மூலபரியாய சூத்திரம்
அனைத்து விடயத்திற்கும் அடிப்படையானதை பற்றி மொழிந்த போதனை
என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் புத்த பகவான் உக்கட்டா நகரின் அருகாமையில் இருந்த சுபக எனும் வனத்தின் பெரியதொரு சாலமர நிழலில் வசித்திருந்தார். அன்று பாக்கியமுள்ள புத்த பகவான் புண்ணியமிகு பிக்குகளே, என பிக்குமார்களை விழித்தார். அதற்கு பிக்குமார்கள் “ஆம் பகவானே” என மறுமொழி அளித்தனர். அந்நேரத்தில்தான் பாக்கியமுள்ள புத்த பகவான் இந்த போதனையை மொழிந்தருளினார்.
“புண்ணியமிகு பிக்குகளே, அனைத்து விடயங்களுக்கும் அடிப்படையான விடயங்களை பற்றியே நான் இப்போது போதிக்கின்றேன். இதனை நன்றாக செவிமடுங்கள். அதுபோன்று அறிவினால் ஆராயவும் வேண்டும். இப்போது நான் சொல்கிறேன்”.
“அப்படியே செய்கிறோம் பகவானே”, என்று அந்த பிக்குமார்களும் மறுமொழி அளித்தனர்.பாக்கியமுள்ள பகவான் அச்சமயத்திNலுயே இந்த மூலபரியாய எனும் சூத்திர போதனையை மொழிந்தருளினார்.
(தர்மத்தை அறிந்திராத புதுஜ்ஜனரின் இயல்பு தொடர்பாக மொழிந்த பகுதி)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறிந்திராத புதுஜ்ஜனரைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். புதுஜ்ஜனன், ஆரிய உத்தமர்களை அறிய மாட்டான். ஆரிய தர்மத்தை புரிந்துகொள்வதற்கு திறமையற்றவன். ஆரிய தர்மத்தினுள் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளாதவன். சத்புரு~ர்களை அறிய மாட்டான். சத்புரு~ தர்மத்தை புரிந்துகொள்வதற்கு திறமையற்றவன். சத்புரு~ தர்மத்தினுள் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளாதவன்.
(1)
அதன் காரணமாகவே தர்மத்தை அறியாத புதுஜ்ஜனன், மண்ணோடு மண்ணாக கலந்துவிடும் படடவி தாதுவை அறியாமையினால் பட்டவி தாதுவாகவே அறிவான். இவ்வாறாக பட்டவி தாதுவை அறியாமை காரணமாக பட்டவி தாதுவாகவே இனங்கண்டு,
1. பட்டவி தாதுவை பற்றி ஏமாறும் உணர்வையே (மஞ்ஞனா) தோற்றுவித்துக் கொள்வான்.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. பட்டவி தாது ‘என்னுடையதொன்று’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் பட்டவி தாதுவை ‘நான், எனது, உனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? பட்டவி தாதுவை பற்றி ஊடுருவிய உயத்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம், என்றே இங்கு சொல்ல வேண்டும்.
(2)
புண்ணியமிகு பிக்குகளே, அந்த தர்மத்தை அந்த புதுஜ்ஜனன், நீரில் கரையும் இயல்பிற்குரிய ஆபோ தாதுவை அறியாமையினால் ஆபோ தாதுவாகவே அறிவான். இவ்வாறாக ஆபோ தாதுவை அறியாமை காரணமாக ஆபோ தாதுவாகவே இனங்கண்டு,
1. ஆபோ தாதுவை பற்றி ஏமாறும் உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. ஆபோ தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. ஆபோ தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. ஆபோ தாது ‘என்னுடையதொன்று’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் ஆபோ தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? ஆபோ தாதுவை பற்றி ஊடுருவிய உயத்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம், என்றே இங்கு சொல்ல வேண்டும்.
(3)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், வெப்ப இயல்பிற்குரிய தேஜோ தாதுவை அறியாமையினால் தேஜோ தாதுவாகவே அறிவான். இவ்வாறாக தேஜோ தாதுவை அறியாமை காரணமாக தேஜோ தாதுவாகவே இனங்கண்டு,
1. தேஜோ தாதுவை பற்றி ஏமாறும் உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. தேஜோ தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. தேஜோ தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. தேஜோ தாது ‘என்னுடையதொன்று’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் தேஜோ தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? தேஜோ தாதுவை பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம், என்றே சொல்ல வேண்டும்.
