மகா சச்சக சூத்திரம்
சச்சகனை முன்னிட்டு விபரமாக மொழிந்த போதனை
என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் பாக்கியமுள்ள புத்த பகவான் வை~hலி நகரின் மகா வனத்தில் அமைந்துள்ள குவிமாட மண்டபத்தில் வசித்திருந்தார். அன்று காலைவேளை பாக்கியமுள்ள புத்த பகவான் சீவரத்தை நன்கு போரத்திக் கொண்டு ஐயக்கொள்கலனையும் மற்ற சீவரத்தையும் எடுத்துக் கொண்டு வை~hலி நகரில் ஐயமேற்பதற்காக செல்வதற்கு தயாராகினார். அந்த சமயத்தில் நிகண்டபுத்திர சச்சகன் உடற்பயிற்சிக்காக நடந்துசெல்லும் வழியே மகா வனத்தின் குவிமாட மண்டபத்தின் அருகேமுயு; வந்தான். தூரத்தே வரும் நிகண்டபுத்திர சச்சகனை ஆனந்த தேரர் கண்டார். கண்டு புத்த பகவானிடம் இப்படிச் சொன்னார்.
“பகவானே, அங்கே பாருங்கள் நிகண்டபுத்திர சச்சகன் இங்குதான் வருகிறார். நல்ல பேச்சுத்திறன் உள்ளவன். பெரும் பாண்டித்தியம் கொண்டவன். பெரும்பாலான மக்கள் அவனை நல்லவர் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பகவானே, ஆனாலும் இவர் புத்த பகவானைப் பற்றி அவதூறுகளை சொல்வதற்கு விரும்புபவன். சத்தர்மர்த்தைப் பற்றி அவதூறுகளை சொல்ல விரும்புபவன். சங்கையரைப் பற்றி அவதூறுகளை சொல்ல விரும்புபவன். பாக்கியமுள்ள பகவானே, அந்த நபரின் மீது அனுதாபம் கொண்ட சிறிது நேரம் தாமதிப்பீர்களாயின் எவ்வளவு நல்லது..?”
எனவே புத்த பகவான் தமக்காக அளிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அச்சமயம் நிகண்டபுத்திர சச்சகன் புத்த பகவானின் அருகே வந்தான். வந்து புத்த பகவானின் நலம் விசாரித்து ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்டான். இப்படி ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்ட நிகண்டபுத்திர சச்சகன் புத்த பகவானிடம் இவ்வாறு சொன்னான்.
“புண்ணியமிகு கௌதமரே, ஒரு சில சிரமண அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காய தியானத்துடன் கூடியவர்கள். ஆனால் மன தியானம் அற்றவர்கள். சுவாமி, அவர்களுக்கும் உடல் சார்ந்த துன்பங்கள் கிடைக்கும். புண்ணியமிகு கௌதமரே, இது நடந்த ஒரு விடயமாகும். உடல் சார்ந்த துன்பங்களால் கொடிய வகையில் வேதனை அனுபவிக்கும் போது தொடைகள் இறுகிவிடும். நெஞ்சு வெடிக்கும். வாயிலிருநு;து சூடான இரத்தம் வரும். பைத்தியம் பிடிக்கும். சுயவணர்வு இல்லாமல் போகும். புண்ணியமிகு கௌதமரே, அந்நேரம் அவரது மனம் உடலுக்கேற்ற வகையிலேயே இருக்கிறது. உடலின் வசத்திலேயே மனம் இருக்கிறது. ஏன் இந்த மாதிரியான நிலை வருகிறது? மனதை விருத்தி செய்யாததனாலேயே.
“புண்ணியமிகு கௌதமரே, ஒரு சில சிரமண அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மன தியானத்துடன் கூடியவர்கள். ஆனால் உடல் தியானம் அற்றவர்கள். சுவாமி, அவர்களுக்கும் மனம் சார்ந்த வேதனைகள், கவலை துக்கங்கள் என்பன ஏற்படும். புண்ணியமிகு கௌதமரே, இதுவும் நடந்த ஒரு விடயமாகும். மனம் சார்ந்த கொடிய வகையில் வேதனை அனுபவிக்கும் போது தொடைகள் இறுகிவிடும். நெஞ்சு வெடிக்கும். வாயிலிருநு;து சூடான இரத்தம் வரும். பைத்தியம் பிடிக்கும். சுயவுணர்வு இல்லாமல் போகும். புண்ணியமிகு கௌதமரே அச்சமயம் அவரது உடல் மனதிற்கேற்ற வகையிலேயே இருக்கிறது. மனதின் வசத்திலேயே உடல் இருக்கிறது. ஏன் இந்த மாதிரியான நிலை வருகிறது? உடல் தியானம் செய்திராமையேயாகும். விருத்தி செய்யாததனாலேயே. புண்ணியமிகு கௌதமரே எனக்கு இப்படி தோன்றுகிறது. உண்மையிலேயே புண்ணியமிகு கௌதமரது சீடர்கள் மன தியானங்களுடன் கூடியவர்கள். ஆனால் உடல் தியானங்களை செய்பவர்கள் அல்ல என்று.”
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன? நீங்கள் காய உடல் தியானம் என்று எத்தகைய விடயத்தை கேட்டு அறிந்திருக்கிறீர்கள்?”
“புண்ணியமிகு கௌதமரே, நந்த வச்ச, கிச சங்கிச்ச? மக்கலீ கோசாலர் எனும் இவர்கள் நிர்வாணமான தவசிகள் அல்லவா? வணக்க நெறிமுறைகளை கைவிட்டவர்கள் அல்லவா? அன்னம் உட்கொண்ட பின் கைகளை நக்கிக் கொள்பவர்கள் அல்லவா? ‘சுவாமி வாருங்கள்’ என்றால் வருகை தராத ஒழுக்கமுடையவர்கள். ? ‘சுவாமி நில்லுங்கள்’ என்றால் நிற்காத ஒழுக்கமுடையவர்கள். தமக்காக சமைக்கப்பட்ட தானத்தை ஏற்காதவர்கள். சோற்றுப்பானையின் வாயினறுகே உள்ள உணவை ஏற்காதவர்கள். கரி பூசப்பட்ட முகமுடைய மக்கள் கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். திண்ணையின் இடையே அமர்ந்து கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். வேலிக்கு இடையே இருந்து கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். உலக்கைகள் இடையே அமர்ந்து கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். இருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். கர்ப்பிணிப் பெண் கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். ஆண்களிடம் சென்ற பெண் கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். அன்னதானத்திற்கென்றே சமைக்கப்பட்ட உணவை ஏற்காதவர்கள். ஒரு நாய் இருக்கும் இடத்தில் அந்த நாயிற்கு கொடுக்காமல் தனக்கு கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். ஈக்கள் நிறைந்த இடத்திலிருந்து கொடுக்கும் அன்னத்தை ஏற்காதவர்கள். மீன் சாப்பிடமாட்டார்கள். மாமிசம் சாப்பிடமாட்டார்கள். மது குடிக்கமாட்டார்கள். கள் குடிக்கமாட்டார்கள். துசோதகம் எனும் பானத்தை சாப்பிடமாட்டார்கள். ஒரு வீட்டிலிருந்து கிடைக்கும் ஒரு சோற்றுப்பிடியை சாப்பிட்டும் வாழ்வார்கள். இரு வீடுகளிலிருந்து கிடைக்கும் இரு சோற்றுப்பிடிகளை சாப்பிட்டும் வாழ்வார்கள். ஏழு வீடுகளிலிருந்து கிடைக்கும் ஏழு சோற்றுப்பிடிகளை சாப்பிட்டும் வாழ்வார்கள். ஒரு கரண்டி சோற்றை உண்டு வாழ்வார்கள். இரண்டு கரண்டி சோற்றை உண்டு வாழ்வார்கள். ஏழு கரண்டி சோற்றை உண்டு வாழ்வார்கள்.ஒருநாள் விட்டு ஒருநாள் அன்னம் உட்கொள்வார்கள். இரண்டு நாளைக்கு ஒரு நாள் என்ற வீதத்தில் அன்னம் உட்கொள்வார்கள். ஏழு நாளைக்கு ஒரு நாள் என்ற வீதத்தில் அன்னம் உட்கொள்வார்கள். இவ்வாறாக இரு வாரங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்திலும் அன்னம் உட்கொள்வார்கள். இவ்வாறாக உணவு உட்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பார்கள்.
“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அப்படியென்றால் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொண்ட அன்னத்தினால் மட்டுமே உயிர் வாழ்கிறார்களா?”
“புண்ணியமிகு கௌதமரே, இல்லை. சில நாட்களுக்கு அவர்கள் சுவையான நல்ல உணவையும் சாப்பிடுவார்கள். சுவையான நல்ல உணவை சுவைத்து உண்பார்கள். நல்ல சுவையான பான வகைகளையும் குடிப்பார்கள். அவர்கள் இந்த உடலை பலப்படுத்திக் கொள்வார்கள். பருமனேற்றிக் கொள்வார்கள். கொழுப்புத்தன்மையை அதிகரித்துக் கொள்வார்கள்.”
அது அப்படியென்றால் புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, முன்னர் மேற்கொண்ட கடின செயற்பாடுகளை விட்டுவிட்டு பி;கு அவர்கள் நன்றாக சாப்பிட்டு குடித்து இருப்பதைப் பார்த்தால் அவர்களிடம் இருப்பது இரண்டு விடயங்கள் தான். இந்த உடலை மெலிவாக்குவதும் பருமனாக்குவதும் மட்டும் தான். அது சரி புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீங்கள் சித்த தியானம் எனும் மன தியானம் தொடர்பாக எவ்வாறு கேட்டறிந்து கொண்டிருக்கிறீர்கள்?
நிகண்டபுத்திரனாகிய சச்சகனுக்கு சித்த தியானம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் போனது.
அச்சமயம் பாக்கியமுள்ள பகவான் நிகண்டபுத்திரனாகிய சச்சகனுக்கு இவ்வாறு சொன்னார். “புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீங்கள் இப்போது உடல் தியானம் என்று ஏதோ சொன்னீர்கள் தானே. அது இந்த ஆரிய ஒழுக்கத்தினுள் தார்மீகமான உடல் சார்ந்த தியானமாக கருதப்படாது. அதுபோகட்டும் புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீங்கள் உடல்சார் தியானம் தொடர்பாக தெரிந்திருக்காதபோது மனம்சார் தியானங்கள் தொடர்பாக எப்படி தெரிந்திருக்க முடியும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, விருத்தியடையாத உடல் தொடர்பாகவும் விருத்தியடையாத மனம் தொடர்பாகவும் விருத்தியடைந்த உடல் தொடர்பாகவும் விருத்தியடைந்த மனம் தொடர்பாகவும நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். நன்றாக புரிந்துகொள்ளுங்கள். நான் கற்றுத்தருகிறேன்.”
“புண்ணியமிக்கவரே, அப்படியே ஆகட்டும்” என்று நிகண்டபுத்திரனாகிய சச்சகன் புத்த பகவானுக்கு பதில் அளித்தான்.
அச்சமயம் பாக்கியமுள்ள பகவான் இதனை போதித்தார்.
