Free Buddhist Dhamma Book in tamil 

தர்மச்சுவை ஊற்றேடுக்கும் தம்மபதம் (சித்த பகுதி)

01,02 செய்யுள்கள்

மேகிய தேரரின் கதை

ஞானமுள்ளவர் தன் மனதை செம்மைபடுத்துவார்.

புண்ணியமிக்கவர்களே, இந்த மனம் மிகவும் அற்புதமானது.

இவ்வுலகில் உள்ள அனைவருமே இந்த மனதி;ற்குத்தான்

வசப்பட்டுள்ளனர். மனம்தான் அனைவரையும் இயங்கச்செய்கிறது.

அனைத்தையும் இயங்கச் செய்வதற்கான சக்தி மனதில் இருந்தே

பிறப்பிக்கப்படுகிறது. புத்த பகவான் இந்த உள்ளம் தொடர்பாக

பின்வருமாறு மொழிந்துள்ளார். ஷஷபுண்ணியமிகு பிக்குகளே,

கட்டுப்படுத்தாவிடில், பாதுகாக்காவிடில், அடக்கிக்கொள்ளாவிடில்

மனதை தவிர பெரும் ஆபத்தினை விளைவிக்கும் வேறு எதனையும்

நான் காணவில்லை00. அப்படியாயின் இந்த மனதை தர்மத்தின் பால்

ஈடுபடுத்தாமல் இருப்பது, மிகப்பெரிய ஆபத்து என்பதனை மேலும்

விளக்கி கூறத்தேவையில்லை. புத்த பகவான் தன் புத்த போதனையாக

சுட்டிக்காட்டும் இந்த தம்மபத செய்யுளை அவதானியுங்கள்.

சப்ப பாபஸ்ஸ அகரணங் – குசலஸ்ஸ உபசம்பதா

சசித்த பரியோதபனங் – ஏதங் புத்தான சாசனங்

ஷஷசகல பாவங்களையும் செய்யாதிருத்தல். குசல தர்மங்களை*

செய்தல் மற்றும் தம் மனதினை தூய்மைபடுத்தல் எனும் இவையே

அனைத்து புத்தர்மார்களதும் போதனையாகும்”

அப்படியாயின் புத்த பகவானது புத்த சாசனத்தில் அநேகமானவர்கள்

தமது கட்டுப்படாத மனதை கட்டுப்படுத்துவதற்காகவே துறவு பூண்டனர்.

பாதுகாக்க முடியாத மனதை பாதுகாத்துக் கொள்வதற்கே துறவு

பூண்டனர். பெரும்பாலான தேரர்கள் இந்த கடினமான சவாலுக்கு

வெற்றிகரமாக முகங்கொடுத்தனர். மனதை வெற்றிக்கொள்வதற்காக

*. நிராசை, கோபமின்மை, நல்லறிவு என்பனவற்றால், சிந்தனையை

அடிப்படையாகக் கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல்

என்பன குசலம் எனப்படும்.

தர்ம பாதையில் பயணிக்கும்போது வரும் தடைகளையும்

அத்தடைகளை எவ்வாறு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டும்

என்பதனையும் இந்த மேகிய தேரரின் கதை மூலம் நாம் நன்கு

உணரலாம்.

புத்த பகவான் ஒரு சமயத்தில் ஷவாலிகா0 எனும் நகரருகில்

அமைந்திருந்த ஷவாலிகா0 எனும் பெயர்கொண்ட பர்வதத்திலே

தரித்திருந்தார். அக்காலத்தில் புத்த பகவானுக்கு ஷமேகிய0 எனும்

பெயர்கொண்ட ஒரு தேரரே பணிவிடை செய்து வந்தார். ஒருநாள் காலை

மேகிய தேரர் ஜந்து எனும் கிராமத்திற்கு பிண்டபாதம்ழூ சென்றார்.

அவர் இவ்வாறாக உணவிற்காக செல்லும் போது ஷகிமிகாலா0 எனும்

பெயர் கொண்ட ஒரு நதியோரமாக செல்ல நேர்ந்தது. அந்த நதிக்கரை

மிகவும் அழகானது. அழகிய வௌ;ளை நிற மணல் மேடுகளுடன்

கூடிய அந்த நதியின் இரு கரை ஓரங்களிலும் மாஞ்சோலைகள்

இருந்தன. இந்த நதிக்கரை ஓரத்தில் அவர் சற்று நின்று சுற்றும்

முற்றும் பார்த்தார். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மனம் உற்சாகமடைந்தது. ‘ஆஹா… மிகவும் அழகான இடம். இந்த

மாஞ்சோலையின் குளிர்ச்சி மிகுந்த நிழலை கொண்ட இந்த இடம்

மிகவும் அற்புதமானது. தர்மத்தை பின்பற்றும், தியானங்கள் செய்யும்

ஒருவருக்கு மனதை தூய்மைபடுத்துவதற்காக வீரியம் செய்வதற்கு

மிகவும் உகந்ததொரு இடம். பாக்கியமுள்ள புத்த பகவானிடம்

அனுமதி பெற்று நான் இங்கு வரவேண்டும். இங்குதான் என் மனதை

மேன்மை செய்ய முடியும்.”

மேகிய தேரர் தனது பிண்டபாதத்தை முடித்து கொண்டு புத்த

பகவானை காணவந்தார். புத்த பகவானை அன்புடன் வணங்கி

ஒரு புறத்தில் அமர்ந்து, அந்த கிமிகாலா நதியின் அழகையும்

மாஞ்சோலையின் அழகையும் வருணித்தார். தியானம் செய்யும்

ஒருவருக்கு மிகவும் வீரியம் கொண்டு தியானம் செய்வதற்கு

அவ் இடம் மிகவும் பொருத்தமானது என்று கூறினார். அதன்பிறகு

அவ்விடத்தில் தியானம் செய்வதற்கு அனுமதி கேட்டார்.

புத்த பகவான் மேகிய தேரருடைய இந்த வேண்டுகோளை

கருத்திற்கொள்ளவில்லை. புத்த பகவான் அந்த தேரரிடம் வேறு

யாரேனும் ஒரு பிக்கு வரும் வரையில் பொறுத்திருக்குமாறு

பணித்தார். ஆனாலும் மேகிய தேரருக்கு மிகவும் அவசரமாகவிருந்தது.

மனதில் இருப்பதெல்லாம் அந்த மாஞ்சோலைக்கு சென்று

தியானம் செய்யும் எண்ணம் மாத்திரமே. மேகிய தேரர் புத்த

பகவானிடம் ஷஷபாக்கியமுள்ள பகவானே, தங்களுக்கு என்றால்

தியானம் செய்வதற்கு தேவையில்லை. தாங்கள் வீரியம் செய்யவும்

தேவையில்லை. நான் இன்னும் எவ்வளவு பெரிய பயணத்தை இந்த

தர்ம மார்க்கத்தில் பயணிக்க வேண்டும். எனவே பாக்கியமுள்ள

பகவானே, எனக்கு அந்த கிமிகாலா எனும் நதிக்கரையில் உள்ள

மாஞ்சோலைக்கு செல்ல அனுமதி தாருங்கள். நான் அங்கு சென்று

தியானம் செய்வதையே விரும்புகிறேன்” அப்போதும் புத்த பகவான்

அதனை அனுமதிக்கவில்லை. மூன்றாவது முறையாகவும் மேகிய

தேரர் இவ்வாறாக கேட்டபோது புத்த பகவான் இவ்வாறு மொழிந்தார்.

‘புண்ணியமிகு மேகிய, கிலேசங்களை அழிப்பதற்கு வீரியம் செய்ய

வேண்டும், எனும் நோக்கத்துடன்தானே நீங்கள் செல்கிறீர்கள்.

அதற்கு நான் என்ன செய்வேன்? உங்களுக்கு வேண்டுமாயின்

நீங்கள் போகலாம்”

அப்போது மேகிய தேரர் மிகவும் சந்தோஷமடைந்தார்.

மகிழ்ச்சியடைந்தார். உற்சாகமானார். ‘இப்போது நான் அந்த

மாஞ்சோலைக்கு போவேன். நன்றாக கால்களை சரிசெய்து உடலை

நிமிர்த்தி அமர்ந்து கொண்டு தியானம் செய்வேன். அவ்வாறான

ரம்மியமான ஒரு சூழலில் இருந்து தியானம் செய்தால் என் மனம்

விரைவில் சமாதியடையும். அந்த சமாதியை என்னால் வெகு நேரம்

நிலைக்கச் செய்யலாம்.. தியானம் செய்வதற்கே உருவாகிய இடம்

போலும். அம்மாதிரியான ஒரு இடத்தில் தியானம் செய்வதற்கு

புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என நினைத்து கொண்டு அந்த

தேரர் அந்த மாஞ்சோலைக்கு சென்றார்.

சுற்றும் முற்றும் பார்த்தார். நதியின் இரு ஓரங்களிலும் வெண்நிற

மணல் மேடு நீண்டிருந்தது. அழகிய நீரோடை அமைதியாக சென்றுக்கொண்டிருந்தது. மாமரங்களினால் அங்கு குளிர்ச்சி நிறைந்த

நிழல் எங்கும் படர்ந்திருந்தது. நன்றாக கிளைகள் படர்ந்த ஒரு

மாமரத்தை கண்ணுற்றார். மரத்தின் கீழே அமர்ந்து கண்களை

மூடிக்கொண்டு தியானம் செய்வதற்கு ஆரம்பித்தார். மிகவும்

புதினம். இந்த மனம் ஒவ்வொரு எண்ணங்களின் பின்னே ஓடுகிறது.

மனம் சிதறியது. அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. பலத்த

காற்றை விடவும் வேகமாக எங்கெங்கோ செல்கிறது. மிக மிக

வேகமாக இந்த மனம் ஒவ்வொரு எண்ணங்களுடன் பிணைந்து

கொண்டு உழல ஆரம்பித்தது. இறந்தகாலத்தில் நடந்த சம்பவங்கள்

நினைவிற்கு வர ஆரம்பித்தன. பல்வேறுபட்ட இழிவான ஆசைகள்

மனதில் தோன்ற ஆரம்பித்தன. முரண்பாட்டை தோற்றுவிக்கும்,

கோபத்தை தோற்றுவிக்கும் விடயங்கள் கூட நினைவிற்கு வந்தன.

ஒவ்வொரு விடயங்களோடு மனம் சிக்கிக்கொண்டு இருந்தது.

சித்தானுபஸ்ஸனாவில்ழூ இருந்த அந்த தேரரால் இந்த மனதின்

இழிவான மாறுதல்களை இனங்காணக்கூடியதாக இருந்தது.

ஷஷம்.. இது என்ன..? மிகவும் விசித்திரமாக அல்லவா இருக்கிறது.

இந்த மனதிற்கு என்னவாயிற்று? ஒருபோதும் இந்த மனம்

இவ்வாறான மாற்றங்களை கொண்டிருக்கவில்லையே. இந்த

ஷாந்தமான இடத்திற்கு நான் எவ்வளவு ஆசையுடன் வந்தேன்.

நான் எவ்வளவு எதிர்பார்ப்புக்களோடு இந்த தியானத்தை செய்ய

ஆரம்பித்தேன்? ஆனால்… ஐயோ…. இந்த மனதிற்கு என்னவாயிற்று..?

நான் இழிவான விடயங்களை அல்லவா நினைக்கிறேன்…?”

மேகிய தேரர் இந்த மனதை ஒன்றிணைக்க பல முறை முயற்சி

செய்தார். ஆனால் முடியவில்லை. மனதின் இழிவான இயல்பு

அடங்கவில்லை. எண்ணங்களிலிருந்து வேறு எண்ணங்களுக்கு இந்த

மனம் குரங்கை போன்று வேகமாக தாவிக்கொண்டிருந்தது. அவரும்

தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் அவர் அங்கு வந்த நோக்கத்தை

அடையமுடியாமல் போய்விட்டது. இறுதியில் கவலையுடன் புத்த

பகவானிடம் சென்றார். அவரை அன்புடன் வணங்கினார். ஒரு

புறத்தில் அமர்ந்தார். அவருடைய மனதில் ஏற்பட்ட மாறுதல்களை பற்றி கூறத்தொடங்கினார். ‘பாக்கியமுள்ள புத்த பகவானே, இந்த

மனதின் இயல்பு விந்தையானது. நான் மும்மணிகளின் மீது கொண்ட

அளவற்ற பக்தியினால்தானே துறவு பூண்டேன். ஆனால் நான் அந்த

மாஞ்சோலையில் அமர்ந்து தியானம் செய்யும் போது எனது மனதின்

இயல்பை நன்கு உணர்ந்து கொண்டேன். பகவானே, இந்த மனம்

மிகவும் குழம்பி போய்விட்டது. கீழ்தரமான அகுசல தர்மங்கள்* என்

மனதில் தோன்றின. ஆசைகள் தோன்றின. கோபமும் தோன்றியது.

இந்த மனம் தொடர்பாக எனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது.

அப்போது புத்த பகவான் பின்வருமாறு மொழிந்தார்.

“மோட்சத்தை உறுதி செய்வதற்கு முயற்சிக்கும் போது நற்குணங்கள் நன்கு வளர்ச்சியுற்று இருக்க வேண்டும். அதற்கு ஐந்து காரணிகள்

உபகாரமாக அமையும்.

முதலாவது விடயம்தான் சத்புருஷர்களுடனான பழக்கம்.

சத்புருஷர்களுடனான பழக்கத்தினால்தான் தன்னிடம் வளர்க்க

வேண்டிய நற்குணங்கள், குண தர்மங்கள் என்பன மேம்படுத்த வேண்டும்.

இரண்டாவது விடயம்தான் சீலமிகுந்தவராக (ஒழுக்கமுடையவராக)

வேண்டும். உபசம்பதா பிக்கு என்றால் அவர் தனது உபசம்பதா

சீலத்தை நன்கு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான

சீலத்தை உடையவராக வேண்டும். சிறிய பிழைக்கும் பயம் கொள்ள

வேண்டும். அனுஷ்டித்த சீலங்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.

அப்போதுதான் மோட்சத்தை அடைவதற்கான தகுதியை தம்முள்

ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மூன்றாவது விடயம் இதுதான். 32 வகையான அர்த்தமற்ற பேச்சுக்களை

தவிர்த்து பத்துவகை பேச்சுக்களை பேச வேண்டும். அந்த பத்து

வகை பேச்சுக்கள் உய்த்துணர்வுடன் உலகை வெறுக்கச்செய்யும்.

அந்த பத்து வகை பேச்சுகள் என்றால் இவையே, (அல்பேச்ச

பேச்சு), கிடைத்ததை நினைத்து இன்புறும் பேச்சு, தனிமையான

* பேராசை, கோபம், அறியாமை என்பனவற்றால், சிந்தனைய

அடிப்படையாகக் கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன அகுசலம் எனப்படும்.

ஓய்வு பற்றிய பேச்சு, கூட்டத்துடன் ஒன்றாக பிணைந்து வாழாமை

தொடர்பான பேச்சு, கிலேசங்களை அழிப்பதற்கு மிகுந்த வீரியம்

எடுப்பது தொடர்பான பேச்சு அதேபோல் சீலம், சமாதி, பிரக்ஞை,

விடுதலை, மற்றும் விடுதலை ஞான காட்சி என்பன தொடர்பாக

கேட்கவும் பேசவும் வேண்டும். அப்போதுதான் அவர் மோட்சத்தினை

அடைய தகுதியுடைய ஒருவராவார்.

நான்காவது விடயம் தான் முயற்சி. எந்நேரமும் துவங்கிய

வீரியம் இருக்க வேண்டும். அகுசலங்களை* அழிப்பதற்கும், குசல

தர்மங்களை** தோற்றுவித்து கொள்வதற்கும் பலமான வீரியம் இருக்க

வேண்டும். கிலேசங்களை அழிக்கும் வகையிலான மிகவும் பலமான

வீரியம் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் மோட்சத்தை அடைய

விரும்பும் ஒருவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவையாகும்.

ஐந்தாவது காரணிதான், பிரக்ஞை எனப்படும் ஞானமாகும். அவர்

ஞானமுள்ள ஒருவராகவும் வேண்டும். அந்த ஞானமுள்ளவர் எந்நேரமும்

அறிவினால் ஆராய்ந்து கொண்டே இருப்பார். விசேடமாக கூறினால்

இவ்வனைத்தினதும் தோற்றம், அழிவு. என்பனவற்றை அவ்வாறே

காண முயற்சி செய்வார். துக்கத்திற்குரிய அனைத்தினது மீதும்

கொண்ட விருப்பு இல்லாமல் போகும் வண்ணம் அநித்திய உலகை

அவ்வாறே காண முயற்சி செய்வார். இதுதான் அவருடைய ஞானம்.

இவ்வாறானவர்தான் மோட்சத்தினை அடைவதற்கு தகுதியானவர்

ஆவார்.

இந்த ஐந்து விடயங்களை தன்னுள் ஏற்படுத்தி கொள்ளும்

ஒருவர் இன்னும் நான்கு விடயங்களையும் தன்னுள் தோற்றுவித்து

கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதாவது மனதில் தோன்றும்

காமம் தொடர்பான, ஆசை தொடர்பான அகுசலங்களை அழிப்பதற்கு

அசுப தியானத்தை செய்ய வேண்டும். அதேபோல் மனதில் தோன்றும்

*. பேராசை, கோபம், அறியாமை என்பனவற்றால், சிந்தனைய அடிப்படையாகக்

கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன அகுசலம் எனப்படும்.

**. நிராசை, கோபமின்மை, நல்லறிவு என்பனவற்றால், சிந்தiயை அடிப்படையாகக்

கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன குசலம் எனப்படும்.

கோபம் போன்ற விடயங்களை அழிப்பதற்கு மைத்ரீ தியானத்தை

செய்ய வேண்டும். மனம் சிதறும் போது அந்த விதர்க்கங்களை

அழிப்பதற்கு ஆனாபானசதி எனும் தியானம் உபகாரமாகும்.

அதேபோல் தன்னுள் இருக்கும் மமதை, செருக்கு என்பன அழிவதற்கு

அநித்திய தியானம் மிகவும் உபகாரமாக இருக்கும். புண்ணியமிகு

மேகிய, அநித்திய தியானத்தை நன்கு பயிற்சி செய்யும் ஒருவரால்

அனாத்ம நிலையை நன்கு உணரலாம். அனாத்ம நிலையை நன்கு

உய்த்துணரும் போது மமதை முழுமையாக அழிந்துவிடும். இந்த

வாழ்விலேயே மோட்சத்தை உறுதி செய்தவராகலாம்.

இவ்வாறாக அறிவுரை செய்த புத்த பகவான் பின்வருமாறு

செய்யுள்களை அழகாக மொழிந்தருளினார்.

பன்தனங் சபலங் சித்தங் – துரக்கங் துன்னிவாரயங்ட

கரோதி மேதாவி – உசுகாரோ வ தேஜனங்

இந்த மனம் பதற்றம் நிரம்பியது போன்றே மிகவும் சபலமானதும்

கூட. பாதுகாப்பதும் பாவத்திலிருந்து மீட்பதும் மிகவும் கடினமானதே.

ஆனாலும் அறிவுள்ளவர், இரும்புகொல்லன் வளைந்த அம்பை

நிமிர்த்துவது போல் தர்மத்தினுள் இந்த மனதை நிமிர்த்தி கொள்வார்.

