவத்துடன்

அதன் முன்னின்று ஷஇதிபிசோ பகவா0 (புத்தபகவானது குணங்கள்

கொண்ட செய்யுள்) எனும் செய்யுளை சொல்ல வேண்டும்.0 என்று.

ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமைகளில் அவர் நடத்தும்

பிரசங்கங்களுக்கு செல்கின்றனர். இதனை கண்டவுடன் எனக்கு மிகவும்

கவலையாக இருந்தது. ஏன் இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள?;

என்று எனக்கு புரியவில்லை. கேட்கும் மனிதர்களுக்கு சிந்திக்கும்

திறமை இல்லையென்றே வைத்துக்கொள்வோம். இவ்வாறு இருக்கும்

அப்பாவி மக்களை ஏமாற்றுவது ஒரு மனிதாபிமான காரியமா? இல்லை.

நாம் மாறாக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சிந்திக்கும்

திறமையை வளர்க்க உதவிசெய்ய வேண்டும்.

ஒரு நாளும் முட்டாளாக வேண்டாம்.

நாம் இவ்வாறு நினைத்து பார்ப்போம், ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு

போதுஜ்ஜனர். அதாவது தர்மம் என்றால் என்னவென்பதே அறியாத

மும்மணிகளை அறியாத, வாழ்வின் யதார்த்தத்தை அறியாத ஒருவர்.

நாம் அவரை தர்மத்தில் ஈடுபட வைப்பதற்காக தர்மத்தினை அவர்

இருக்கும் நிலமைக்கு கொண்டு வருவது சிறந்த விடயமா? அவ்வாறு

செய்வதால் இவர் இருக்கும் போதுஜ்ஜனர் எனும் நிலையிலிருந்து

மீளுவாரா? ஒருபோதும் இல்லை. ஆனால் புத்தபகவானது தர்மம்

என்பது ஆரிய தர்மம். அதாவது உன்னத மிகுந்த தர்மம். உன்னத

தர்மமானதால் நாம் போதுஜ்ஜனரை உன்னத நிலைக்கு கொண்டு

வரவே முயற்சி செய்ய வேண்டும். தர்மத்தினை கிழ் நிலைக்கு

தள்ளாது, தர்மத்தின் உயர் தரத்திற்கு ஏற்றபடி மனிதனின் அறிவினை

வளர்க்க வேண்டும். இதுதான் மனிதர்களுக்கு செய்யும் மிகப்பெரிய

கௌரவமாகும். நான் மேற்கூறிய சம்பவத்தில் என்ன நடக்கிறது?

ஒருவர் தன்னை ஒரு உன்னத மிகுந்த ஒருவராகவும், ஏனையோர்

தன்னை சரணடையச் செய்வதற்காக நடித்து, அப்பாவி மக்களின்

அறியாமையை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு அறியாமையால் ஏமாற்றப்படும்போது அவர்கள் ஒருபோதும் அறிவாளிகளாக மாட்டார்கள். இந்த உடலின் மிது மோகம்

கொண்டவர்களாக இருப்பார்களே தவிர எண்சீர் மார்க்கத்தையோ

அல்லது நாற்பேருண்மைகளையோ கொண்ட தர்மத்தினை

அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும்

மன ப் ப ரன்மையும் அவ ர்களுள் தே ரன்ற ரது . ப ரருங்கள்,

இப்படிப்பட்டோருக்கு புத்தபகவானது தர்மம் மீதான சத்தா ஏற்படாது.

அவர் மர்மமான விடயங்களிலேயே சிக்கி விடுவார். அதன் பிறகு

அதிலிருந்து விடுதலை அடைய முடியாது. இவை தவிர வேறு

என்ன நடக்கக்கூடும்?

ஒப்பற்ற புத்த குணங்களையே நினைவுகூர வேண்டும்.

புத்தபகவானது தர்மத்தின் மீது சத்தா இருக்கும் ஒருவர் புத்தபகவான்

அரஹங் குணம் படைத்தவர் என்பதனை ஏற்றுக்கொள்வார். ஷஅரஹங்0

எனப்படுவது மனமாசுகள் (ஆசை, கோபம், அறியாமை) இல்லாத

நிலை என்பதாகும். புத்தபகவான், ஷசம்மாசம்புத்த குணம0; படைத்தவர்.

அதாவது தன் சுயமான ஞானத்தினால் நாற்பேருண்மைகளை

உய்த்தறிந்தார், என்பதனையும் ஏற்றுக்கொள்வார். இவ்வாறு தன்

சுய ஞானத்தினால் உய்த்தறிந்த ஞானத்திற்கேற்ப உன்னதமான

சீலத்துடனும் சமாதியுடனும் தம் வாழ்வை நடத்தியவர.; அதாவது

ஷவிஜ்ஜாசரண சம்பண்ண0 குணம் படைத்தவர். தெளிவான சுந்தரமான

பாதையான எண்சீர் வழியில் பயணித்து பரம சுந்தரமான மோட்சத்தினை

அடைந்தவர். அதாவது ஷசுகத குணம்0 படைத்தவர். புத்தபகவானது

ஒப்பற்ற ஞானத்திற்கு உலகில் மறைந்தவை எதுவுமே இல்லை.

அனைத்து விடயங்களுமே அவர் அறிந்திருந்தார். தேவ உலகங்கள்,

பிரம்ம உலகங்கள், நரகம், பிரேத உலகம், மிருக உலகம் , மனித

உலகம் எனும் அனைத்து உலகங்களினதும் உண்மை நிலையை

உய்த்தறிந்தவர். ஷலோகவிதூ0 எனும் குணம் படைத்தவர். ஏனையோரை

கட்டுப்படுத்துவதில் உன்னதமானவர். ஷஅனுத்தரோ புரிசதம்மசாரதீ0

எனும் குணம் படைத்தவர். தேவர்களதும் மனிதர்களதும் நிகரற்ற

குருவானவர். ஷசத்தா தேவமனுஸ்ஸானங0; எனும் குணம் படைத்தவர்.

மகா கருணை கொண்ட ஷபுத்த0 எனும் குணம் படைத்தவர். உலகிலுள்ள

அனைத்து விதமான உத்தம குணங்களையும் தன் ஒருவருள்ளே கொண்டிருக்க தகுதியானவர.;

ஷபகவா0 எனும் குணம் படைத்தவர். புத்தபகவானது இவ்வனைத்து

குணங்களும் ஒப்பற்றவையாகும். இவ்வாறாக புத்தபகவானது

அனைத்து குணங்களையும் புத்தபகவானது தர்மம் மிது சத்தா

கொண்ட ஒருவர் ஏற்று கொள்வார் . புத்தபகவானது காலத்தில்

ஒரு தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம்

கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு அழகிய

ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அந்த குழந்தைக்கு ஷபத்ர0

எனப்பெயர் சூட்டினர். இந்த பெற்றோர் மிகுந்த பாசத்துடன் இந்த

குழந்தையை வளர்த்தனர். ஒருபோதும் கீழே இறக்கவில்லை. ஒரு நாள்

இந்த பெற்றோர்கள் ஷஎமது இந்த பிள்ளை செல்வத்திற்கு ஒரு போதும்

அழியாத ஒன்றை அளிக்கவேண்டும்0 என நினைத்தனர். நாமென்றால்

எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்துக் கொடுப்போம். அவ்வாறு

திருமணம் முடிப்பவர் மரணிப்பதில்லையா? அழிந்து போவதில்லையா?.

அதனால் இந்த பெற்றோர்கள் அழியாத ஒன்றை கொடுக்க வேண்டும்,

என நினைத்து அவர்களிருவரும் புத்தபகவானிடம் தம் ஒரே மகனை

அழைத்து சென்றார்கள். அழைத்து சென்று புத்தபகவானிடம்

ஷபாக்கியமுள்ள பகவானே! நாம் அரும்பாடுபட்டு இந்த குழந்தை

செல்வத்தை பெற்றெடுத்தோம். இவனுக்கு இப்போது ஏழு வயதாகிறது.

இவன் மிக மிக மென்மையானவன். மிகவும் சுகத்துடனேயே இவனை

வளர்த்தெடுத்தோம். அதனால் நாம் இவனுக்கு ஒருபோதும் அழியாத

ஒன்றை கொடுக்க நினைத்தோம். அதனை பகவானுக்கு மாத்திரம்

தான் செய்ய முடியும். அதனால் பாக்கியமுள்ள பகவானே! எமது

பிள்ளையை தங்களது சிடராக ஏற்றுக்கொள்விராக!0 என்று கூறி

புத்தபகவானிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.

