உண்மையான மனைவி யர்?
புத்தபகவான் இவ்வாறு மொழிந்தார். ‘இவ்வுலகத்தில் வாழும் அனைத்து வகையான சமூகங்களிலும் இவ் ஏழு வகையான மனைவியரை காணலாம். கொடூர மனைவி, திருட்டு குணம் கொண்ட மனைவி மற்றும் எஜமானியை போன்ற மனைவி இம்மூவருமே துஸ்சீலர்களாக (ஒழுக்கமற்றவர்களாக), துர்க்குணம் படைத்தவர்களாக, இரக்கமற்றவர்களாக வாழ்ந்து மரணத்தின் பின் நரகத்திலே பிறப்பார்கள். அதேபோல் தாயைபோன்ற மனைவி, சகோதரியை போன்ற மனைவி, தோழியை போன்ற மனைவி, பணிப்பெண்ணை போன்ற மனைவி இவர்கள் நால்வருமே சீலம் மிக்கவர்களாக, கற்புநெறி தவறாதவர்களாக வாழ்ந்து மரணித்த பின்னர் சுகம் நிறைந்த சுவர்க்கத்திலே பிறவி எடுப்பர்.’ இதனிலிருந்து நாம் தெளிவாக ஒன்றினை அறிந்து கொள்ளலாம். அதுதான் ஒரு குடும்பத்தில் இன்பம் நிலைக்க வேண்டுமாயின், இல்லற வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமாயின் அந்த வீட்டில் வாழும் மனைவியின் செயற்பாடுகளிலேயே அது தங்கியுள்ளது என்பதாகும். The Best Wife