வாரிஜோவ தலே கித்தோ – ஒகமோகத உப்பதோ

பரிபன்ததிதங் சித்தங் – மாரதெய்யங் பஹாதவே

நீரிலிருந்து வெளியே எடுத்து வைத்த மீனை போல் சுக, துக்கம் வரும்

போதெல்லாம் இந்த மனம் துடிக்கிறது. எந்நேரமும் சஞ்சலமடையும்

இதனை நன்கு அறிந்து அடக்க வேண்டும். மாரனது பிணைப்பிற்கு

உட்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் இந்த மனம் தொடர்பாக

எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார். புத்த பகவானுக்கு இந்த மனம்

தொடர்பாக மிகவும் ஆழமான ஞானம் இருந்தது. எனவேதான் இந்த

மனதின் இயல்பு தொடர்பாக புத்த பகவான் இவ்வளவு அழகாக மொழிந்துள்ளார்.

இந்த மனம் ஒவ்வொரு எண்ணங்களினாலும் சஞ்சலமடைகிறது.

அதேபோல் ஒருபோதும் இந்த மனதை நம்பவே கூடாது.

சிலவேளைகளில் இந்த மனம் மிகவும் ஷாந்தமானதாக இருக்கும்.

அப்போது நாம் இந்த மனதிற்கு ஏமாறுவோம். இனி ஒருபோதும்

குழப்பம் அடையாது என நம்புகிறோம். ஆனால் அடுத்த நொடியே

இந்த மனம் சிதறிவிடுகிறது. மனம் தணிந்திருக்கும்போது நாம் இனி

ஒருபோதும் இந்த மனம் அழுக்கடையாது என்றே நினைப்போம்.

ஆனால் எம்மையறியாமலே எம் மனம் மாறிவிடுகிறது. அழுக்கடைந்து

போகிறது. இந்த மனதின் சபல நிலையினால்தான் நாம் இதுவரை

காலமும் இந்த சன்சார பயணத்தின் போது துன்பம் அனுபவித்து

வந்துள்ளோம். மேலும் நாம் சன்சார பயணத்தை பயணிக்க நேரிட்டால்

அதற்கு காரணமும் இந்த மனதின் சபல நிலையே.

இந்த மனதை பாதுகாப்பது இலகுவான விடயமல்ல. மிகவும் பலத்த

வீரியம் எடுக்க வேண்டும். இந்த மனதை அறிவுள்ள ஒருவரே

பாதுகாப்பார். ஞானமுள்ள ஒருவர் அகுசல தர்மங்களை இனங்கண்டு

அவற்றை அழித்துவிடுவார். குசல தர்மங்களை மேம்படுத்துவார்.

குசல தர்மங்களிலேயே தமது மனதை நிலைக்கச்செய்வார். அதன்

மூலம்தான் மனதை பாதுகாக்க முடியும். அகுசலங்களிலிருந்து

பாதுகாத்து குசல தர்மங்களில் மனதை நிலைபெறச்செய்வது என்பது

மிகவும் உயர்ந்த விடயமாகும். இவ்வாறான ஒருவர் தம் வாழ்வை

வெற்றிகரமானதாக்கி கொள்வார்.

இங்கு கூறப்படும் இரண்டாவது செய்யுளில் இந்த மனதில்

இழிவு நிலையை நன்கு உணரலாம். புண்ணிமிக்கவர்களே,

நீரிலிருந்து வெளியே எடுத்து நிலத்தில் போடப்பட்ட மீன்களை

நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த மீன்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

*. பேராசை, கோபம், அறியாமை என்பனவற்றால், சிந்தனைய அடிப்படையாகக்

கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன அகுசலம் எனப்படும்.

**. நிராசை, கோபமின்மை, நல்லறிவு என்பனவற்றால், சிந்தiயை அடிப்படையாகக்

கொண்டு பேசுதல், செயற்படுதல், நினைத்தல் என்பன குசலம் எனப்படும்.

அந்த மீன்கள் மேலே துள்ளி கொண்டு

தவிக்கும். தண்ணீர் இல்லாத காரணத்தினால்தான் தவிக்கும்.

இந்த மனமும் சுகம் கிடைக்கும் போது அந்த சுகத்தை தக்க

வைத்து கொள்வதற்காக பாடுபடும். துக்கம் ஏற்படும் போது அந்த

துக்கத்திலிருந்து மீளுவதற்காக பாடுபடும். மிகவும் சிதறிய நிலையிலே

இருக்கும். மிகவும் பட படப்பானது. வேதனையை தருவது. தவிப்பை

ஏற்படுத்துவது. இவ்வாறாக துள்ளிக்கொண்டிருக்கும் இந்த மனம்

நீரை நோக்கி செல்லும் மீனை போன்று காம எண்ணங்களையே

தேடிச்செல்லும். இந்த காம எண்ணங்களில் ஈர்க்கப்பட்ட ஒருவர்

அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும். அதனால்தான் புத்த

பகவான் காம எண்ணங்களை மாரனின் தூக்குக்கயிறாக உவமித்து

கூறினார். அந்த மாரனது பிடியில் சிக்குவது மனதின் உண்மையான

நிலையை அறியாத ஒருவரே. மனதின் இந்த உண்மையான

நிலையை அறிந்துகொள்பவர் கொஞ்சம் கொஞ்சமாக மனதை

கட்டுப்படுத்துவார்.

மனதை கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமான விடயம் என்பதனை

மனதின் இயல்பை நன்கு அறிந்த யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறான மனதிற்கு அடிமையாகாமல் அந்த மனதை வெற்றி

கொள்ள வேண்டுமானால் தன்னுள் சிறந்த நற்பண்புகள் இருக்க

வேண்டும். வாழ்வை உய்த்துணரக்கூடிய திறமைகைளை கொண்டே

பெரும்பாலானோர் பிறக்கிறார்கள். அவர்கள் தம் உள்ளக

திறமைகளை மேம்படுத்தாததால் அவை காலப்போக்கில் இல்லாமல்

போய்விடுகின்றன. முதுமையடையும் போது இந்த திறமைகள்

முழுமையாக பலவீனமடைந்துவிடுகின்றன. நினைவு இல்லாமல்

போகும். ஞாபக மறதி ஏற்படும். அவர் தவறான பாதையில் சென்ற

ஒரு மனதுடனே இறந்துவிடுவார்கள். அப்படி இறந்துபோகும் போது

அவர் மனதை மேன்மைபடுத்தும் அரிய வாய்ப்பை இழந்த ஒரு

துரதிஷ்டசாலியாகவே இறப்பார்.

அதனாலயே இந்த மனதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு

புத்த பகவான் ஒரு உவமையை மொழிந்துள்ளார். இங்கு

குறிப்பிடப்பட்டிருக்கும் முதலாவது செய்யுளில் அந்த உவமை கூறப்பட்டுள்ளது. அம்பு செய்யும் ஒருவர் இருக்கிறார். அவருக்கும்

வளைவான இரும்பு கோல்கள் சில கிடைக்கின்றன. அவர் அவற்றை

நன்கு வெப்பமூட்டுவார். இவ்வாறாக நன்கு வெப்பம் அடைந்த

அந்த இரும்புக் கோல்களை சுத்தியலால் பலமாக அடிப்பார். சிறிது

சிறிதாக நேராக்குவார். இறுதியில் மிகவும் நேரான அம்புகளை

அவரால் செய்துவிடக்கூடியதாக இருக்கும். அதேபோன்று அறிவாளி

தன் மனதிற்கு ஏமாற மாட்டார். மனதிற்கு அறிவுரை செய்து மனதை

அடக்கிக்கொள்வார். இவ்வாறான இழிவான ஒரு மனதை தர்மத்தினுள்

கட்டுப்படுத்தி மோட்சப்பாதையில் செலுத்தினால் எவ்வளவு நன்று…?

சாது! சாது!! சாது!!!

மூன்றாவது செய்யுள்.

ஒரு தேரரது கதை

மனதை வெற்றி கொள்வதே உன்தமாகும்.

புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, புத்த

பகவானது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான பிக்குமார்கள்

இந்த மனதை வெற்றி கொண்டார்கள். அக்காலத்தில் மனதை

வெல்வதற்கு தாமதமின்மை எனும் விடயம் மிகவும் உறுதுணையாக

இருந்தது. மனம் காம சிந்தனைகளில் விழும் போது, தான்

விரும்பிய விரும்பியவற்றின் பின்னே ஓடும் போது அதிலிருந்து

இந்த மனதை மீட்டு நால்வகை சதிபட்டானத்தில்* மீண்டும்

மீண்டும் மனதை நிலைபெறச் செய்வதற்கு திறமையானவர்தான்

இந்த மனதை வெற்றிகொள்வார்.

கோசல நாட்டில் அல்லி கிராமம் எனும் பெயர் கொண்ட ஒரு

கிராமம் இருந்தது. மாரி காலத்தில் வசித்திருப்பதற்காக அந்த

கிராமத்திற்கு அறுபது தேரர்கள் வருகை தந்தார்கள். அந்த

கிராமத்தின் பிரதானி மாதிகமாதா எனும் பெயர் கொண்ட கருணை

நிறைந்த ஒரு தாயாவார். அவள் இந்த சுவாமிமார்கள் சீலம்,

சமாதி, ஞானம் என்பன விருத்தி செய்வதை மிகவும் விரும்பினாள்.

இந்த சுவாமிகள் தர்மத்தை பின்பற்றி உயர் பெறுபேறுகளை

அடைய துணை செய்யும், பணிவிடைகளை செய்வதற்கு அவள்

நினைத்தாள்.

இந்த சுவாமிகளும் தனக்கு பணிவிடை செய்யும் மாதிகமாதாவை

பார்த்து மென்மேலும் இந்த தர்மத்தை பயிற்சி செய்ய வீரியம் செய்தார்கள்.

*. உடல், அனுபவிப்புகள் (சுகம் துக்கம் சுகதுக்கம் அற்ற நிலை) , மனம்,

தர்மங்கள் என்பன மீதான விழிப்புணர்வே நால்வகை சதிபட்டானம் அல்லது

நால்வகை விழிப்பு நிலைகள் எனப்படுகிறது.

அவர்கள் தமக்குள் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்.

‘புண்ணியமிக்க சக சுவாமிகளே, பாருங்கள், இந்த மாதிகமாதா

தாய் எம் மீது மிகுந்த சத்தா (பக்தி) கொண்டு எமக்கு தானங்களை

அளிக்கிறார். எமது தேவைகளை பூர்த்தி செய்கிறார். எமக்கு நல்ல

உறையுள்களை அளிக்கிறார். நடை தியானம் செய்வதற்காக

தியான மேடைகளை அமைக்கிறார். எமது நீர் தேவைகளை பூர்த்தி

செய்வதற்காக குளங்களை அமைத்து கொடுத்திருக்கிறார். நாம்

இந்த தர்மத்தினது உயர் பெறுபேற்றை பெறுவதற்காக இந்த தாய்

எவ்வளவு தியாகங்களை செய்கிறார். எனவே நாமும் புற பேச்சுக்களில்

ஈடுபடக் கூடாது. தேவையில்லாத விடயங்களில் ஈடுபட்டு பொழுதை

கழிக்கக் கூடாது. மோட்சப்பாதைக்கு தடையான விடயங்களை

சிந்திக்க கூடாது. எனவே நாம் இயன்றளவு அமைதியாக இருப்போம்.

மௌனமாக இருப்போம். வாரத்திற்கு ஒருமுறை மாத்திரம் ஒன்று

சேர்ந்து தர்ம விடயங்களை கலந்துரையாடுவோம். எமக்கு புத்த

பகவானும் இதைத்தானே செய்யுமாறு பணித்திருக்கிறார்.”

 சன்னிபதினானங் வோ பிக்கவெ, த்வயங் கரணீயங் வதாமி. தம்மீவா

கதா அரியாவோ துண்ஹீபாவோ

‘புண்ணியமிகு பிக்குகளே, நீங்கள் ஒன்று கூடியவுடன் இரு

விடயங்களை செய்யுமாறு கூறுகிறேன். தர்மத்தை பேச வேண்டும்.

இல்லாவிடில் அமைதியாக இருந்து தியானம் செய்ய வேண்டும்.”

எனவே, புண்ணியமிகு ஆவுசோக்களே*, நாம் அந்த இரு

காரணிகளையும் செய்வதற்கு வீரியம் செய்வோம்.00 என்று அந்த

பிக்குமார்கள் மிகவும் ஒற்றுமையாக பேசி முடிவெடுத்தனர்.

வாத விவாதங்கள் செய்து கொள்ளவில்லை. மிகவும்

சந்தோஷப்பட்டார்கள். பாலும் நீரும் கலந்தது போன்று ஒருவருக்கு

ஒருவர் மைத்ரீ எண்ணங்களை முதற்கொண்டு வசித்து வந்தார்கள்.

*. துறவறத்தினால் தனக்கு சமமான அல்லது தன்னை விட இளையவர்களை

அழைக்கும் ஒரு சொல்லாகும்.

ஒருநாள் மாதிகமாதா மகா உபாசகி சங்கையருக்கு பணிவிடை

செய்வதற்காக ஆச்சிரமத்திற்கு வந்தாள். அவளுக்கு யாரும்

தென்படவில்லை. ஆச்சிரமம் பாழடைந்து இருந்தது. அவள் இதனை

பற்றி நினைத்து கொண்டிருக்கும் போது தான (உணவு) நேரத்திற்கான

அழைப்பு விடும் மரக்குற்றி ஓசை கேட்க ஆரம்பித்தது. சிறிது

நேரம் கழித்து வேறு வேறு பாதைகள் வழியாக கீழ் நோக்கிய

பார்வையுடன் கூடிய மிகவும் அமைதியான, மிகவும் ஷாந்தமான

தேரர்கள் வருகை தந்தார்கள். வருகை தந்த தேரர்களை வணங்கிய

மாதிகமாதா மிகவும் சோகத்துடன் பின்வருமாறு கூறினாள்.

“சுவாமிமார்களே, நீங்கள் முரண்பட்டிருக்கிறீர்கள் போலும்.

ஐயோ… இவ்வளவு உத்தமமான புத்த சாசனத்தில் துறவு பூண்ட

நீங்கள் இந்த மனதை அழுக்கடைய செய்து கொள்ளாதீர்கள்.

கோபங்கொள்ளாதீர்கள். குரோதம் கொள்ளாதீர்கள். தங்களுடைய

மோட்சப்பாதை அத்துடனே மூடப்பட்டுவிடும்.”

‘புண்ணியமிகுந்த உபாசகி தாயே, நாம் எமக்குள் முரண்பட்டுக்

கொள்ளவில்லை. நாம் குரோதம் கொள்ளவும் இல்லை. நிந்தனை,

பரிகாசங்கள் என்பன செய்துகொள்ளவுமில்லை. நாம் ஒவ்வொருவரையும்

பிரியமான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். முகத்தை சுழித்து

கொள்ளவில்லை. உபாசகி தாயே, எமது புத்த பகவான் எம்மை

பெரும்பாலும் அமைதியை கடைபிடிக்குமாறே அறிவுரை செய்துள்ளார்.

ஷஒன்று கூடியவுடன் தர்மத்தை பேசுங்கள், இல்லையேல் அமைதியாக

தியானம் செய்யுங்கள0; என்றே உபதேசித்துள்ளார். நாமும் அந்த

அமைதியைத்தான் பழக்கப்படுத்துகிறோம்.”

‘சாது.. சாது..* சுவாமிகளே, ஒற்றுமையான பிக்குமார்கள்

ஒற்றுமையாக தர்மத்தை பின்பற்றுவதை காணக்கிடைப்பதுவும்

அதிஷ்டமே. சுவாமியே நானும் நால்வகை சதிபட்டான தர்மங்களை

பழக்கப்படுத்த மிகவும் விரும்புகிறேன். சதிபட்டானத்தினுள் மனதை

நிலைக்கச்செய்வது எவ்வளவு பெரிய அதிஷ்டம்? சுவாமியே, இல்லற

வாழ்வில் எவ்வளவு காரியங்கள் இருந்தாலும் மனதை மேன்மை படுத்தும் இந்த தர்மத்தை நாம் கைவிடக்கூடாது.”

*. நன்று என்பதற்கான பாளிச்சொல்லாகும்.

புண்ணியமிக்கவர்களே, அந்த தேரர்கள் இந்த மாதாவிற்கு

நால்வகை சதிபட்டான தர்மத்தையும் கற்றுக்கொடுத்தார்கள்.

உய்த்துணர வேண்டிய துக்கம் எனும் ஆரிய சத்தியம், அழிக்க

வேண்டிய துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம், உறுதி

செய்ய வேண்டிய துக்கநிவாரணம் எனும் ஆரிய சத்தியம். துக்க

நிவாரண மார்க்கமான எண்சீர்வழி எனும் ஆரிய சத்தியம் எனும்

இந்நால்வகை ஆரிய சத்தியங்கள் தொடர்பாகவும் மிகவும் விபரமாக

கற்றுக்கொடுத்தார்கள். அதேபோன்று பஞ்ச உபாதானஸ்கந்தங்கள்*,

படிச்ச சமுப்பாதம்** என்பனவற்றையும் கற்றுக்கொடுத்தார்கள்.

அந்த புண்ணியமிக்க உபாசகி மாதாவும் துவாரம் இல்லாத குடத்தில்

நீரை நிரப்பிக்கொள்வது போன்று அந்த அனைத்து வார்த்தைகளையும்

மனதில் ஏந்திக்கொண்டாள். நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டாள்.

வீட்டிற்கு திரும்ப சென்று அந்த தர்மத்தை பழக்கப்படுத்தினாள்.

வீண் பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கவில்லை. சிறிது காலம்தான்

கழிந்தது. அந்த மாதிகமாதா தாயவர்கள் சோதாபண்ண நிலையை

அடைந்தார். சகதாகாமீ நிலையை அடைந்தார். இறுதியில் அநாகாமீ

நிலையையும் அடைந்தார். அவரின் மேன்மைப்படுத்திய தியான

பலத்தினால் ஏனையோரது மனதை அறியக்கூடிய ஷபரசித்த விஜானன0

ஞானத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஒருநாள் இந்த மாதிகமாதா உபாசகி அவர்கள் இந்த தேரர்களது

மனதை ஆராய்ந்து பார்த்தார். ஷஆ… யாருமே ஒரு வீடுபேற்று

நிலையையும் அடைந்திருக்கவில்லை. மோட்சத்தை உறுதி

செய்திருக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்து

பார்த்தார். அந்த சுவாமிகளுக்கு கிடைக்கும் தானத்தில் சிறு

சிறு குறைபாடுகள் இருப்பதை அவதானித்தார். உறையுள்களிலும்

ஒழுங்கமைய வேண்டிய விடயங்கள் இருந்தன.

*. உருவம், அனுபவிப்பு, சமிக்ஞை, சிந்தனை, விஞ்ஞானம் எனும் ஐந்தின் மீது கொண்ட

பிணைப்பாகும். அனைத்து துக்கங்களின் சாரம்சம் இந்த பஞ்ச உபாதானஸ்கந்தங்கள்

என பகவான் மொழிந்துள்ளார்.