(4)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன்,காற்றோடு காற்றாக கலந்துவிடும் இயல்பிற்குரிய வாயோ தாதுவை அறியாமையினால் வாயோ தாதுவாகவே அறிவான். இவ்வாறாக வாயோ தாதுவை அறியாமை காரணமாக வாயோ தாதுவாகவே இனங்கண்டு,
1. வாயோ தாதுவை பற்றி ஏமாறும் உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. வாயோ தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. வாயோ தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. வாயோ தாது ‘என்னுடையதொன்று’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் வாயோ தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? வாயோ தாதுவை பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம், என்றே சொல்ல வேண்டும்.
(5)

புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், பிறந்திருக்கும் உயிர்களைப் பற்றிய அறியாமையினால் பிறந்த உயிர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவைகளை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக பிறந்த உயிர்கள், பிறந்த உயிர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. பிறந்த உயிர்களைப் பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. பிறந்த உயிர்களினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. பிறந்த உயிர்களில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. பிறந்த உயிர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் பிறந்த உயிர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? பிறந்த உயிர்களை பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம் என்று சொல்ல வேண்டும்.

(6)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், தேவர்களை பற்றிய அறியாமையினால் தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக தேவர்களை, தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. தேவர்களைப் பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. தேவர்களினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. தேவர்களில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? தேவர்களை பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம் என்று சொல்ல வேண்டும்.
(7)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், உலகிற்கு அதிபதியாகிய தேவரைப் பற்றிய அறியாமையினால் உலக அதிபதியான தேவரின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக உலக அதிபதியான தேவரை, உலக அதிபதியான தேவராகவே அறியாமையால் இனங்கண்டு,
1. உலக அதிபதியான தேவரை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. உலக அதிபதியான தேவருள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. உலக அதிபதியான தேவரிடம்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. உலக அதிபதியான தேவர் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் உலக அதிபதியான தேவரை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? உலக அதிபதியான தேவரை பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அல்லது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே காரணம் என்று சொல்ல வேண்டும்.
(8)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், மகா பிரம்மனை பற்றிய அறியாமையினால் மகா பிரம்மனின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவரை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக மகா பிரம்மனை, மகா பிரம்மனாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. மகா பிரம்மனை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. மகா பிரம்மனுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. மகா பிரம்மனில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. மகா பிரம்மன் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் மகா பிரம்மனை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? மகா பிரம்மனைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணம்.

(9)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், ஆபஸ்ஸர தேவர்களை பற்றிய அறியாமையினால் ஆபஸ்ஸர தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக ஆபஸ்ஸர தேவர்களை, ஆபஸ்ஸர தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. ஆபஸ்ஸர தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. ஆபஸ்ஸர தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. ஆபஸ்ஸர தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. ஆபஸ்ஸர தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் ஆபஸ்ஸர தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? ஆபஸ்ஸர தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(10)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், சுபகிண்ண தேவர்களை பற்றிய அறியாமையினால் சுபகிண்ண தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக சுபகிண்ண தேவர்களை, சுபகிண்ண தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. சுபகிண்ண தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. சுபகிண்ண தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. சுபகிண்ண தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. சுபகிண்ண தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் சுபகிண்ண தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? சுபகிண்ண தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(11)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், வேஹப்பல தேவர்களை பற்றிய அறியாமையினால் வேஹப்பல தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக வேஹப்பல தேவர்களை, வேஹப்பல தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. வேஹப்பல தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. வேஹப்பல தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. வேஹப்பல தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. வேஹப்பல தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் வேஹப்பல தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? வேஹப்பல தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(12)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், அபிபூ தேவர்களை பற்றிய அறியாமையினால் அபிபூ தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக அபிபூ தேவர்களை, அபிபூ தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. அபிபூ தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. அபிபூ தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. அபிபூ தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. அபிபூ தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் அபிபூ தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? அபிபூ தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(13)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், ஆகாசானஞ்சாயதன தேவர்களை பற்றிய அறியாமையினால் ஆகாசானஞ்சாயதன தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக ஆகாசானஞ்சாயதன தேவர்களை, ஆகாசானஞ்சாயதன தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. ஆகாசானஞ்சாயதன தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. ஆகாசானஞ்சாயதன தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. ஆகாசானஞ்சாயதன தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. ஆகாசானஞ்சாயதன தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் ஆகாசானஞ்சாயதன தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? ஆகாசானஞ்சாயதன தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(14)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், விஞ்ஞானஞ்சாயதன தேவர்களை பற்றிய அறியாமையினால் விஞ்ஞானஞ்சாயதன தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக விஞ்ஞானஞ்சாயதன தேவர்களை, விஞ்ஞானஞ்சாயதன தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. விஞ்ஞானஞ்சாயதன தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. விஞ்ஞானஞ்சாயதன தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. விஞ்ஞானஞ்சாயதன தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் விஞ்ஞானஞ்சாயதன தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? விஞ்ஞானஞ்சாயதன தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(15)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களை பற்றிய அறியாமையினால் ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களை, ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(16)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களை பற்றிய அறியாமையினால் நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களை, நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்களைப் பற்றி ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(17)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், தான் காணும் விடயங்களை பற்றிய அறியாமையினால் தான் காணும் விடயங்களின் புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவற்றை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக காணும் விடயங்களை, காணும் விடயங்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. காணும் விடயங்கள் தொடர்பாக பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. காணும் விடயங்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. காணும் விடயங்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. காணும் விடயங்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் காணும் விடயங்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? அவனிடம் காணும் விடயங்கள் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு இல்லை. அதாவது காணும் விடயங்கள் தொடர்பாக (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(19)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், தான் கேட்கும் விடயங்களை பற்றிய அறியாமையினால் தான் கேட்கும்; விடயங்களின் புறத்தால் உணரக்கூடிய இயல்பிற்கு ஏற்றவாறே அவற்றை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக கேட்கும் விடயங்களை, கேட்கும் விடயங்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. கேட்கும் விடயங்கள் தொடர்பாக பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. கேட்கும் விடயங்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. கேட்கும் விடயங்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. கேட்கும் விடயங்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் கேட்கும் விடயங்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? அவனிடம் கேட்கும் விடயங்கள் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு இல்லை. அதாவது கேட்கும் விடயங்கள் தொடர்பாக (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(19)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை என்பன பற்றி அறியாமையினால் அவ் விடயங்களின் புறத்தால் உணரக்கூடிய இயல்பிற்கு ஏற்றவாறே அவற்றை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை, அவ் அவ் விடயங்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை தொடர்பாக ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை என்பவற்றுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை என்பவற்றில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. இவ் விடயங்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் இவ் விடயங்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? அவனிடம் நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை எனும் விடயங்கள் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு இல்லை. அதாவது நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை என்பவை தொடர்பாக (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(20)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், மனதில் தோன்றும் எண்ணங்களை பற்றிய அறியாமையினால் மனதில் தோன்றும் எண்ணங்களின் புறத்தால் காணக்கூடிய இயல்பிற்கு ஏற்றவாறே அவற்றை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக, மனதில் தோன்றும் எண்ணங்களை, மனதில் தோன்றும் எண்ணங்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் தொடர்பாக ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. மனதால் அறிந்து கொள்ளும் விடயங்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. மனதால் அறிந்து கொள்ளும் விடயங்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) மனதால் அறிந்து கொள்ளும் விடயங்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? அவனிடம் மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு இல்லை. அதாவது மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் தொடர்பாக (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(21)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், ஒரே இயல்பிலான உயிர்களை பற்றிய அறியாமையினால்; புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே ஒரே இயல்பிலான உயிர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக ஒரே இயல்பிலான உயிர்களை, ஒரே இயல்பிலான உயிர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. ஒரே இயல்பிலான உயிர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. ஒரே இயல்பிலான உயிர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. ஒரே இயல்பிலான உயிர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. ஒரே இயல்பிலான உயிர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் ஒரே இயல்பிலான உயிர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? ஒரே இயல்பிலான உயிர்களைப் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது ஒரே இயல்பிலான உயிர்களை பற்றி (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(22)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், வெவ்வேறு இயல்பிலான உயிர்களை பற்றிய அறியாமையினால், புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே வெவ்வேறு இயல்பிலான உயிர்களை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக வெவ்வேறு இயல்பிலான உயிர்களை, வெவ்வேறு இயல்பிலான உயிர்களாகவே அறியாமை காரணமாக இனங்கண்டு,
1. வெவ்வேறு இயல்பிலான உயிர்களை பற்றி ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. வெவ்வேறு இயல்பிலான உயிர்களுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. வெவ்வேறு இயல்பிலான உயிர்களில்; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் வெவ்வேறு இயல்பிலான உயிர்களை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? வெவ்வேறு இயல்பிலான உயிர்களைப் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது வெவ்வேறு இயல்பிலான உயிர்களை பற்றி (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(23)
புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், அனைத்து விடயங்களை பற்றியும் அறியாமையினால் அனைத்து விடயங்களினதும்; புறத்திற்கு புலப்படும் இயல்பிற்குரிய வகையிலேயே அவற்றை இனங்கண்டு கொள்வான். இவ்வாறாக அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அறியாமை முதற்கொண்டு இனங்கண்டு,
1. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. அனைத்து விடயங்களுள்ளும்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. அனைத்து விடயங்களில்; இருந்தும் ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. அனைத்து விடயங்களும் ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் அனைத்து விடயங்களையும் ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? அவனிடம் அனைத்தையும் பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(24)

புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தை அறியாத அந்த புதுஜ்ஜனன், அறியாமையினால்; புறத்திலிருந்து கேட்டறிந்து கொண்ட விடயங்களின் அடிப்படையிலேயே மோட்சம் தொடர்பாகக் கூட இனங்கண்டு கொள்வான். இவ்வாறாகமோட்சம் தொடர்பாக அவன் கேட்டறிந்து கொண்டதன் அடிப்படையிலேயே மோட்சம் தொடர்பாகவும் அறியாமை முதற்கொண்டு இனங்கண்டு,
1. மோட்சம் தொடர்பாகவும் ஏமாறும் வகையிலான உணர்வையே தோற்றுவித்துக் கொள்வான்.
2. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
3. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ என்றே அவனுக்கு தோன்றும்.
4. மோட்சம்; ‘என்னுடையது’ என்றே அவனுக்கு தோன்றும்.
5. (அதன்படி) அவன் மோட்சத்தை கூட ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக் கொள்வான்.
புண்ணியமிகு பிக்குகளே, அவன் அவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? மோட்சத்தை பற்றிய ஊடுருவிய உய்த்துணர்வு அவனிடம் இல்லை. அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெற்ற உய்த்துணர்வு அவனுள் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
(தர்மத்தை அறிந்திராத புதுஜ்ஜனரின் இயல்பு தொடர்பான விபரம் முற்றும்)
புண்ணியமிகு பிக்குகளே, இன்னும் அரஹத் நிலையை அடைந்திராத, ஆனால் ஏனைய ஞானப்பேறுகளை பெற்ற ஒரு பிக்கு இருக்கிறார். அந்த பிக்குவின் மனம் உத்தம மோட்சத்தை அடைவதற்காகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த பிக்கு மண்ணோடு மண்ணாகும் இயல்பிற்குரிய பட்டவி தாதுவை பற்றி நிலையற்றதாக, துக்கத்திற்குரியதாக, ஆத்மமற்றதாக (அதன் உண்மையான இயல்பை) உய்த்துணர்வுடனே காண்பார். பட்டவி தாதுவை, பட்டவி தாதுவாகவே உய்த்துணர்வுடன் காண்பதால்,
1. பட்டவி தாதுவினுள் ஏமாறும் வகையிலான உணர்வுகளை தோற்றுவித்துக் கொள்ள மாட்டார்.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்விற்கு இடமளிக்க மாட்டார்.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்விற்கு இடமளிக்க மாட்டார்.
4. பட்டவி தாதுவை ‘என்னுடையது’ எனும் தவறான உணர்விற்கு இடமளிக்க மாட்டார்.
5. (அதன்படி) அந்த பிக்கு, பட்டவி தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ளும் தவறை செய்ய மாட்டார்.
புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? அந்த பிக்கு பட்டவி தாது தொடர்பாக ஊடுருவிய உய்த்துணர்வு அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெறும் உய்த்துணர்வை அவருள் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்திருப்பதே அதற்கு காரணமாகும்.
ஆபோ தாது … (வி) … தேஜோ தாது … (வி) … வாயோ தாது … (வி) … பிறந்த உயிர்கள் … (வி) … தேவர்கள் … (வி) … உலக அதிபதியான தேவர் … (வி) … மகா பிரம்மன் … (வி) … ஆபஸ்ஸர தேவர்கள் … (வி) … சுபகிண்ண தேவர்கள் … (வி) … வேஹப்பல தேவர்கள் … (வி) … அபிபூ தேவர்கள் … (வி) … ஆகாசானஞ்சாயதன தேவர்கள் … (வி) … விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் … (வி) … ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … காணும் விடயங்கள் … (வி) … கேட்கும் விடயங்கள் … (வி) … நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை … (வி) … மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் … (வி) … ஒரே இயல்பிலான உயிர்கள் … (வி) … வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் … (வி) … அனைத்து விடயங்கள் … (வி) …
மோட்சம்; தொடர்பாக உய்த்துணர்வினால் மோட்சமாக அறிந்துணர்ந்து கொள்வார். இவ்வாறாக மோட்சத்தை பற்றி மோட்சமாகவே உய்த்துணர்வினால் அறிந்து கொள்வதால்,

1. மோட்சம் தொடர்பாக ஏமாறும் வகையிலான உணர்வுகளை தோற்றுவித்துக் கொள்ள மாட்டார்.
2. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்விற்கு இடமளிக்க மாட்டார்.
3. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்விற்கு இடமளிக்க மாட்டார்.
4. மோட்சம்; ‘என்னுடையது’ எனும் தவறான உணர்விற்கு இடமளிக்க மாட்டார்.

5. (அதன்படி) அவன் மோட்சத்தை கூட ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ளும் தவறை செய்ய மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? அந்த பிக்கு மோட்சம் தொடர்பாக ஊடுருவிய உய்த்துணர்வு அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெறும் உய்த்துணர்வை அவருள் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும், என்பதனை அறிந்திருப்பதே அதற்கு காரணமாகும்.
(ஞானப்பேறுகளை பெற்ற ஆனால் அரஹத் நிலையை இன்னும் அடையாத சீடனை பற்றி விபரித்த பகுதி முற்றும்)
01.
புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் தேரர் ஒருவர் இருக்கிறார். அந்த அரஹத் தேரர் ஆஸவங்களை அழித்தே இருக்கிறார். மோட்ச பாதையை முழுமையாக பயிற்றுவித்தே இருக்கிறார். மோட்சத்தை உயத்துணர்வதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தே இருக்கிறார். கிலேச சுமையை வீசியெறிந்தே இருக்கிறார். படிப்படியாக மோட்சத்தை அடைந்தே இருக்கிறார். பிறப்புக்கான கட்டுக்களை அழித்தே இருக்கிறார். பரிபூரணமான உய்த்துணர்வின் மூலம் துக்கங்களில் இருந்து விடுதலை அடைந்தே இருக்கிறார். அந்த பிக்கு மண்ணோடு மண்ணாகும் இயல்பிற்குரிய பட்டவி தாதுவை பற்றி நிலையற்றதாக, துக்கத்திற்குரியதாக, ஆத்மமற்றதாக (அதன் உண்மையான இயல்பை) உய்த்துணர்வுடனே காண்பார். பட்டவி தாதுவை, பட்டவி தாதுவாகவே உய்த்துணர்வுடன் காண்பதால்,
1. பட்டவி தாதுவினுள் ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. பட்டவி தாதுவை ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அந்த பிக்கு, பட்டவி தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? அந்த பிக்கு பட்டவி தாது தொடர்பாக ஊடுருவிய உய்த்துணர்வு அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெறும் உய்த்துணர்வை அவருள் தோன்றிருப்பதே அதற்கு காரணமாகும்.

ஆபோ தாது … (வி) … தேஜோ தாது … (வி) … வாயோ தாது … (வி) … பிறந்த உயிர்கள் … (வி) … தேவர்கள் … (வி) … உலக அதிபதியான தேவர் … (வி) … மகா பிரம்மன் … (வி) … ஆபஸ்ஸர தேவர்கள் … (வி) … சுபகிண்ண தேவர்கள் … (வி) … வேஹப்பல தேவர்கள் … (வி) … அபிபூ தேவர்கள் … (வி) … ஆகாசானஞ்சாயதன தேவர்கள் … (வி) … விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் … (வி) … ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … காணும் விடயங்கள் … (வி) … கேட்கும் விடயங்கள் … (வி) … நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை … (வி) … மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் … (வி) … ஒரே இயல்பிலான உயிர்கள் … (வி) … வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் … (வி) … அனைத்து விடயங்கள் … (வி) …
மோட்சம்; தொடர்பான உய்த்துணர்வினால் மோட்சமாகவே அறிந்து கொள்வார். இவ்வாறாக மோட்சம் தொடர்பாக மோட்சமாகவே அறிந்து கொள்வதால்,
1. மோட்சம் தொடர்பாக ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. மோட்சம்; ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அவன் மோட்சத்தை கூட ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? அந்த பிக்கு மோட்சம் தொடர்பாக ஊடுருவிய உய்த்துணர்வுடன் கூடியவராவார். அதாவது (உள்ளது உள்ளபடியாக) யதார்த்தத்தினால் பெறும் உய்த்துணர்வு அவருள் தோன்றிருப்பதே அதற்கு காரணமாகும்.

(2)

புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் தேரர் ஒருவர் இருக்கிறார். அந்த அரஹத் தேரர் ஆஸவங்களை அழித்தே இருக்கிறார். மோட்ச பாதையை முழுமையாக பயிற்றுவித்தே இருக்கிறார். மோட்சத்தை உய்த்துணர்வதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தே இருக்கிறார். கிலேச சுமையை வீசியெறிந்தே இருக்கிறார். படிப்படியாக மோட்சத்தை அடைந்தே இருக்கிறார். பிறப்புக்கான கட்டுக்களை அழித்தே இருக்கிறார். பரிபூரணமான உய்த்துணர்வின் மூலம் துக்கங்களில் இருந்து விடுதலை அடைந்தே இருக்கிறார்.