“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, விருத்தியடையாத உடலும் விருத்தியடையாத மனமும் எவ்வாறு தோன்றுகிறது? புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனருக்கு சுக நுகர்ச்சி வரும் போது அவர் ஸ்பரிசத்தினால் கிடைக்கும் அந்த சுகத்தின் மீது ஆசை கொள்வார். சுகம் வேட்கையாகிவிடும். அவருக்கு கிடைத்த அந்த சுகம் இல்லாமல் போகும். சுக நுகர்ச்சி இல்லாமல் போய் துக்க நுகர்ச்சி தோன்றும். அப்போது அவர் சோகங்கொள்வார். மயக்கமடைவார். புலம்புவார். கைகளால் நெஞ்சை அடித்துக் கொள்வார். புத்தி பேதலித்து விடுவார்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அவருக்கு கிடைத்த அந்த சுகமான நுகர்ச்சி அவரது மனதை அடிமைப்படுத்தி செல்வதற்கான காரணம் அவருள் விருத்தி செய்யாத உடல் இருந்தமையே ஆகும். அதேபோன்று அவருக்கு கிடைத்த துக்கமான நுகர்ச்சி அவரது மனதை அடிமைப்படுத்தி செல்வதற்கான காரணம் அவருள் விருத்தி செய்யாத மனம் இருந்தமையே ஆகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எவரேனும் ஒருவருக்கு இந்த இருவகையான நுகர்ச்சிகளும் கிடைக்கும் போது, விருத்தி செய்யாத உடல் இருப்பதன் காரணமாக சுக நுகர்ச்சி மனதை அடிமைப்படுத்துமாயின், விருத்தி செய்யாத மனம் இருப்பதன் காரணமாக துக்க நுகர்ச்சி மனதை அடிமைப்படுத்துமாயின், புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதுவே விருத்தி செய்யாத உடல் இருக்கிறது என்றும் விருத்தி செய்யாத மனம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, விருத்தியாகிய உடலும் விருத்தியாகிய மனமும் எப்படி தோன்றுகிறது?

புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, தர்மத்தை அறிந்த ஆரிய சீடனுக்கும் சுக நுகர்ச்சி தோன்றும். ஆனால் அவர் அந்த சுக நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த சுகத்தின் மீது ஆசை கொள்ளமாட்டார். அந்த சுகம் தொடர்பாக வேட்கையடைய மாட்டார். அவருக்கு கிடைத்த அந்த சுக நுகர்ச்சியும் இல்லாமல் போகும். சுக நுகர்ச்சி இல்லாமல் போய் துக்க நுகர்ச்சி தோன்றும். அந்த துக்க நுகர்ச்சியை அனுபவிக்கும் அவர் சோகங்கொள்ளமாட்டார். மயக்கமடையமாட்டர். புலம்ப மாட்டார். கைகளால் நெஞ்சை அடித்துக் கொள்ளமாட்டார். புத்தி பேதலிக்க மாட்டார்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அவருக்கு கிடைத்த அந்த சுகமான நுகர்ச்சியால் அவரது மனம் அடிமைப்படுத்திக் கொள்ள முடியாததற்கு காரணம் அவருள் விருத்தி செய்த உடல் இருந்தமையேயாகும். அதேபோன்று அவருக்கு கிடைத்த துக்கமான நுகர்ச்சி அவரது மனதை அடிமைப்படுத்திக் கொள்ள முடியாததற்கு காரணம் அவருள் விருத்தி செய்த மனம் இருந்தமையேயாகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எவரேனும் ஒருவருக்கு இந்த இருவகையான நுகர்ச்சிகளும் கிடைக்கும் போது, அதாவது அவருள் தோன்றிய சுக நுகர்ச்சியால் அவரது மனம் அடிமையாகாது என்றால் அவருள் விருத்தி செய்த உடல் இருக்கிறது. தோன்றிய துக்க நுகர்ச்சியால் அவரது மனம் அடிமையாகாது என்றால் அவருள் விருத்தி செய்த மனம் இருக்கிறது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இவ்வாறாகத்தான் விருத்தி செய்த உடலும் விருத்தி செய்த மனமும் உருவாகின்றது.

“புண்ணியமிகு கௌதமரே, என்னுள் பெரியதொரு (புத்த பகவான் மீது) விருப்பு தோன்றியது. புண்ணியமிகு கௌதமரிடம் விருத்தி செய்த உடலும் விருத்தி செய்த மனமும் இருக்கின்றது”
“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, முற்றிலும் உண்மை. நீங்கள் விடயங்களை நன்கு ஆராய்ந்தே இந்த வார்த்தையை சொன்னீர்கள். ஆனால் நான் இந்த விடயத்தையும் உங்களிடம் சொல்ல விரும்புகின்றேன். நான் ஏதேனும் ஒருநாளில் தலைமுடி தாடியை மழித்து சீவரத்தை போர்த்திக் கொண்டு இல்லறத்தை விடுத்து துறவறத்தை மேற்கொண்டேனோ அன்றிலிருந்தே சுக நுகர்ச்சிக்கு எனது மனம் அடிமையாகவுமில்லை. துக்க நுகர்ச்சிக்கு என் மனம் அடிமையாகவுமில்லை.”
“ஆ! அப்படியென்றால் புண்ணியமிகு கௌதமருக்கு ஏதேனும் சுக நுகர்ச்சியால் மனம் அடிமைப்படுமாயின் அத்தகைய சுக நுகர்ச்சி எதுவும் தோன்றவில்லையா? ஏதேனும் துக்க நுகர்ச்சியால் மனம் அடிமைப்படுமாயின் அத்தகைய துக்க நுகர்ச்சி எதுவும் தோன்றவில்லையா?”
“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஏன் இல்லை? புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் சம்புத்த நிலையை அடைவதற்கு முன்னர், சம்மா சம்புத்தரல்லாத, போதிசத்துவ நிலையில் இருக்கும்போதே என்னுள் இந்த எண்ணம் பிறந்தது. ‘இல்லற வாழ்க்கை என்பது தொல்லைகள் மிகுந்தது. கிலேச தூசுக்கள் நிறைந்த பாதையே இந்த இல்லறம். ஆனால் இந்த துறவறம் ஆகாயத்தை போன்றது. இல்லற வாழ்வை வாழ்ந்துகொண்டே முழுமையானதும் தூய்மையானதுமான வெண்மையான பிரம்மச்சரியத்தை பாதுகாப்பது இலகுவான காரியமல்ல. அப்படியென்றால் நான் தலைமுடி தாடியை மழித்து, சீவரத்தை போர்த்திக் கொண்டு, இல்லறத்தை விடுத்து துறவறத்தை மேற்கொள்ள வேண்டும்.’ என்று.
புண்ணியமிகு அக்கவெஸ்ஸன, அதேபோன்று நான் பிற்காலத்தில் இளமையான வயதிலேயே, கருமையான முடியிருக்கும் சுந்தரமான இளமைக்காலத்திலே, வாழ்வின் முதற்கால கட்டத்தில் இருக்கும் போது, பெற்றோர்கள் கண்ணீர் விட்டழுகும் போது, நான் தலைமுடி தாடியை மழித்து, சீவரத்தை போர்த்திக் கொண்டு, இல்லறத்தை விடுத்து உத்தம துறவறத்தை மேற்கொண்டேன்.
துறவறம் மேற்கொண்ட பின்னர் நான், ‘குசலங்கள் என்றால் என்ன,’ என்று தேடும் ஒருவரானேன். உன்னதமான மோட்சத்தை தேடும் ஒருவரானேன். நான் ஆலார காலாமரிடம் சென்றேன். சென்று ஆலார காலமரிடம் இவ்வாறு சொன்னேன். “காலாம ஆவுசோ, இந்த தர்மம் மற்றும் ஒழுக்கத்தில் ஈடுபடுவதற்கு நான் விரும்புகின்றேன்” என்று.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் ஆலார காலாமர் என்னிடம் இப்படிச் சொன்னார். “அன்பிற்குரிய ஆவுசோ, அப்படி என்றால் இந்த தர்மத்தில் ஈடுபடுங்கள். பிரம்மச்சரியத்தில் ஈடுபடுங்கள். அறிவுள்ள ஒருவரால் சில காலத்திலேயே இந்த தர்மத்தை தன்னுள்ளே உணர்ந்து கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும்” என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் மிக சொற்ப காலத்திலேயே அந்த தர்மத்தை முழுமையாக கற்றுக் கொண்டேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அவர்கள் உதடுகளை அசைத்து ஏதேனும் சொல்லும் போதே நான் அதனை புரிந்துகொண்டேன். அவர்களது தர்ம முறையை நான் புரிந்து கொண்டேன். அதனை அறிந்தவராகவும் கண்டவராகவும் நான் விளங்கினேன். ஏனேயோர்களும் என்னைப் பற்றி அப்படிச் சொன்னார்கள்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அப்போது நான் இப்படி நினைத்தேன். ‘இந்த ஆலார காலாமர் இந்த தர்மத்தை வெறும் கற்ற அறிவினாலோ அல்லது பக்தியால் மாத்திரமோ கூறுபவர் அல்ல. தாமே உய்த்துணர்ந்து, உறுதி செய்து கொண்டே இவ்வாறு சொல்கின்றார். உண்மையாகவே இந்த ஆலார காலமர் இந்த தர்மத்தை அறிந்து கண்டுணரந்தே இருக்கிறார்’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் ஆலார காலமரிடம் சென்றோன். சென்று ஆலார காலமிரடம் இப்படிக் கேட்டேன். “காலம ஆவுசோ, உங்கள் உய்த்துணர்வின் மூலமாக உறுதி செய்து கொண்ட இந்த தர்மத்தை எந்தளவிற்குள் சொல்ல முடியும்?” என்று. அதற்கு அவர் என்னிடம் ‘ஆகிஞ்சஞ்ஞாயதன’ சமாதி நிலையை பற்றி சொன்னார்.
அதனை கேட்ட நான் இப்படி நினைத்தேன். ‘அப்படி என்றால் சிரத்தை எனும் விடயம் ஆலார காலமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சிரத்தை இருக்கிறது. வீரியம் எனும் விடயம் ஆலார காலாமரிடம்; மாத்திரமல்ல. என்னிடமும் வீரியம் இருக்கிறது. விழிப்புணர்வு எனும் விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் விழிப்புணர்வு இருக்கிறது. சமாதி (மன ஒருங்கிணைவு) எனும் விடயம் ஆலார காலாமரிடம்; மாத்திரமல்ல. என்னிடமும் சமாதி இருக்கிறது. ஞானம் எனும் விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் ஞானம் இருக்கிறது. அப்படியென்றால் நானும் ஆலார காலாமர் தம்முடைய அறிவினால் உறுதி செய்து சொல்லும் இந்த விடயத்தை நானும் உறுதி செய்து கொள்வதற்கு வீரியம் செய்ய வேண்டும்.” என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, மிகவும் சொற்ப காலத்திலேயே மிகவும் விரைவாக நானும் அந்த தர்மத்தை உய்த்துணர்ந்து அந்த தர்மத்தை உறுதி செய்துகொண்டேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதன் பின்னர் நான் ஆலார காலாமரிடம் சென்றேன். சென்று இப்படிச் சொன்னேன். “அன்பிற்குரிய காலாம ஆவுசோ, நீங்கள், உய்த்துணர்வினால் உறுதிசெய்து கொண்ட இந்த தர்மம் இவ்வளவு தானா?”
“அன்பிற்குரிய ஆவுசோ, நான் உய்த்துணர்வினால் உறுதி செய்துகொண்டு சொல்லும் தர்மம் இவ்வளவுதான்”.