**. காரண காரிய செயற்பாடு

இப்போது மாதிகமாதா அவர்கள் அன்புள்ள ஒரு தாய் தனது

குழந்தைகளை பராமரிப்பது போல் இந்த சங்கத்தினருக்கு பணிவிடை

செய்தார். உடல், உள ரிதீயாக சுகமளிக்க கூடிய வண்ணம் அன்னம்,

பானம் என்பனவற்றை அளித்தாள். ஔடதங்கள், சுடுநீர், குளிர்நீர்

என்பன தயார் செய்து கொடுத்தார். மிகவும் சிறந்த பணிவிடைகள்

கிடைப்பதால் நோய்கள் இல்லாமல் போனது போன்றே, இந்த

தேரர்களது மனமும் தர்மத்தின் பால் குடிகொண்டன. சதிபட்டான

தர்மத்தினுள் மனம் நிலைகொண்டது. சீலம், சமாதி, பிரக்ஞை

என்பன விருத்தியடைய ஆரம்பித்தது. எண்சீர் மார்க்கத்தினை

முழுமையாக்கிக்கொள்ள கூடியதாக இருந்தது. இந்த அறுபது

தேரர்களும் புத்த சாசனத்தின் உயரிய நிலையான அரஹத்

நிலையை உறுதி செய்தனர்.

மாரி காலம் முடிவடைந்தது. மாதிகமாதா அவர்களுக்கு மிகவும்

புண்ணியங்களை அனுமோதித்த இந்த பிக்குமார்கள். புத்த பகவானை

காணச்சென்றார்கள். புத்த பகவானை சந்தித்து தமக்கு மோட்சத்தை

உறுதி செய்வதற்கு மிகவும் உபகாரம் செய்த மாதிகமாதாவை

பற்றி புகழ்ந்து பேசினார்கள். அப்போது அங்கிருந்த வேறு ஒரு தேரர்

இதனை கேட்டார். அவருக்கும் அல்லி கிராமத்திற்கு செல்வதற்கு

விருப்பம் பிறந்தது. அவரும் அந்த கிராமத்திற்கு வருகை தந்தார்.

புதிதாக வருகை தந்த அந்த தேரருக்கும் மாதிகமாதா அவர்கள்

மிகவும் அன்புடனும் கௌரவத்துடனும் பணிவிடை செய்தார்கள்.

அந்த சுவாமிக்கு தனது மனதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக

இருந்தது. சாப்பிடக்கிடைக்காத உணவு வகைகளை பற்றி நினைத்து

கொண்டிருந்தார். மாதிகமாதா அவர்கள் இதனை அறிந்து மறுநாள்

காலையில் அந்த உணவை அவருக்கு அளிப்பார். அவர் நினைக்கும்

ஒவ்வொரு உணவு வகைகளையும் தயாரித்து சென்று கொடுப்பார்.

சிறிது காலம் செல்லும் போது இந்த சுவாமிக்கு மனதினுள் அச்சம்

தோன்றியது.

‘ஐயோ… இந்த உபாசகி மாதா நான் நினைக்கும் ஒவ்வொரு

விடயங்களையும் அறிந்துகொள்கிறார் அல்லவா? நான் இன்னும்

இந்த மனதை மேன்மை படுத்தி கொள்ளவில்லையே…! எனது மனம்

மிகவும் சபலமானது. விரும்பும் ஒவ்வொரு எண்ணங்களிலும் இந்த

மனம் மூழ்கிவிடுகிறது. இவ்வாறான கீழத்தரமான மனதை கொண்டு

இவ்வளவு உத்தம குணங்கள் கொண்ட இந்த உபாசகத்தாயிடம்

இருந்து பணிவிடைகளை பெறக்கூடாது.’ என அந்த சுவாமி

மிகவும் மனம் நொந்தார். கவலைக்குள்ளானார். இந்த மனதை

நினைத்து வெறுப்படைந்தார். புத்த பகவானை காணச்சென்றார்.

புத்த பகவானிடம் இந்த விடயத்தை கூறினார். அப்போது இந்த

செய்யுளை மொழிந்த புத்த பகவான் அந்த தேரரை மீண்டும் அதே

கிராமத்திற்கு செல்லுமாறு பணித்தார். புத்த பகவான் மொழிந்த

செய்யுளின் மூலம் மனதை திடப்படுத்தி கொண்ட அந்த தேரர்

மீண்டும் அந்த கிராமத்திற்கு சென்றார். மாதிகமாதா அவர்களின்

பணிவிடைகளை பெற்றுக்கொண்டு மிகுந்த வீரியம் கொண்டு

தியானங்கள் செய்தார். சிறிது காலத்திலேயே சகல துக்கங்களையும்

துறந்த ஒரு நி;க்கிலேசியானார். அரஹத் நிலையை அடைந்தார்.

துன்னிக்கஹஸ்ஸ லஹுனோ – யத்த காமனிபாதினோ

சித்தஸ்ஸ தமதோ சாது – சித்தங் தன்தங் சுகாவஹங்

நிந்தனை செய்து இந்த மனதை அடக்குவது மிக கடினம்

மாறிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு நொடியும் – விரும்புவதன்

பின்னே ஓடிச்செல்லும்.

இவ்வாறாக நிலவும் மனதை – அடக்குவதே சாலச்சிறந்தது.

அடக்கிய மனதினால் மகா சுகத்தை பெறலாம்.

புண்ணியமிக்கவர்களே, இந்த மனதிற்கு எவ்வளவு அறிவுரை

செய்தாலும் அடக்குவது மிக மிக கடினமானதாகும். எவ்வளவு

நிந்தித்தாலும் அக்காரணத்தினால் ஒருபோதும் அடக்குவது எளிதல்ல.

விரும்பும் விடயங்களிலே மரத்தின் மீது கொடி படர்ந்து கொள்வது

போன்று படர்ந்துவிடுகிறது. நீர்சுழியில் அகப்பட்ட துரும்பை போன்று

இந்த மனம் தான் விரும்பும் எண்ணங்களில் அமிழ்ந்துவிடுகிறது.

புத்த பகவான் மொழிந்த தர்மத்தினால் மாத்திரம்தான் இந்த மனதை

பாதுகாத்து கொள்ளலாம். மனதை பாதுகாக்கும் முறை தொடர்பாக

புத்த பகவானிலும் பார்க்க வேறு ஒருவரும் கூறியதில்லை. எனவே

மனதின் இயல்பை எம்மால் தெளிவாக இந்த தர்மத்தினூடாக

மாத்திரமே காணலாம். சித்தானுபஸ்ஸனா செய்யும் ஒருவருக்குத்தான்

இந்த மனதின் பயங்கர நிலையை உணர முடியும். சித்தானுபஸ்ஸ

னா செய்யும் ஒருவர் தனது மனம் தொடர்பாக அவதானமாக

இருப்பார். பிழையான வழியில் செல்லும் போது அவர் தனது மனதை

அங்கிருந்து மீட்டு நல்ல வழியில் செலுத்துவார். அவதானத்துடனும்

விழிப்புணர்வுடனும் இருந்திராவிட்டால் இந்த மனம் எம்மை நரகம்

கொண்டு செல்லும் வரை நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆகையால்

இந்த மனதை அடக்குவதே சாலச்சிறந்ததாகும்.

சாது! சாது!! சாது!!!

நான்காவது செய்யுள்

முயற்சியற்ற பிக்குவின் கதை

மனதை கட்டுப்படுத்திக் கொண்டால் சுகம் அனுபவிக்கலாம்.

புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, இந்த மனதின்

இயல்பை அறிவது இலகுவானதல்ல. அதற்கு காரணம் நாம்

மிக நீண்ட காலமாக இந்த மனதையே ஷநான்0 என்று நினைத்து

கொண்டிருந்திருக்கிறோம். மனதை தெளிவாக இனங்கண்டு கொள்ள

முடியாததால் பெரும்பாலானோர் இந்த மனதிற்கே ஏமாறுகிறார்கள்.

ஆனால் இந்த ஏமாற்றத்திலிருந்து தப்பி மனதின் உண்மையான

நிலையை இனங்கண்டு அகுசலங்களுக்குள் இந்த மனதை

விழச்செய்யாது மனதை பாதுகாத்து கொள்ளும் வீரியமிக்கவர்களும்

உள்ளார்கள். இம்மாதிரியான வீரியமிக்கவர்களும் சில வேலைகளில்

இந்த மனதின் மாயை இயல்புகளினால் பின்வாங்கும் சந்தர்ப்பங்களும்

உள்ளன. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அறிவுரை செய்து இந்த

மனதின் இயல்பை சுட்டிக்காட்டி மீண்டும் தர்மத்தின்பால் ஈடுபட

வைப்பது சத்புருஷர்களே. இதுவரையிலும் உலகில் தோன்றிய

ஒப்பற்ற மகா சத்புருஷரான புத்த பகவானது துணையினால் சம்சார

பயணத்தில் இருந்து நீங்கிய ஒரு தேரரை பற்றித்தான் இங்கு

குறிப்பிடப்படுக்கிறது.

சாவத்திய நகரின் ஒரு செட்டியார் குடும்பம் இருந்தது. இந்த

குடும்பத்தில் ஒரே பிள்ளை. அவருக்கு மும்மணிகள் மீது அளவிலாத

பக்தி இருந்தது. அவருக்கு அந்த பக்தி தோன்றுவதற்கு காரணம்

சத்புருஷ ஒரு தேரரினால்தான். இந்த நற்குணம் நிறைந்த சுவாமி

மூலம் இந்த இளைஞன் நால்வகை பேருண்மைகள் தொடர்பாக

அறிந்துகொண்டார். அதன் மூலம் அவர் இதுவரை புத்த பகவான் மீது கொண்ட பக்தி மென்மேலும் வலுப்பெற்றது. புத்த பகவான்

மீதும் புத்த பகவான் மொழிந்தருளிய சத்தர்மத்தின் மீதும் புத்த

பகவானது சீடர்களான மஹா சங்கத்தினர் மீதும் மிகுந்த பக்தி

கொண்டார். இந்த இளைஞன் சேக பலங்கள் ஐந்தையுமே தன்னுள்

வளர்த்து கொண்டார். சேக பலங்கள் என்றால் தர்ம மார்க்கத்திற்குள்

நுழைந்த பணிவுள்ள சீடன் தன்னை பயிற்றுவித்து கொள்ளும் ஐந்து

வகையான குணங்களாகும். அதாவது அவருள் மும்மணிகள் மீதான

நம்பிக்கையுடன் கூடிய பக்தி எனும் சேக பலம் இருக்க வேண்டும்.

அப்போது அவர் அந்த குணத்தின் மூலமாக தன்னை தர்மத்தினுள்

பயிற்றுவித்து கொள்வார்.

அதேபோல் அவரிடம் சீலம் எனும் சேக பலமும் இருக்க வேண்டும்.

அதன் மூலமாக தன்னை தர்மத்தினுள் பயிற்றுவித்து கொள்வார்.

அதேபோல் சுதய எனும் தர்மம் தொடர்பாக கேட்டறிந்த தர்மஞானம்

இருக்க வேண்டும். அப்போது அவர் புத்த பகவான் மொழிந்தருளிய தர்ம

போதனைகளை செவிமடுப்பார். தர்ம நூல்களை வாசிப்பார். விபரமாக

அறிந்துக்கொள்வார். நாற்பேருண்மைகள் தொடர்பாக விரிவாகவும்

விபரமாகவும் கற்றுணர்ந்து கொள்வார். அதனை நினைவில் வைத்து

கொள்வார். இவ்வாறாக நினைவில் வைத்துக்கொண்ட தர்மத்தை

வார்த்தைகளினாலும் பழக்கப்படுத்தி கொள்வார். வார்த்தையினால்

பழக்கப்படுத்தும் அந்த தர்மத்தை அறிவினால் துருவி துருவி

ஆராய்வார். இதற்குத்தான் சுத பலம் எனக்கூறுவது.

அதேபோல் சாக எனும் சேக பலமும் இருக்க வேண்டும்.

அதாவது ஆரிய சீடன் கொடையாளியாக இருக்க வேண்டும்.

தானமளிப்பதற்காக கைகளை கழுவி (தயாராக) இருப்பார். மிகுந்த

பக்தியுடன் சங்கையருக்கு பணிவிடை செய்வார். தன்னுடைய

சேவகர்கள், தொழிலார்கள் என்போரை அன்புடன் பராமரிப்பார். தன்

உறவினர்களை நன்கு உபசரிப்பார். ஏழை எளியோர்களுக்கு தானம்

அளிப்பார். இதுதான் சாக எனும் பலம்.

அதேபோல் பஞ்ஞா எனும் சேக பலமும் இருக்க வேண்டும். அவர் புத்த பகவான் மொழிந்த பஞ்ச உபாதானஸ்கந்தங்கள், ஆறு புலன்கள்,

நால்வகை தாதுக்கள், படிச்ச சமுப்பாதம் ஆகிய ஆழமான நுண்ணிய

தர்ம விடயங்களையும் அறிவினால் ஆராய்ந்து பார்ப்பார். வாழ்வின்

யதார்த்தத்தினை ஊடுருவி காணக்கூடிய ஆராயும் திறனையும்

வளர்த்து கொள்வார். அதுதான் அவருள் இருக்கும் ஞானம் அல்லது

பிரக்ஞை எனும் சேக பலம்.

இந்த குமரன் இந்த ஐவகையான சேகபலங்களையும் தன்னுள்

வளர்த்து கொள்வதற்கு முயற்சிசெய்தார். இல்லறவாழ்வில்

உள்ள துக்கங்களும் தொந்தரவுகளும் அவரால் சிறிது சிறிதாக

உணரக்கூடியதாக இருந்தது. அனைத்து பிணைப்புக்கள்

பந்தங்களிலிருந்து விடுதலையான பரம பவித்திரமான வாழ்வினை

துறவு வாழ்வில் உருவாக்கி கொள்ள முடியும் என்பதனையும்

உணர்ந்தார். எனவே இந்த இளைஞன் பெற்றோர்களின் அனுமதியை

பெற்று தனக்கு தர்மத்தை கற்றுக்கொடுத்த தேரரிடம் சென்று

உபதேசங்களை பெற்று கௌதம புத்த சாசனத்தினுள் துறவு

பூண்டார்.

துறவு பூண்ட நாளிலிருந்தே இந்த சுவாமிக்கு நல்ல

சத்புருஷர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தேரர் தர்மத்தை

கற்றுக்கொடுத்தார். இன்னுமொரு தேரர் வினயம் எனும் உயர்

ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுத்தார். அப்போது புதிதாக துறவு

பூண்ட இந்த சுவாமி வினயத்திலுள்ள ஒவ்வொரு ஒழுக்க நெறிகளை

கற்கும் போது (துறவு பூண்ட ஒருவர் கடைபிடிக்க வேண்டிய

சீலங்கள்) தன்னுடய சுதந்திரம் வரையறுக்கப்படுவதாக உணர்ந்தார்.

தான் நினைக்கும் விடயங்களை செய்ய முடியாமல் போய்விடுமே,

என நினைத்தார். மனதில் தோன்றிய தாமதத்தினால் இந்த எண்ணம்

இன்னும் இன்னும் வலுப்பெற்றது. மனம் அமைதியிழந்தது. மனம்

பதற்றமடைந்தது. மனதின் இயல்பினை உணர்ந்துக் கொள்ள

முடியாமல் போனது. அப்போது அந்த சுவாமி சீவரத்தை துறப்பதே

தனது விடுதலையாக நினைத்தார். இந்த சுவாமியின் மனதில்

சந்தோஷம் இல்லை என்பதனை உணர்ந்த அவரது ஆசான்மார்கள் அவரை புத்த பகவானிடம் அழைத்து சென்றனர். புத்த பகவான்

அந்த புதிய சுவாமியின் கவலைக்கான காரணத்தை வினவினார்.

தனது உண்மையான இயல்பை மறைக்காது வெளிப்படுத்தும்

ஆஜானெய்ய குதிரையை போன்று, தனது மனநிலையை

வெளிப்படுத்தி அடங்க விரும்பும் உயர்வகையான யானையை

போன்று இந்த சுவாமியும் மிகவும் பணிவுடன் தனது மனதில்

தோன்றிய இழிவான எண்ணத்தை புத்த பகவானிடம் கூறினார்.

“பாக்கியமுள்ள பகவானே, நான் இந்த புத்த சாசனத்தினுள்

நால்வகை பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்

எனும் ஒரே நோக்கத்துடன்தான் துறவு பூண்டேன். அதற்காக நான்

தர்மத்தையும் வினயத்தையும் கற்கும் போது, நான் அதனை

கடினமானதாக உணர்ந்தேன். நான் சிறிது சிறிதாக நெருக்கடிக்கு

உள்ளாகுவதை போல் உணர்ந்தேன். தன் விருப்பப்படி கை

கால்களை கூட நீட்ட முடியாது போன்றுதான் இருக்கிறது. அது

எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனது மனதை ஒருநிலைப்படுத்த

முடியவில்லை. சிதறியபடியே இருந்தது. மனதின் இயல்பினை

இனங்காண்பது மிகவும் கடினம். நான் மீண்டும் இல்லறவாழ்வை

மேற்கொள்வேன். அப்போது என்னால் முன்பு போல் சங்கையருக்கு

பணிவிடை செய்யலாம். புண்ணியங்களையும் செய்யலாம்” என்று

அந்த சுவாமி புத்த பகவானிடம் கூறினார்.

அப்போது புத்த பகவான், இந்த மனதின் இயல்பு தெளிவற்றதாக

மாறுவது பஞ்ச நீவரணங்கள்* மனதை ஆட்கொள்ளும் போது,

என மொழிந்தார். அதேபோன்று இந்த மனதின் இயல்பினை

காண்பது மிகவும் கடினம். இந்த மனதின் செயற்பாடு மிக மிக

நுண்ணியமானது. ஆசை கொள்ளும் எண்ணங்களின் பின்னே

இந்த மனம் சுற்றி சுற்றி போகிறது. ஆசை படும் எண்ணங்களில்

மூழ்கி இருப்பதற்காக இந்த மனம் ஒவ்வொரு வேடங்களை

இட்டுகொள்கிறது. புண்ணியங்களை செய்துகொள்ள வேண்டும் என

இந்த மனம் வேஷமிடுவது இந்த மனம் முன்பு போல் கட்டுப்படாத

நிலையை அடைவதற்காகவே. இதற்கு ஏமாற வேண்டாம். இந்த

*. அரும்பதங்களை பார்க்க

மனதில் உள்ள மாயையான இயல்பினை இணங்காண வேண்டும்.

அதேபோன்று அகுசல தர்மங்கள் இந்த மனதிற்கு வருவதை தடுத்து

பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த மனதை பாதுகாத்துகொண்டு

நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் மனதை நிலைநிறுத்தி கொள்ள

வேண்டும். அப்போதுதான் இந்த மனதினால் எமக்கு பெரும் சுகத்தை

அடைய முடியும்.

சுதுத்தசங் சுனிபுனங் – யத்த காமனிபாதினங்

சித்தங் ரக்கேத மேதாவி – சித்தங் குத்தங் சுகா வஹங்

இந்த மனதை இனங்காண்பது இலகுவாக செய்ய முடியாதது.

நுண்ணியமாக செயற்படும் இந்த மனம் ஆசைபடுவதன் மீதே

ஒட்டிக்கொள்ளும். அறிவுள்ளவர் இந்த மனதை இனங்கண்டு நன்றாக

பாதுகாத்து கொள்ள வேண்டுமே… – நன்றாக பாதுகாத்து கொள்ளும்

இந்த மனதினால் பெரும் சுகத்தை அடைய முடியுமே.

புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, இப்போது

உங்களால் இந்த மனதின் இயல்பினை சிறிதளவேனும் உணர்ந்து

கொள்ளக்கூடியதாக இருக்கும். நாம் நினைப்பதை விட இந்த

மனதை உணர்ந்து கொள்வது மிகவும் கடினமாகும். நாம் இந்த

மனதிற்கு எவ்வளவு ஏமாறுகிறோம்? அப்படி ஏமாறுவது இந்த மனதின்

உண்மையான நிலையை உணர்ந்து கொள்ள முடியாததாலேயே.

மனதை கைகளினால் பிடிக்க முடியாது. விழிப்பு, வீரியம், அறிவு

என்பவற்றினாலேயே இந்த மனதின் இயல்பை பிடித்து கொள்ள

முடியும். அதற்கு காரணம்தான் மனம் மிக மிக நுண்ணியமானது.

ஆனால் அறிவுள்ளவர் மனம் அழுக்கடைவதால் தனது

வாழ்வும் அழுக்கடையும் என்பதனை நன்கு அறிவார். அதனால்

அகுசலங்களுக்கு தனது மனதை இரையாக்க இடமளிக்க மாட்டார்.

அவர் மனதை பாதுகாத்து கொள்வார். இவ்வாறு பாதுகாத்தே மனதை

மோட்சப்பாதையில் இடுவார்.

புத்த பகவான்தான் இந்த மனதை முதன் முதலாக இனங்கண்டு மனதை  வெற்றிகொண்டு இந்த உலகத்தின் முன்னிலையில் அபிமானத்துடன்

எழுந்து நின்றவர். மனதிற்கு அடிமையாகிய உலகத்தோருக்கு இது

நம்பமுடியாத ஆச்சரியமிகுந்ததாக இருந்தது. பொதுவாக சம்சாரத்தில்

உழலும் உயிர்கள் தம் வாழ்வினை உய்த்துணராதவர்களே. ஆகையால்

இந்த உயிர்கள் எந்நேரமும் யதார்த்த உய்த்துணர்வு இல்லாததால்

இருளுக்கே இழுத்து செல்லப்படுகின்றன. இவற்றிலிருந்து மீள

வேண்டுமாயின் யதார்த்தத்தை உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்.

புத்த பகவான் பாரதம் முழுவதும் பயணஞ்செய்து இந்த உத்தம

தர்மத்தை போதித்தது இந்த மனதை வெற்றி கொள்வதற்கே. இந்த

மனதை கட்டுப்படுத்துவதற்கே. மனதிற்கு வசியமான அனைவரையும்

அந்த மனதில் இருந்து விடுதலை செய்வதற்கே. புத்த பகவானது

இந்த தர்மத்தினால் மனிதர்கள் பெற்றுகொண்ட உள்ளக ஆற்றல்

ஆச்சரியமானது. மனதை ஜெயிக்க முடியாமல் பின்தங்கியிருந்த

மக்கள் அந்த மனதையே ஜெயித்ததால் அபிமானத்துடன் எழுந்து

நின்றார்கள். இவ்வாறு நடந்திராவிட்டால் இந்த உலகில் ஒருபோதும்

அரஹத்நிலையை அடைந்தவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.

அரஹத் உத்தமர்கள் எனப்படுவோர். இந்த மனதை அடக்கிய, மனதை

வெற்றிகொண்ட, மனதிற்கு வசியமாகாத, மனதிற்கு அடிமையாகாத

அபிமானம் மிக்கதாக தம் அகத்தை விருத்தி செய்துகொண்ட

மனித ரத்தினங்கள் ஆவார்கள். ஆகையால் அதற்கான வழியை

புத்த பகவான் காட்டுகையில் ஆச்சரியமிகுந்த ஒரு மனித வரலாறு

தோன்றியது என்றால் அது மிகையில்லை.

அன்று பாரத தேசத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் இந்த புத்த

சாசனத்தின் மீது மையல் கொண்டனர். புத்த பகவானிடம் உன்னத

துறவறத்தை மேற்கொண்டனர். மனதை அடக்கினார்கள். மனதை

வெற்றிகொண்டார்கள். உத்தம நிலையான அரஹத் நிலையை

உறுதி செய்தார்கள். அது மாத்திரமல்ல. அவர்கள் ஆகாயத்தில்

பயணித்தார்கள். நீரின் மேல் நடந்தார்கள். நிலத்தினுள் மூழ்கினார்கள்.

இருத்தி ஆற்றலினால் இந்த சூரிய சந்திரனைக்கூட ஸ்பரிசித்தார்கள்.

கட்புலனாகாத உலகத்தோரிடம் பேசினார்கள். தேவர்களுடன்

உரையாடினார்கள். சேய்மையில் இருக்கும் உயிர்களிடம் தான் இருக்கும் இடத்திலிருந்தே பேசினார்கள். ஏனையோரது மனதின்

இயல்பினை நன்கு அறிந்துகொண்டார்கள். தான் இதுவரை சம்சார

பயணத்தின் போது பிறந்த பிறப்புக்களை அறிந்துகொண்டார்கள்.

அனைத்து விதமான கிலேசங்களிலிருந்து விடுதலையும்

அடைந்தார்கள். இவ் அனைத்தையும் புற உலகின் உபகரணங்களின்

உதவியால் செய்யவில்லை. மனதை வெற்றிகொள்வதன் மூலமே

செய்தார்கள். மனதை ஜெயித்த ஒருவருக்கு ஜெயிக்க முடியாத

வேறேதுவும் உண்டோ…?

சாது! சாது!! சாது!!!

ஐந்தாவது செய்யுள்

பாகினெய்ய சங்கரக்கித தேரரின் கதை

மனதை அடக்கிகொண்டால் மாரனது பிணைப்பிலிருந்து தப்பலாம்.

புண்ணியமிக்கவர்களே,

மனம் வழிதவறி போவதால்தான் அனைவரும் துன்பத்திற்கு

உள்ளாகிறார்கள். நாம் வழிதவறிவிட்டோம் என்பதனை இந்த

மனதின் இயல்பினால் அறிந்து கொள்ளவும் முடியாது. அதனாலேயே

பெரும்பாலான உயிர்கள் சம்சாரத்திலிருந்து மீளாமல் மென்மேலும்

துன்பத்திற்குள்ளாகின்றனர். மனம் வழிதவறி பிழையான வழியில்

செல்லும் போது அதனை உணராவிட்டால் புகையினால்

மூடப்படுவது போன்று அனைத்து குசல தர்மங்களும் மறைந்துவிடும்.

இருள் சூழுவதை போன்று பாவங்கள் சூழ்ந்துகொள்ளும்.

சத்புருஷர்களுடைய துணையின்றி மனதை தூய்மையாக்கி

கொள்வதானது நினைத்து கூட பார்க்க முடியாததாகும்.

அதிஷ்டமுள்ளவர்கள் இறுதி நேரத்திலாவது தப்பித்து கொள்வார்கள்.

இவ்வாறு வழிதவறிய மனதினால் பெருந்துயர்க்கு ஆளாகவிருந்த

ஒருவர் அதனின்று தப்பிய ஒரு சம்பவமே இங்கு குறிப்பிடப்படுகிறது.

சாவத்திய நகரில் ஷசங்கரக்கித0 எனும் பெயர் கொண்ட ஒரு தேரர்

இருந்தார். அவர் அரஹத் நிலையை அடைந்த ஒரு மகா தேரர்.

அவரது நடத்தைகள், மனம் குளிர வைக்கும் பேச்சு, கிடைத்ததை

இட்டு மகிழ்ச்சியடையும் சரளமான வாழ்வு, என்பவற்றை காணும்

அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் மிகவும்

மகிழ்ந்தனர். தம் உறவினரான இந்த சங்கரக்கித தேரர் இந்த புத்த

சாசனத்தில் ஏதேனும் உயர்ந்த ஞானநிலையை அடைந்திருப்பார்

என அனைத்து உறவினர்களும் நம்பினர். இந்த சங்கரக்கித தேரருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள்

மும்மணிகள் மீது மிகவும் பக்தி கொண்டவள். சீலங்களை

அனுஷ்டித்து ஒழுக்கமாக வாழ்பவள். தியானங்கள் செய்பவள்.

உத்தம தர்மத்தையும் கற்றுணர்ந்தவள். அவள் கருவுற்றிருக்கும்போது

அடிக்கடி இவ்வாறு சிந்திக்கலானாள். ஷஎனக்கு ஒரு மகன் பிறந்தால்

அவனை எனது சகோதர தேரரிடமே துறவு பூணச்செய்ய வேண்டும்00

என்று. அதிஷ்டவசமாக அவளுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை

பிறந்தது. தன் சகோதர தேரர் மீதுள்ள அதீத பக்தியினால்

தன் குழந்தைக்கு சங்கரக்கித எனும் பெயரையே சூட்டினாள்.

அந்த மகா தேரரின் சகோதரியின் மகன் என்பதால் அனைவரும்

அந்த குழந்தையை பாகினெய்ய சங்கரக்கித என்றே அன்புடன்

அழைத்தனர். தன் மகன் வளர்ந்து தக்க வயது வந்தவுடன் தன்

சகோதர தேரரிடமே தன் மகனையும் துறவு பூணச்செய்தாள். இந்த

பாகினெய்ய சங்கரக்கித தேரர் மிகவும் பணிவுள்ளவர். அதேபோல்

தன் உறவினாரன மகா தேரர் மீது மிகவும் அன்பு செலுத்தினார்.

அவர் மீது அதீத குருபக்தி கொண்டவராகவும் இருந்தார்.

ஒருநாள், இந்த பாகினெய்ய சங்கரக்கித எனும் இளமையான பிக்கு தன்

குருதேவரை வணங்கி அனுமதி பெற்று ஏனைய சங்கையருடன் தர்ம

யாத்திரை சென்றார். தொலைபிரதேசத்தில் வஸ்* அனுஷ்டித்து மாரி

காலத்தில் தங்கினார்கள். மாரி காலம் முடிவுற்ற பின்னர் மீண்டும் தர்ம

யாத்திரை செல்ல தயாராகும் போது உபாசகர்கள் அந்த பிக்குவிற்கு

பன்னிரெண்டு அடி நீளமுள்ள ஒரு வஸ்திரத்தையும் பத்து அடி

நீளமுள்ள ஒரு வஸ்திரத்தையும் பூஜித்தனர். பாகினெய்ய சங்கரக்கித

தேரர் இந்த வஸ்திரங்களை ஏற்கும் போதே தன் குருதேவரைத்தான்

நினைவுகூர்ந்தார். அவர் இந்த வஸ்திரங்களை கையிலேந்தியபடி

ஷஷஎனக்கு நல்ல அதிஷ்டதம்தான். இந்த தாயகர்கள் எனக்கு சிறந்த

வஸ்திரங்களையல்லவா பூஜித்தார்கள். நான் இந்த பனிரெண்டு அடி

நீளமுள்ள இந்த வஸ்திரத்தை எனது குருதேவருக்குத்தான் அளிக்க

வேண்டும். இந்த வஸ்திரம் அவருக்குதான் மிகவும் உசிதமானது.

*.சங்கையர் மாரி காலத்தில் யாத்திரை செல்ல மாட்டார்கள். ஓரிடத்தில் தங்கியிருந்து மாரி காலத்தில் அனுஷ்டிக்க வேண்டிய சீலங்களை அனுசரித்துக் கொண்டு சீலம், சமாதி, பிரக்ஞை என்பன மேன்மை செய்து கொள்வார்கள். இதுவே வஸ் அனுஷடிப்பு எனப்படும்.

இந்த வஸ்திரத்தினால் ஒரு சீவரத்தை தயாரித்து அதனை நிறமூட்டி

குருதேவருக்கு பூஜிக்க வேண்டும். இந்த சீவரத்தை அவர் தரித்தவுடன்

அவரது சாந்தமான தோற்றம் இன்னும் இன்னும் அதிகரிக்கும். நான்

மிகவும் அதிஷ்டசாலியாவேன். தர்ம யாத்திரையை முடித்து கொண்ட இந்த பாகினெய்ய சங்கரக்கித

தேரர் மிகவும் சந்தோஷத்துடன் தன் குருதேவரை காணச்சென்றார்.

தன் உறவினரான குருதேவர் அனைத்து கிலேசங்களையும் அழித்த

அரஹத் தேரர் என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை. அவரின்

மனதில் லௌகீக விடயங்கள் தொடர்பான எவ்வித ஆசையுமில்லை

என்பதனையும் அவர் அறியாதவராகவே இருந்தார். தான் கொண்டு வந்த

வஸ்திரத்தை குருதேவரிடம் அன்பும் பக்தியும் மேலிட்டு பூஜித்தார்.

ஆனால் குருதேவரின் முகத்தில் எவ்வித மாற்றமும் தெரியவில்லை.

தனக்கு அளித்த அந்த வஸ்திரத்தை மீண்டும் பாகினெய்ய

தேரரிடமே திருப்பிகொடுத்தார். தான் வெகு தொலைவிலிருந்து

கொண்டுவந்து அன்புடனும் கௌரவத்துடனும் அளித்த இந்த

சீவரத்தை குருதேவர் ஏற்காததற்கு காரணம் என்ன? அவர் ஏன்

இந்த பெறுமதியான வஸ்திரத்தை கண்டு ஆனந்தமடையவில்லை..?0

என்று இந்த சாமணேர பிக்கு சிந்திக்கலானார். குருதேவர் இந்த

சாமணேர பிக்குவின் மனதில் தோன்றிய கவலையை உணர்ந்தார்.

உணர்ந்து அவரை சந்தோஷப்படுத்துவதற்காக தனக்கு சாமரம்

வீசுமாறு பணித்தார். இந்த பாகினெய்ய சங்கரக்கித சாமணேர

தேரருக்கு மிகவும் கவலையாக இருந்தது.  குருதேவருக்கு சாமரம் வீசிக்கொண்டே சிந்திக்க துவங்கினார்.

“இப்போது எனது குருதேவருக்கு என் மீது அன்பில்லை. நான்

தொலைவிலிருந்து வந்தேன், என்று கூட என்மீது எவ்வித விசேட

கருணையும் காட்டவில்லை. நான் கொணர்ந்த வஸ்திரங்களையும்

ஏற்கவி;ல்லை. குருதேவருக்கு நான் இப்போது செய்யும் பணிவிடைகள்

கூட பிடித்திருக்காது. அவருடைய கருணையும் அன்பும் கிடைக்காத

இந்த துறவு வாழ்வின் பயன் என்ன? நான் தரித்திருக்கும் இந்த  சீவரத்தின் பயன் என்ன? மென்மேலும் நான் இங்கு இருப்பதில் எவ்வித

பயனுமில்லை. இவ்வாறாக இந்த சாமணேர தேரர் மனம் பிழையான

வழியில் செல்லும் வண்ணம் சிந்திக்க துவங்கினார். அயோனிசோ

மனசிகாரத்தில்* தொடர்ந்தும் ஈடுபடுகிறார். இதுவரை பிறவாதிருந்த

அகுசலங்கள் அந்த சாமணேர தேரரின் மனதில் சிறிது சிறிதாக

தோற்றம் பெறத்துவங்கியது. விழிப்புணர்வின்றி சிந்திக்க துவங்கும்

இந்த பிக்குவால் தன் மனம் பிழையான வழியில் செல்கிறது

என்பதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை. தன் குருதேவருக்கு

சாமரம் வீசிக்கொண்டே இந்த சாமணேர தேரர் ஒரு கனவு உலகில்

சஞ்சரிக்க துவங்கினார். “ஆம்… நான் வீட்டிற்கு செல்வேன். குருதேவரின் அன்பு இல்லாத

இந்த துறவு எனக்கு தேவையில்லை. நான் திரும்பி வீட்டுக்கு

செல்ல வேண்டும். அதைத்தான் நான் செய்ய வேண்டும். வீட்டிற்கு

சென்றவுடனே செல்வம் ஈட்டுவது என்பது இயலாத காரியம். ஆனாலும்

எனது கைகால்களில் பலமிருக்கிறது. நான் சோம்பேறியல்ல

என்னால் நன்கு வேலை செய்ய முடியும். செல்வம் ஈட்டுவதற்கு

இலகுவான வழி என்ன? ஆம்… ஒரு பசுவை வளர்க்க வேண்டும்.

இப்போதிருக்கும் பசுக்கள் விரைவாகவே கருவுறுகின்றன அல்லவா…?

எனவே சிறிது காலத்திற்குள்ளேயே நிறைய கன்றுக்குட்டிகளையும்

பெற்றுக்கொள்ளலாம். ஆனால்… பசு மாட்டினை வாங்குவதற்கு

பணம்…? வீட்டிலுள்ளவர்களிடம் திடீரென்று பணம் கேட்டால் அவர்கள்

எப்படி பணம் கொடுப்பார்கள்? ம்ம்ம்.. என்ன செய்யலாம்…? ஆம்… வழி

பிறந்துவிட்டது… ஆம் நான் இந்த வஸ்திரங்களை விற்க வேண்டும்.

இவை பெறுமதியானவையாதலால் எனக்கு ஒரு பசுவினை விலை

கொடுத்து வாங்கக்கூடியதாக இருக்கும். அந்த பசு கன்றுக்குட்டியை

ஈன்ற பின்னர் எனக்கு தினமும் பால் கிடைக்கும். நான் அந்த

பாலை விற்பேன். சிறிது காலத்திலேயே நான் நிறைய பணத்தை

சேர்த்துவிடலாம். என்னை போன்ற வீரியமுள்ள, முயற்சிகொண்ட

ஆண்களை யாரும் விரும்புவார்கள். அதனால் நான் நல்லதொரு

குடும்பத்தில் பிறந்த அழகிய பெண்ணை மணந்துகொள்ள வேண்டும்.

*. தர்மத்திற்கு புறம்பாக மனம் தீய வழியில் செல்லும்படி சிந்தித்தல்

அழகிய வீடு ஒன்றை கட்டிக்கொள்வேன். வீட்டை சுற்றி ஒரு சேனையை

செய்ய வேண்டும். அதனை பருவ காலங்களுக்கு பயிரிட வேண்டும்.

ஏன்.. அது மாத்திம் போதாது. வயல் ஒன்றையும் செய்து பயிரிட

வேண்டும். இவ்வாறாக எனக்கு என்றே அழகானதொரு உலகை

உருவாக்கிகொண்டு சஞ்சரிப்பேன்… ம்ம்ம்… எனக்கு ஆண்பிள்ளைகள்

தான் மிகவும் பிடிக்கும். திருமணம் முடித்து சிலகாலம் கழிந்த

பின்னர் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்த பின்னர் இதுவரை

யாரும் வைத்திராத அழகிய பெயர் ஒன்றை சூட்டுவேன்.