அந்த பிக்கு மண்ணோடு மண்ணாகும் இயல்பிற்குரிய பட்டவி தாதுவை பற்றி நிலையற்றதாக, துக்கத்திற்குரியதாக, ஆத்மமற்றதாக (அதன் உண்மையான இயல்பை) உய்த்துணர்வுடனே காண்பார். இவ்வாறாக பட்டவி தாதுவை, பட்டவி தாதுவாகவே உய்த்துணர்வுடன் காண்பதால்,
1. பட்டவி தாதுவினுள் ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. பட்டவி தாதுவை ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அந்த பிக்கு, பட்டவி தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? பட்டவி தாதுவின் மீது அவருள் இருந்த வேட்கை அழிந்தமையே அதற்கு காரணமாகும். நிராசையான நிலை தன்னுள் தோன்றியமையே அதற்கு காரணமாகும்.
ஆபோ தாது … (வி) … தேஜோ தாது … (வி) … வாயோ தாது … (வி) … பிறந்த உயிர்கள் … (வி) … தேவர்கள் … (வி) … உலக அதிபதியான தேவர் … (வி) … மகா பிரம்மன் … (வி) … ஆபஸ்ஸர தேவர்கள் … (வி) … சுபகிண்ண தேவர்கள் … (வி) … வேஹப்பல தேவர்கள் … (வி) … அபிபூ தேவர்கள் … (வி) … ஆகாசானஞ்சாயதன தேவர்கள் … (வி) … விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் … (வி) … ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … காணும் விடயங்கள் … (வி) … கேட்கும் விடயங்கள் … (வி) … நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை … (வி) … மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் … (வி) … ஒரே இயல்பிலான உயிர்கள் … (வி) … வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் … (வி) … அனைத்து விடயங்கள் … (வி) …
மோட்சம்; தொடர்பான உய்த்துணர்வினால் மோட்சமாகவே அறிந்து கொள்வார். இவ்வாறாக மோட்சம் தொடர்பாக மோட்சமாகவே அறிந்து கொள்வதால்,
1. மோட்சம் தொடர்பாக ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. மோட்சம்; ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அவன் மோட்சத்தை கூட ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? மோட்சத்தின் மீது அவருள் இருந்த வேட்கை அழிந்தமையே அதற்கு காரணமாகும். நிராசையான நிலை தன்னுள் தோன்றியமையே அதற்கு காரணமாகும்.

(3)
புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் தேரர் ஒருவர் இருக்கிறார். அந்த அரஹத் தேரர் ஆஸவங்களை அழித்தே இருக்கிறார். மோட்ச பாதையை முழுமையாக பயிற்றுவித்தே இருக்கிறார். மோட்சத்தை உய்த்துணர்வதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தே இருக்கிறார். கிலேச சுமையை வீசியெறிந்தே இருக்கிறார். படிப்படியாக மோட்சத்தை அடைந்தே இருக்கிறார். பிறப்புக்கான கட்டுக்களை அழித்தே இருக்கிறார். பரிபூரணமான உய்த்துணர்வின் மூலம் துக்கங்களில் இருந்து விடுதலை அடைந்தே இருக்கிறார்.
அந்த பிக்கு மண்ணோடு மண்ணாகும் இயல்பிற்குரிய பட்டவி தாதுவை பற்றி நிலையற்றதாக, துக்கத்திற்குரியதாக, ஆத்மமற்றதாக (அதன் உண்மையான இயல்பை) உய்த்துணர்வுடனே காண்பார். இவ்வாறாக பட்டவி தாதுவை, பட்டவி தாதுவாகவே உய்த்துணர்வுடன் காண்பதால்,
1. பட்டவி தாதுவினுள் ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. பட்டவி தாதுவை ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அந்த பிக்கு, பட்டவி தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? பட்டவி தாதுவின் மீது அவருள் இருந்த கோபம் அழிந்தமையே அதற்கு காரணமாகும். கோபமற்ற நிலை தன்னுள் தோன்றியமையே அதற்கு காரணமாகும்.