“அன்பிற்குரிய காலாம ஆவுசோ இப்போது நானும் இந்த தர்மத்தை உய்த்துணர்வினால் உறுதி செய்துகொண்டே வசிக்கிறேன்”
“ஆ..! உண்மையாகவா ஆவுசோ, இது பெரும் இலாபமாகும். ஆவுசோ இது எமக்கு பெரும் இலாபமாகும். தங்களைப் போன்ற சக பிரம்மச்சரியரை எமக்கு காணக் கிடைத்ததல்லவா? ஏதேனும் நான் உய்த்துணர்வுடன் உறுதி செய்து கொண்டிருப்பேனாயின், அதை தாங்களும் உய்த்துணர்விhல் உறுதிசெய்து கொண்டே இருக்கிறீர்கள். ஏதேனும் தர்மத்தை தாங்கள் உய்த்துணர்ந்து கொண்டு உறுதி செய்திருப்பீர்களாயின் அந்த தர்மத்தை நானும் உய்த்துணர்வுடன் உறுதி செய்து கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் நான் ஏதேனும் தர்மத்தை அறிவேனாயின், அந்த தர்மத்தை தாங்களும் அறிவீர்கள். தாங்கள் ஏதேனும் தர்மத்தை அறிவீர்களாயின், அதனை நானும் அறிவேன். நான் எத்தகையவரோ தாங்களும் அத்தகையவரே. தாங்கள் எத்தகையவரோ நானும் அத்தகையவரே. எனவே அன்பிற்குரிய ஆவுசோ, இப்போது வாருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே இந்த சீடர் குலாமை கவனித்துக் கொள்வோம்.”
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இவ்வாறாக எனக்கு குருவாக விளங்கிய ஆலார காலாமர், அவருக்கு சீடராக விளங்கிய என்னை தனக்கு சமமான நிலையில் கருதினார். பூஜித்தார். ஆனாலும் அக்கிவெஸ்ஸன, நான் இப்படி நினைக்க ஆரம்பித்தேன். ‘(ஆலார காலாமர் உபதேசித்த) இந்த தர்மம் என்றால் உய்த்துணர்வுடன் வெறுப்பதற்கு காரணமாக அமையாதது. ஒட்டிக் கொள்ளாமைக்கு காரணமாக விளங்காதது. துக்கங்கள் அழிவதற்கு காரணமாக விளங்காதது. கிலேசங்கள் தணிவதற்கு காரணமாக அமையாது. விசேட ஞானத்தை பெறுவதற்கு காரணமாக விளங்காதது. ஆரிய சத்திய உய்த்துணர்விற்கு காரணமாகாதது. மோட்சத்திற்கு காரணமாக அமையாதது. இந்த தர்மம் ஆகிஞ்சஞ்ஞாதன உலகத்தில் பிறப்பதற்கு மாத்திரமே காரணமாக விளங்கும்’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் தேடுவது அந்த தர்மத்தில் கிடைக்காததை அறிந்த நான், அந்த தர்மம் தொடர்பாக விருப்பற்றவரானேன். அவ்விடத்தை விட்டு அகன்று சென்றேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன நான் மீண்டும், ‘குசலங்கள் என்றால் என்ன,’ என்று தேடும் ஒருவரானேன். உன்னதமான மோட்சத்தை தேடும் ஒருவரானேன். நான் இராமபுத்திரனாகிய உத்தகனிடம் சென்றேன். சென்று இராமபுத்திரனாகிய உத்தகரிடம் இவ்வாறு சொன்னேன். “அன்பிற்குரிய ஆவுசோ, இந்த தர்மம் மற்றும் ஒழுக்கத்தில் ஈடுபடுவதற்கு நான் விரும்புகின்றேன்” என்று.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் இராமபுத்திரராகிய உத்தகர் என்னிடம் இப்படிச் சொன்னார். “அன்பிற்குரிய ஆவுசோ, அப்படி என்றால் இந்த தர்மத்தில் ஈடுபடுங்கள். பிரம்மச்சரியத்தில் ஈடுபடுங்கள். அறிவுள்ள ஒருவரால் சில காலத்திலேயே இந்த தர்மத்தை தன்னுள்ளே உணர்ந்து கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும்” என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் மிக சொற்ப காலத்திலேயே அந்த தர்மத்தை முழுமையாக கற்றுக் கொண்டேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அவர்கள் உதடுகளை அசைத்து ஏதேனும் சொல்லும்போதே நான் அதனை புரிந்துகொண்டேன். அவர்கள் மத்தியில் நான் பெரியவரானேன். அந்த தர்மத்தை அறிந்தவராகவும் கண்டவராகவும் நான் விளங்கினேன். ஏனேயோர்களும் என்னைப் பற்றி அப்படிச் சொன்னார்கள்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அப்போது நான் இப்படி நினைத்தேன். ‘இந்த இராமபுத்திரராகிய உத்தகர் இந்த தர்மத்தை வெறும் கற்ற அறிவினாலோ அல்லது பக்தியால் மாத்திரமோ கூறுபவர் அல்ல. தாமே உய்த்துணர்ந்து உறுதிசெய்து கொண்டே இவ்வாறு சொல்கின்றார். உண்மையாகவே இராமபுத்திரராகிய உத்தகர் இந்த தர்மத்தை அறிந்து கண்டுணரந்தே இருக்கிறார். என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இராமபுத்திரராகிய உத்தகரிடம் சென்றேன். சென்று இராமபுத்திரராகிய உத்தகரிடம் இப்படிக் கேட்டேன். “அன்பிற்குரிய ஆவுசோ, உங்கள் உய்த்துணர்வின் மூலமாக உறுதி செய்துகொண்ட இந்த தர்மத்தை எந்தளவிற்குள் சொல்ல முடியும்?” என்று. அதற்கு அவர் என்னிடம் ‘நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன’ சமாதி நிலையை பற்றி என்னிடம் சொன்னார்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதைப் பற்றி நான் இப்படி நினைத்தேன். ‘சிரத்தை இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சிரத்தை இருக்கிறது. வீரியம் இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் வீரியம் இருக்கிறது. விழிப்புணர்வு இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் விழிப்புணர்வு இருக்கிறது. சமாதி (மன ஒருங்கிணைவு) இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சாமதி இருக்கிறது. ஞானம் இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் ஞானம் இருக்கிறது. அப்படியென்றால் நானும் இந்த புண்ணியமிகு இராமர் தம்முடைய அறிவினால் உறுதி செய்து சொல்லும் இந்த விடயத்தை உய்த்துணர்ந்து கொள்வதற்காக வீரியம் செய்வேன். அதனை உறுதி செய்துகொள்வதற்காக வீரியம் செய்வேன்’என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, மிகவும் சொற்ப காலத்திலேயே மிகவும் விரைவாக நானும் அந்த தர்மத்தை உய்த்துணர்ந்து அந்த தர்மத்தை உறுதி செய்துகொண்டேன்.

புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதன் பின்னர் நான் ஒருநாள் இராமபுத்திரராகிய உத்தகரிடம் சென்றேன். சென்று இப்படிச் சொன்னேன். “அன்பிற்குரிய ஆவுசோ, உங்கள் தந்தையாரான புண்ணியமிகுந்த இராமர் தன்னுடைய ஞானத்தினால் உய்த்துணர்ந்து கொண்ட, உறுதி செய்துகொண்ட இந்த தர்மம் இவ்வளவு தானா?”
“அன்பிற்குரிய ஆவுசோ, ஆம்! எமது தந்தையாரான புண்ணிமிகுந்த இராமர் தன்னுடைய ஞானத்தினால் உய்த்துணர்ந்து கொண்ட, உறுதி செய்துகொண்ட இந்த தர்மம் இவ்வளவுதான்”.
“அன்பிற்குரிய ஆவுசோ, (உங்கள் தந்தையாரான புண்ணியமிகுந்த இராமர் உறுதி செய்துகொண்ட) இந்த தர்மத்தை நானும் அந்தளவில் உய்த்துணர்வினால் உறுதி செய்கொண்டே வசிக்கிறேன்”

“ஆ..! உண்மையாகவா ஆவுசோ, இது பெரும் இலாபமாகும். ஆவுசோ இது எமக்கு பெரும் இலாபமாகும். தங்களைப் போன்ற சக பிரம்மச்சரியரை எமக்கு காணக் கிடைத்ததல்லவா? ஏதேனும் எமது தந்தையாரான இராமர் உய்த்துணர்வுடன் உறுதி செய்து வசித்திருப்பாராயின்? அதை தாங்களும் உய்த்துணர்விhல் உறுதி செய்துகொண்டே இருக்கிறீர்கள். ஏதேனும் தர்மத்தை தாங்கள் உய்த்துணர்ந்து கொண்டு உறுதி செய்திருப்பீர்களாயின் அந்த தர்மத்தை எமது தந்தையாரான இராமரும் உய்த்துணர்வுடன் உறுதி செய்து வசித்திருந்தார். புண்ணியமிகு இராமர் ஏதேனும் தர்மத்தை அறிந்திருப்பாராயின் அந்த தர்மத்தை தாங்களும் இப்போது அறிவீர்கள். தாங்கள் ஏதேனும் தர்மத்தை அறிவீர்களாயின் அதனை புண்ணியமிகு இராமரும் அறிந்திருந்தார். எனவே புண்ணியமிகு இராமர் எத்தகையவரோ தாங்களும் அத்தகையவரே. தாங்கள் எத்தகையவரோ இராமரும் அத்தகையவரே. எனவே அன்பிற்குரிய ஆவுசோ, இப்போது வாருங்கள். நீங்கள் இந்த சீடர் குலாமை கவனித்துக் கொள்ளுங்கள்.” என்றார். இவ்வாறாக புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இராம புத்திரராகிய உத்தகர், எனக்கு நிகரான சக பிரம்மச்சரியராக இருந்தபோதிலே என்னை குரு பதவியில் வைத்தார். எனக்கு உத்தம பூஜைகள் செய்தார். ஆனாலும் புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் சிந்திக்க ஆரம்பித்தேன். ‘இந்த தர்மமென்றால் உய்த்துணர்வுடன் வெறுப்பதற்கு காரணமாக அமையாதது. ஒட்டிக்கொள்ளாமைக்கு காரணமாக விளங்காதது. துக்கங்கள் அழிவதற்கு காரணமாக விளங்காதது. கிலேசங்கள் தணிவதற்கு காரணமாக அமையாது. விசேட ஞானத்தை பெறுவதற்கு காரணமாக விளங்காதது. ஆரிய சத்திய உய்த்துணர்விற்கு காரணமாக விளங்காதது. மோட்சத்திற்கு காரணமாக விளங்காதது. இந்த தர்மம் நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன உலகத்தில் பிறப்பதற்கு மாத்திரமே காரயமாக விளங்கும்’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அந்த தர்மத்தில் நான் தேடுவது கிடைக்காததை அறிந்த நான் அந்த தர்மம் தொடர்பாக விருப்பற்றவரானேன். அவ்விடத்தை விட்டு அகன்று சென்றேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் மீண்டும் ‘குசலங்கள் என்றால் என்ன,’ என்று தேடும் ஒருவரானேன். உன்னதமான மோட்சத்தை தேடும் ஒருவரானேன். நான் மகத இராச்சியத்தில் நடந்து சென்றேன். அப்படிச் செல்லும்போது தான் உருவேல பிரதேசத்தின் சேனானிகாமம் எனும் கிராமத்தை அடைந்தேன். அங்கு அங்கேயே தங்கிக் கொண்டேன். அந்த பிரதேசம் நான் கண்ட அழகியதொரு பிரதேமாகும். அந்த வனாந்தரம் மிகவும் அழகியது. வெண்ணிற மணற்கரையை கொண்ட நதி அழகாக பாய்ந்தோடியது. ஐயமேற்பதற்கு வசதியாக அந்த வனத்தின் அருகேயே கிராமமும் இருந்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எனக்கு அப்போது இப்படித் தோன்றியது.