எனது மகனையும் மனைவியையும் நன்றாக அலங்கரித்து

கொண்டு இவற்றை விட சிறந்த சொகுசான வஸ்திரங்களையும்

வேறு தானமளிக்க கூடிய பொருட்களையும் எடுத்து கொண்டு

எனது குரு தேவரை காண வருவேன். அப்படியிருக்கும் என்னை

பார்த்து என் குருதேவர் மிக்க மகிழ்ச்சி கொள்வார். அப்படி வரும்

போது… மாட்டுவண்டியில் அல்ல… ம்ம்ம்… குதிரை வண்டியில்

வரவிருந்தால் மிகவும் நல்லது. அந்த குதிரை வண்டியில் ஏறும்

போது தவறுதலாகவேனும் என் மனைவி கையிலிழுந்து என் மகன்

கீழே விழுந்துவிட்டால்… பிறகு மன்னிப்பே இல்லை. இதனாலேயே

ஓங்கி தலையில் அடித்துவிடுவேன்00 என நினைத்தவாறு காற்று

வீசிக்கொண்டிருந்த சாமரத்தினால் தன் குருதேவருடைய தலையில்

ஓங்கி அடித்துவிட்டார். சாமணேர பிக்கு அப்போதுதான் இந்த

உலகிற்கு வந்தார். அதிர்ச்சியால் கண்கள் பெரிதாகின. முழு

உடம்பும் சிலிர்த்து நடுங்க ஆரம்பித்தது. சுயவுணர்விற்கு வந்தார்.

‘ஐயகோ… நான் இவ்வளவு அன்பு செலுத்தும், கௌரவிக்கும்

எனது குருதேவரையா அடித்தேன்…?” குருதேவர் கண்களை திறந்தார்.

அமைதியாக புன்னகைத்தார். சாமணேர பிக்குவை புன்னகையுடன்

திரும்பி பார்த்தார். ஷஷஹ்ம்ம் சங்கரக்கித… மனைவியை அடிக்க

முடியாததால் எம்மையல்லவா அடித்தீர்…!” என்று நகைப்புடன்

கூறினார். பாகினெய்ய சங்கரக்கித தேரர் வெட்கித் தலை குனிந்தார்.

சாமரத்தை கீழே வைத்தார். தன் குருதேவரை வணங்கினார்.

வணங்கி திரும்பி ஓட முயற்சித்தார். ஆரணியத்தில் இருந்த ஏனைய

பிக்குமார்கள் இந்த சாமணேர தேரரை ஓடவிடாது தடுத்து நிறுத்தி

கொண்டனர். பதற்றமடைந்திருந்த அவரை அமைதிபடுத்தினார்கள்.

குருதேவர் இந்த சாமணேர பிக்குவை அன்புடன் அழைத்தார்.

“சங்கரக்கித இந்த மனதின் இயல்பு இப்படித்தான். இதனை

நினைத்து பதற்றப்பட அவசியமில்லை. துறவை துறந்துவிட நினைக்க

வேண்டாம். வெட்கப்படவும் வேண்டாம். நாம் எமது பாக்கியமுள்ள

புத்த பகவானை காணச்செல்வோம். புத்த பகவானிடம் இந்த மனதை

மேன்மையுறச்செய்யும் தர்மத்தினை கேட்டறிந்து கொள்வோம்.” என்று

கூறி தம் சீடருடன் புத்த பகவானை காணச்சென்றார்.

மகா கருணையாளரான புத்த பகவான் இந்த மனதில் உள்ள

அபாயகரமான தன்மையை அனுதாபம் கொண்டு போதித்தார்.

மனம் தொடர்பாக தெளிவாக புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில்

ஒரு செய்யுளை இனிமையான குரலில் மொழிந்தருளினார். புத்த

பகவானது சகலதுக்க நிவாரண ஓளடதமான தர்மத்தை செவிமடுத்த

சாமணேர தேரர் மிகவும் சந்தோஷமடைந்தார். அவரது மனம் முன்பு

ஒருபோதும் இருந்திராதளவு அமைதியடைந்தது. மீண்டும் மனம்

தர்மத்தை நோக்கி திரும்பியது. குருதேவர் தான் கொணர்ந்த வஸ்திரத்தை ஏற்காதது, தன் மீது

கொண்ட கோபத்தினாலல்ல என்பதனை உணர்ந்தார். தன்னுடைய

குருதேவர் இந்த அனைத்து உலகிலிருந்தும் விடுபட்ட ஒரு உத்தமர்

என்பதனையும் உணர்ந்தார். அதேபோன்று உலகியல் விடயங்களில்

பற்றில்லாமல் இருப்பது எவ்வளவு மேன்மையான விடயம் என்பதனையும்

உணர்ந்தார். மோட்சத்தை உறுதி செய்ய வேண்டும். அனைத்து

துக்கங்களிலிருந்தும் முழுமையாக நீங்க வேண்டும் எனும் தேவையும்

அவரது மனதிலே நிலைகொண்டன. நால்வகை விழிப்புணர்வு

நிலைகளிலே மீண்டும் தம் மனதை நிலைநிறுத்தி கொண்டார். மிகுந்த

வீரியத்துடன் தர்மத்தை பின்பற்றலாயினார். தவறான வழியில் போன

தமது மனதினை கட்டுப்படுத்தி கொண்டார். சாமணேர தேரரின்

முயற்சி வீண்போகவில்லை. சிறிது காலத்திலேயே பிணைப்புகள்,

துக்கங்கள், பிறப்புகள் எனும் அனைத்து துன்பங்களிலிருந்தும்  முழுமையாக நீங்கிவிட்டார். மாரனது பிணைப்பிலிருந்து முற்று

முழுதாக நீங்கிவிட்டார். உன்னதமான அரஹத்நிலையை அடைந்த

மகா தேரரானார்.

தூரங்கமங் ஏகசரங் – அசரீரங் குஹாசயங்

யே சித்தங் சஞ்ஞமெஸ்ஸன்தி – மொக்கந்தி மாரபந்தனா

இந்த மனம் நீண்ட பயணங்கள் செல்லும்

தனிமையாகவே சஞ்சரிக்கும். உருவமில்லாத இந்த மனம்

உடலென்னும் குகைக்குள் வசிக்கிறது. எவரேனும் ஒருவர்

இந்த மனதின் உண்மை நிலையை உணர்ந்து முறையாக

கட்டுப்படுத்துவாராயின் அவர் மாரனது பிணைப்பிலிருந்து இலகுவாக

விடுதலையடைந்து விடுவார்.

புண்ணியவர்களே, இன்று மட்டுமல்ல. அக்காலத்திலும் இந்த

மனதின் இயல்பு இவ்வாறுதான் இருந்திருக்கிறது. மனம் பயணிக்கும்

பயணங்களுக்கு எல்லைகளே இல்லை. நினைப்பதற்கு ஆரம்பித்தால்

எம் மனம் பயணிக்கும் தூரத்தை எம் யாராலும் கணித்து கூற

முடியுமா? முடியாது. பாருங்கள், அந்த சாமணேர தேரரின் மனம்

எவ்வளவு தூரம் பயணித்தது என்று. தனது குருதேவரையே

சாமரத்தினால் அடிக்கும் வரை அவர் தான் எங்கிருந்தோம்

என மறந்த நிலையிலேயே இருந்திருக்கிறார். இந்த சாமணேர

தேரர் சிந்தித்ததை போன்று நாம் சிந்திப்பது இல்லையா? ஆம்…

சிந்திக்கிறோம். மனதினால் வீடுகள் கட்டுகிறோம். திருமணம்

செய்கிறோம். பரீட்சைகளில் சித்தியடைகிறோம். வாகனங்கள்

வாங்குகிறோம். மனக்கோட்டைகள் கட்டுகிறோம். ராஜா ராணி கூட

ஆகிறோம். இவ்வாறாக மனதினால் செய்யாதது எதுவுமே இல்லை.

இந்த மனம் மிக மிக வேகமாக ஒவ்வொரு எண்ணங்களுடன்

சிக்கிகொள்கிறது. நூல் பந்தினை விடவும் சிக்கலாகிறது.

மாயைமிகுந்தது. அந்த மாயையினுள் சிக்கிய பின்னர் அதிலிருந்து

மீள்வது என்பது மிகவும் கடினமாகும். நான் இப்போது எங்கு இருக்கிறேன்? எனது தராதிரம் என்ன? எமது நிலை என்ன

என்ற எண்ணம் கூட மனதில் இருக்காது. இந்த மாயாஜாலம்

மிகுந்த மனம் வித்தைகாரனை போல் அனைத்து உயிர்களையும்

ஏமாற்றுகிறது. தானே உருவாக்கிகொள்ளும் கனவு உலகங்களில்

வாழ்வதற்கு எம்மிள் எத்தனை பேர் விரும்புகிறோம்.? அந்த

கனவு உலகிலிருந்து திரும்பி சுயவுணர்விற்கு திரும்பும் போது

நாம் இதுவரை நினைத்த விடயங்கள் தொடர்பாக நாமே

வெட்கித்துகொள்கிறோம். இந்த மனம் தனிமையாகவே செயற்படுகிறது. பல்வகையான

எண்ணங்களை தோற்றுவித்துகொண்டு அதனுள் வாழ்வதற்கே

நாம் முற்படுகிறோம். இந்த மனதிற்கே உரிய ஒரு உருவம்

இல்லாததால்தான் இந்த மனம் தன் இஷ்டப்படி சிந்தித்து

கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மனம் உடல் எனும்

குகையில்தான் வசிக்கிறது. இந்த மனதில் உள்ள மாயாஜால

இயல்பினை கண்டு இந்த மனதை ஒருவர் அடக்குவாராயின்

அவர் ஒரு மகா வீரராவார். ஞானமுள்ளவராவார். அத்தனை

திறமைகளையம் கொண்டவராவார். இதுவரையிலும் சென்றிராத

மோட்சத்திற்கு அவரால்தான் செல்ல முடியும். அவர்தான் மாரனது

பிணைப்பிலிருந்து முழுமையாக விடுதலை அடைந்தவராவார்.

நாமும் இந்த மனதின் மாயைகளுக்கு அகப்படாமல் மாரனது

பிணைப்பிலிருந்து நீங்க முடியுமானால் எவ்வளவு பெரிய அதிஷ்டம்?

புத்த பகவான் விழிப்புணர்வு தொடர்பாக மொழிந்த ஒரு

போதனையில் ஷசித்தானுபஸ்ஸனா0 எனும் ஒரு தியானம் தொடர்பாக

மொழிந்துள்ளார். அந்த தியானத்தில் புத்த பகவான் மனதை

பற்றி சிறப்பாக விளக்கி கூறியுள்ளார். தன் மனதை விழிப்புடன்

அவதானித்து கொண்டிருக்கும் ஒருவரால் இந்த மனம் பல்வேறு

ஆசைகளினால் சுழன்று மாசுறுவதை இனங்காண முடியும்.

அப்படியிருக்கும் அவரால் அந்த மாசுகளிலிருந்து தன் மனதை

பாதுகாத்து கொள்ளவும் முடியும். சிலவேளைகளில் மனதிற்கு

கோபம் வரும். அப்போது இந்த மனதில் மிகவும் மாயாஜாலம்.

மிகுந்த வண்ணம் கோபம் தோற்றுவித்து கொடுக்கப்படும். ஒருவர்

மனம் தொடர்பாக விழிப்புடன் கூடிய அவதானத்துடன் இருக்காவிடில்

தன்னையறியாமலே கோபத்திற்கு இரையாகிவிட வேண்டியதுதான்.

அதேபோன்று பயம், நடுக்கம், வைராக்கியம், பகைமை, ஏனையோரை

நிந்தித்தல், பழிவாங்கல், ஏனையோரை இகழ்தல், போன்ற பல்வேறு

அகுசலங்கள் இந்த மனதிலே தோன்றுகின்றன. இவ்வாறான

அகுசலங்களினால் வழிமாறிப்போகும் வாழ்க்கைகள் ஆயிரம்

ஆயிரம். நாம் இவற்றை உணர்ந்து இந்த மனதிற்கு அடிமையாகாமல்

தர்மத்தினால் எமது வாழ்வினை உன்னதமாக்கி கொள்வோம்.

சாது! சாது!! சாது!!!

ஆறாம் ஏழாம் செய்யுள்கள்.

சித்தஹத்த தேரரின் கதை

மூட பக்தியால் ஞானம் வளராது.

புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, எமக்கு

புத்த பகவானது தர்மத்தை செவிமடுக்க கிடைக்கும் போது அந்த

தர்மத்தை செவிமடுத்து அதனை அறிவால் ஆராய வேண்டும்.

அறிவினால் ஆராய்ந்து பார்த்துதான் தர்மத்தின் மீது பக்திகொள்ள

வேண்டும். விருப்பு கொள்ள வேண்டும். அப்படியான விருப்பு

இருந்தால் மாத்திரம்தான் எம்மால் மீண்டும் மீண்டும் தர்மத்தை

செவிமடுப்பதற்கு, கற்றுக்கொள்வதற்கு, அறிவினால் ஆராய்வதற்கு

விருப்பு தோன்றும். இதன் மூலம் எமது பிரக்ஞை வளரும். பிரக்ஞை

வளரும் போது தர்மத்தை உய்த்துணர வேண்டும், எனும் தேவை

எம் மனதில் நிலைத்துவிடும். இந்த இலட்சணங்கள் இல்லாத ஒருவர்

துறவு பூண்டிருந்தாலும் பயனில்லை. அவர் சரியான முறையில்

தர்மத்தை பயிற்றுவிக்காததால் ஞானம் வளராது. வீரியமும் வளராது.

தர்மத்தின் மீது மனம் உறுதியாக நிலைக்காது. இவ்வாறான

ஒருவர் கூட முயற்சியினாலும் இலட்சியத்தினாலும் செயற்பட்டால்

இந்நிலையை வெற்றிகொள்ள முடியும். அதனை இந்த கதை மூலம்

நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

அந்த காலத்தில் சாவத்திய நகரில் ஒரு விவசாயி இருந்தார்.

இவருக்கும் அரஹத் தேரர்களின் மூலம் உத்தம தர்மத்தை

செவிமடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. செவிமடுத்த அந்த தர்மத்தின்

மீது பக்தியும் தோன்றியது. ஆனால் அந்த பக்தி அறிவினால்

தர்மத்தை ஆராய்ந்ததால் ஏற்பட்டதன்று. அறிவினால் ஆராயததால்

மனம் தர்மத்தினுள் உறுதியாக நிலைபெறவில்லை. ஆனால் இந்த விவசாயிற்கும் துறவு பூண வேண்டும் எனும் ஆசை பிறந்தது. ஒருநாள்

இவர் தன் வீட்டாரிடம் அனுமதி பெற்று துறவு பூணுவதற்காக

புறப்பட்டார். அவ்வாறு புறப்படும் போது அவர் கம வேலைகளுக்காக

பயன்படுத்திய மண்வெட்டியை ஒரு புதறில் மறைத்து வைத்து

புறப்பட்டார். புறப்பட்டு சங்கையரின் மூலம் துறவு பூண்டார். துறவு பூண்டு சிலநாட்கள் கடந்து செல்லும் போது இவரின் மனதில்

தர்மத்தின் மீது கொண்டிருந்த பக்தி மாற்றமடைந்தது. அவரது

மனைவி நினைவிற்கு வந்தாள். தான் இல்லாததால் மனைவி

ஒழுக்கம் தவறுவிடுவாள் எனும் எண்ணமும் தோன்றியது. இந்த

சுவாமி தன்னுள் பிறவாத காம ஆசை தோன்றும் வண்ணம்

மூர்க்கத்தனமாக சிந்திக்க ஆரம்பித்தார். அவருள் அகுசல தர்மங்கள்

வேகமாக வளர ஆரம்பித்தது. அவற்றை அழிப்பதற்கு போதுமான

அளவு வீரியம் அவருள் இருக்கவில்லை. தியானம் செய்வதற்கு

அமர்ந்தவுடன் மறைத்து வைத்த மண்வெட்டி ஞாபகத்திற்கு வந்தது.

மனைவி, வீடு, வாசல் என பஞ்ச காமத்திற்குரியன நினைவிற்கு

வந்தன. அரதி எனும் தர்மத்தின் பயணிப்பதற்கான விருப்பமின்மை

மனதில் வலுப்பெற்றது. தர்மத்தின் மீதிருந்த விருப்பு இல்லாமல்

போய்விட்டது. இவர் இரகசியமாகவே சீவரத்தை துறந்து மறைத்து

வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

துறவு பூணச்சென்ற தனது கணவன் மீண்டும் வயலில் வேலை

செய்வதை பார்த்த மனைவி மனமகிழ்ந்தாள். விதம் விதமான

உணவுகளை நன்றாக சமைத்து கணவனுக்கு கொடுத்து பணிவிடை

செய்தாள். ஆனால் சிறிது காலம் செல்லும் போது மனைவி மீண்டும்

இகழ்ந்து பேச ஆரம்பித்தாள். அப்போது மீண்டும் அந்த விவசாயிக்கு

இந்த இல்லற வாழ்வு வெறுத்தது. ஷஷஉன்னுடன் வாழும் இந்த

வாழ்விலும் பார்க்க ஐயமேற்று தனிமையாக வாழும் வாழ்க்கை

எவ்வளவோ மேல்00 என்று மீண்டும் மண்வெட்டியை எடுத்து கொண்டு

புறப்பட்டார். அந்த புதரினுள் மீண்டும் அந்த மண்வெட்டியை மறைத்து

வைத்து சங்கையரிடம் சென்று துறவு பூண்டார்.

சிறிது காலம் கழிந்தது. மீண்டும் இல்லற வாழ்வு நினைவிற்கு

வந்தது. மனைவி சமைத்து கொடுக்கும் உணவுகளின் சுவை

ஞாபகத்திற்கு வந்தது. மனைவியின் அன்பு மொழிகள் ஞாபகத்திற்கு

வந்தன. ஷஷஐயோ…என்னால் தியானம் செய்வதற்கு முடியவில்லையே.

மனம் சிதறுகிறதே. வீட்டிற்கு சென்று நிம்மதியாக இருக்கவிருந்தால்

எவ்வளவு நல்லது…!00 என நினைத்தார். இந்த சுவாமிக்கு பலத்த

வீரியம் கொள்ளும் ஆற்றல் இருக்கவில்லை. மனம் சிதறும் போது

பதற்றமடையாமல் இருப்பதற்கான திறமை இருக்கவில்லை. காம

எண்ணங்கள் தோன்றும் போது நால்வகை சதிபட்டான தர்மத்தினுள்

மனதை நிலைபடுத்தும் திறமை இருக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு

ஏற்றவாறு போதிதர்மங்களினுள் மனதை நிலைபடுத்த முடியவில்லை.

மீண்டும் மண்வெட்டி நினைவிற்கு வந்தது. இரகசியமாகவே துறவை

துறந்தார். துறவை துறந்து மண்வெட்டியையும் எடுத்து கொண்டு

மீண்டும் வீட்டிற்கு சென்றார். அன்று மனைவிற்கு மிகவும் சந்தோஷ

மாக இருந்தது. அன்பு மொழிகள் பேசினாள். அன்புடன் உபசரித்தாள்.