ஏழு வயது குழந்தையும் அரஹத் நிலையை அடைந்தது.

புத்தபகவான் அந்த ஆண் பிள்ளையை ஏற்றுக்கொண்டு ஆனந்த

தேரரிடம் ஷபுண்ணியமிகு ஆனந்த! இந்த குழந்தையை உடனே

துறவு பூணச்செய்யுங்கள். இந்த குழந்தை ஒரு மகா புருஷோத்தமர்

ஆவார்0 எனக் கூறினார். ஆனந்த தேரரும் இந்த குழந்தையை காலை

வேளையில் துறவு பூணச்செய்தார். அன்று நண்பகல் வேளையில் அக்குழந்தை உன்னதமான அரஹத் நிலையை எய்தினார்.

மாலைப்பொழுதில் புத்தபகவான் ஷபுண்ணியமிகு பத்ர! இங்கு

வாருங்கள்0 என அழைத்தார். அதுவே அவரது உபசம்பதாவாகழூ

அமைந்தது. பாருங்கள்! புண்ணியவர்களே! ஏழு வயது குழந்தையின்

திறமையை. புத்தபகவானது ஷஅனுத்தரோ புரிசதம்மசாரதி0 எனும்

குணம் என்பது சிறிய விடயமா? இல்லை. எமக்கு ஏழு வயது

குழந்தை ஒன்றுக்கு சோறு ஒருபிடி ஊட்டிக்கொள்ள முடியாது. அந்த

சோற்றுப்பிடியை ஊட்டுவதற்கு எத்தனை பொய்கள் சொல்லுகிறோம்?

இந்த விடயத்திலிருந்தும் எம்மால் புத்தபகவானது ஷஅனுத்தரோ

புரிசதம்மசாரதி0 எனும் குணத்தின் மகிமையை உணர்ந்து

கொள்ளக்கூடியாதாக இருக்கிறது.

இவை தொடர்பாக சந்தேகம் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.

புத்தபகவான் மிது சத்தா கொண்ட ஒருவருக்கு இவற்றை

கேட்டாலும் சந்தோஷம்தான். அவர் புத்தபகவானது குணங்களை

நினைவுகூருவார். புத்தபகவானது இன்னுமொரு குணம்தான்

ஷசத்தா தேவமனுஸ்ஸானங்0 எனப்படுவது. அதன் பொருள்தான்

புத்தபகவான் அறிவுள்ள தேவர்களினதும் மனிதர்களினதும் பரம

குருவானவர் என்பதாகும். இதனை அறியாத மூட மக்கள் ஷதேவர்களுக்கு

தர்மத்தினை உய்த்துணர முடியாது0 என்று கூறி புத்தபகவானது

உன்னத குணத்தை இழிவுபடுத்துகின்றனர். தேவர்களுக்கு

தர்மத்தினை உய்த்துணர முடியாவிடில் புத்தபகவான் எவ்வாரறு

தேவர்களினதும் மனிதர்களினதும் பரம குருவாவார். சத்தா கொண்டவர்

ஞானமுள்ளவரே. அவர் சரியான முறையில் சிந்திப்பார். புத்தபகவான்

தேவலோகத்திற்கு ஸ்தூல உடலோடும் செல்வார். மனோமய

உடலினாலும் செல்வார். அதனை புத்தபகவானே போதித்துள்ளார்.

புத்தபகவான் சில சமயங்களில் தேவர்களாலும் தம்மை இனங்காண

முடியாதபடி தேவர்கள் மத்தியிலிருந்து, தேவர்களுக்கு தர்மத்தினை

போதிப்பார். மோட்சத்தினை உறுதி செய்த தேவர்கள்.

தேவ ர்கள்த ரன் புத்தபகவ ரனிடம் மங்கல விடயங்களை

கேட்டிருக்கிறார்கள். ஷபராபவ சூத்திரம்0, ஷவசல சூத்திரம்0,

ஷமகா மங்கல சூத்திரம்0 போன்ற பல சூத்திரங்கள் தேவர்கள்

வினவிய வினாக்களுக்கு விடைகளாக போதிக்கப்பட்டவையாகும்.

புத்தபகவானது தர்மம் மனிதர்கள் மத்தியில் மேலோங்க தேவர்கள்

மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். தர்மத்தினை உய்த்துணர்ந்த

எண்ணற்ற தேவர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான தேவர்கள்

புத்தபகவானிடம் வந்து தர்மத்தினை செவிமடுத்து மோட்சத்தினை

உறுதி செய்திருக்கின்றனர்.

ஒரு நாள் ஒரு தேவர் புத்தபகவானிடம் தர்மத்தினை செவிமடுக்க

வந்தார். இவர் புத்தபகவானை கண்டதும் தன்னிலை மறந்தார். தான்

இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதனையும் மறந்துவிட்டார்.

நிலத்தில் நிற்க முயற்சித்தாலும் அவரால் நிற்க முடியவில்லை.

எண்ணையை நிலத்தில் இட்டது போல் நிலத்திற்குள் மூழ்கி விடுகிறார்.

புத்தபகவான் இதனை கண்ணுற்று ஷபுண்ணியமிகு தேவனே! விரைவாக

ஸ்தூல உருவத்தை தோற்றுவித்து கொள்ளுங்கள்.0 என்றார்.

அதனை செவிமடுத்த பின்புதான் அந்த தேவனுக்கு சுய உணர்வு

வந்தது. புத்தபகவானை காணும் போது தேவர்களும் தன்னிலை

மறந்திருக்கிறார்கள்.

முழு உலகிற்கே

பத்தாயிரம் உலக மண்டலத்திற்கும் ஒரே ஒரு புத்தபகவான்தான்

தோன்றுவார். நான்கைந்து புத்தர்மார்கள் ஒரே சமயத்தில் தோற்றம்

பெற மாட்டார்கள். அதனால் இவ்வுலகத்தோருக்கு இருக்கும் மிக

அரிதான அதிஷ்டம் தான் அவ்வாறு தோன்றும் புத்தபகவான் மீது

சத்தா கொள்ளுதல் என்றால் அது மிகையாகாது. சத்தா எனும்

இலாபம் இருக்கும் ஒருவர் புத்தபகவானை நினைவு கூருவார்.

அதுமட்டுமல்ல தர்மத்தினையும் நினைவுகூருவார். முழுமையாக

போதிக்கப்பட்ட இந்த தர்மத்தில் அடங்கியுள்ளது என்ன? நால்வகை

விழிப்புணர்வுகள்ழூ (சத்தாரோ சதிபட்டானோ) நான்கு வகையான வீரியம்ழூ, நான்கு வகைப்பட்ட இத்தி பாதங்கள்ழூ, பஞ்ச இந்திரியம்ழூ,

பஞ்ச பலம்ழூ, எழுவகை போதி அங்கங்கள்ழூ, எண்சீர் மார்க்கம்ழூ.

இவற்றையே புத்தபகவான் முழுமையாக போதித்தார். இந்த

தர்மத்தில் தனது உடம்பினை அசுபமான ஒன்றாக நினைத்து செய்யும்

தியானங்கள், தனது உடலை நால்வகை தாதுக்களாக பார்க்கும்

தாது மனசிகார தியானம், ஒரு பிணத்திற்கு உவமைப்படுத்தி செய்யும்

நவசீவதிக தியானம் போன்ற தியானங்களும் உள்ளடங்குகின்றன.

இரும்பின் துருவே இரும்பை அழிக்கும்.

நம் நாட்டு மக்கள், ஷஐயோ!..இந்த மாதிரியான தியானங்கள் இல்லற

வாழ்வை வாழ்பவர்கள் செய்ய கூடாது. இல்லற வாழ்வினை

கொண்டவர்கள் எப்படி விடுபேறு அடைய முடியும்? இவற்றை

செய்யாதீர்கள். குடும்பங்கள் கலைந்துவிடும், தியானம் செய்யாதீர்கள்

பைத்தியம் பிடிக்கும்0 என்றெல்லாம் கூச்சலிடுகிறார்கள். குடும்பங்கள்

களையுமென்றால், தியானம் செய்து பித்து பிடிக்குமென்றால் அது

முழுமையாக போதிக்கப்பட்ட தர்மமா? இல்லையே. இப்படிப்பட்டவருக்கு

சத்தா எனும் இலாபத்தை உருவாக்கி கொள்ள முடியாது.

இல்லறத்தோர் மட்டுமல்லாது சீவரம் தரித்த சில பிக்குமாரும் இப்படி

கூறுகிறார்கள். இவர்களால் ஒருபோதும் புத்தபகவானது தர்மத்தின்

மீது சத்தாவை ஏற்படுத்தி கொள்ள முடியாது.

இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

நான் ஒருநாள் தர்ம போதனை ஒன்றிற்கு சென்று அசுப தியானத்தை

கற்றுக்கொடுத்தேன். அந்த போதனையின் இறுதியில் ஒருவர் என்னிடம்

வந்து இவ்வாறு கூறினார். ‘சுவாமியே! என்னிடம் ஒருவர் ஷஅசுப

தியானத்தை மட்டும் செய்துவிடாதீர்கள். திருமணம் முடித்த ஒருவர் இந்த

தியானத்தை செய்தால் அந்த குடும்பம் பாழாகிவிடும்.0 என்று கூறினார்.

அப்படியாயின் இந்த தர்மம் பரிபூரணமாக போதிக்கப்பட்டதல்லவே”

என்று. நான் அவரிடம் இவ்வாறு கூறினேன். ஷநீங்கள் கூறுவது மிகவும்

புதுமையான விடயமல்லவா? பத்து பதினைந்து நிமிடம் ஒருவர் கண்களை மூடி அசுப தியானத்தை செய்து குடும்பம்

பாழாகிவிடுமென்றால், உயர்தரம் படிக்கும் பிள்ளைகளை வைத்திய

கல்லூரிக்கு அனுப்பாதீர்கள். ஏன் சிறிது நேரம் கண்களை மூடி அசுப

தியானத்தை செய்வதால் குடும்பம் பாழாகிவிடுமென்றால் அங்கு சென்று

பற்களை சுத்தம் செய்யும் போது வாய் நாற்றம் வீசும், அழுகிய

பிணங்களை வெட்டி பரிசோதனை நடத்த வேண்டும். நோயாளிகளுக்கு

சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். இவற் றையெல்லாம்

கண்களால் பார்த்து குடும்பம் பாழாகிவிடுமென்றால், அனைவரும் துறவு

பூணுவார்கள். அதனால் வைத்திய கல்லூரிகளுக்கு பிள்ளைகளை

அனுப்பாதீர்கள்0 என்று கூறினேன். இந்த உடலின் உண்மை நிலையை

கண்ணால் பார்ப்பதனால் ஒன்றும் இவ்வாழ்க்கை வெறுத்து விடாது.

குறைந்த பட்சத்தில் வைத்தியசாலைகளில் தொழில் புரிவோர் ஷநாமும்

ஒரு நாள் மரணிப்பவர்கள்0 என்பதனை உணர்ந்தாலாவது செனலிங்

கட்டணத்தையாவது குறைப்பார்கள். மருந்துகளும் இவ்வளவு

விலையேறாது. வைத்தியரிடம் ஒரு நோயாளி வந்தால் அந்த

நோயாளியை இரண்டு நிமிடங்கள் கூட பரிசோதனை செய்யவதில்லை.

அடுத்த நோயாளியை பரிசோதிப்பதற்கு முற்படுவார். இந்த அசுபம்

தொடர்பாக அவர் அறிந்திருந்தால் 15 நிமிடமாவது ஒரு நோயாளியை

பரிசோதிப்பார். கருணையுடன் மருந்து கொடுப்பார். வேலை நிறுத்த

போராட்டங்களைச் செய்யமாட்டார். நோயாளிகள் மீது கருணைகொண்டு

அன்புடன் பராமரிக்கும் வைத்தியர்களும் இருக்கிறார்கள். ஆனால்

அவர்கள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையானோரே.

அசுபமான விடயங்கள் அசுபமானவையே!

நாம் அசுப தியானத்தை சற்று நேரம் செய்வதால் வாழ்க்கை

வெறுத்துவிடுமா? இல்லை. நான் அவருக்கு புரியும் படியாகவே

கூறினேன். ஷசற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு முடி, மயிர், நகம்,

பற்கள்….. இவை அழுக்காகும்ஷ என்பதனை நினைவுகூறுவது தகாது

என்றால், நீங்கள் மலசலகூடத்திற்கும் செல்ல வேண்டாம். ஏன் அங்கு

போனதும் தன்னுடைய அசுபமான விடயத்தைதானே காண வேண்டும்.0

என்று. இவ்வாறு கூறியவுடன் தான் அவர் அதர்மத்தின் இயல்புகளை

உணர்ந்து கொண்டார். ஷஆ! அசுப தியானத்தை செய்ய கூடாது0 என்று இவ்வளவு நேரமும் அவர் எதனை தூற்றி பேசினார்?

புத்தபகவானது தர்மத்தினையே! நாம் நினைத்தாலும் இல்லாவிடிலும்

தியானம் செய்தாலும் செய்யாவிடிலும், அது தொடர்பாக பேசினாலும்

இல்லாவிடிலும் அசுபமான விடயம் அசுபமே. இது தான் சத்தியம்.

உடம்பிற்கு ஏமாறாதீர்கள்.

இப்போது நீங்கள் நினைத்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு தொடர்ந்து

நாம் பற்களை துலக்காது இருக்கிறோம் என்று. எம் வாய் நாற்றத்தை

எம்மால் பொறுத்துக்கொள்ள முடியுமா? முடியாது. எவருடனாவது

எம்மால் வாய் திறந்து பேச முடியுமா? முடியாது. மூன்று நாட்களுக்கு

முகம் கழுவாமல், குளிக்காமல் இருந்தால் எவ்வளவு நாற்றமாக

இருக்கும் என்று நினைத்து பாரக்க முடியுமா? நாம் இவ்வாறு நினைத்து

பார்ப்போம். நாம் உண்ணும் உணவில் எமது தலையில் இருக்கும் ஒரு

முடி இருந்ததென்று. அதனை கறிவேப்பிலையை ஒதுக்கி வைப்பதை

போல் பீங்கானில் ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு எம்மால் சாப்பிட

முடியுமா? முடியாது. தர்மம் என்றால் என்னவென்பதை அறியாத

ஒருவர் கூட அப்படிச்செய்ய மாட்டார். இதன் மூலம் நாம் அசுபமானவை

அசுபமானவையே என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. ஆனால்

இந்த உண்மையை உணர முடியாதவர்களால் சத்தாவை (சத்தாவை)

ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

உங்கள் உள்ளத்திலிருக்கும் பகைமை உங்களையே அழிக்கும்.

ஷமாகந்தியா0 அரசிக்கு ஏற்பட்ட நிலையை அறிவிர்கள்தானே?

புத்தபகவான் இவ்வுடலை ஒரு மலம் நிரப்பிய ஒரு மட்பாத்திரத்திற்கு

உவமித்துள்ளார். அது அசத்தியமா? இல்லையே. மாகந்தியா தன்

உடலை பெறுமதியானதாக நினைத்தாள். அதனால் புத்தபகவான்

மீது பகைமை கொண்டாள். ஆனால் அவளது பெற்றோர் சத்தியத்தை

உணர்ந்தனர். அவர்கள் இறுதியில் வீடுபேற்றினையும் அடைந்தனர்.

ஒருவருக்கு சத்தா உருவாக வேண்டுமாயின,; அவருக்கு புத்தபகவான்

மீது, தர்மத்தின் மீது மற்றும் ஆரிய சங்கத்தினர் மீதும் சத்தா

உருவாக வேண்டும். இன்னும் முட்டாள்தனத்திற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லையே!

ஒருநாள் ஒரு தாய் என்னிடம் வந்து , ஷநீங்கள், சன்சாரத்தில் பயணிக்க

வேண்டாம், என்று கூறுகிறிர்கள். அப்படியென்றால் புத்தபகவான்

கூட இந்த சன்சாரத்தில் பயணித்தவர் தானே! அப்படியாயின் நாம்

பயணித்தால் என்ன?0 என்று கேட்டார். பாருங்கள், இந்த கேள்வியை

என்னிடமே வந்து கேட்கிறாரே! நான் ஷசரி நீங்கள் பயணியுங்கள்..0

என்று கூறினேன். அவ்வாறு கூறவும் தேவையில்லை. எப்படியும்

பயணிப்பார்கள். ஷஐயோ! சன்சாரத்தில் பயணிக்க வேண்டாம்0 என

இழுத்து எம்மால் நிறுத்த முடியாதல்லவா? தர்மத்தில் பிறப்பு

இறப்பு எனும் சன்சாரத்தை ஒரு பயங்கரமான வௌ;ளப்பெருக்கிற்கு

உவமைப்படுத்தியே புத்தபகவான் மொழிந்துள்ளார். பயங்கரமான

வௌ;ளத்தில் அடித்து செல்லும் ஒருவர் நாம் தடுத்தாலும்

இல்லாவிடிலும் அடித்தே செல்லப்படுவார்.