‘உண்மையாகவே இந்த பிரதேசம் அழகாக இருக்கிறது. இந்த வனமும் மிக்க அழகாக இருக்கிறது. வெண்ணிற மணற்கரையை கொண்ட நதி அழகாக பாய்ந்தோடுகின்றது. ஐயமேற்பதற்கு அவசியமானால் இந்த கிராமமும் அருகிலேயே இருக்கிறது. உண்மையாகவே வீரியத்துடன் தியானிக்கும் புண்ணியமிக்க ஒருவருக்கு இது மிகவும் உசிதமான இடமாகும்’. என்று. எனவே புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் அங்கேயே அமர்ந்து கொண்டேன். அச்சமயம் நான் ஒருபோதும் கேட்டிராத இந்த ஆச்சரியமிகுந்த மூன்று உவமைகள் எனக்குள் தோன்றியது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, தண்ணீரினுள் விழுந்து கிடந்த, தண்ணீரில் ஊறிப்போனதொரு விறகுத்துண்டு இருக்கிறது. ஒருவர் அங்கு வந்து ‘உத்தராரணீ’ எனும் தீ உருவாக்கும் உபகரணத்தை எடுத்து ‘நான் நெருப்பை உருவாக்க போகின்றேன். வெப்பத்தை தோற்றுவிக்கப் போகின்றேன்’ என்று நினைக்கிறார். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த நபரால் தண்ணீரினுள் விழுந்து கிடந்த, தண்ணீரில் ஊறிப்போன விறகுத்துண்டை எடுத்து உத்தராரணீயில் வைத்து இடைவிடாது உரசுவதால் ‘நான் நெருப்பை உருவாக்க போகின்றேன். வெப்பத்தை தோற்றுவிக்கப் போகின்றேன்’ என்று நினைத்ததை செய்ய செய்ய முடியுமா?
“புண்ணியமிகு கௌதமரே, அது இயலாத காரியமாகும்”
“அதற்கு காரணம் என்ன?”
“புண்ணியமிகு கௌதமரே, அந்த விறகுத்துண்டு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டதாகும். அதேபோன்று அந்த விறகுத்துண்டு நீரில் போட்டு வைத்திருந்ததாகும். அதை வைத்துக் கொண்டு நெருப்பை உருவாக்க போனால் அது அந்த நபரை வீணாக சோர்வுக்குள்ளாக்கும் வேலையாகும். அயர்வுக்குள்ளாக்கும் வேலையாகும்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதேபோன்றுதான். ஒருசில சிரமண அந்தணர்கள் காமங்களில் இருந்து விலகி வசிப்பவர்கள் அல்ல. காமங்களின் மீது பெரும் விருப்பு அவர்கள் மனதில் நிலைத்துள்ளது. பெரும் பந்தம் இருக்கிறது. காமங்களினால் திளைத்து காம தாகத்தினாலும், காமங்களினால் தோன்றும் தகிப்பினாலும் இருக்கும் நிலை அவர்களிடமிருந்து இல்லாமல் போகவில்லை. அவர்கள் மனம் தணிந்த நிலையை அடையவுமில்லை. அந்த சிரமண அந்தணர்கள் தாம் வேண்டுமென்றே நினைத்து தம் உடலை கொடிய வகையில் வறுத்தி கொடூர வேதனைகளை அனுபவித்தாலும் அதியுன்னதமான சம்போதி ஞானக்காட்சியை பெருவதற்கு ஒருபோதும் தகுதியானவர்கள் அல்ல. அந்த சிரமண அந்தணர்கள் தாம் வேண்டுமென்றே நினைத்து தம் உடலை கொடிய வகையில் வறுத்தி கொடூர வேதனைகளை அனுபவிக்காவிட்டாலும் அதியுன்னதமான சம்போதி ஞானக்காட்சியை பெருவதற்கு ஒருபோதும் தகுதியானவர்கள் அல்ல. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் ஒருபோதும் கேட்டிராத ஆச்சரியமிக்க முதலாவது உவமையை நான் இவ்வாறாக புரிந்துக் கொண்டேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் ஒருபோதும் கேட்டிராத இந்த ஆச்சரியமிகுந்த இரண்டாவது உவமை எனக்கு தோன்றியது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீரில் கிடந்து மேலே எடுத்து நிலத்தில் வைத்திருக்கும், ஈரத்தை உள்வாங்கியதொரு கம்பு இருக்கிறது. அங்கு ஒரு மனிதன் ‘உத்தராரணீ’ எனும் தீ உருவாக்கும் உபகரணத்தை எடுத்துக் கொண்டு வருகிறான். வந்து, ‘நான் இதில் தீ மூட்ட வேண்டும். வெப்பத்தை தோற்றுவிக்க வேண்டும்’ என்று நினைக்கிறான். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த நபரால் நீரில் கிடந்து மேலே எடுத்து, நிலத்தில் வைத்திருக்கும், ஈரத்தை நன்கு உள்வாங்கிய கம்பினை உத்தராரணீயில் வைத்து இடைவிடாது உரசுவதால் தீ மூட்ட முடியுமா? வெப்பத்தை உருவாக்க முடியுமா?
“புண்ணியமிகு கௌதமரே, தீ மூட்ட முடியாது”.
“தீ மூட்டிக்கொள்ள முடியாததற்க காரணம் என்ன?’
“புண்ணியமிகு கௌதமரே, அந்த கம்பு , நீரில் கிடந்து மேலே எடுத்து நிலத்தில் வைத்திருந்தாலும் அது நீரை நன்கு உள்வாங்கிக் கொண்டதல்லவா? அதை வைத்துக் கொண்டு நெருப்பை உருவாக்க போனால் அது அந்த நபரை வீணாக சோர்வுக்குள்ளாக்கும் வேலையாகும். அயர்வுக்குள்ளாக்கும் வேலையாகும்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதேபோன்றுதான். ஒருசில சிரமண அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடலினால் மாத்திரமே காமங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுள் காமங்களின் மீதான ஆசையில் எவ்வித குறைவுகளுமில்லை. காமங்களின் மீது பெரும் விருப்பு அவர்களுள் நிலைத்துள்ளது. அந்த விருப்பில் குறைவில்லை. காமங்களினால் திளைத்து காம தாகத்தினாலும் காமங்களினால் தோன்றும் தகிப்பினாலும் இருக்கும் நிலை அவர்களின் மனதிலிருந்;து இல்லாமல் போகவில்லை. அவர்களது மனதில் காமங்களினால் தணிந்த நிலையுமில்லை. அந்த சிரமண அந்தணர்கள் தாம் வேண்டுமென்றே நினைத்து தம் உடலை கொடிய வகையில் வறுத்தி கொடூர வேதனைகளை அனுபவித்தாலும் அதியுன்னதமான சம்போதி ஞானக்காட்சியை பெருவதற்கு ஒருபோதும் தகுதியானவர்கள் அல்ல. அந்த சிரமண அந்தணர்கள் தாம் வேண்டுமென்றே நினைத்து தம் உடலை கொடிய வகையில் வறுத்தி கொடூர வேதனைகளை அனுபவிக்காவிட்டாலும் அதியுன்னதமான சம்போதி ஞானக்காட்சியை பெருவதற்கு ஒருபோதும் தகுதியானவர்கள் அல்ல. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன நான் ஒருபோதும் கேட்டிராத ஆச்சரியமிக்க இரண்டாவது உவமையை இவ்வாறாக புரிந்துக் கொண்டேன்.

“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் ஒருபோதும் கேட்டிராத ஆச்சரியமிகுந்த மூன்றாவது உவமை எனக்கு தோன்றியது. அது இத்தகையதாகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீரில் கிடந்து மேலே எடுக்கப்பட்ட ஈரமற்ற நன்கு காய்ந்த ஒரு கம்பு இருக்கிறது. அங்கு ஒரு மனிதன் ‘உத்தராரணீ’ எனும் தீ உருவாக்கும் உபகரணத்தை எடுத்துக் கொண்டு வருகிறான். வந்து, ‘நான் இதில் தீ மூட்ட வேண்டும். வெப்பத்தை தோற்றுவிக்க வேண்டும்’ என்று நினைக்கிறான். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த நபரால் நீரில் கிடந்து மேலே எடுக்கப்பட்ட ஈரமற்ற நன்கு காய்ந்த ஒரு கம்பினை உத்தராரணீயில் வைத்து இடைவிடாது உரசுவதால் தீ மூட்ட முடியுமா? வெப்பத்தை உருவாக்க முடியுமா?”
“புண்ணியமிகு கௌதமரே, ஆம் அது இயலுமானதொரு காரியமாகும்”
“அவரால் அப்படி தீ மூட்டிக்கொள்வதற்கு இயலுமானதாக இருந்தமைக்கான காணரம் என்ன?”
“புண்ணியமிகு கௌதமரே, அந்த கம்பு ஈரமற்றது நன்கு காய்ந்திருந்தது. அது மட்டுமல்ல. அந்த கம்பு நீரிலிருந்து வெளியே எடுத்து வைத்திருந்ததல்லவா?”