சுவையான உணவுகளை சமைத்து கொடுத்தாள். சிறிது நாட்கள்

தான் கழிந்தன. மீண்டும் மனைவி ஏளனமாகவும் இகழ்ந்தும் பேச

ஆரம்பித்தாள். மனைவியின் மாறுதல்களுக்கு முகங்கொடுக்க

வேண்டியதாயிற்று. ஷஷஉன்னோடு வாழும் இந்த வாழ்க்கையை விட மர

நிழலில் தனிமையாக இருப்பது எவ்வளவோ சுகம்00 என கூறியவாறு

மண்வெட்டியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

முன்னரை போன்றே மண்வெட்டியை அந்த முற்புதரில் மறைத்து

வைத்து மீண்டும் துறவு பூண்டார். துறவு பூண்ட முதல் நாட்களில்

இந்த சுவாமி மிகவும் நன்றாக இருப்பார். ஆனாலும் பக்தியை

நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. வீரியத்தை நிலைநிறுத்தி

கொள்ளவும் முடியவில்லை. மனதை உறுதியாக தர்மத்தினுள்

நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. மீண்டும் வீடு நினைவிற்கு

வந்தது. ஷஷஎன்னவானாலும் அவள் எனது ஒரே மனைவியல்லவா?

எனக்கு விதம் விதமான உணவினையும் தயாரித்து கொடுப்பாள்.

அன்பு மொழிகள் பேசுவாள். எந்த வீட்டில்தான் சிறு சிறு தகராறுகள்

இல்லை? நான் மட்டும் ஏன் அபூர்வமாக வெறுப்படைய வேண்டும்”

இவ்வாறு நினைத்து கொண்டிருக்கும் இந்த பிக்குவிற்கு நால்வகை

சதிபட்டான தர்மங்கள் மறந்து போயின. முற்புதரில் மறைத்து வைத்த

மண்வெட்டிதான் ஞாபகத்திற்கு வந்தது. மீண்டும் துறவை துறந்து

மண்வெட்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இவ்வாறாக

இந்த பிக்கு ஆறு தடவை சீவரத்தை துறந்தார். மனதில் கொண்டிருந்த

மும்மணிகள் மீதான பக்தி மிக விரைவாகவே மாற்றமடைந்துவிடும்.

அவரால் திடமான ஒரு இலட்சியத்தை ஏற்படுத்தி கொள்ள

முடியவில்லை.

இவ்வாறாக வீட்டில் இருக்கும் போது ஒருநாள் வயலிற்கு

சென்று இந்த விவசாயி மீண்டும் வீட்டிற்கு வந்தார். அவர் வரும்

போது அவரது மனைவி கை கால்களை விரித்தபடி மல்லாந்து

படுத்திருந்தாள். அவளது அழகிய கூந்தல் களைந்திருந்தது.

வாய் திறந்திருந்தது. துர்நாற்றம் மிகுந்த எச்சில் வாயிலிருந்து

வடிந்துக்கொண்டிருந்தது. அவள் குறட்டை விட்டுக்கொண்டு

படுத்திருந்தாள். இதனை கண்டவுடனே இந்த விவசாயின் மனது

மிகவும் சங்கடத்திற்கு உள்ளானது. அனைத்தும் வெறுத்துவிட்டது.

மனைவியிடமும் சொல்லாமல் மீண்டும் மண்வெட்டியை எடுத்து

கொண்டு துறவு பூணுவதற்காக சென்றார். மண்வெட்டியை மறைத்து

வைப்பதற்காக முற்புதரின் அருகில் வந்தார். அப்போது அவரது மனம்

விழித்து கொண்டது. ஷஷஇந்த மண்வெட்டிதான் என்னை இந்நிலைக்கு

ஆளாக்கியது. இதனை முற்புதரில் மறைத்து வைத்திருந்ததால் தான்

எனக்கு இவ்வளவு பிரச்சினைகளும். மீண்டும் இந்த முட்டாள்தனமான

வேலையை செய்ய மாட்டேன். இனி ஒருபோதும் இந்த வெறுமையான

அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதற்காக இந்த மண்வெட்டியை இந்த

கைகளால் ஏந்த மாட்டேன். என மிகவும் வீரியம் கொண்டு அந்த

மண்வெட்டியை ஆழமானதொரு சேற்றுக் குழியினுள் வீசியெறிந்தார்.

அன்று இவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிகவும்

சந்தோஷத்துடன் சங்கையரிடம் சென்றார். மீண்டும் துறவு பூண்டார்.

இந்த சுவாமி தம் வசியமிகுந்த மனதிற்கு அடிமையாகவிருந்ததால்

சித்தஹத்த எனும் புனைபெயரை கொண்டவரானார்.

இந்த சுவாமிக்கு தடையாக இருந்த மண்வெட்டியை வீசியெறிந்ததால்

மனதில் மிகவும் வீரியம் கொண்டு தியானம் செய்தார். அரதி

எனும் தர்மத்தின் மீதான விருப்பு இல்லாமல் போவதை தடுத்து

கொண்டார். மனதில் மும்மணிகள் மீதான பக்தியை நிலைநிறுத்தி

கொண்டார். தர்மத்தை உய்த்துணர வேண்டும். இந்த அனைத்து

துக்கங்களிலிருந்தும் முழுமையாக நீங்க வேண்டும் எனும் எண்ணம்

உறுதியாக மனதில் நிலைகொண்டது. நால்வகை சதிபட்டான

தர்மங்களினுள் மனம் நிலைகொண்டது. நாற்பேருண்மைகளை

பரிபூரணமாக உய்த்துணர்ந்து அரஹத் நிலையை அடைந்தார். மகா

தேரர் ஒருவரானார்.

சித்தஹத்த தேரர் மிகுந்த சந்தோஷத்துடனும் அமைதியுடனும்

காலங்கழிப்பதை பார்த்த ஏனைய தேரர்கள் ஷஷஏன்… மீண்டும் வீட்டிற்கு

செல்லும் எண்ணம் தோன்றவில்லையா? என்று கேட்டனர். அதற்கு

அந்த தேரர் ஷஷவீட்டிற்கு மாத்திரமல்ல. இனி நான் சன்சாரத்தில் கூட

செல்லமாட்டேன்.00 என பதிலளித்தார். இதன் மூலம் அந்த தேரர்

தாம் அரஹத் நிலையை அடைந்ததை வெளிப்படுத்தியதாக ஏனைய

தேரர்கள் புத்த பகவானிடம் சென்று தெரியப்படு;தினர்.

அப்போது புத்த பகவான் உறுதியற்ற பக்தி இருந்தால் ஞானம்

வளராது என மொழிந்தார். அதனை குறிப்பிட்டு இந்த முதல்

செய்யுளை அழகிய குரலில் மொழிந்தார். காம எண்ணங்களினால்

ஆசையினால் மனதை நனைத்து கொள்ளாத, பாவ புண்ணியங்களை

அழித்த, உறங்காமல் தியானம் செய்யும் அரஹத் தேரரின் மனதிலே

ஒருபோதும் கிலேசங்கள் மீதான பயம் தோன்றாது என இரண்டாவது

செய்யுளின் மூலமாக மொழிந்தருளினார்.

அனவட்டிதசித்தஸ்ஸ – சத்தம்மங் அவிஜானதோ

பரிப்லவபாஸதஸ்ஸ – பஞ்ஞா ந பரிபூரதி

சம்சாரத்திலிருந்து விடுதலை அடையும் எண்ணத்தில் நிலையாத

இந்த மனம்.. உத்தம தர்மத்தையும் உணர்ந்து கொள்ளாதவிடத்து

எவ்வித அர்த்தமுமின்றி விருப்புகள் தோன்றும் போது அந்த விருப்பின்

காரணமாக ஒருபோதும் ஞானம் வளராது.

அனவஸ்ஸுதசித்தஸ்ஸ – அனன்வாஹதசேதஸோ

புஞ்ஞபாபபஹுனஸ்ஸ – நத்தி ஜாகரதோ பயங்;

ஒருவரின் மனதில் ஆசை வடிந்தோடாவிடில்

கோபத்தினால் மனம் தாக்கப்படாவிடில்

பாவ புண்ணியங்கள் அனைத்தும் அழித்த மனதை கொண்டிருக்கும்,

உறங்காமல் தியானிக்கும் அந்த அரஹந்தர்கள் ஒருபோதும பதறமாட்டார்கள்.

புண்ணியவர்களே, புண்ணியமிக்கவர்களே, ஷநான் இந்த வேலையை

செய்வேன்0 என தான் செய்யும் காரியம் தொடர்பாக உறுதியாக

மனம் நிலைத்து கொள்ளாவிடில் எதனையும் வெற்றிகரமாக

முடிக்க முடியாது. சிறுவர்கள் கல்வி கற்பதுவும் அப்படித்தான்.

தன்னுள் பாரியதொரு இலட்சியம் இருக்க வேண்டும். அப்போது

புறவிடயங்களில் மனம் உழலாது. தொலைக்காட்சியை பார்ப்பதற்கு,

விளையாடுவதற்கு, வேறு வேறு இழிவான வேலைகள் செய்வதற்கு

மனம் செல்லாது. கல்வி செயற்பாடுகளை கூட சிறப்பாக

செய்துகொள்ள முடியும். இந்த குணம் துறவு பூண்ட ஒருவருக்கு

மிகவும் அவசியமானதாகும். இல்லாவிடில் காலப்போக்கில் தான்

எதற்காக துறவு மேற்கொண்டது என்பதனை கூட மறந்துவிடலாம்.

அவ்வாறு மறந்துவிட்டால் தன் இலட்சியம் மாறிவிட்டால்,

நாற்பேருண்மைகளை உய்த்துணர்வை விடுத்து அந்த பெயரை கூட

கேட்க விரும்பமாட்டார்கள். ஞானப்பேறுகளை அடைய வேண்டும்

எனும் பெயரை கேட்டால் கூட கோபம்தான் வரும். மோட்சம் எனும்

சொல்லை கூட கேளிப்படுத்துவார்கள். மனதை துறவு வாழ்வினுள்

மோட்சப்பாதைக்கு இடும் இலட்சியம் இல்லாமையே அதற்கு

காரணமாகும். அப்போது மனம் தர்மத்தை விரும்பாது. பக்தி மனதில்

நிலைகொள்ளாது. வேறு வேறு விடயங்களைத்தான் மனம் விரும்பும்.

இவ்வாறான ஒருவருள் பிரக்ஞை (ஞானம்) எவ்வாறு வளரும்?

ஆனால் மனதை ஒருவர் பாதுகாத்து கொள்வாராயின் அவர் இவ்

அனைத்திலிருந்தும் தப்பிவிடுவார். மனதை நால்வகை விழிப்பு

நிலைகளான சதிபட்டானத்திலேயே பாதுகாத்து கொள்ள வேண்டும்.

சதிபட்டானத்தினுள் மனதை நன்கு பாதுகாக்கும் ஒருவர் தம் மனதை

ஆசையில் நனைத்துகொள்ள மாட்டார். அதேபோன்று கோபத்திற்கு

தம் மனதை அடிமைபடுத்த விடமாட்டார். எந்நேரமும் மனதை

பாதுகாத்துக்கொள்வார். தியானத்தை மேன்மைபடுத்துவார். சீலம்,

சமாதி, பிரக்ஞை எனும் இம்மூன்றினையும் நன்கு வளர்த்துகொள்வார்.

இவற்றின் மூலம் பாவ புண்ணியங்களை அழித்து மோட்சத்தை

தம் உள்ளத்தினால் ஸ்பரிசித்துகொள்வார். உறக்கத்திற்கு

அடிமையாகாமல் தியானம் செய்யும் அந்த வீரியமிகுந்த அரஹத்

உத்தமருக்கு பயத்தினை தோற்றுவிக்கும் எந்த விடயங்களும்

இல்லை.

சாது! சாது!! சாது!!!

எட்டாவது செய்யுள்

ஐந்நூறு பிக்குமார்களின் கதை

ஞானம் எனும் ஆயுதத்தினால்தான் மாரனை ஜெயிக்க வேண்டும்.

புண்ணியவர்களே, புண்ணியமிக்க குழந்தைகளே, மனம் மாசுறும்

விடயங்களிலிருந்து தப்பித்து சீலம், சமாதி, ஞானம் போன்ற

நற்பண்புகளை ஏற்படுத்திக் கொள்வது வீரியமுள்ளவர்களுக்கே உரிய

செயலாகும். ஞானமுள்ளவர்களுக்கே உரிய செயலாகும். எனவே

வீரியமும் ஞானமும் கொண்ட ஒருவர் புத்த பகவானது தர்மத்தை

சந்தித்தவுடன் அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றிகொள்வார்.

இவ்வாறாக அனைத்து தடைகளையும் வெற்றிகரமாக முகங்கொடுத்த

ஐந்நூறு பிக்குமார்கள் தொடர்பாகத்தான் இங்கு குறிப்பிடப்படுகிறது.

ஐந்நூறு பிக்குமார்கள் புத்த பகவானிடம் அனுமதி பெற்று

தியானம் செய்வதற்காக தொலைவிடத்திற்கு சென்றார்கள். அந்த

பிக்குமார்கள் தொலைதூரம் கடந்து வந்த பின்னர் ஒரு அழகிய

வனாந்தரத்தை கண்டார்கள். அந்த வனாந்தரத்தின் அருகே ஒரு

அழகிய கிராமமும் இருந்தது. எனவே அந்த பிரதேசத்தில் ஐயம்

ஏற்பதற்கும் வசதியாகவிருந்தது. அந்த கிராமத்தவர்களும் சத்தா

(மும்மணிகளின் மீது பக்தி) கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

அந்த வனாந்தரத்தின் அருகே நீலநிற நீர்கொண்ட ஒரு அழகிய நதி

ஓடிக்கொண்டிருந்தது. வெண்னிற மணல் மேடுகள் இருகரையிலும்

பாய் விரித்தது போன்று பரவிக்கிடந்தது. நல்ல நிழல் தரும்

மரங்களாலும் குளிர்ச்சி மிகுந்த தென்றலாலும் அந்த வனம் எழில்

மிகுந்ததாக இருந்தது. அந்த பிக்குமார்கள் இந்த வனத்திலே வஸ்

அனுஷ்டிப்பதற்கு* முடிவு செய்தார்கள். தமது தாயகர்களுக்கும்

ழ*.சங்கையர் மாரி காலத்தில் யாத்திரை செல்ல மாட்டார்கள். ஓரிடத்தில் தங்கியிருந்து மாரி காலத்தில் அனுஷ்டிக்க வேண்டிய சீலங்களை அனுசரித்துக் கொண்டு சீலம், சமாதி, பிரக்ஞை என்பன மேன்மை செய்து கொள்வார்கள். இதுவே வஸ் அனுஷடிப்பு எனப்படும்.

அதனை அறிவித்தார்கள். கிராமத்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து

வனத்திலே ஒவ்வொரு இடங்களில் குடில்கள் அமைத்தார்கள். நடை

தியானம் செய்வதற்கான மேடுகள் அமைத்தார்கள். அழகியதொரு

ஆரணியத்தை அமைத்து அதனை அந்த சங்கையருக்கு பூஜித்தார்கள்.

அந்த பிக்குமார்களுக்கு தினமும் நல்ல அன்ன வகைகள் பான

வகைகள் என்பன அளித்தார்கள். அந்த பிக்குமார்களுக்கு நல்ல

ஓய்வும் இருந்ததால் மிகவும் சந்தோஷத்துடன் தியானம் செய்வதற்கு

ஆரம்பித்தார்கள்.

சிறிது காலம் செல்லும் போது அந்த அழகிய சூழல் கொஞ்சம்

கொஞ்சமாக இல்லாமல் போக ஆரம்பித்தது. மிகவும் அருவருப்பான

துர்நாற்றங்கள் பரவ ஆரம்பித்தன. பயங்கரமான நிழல்கள் அங்கும்

இங்கும் நடமாட ஆரம்பித்தன. எலும்புகூடுகள் நடமாட ஆரம்பித்தன.

பயங்கரமான முகங்கள் வானில் மிதந்து சென்றன. அடிக்கடி மிகவும்

பயங்கரமான சப்தங்கள் நாற்புறமும் கேட்க ஆரம்பித்தன. அந்த

பிக்குமார்கள் மிகவும் பயந்தார்கள். அவர்களால் தமது மனதை

ஒருமுகப்படுத்த முடியாமல் போயிற்று. மனம் நன்றாக சிதறியது.

முழு மாரிகாலத்தையும் மிகவும் கஷ்டத்துடன் கழித்தார்கள். மாரி

காலம் முடிவுற்ற பின்னர் மிகவும் கவலையுடன் புத்த பகவானை

காணுவதற்காக சாவத்திய நகரிற்கு சென்றார்கள். புத்த பகவானிடம்

இந்த சம்பவத்தினை அறிவித்தார்கள். புத்த பகவான் அங்கு என்ன

நடந்தது என்பதனை தெளிவுபடுத்தினார்.

“புண்ணியமிகு பிக்குகளே, அந்த வனாந்தரத்தில் யட்சர்களோ,

பிரேத ஆத்மாக்களோ இல்லை. அந்த வனத்தில் வன தேவர்களே

இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த வனத்திலே உள்ள

மரநிழல்களில் தியானம் செய்யும்போது அந்த தேவர்களால் தம்

விருட்சங்களின் இருக்க முடியவில்லை. நீங்கள் பாதுகாக்கும் உயரிய

சீலத்தின் மேன்மையால் அந்த தேவர்களால் தம் விருட்சங்களிலே

இருக்க முடியாமல் போயிற்று. எனவே அந்த தேவர்கள் ஷஎமக்கு என்ன

காரியம் நடந்துவிட்டது…? இந்த பிக்குமார்கள் இந்த வனத்தில் மிகுந்த

காலம் வசித்திருப்பார்கள் போலல்லவா தோன்றுகிறது. அப்படியாயின் எம்மால் இனிமேலும் இந்த விருட்சங்களில் இருக்க முடியாமல்

போய்விடுமல்லவா..? அவர்களுடைய சீலத்தின் மகிமையால் எம்மால்

எமது விருட்சங்களின் மீது இருக்க முடியாதல்லவா..? நாம் கீழிறங்க

வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகையால் நாம் அனைவரும் யட்ச

வேடங்கள் கொண்டு அவர்களை பயமுறுத்துவோம். அப்படியானால்

இவர்கள் சீக்கிரமாகவே இங்கிருந்து சென்றுவிடுவார்கள். நாமும்

சுகமாக இருக்க முடியும்.” என்று தமக்குள் பேசி முடிவெடுத்துதான்

இந்த வேலையை செய்திருக்கிறார்கள். அதனால் புண்ணியமிகு

பிக்குகளே, நீங்கள் அந்த தேவர்களின் மீது மைத்ரீ (அன்பு) பரப்ப

வேண்டும். நால்வகை நிலைகளிலிருந்தும் மைத்ரீ பரப்ப வேண்டும்.

மைத்ரீ சமாதியை விருத்தி செய்ய வேண்டும். அப்போது அந்த

தேவர்களுள் உங்கள் மீதிருக்கும் வெறுப்பு நீங்கிவிடும். மாறாக

அவர்கள் உங்களுடைய தாயகர்களாக* மாறிவிடுவார்கள். எனவே

நீங்கள் அங்கு மீண்டும் செல்லுங்கள். சென்று இந்த கரணீயமெத்த

சூத்திரத்தை பாராயணம் செய்யுங்கள். அடிக்கடி பாராயணம்

செய்யுங்கள்.

அந்த ஐந்நூறு பிக்குமார்கள் மீண்டும் அதே வனத்திற்கு சென்றார்கள்.

மிகவும் இனிமையான குரலில் அந்த கரணீயமெத்த சூத்திரத்தை

பாராயணம் செய்தார்கள். பயப்படாமல் மைத்ரீ தியானம் செய்தார்கள்.