சன்சாரத்தில் பயணிப்பது மிக மிக இலகுவானதாகும்.

ஷநீங்கள் சன்சாரத்தில் பயணிக்க வேண்டுமாயின் ஒரு சிறு விடயம்

தான் செய்ய வேண்டும். ஆசை, வெகுளி, வஞ்சனை காமம் என்பன

தோற்றுவிக்கும் எண்ணங்கள் மனதில் எழும் போது அவற்றை தடுக்க

வேண்டாம். பொறாமை, பழிவாங்கும் குணம், குரோதம், அகந்தை,

பகைமை எனும் குணங்களை நன்றாக மனதில் தேக்கி வைத்து

கொண்டு நன்றாக சாப்பிட்டு, குடித்து, நன்றாக நித்திரை செய்து

கொண்டிருங்கள். இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்

உங்களுக்கு சன்சாரத்திலே பயணித்து கொண்டிருக்கலாம்.

எவ்விதமான தடையும் இல்லை0 என்று கூறினேன்.

நாம் எமது வாழ்வில் மேற்கூறிய விடயங்களுக்கு மாறுபட்ட

விடயங்களை தோற்றுவிக்கவே முயற்சி செய்கிறோம். ஷமோட்சத்தினை

நீங்கள் விரும்பாவிட்டால் சன்சாரத்திலேயே பயணிக்க வேண்டுமாயின்

இவற்றை செய்து கொண்டிருங்கள்.0 என்று கூறினேன். பாருங்கள்

சத்தா என்பது கடுகளவேனும் இருக்கிறதா? என்று. அடித்தளம் உறுதியானதாக இருக்க வேண்டும்.

சத்தா என்பது சிறு விடயமல்ல. அது வாழ்வின் மிகப்பெரியதொரு

உந்துதலாகும். அந்த உந்துதல் சத்தாயினாலேயே துவங்குகிறது.

அதுதான் ஷசத்தானுசாரி0 எனப்படுகிறது. சத்தாவை அடிப்படையாக

கொண்டுதான் துக்கத்திலிருந்து மிளலாம். சத்தா இல்லாவிடில்

வாழ்வினை உய்த்துணர முடியாது. சத்தா உள்ளவர் புத்தர் ஒரு

சம்மா சம்புத்தபகவான் என்பதனை அறிவார். மோட்சத்திற்கான இந்த

தர்மத்தினால் நாற்பேருண்மைகளை உய்த்துணரலாம் என்பதனையும்

இந்த தர்மத்தில் பயணித்து மோட்சத்தினை உறுதி செய்த புத்த

சீடர்கள் இருந்தார்கள், என்பதனையும் ஏற்றுக்கொள்வார். அதேபோல்

நானும் இந்த தர்மத்தின் படி வாழ்ந்தால் என்னாலும் அந்த

வீடுபேற்றினை அடைய முடியும் என்பதனையும் ஏற்றுக்கொள்வார்.

இந்த சத்தாவை அடிப்படையாக கொண்டு அவர் தர்மத்தை

ஏற்று அதன்படி தன் வாழ்வினை நடத்துவார். இவ்வாறானவரே

சத்தானுசாரி என அழைக்கப்படுவார். இந்த சத்தானுசாரியானவர்தான்

தம்மானுசாரி எனும் நிலையை அடைவார். அதாவது அவர்

முன்பை விட மென்மேலும் தர்மத்தினை பழக்கப்படுத்துவார்.

அநித்தியமானதை அநித்தியமானதாகவும் துக்கத்தை துக்கமாகவும்

அறிவால் ஆராய்வார். தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க

முடியாத விடயங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க

முடியாதவையாகவே (அநாத்மமாகவே) அறிவால் ஆராய்ந்து

கொண்டிருப்பார். இவ்வாறாக தர்மத்தினை பழக்கப்படு;த்தும் தம்மானுசாரிழூ

நிலையில் உள்ளவரே சோதாபண்ணழூழூ நிலையை அடைவார்.

இவற்றை ஏன் பாராட்டுகிறீர்கள்.

அடுத்த விடயம் தான் சிக்கானுத்தரியம். அதாவது கற்றுக்கொள்ளும்

விடயங்களில் உன்னதத்தை தருவது. நாம் பல விடயங்களை

கற்றுக்கொள்கிறோம். கணனி, தையற்கலை, சமையற்கலை, க ட் டி ட ற் கலை , என் பன க ற் கின் N ற ர ம் . வ ர கனங் களை

திருத்துவதற்கு கற்றுக்கொள்கிறோம், பல்வேறு தொழிநுட்ப

முறைகளை கற்றுக்கொள்கிறோம், விவசாயம் செய்யும் விதங்களை

கற்றுக்கொள்கிறோம், மருந்து, மூலிகைகள் தொடர்பாக

கற்றுக்கொள்கிறோம், ஆனால் இவற்றை கற்பதால் நாம் ஒரு

நாளும் வாழ்வினை உய்த்துணர மாட்டோம். துக்கத்திலிருந்து

விடுதலையடைவும் மாட்டோம்.

சீல, சமாதி, ஞானம் என்பன விருத்தி செய்யும் முறையையே கற்க வேண்டும்

புத்தபகவான், ஷசீலத்தினை பாதுகாக்கும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்,

உளச்சமாதியை வலுப்படுத்தும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்,

ஞானத்தினை விருத்தி செய்யும் முறையினை கற்றுக்கொள்ளுங்கள்0

என மொழிந்துள்ளார். இவைதான் கற்றுக்கொள்ள வேண்டிய

விடயங்கள். புத்தபகவான் தன் சீடர்களுக்கு சீலம், சமாதி, ஞானம்

என்பன விருத்தி செய்யும் முறையை கற்றுக்கொடுத்திருக்கிறார்.

துக்கத்தினை உய்த்துணரல், துக்க தோற்றத்தினை அழித்தல், துக்க

நிவாரணத்தை உறுதி செய்தல், அதற்கான வழியில் பயணித்தல் எனும்

விடயங்களை தெட்டத்தெளிவாக விளக்கி கற்றுக்கொடுத்திருக்கிறார்.

இந்த உத்தம விடயங்களை கற்றுக்கொள்ளுமாரும் கூறியிருக்கிறார்.

இந்த விடயங்களை கற்றுக்கொள்ளுவதால் ஒருவர் உன்னத

நிலையை அடைய முடியும். இது சிக்கானுத்தரியம். வேறு எந்த

விடயங்களை கற்றாலும் அதனால் ஒருவர் உன்னத நிலையை

அடையமாட்டார். எண்சிர் மார்க்கத்தில் தம்மை நெறிப்படுத்துவது

எவ்வாறு என்பதை கற்றுக்கொள்ளும் ஒருவருக்குதான் உன்னத

நிலையை அடைய முடியும். வேறு எந்த முறையிலும் ஒருவர்

உன்னதநிலையை அடைய முடியாது. இந்த கல்விதான் இவ்வுலகில்

கற்கும் கல்வியில் உன்னதமான கல்வி. பாருங்கள் அறிவுள்ள ஒரு

மனிதனுக்கு புத்தபகவானது தர்மத்திலிருந்து எவ்வளவு நன்மைகள்

கிடைக்கிறது என்று.

மரணத்தின் முன் பேராசிரியர்களுக்கும் தோல்வியே!

நான் அறிந்த ஒரு பேராசிரியர் இருந்தார். நன்றாக கல்வி கற்ற ஒருவருக்குதானே பேராசிரியராக முடியும். இந்த பேராசிரியர் வயது

முதிர்ந்து நோயால் பீடிக்கப்பட்டார். அதன் விளைவாக பக்கவாதமும்

ஏற்பட்டது. அவரால் ஓரளவு எழுந்து நிற்கவும் அமரவும் மாத்திரமே

முடியும். நானும் இன்னும் சிலரும் அவரை பார்க்கச் சென்றோம்.