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதேபோன்றுதான். ஒருசில சிரமண அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடம்பினாலும் காமங்களில் இருந்து விலகியே இருக்கிறார்கள். அதேபோன்று அவர்களுள் இந்த காமங்களின் மீதான ஆசை, காமங்களின் மீது பெரும் விருப்பு, காமங்களினால் திளைத்திருக்கும் தன்மை, காம தாகம், காமங்களினால் தோன்றும் தகிப்பு இருந்திருக்குமாயின் அவை அனைத்தும் அந்த மனதிலிருந்து அகன்றிருக்கும். அவர்களது மனதில் அத்தகையன தணிந்தே இருக்கும். எனவே அந்த சிரமண அந்தணர்கள் தாம் வேண்டுமென்றே நினைத்து தம் உடலை கொடிய வகையில் வறுத்தி கொடூர வேதனைகளை அனுபவித்தாலும் அதியுன்னதமான சம்போதி ஞானக்காட்சியை பெறுவதற்கு இயலுமானவர்களாக இருப்பார்கள். அந்த சிரமண அந்தணர்கள் தாம் வேண்டுமென்றே நினைத்து தம் உடலை கொடிய வகையில் வறுத்தி கொடூர வேதனைகளை அனுபவிக்காவிட்டாலும் அதியுன்னதமான சம்போதி ஞானக்காட்சியை பெறுவதற்கு இயலுமானவர்களாக இருப்பார்கள். புண்ணியமிகு நான் ஒருபோதும் கேட்டிராத ஆச்சரியமிக்க மூன்றாவது உவமையை நான் இவ்வாறாக புரிந்துக் கொண்டேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் ஒருபோதும் கேட்டிராத ஆச்சரியமிகுந்த இந்த மூன்று உவமைகளையும் நான் இவ்வாறாக விளங்கிக் கொண்டேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எனக்கு அப்போது இவ்வாறு தோன்றியது. கீழ்தாடையினால் மேல்தாடை பற்களை இறுக்கிக் கொணடு நாவினால் அண்ணத்தை அழுத்திக் கொண்டு எனது குசல மனதினால் அகுசல மனதை அடக்க வேண்டும். பலத்த முறையில் அடக்க வேண்டும். பலத்த முறையில் அகுசல மனதை தகிக்க வேண்டும் என்று.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறு நினைத்த நான், கீழ்தாடையினால் மேல்தாடை பற்களை இறுக்கிக்கொணடு, நாவினால் அண்ணத்தை அழுத்திக் கொண்டு, எனது குசல மனதினால் அகுசல மனதை அடக்கினேன். பலத்த முறையில் அடக்கினேன். பலத்த முறையில் அகுசல மனதை தகிக்கச் செய்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாக நான் கீழ்தாடையினால் மேல்தாடை பற்களை இறுக்கிக்கொணடு, நாவினால் அண்ணத்தை அழுத்திக் கொண்டு, எனது குசல மனதினால் அகுசல மனதை அடக்கும் போது. பலத்த முறையில் அடக்கும்போது. பலத்த முறையில் அகுசல மனதை வருத்தும் போது எனது அக்குள்களில் இருந்து வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அது இத்தகையதாகும். உடல் வலிமைமிக்க ஒருவர் மிகவும் பலவீனமான ஒரு மனிதனின் தலையை பிடித்தோ அல்லது உடம்பை பிடித்தோ துன்பத்திற்கு உள்ளாக்குவாராயின், பலத்த முறையில் துன்பத்திற்கு உள்ளாக்குவாராயின், பலத்த முறையில் வருத்துவாராயின் புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன நானும் அவ்வாறே கீழ்தாடையினால் மேல்தாடை பற்களை இறுக்கிக்கொணடு, நாவினால் அண்ணத்தை அழுத்திக் கொண்டு, எனது குசல மனதினால் அகுசல மனதை அடக்கும் போது. பலத்த முறையில் அடக்கும்போது. பலத்த முறையில் அகுசல மனதை வருத்தும் போது எனது அக்குள்களில் இருந்து வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன நான் துவங்கிய வீரியம் அவ்வாறே இருந்தது. மனம் ஒடுங்கவில்லை. ஏமாறும் தன்மையின்றி விழிப்புணர்வு நன்கு நிலைத்திருந்தது. ஆனால் இவ்வாறாக என்னை வருத்திக்கொண்டு பலத்த முறையில் விருத்தி செய்த வீரியத்தினால் (இடைவிடாத முயற்சியால்) உடலுக்கு ஏற்படும் பாதிப்பினால் உடல் சோர்வடைந்தது. அதன் காரணமாக உடல் நிலைகுழைந்துவிடும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இவ்வாறாக தீவிரமான வேதனைகளை அனுபவித்தாலும், அந்த வேதனைகளால் மனதை அடிமைப்படுத்திக் கொள்ளவில்லை.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. அப்படியாயின் நான் இப்போது ‘அப்பிராணக த்யானம்’ செய்ய வேண்டும் என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன அதாவது நான், நாசியின் மூலமோ அல்லது வாயின் மூலமோ உள்மூச்சு வெளிமூச்சு என்பன எடுக்காமல் இருந்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இவ்வாறாக நான் நாசியினாலும் வாயினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்த்திருக்கும் போது காதுகளில் இருந்து காற்று வெளியேறுவதை போன்ற பெரும் சப்தம் கேட்டது. அந்த சப்தமானது ஒரு கொல்லன் துருத்திக்குழாய்ழூ மூலம் ஏற்படுத்தும் சப்தத்தை போன்ற பெரியதொரு சப்தமாகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான்; நாசியினாலும் வாயினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்த்திருக்கும் போது காதுகளில் இருந்து பெரும் சப்தத்துடன் காற்று வெளியேறியது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆனாலும் நான் துவங்கிய வீரியம் அவ்வாறே இருந்தது. மனம் ஒடுங்கவில்லை. விழிப்புணர்வு நன்கு நிலைத்திருந்தது, ஏமாறவில்லை. ஆனால் இவ்வாறாக என்னை வருத்திக்கொண்டு பலத்த முறையில் விருத்தி செய்த வீரியத்தினால் (இடைவிடாத முயற்சியால்) உடலுக்கு ஏற்படும் பாதிப்பினால் உடலென்றால் மிகவும் சோர்வுக்குள்ளானது. அதன் காரணமாக அமைதி ஏற்படவில்லை. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய தீவிரமான வேதனைகளினாலும் இந்த மனதை அடிமைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘அப்படியாயின் நான் மேலும் இந்த அப்பிராணக த்யானத்தையே விருத்தி செய்வேன்’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதன் பிறகு நான் மேலும் நான்; நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்த்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாக நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது உடலின் வாதம் மேலோங்கி என் உச்சந்தலையை வருத்தியெடுக்க ஆரம்பித்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன அந்த வேதனையானது, வலிமையானதொரு மனிதன் கூரிய வேலொன்றை எடுத்து தலையில் ஓங்கி அடிப்பதைப் போன்றதாகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாகவே நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது உடலின் வாதம் மேலோங்கி என் உச்சந்தலையை வருத்தியெடுக்க ஆரம்பித்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆனாலும் நான் துவங்கிய வீரியம் அவ்வாறே இருந்தது. மனம் ஒடுங்கவில்லை. விழிப்புணர்வு நன்கு நிலைத்திருந்தது, ஏமாறவில்லை. ஆனால் இவ்வாறாக என்னை வருத்திக்கொண்டு பலத்த முறையில் விருத்தி செய்த வீரியத்தினால் (இடைவிடாத முயற்சியால்) உடலுக்கு ஏற்படும் பாதிப்பினால் உடல் மிகவும் சோர்வுக்குள்ளானது. அதன் காரணமாக அமைதி ஏற்படவில்லை. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய தீவிரமான வேதனைகளினாலும் இந்த மனதை அடிமைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. நான் இன்னும் இன்னும் மேலும் இந்த அப்பிராணக த்யானத்தையே விருத்தி செய்ய வேண்டும் என்று. எனவே புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் மேலும்; நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்த்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாக நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது என் தலையில் அதி தீவிரமான வேதனை தோன்றியது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அது இத்தகையதொரு வேதனையாகும். வலிமை மிகுந்த ஒரு மனிதன் பெரியதொரு கயிற்றை எடுத்து தலையை சுற்றி பலமாக இறுக்கி இழுப்பதைப் போன்றதாகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாகவே நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது என் தலையில் அதி தீவிரமாக இத்தகையதொரு வேதனையே தோன்றியது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆனாலும் நான் துவங்கிய வீரியம் அவ்வாறே இருந்தது. மனம் சுருங்கவில்லை. விழிப்புணர்வு நன்கு நிலைத்திருந்தது, ஏமாறவில்லை. ஆனால் இவ்வாறாக என்னை வருத்திக்கொண்டு பலத்த முறையில் விருத்தி செய்த வீரியத்தின் காரணமாக உடலுக்கு ஏற்படும் பாதிப்பினால் உடல் மிகவும் சோர்வுக்குள்ளானது. அதன் காரணமாக அமைதி ஏற்படவில்லை. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய தீவிரமான வேதனைகளினாலும் இந்த மனதை அடிமைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. நான் இன்னும் இன்னும் மேலும் இந்த அப்பிராணக த்யானத்தையே விருத்தி செய்ய வேண்டும் என்று. எனவே புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் மேலும்; நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்த்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாக நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது வயிற்றினுள் இருக்கும் வாதம் (காற்று) பலத்த அளவில் கொந்தளிக்க ஆரம்பித்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, மாடுகளை வதம் செய்வதற்கு திறமையான ஒருவனோ அல்லது அவனது ஒரு உதவியாளனோ கூரிய ஆயுதமொன்றை எடுத்து வயிற்றை கிழிக்கும் போது ஏதேனும் வேதனை தோன்றுமாயின், புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன அத்தகையதொரு வேதனையே நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது வயிற்றினுள் இருக்கும் வாதம் கொந்தளித்து வேதனையளித்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆனாலும் நான் துவங்கிய வீரியம் அவ்வாறே இருந்தது. மனம் சுருங்கவில்லை. விழிப்புணர்வு நன்கு நிலைத்திருந்தது, ஏமாறவில்லை. ஆனால் இவ்வாறாக என்னை வருத்திக்கொண்டு பலத்த முறையில் விருத்தி செய்த வீரியத்தின் காரணமாக உடலுக்கு ஏற்படும் பாதிப்பினால் உடல் மிகவும் சோர்வுக்குள்ளானது. அதன் காரணமாக தணிவு ஏற்படவில்லை. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய தீவிரமான வேதனைகளினாலும் இந்த மனதை அடிமைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. நான் இன்னும் இன்னும் மேலும் இந்த அப்பிராணக த்யானத்தையே விருத்தி செய்ய வேண்டும் என்று. எனவே புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் மேலும்; நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்த்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன இவ்வாறாக நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது, என்னுடைய உடலில் பலத்த அளவிலான வெப்பம் தோன்றியது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அந்த வெப்பம் இத்தகையதாகும். வலிமையான இரு மனிதர்கள் மிகவும் பலவீனமான ஒருவனை கைகால்களினால் பிடித்துக் கொண்டு தீக்குழியல் இட்டு வாட்டுவதைப் போன்றதாகும். அந்த கொடுமையான தீயில் வாட்டி வருத்துவதைப் போன்றதாகும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இவ்வாறாக நான் நாசியினாலும் வாயினாலும் காதுகளினாலும் மூச்செடுப்பதையும் மூச்சு விடுவதையும் தவிர்க்கும் போது, என்னுடைய உடலில் பலத்த அளவிலான வெப்பம் தோன்றியது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆனாலும் இவ்வாறாக என்னை வருத்திக்கொண்டு பலத்த முறையில் விருத்தி செய்த வீரியத்தின் காரணமாக உடலுக்கு ஏற்படும் பாதிப்பினால் உடல் மிகவும் சோர்வுக்குள்ளானது. அதன் காரணமாக தணிவு ஏற்படவில்லை. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய தீவிரமான வேதனைகளினாலும் இந்த மனதை அடிமைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் என்னை கண்ணுற்ற தேவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். சில தேவர்கள், “ஐயகோ ! சிரமண கௌதமர் இறந்துவிட்டார்” என்றார்கள். வேறு சில தேவர்கள், “இல்லை! இல்லை! சிரமண கௌதமர் இறக்கவில்லை. ஆனால் இப்போது இப்போதே இறந்துவிடுவார்” என்றனர். இன்னும் சில தேவர்கள், “இல்லை! சிரமண கௌதமர் இறக்கவில்லை. இப்போது இறக்கவும் மாட்டார். சிரமண கௌதமர் அரஹத் (நிக்கிலேச) நிலையை அடைந்துள்ளார். அரஹத் உத்தமர்களின் ஒரு உளச்சமாதி நிலையிலேயே அவர் இப்போது இருப்பதாக தோன்றுகிறது” என்று பேசிக்கொண்டார்கள்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. “நான் உணவு உட்கொள்வதை முழுமையாகவே தவிர்த்திருக்க வேண்டும்” என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் தேவர்கள் என் முன் தோன்றி என்னிடம் இவ்வாறு கூறினார்கள். “கவலைகள் அற்ற முனிவரே, உணவு உட்கொள்வதை முழுமையாகவே தவிர்த்திருக்க வேண்டாம். கவலைகள் அற்றவரே, தாங்கள் உணவு உட்கொள்வதை முழுமையாகவே தவிர்த்திருப்பீர்களாயின், நாம் தங்கள் உடலின் மயிர்துளைகள் மூலம் திவ்வியமான ஓஜசை (திரவத்தை) தங்கள் உடலில் செலுத்த வேண்டியதாக இருக்கும். தாங்கள் உயிர் வாழ்வதற்காகவே நாம் அதனை செய்வோம்” என்றனர்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. “நான் அனைத்து வகையிலும் உணவை தவிர்த்திருப்பதாக உறுதி பூண்டதன் பின்னர் இந்த தேவர்கள் இந்த உடலுக்கு மயிர்துளைகள் மூலம் திவ்வியமான ஓஜசை (திரவத்தை) என்னுள் செலுத்துவார்களேயானால், அவ்வாறு செலுத்துவதன் மூலம் நான் உயிர்வாழ நேருமாயின் எனது இலட்சியம் பொய்யாகிவிடும். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அந்த செயலை செய்யாதிருக்கும் படி நான் அந்த தேவர்களிடம் கூறினேன்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயத்தில் எனக்கு இவ்வாறு தோன்றியது. நான் சிறிய அளவில், பிடியளவில் உணவு உட்கொள்ள வேண்டும். பாசிப்பயறு நீர், கொள்ளு தண்ணீர், கடலை தண்ணீர், பயற்றம் தண்ணீர் என்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இப்படி நினைத்த நான் பாசிப்பயற்று தண்ணீர் சிறிதளவோ, கொள்ளு தண்ணீர் சிறிதளவோ, கடலை தண்ணீர் சிறிதளவோ, பயற்றம் தண்ணீர் சிறிதளவோ அருந்துவதற்கு துவங்கினேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இவ்வாறாக பாசிப்பயற்று தண்ணீர் சிறிதளவோ, கொள்ளு தண்ணீர் சிறிதளவோ, கடலை தண்ணீர் சிறிதளவோ, பயற்றம் தண்ணீர் சிறிதளவோ மாத்திரம் அருந்தி வாழ ஆரம்பித்தன் பின்னர் எனது இந்த உடல் மிக மோசமான அளவில் மெலிய ஆரம்பித்தது. எனது கைகால்கள் ஆசிதிக எனும் கொடியைப் போன்று, கருங்கொடியின் தண்டுகளைப் போன்று மெலிந்தன. உணவு குறைப்பாட்டினாலேயே இந்நிலை உருவானது. எனது பிட்டம் ஒட்டகத்தின் கால் தடத்தை போன்றதாகியது. உணவு குறைப்பாட்டினாலேயே இந்நிலை உருவானது. அதேபோன்று எனது முதுகெலும்பு வட்டானாவலீ என்றழைக்கப்படும் கொடியைப் போன்று உயர்ந்து தாழ்ந்தது. உணவு குறைப்பாட்டினாலேயே இந்நிலை உருவானது. நன்றாக இற்றுப்போன மண்டபத்தின் பழைய கூரை அங்குமிங்குமாக உயர்ந்து தாழ்ந்திருப்பதைப் போன்று எனது நெஞ்செலும்புகள் உயர்ந்து தாழ்ந்திருந்தன. ஆழமானதொரு கிணறு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த கிணறு எவ்வளவு ஆழமானது என்றால் மேலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் நீர் சிறிதளவு பிரகாசிப்பதே தெரியும். அதேபோன்று எனது இரு கண்களும் கண்ணுக்குழியின் ஆழத்தில் அமிழ்ந்து ஓரளவு புலப்பட்டது. உணவு குறைப்பாட்டினாலேயே இந்நிலை உருவானது. கொடியில் இருந்து பறித்து, வெயிலில் போடப்பட்ட சுரைக்காயைப் போன்று என் தலையின் தோல் வாடி சுருங்கிப் போனது. உணவு குறைப்பாட்டினாலேயே இந்நிலை உருவானது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் என் வயிற்றை கையால் தடவும் போது என் முதுகெலும்புதான் கைக்கு அகப்பட்டது. அதேபோன்று நான் என் முதுகெலும்பை தடவும் போது என் வயிற்றின் தோலே கைகளுக்கு அகப்பட்டது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன உணவு குறைப்பாட்டினாலேயே இந்நிலை உருவானது. வயிற்றின் தோலும் முதுகெலும்பு வரிசையும் ஒன்றாக ஒட்டிப்போயிருந்தது. நான் மலசலங்கழிக்கும் போது அவ்விடத்திலேயே விழுந்தேன். உணவு உட்கொள்வதை குறைத்துக் கொண்டதாலேயே இந்நிலை உருவானது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இந்த உடலின் கைகால்களை தடவும்போது, உடலின் மயிர்களின் வேர்கள் இற்றுப்போயிருந்த காரணத்தினால் அந்த தோல் மயிர்கள் உதிர்ந்து விழுந்தன. உணவு உட்கொள்வதை குறைத்துக் கொண்டதாலேயே இந்நிலை உருவானது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, மக்கள் என்னைப் பார்த்து இவ்வாறாக பேசிக்கொண்டார்கள். “ஆ! இப்போது இந்த சிரமண கௌதமர் கறுப்பாகி இருக்கிறார்.” வேறு சில மக்கள் “இல்லை! இந்த சிரமண கௌதமர் கறுப்பாக இல்லை. இந்த சிரமண கௌதமர் பொன்னிறமாக இருக்கிறார்”. இன்னும் சிலர், “இல்லை! சிரமண கௌதமர் மானிறத்துடன் இருக்கிறார்.” புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இவ்வாறாக தூய்மையுடன் பிரகாசித்த எனது தோலின் நிறம்கூட உணவை குறைவாக உட்கொண்டதால் மங்கிப்போனது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘முற்காலத்தில் எவரேனும் ஒரு துறவியோ அல்லது அந்தணரோ, அவர் தாம் வேண்டுமென்றே நினைத்து தம்மைத் தாமே கொடிய வகையில் வருத்திக் கொண்டு துன்பம் அனுபவித்திருந்திருப்பாராயின் இந்த அளவே (நான் அனுபவித்த அளவிலான துன்பத்தையே) அனுபவித்திருக்க வேண்டும். இதற்கு மேலான துன்பங்கள் இல்லை. அதுபொன்று எதிர்காலத்தில் தோன்றும் ஒரு துறவியோ அல்லது அந்தணரோ, அவர் தாம் வேண்டுமென்றே நினைத்து தம்மைத் தாமே கொடிய வகையில் வருத்திக் கொண்டு துன்பம் அனுபவிப்பாராயின் இந்த அளவிலானதையே (நான் அனுபவித்த அளவிலான துன்பத்தையே) அனுபவிக்க வேண்டும். இதற்கு மேலாக (தம்மை தாமே வருத்திக் கொள்வதால் அனுபவிக்க நேரிடும்) துன்பங்கள் இல்லை. நிகழ்காலத்தில் எவரேனும் ஒரு துறவியோ அல்லது அந்தணரோ, அவர் தாம் வேண்டுமென்றே நினைத்து தம்மைத் தாமே கொடிய வகையில் வருத்திக் கொண்டு துன்பம் அனுபவித்து கொண்டிருப்பாராயின் அவரும் இந்த அளவிலான (நான் அனுபவித்த அளவிலான) துன்பத்தையே அனுபவிக்க வேண்டும். இதற்கு மேலான துன்பங்கள் இல்லை. ஆனால் இத்தகைய சொல்லொன்னாத் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த செயற்பாட்டில் என்னை நான் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டாலும் சாதாரண மனித இயல்பினை மீறிய மேன்மையான ஞானக்காட்சிகள் எதனையும் என்னால் உய்த்துணர்ந்து கொள்வதற்கு முடியவில்லை. சத்திய உய்த்துணர்விற்கு வேறு ஏதேனும் மார்க்கங்கள் இருக்கக்கூடுமா?’ என்று.

புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘ஆ..! எனக்கு நினைவு இருக்கிறது. எமது தந்தையார் (சுத்தோதன மாமன்னர்) உழவு உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த போது, நான் குளிர்ச்சி மிகுந்த நாவல் மரநிழலில் இருந்தமை எனக்கு நினைவிருக்கிறது. நான் அன்று காமங்களில் இருந்து விலகிய, அகுசலங்களில் இருந்து விலகிய, எண்ணங்களும் எண்ணவலைகளுடன் கூடிய, மானசீக ஓய்வினால் தோன்றிய பேரின்பத்துடனும் சுகத்துடனும் கூடிய முதலாவது த்யான நிலையை அடைந்திருந்தமை எனக்கு நினைவு இருக்கிறது. சத்திய உய்த்துணர்விற்கினா மார்க்கம் இதுவா?’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இவ்வாறாக நினைத்துக் கொண்டிருக்கும் போது என்னுள் இந்த உணர்வு தோன்றியது. ‘சரி! இதுதான் மார்க்கம்’ என்று.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘நான் ஏன் அந்த சுகத்திற்கு (முதலாம் படிமுறை த்யான நிலையினால் கிடைக்கும் அளப்பரிய பேரின்பத்திற்கு) பயப்பட வேண்டும்? அது தவிர அந்த சுகம் காமங்களில் இருந்து விலகிய, அகுசல தர்மங்களில் இருந்து விலகிய சுகம்தானே’ என்று.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அச்சமயம் எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘ஆம்! நான் இந்த சுகத்திற்கு பயப்பட மாட்டேன். இந்த சுகம் காமங்களில் இருந்து விலகிய, அகுசல தர்மங்களில் இருந்து விலகியதால் ஏற்படும் சுகம். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அதன் பின்னர் நான் இவ்வாறு நினைத்தேன். இத்தகைய பலவீனமானதொரு உடலை வைத்துக் கொண்டு (முதலாம் படிமுறை த்யான நிலையினால் கிடைக்கும்) அந்த சுகத்தை பெறுவதொன்றும் இலகுவான காரியமல்ல. நான் கொஞ்சம் கொஞ்சமாக சோறு கறிகளுடன் கூடிய அன்னத்தை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு நினைத்த நான், சோறு கறிகளுடன் கூடிய அன்னத்தை உட்கொள்ள ஆரம்பித்தேன். அச்சமயத்தில் ஐந்து துறவிகள் எனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள். ‘சிரமண கௌதமர், ஏதேனும் தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்வாராயின் அதனை எமக்கும் கற்றுக் கொடுப்பார் எனும் நோக்கத்துடனே அவர்கள் எனக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் சோறு கறிகளுடன் கூடிய அன்னத்தை உட்கொள்ள ஆரம்பித்த பின்னர் அந்த ஐந்து பிக்குமார்களும் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்தனர். ‘பயனில்லை! சிரமண கௌதமர், சுகத்தை விரும்புகிறார். அவரது வீரியம் தலைகீழாகிவிட்டது. சுகம் நிறைந்த பக்கத்தை சார்ந்தே அவர் சுழன்று சென்றுவிட்டார்’ என்று என்னை விட்டுச் சென்றனர்.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இவ்வாறாக நான் சோறு கறிகளுடன் கூடிய அன்னத்தை உட்கொண்டு உடல் வலிமை தோன்றிய பின்னர், காமங்களில் இருந்து விலகிய, அகுசலங்களில் இருந்து விலகிய, எண்ணங்களும் எண்ணத்தொடர்களுடன் கூடிய, மானசீக ஓய்வினால் தோன்றிய பேரின்பத்துடனும் சுகத்துடனும் கூடிய முதலாவது த்யான நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசித்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இத்தகைய பேரின்பத்தையும் சுகத்தையும் அனுபவிக்கும் போது கூட அந்த சுக நுகர்ச்சியால் கூட என் மனதை ஆட்கொள்ள முடியவில்லை. (சுக நுகர்ச்சிக்கு மனம் அடிமையாகவில்லை).