மெத்தா (அன்பு) நிறைந்த உள்ளத்தை அளவில்லாது பரப்பும் அந்த

பிக்குமார்களது ஷாந்தமிகுந்த எண்ணங்களின் பாதுகாப்பு அந்த

தேவர்களுக்கும் கிடைத்தது. அந்த தேவர்களுடைய மனதில் இருந்த

வெறுப்பு முழுமையாக அகன்றுவிட்டது. மனதிற்கு மிகவும் சந்தோஷ

மாக இருந்தது. தேவர்கள் அந்த பிக்குமார்களுக்கு பணிவிடை

செய்தார்கள். அந்த பிக்குமார்களுக்கும் மிகவும் சந்தோஷமாக

இருந்தது. நன்றாக தியானம் செய்தார்கள். விடாமுயற்சியுடன்

தர்மத்தை பின்பற்றினார்கள். அவர்களுடைய உள்ளங்கள்

விரைவாகவே ஒன்றிணைந்தது. தர்மத்தை அறிவினால் ஆராயவும்

செய்தார்கள். விபஸ்ஸனா ஞானமும் ஒருங்கே விருத்தியடைந்தது.

இதனை கண்ணுற்ற புத்த பகவான் தன் இருத்தி பலத்தினால் ஒரு ஒளியை அனுப்பினார். அந்த ஒளியின் மூலம் புத்த பகவானது அழகிய

உருவம் தென்படலாயிற்று. புத்த பகவான் மிகவும் இனிமையான

குரலில் இந்த செய்யுளை மொழிந்தருளினார்.

*. சங்கையருக்கு பணிவிடை செய்வோர்கள

கும்பூபமங் காயம்மங் விதித்வா

நகரூபமங் சித்தமிதங் டபெத்வா

யோடேட மாரங் பஞ்ஞாயுதேன

ஜிதஞ்ச ரக்கே அனிவேசனோ சியா

இந்த உடல் உடைந்து போகும் மட்பாண்டத்தை போன்றது

என்பதனை அறிய வேண்டும். நன்கு பாதுகாக்கப்படும் நகரத்தை

போன்று இந்த மனதை பாதுகாக்க வேண்டும். ஞானம் எனும்

ஆயுதத்தினாலேயே மாரனை தாக்க வேண்டும். இந்த கிலேச

யுத்தத்தினை வெற்றிகொண்டு ஒருபோதும் இந்த சன்சாரத்திற்கு

வரக்கூடாது.

புண்ணியவர்களே, புண்ணியமிகு பிள்ளைகளே, இந்த செய்யுளில்

மூலம் இந்த பிக்குமார்களின் அறிவு வேகமாக வளர ஆரம்பித்தது.

இந்த உடலை விரைவாகவே உடைந்து போகும் ஒரு மட்பாண்டத்தை

போன்றே பார்க்க வெண்டும். அதாவது இந்த உடலில் நித்தியமானது

என்று ஒன்றில்லை. எவ்விதமான ஒரு நோயினாலும் விரைவாகவே

மரணித்தும் போகக்கூடியது. வேண்டியதொரு விபத்திலும் மரணித்து

போகலாம். உண்ட உணவோ அல்லது பருகிய பானம் ஒன்றோ

சமிபாடடையாமல் கூட எமது மரணம் நிகழலாம். சுருங்கக்கூறினால்

உள்ளெடுக்கும் மூச்சு இறுகிக்கூட மரணிக்கலாம். வெளியிட்ட

மூச்சினை உள்ளெடுக்க முடியாமல் போவதாலும் மரணிக்க

நேரிடலாம். மட்பாண்டம் வேண்டிய நேரத்தில் உடைந்து போவதை

போல் இந்த உடலும் வேண்டியதொரு நேரத்தில் மரணித்து முடிவுற்று

போகலாம்.

மனதை நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு நகரத்தை பாதுகாப்பது

போன்று பாதுகாக்க வேண்டும். நகரத்தில் நீர் அகழிகள் இருக்கும்.

பிரதான நுழைவாயில்கள் இருக்கும். பாரிய மதில்கள் இருக்கும்.

அந்த மதில்களின் மீது பாதுகாப்பு அரண்கள் இருக்கும். எதிரிகளால்

இலகுவாக நகரத்தினுள் பிரவேசிக்க முடியாது. அந்த பிரதான

நுழைவாயில்களில் மிகவும் விழிப்புணர்வு நிறைந்த வாயில்காப்போர்கள்

இருப்பார்கள். நன்றாக ஆராய்ந்து பார்த்துதான் யாரையும் அவர்கள்

நகரத்தினுள் அனுமதிப்பார்கள். அதுபோன்றுதான் இந்த மனதை

பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மிகவும் கூர்மையான முனையை கொண்ட ஆயுதத்தை போன்றதுதான்

ஞானம். புத்த பகவான் இந்த இடத்தில் கூர்மையான முனை கொண்ட

ஆயுதமான ஞானத்தினால் மாரனை தாக்குமாறு மொழிந்துள்ளார்.

எவரும் மோட்சத்தை அடைவதை மாரன் விரும்புவதில்லை. அவர்

தர்ம மார்க்கத்தில் இருந்து விலக்கி வைப்பதற்கே முயற்சி செய்வான்.

இவ்வாறான இயல்பினை கொண்ட மாரனை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு

ஞானத்தை உபயோகிக்க கூடிய ஒருவராலேயே தோற்றகடிக்க

செய்ய முடியும். ஒரு வீரன் தன் கூர்மையான முனை கொண்ட

ஆயுதத்தினால் எதிரியை தோற்கடிப்பதை போன்று அறிவாளிகள்

ஞானம் எனும் கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி மாரன் நுழையக்கூடிய

அனைத்து முறைகளையும் அழித்துவிடுகிறார். அவர் விருத்தி

செய்துகொண்ட சமாதி, ஞானம் என்பவற்றை பாதுகாத்துகொண்டு

நிக்கிலேச நிலையையே அடைவார். அனைத்து கிலேசங்களையும்

அழித்த நிரமலமான ஒருவராவார்.

சாது! சாது!! சாது!!!

ஒன்பதாவது செய்யுள்

பூதிகத்ததிஸ்ஸ தேரரின் கதை

(உயிர் நீங்கிய உடல் உக்கிய மரக்கட்டையை போன்று பயனற்றது)

புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, மனம்

இருப்பதாலேயே வாழ்வு பெறுமதியுடையதாகிறது. என்றோ ஒருநாள்

நாம் மரணித்த பின்னர் இந்த சரீரத்தினால் எவ்வித பயனுமில்லை.

பயனற்ற மரக்கட்டையை அகற்றிவிடுவதை போன்று அப்புறப்படுத்த

வேண்டியதுதான். இது தொடர்பாக நன்கு உணரக்கூடிய வகையிலான

அழகிதொரு செய்யுளை புத்த பகவான் மொழிந்தருளியுள்ளார். இந்த

தர்ம செய்யுளை புத்த பகவான் மிகவும் நோயுற்ற ஒரு தேரரை

முன்னிட்டே மொழிந்தார்.

அந்த தேரரின் பெயர் பூதிகத்ததிஸ்ஸ என்பதாகும். பூதிகத்ததிஸ்ஸ

தேரர் சக பிக்குமாருடன் பழகுவதில்லை. சங்கையரின் பொது

வேலைகளில் ஈடுபடுவதுமில்லை. ஆகையால் அந்த தேரர்

விகாரையில் வசித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் எவ்வித வேறுபாடும்

இருக்கவில்லை. அவர் எந்நேரமும் தனது அறையிலேயே தனிமையாக

இருந்தார். யாருடைய அவதானிப்பிற்கும் உள்ளாகவில்லை.

சிறிது காலத்தின் பின்னர் அவர் நோயுற்றார். உடல் முழுவதும்

கொப்புளங்கள் தோன்றின. சில நாட்களின் பின்னர் அந்த

கொப்புளங்கள் பெரிய கட்டிகளாயின. இன்னும் ஓரிரு நாட்களில்

அவை உடைந்து, அழுகி சலம் கசிந்தது. தரித்திருந்த சீவரம்

அந்த சலத்தின் காரணமாக உடலில் ஒட்டிக்கொண்டது. அந்த தேரர்

மிகுந்த வேதனையுடன் முணகிக்கொண்டு கட்டிலில் சயனித்திருந்தார்.

ஒருநாள் புத்த பகவான் பிக்குமார்களது அறைகளை பார்த்தவண்ணம்

வருகை தரும் போது பூதிகத்ததிஸ்ஸ தேரர் தங்கிருந்த

அறையினருகிற்கும் வருகை தந்தார். அப்போது அறையினுள் இருந்து

வரும் முணகல் சப்தத்தினையும் செவிமடுத்தார். புத்த பகவான் இந்த அறையிலிருப்பவர் யார் என்பதனை அறிந்துகொள்வதற்காக

அறையினுள் சென்றார். புத்த பகவானை கண்ட பூதிகத்ததிஸ்ஸ

தேரரால் எழுந்திருப்பதற்கு கூட முடியவில்லை. வேதனையால்

முணங்கிக்கொண்டே அழத்தொடங்கினார். ‘பகவானே, அனைத்தும்

என்னுடைய தவறுதான். நான் துறவு பூண்ட நாளிலிருந்து தனிமையில்

இருந்தேனே தவிர சங்கையரது பொது வேலைகளில் ஈடுபடவில்லை.

சுருங்கக்கூறினால் நோயுற்ற சங்கையருக்கும் எவ்வித பணிவிடையும்

செய்யவில்லை. நான் யாருடனும் சகவாசம் வைத்துகொள்ளவில்லை.

ஏனையோர் நான் நோயுற்றதை கூட அறிந்திராமைக்கு காரணம்

இதுவே’ என்றார்.

புத்த பகவன் இந்த தேரரை அறையை விட்டு வெளியே

கொணர்வித்தார். மிதமான சுடுநீரையும் கொணர்வித்து உடலோடு

ஒட்டியிருந்த சீவரத்தை மென்சுடுநீரின் உதவியுடன் மெதுவாக

அப்புறப்படுத்தினார். மிதமான சுடுநீற்றில் இட்ட மென்மையான

துணியினால் ஒத்தடம் கொடுத்தார். இறுதியாக தூய்மையான துணி

ஒன்றினால் உடலை மிருதுவாக துடைத்தார். ஆனந்த மகா தேரர்

இரத்தமும் சலமும் கலந்திருந்த பூதிகத்ததிஸ்ஸ தேரரின் சீவரத்தை

சுடுநீரால் துவைத்து உலர வைத்தார். அந்த தேரருக்கு நன்றாக

பணிவிடை செய்ததால் அவருடைய வேதனை சிறிது நேரத்திற்குள்

குறைந்துவிட்டது. உடம்பிற்கு மிகவும் சுகமாக இருந்தது.

அதனாலேயே மனம் மகிழ்ச்சியடைந்தது. அப்போது புத்த பகவான்

இந்த சரீரத்தின் யதார்த்தத்தை உணரக்கூடிய இந்த செய்யுளை

இனிமையான குரலில் மொழிந்தருளினார்.

அசிரங் வதயங் காயோ – படவிங் அதிஸெஸ்ஸதி

சுத்தோ அபேதவிஞ்ஞானோ – நிரத்தங்0வ கலிங்கரங்

சிறிது காலத்திற்குள் இந்த உடல் மண்ணிலே சரிந்துவிடும்.

விஞ்ஞானம் பிரிந்தவுடன் மரணத்தை தழுவிவிடும். எவராலும் எவ்வித

பயனுக்கும் உதவாத வண்ணம் சிறிது காலத்திலேயே அழுகிவிடும்.

பயனற்ற உக்கிய மரக்கட்டையை போன்று மண்ணிலே மறைந்துவிடும்.

புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, நாம் மரணிக்கும்

போது எமது விஞ்ஞானம் மறைந்துவிடும். இவ்வாறாக வெளியேறுவது

நாம் மனம், வாக்கு, காயம் என்பவற்றினால் சேகரித்த கர்மத்தை

தன்னகத்தே கொண்ட விஞ்ஞானமாகும். அந்த விஞ்ஞானம்

வெளியேறிய பின்னர் இந்த உடலில் எவ்வித பயனுமே இல்லாமல்

போய்விடும். ஓரிரு நாட்களின் பின்னர் பழுதடைய ஆரம்பிக்கும்.

இன்னும் சில நாட்களில் புழுக்களின் உறைவிடமாக மாறிவிடும்.

எவ்வித பயனுமற்ற உக்கிய மரக்கட்டையை போன்று மண்ணோடு

மண்ணாக மறைந்துவிடும். இந்த உடல் வெகுகாலம் நிலைத்திருக்கும்

ஒன்றல்ல. இவ்வாறான தர்ம அறிவுரைகளை செவிமடுத்த பூதிகத்ததிஸ்ஸ தேரர்

அனைத்து மனமாசுகளையும் அழித்து உன்னதமான அரஹத் நிலையை

உறுதி செய்தார். சிறிது நேரத்திலேயே உத்தம பரிநிர்வாணத்தை

எய்தினார். புத்த பகவான் இந்த சம்பவத்தை அடிப்படையாக

கொண்டு சங்கையரை ஒன்றுகூட்டினார். புத்த பகவான் தன் சீடர்கள்

மீது அனுதாபம் கொண்டு பின்வருமாறு மொழிந்தார். ‘புண்ணியமிகு

பிக்குகளே, எவரேனும் ஒருவர் நோயுற்றவர்களுக்கு பணிவிடை

செய்வாராயின் அவர் எனக்கு பணிவிடை செய்தவராவார். எவரேனும்

எனக்கு பணிவிடை செய்வாராயின் அவர் நோயுற்றவர்களுக்கு

பணிவிடை செய்தவராவார்”

புண்ணியவர்களே, நாம் புத்த பகவானுக்கு பணிவிடை செய்வதற்கு

மிகவும் விரும்புகிறோம். ஷஎமக்கும் புத்த பகவானுக்கு சோறு

ஒரு பிடியையேனும் தானமளிக்க முடியுமானால், புத்த பகவான்

தங்குவதற்கு அறையொன்று கட்டிக்கொடுக்கவிருந்தால்0 எனும்

எண்ணம் எமக்கு தோன்றலாம். எம்மால் ஒரு விடயத்தை தெளிவாக

உணரமுடியும். அதுதான் ஒருவர், நோயாளிகளுக்கு பணிவிடை

செய்வாராயின் அவருக்கு புத்த பகவானுக்கு பணிவிடை செய்வதால்

கிடைக்கும் புண்ணியத்தை ஈடடிக்கொள்ளலாம் என்பது. எனவே புத்த

பகவானுக்கு பணிவிடை செய்ய விரும்பும் ஒருவர் நோயாளிகளுக்கு

பணிவிடை செய்து அந்த புண்ணியத்தை ஈட்டிக் கொள்ளலாம்.

சாது! சாது!! சாது!!!

பத்தாவது செய்யுள்

நந்த எனும் மந்தை மேய்ப்பவனின் கதை

கொடூர நிலையில் இருக்கும் மனம் தன்னை பாவியாக்கும்.

புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, அந்த காலத்தில்

பெரிய மந்தை கூட்டத்திற்கு பொறுப்பாக நந்த எனும் பெயர்

கொண்ட ஒரு இளைஞன் இருந்தான். அந்த மந்தை கூட்டத்தின்

உரிமையாளர் அநாதபிண்டிக* சீமானாவார். இந்த நந்த எனும்

இளைஞன் மிகவும் சுறுசுறுப்பானவர். மிகவும் முயற்சியுடன்

வேலைகளை செய்பவர். அதனாலேயே சிறிது காலத்தில் அவரது

மந்தை கூட்டம் அதிகரித்து பெரியதொரு பண்ணையாகியது.

அதன் மூலம் இவர் பெரிய செல்வந்தரானார். எவ்வளவு பெரிய

செல்வந்தரானாலும் இவர் மிகவும் பணிவுள்ளவராக இருந்தார்.

அதனாலேயே அவர் அநாதபிண்டிகரின் கீழையே தொடர்ந்தும்

பணியாற்றினார். அநாதபிண்டிகரும் இந்த பணிவுள்ள தன் சேவகர்

மீது அன்பு கொண்டார். நந்த நேர்மையான சேவகன் மட்டுமல்லாது

ஒரு ஆரிய சீடருமாவார். அடிக்கடி ஜேதவனராமத்திற்கு சென்று

புத்த பகவானிடம் தர்மத்தையும் செவிமடுத்தார்.

ஒருநாள் நந்த, புத்த பகவானை முதன்மையாகக்கொண்டு மகா

சங்கத்தினருக்கு தானம் அளிப்பதற்காக தயாரானார். அன்று

வீதியோரங்களை மலர்களால் அலங்கரித்தார். வீதியில் வெண்னிற

மணலை படரச்செய்தார். மிகுந்த பக்தியுடனும் அன்புடனும் புத்த

பகவானையும் மஹா சங்கத்தினரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

மிகவும் சுவையான அன்னங்களையும் பான வகைகளையும் அளித்தார்.

ஏழுநாட்கள் தொடர்ந்து இவ்வண்ணமாக தானமளித்தார். ஏழாவது

நாளன்று புத்த பகவான் மொழிந்தருளிய நாற்பேருண்மைகளை

கொண்ட போதனையை செவிமடுத்த நந்த முதலாம் ஞானபெறுபேற்று

நிலையை அடைந்தார். அதாவது சோதாபண்ண நிலையை

அடைந்தார்.

*.புத்த பகவானுக்கு பணிவிடை செய்த இல்லறத்தோருள்

 முதன்மையானவர

தானம் முடிவுற்ற பின்னர் புத்த பகவான் மீண்டும் விகாரைக்கு

திரும்பிச்செல்லும் போது நந்த கோபாலனும் புத்த பகவான்

பின்னே அன்பும் பக்தியும் மேலிட்டு செல்லலானார். ‘புண்ணியமிகு

நந்த நீங்கள் திரும்பி வீட்டுக்குச் செல்லுங்கள்” என கூறினார்.

புத்த பகவானை மிகவும் அன்புடன் வணங்கிய நந்த தன்னுடைய

வீட்டை நோக்கி செல்லலானார். இவ்வாறு செல்லும் வழியில் ஒரு

வேடன், விஷம் நிறைந்த அம்பினால் நந்தனை தாக்கினான். அதன்

காரணமாக நந்த உயிரிழந்தார். இது தொடர்பாக பிக்குமார்கள் புத்த பகவானிடம் வினவிய

போது புத்த பகவான் சன்சாரப்பயணத்தின் போது நந்தன் செய்த

ஒரு தீவினையால்தான் இவ்வாறு மரணித்தார் எனவும் அவரால்

அதனிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் மொழிந்தார். ஆனாலும்

நந்தன் மோட்சத்தை உறுதி செய்த சோதாபண்ண நிலையை

அடைந்தவராததால் இப்போது சுவர்க்கத்தில் பிறந்திருப்பதாகவும்

மொழிந்தார். இறுதியில் இனிமையான குரலில் இந்த செய்யுளை

அழகாக மொழிந்தருளினார்.