ஆபோ தாது … (வி) … தேஜோ தாது … (வி) … வாயோ தாது … (வி) … பிறந்த உயிர்கள் … (வி) … தேவர்கள் … (வி) … உலக அதிபதியான தேவர் … (வி) … மகா பிரம்மன் … (வி) … ஆபஸ்ஸர தேவர்கள் … (வி) … சுபகிண்ண தேவர்கள் … (வி) … வேஹப்பல தேவர்கள் … (வி) … அபிபூ தேவர்கள் … (வி) … ஆகாசானஞ்சாயதன தேவர்கள் … (வி) … விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் … (வி) … ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … காணும் விடயங்கள் … (வி) … கேட்கும் விடயங்கள் … (வி) … நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை … (வி) … மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் … (வி) … ஒரே இயல்பிலான உயிர்கள் … (வி) … வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் … (வி) … அனைத்து விடயங்கள் … (வி) …
மோட்சம்; தொடர்பான உய்த்துணர்வினால் மோட்சமாகவே அறிந்து கொள்வார். இவ்வாறாக மோட்சம் தொடர்பாக மோட்சமாகவே அறிந்து கொள்வதால்,
1. மோட்சம் தொடர்பாக ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. மோட்சம்; ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அவன் மோட்சத்தை கூட ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? மோட்சத்தின் மீது அவருள் இருந்த கோபம் அழிந்தமையே அதற்கு காரணமாகும். கோபமற்ற நிலை தன்னுள் தோன்றியமையே அதற்கு காரணமாகும்.
(4)

புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் தேரர் ஒருவர் இருக்கிறார். அந்த அரஹத் தேரர் ஆஸவங்களை அழித்தே இருக்கிறார். மோட்ச பாதையை முழுமையாக பயிற்றுவித்தே இருக்கிறார். மோட்சத்தை உய்த்துணர்வதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தே இருக்கிறார். கிலேச சுமையை வீசியெறிந்தே இருக்கிறார். படிப்படியாக மோட்சத்தை அடைந்தே இருக்கிறார். பிறப்புக்கான கட்டுக்களை அழித்தே இருக்கிறார். பரிபூரணமான உய்த்துணர்வின் மூலம் துக்கங்களில் இருந்து விடுதலை அடைந்தே இருக்கிறார்.
அந்த பிக்கு மண்ணோடு மண்ணாகும் இயல்பிற்குரிய பட்டவி தாதுவை பற்றி நிலையற்றதாக, துக்கத்திற்குரியதாக, ஆத்மமற்றதாக (அதன் உண்மையான இயல்பை) உய்த்துணர்வுடனே காண்பார். இவ்வாறாக பட்டவி தாதுவை, பட்டவி தாதுவாகவே உய்த்துணர்வுடன் காண்பதால்,
1. பட்டவி தாதுவினுள் ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. பட்டவி தாதுவை ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) அந்த பிக்கு, பட்டவி தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? பட்டவி தாதுவின் மீது அவருள் இருந்த அறியாமை அழிந்தமையே அதற்கு காரணமாகும். மெய்ஞானம் தன்னுள் தோன்றியமையே அதற்கு காரணமாகும்.
ஆபோ தாது … (வி) … தேஜோ தாது … (வி) … வாயோ தாது … (வி) … பிறந்த உயிர்கள் … (வி) … தேவர்கள் … (வி) … உலக அதிபதியான தேவர் … (வி) … மகா பிரம்மன் … (வி) … ஆபஸ்ஸர தேவர்கள் … (வி) … சுபகிண்ண தேவர்கள் … (வி) … வேஹப்பல தேவர்கள் … (வி) … அபிபூ தேவர்கள் … (வி) … ஆகாசானஞ்சாயதன தேவர்கள் … (வி) … விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் … (வி) … ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … காணும் விடயங்கள் … (வி) … கேட்கும் விடயங்கள் … (வி) … நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை … (வி) … மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் … (வி) … ஒரே இயல்பிலான உயிர்கள் … (வி) … வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் … (வி) … அனைத்து விடயங்கள் … (வி) …
மோட்சம்; தொடர்பான உய்த்துணர்வினால் மோட்சமாகவே அறிந்து கொள்வார். இவ்வாறாக மோட்சம் தொடர்பாக மோட்சமாகவே அறிந்து கொள்வதால்,
6. மோட்சம் தொடர்பாக ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் அவருள் தோன்றாது.
7. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
8. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
9. மோட்சம்; ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
10. (அதன்படி) அவன் மோட்சத்தை கூட ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்குவால் அப்படி செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? மோட்சத்தின் மீது அவருள் இருந்த அஞ்ஞானம் அழிந்தமையே அதற்கு காரணமாகும். மெய்ஞானம் தன்னுள் தோன்றியமையே அதற்கு காரணமாகும்.