மனதின் எண்ணங்களையும் எண்ணவலைகளையும் தணித்துக் கொண்டு மனதின் மலர்ச்சித் தன்மையுடன், மனதின் ஒருங்கிணைவுடன் கூடிய, விதக்க விசாரங்கள் (எண்ணங்களும் எண்ணத்தொடர்கள்) அற்ற உளச்சமாதியினால் தோன்றிய பேரின்பத்துடனும் சுகத்துடனும் கூடிய இரண்டாம் த்யான நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசித்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இத்தகைய பேரின்பத்தையும் சுகத்தையும் அனுபவிக்கும் போது கூட அந்த சுக நுகர்ச்சியால் கூட என் மனதை ஆட்கொள்ள முடியவில்லை. (சுக நுகர்ச்சிக்கு மனம் அடிமையாகவில்லை).
சுகத்தின் மீது ஒட்டிக்கொள்ளாமல் உபேக்கா (நடுநிலையான) மனதுடன் இருந்தேன். அறிவுடன் கூடிய விழிப்புணர்வுடன் உடலில் தோன்றும் சுகத்தை அனுபவித்தேன். ஆரிய உத்தமர்கள் இந்நிலையை, ‘உபேக்காவுடனும் விழிப்புணர்வுடனும் கூடிய சுகத்துடன் வசித்தல்’ என்றே குறிப்பிடுவார்கள். அந்த மூன்றாவது த்யான நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசித்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இத்தகைய பேரின்பத்தையும் சுகத்தையும் அனுபவிக்கும் போது கூட அந்த சுக நுகர்ச்சியால் என் மனதை ஆட்கொள்ள முடியவில்லை.
சுகத்தையும் துக்கத்தையும் இல்லாமல் செய்து கொண்டு, முதலிலேயே மானசீகமாகத் தோன்றும் சுகத்தினைப் போன்றே துக்கத்தினையும் துறந்து, சுக துக்கங்களற்ற உபெக்காவுடன் (நடுநிலையான மனதுடன்) கூடிய பரிசுத்தமான, திடமான விழிப்புணர்வுடன் கூடிய நான்காம் த்யான நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசித்தேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் இத்தகைய பேரின்பத்தையும் சுகத்தையும் அனுபவிக்கும் போது கூட அந்த சுக நுகர்ச்சியால் என் மனதை ஆட்கொள்ள முடியவில்லை.
இவ்வாறாக இந்த மனம் த்யான நிலை (ஒருங்கிணைந்த) அடைந்த பின்னர், மனம் தூய்மையாகி பிரகாசிக்க துவங்கிய பின்னர், உபக்கிலேசங்கள் இல்லாமல் போன பின்னர், மனம் மென்மையானதன் பின்னர், மனம் உய்த்துணர்விற்கு தகுதியான பின்னர், மனம் அசையாமல் இருக்கும் போது, மனம் சஞ்சலமற்று இருக்கும் போது என் முற்பிறவிகளை காண வேண்டும் என்று, அதில் என் மனதை ஈடுபடுத்தினேன். அப்போது; பல்வேறு வகையாக நான் வாழ்ந்த முற்பிறவிகளை அறிந்து கொண்டேன். அதாவது ஒரு பிறவி, இரண்டு முற்பிறவிகள், மூன்று முற்பிறவிகள், நான்கு முற்பிறவிகள், ஐந்து முற்பிறவிகள், பத்து முற்பிறவிகள், இருபது முற்பிறவிகள், முப்பது முற்பிறவிகள், நாற்பது முற்பிறவிகள், ஐம்பது முற்பிறவிகள், நூறு முற்பிறவிகள், ஆயிரம் முற்பிறவிகள், இலட்சம் முற்பிறவிகள், பல்வேறு சங்வட்ட கற்ப காலங்கள், பல்வேறு விவட்ட கற்ப காலங்கள், பல்வேறு சங்வட்ட விவட்ட கற்ப காலங்கள் முற்பிறவிகளை நான் நினைவுகூறினேன். ‘இந்த காலத்தில் எனது பெயர் இதுதான், கோத்திரம் இதுதான், எனது தோற்றம் இப்படித்தான் இருந்தது, இத்தகைய உணவைத்தான் சாப்பிட்டேன், குடித்தேன். இவ்வாறாகத்தான் சுக துக்கங்களை அனுபவித்தேன். இவ்வாறாகத்தான் இந்த பிறவியின் போது மரணித்தேன். நான் அந்த பிறவியில் மரணித்து இங்கு பிறந்தேன் என்றவாறு முறையான விடயங்களுடன், தெளிவான விளக்கங்களுடன், பல்வேறு விதமாக என் முற்பிறவிகளை நினைவுகூறினேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அன்று இரவு முதலாம் யாமத்தில் நான் இந்த முதலாவது ஞானமான புப்பேனிவாசானுஸ்ஸதி ஞானத்தை உய்த்துணர்ந்து கொண்டேன். (முற்பிறவிகள் தொடர்பாக இருந்த) அஞ்ஞானம் அழிந்துவிட்டது. ஞானம் தோன்றியது. (மனதின்) இருள் அகன்றது. ஒளி தோன்றியது. தாமதமின்றி கிலேசங்களை தகிக்கும் வீரியத்துடன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தர்மத்தில் ஈடுபடும் ஒருவருக்கு கிடைக்கக்கூடியதே கிடைத்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய சுகத்தினால் கூட என் மனதை ஆட்கொள்ள (அடிமை படுத்திக்கொள்ள) முடியவில்லை.

மேலும் நான், த்யான நிலையில் ஒருங்கிணைந்த மனதுடன், தூய்மையான மனதுடன் பிரகாசமான மனதுடன், உபக்கிலேசங்கள் இல்லாத, மென்மையான, உய்த்துணர்விற்கு தகுதியான, கலக்கமற்ற மனதுடன் இருந்தமையால் உயிர்கள் மரணிப்பதனையும், மரணித்து மீண்டும் பிறப்பதனையும் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக என் மனதை ஈடுபடுத்தினேன். அப்போது நான் சாதாரண மனிதர்களின் பார்வையை மீறிய தூய்மையான தெய்வீக பார்வை எனும் ஞானத்தினால், உயிர்களை காணக்கூடியதாக இருந்தது. உயர்வான தாழ்வான வகையில், அழகான அவலட்சணமான வகையில் , சுவர்க்க உலகங்களில், நரக உலகங்களில் தாம் செய்து கொள்ளும் கர்மங்களின் அடிப்படையில் உயிர்கள் இறப்பதனையும் மீண்டும் பிறப்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. ‘ஐயகோ இந்த உயிர்கள் உடலினால், வார்த்தையினால், மனதினால் துர்நடத்தைகளில் ஈடுபட்டு, ஆரிய உத்தமர்களை நிந்தனை செய்து, துர்பார்வை கொண்டிருந்து, தவறான காட்சியுடன் கூடிய நடத்தைகளில் ஈடுபட்டு வாழ்ந்து, மரணித்து மரணத்தின் பின் நரகங்களில் பிறந்துள்ளனர். வினிபாத எனும் நரகத்தில் பிறந்துள்ளனர். அதேபோன்று இந்த உயிர்கள் உடல், வார்த்தை, மனம் எனும் மூன்று கதவுகளினால் நன்நடத்தையில் ஈடுபட்டு ஆரிய உத்தமர்களை நிந்தனைகள் செய்யாமல், நற்காட்சியுடன் வாழ்ந்து, நற்காட்சியுடன் கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வாழ்ந்து, மரணித்து சுவர்க்கங்கள் எனும் நல்ல உலகங்களில் பிறந்துள்ளனர்’. இவ்வாறாக மனித இயல்பினை மீறிச் சென்ற தெய்வீக கண்களினால் உயிர்கள் மரணிப்பதனையும் மரணித்து மீண்டும் பிறப்பதனையும் காண்டேன்;. உயர்வான தாழ்வான வகையில், அழகான அவலட்சணமான வகையில் , சுவர்க்க உலகங்களில், நரக உலகங்களில் தாம் செய்து கொள்ளும் கர்மங்களின் அடிப்படையில் உயிர்கள் இறப்பதனையும் மீண்டும் பிறப்பதனையும் நான் அறிந்து கொண்டேன். புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அன்று இரவு இரண்டாம் யாமத்தில் இந்த இரண்டாவது ஞானமான சுதூபபாத ஞானத்தை உய்த்துணர்ந்து கொண்டேன். (உயிர்கள் பிறத்தல் மற்றும் மரணித்தல் தொடர்பாக இருந்த) அஞ்ஞானம் அழிந்துவிட்டது. ஞானம் தோன்றியது. (மனதின்) இருள் அகன்றது. ஒளி தோன்றியது. தாமதமின்றி கிலேசங்களை தகிக்கும் வீரியத்துடன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தர்மத்தில் ஈடுபடும் ஒருவருக்கு கிடைக்கக்கூடியதே கிடைத்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய சுகத்தினால் கூட என் மனதை ஆட்கொள்ள (அடிமைப்படுத்திக்கொள்ள) முடியவில்லை.
மேலும் நான், த்யான நிலையில் ஒருங்கிணைந்த மனதுடன், தூய்மையான மனதுடன் பிரகாசமான மனதுடன், உபக்கிலேசங்கள் இல்லாத, மென்மையான, உய்த்துணர்விற்கு தகுதியான, கலக்கமற்ற, சஞ்சலமற்ற மனதுடன் இருந்து கொண்டு ஆஸவங்களை அழித்த அழிக்க வேண்டும் என்று அதற்காக மனதை ஈடுபடுத்தினேன்;. அதன் பின்னர் நான் ‘இதுதான் துக்கம்’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. இதுவே ‘துக்கத்தின் தோற்றம்’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. ‘இதுவே துக்கத்தின் அழிவு’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. ‘இதுவே துக்கத்தை அழிப்பதற்கான மார்க்கம்’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. ‘இவையே ஆஸவங்கள்’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. ‘ஆஸவங்களின் தோற்றம் இதுவே’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. ‘ஆஸவங்களின் அழிவு இதுவே’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. ‘ஆஸவங்களை அழிப்பதற்கான மார்க்கம் இதுவே’ என்று உண்மையை உள்ளவாறு உய்த்துணர்ந்துக் கொண்டேன்;. இவ்வாறாக யதார்த்தத்தை அறிந்து கொண்டதன் பின்னர், கண்டு கொண்டதன் பின்னர் மனம் காமம் சார்ந்த ஆஸவங்களில் இருந்து விடுதலையடைந்தது. பவ ஆஸவங்களில் இருந்து மனம் விடுதலையடைந்தது. அஞ்ஞானம் சார்ந்த ஆஸவங்களிலிருந்தும் மனம் விடுதலையடைந்தது. ஆஸவங்களிலிருந்து மனம் விடுதலையடைந்த பின்னர் ‘கிலேசங்களில் இருந்து மனம் விடுதலையடைந்தது’ எனும் ஞானம் தோன்றியது. ‘பிறப்பு முடிந்துவிட்டது. மோட்ச மார்க்கத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன். செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தாயிற்று. மோட்சத்திற்காக இனிமேலும் செய்வதற்கு எதுவுமில்லை’ என்ற உய்த்துணர்வு ஏற்பட்டது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அன்று இரவு மூன்றாம் யாமத்தில் நான் இந்த மூன்றாவது ஞானமான ஆஸவக்கய ஞானத்தை உய்த்துணர்ந்து கொண்டேன். (சத்திய உய்த்துணர்வு தொடர்பாக இருந்த) அஞ்ஞானம் அழிந்துவிட்டது. ஞானம் தோன்றியது. (மனதின்) இருள் அகன்றது. ஒளி தோன்றியது. தாமதமின்றி கிலேசங்களை தகிக்கும் வீரியத்துடன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தர்மத்தில் ஈடுபடும் ஒருவருக்கு கிடைக்கக்கூடியதே கிடைத்தது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இத்தகைய சுகத்தினால் கூட என் மனதை ஆட்கொள்ள (அடிமை படுத்திக்கொள்ள) முடியவில்லை.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, (ஒரே சமயத்தில்) நூற்றுக்கணக்கானோர்க்கு நான் தர்மத்தை போதித்திருக்கிறேன். ஆனால் அவர்களுள் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி இவ்வாறாகவே நினைப்பார்கள். ‘சிரமண கௌதமர், இந்த தர்மத்தை எனக்காகவே போதித்தார்’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அது தொடர்பாக நீங்கள் இவ்வாறாக நினைக்க வேண்டாம். அதாவது, ‘ததாகதர் ஏனையோருக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக தர்மத்தை போதிக்கவில்லை.’ என்று. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, நான் தர்ம போதனையை நிறைவு செய்து கொள்வதோடு நான் (முன்னிருந்த) ஏற்கனவே இருந்த சமாதி நிமித்தத்திற்கு மனதை எடுத்துக் கொள்வேன் (ஈடுபடுத்துவேன்). அதிலேயே மனதை நிலைக்கச் செய்து கொள்வேன். மனதை ஒருங்கிணைத்துக் கொள்வேன். சமாதி நிலைக்கு உட்படுத்திக் கொள்வேன். நான் இவ்வாறாகவே எந்நேரமும் இருக்கிறேன்.”