அப்போது நாம் கண்டதோ அவர் மலம் கழித்து அந்த மலத்தை

தன் உடம்பெங்கும் பூசிக்கொண்டது மட்டுமல்லாது தன் வாயிலும்

பூசிக்கொண்டிருக்கும் காட்சியே ஆகும். இந்த காட்சியைக் கண்டு

நான் ஷஇவர் கற்ற கல்வி எவ்வளவு தாழ்மையான விடயமென்று0

நினைத்தேன் இப்போது தன்னுடைய மலத்தையே தன் உடலிலும்

வாயிலும் பூசிக்கொண்டிருக்கும் இவரை யாரேனும் ஷஒரு பேராசிரியர்0

என்று கூறினால் நம்புவார்களா? இல்லை. நாம் கற்கும் கல்வியின்

தரத்தை பார்த்தீர்களா? நான் யோசித்தேன், ஷஇவர் இக்கல்வியை கற்க

முயற்சிக்கும் காலத்தில் சீலம், சமாதி, ஞானம் என்பவற்றை தன்னுள்

வளர்த்து கொள்ள முயற்சித்திருந்தால் ஒருபோதும் இந்நிலையை

அடைந்திருக்கமாட்டார். சுய உணர்வின்றி மரணித்திருக்கவும் மாட்டார்.0

என்று.

பாருங்கள் புண்ணியவான்களே! அவர் மனித உலகில் வாழும்போதே

தன் இறுதி காலத்தில் தன்னுடைய மலத்தையே உண்ணும்

படியாகிவிட்டதென்றால் அவர் கற்ற கல்வி பற்றி என்ன கூறுவது?

ஆனால், அவர் சரியான முறையில் சிலம், சமாதி, ஞானம்

எனும் விடயங்களை தன்னுள்ளே உருவாக்கி கொண்டிருந்தால்,

மிகுந்த அமைதியுடனும் சுயவுணர்வுடனும் தன் இறுதி மூச்சினை

விட்டிருப்பார். அதுதான் சரியான கல்வி. உண்மையான படிப்பறிவு

என்றால் இவைதான்: நாற்பேருண்மைகள் தொடர்பான அறிவு மற்றும்

சீலம், சமாதி, ஞானம் தொடர்பான அறிவு என்பவையாகும். கற்கும்

விடயங்களில் உன்னதமடைவது இந்த விடயங்களை கற்பதனாலேயே!

சேவையினால் உன்னதமடைதல்

அடுத்த விடயம் தான் பாரிசரியானுத்தரியம். அதாவது சேவையினால்

உன்னதநிலையை அடைதலாகும். பாருங்கள், நாமும் சேவைகள் செய்கிறோமல்லவா? அதிகாலை எழும்புகிறோம், தேநீர் அருந்துகிறோம்.

சமைக்கின்றோம். உணவு உண்கின்றோம். மீதி உணவை பொதி

செய்து வேலைத்தளத்திற்கு புறப்படுகின்றோம். நண்பர்களை

சந்தித்தால் ஏனையோரின் குறைகளை பேசுகின்றோம். அலுவல்

வேலைகளை செய்கின்றோம். நேரத்தை பார்க்கின்றோம், பஸ்ஸில்

ஏறுகின்றோம். வழியில் ஏதேனும் ஒரு கடையில் தேவையான

பொருட்களை வாங்குகின்றோம். வீட்டை அடைகின்றோம். சமைத்து

சாப்பிடுகிறோம். பின் தொலைக்காட்சியை பார்த்து உறங்கிவிடுவோம்.

நாம் அணிந்திருக்கும் ஆடைகளை கழுவுவதற்கு கூட எமக்கு

நேரமில்லை. எம் வாழ்க்கை வட்டம் இதுவே. உறங்கும் உறக்கம் கூட

நிம்மதியானதல்ல. ஆயிரம் பிரச்சினைகளை சிந்தித்து கொண்டுத்தான்

நாம் உறங்கவும் செல்கின்றோம். மீண்டும் அடுத்த நாள் அதிகாலையில்

எழுவோம.; இன்னும் சற்று நேரம் வரை தூங்க நினைத்தாலும் அது

முடியாது. வேலைத்தளத்திற்கு சென்றாலும் எப்போது மாலை ஐந்து

மணியாகும் என பார்த்து கொண்டேயிருந்து நேரம் வந்தவுடன்

வேலைத்தளத்திலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு கடையில்

தேவையான மரக்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவோம்.

வந்து மறுநாளைக்கு தேவையான ஆடைகளை தயார் செய்து வைத்து

சமைத்து சாப்பிட்டு உறங்குகிறோம். இப்படித்தான் நாம் வாழும்

வாழ்க்கை அமைந்துள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்தான்

சிறிதளவேனும் ஓய்வு நேரம் கிடைக்கிறது. அன்று தான் அழுக்கான

உடைகளை துவைக்க நேரமிருக்கும். இப்படித்தான் நாம் சேவைகளை

செய்கிறோம். இறுதியில் ஓய்வு பெற்ற பின், தனக்கென்று, தன்

உள்ளக வாழ்வுக்கென்று ஒன்றுமே செய்ய முடியாத நிலை தான்

உருவாகிறது.

இந்த சேவை எதற்காக

இம்மாதிரியாக சேவைகள் செய்வதால் என்ன கிடைகின்றது? இதனால்

ஒருபோதும் தனக்கு ஒன்றுமே கிடைக்காது. புத்தபகவான் ஷஎவராயினும்

ஒருவர் புத்தபகவானுக்கு சேவை புரிவாராயின், புத்த சீடருக்கு சேவை

செய்வாராயின் அதுவே சேவையின் மூலம் உன்னதம் அடையும்

சேவையாகும்.0 என மொழிந்தார். நாம் நினைப்போம் ஒருவர் ஜேத்தவனராமத்திற்கு செல்கிறார். சென்று

அவ்விடத்தினை சுத்தப்படுத்தி ஓரிடத்தில் அமர்கிறார். அவருக்கு

புத்தபகவானது தர்மத்தினை செவிமடுக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

தியானம் செய்யும் வாய்ப்பு கிடைகின்றது. இது ஒருவருக்கு

உன்னதத்தை தரும் சேவையாகும். இந்த சேவையினூடாக ஒருவர்

தன்னை உன்னதப்படுத்தி கொள்ளலாம். புத்தபகவான், ஷஒருவர்

சம்மாசம்புத்தபகவான்ழூ, பச்சேக புத்தபகவான்ழூ;, அரஹத் பிக்குமார்

என்போருக்கு சேவை செய்வாராயின் அவர் அந்த சேiவையினால்

உன்னதமடைய முடியும்0 எனவும் மொழிந்தருளியுள்ளார்.

சேவையினால் நான் தர்மத்தினை கண்டேன்

எம்மனைவருக்கும் ஷகோபிகா0 எனும் உபாசகியின் கதை தெரியும்.

நான்கு பிக்குமார்கள் ஓரிடத்தில் மாரி காலத்தில் தரித்திருந்தார்கள்.

அவர்களுக்கு சேவை புரிவதற்கு கோபிகா எனும் உபாசகி

சென்றிருந்தாள். அவள் அங்கு சென்று அந்த பிக்குமார்களுக்கான

அன்னதானம் என்பன வழங்கி, அவர்களுக்கு சேவை செய்யும் காலத்தில்

ஒரு நாள் அந்த பிக்குமாரிடம் ஷபுண்ணியமிக்க பிக்குமாரே! தாங்கள்

பழக்கப்படுத்தும் தர்மத்தினை எனக்கும் கற்றுத் தருவீர்களாக..0 என

வேண்டி நின்றாள். அப்போது அந்த பிக்குமாரும் அந்த உபாசகிக்கு

தாம் பயிற்சி செய்யும் புத்தபகவானது தர்மத்தினை போதித்தனர்.

அதனை கவனமாக செவிமடுத்த அந்த உபாசகி தினமும் அவற்றை

பயிற்சி செய்தாள். அவள் விட்டிற்கு நடந்து செல்லும் போதும்

தியானத்தை பழக்கப்படுத்தினாள். நாம் இந்த தர்மத்தினை கற்கும்

போது ஷநடை தியானம்0 எனும் தியானத்தை பற்றி கற்றிருக்கிறோம்.

விழிப்புணர்வுடன் நடத்தல் என்பதுவும் ஒரு வகையான தியானமாகும்.