திசோ திஸங் யந்தங் கயிரா – வேரி வா பன வேரியங்

மிச்சாபணிஹிதங் சித்தங் – பாபியோ நங் ததோ கரே

கொள்ளைக்காரன் இன்னுமொரு கொள்ளைக்காரனுக்கு செய்யும்

தீங்கினை விட பகையாளி தன் பகையாளி ஒருவனுக்கு விளைவிக்கும்

தீங்கினை விட பிழையான பாதையில் செல்லும் இந்த பாவம் மிகுந்த

மனம் தன்னை ஒரு பெரும் பாவியாக்கும். புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, மனம்

தொடர்பாக நாம் அறிந்தவற்றை விட அறியாதவையே அதிகம்.

மனதினுள் புண்ணியங்கள் சேரும். அதேபோன்று இந்த மனதை

மிகவும் உன்னத நிலைக்கும் உட்படுத்தலாம். தர்மத்தினுள்

செயற்படுத்துவதனால் மாத்திரம்தான் அவ்வாறு செய்ய முடியும்.

பெரும்பான்மையோர் இந்த மனதின் மீது எவ்வித அவதானிப்பும்

அற்றவர்களாகவே இருக்கிறார்கள். மனம் அழுக்கடைந்தாலும் கவனிப்பதில்லை. இவ்வாறாக மனம் அழுக்கடைவதால் ஏற்படும்

அபாயம் தொடர்பாகவும் அறிந்திருப்பதில்லை. இவ்வாறாக

அழுக்கடைந்த மனதினால் தன் உடல் செயற்பாடுகள் மற்றும்

வெளியிடும் வார்த்தைகள் என்பவற்றின் மூலமாக அகுசல தர்மங்கள்

சேர்கின்றன என்பதனையும் அறியாதவராகவே இருப்பார். ஆகையால்

மனம் அழுக்கடையும் போது மென்மேலும் மனம் அழுக்கடைவதனை

போன்றே சிந்திப்பார். இவ்வாறு அழுக்கடைவதால் மனம்

அகுசலங்கள் விகாரமடைந்துவிடும். கொடூரமானதாகும். கொடியதாக

மாறும். கட்டுப்படுத்த கடினமானதானது. பயங்கரமானதாக

உருமாறும். அந்த பயங்கரம் தொடர்பாக இந்த செய்யுளில் அழகாக

விஸ்தரிக்கப்படுகிறது. ஒரு கொள்ளைக்காரன் இன்னுமொரு கொள்ளைக்காரனை

கொடுமைபடுத்துவானாயின் அவன் அதனை எவ்வித அனுதாபமும்

இன்றியே செய்வான். திருடன் இன்னுமொரு திருடனை அழிக்கும்

போது மென்மையாக நடந்துகொள்ள மாட்டான். முழுமையாகவே

அழித்துவிடுவான். அதனை விடவும் பிழையான வழியில் சென்ற

இந்த மனம் பயங்கரமானதாகும். அந்த மனதில் எவ்வித கட்டுப்பாடும்

இருக்காது. எது நன்மையை விளைவிக்கும் எது தீமையை

விளைவிக்கும் என எவ்வித ஆராய்வும் அந்த மனதில் இருக்காது.

நன்மை தீமை தொடர்பாக சிறிது கூட சிந்திக்காது. இவ்வாறாக

பிழையான வழியில் செல்லும் மனதினால் திருடனுக்கு இன்னுமொரு

திருடன் செய்யும் ஆபத்தினை விடவும் கொடியதொரு ஆபத்துதான்

தன்னை நோக்கி வரும்.

ஒரு பகையாளி இருக்கிறார். அவரை இன்னுமொருவர் மிகவும்

வெறுக்கிறார். அவர் மீது பகைமை குணம் மேலோங்கிவராகவே

இருப்பார். அப்போது அந்த பகையாளி தன் பகையாளி மீது

எவ்வித அனுதாபமும் கொண்டிருக்க மாட்டார். எவ்வித தயவும்

கொண்டிருக்க மாட்டார். மிகுந்த பகைமையினால் அவரை

அழித்துவிடுவார். பிழையான வழியில் சென்ற மனம், அகுசலங்களில்

நிலைத்துகொண்ட மனம், பொய்மையில் மூழ்கிய மனம், கொடிய

நிலையை உள்வாங்கிய மனம் ஒருவருக்கு இவ்வனைத்திலும் பார்க்க பயங்கரமான ஆபத்தினை விளைவிக்கும். பகையாளியாகட்டும்

அல்லது திருடனாகட்டும் பெரும்பாலும் ஒருவருடைய தனம், தானியம்,

சொத்துக்கள், உயிர் என்பவற்றையே சேதப்படுத்துவார். ஆனால்

பிழையான பாதையில் சென்ற பொய்மையில் மூழ்கிய மனம் தன்னை

பாவமிகுந்த துஷ்டனாக மாற்றிய பின்னர், அவர் அதன் காரணமாக

பல கற்ப காலங்கள் நரகத்திலே பிறந்து துன்பம் அனுபவிக்க

நேரிடும். மிருகலோகம், பிரேதலோகம் எனும் உலகங்களில் பிறந்து

துன்புற வேண்டும். எதிரிக்கு கூட பாவமிகுந்த மனம் இருக்க கூடாது.

சாது! சாது!! சாது!!!

பதினோறாவது செய்யுள்

சோரெய்ய சீமானின் கதை

நன்மையில் செலுத்திய மனம் தன்னை உத்தமராக்கும்.

புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, இந்த கதையில்

மிகவும் கவலைக்குரிய சம்பவமே குறிப்பிடப்படுகிறது. பிழையான

வழியில் சென்ற மனதின் இயல்பு எவ்வளவு முறைகேடான நிலைக்கு

உட்படும், அது வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பாதிப்பு செலுத்தும்

என்பதற்கும் இந்த கதை ஒரு உதாரணமாகும். தேவையற்ற

விடயங்களை சிந்திப்பதன் ஆபத்தினை இக்கதை மூலம் நன்கு

உணரலாம். இந்த கதையை வாசிக்கும் போது மனதிற்கு சிறு

பயமும் தோன்றுகிறது. இந்த மனம் இவ்வளவு கொடியதா என

புதுமையாக இருக்கும். ஆனால் அதே மனதை நல்வழியில்

செலுத்தியவுடன் உன்னத நிலையை அடைவதை பார்க்கும் போதும்

ஆச்சரியமாகவே இருக்கிறது.

சோரைய்ய என்று ஒரு நகரம் இருந்தது. இந்த நகரில் சோரெய்ய

எனும் பெயர்கொண்ட ஒரு சீமான் இருந்தார். அவர் மணம்

முடித்தவர். இரு பிள்ளைகளின் தந்தையுமாவார். ஒருநாள் இ;ந்த

சோரெய்ய தன் நண்பருடன் நீராடுவதற்காக நதிக்கரைக்கு சென்று

கொண்டிருந்தார். செல்லும் வழியில் மிகவும் அழகிய பொன்னிறமான

ஒரு தேரரை கண்டார். அவர் ஒரு அரஹத் உத்தமராவார்.

அவர்தான் மஹா கச்சாயன தேரர். அவர் ஒரு அரஹத் உத்தமர்

என்பதனை சோரெய்ய அறிந்திருக்கவில்லை. சோரெய்ய சீமான்

மஹா கச்சாயன தேரரது அழகிய உருவத்தை பார்த்து வசியம்

செய்தது போலாகிவிட்டார். கண்களை அகல விரித்துகொண்டு

இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தார். ஆனால் மஹா தேரரை

பார்த்துகொண்டிருக்கும் போது இந்த சோரெய்ய சீமானின் மனதில்

பக்தி தோன்றவில்லை. அதற்கு முற்று முழுதாக மாறுபட்ட காம

இச்சை தோன்றியது. பாவமிகுந்த எண்ணங்கள் உதிக்கலாயின.

‘ஆஹா….. என்னவொரு அழகு… பொன்னிறமாக அல்லவா இருக்கிறது

மேனி… கை கால்களை பொன்னால் வார்த்தது போன்றல்லவா

இருக்கிறது. முகம் ஜொலிக்கிறது… நீல நிறமான கண்கள்

நட்சத்திரங்களை போல் மின்னுகிறது. அற்புதமான அழகல்லவா…?

இவ்வாறான மனதை மயக்கும் உருவத்தை கொண்ட ஒருவர்தான்

எனது மனைவியாக கிடைத்திருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால்

எனது மனைவிக்குத்தான் இம்மாதிரியான அழகு கிடைத்திருக்க

வேண்டும்.

இந்த சோரெய்ய மஹா கச்சாயன தேரரை இவ்வாறாக

நினைத்து கொண்டு இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தார்.

இழிவான எண்ணங்கள் ஊற்றை போன்று மனதில் ஊற்றெடுத்து

கொண்டிருந்தன. மஹா கச்சாயன தேரர் மிகவும் சாந்தமாக கீழ்

நோக்கிய விழிகளையுடைவராக அங்கிருந்து சென்றுவிட்டார்.

சோரெய்ய சீமானின் மனம் குழப்பமடைந்தது. அதே மனதுடன்

மென்மேலும் இழிவான விடயங்களை சிந்திக்க ஆரம்பித்தார்.

இதனையே நினைத்து கொண்டிருக்கும் போது அவருடைய உடலில்

ஏதோ பெரிய மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். ஆண்மகனுக்குரிய

அங்கங்கள் அனைத்தும் ஒருநொடியிலேயே அவரிடம் இருந்து

மறைந்தன. பெண்ணுக்குரிய அனைத்து உடற்பாகங்களும் தோன்றின.

தன்னுள் தோன்றிய இந்த மாற்றம் சோரெய்ய சீமானின் மனதை

வெகுவாக பாதிக்க செய்தது. அவர் பதற்றமடைந்தார். தன் உடலை

பார்த்தார். தனக்கு தன்னையே அடையாளம் காண முடியாதிருந்தது.

‘ஐயகோ என்ன நடந்தது…? ஐயகோ நான் என்ன செய்வேன்…??? நான்

இனிமேலும் ஒரு ஆணல்லவே. நான் பெண்ணாக மாறிவிட்டேன். எனக்கு

என்ன நடந்தது? நான் எவ்வாறு சமூகத்திற்கு முகங்கொடுப்பேன்…?

நான் வீட்டிற்கு எவ்வாறு செல்வேன்? என் மனைவியை என்

குழந்தைகளை எந்த முகத்தை கொண்டு பார்ப்பேன்…?? ஐயகோ

நான் என்ன செய்வது..? “

அவரால் ஒன்றும் நினைத்து கோள்ள முயொமல் இருந்தது.

அவரது மனம் மிகவும் குழம்பி போயிற்று. நீராடுவதற்காக சென்ற

பயணம் இறுதியில் பெரும் உடலியல் மாற்றத்துடன் அல்லவா

முடிவுற்றது…? சோரெய்ய சீமானுக்கு பதிலாக அங்கு இருந்தது

சோரெய்ய குமரியாவாள். அவள் நீராட செல்லவில்லை. யாராலும்

கண்டுபிடித்து கொள்ள முடியாத வண்ணம் அவள் அந்த

நகரை விட்டு. தொலைவில் உள்ள ஒரு நகரிற்கு சென்றாள்.

அங்கு ஒரு செட்டியாரை திருமணம் செய்து கொண்டாள். அந்த

திருமணத்தினால் அவளுக்கு இரு குழந்தைகளும் பிறந்தன. அவள்

ஆணாக இருக்கும் போது இரண்டு பி;ள்ளைகளுக்கு தந்தை.

பெண்ணாக இருக்கும் போது இரண்டு பிள்ளைகளுக்கு அன்னை.

மிகவும் விந்தையானதாகத்தான் இருக்கிறது. இவள் தனது உடலில்

இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டதிலிரு;நது மனதால் மிகவும் நொந்து

போனாள். இந்நிலையிலிருந்து மீள்வது எப்போது என சதா

எண்ணிக்கொண்டிருந்தாள். ஒருநாள் இவள் தன் கணவனிடம் தனக்கு

நடந்த உடல் மாற்றம் தொடர்பாக அழுதழுது கூறினாள். இதனை

அறிந்த அந்த செட்டியார் தன் மனைவி மீது மிகவும் அனுதாபம்

கொண்டார். அவளுக்கு உதவ வேண்டும் என நினைத்தார். மஹா

கச்சாயன தேரர் வசித்திருக்கும் இடம் தொடர்பாக தேடிப்பார்த்து

இறுதியில் அவ்விடத்திற்கு தன் மனைவியை அழைத்து சென்றார்.

மிகவும் வேதனையுடன் அழுதழுது அன்று தான் நினைத்த அகுசல

எண்ணங்களுக்காக தன்னை மன்னிக்கும் படி மஹா கச்சாயன

தேரரிடம் மன்னிப்பு கோரினாள். இனி ஒருபோதும் இம்மாதிரியான

பாவமிகுந்த எண்ணங்களை நினைப்பதுவும் இல்லை என வாக்கு

அளித்தாள். இந்த சம்பவம் தொடர்பாக எதனையுமே அறிந்திராத

கச்சாயன தேரரது மனதில் அனுதாபம் தோன்றியது. கருணை நிறைந்த

உளங்கொண்டு அவளை மன்னித்தார். அந்த சந்தர்ப்பத்தில் முன்பு

போன்றே எதோ பெரியதொரு மாற்றம் தனது உடலில் நடப்பதாக

அவள் உணர்ந்தாள். மீண்டும் ஆணாக மாறினார். மீண்டும் ஆணாக

மாறியதை நினைத்து சோரெய்ய சீமான் மிகவும் அகமகிழ்ந்தார்.

‘சுவாமியே.. . நான் இனி எங்கும் செல்ல மாட்டேன். இந்த  மாயை நிறைந்த மனதி;ற்கு ஏமாறி நான் அனுபவி;த்த துன்பங்கள்

போதும். இனிமேலும் வேண்டாம். எனக்கு இவ் அனைத்திலிருந்தும்

விடுதலையடைய வேண்டும். சுவாமியே என்னை துறவு

பூணச்செய்யுங்கள்.” மஹா கச்சாயன தேரர் அனுதாபம் மேலிட்டு

அவரை புத்த சாசனத்தினுள் துறவு பூணச்செய்தார். உத்தம

சீலத்தினை அனுஷ்டிக்கும் இந்த சோரெய்ய பிக்கு நால்வகை

சதிபட்டான தர்மத்தினுள் மனதை நிலைப்படுத்தினார். இந்த

பிக்குவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கேள்வியுற்ற அனைவரும்

ஆச்சரியமடைந்தார்கள். சிலர் அவரிடம் பல கேள்விகளை கேட்க

ஆரம்பித்தார்கள். ‘புண்ணியமிகு சுவாமியே, இல்லற வாழ்வில்

ஆணாக இருக்கும் போது உங்களுக்கு இரண்டு பிள்ளைகள்

இருந்தார்கள். பெண்ணாக இருக்கும் போது உங்களுக்கு இரண்டு

பிள்ளைகள் இருந்தார்கள். அந்த பிள்ளைகளில் நீங்கள் மிகவும்

அன்பு வைத்திருப்பது எந்த பிள்ளைகள் மீது..?” அப்போது அந்த

சோரெய்ய பிக்கு ‘உண்மையிலேயே நான் தாயாக இருக்கும் போது

பெற்ற குழந்தைகள் மீதுதான் அதிக அன்பு வைத்திருக்கிறேன்”

என்று கூறுவார்.

சோரெய்ய பிக்கு மிகவும் விடா முற்சியுடன் தர்மத்தை பயிற்சி

செய்தார். நாற்பேருண்மைகளை பரிபூரணமாக உய்த்துணர்ந்தார்.

உன்னத அரஹத் நிலையை அடைந்தார். அதனை அறியாதவர்கள்

அதே பழைய கேள்வியை அவரிடம் கேட்டார்கள். அப்போது

அவர் அன்பு செலுத்தும் அனைத்திலிருந்தும் தான் விடுதலை

பெற்றுவிட்டதாகவும் தன்னுள் யார் மீதும் விசேட அன்பு தோன்றாது

எனவும் கூறுவார். இந்த தேரரது வாழ்க்கை கதையை முன்னிட்டு

புத்த பகவான் இந்த செய்யுளை அழகிய குரலில் மொழிந்தருளினார்.

ந தங் மாதா பிதா கயிரா – அஞ்ஞே வா பி ச

ஞாதகாமாபணிஹிதங் சித்தங் – செய்யஸோ நங் ததோ கரே

தம் பெற்றோர்களால் தம் மனதில் நற்பண்புகளை வளர்க்க முடியாது.

உறவினரும் தம் மனதை பாதுகாக்க வரார். தர்மத்தினுள்

நிலைக்க செய்து பாதுகாக்கும் போது நற்பண்புகளால்

நிறையும் மனதினால் அவர் உலகின் உத்தமராவார்.

புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, எமது மனம்

அழுக்கடையும் போது அதனை தூய்மைப்படுத்துவதற்கு எமது

பெற்றோரால் முடியாது. எமது மனதில் அகுசலங்கள் தோன்றினால்

அவற்றை எமது உறவினர்களால் அகற்றிவிட முடியாது.

அகுசலங்களிலிருந்து மனதை தன் சுய முயற்சியினாலேயே மீட்க

வேண்டும். குசலங்களில் மனதை தன் சுய முயற்சியிலேயே

நிலைக்கச்செய்ய வேண்டும். புத்த பகவான், தன்னை சரணாக

கொள்ளுங்கள் என மொழிவதற்கு காரணம் இதுதான்.

எமது மனதில் அகுசலங்கள் தோன்றி அதன் காரணமாக எமது மனம்,

வாக்கு, காயம் என்பனவற்றால் பாவங்களை சேகரித்து கொண்டால்

அதன் தீய விளைவுகளையும் நாமே அனுபவித்தாக வேண்டும்.

அந்த பாவங்களின் கொடிய விளைவுகள் நரகம், மிருகலோகம்,

பிரேதலோகம் என்பனவற்றிலேயே அனுபவிக்க நேரிடும். நாம்

பாவங்கள் செய்து நரகத்தில் பிறந்தால் எமது பெற்றோர்கள்,

உறவினர்கள் என்போரால் எம்மை பாதுகாக்க முடியுமா? எம்மை

காப்பாற்ற முடியுமா? முடியாது. நாம் மரணித்த பின்னர் நாம் எங்கு

பிறக்கிறோம் என யாரும் எம் பின்னே வந்து தேடமாட்டார்கள்.

நாம் செய்த கர்மத்தின் அடிப்படையிலேயே நாம் பிறப்போம். நாம்

மனதை பாதுகாத்துக்கொண்டால் தர்மத்தினுள் முறையாக மனதை

நிலைநிறுத்தி கொண்டால் எமது மனம், வாக்கு, காயம் எனும்

மூன்றின் வழியாகவும் எம்மால் புண்ணியங்களை செய்துகொள்ள

முடியும். அப்போது நாம் மரணித்த பின்னர் சுவரக்கத்தில் பிறக்கவும்

முடியும். அதனை எம் பெற்றோர்கள் செய்து தரமாட்டார்கள்.

உறவினர்கள் செய்து கொடுக்கவும் மாட்டார்கள். மாறாக எமது

மனதில் சேரும் புண்ணியங்களே இதற்கு காரணமாக அமையும்.

எனவே புண்ணியவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, எமது

வாழ்வின் நன்மையை நாமே செய்துகொள்ள வேண்டும்.

சாது.. சாது.. சா