“புண்ணியமிகு கௌதமரே, தங்களது இந்த செயற்பாடுகள் என்றால், அரஹத் சம்மா சம்புத்தர் ஒருவரது செயற்பாடுகளை போன்றவையே. புண்ணியமிகு கௌதமரே, தாங்கள் எப்போதாவது பகற்காலங்களில் உறங்கியமை தொடர்பாக நினைவு இருக்கிறதா?”
“ஆம், புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எனக்கு நினைவு இருக்கிறது. கோடை காலத்தின் இறுதி மாதத்தில், ஐயமேற்று, அந்த அன்னத்தை உட்கொண்ட பின்னர், இரு மடிப்புடைய சீவரத்தை நான்காக மடித்து அமைத்துக் கொண்ட சயனாசனத்தில், வலது பக்கமாக திரும்பி, அறிவுடன் கூடிய விழிப்புணர்வுடன் சிறிது நேரம் உறங்கியமை நினைவிருக்கிறது.
“புண்ணியமிகு கௌதமரே, ஒரு சில சிரமண அந்தணர்கள் இந்த உறக்கத்தை (ஏமாற்றத்தில்) அறியாமையில் இருப்பதாகத் தானே சொல்லியிருக்கிறார்கள்?”
“இல்லை. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இம்மாத்திரத்திலேயே ஒருவர் ஏமாற்றத்தில் (அறியாமையில்) இருக்கிறார் என்றோ ஏமாறவில்லை (அறியாமையில் இல்லை) என்றோ கூறிவிட முடியாது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஏமாறுவது மற்றும்; ஏமாறாமல் இருப்பது தொடர்பாக நான் உங்களுக்கு கூறுகிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் கற்றுக்கொடுக்கிறேன்.”
“புண்ணியமிகு கௌதமரே, அப்படியே செய்கிறேன்.” என்று நிகண்டநாத புத்திரனின் சீடரான சச்சகன் பாக்கியமுள்ள பகவானுக்கு மறுமொழியளித்தான். அச்சமயத்தில் புத்த பகவான் இந்த விடயத்தை மொழிந்தார்.
“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எவரேனும் ஒருவருள் மனதை மாசுபடுத்தும் கிலேசங்கள் இருக்குமாயின், துன்பம் நிறைந்த விளைவுகளைத் தரும், பீடைகள் நிறைந்த மறுபிறவியை தோற்றுவிக்கும், மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையையும், முதுமையையும் மரணத்தையும் உருவாக்கும் அந்த ஆஸவங்கள் அழிந்துவிடவில்லையாயின், அதுவே அறியாமை என்று சொல்லப்படுகிறது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆஸவங்கள் அழியா நிலையே அறியாமை என்று சொல்லப்படுகிறது.
அதேபோன்று புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, எவரேனும் ஒருவருள் மனதை மாசுபடுத்தும் கிலேசங்கள் இருக்குமாயின், துன்பம் நிறைந்த விளைவுகளைத் தரும், பீடைகள் நிறைந்த மறுபிறவியை தோற்றுவிக்கும், மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையையும், முதுமையையும் மரணத்தையும் உருவாக்கும் அந்த ஆஸவங்கள் முழுமையாக அழிந்துவிட்டால் அதுவே ஏமாற்றமின்மை என்று சொல்லப்படுகிறது. புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, ஆஸவங்கள் அழிவதே ஏமாற்றமின்மை என்று சொல்லப்படுகிறது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன எவரேனும் ஒருவருள் மனதை மாசுபடுத்தும் கிலேசங்கள் இருக்குமாயின், துன்பம் நிறைந்த விளைவுகளைத் தரும், பீடைகள் நிறைந்த மறுபிறவியை தோற்றுவிக்கும், மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையையும், முதுமையையும் மரணத்தையும் உருவாக்கும் அந்த ஆஸவங்கள் ததாதகரினுள் இல்லை. அவர் அவற்றை முழுமையாக அழித்தே இருக்கிறார். அந்த ஆஸவங்களின் வேர்கள் வெட்டப்பட்டே இருக்கின்றன. பனை மரத்தின் குருத்து உடைந்ததைப் போன்ற நிலையிலேயே இருக்கிறது. அழிந்து போயிருக்கிறது. இனி ஒருபோதும் தோற்றம் பெறாது.
புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, அது இத்தகைய விடயமாகும். பனை மரத்தின் குருத்து உடைந்த பின்னர் அது மீண்டும் ‘வளரும்’ எனும் விடயம் நடைபெறாததாகும். அதேபோன்றுதான் புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, மனதை மாசுபடுத்தும் கிலேசங்கள் இருக்குமாயின், துன்பம் நிறைந்த விளைவுகளைத் தரும், பீடைகள் நிறைந்த மறுபிறவியை தோற்றுவிக்கும், மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையையும், முதுமையையும் மரணத்தையும் உருவாக்கும் அந்த ஆஸவங்கள் ததாதகரினுள் இல்லை. அவர் அவற்றை முழுமையாக அழித்தே இருக்கிறார். அந்த ஆஸவங்களின் வேர்கள் வெட்டப்பட்டே இருக்கின்றன. பனை மரத்தின் குருத்து உடைந்ததைப் போன்ற நிலையிலேயே இருக்கிறது. அழிந்து போயிருக்கிறது. இனி ஒருபோதும் தோற்றம் பெறாது.
அச்சமயம் நிகண்டநாத புத்திரனின் சீடரான சச்சகன் பாக்கியமுள்ள பகவானுக்கு இவ்வாறு சொன்னான். “புண்ணியமிகு கௌதமரே, ஆச்சரியம்! புண்ணியமிகு கௌதமரே அற்புதம்! புண்ணியமிகு கௌதமரே, தாங்களுடன் விடயங்களை துருவித்துருவி பேசும்போது, தாங்கள் அவற்றை வெவ்வேறு வகையில் விபரிக்கும்போது, புண்ணியமிகு கௌதமரே, தங்களது பொன்னிறமான தோலின் நிறம் மென்மேலும் பிரகாசிக்கிறது. முகம் இன்னுமின்னும் பொலிவடைகிறது. அரஹத் சம்மா சம்புத்தரொருவரைப் போன்றே.
புண்ணியமிகு கௌதமரே, நான் பூரண கஸ்ஸபருடன் ஒருநாள் வாதம் செய்வதற்காக சென்றேன். வாதம் ஆரம்பித்தது மட்டும்தான். அதனை வேறு விடயத்தால் மூடி மறைத்துவிட்டார். அந்த வாதத்திற்கு அவசியமே இல்லாத வேறு வேறு விடயங்களை பேச ஆரம்பித்தார். கோபம், துவே~ம் மற்றும் விருப்பின்மையை வெளிப்படுத்தினார். ஆனால் புண்ணியமிகு கௌதமரே, தங்களிடமும் அவ்வாறு விடயங்களை துருவித்துருவி கேள்விகள் கேட்கும் போது தாங்கள் அவற்றை வெவ்வேறு விதமாக விபரித்து கூறுகின்றீர்கள். அந்த சமயத்தில் தங்கள் பொன்னிறமான தோலின் நிறம் மென்மேலும் பிரகாசிக்கிறது. முகம் இன்னுமின்னும் பொலிவடைகிறது. அரஹத் சம்மா சம்புத்தரொருவரைப் போன்றே.
புண்ணியமிகு கௌதமரே, நான் மற்கலீ கோசாலரிடமும் சென்றேன் … (விரிவு)… அஜித கேசகம்பலீயிடமும் சென்றேன் … (விரிவு)… பகுத கச்சாயனரிடமும் சென்றேன் … (விரிவு)… சஞ்சய பெல்லட்டிபுத்தனிடமும் சென்றேன். … (விரிவு)… நிகண்ட நாதபுத்திரனிடமும் சென்று வாதத்தை துவங்கியது மாத்திரம் தான். அதனை வேறு விடயத்தால் மூடி மறைத்துவிட்டார். அந்த வாதத்திற்கு அவசியமே இல்லாத வேறு வேறு விடயங்களை பேச ஆரம்பித்தார். கோபம், துவே~ம் மற்றும் விருப்பின்மையை வெளிப்படுத்தினார். ஆனால் புண்ணியமிகு கௌதமரே, தங்களிடமும் அவ்வாறு விடயங்களை துருவித்துருவி கேள்விகள் கேட்கும் போது தாங்கள் அவற்றை வெவ்வேறு விதமாக விபரித்து கூறுகின்றீர்கள். அந்த சமயத்தில் தங்கள் பொன்னிறமான தோலின் நிறம் மென்மேலும் பிரகாசிக்கிறது. முகம் இன்னுமின்னும் பொலிவடைகிறது. அரஹத் சம்மா சம்புத்தரொருவரைப் போன்றே.
புண்ணியமிகு கௌதமரே, அப்படியென்றால் நாம் இப்போது விடைபெறுகிறோம். எமக்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.”
“புண்ணியமிகு அக்கிவெஸ்ஸன, இப்போது எதற்கான காலமோ அதனை அறிந்து கொள்ளுங்கள்”
அதன் பின்னர் நிகண்டநாத புத்திரனின் சீடரான சச்சகன் பாக்கியமுள்ள பகவானால் போதிக்கப்பட்ட தர்மத்தை சந்தோ~மாக ஏற்றுக்கொண்டு அதனை ஆமோதித்து தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து எழுந்து சென்றான்.
சாது! சாது!! சாது!!!
சச்சகனை முன்னிட்டு விபரமாக மொழிந்த போதனை முற்றும்.
ழூ. கொல்லர்கள் தீ கொழுந்துவிட்டு எரியச்செய்ய காற்றடித்துப் பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் நீண்ட குழற் பாகத்தின் முனை