நாம் விழிப்புணர்வுடன் நடத்தல் என்றவுடன் செய்வது என்ன? இடது

கால் – வலது கால் என்று செய்வது, அது சரியா? அவ்வாறில்லாது

(கால்) தூக்குகிறேன். கொண்டு செல்கிறேன். வைக்கின்றேன்

என்று நினைத்து கொண்டு செய்வது சரியா? இம்மாதிரியான நடை

தியானத்தை புத்தபகவான் மொழியவில்லை. புத்த போதனைகளில்

ஷநடக்கும் போது இந்த கண் அநித்தியமானது, இந்த காது அநித்தியமானது, இந்த நாசி அநித்தியமானது , இந்த

நாவு அநித்தியமானது, இந்த உடம்பு அநித்தியமானது , இந்த

மனம் அநித்தியமானதுழூ0 என்பதனை நினைவு கூர்ந்த வண்ணம் நடை

தியானத்தை செய்ய வேண்டும். இவ்வாறாக கோபிகா வீட்டிற்கு சென்று

தர்மத்தினை பழக்கப்படுத்தினாள். அதன் விளைவாக ஒரு நாள்

சோதாபண்ன நிலையை எய்தினாள். பாருங்கள், அவள் சேவையின்

விளைவினை பெற்றுக்கொண்டாள். அவள் சேவைகளை செய்தாள்.

அதன் நற்பேறுகளையும் பெற்றுக்கொண்டாள்

சேவையினூடாக உன்னதமடைதல்.

ஒருவர் புத்தபகவானிடமோ அல்லது புத்தபகவானது சீடரிடமோ சேவை

செய்ய முனைந்தால் அவ்வாறு சேவை செய்யும் காலத்தில் அவருக்கு

தர்மத்தினை செவிமடுக்கும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு செவிமடுத்த

தர்மத்தினை தம் வாழ்விற்கு ஒருங்கிணைத்து வாழ முற்படுவார். அவர்

ஒருநாள் அந்த தர்மத்தினை தமது வாழ்வில் காணும் வாய்ப்பும்

அதனால் ஏற்படும். அவர் சேவையினூடாக உன்னத நிலையை

அடைய முடியும். அதுதான் பாரிசரியானுத்தரியமாகும்

ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்

  1. தஸ்ஸனானுத்தரியம் – காணுவதினூடாக உன்னத நிலையை

அடைதல்

  1. சாவனானுத்தரியம் – கேட்பதினூடாக உன்னத நிலையை

அடைதல்

  1. இலாபானுத்தரியம் – கிடைக்கும் விடயத்தினூடாக உன்னத

நிலையை அடைதல்

  1. சிக்கானுத்தரியம் – கற்றுக்கொள்வதினூடாக உன்னத நிலையை

அடைதல்

  1. பாரிசரியானுத்தரியம் – சேவையுனூடாக உன்னத நிலையை

அடைதல் 06. அனுஸ்ஸதானுத்தரியம் – நினைவுகூருவதனூடாக உன்னத

நிலையை அடைதல்

நினைவுபடுத்துவது உன்னதமானதொன்றையா?

நாம் ஒவ்வொரு விடயங்களை சிந்திக்கிறோம். ஷஇப்போது எனது பெரிய

மகள் அமெரிக்காவில், சின்ன மகள் இங்கிலாந்தில்.. மூன்றாவது

மகள் ஒரு வைத்தியர், எனது மருமகனுக்குதான் அந்த கடை

சொந்தம், சின்ன மகனுக்கு ஒரு கார் இருக்கிறது0. இவ்வாறு நினைத்து

கொண்டிருப்பது நினைவு கூறும் விடயங்களில் உன்னதத்தை தருமா?

இல்லை.

அதேபோல், எனது ஒரு பிள்ளை இந்த சர்வதேச பாடசாலையில்

படிக்கிறாள். பெரிய மகன் பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

சின்ன மகன் கிரிக்கெட் அணியில் இருக்கிறான். என்று நினைவு

கூறுவதெல்லாம் உன்னதத்தை தருமா? இல்லை.

மும்மணிகளை நினைவுகூர வேண்டும்.

புத்தபகவான், ஷநினைவுகூரும் விடயங்களில் புத்தபகவானை நினைவு

கூருவதே உன்னதமானதாகும். நினைவுகூரும் விடயங்களில்

புத்தபகவானது ஆரிய சீடர்களை நினைவு கூறுவதே உன்னதமானதாகும்.0

என மொழிந்தார். அண்மையில் நான் சிங்களத்திற்கு மொழி

பெயர்த்த, புத்தபகவானது ஆரிய சிடர்கள் பற்றி கூறப்படும்

ஷதேர தேரி காதை0 எனும் புத்தகத்தை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

நீங்கள் அந்த புத்தகத்தை வாசித்திருந்தால் அரஹத் பிக்குமாரின்

வாழ்வை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பிர்கள். அவர்கள் தம்

வாழ்வினை எவ்வளவு உன்னதமானதாக வாழ்ந்திருக்கிறார்கள்?

வீரியம், ஞானம், ஒழுக்கம், நற்குணங்கள், பணிவு, என்பனவற்றினால்

உன்னதநிலையை அடைந்தோர்களாகவே அவர்கள் தம் வாழ்வினை

வாழ்ந்திருக்கின்றார்கள். இம்மாதிரியான உத்தமர்கள்தான் இந்த புத்த

சாசனத்தில் இருந்திருக்கிறார்கள். ஒருவருக்கு தாம் சரணடைந்த

மும்மணிகளை நினைவுகூருவதற்கான திறமை இருக்க வேண்டும்.

இந்த திறமை இல்லாவிடில் அது அவருக்கு பெரும் நட்டமேயாகும். அவர் என்னை தூற்றினார்.. அவர் என்னை தோற்கடித்தார்..

அவ்வாறில்லாவிடில் ஷஅவர் என்னை ஏசினார்0 (அக்கொச்சி மங்) ஷஅவர்

என்னை துன்புறுத்தினார0; (அவதி மங்) ஷஅவர் என்னை தோற்கடித்தார்0

(அஜினி மங்) ஷஅவர் என்னுடைய பொருளை அபகரித்துவிட்டார்0

(அஹாசி மே) ஷஅவர் என்னை நிந்தித்தார்.0 என்று தான் நினைத்துக்

கொண்டிருக்க முடியும். விட்டுப்பெண்கள் இவ்வாறு சிந்தித்து

கொண்டு அரிசியை கழுவும் போது என்ன செய்வார்கள்? கழுவும்

அரிசியிலிருந்து ஒரு பிடியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அதனை

மென்றுக்கொண்டு தனியாகவே பேசுவார்கள் ஷ என்னை, அவர்கள்

என்ன அநியாயம் செய்தார்கள்0 ஷஎப்படியெல்லாம் ஏசினார்கள்0 என

சிந்தித்து கொண்டிருப்பார்கள். சாதாரணமாக வீடுகளில் இவ்வாறு

நடப்பதில்லையா? நினைவுகூரும் விடயங்களில் இவற்றை நினைவு

கூறுவதால் மென்மேலும் கோபம்தான் அதிகரிக்கும். துவேசம்,

பழிவாங்கும் எண்ணம், ஒன்றுக்கொன்று எதிராக செய்தல், போன்ற

இழிவான எண்ணங்களே தோன்றும். அவை ஒருபோதும் நன்மையை

விளைவிக்காது. நினைவு கூறுவதாயின் புத்தபகவான் அவரது

தர்மம், புத்தபகவானது ஆரிய சீடர்கள் எனும் மும்மணிகளையே

நினைவுகூருங்கள்.

இவ்வாறு நினையுங்கள்.

புத்தபகவான் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய சிடர்களான

பிக்குமார்களிடம் ஷபுண்ணியமிக்க பிக்குகளே! தேவையற்ற

விடயங்களை நினைத்து கொண்டிருக்க வேண்டாம். சிந்திப்பதாயின்

சிந்தியுங்கள், ஷஇது துக்கம்0 என்று. ஷஇந்த துக்கம் காரணத்தினால்

தோன்றியது0 என்று. ஷஇந்த காரணத்தை அழித்தால் துக்கத்திலிருந்து

விடுதலை பெறலாம0; என்று. சிந்தியுங்கள், ஷஎண்சீர் மார்க்கத்தில்

பயணிப்பதால் இந்த காரணத்தை இல்லாதொழிக்கலாம் என்று0

இவ்வாறு தான் சிந்திக்க வேண்டும். இப்படி சிந்திக்கும் போது மனதில்

தம்மானுஸ்ஸதிழூ எனும் தியானமே விருத்தி அடைகிறது. ஒருவர்

இவ்வாறு நினைவுகூரும்போது அவர் நினைவுகூரும் விடயங்களினூடாக உன்னதத்தையடைகிறார.; நாம் இப்போது ஆறு விடயங்கள் தொடர்பாக

பேசினோம். அவை முறையே தஸ்ஸனானுத்தரியம், சாவனானுத்தரியம்,

இலாபானுத்தரியம், சிக்கானுத்தரியம், பாரிசரியானுத்தரியம், அனுஸ்ஸ

தானுத்தரியம் என்பவையாகும். இந்த ஆறு விடயங்களையுமே எம்முள்

உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

தர்மத்தினை உணர்ந்தவருக்கு!

எம்மால் தற்காலத்தில் புத்தபகவானை நேரடியாக காண முடியாது.

ஆனால் ஒருவருக்கு தர்மத்தினூடாக புத்தபகவானை காணமுடியும்.

புத்தபகவானது திருவாயினால் நேரடியாக எமக்கு தர்மத்தினை கேட்க

முடியாது. ஆனால் அவரது உத்தம தர்மத்தினை இன்றும் எமக்கு

கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்றும் எம்மால் புத்தபகவானது

உத்தம சீடர்கள் மீது சத்தாவை உருவாக்கி கொள்ளவும் முடியும்.

இன்றும் எம்மால் தர்மத்தினை செவிமடுத்து அதன் வழி பயணித்து

வாழ்வினை புனிதமாக்கி கொள்ள முடியும். இன்றும் எம்மால்

புத்தபகவானையும் அவரது சிடர்களையும் நினைவுகூர முடியும்.

அதன் மூலம் எம் அனைவரது வாழ்விலும் உன்னதமான இந்த ஆறு

விடயங்களையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

ஞானமுள்ளவர்களுக்கு இந்த சன்சாரத்திலிருந்து மீள முடியும்.

இந்த விடயங்களை எம்முள் நாம் உருவாக்கி கொள்ளும்போது நாம்

உன்னத நிலையை அடைவோமே அன்றி, ஒருபோதும் இழிவான

நிலைக்கு ஆளாகமாட்டோம். இந்த விடயங்களை நம்முள்

ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், அறிவால் சிந்திக்கும் திறமை

எம்மிடம் இருக்க வேண்டும். அறிவினால் ஆராயும் திறமை எம்மிடம்

இல்லாவிடில் அது எமது துர்ப்பாக்கியமே!

எனவே, ஒவ்வொருவரும் அறிவினால் ஆராயும் திறமை, ஞாபக சக்தி

என்பவற்றை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறுகிய

மனப்பான்மையை நீக்கி பரந்தளவிலான மனதினை ஏற்படுத்திக் கொள்ள

முயற்சிக்க வேண்டும். இவ்விடயங்களை உருவாக்கிக் கொள்ளும்

போது எம்மால் சீக்கிரமாகவே நாற்பேருண்மைகளை உய்த்தறிந்துக் கொள்ள முடியும். எனவே அனைத்து புண்ணியவான்களுக்கும் இந்த

விடயங்களை தத்தமது வாழ்வினுள் உருவாக்கிக் கொண்டு உன்னத

நிலையை அடையவும், இந்த கௌதம புத்த சாசனத்திலேயே

உன்னதமான நாற்பேருண்மைகளை உய்த்தறிந்து கொண்டு பரம

சுந்தரமான மோட்சத்தினை அடையவும் அதிஷ்டம் கிட்ட வேண்டும்.

சாது! சாது!! சாது!!!

அருஞ்சொற்கள்

  1. மும்மணிகள் – புத்தபகவான், ஸ்ரீ சத்தர்மம், ஆரிய மகா

சங்கத்தினர்

  1. போதுஜ்ஜனர் – மும்மணிகளை சரணடையாதவர், தர்மத்தினை

அறியாதவர். வாழ்க்கையின் யதார்த்தத்தை உணராதவர்.

இப்படிப்பட்டவர் தன் தாய் தந்தையை கொலை செய்வதற்கோ

அல்லது அரஹத் பிக்குமாரை கொலை செய்வதற்கோ தயங்கமாட்டார்.

புத்தபகவான் ஒருவரது திருவுடலின் குருதியை திய எண்ணம்

கொண்டு தீண்டத்தயங்காதவர். சங்க பேதம் செய்ய தயங்காதவர்.

இவ்வியல்புகளை கொண்டவராக இருப்பவரே போதுஜ்ஜனர் என

புத்தபகவான் மொழிந்துள்ளார்.

  1. அரஹத் – ஆசை, கோபம், அறியாமை எனும் மனவழுக்குகளையும்

அதன் படிவுகளையும் முற்றாக நீக்கியவர். மீண்டும் பிறவி எடுக்காத

நிலையை எய்தியவர்.

  1. பஞ்ச உபாதானஸ்கந்தங்கள் – உருவம், அனுபவிப்பு, இனங்காணல்,

சிந்தனை, விஞ்ஞானயம் எனும் ஐந்தின் மீது கொண்ட பற்றுதலாகும்.

  1. ஆர்ய தர்மம் – புத்தபகவான் போதித்த தர்மம்

  2. மூட பார்வைகள் (திருஷ்டிக்கள்):

*. தானம் அளிப்பதில் விளைவுகள் இல்லை.

*. பூஜைகளில் விளைவுகள் இல்லை

*. சேவை மற்றும் பணிவிடை செய்வதில்

விளைவுகள் இல்லை.

*.கர்மம் மற்றும் கர்மபலன்கள் இல்லை.

*.இவ்வுலகம் என்று ஒன்றில்லை.

*.மறுவுலகம் என்று ஒன்றில்லை.

*. தாய் என்பவள் விசேடமானவள் அல்ல.

*. தந்தை என்பவர் விசேடமானவர் அல்ல.

*. தாய் தந்தை இல்லாது, முட்டையினுள் பிறவாது, ஈரலிப்பான

இடத்தில் இல்லாது எடுக்கும் பிறவிகள் அதாவது ஓபபாதிக

பிறப்புக்கள் உண்டு என்பதனை நம்பாதிருத்தல்

*.இவ்வுலக உண்மைகளை உய்த்துணர்ந்து ஆசை, கோபம்,

அறியாமை என்பன முற்றாக நீக்கிய, சாதாரண மனித தன்மையை

மிறிய உத்தமர்கள் இருக்கிறார்கள், என்பதனை நம்பாதிருத்தல்.

இவையே புத்தபகவான் மூடபார்வைகளாக மொழிந்தருளியுள்ளார்.

  1. சம்மா திட்டி அல்லது தெளிவான பார்வை.

*.தானம் அளிப்பதில் விளைவுகள் உண்டு

*. பூஜைகளில் விளைவுகள் உண்டு

*.சேவை, பணிவிடை செய்வதில் விளைவுகள் உண்டு

*.கர்மம் மற்றும் கர்மபலன்கள் உண்டு

*.இவ்வுலகம் என்று ஒன்றுள்ளது

*.மறுவுலகம் என்று ஒன்றுள்ளது.

*.தாய் என்பவள் விசேடமானவள்.

*.தந்தை என்பவர் விசேடமானவர்.

*.தாய் தந்தை இல்லாது, முட்டையினுள் பிறவாது, ஈரலிப்பான

இடத்திலில்லாது எடுக்கும் பிறவிகள் உண்டு அதாவது ஓபபாதிக

பிறப்புகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்.

*.இவ்வுலக உண்மைகளை உய்த்துணர்ந்து ஆசை, கோபம்,

அறியாமை என்பன முற்றாக நீக்கிய, மனித தன்மையை மீறிய

உத்தமர்கள் இருக்கிறார்கள் என்பதனை நம்புதல். இவையே

புத்தபகவான் தெளிவான பார்வை அதாவது சம்மா திட்டி0 என

மொழிந்தருளியுள்ளார்.

  1. சதுரார்ய சத்தியங்கள் அதாவது நான்கு பேருண்மைகள்

*. துக்கம் – பிறப்பு, முதுமை, நோயுறல், மரணம், பிரியமற்றவைகளுடன்

பிரியமற்ற நபர்களுடன் சேர்ந்து வாழல், பிரியமானவை மற்றும் பிரியமான

நபர்களை பிரிந்து வாழல், விரும்புபவை கிடைக்காமை, சுருங்கக்கூறின்

இந்த பஞ்ச உபாதானஜ்கந்தங்களும் துக்கத்திற்குரியனவே

*. துக்கத்தின் தோற்றம் : காம தண்ஹா (காமத்தின் மீதான ஆசை)

பவ தண்ஹா : மீண்டும் மீண்டும் பிறப்பதற்கான ஆசை

விபவ தண்ஹா : நிலையாதிருப்பதற்கான ஆசை

*. துக்க நிவாரணம் துக்கத்தி;ன் அழிவு அதாவது மோட்சம்

*. துக்க நிவாரண மார்க்கம். : மோட்சத்தை அடைவதற்கான மார்க்கம்

இதுவே எண்சீர் மார்க்கமாகும்.

  1. நீவரணங்கள் எனப்படுவது மன ஒன்றிணைவை தடுக்கும் ஐந்து

விடயங்கள் என புத்தபகவான் மொழிந்துள்ளார். அவை பின்வறுமாறு:

*. காமச்சந்தம்: கண்களுக்கு சுகம் தரும் உருவங்கள்,

காதிற்கு இனிமையான சப்தங்கள், இனிமையான நறுமணங்கள்,

இனிமையான சுவைகள், இதம் தரும் உடலுணர்வுகள், மனதிற்கு

இனிய எண்ணங்கள் தொடர்பாக சிந்தித்து கொண்டிருத்தல்.

*.வியாபாதம்: மனதிற்கு கோபம் உருவாகும் விடயங்கள்

தொடர்பான சிந்தனைகள்

*.தீனமித்த: சோம்பல் மற்றும் தூக்கக்கலக்கம்.

*.உத்தச்ச குக்குச்ச: மன உழல்வு மற்றும் மன ஒடுக்கம்.

*

.விசிகிச்சா: தர்மம் தொடர்பான சந்தேகம். இவையே

ஐவகையான நீவரணங்களாகும்.

  1. சம்மா சம்புத்தபகவான் – தன் சுய ஞானத்தினாலேயே

துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்க நிவாரணம், துக்க நிவாரண

மார்க்கம் எனும் நாற்பேருண்மைகளை உய்த்தறிந்து மோட்சத்தை

உறுதிசெய்தவர். அஞ்ஞானத்தை முழுமையாகவே இல்லாதொழித்தவர்.

ஆசை, கோபம், அறியாமை என்பன முற்றுமுழுதாக நிக்கியவர்.

இவ்வாறாக தான் உன்னத நிலையை அடைந்து ஏனையவர்களும்

இந்நிலையை அடைவதற்காக தர்மத்தை போதிப்பவர்.

  1. பச்சேக புத்தபகவான் : தன் சுய ஞானத்தினாலேயே துக்கம்,

துக்கத்தின் தோற்றம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் எனும்

நாற்பேருண்மைகளை உய்த்தறிந்து மோட்சத்தை உறுதிசெய்தவர்.

அஞ்ஞானத்தை முழுமையாகவே இல்லாதொழித்தவர். ஆசை, கோபம்,

அறியாமை என்பன முற்றுமுழுதாக நிக்கியவர். ஆனால் இந்த

புத்தர் நிலையை அடைந்த புத்தபகவான் ஒருவரால் ஏனையோருக்கு

தர்மதத்தை உபதேசிக்க முடியாது.

  1. மாரன்: உயிர்களை சன்சாரத்தில் பிணைத்து வைத்திருப்பவன்.

உயிர்கள் மோட்சம் அடைவதை விரும்பாதவன். தடுப்பவன்.

புத்தபகவான் மாரனை பமத்தபந்து என கூறியுள்ளார். அதன் பொருள்

தர்மத்தை பின்பற்ற தாமதமாகியவர்களின் உறவினன் என்பதே.

  1. சோவான் நிலை: வீடுபேற்றின் முதலாவது நிலை. மனதிலுள்ள

சக்காய திட்டி, சீலப்பத பராமாசம், சந்தேகம் என்பவற்றை நீக்கியவர்.

இப்பேற்றினை அடைந்தவர் ஒருபோதும் நால்வகை நரகங்களில்

பிறக்கமாட்டார். அதேபோல் கூடியபட்சம் ஏழு பிறவிகளிலே

மோட்சத்தை அடைந்து விடுவார்.

  1. அநாகாமி: மனமாசுகளில் மூன்றில் இரண்டினை முற்றாக

நீக்கியவர். அதாவது ஆசை மற்றும் கோபத்தினை முழுமையாக

நீக்கியவர். ஒரு பிறவியை பிரம்ம உலகத்தில் பிறந்து அங்கேயே

பரிணிர்வாணம் அடையும் உத்தமர்.

  1. சத்தா – தமிழில் இதனை பக்தி என்று மொழிபெயர்த்தாலும்

இது வெறும் பக்தி மட்டுமல்ல. சத்தஹதி ததாகதஸ்ஸ சம்போதிங்

அதாவது புத்தபகவானது ஞானத்தினை ஏற்றுக்கொள்வதுதான்

தர்மத்தில் சத்தா எனப்படுகிறது. புத்தபகவான் போதித்த தர்மத்தினை

செவிமடுத்து அதனை அறிவினை முதற்கொண்டு ஆராயும், ஒருவரால்

மாத்திரமே இந்த சத்தாவை தன்னுள் தோற்றுவித்து கொள்ள முடியும்.

இவ்வாறாக தோன்றிய சத்தாதான் இந்த தர்மத்தினை பின்பற்றுவதற்கு

பாரிய உந்துதலாக இருக்கிறது.

  1. முழுமையாக, தெளிவான சொற்பிரயோகங்களுடன் பரிபூரணமாக

போதிக்கப்பட்ட இந்த தர்மம் மோட்சத்தையே இலக்காக கொண்டது.

அந்த மோட்சத்தை அடையும் வழிக்கு துணைசெய்யும் 37 விடயங்கள்

உள்ளன. அவை துக்கத்தை அழிப்பதற்கு துணை செய்வனவாகும்

அவை முறையே.பின்வருமாறு

  1. சத்தாரோ சதிபட்டான – நால்வகை விழிப்புணர்வு நிலைகள்

காயானுபஸ்ஸனா – உடல் தொடர்பான விழிப்புணர்வு

வேதனானுபஸ்ஸனா – அனுபவிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு

சித்தானுபஸ்ஸனா – மனம் தொடர்பான விழிப்புணர்வு

தம்மானுபஸ்ஸனா – தர்மம் தொடர்பான விழிப்புணர்வு

  1. நால்வகை வீரியம்

மனதில் இதுவரை பிறவாத அகுசலங்களை

தோற்றுவிக்காதிருப்பதற்கு வீரியம் செய்தல்

மனதில் பிறந்திருக்கும் அகுசலங்களை அழிப்பதற்கு வீரியம்

செய்தல்

மனதில் இதுவரை பிறவாதிருக்கும் குசலங்களை

தோற்றுவிப்பதற்கு வீரியம் செய்தல்

மனதில் பிறந்திருக்கும் குசலங்களை நிலைத்து

வைப்பதற்கு வீரியம் செய்தல்.

  1. இர்தி பாதங்கள்

தர்மத்தை உய்த்துணர்ந்த கொள்வதற்கான…

சந்த – விருப்பம்

சித்த – இலட்சியம்

விரிய – வீரியம் இடைவிடாத முயற்சி

வீமன்சா – அறிவினால் அராய்தல்

  1. பஞ்ச இந்திரியம்

*.சத்தா *. வீரியம் *. சதி *. சமாதி *. பஞ்ஞா

  1. பஞ்ச பலம்

*. சத்தா *. வீரியம் *. சதி *. சமாதி

*.பஞ்ஞா

  1. எழுவகை போதி அங்க தர்மங்கள்

*. சதி (விழிப்புணர்வு) போதியங்கம்

*. தம்மவிசய போதியங்கம்

*. வீரிய போதியங்கம்

*. ப்ரீதி போதியங்கம்

*. பஸ்ஸத்தி போதியங்கம்

*. சமாதி போதியங்கம்

*. உபேக்கா போதியங்கம்

  1. எண்சீர் மார்க்கம்

*.சம்மா திட்டி – நற்பார்வை

*. சம்மா சங்கல்ப்பம் – நற்சிந்தனை

*. சம்மா வாச்சா – நற்பேச்சு

*. சம்மா கம்மந்த – நற்காரியம்

*. சம்மா ஆஜீவ – நல்ல ஜீவனோபாயம்

*. சம்மா வாயாம – நன்முயற்சி

*. சம்மா சதி – நல்ல விழிப்புணர்வு

*. சம்மா சமாதி – நல்ல மன ஒருங்கிணைவு

  1. காமம் :

கண்களுக்கு தெரியும் பிரியமான, விருப்பமான உருவங்கள

காதுகளுக்கு கேட்கும் பிரியமான, விருப்பமான சப்தங்கள்

நாசியினால் உணரப்படும் பிரியமான, விருப்பமான மணங்கள்

நாவினால் சுவைக்கப்படும் பிரியமான, விருப்பமான சுவைகள்

உடலினால் உணரப்படும் பிரியமான, விருப்பமான ஸ்பரிசங்கள்

என்பனவே தர்மத்தில் காமம் எனக்குறிப்பிடப்படுகிறன.

நமோ புத்தாய!