(அரஹத் தேரர் தொடர்பாக மொழிந்த பகுதி முற்றும்)
புண்ணியமிகு பிக்குகளே, நிக்கிலேசியான, அரஹத்நிலையடைந்த, சம்மா சம்புத்தரான, ததாகதரும் மண்ணோடு மண்ணாகும் இயல்பிற்குரிய பட்டவி தாதுவை பற்றி நிலையற்றதாக, துக்கத்திற்குரியதாக, ஆத்மமற்றதாக (அதன் உண்மையான இயல்பை) உய்த்துணர்வுடனே காண்பார். இவ்வாறாக பட்டவி தாதுவை, பட்டவி தாதுவாகவே உய்த்துணர்வுடன் காண்பதால்,
1. பட்டவி தாதுவினுள் ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும் தோன்றாது.
2. பட்டவி தாதுவினுள் ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. பட்டவி தாதுவில் இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. பட்டவி தாதுவை ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) நிக்கிலேசியான, அரஹத்நிலையடைந்த, சம்மா சம்புத்தரான, ததாகதர் பட்டவி தாதுவை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரால் இவ்வாறு செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? பட்டவி தாது தொடர்பாக ஊடுருவிய உய்த்துணர்வு அதாவது (உள்ளது உள்ளபடியாக அறிந்துணர்ந்து கொள்ளும்) யதார்த்தத்தினால் கிடைக்கும் உயத்துணர்வு ததாகதருள் தோன்றியுள்ளமையே காரணமாகும்.
ஆபோ தாது … (வி) … தேஜோ தாது … (வி) … வாயோ தாது … (வி) … பிறந்த உயிர்கள் … (வி) … தேவர்கள் … (வி) … உலக அதிபதியான தேவர் … (வி) … மகா பிரம்மன் … (வி) … ஆபஸ்ஸர தேவர்கள் … (வி) … சுபகிண்ண தேவர்கள் … (வி) … வேஹப்பல தேவர்கள் … (வி) … அபிபூ தேவர்கள் … (வி) … ஆகாசானஞ்சாயதன தேவர்கள் … (வி) … விஞ்ஞானஞ்சாயதன தேவர்கள் … (வி) … ஆகிஞ்சஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன தேவர்கள் … (வி) … காணும் விடயங்கள் … (வி) … கேட்கும் விடயங்கள் … (வி) … நாசியினால் முகரும் விடயங்கள், நாவினால் சுவைப்பவை, உடலினால் உணருபவை … (வி) … மனதால் அறிந்து கொள்ளும் விடயங்கள் … (வி) … ஒரே இயல்பிலான உயிர்கள் … (வி) … வெவ்வேறு இயல்பிலான உயிர்கள் … (வி) … அனைத்து விடயங்கள் … (வி) …
மோட்சம்; தொடர்பான உய்த்துணர்வினால் மோட்சமாகவே அறிந்து கொள்வார். இவ்வாறாக மோட்சம் தொடர்பாக மோட்சமாகவே அறிந்து கொள்வதால்,
1. மோட்சம் தொடர்பாக ஏமாறும் வகையிலான எவ்விதமான உணர்வுகளும்; தோன்றாது.
2. மோட்சத்தினுள்; ‘நான் எனும் ஆத்மம் இருக்கிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
3. மோட்சத்தில்;; இருந்து ‘நான் எனும் ஆத்மம் மறைகிறது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
4. மோட்சம்; ‘என்னுடையது’ எனும் தவறான உணர்வு தோன்றாது.
5. (அதன்படி) நிக்கிலேசியான, அரஹத்நிலையடைந்த, சம்மா சம்புத்தரான, ததாகதர் மோட்சத்தை ‘நான், எனது, எனது ஆத்மம்’ என்று சந்தோ~மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரால் இவ்வாறு செய்யக்கூடியதற்கான காரணம் என்ன? ‘ஆசையே இவ் அனைத்து துக்கத்திற்கும் காரணம்’ என்பதனை உய்த்துணர்ந்து கொண்டமையே இதற்கு காரணமாகும். (ததாகதர்) பவத்தினால் (விளைவு தரும் வண்ணம் கர்மங்கள் ஒழுங்கமைவதால்) தான் பிறப்பு தோன்றுகிறது. பிறந்த ஒருவருக்கே முதுமை, மரணம் என்பன முகங்கொடுக்க நேரிடும் என்பதனையும் உய்த்துணர்ந்து கொண்டார். எனவே “புண்ணியமிகு பிக்குகளே, ததாகதர், அனைத்து வகையான ஆசைகளையும் அழித்து, விருப்புகளை அழித்து, விருப்புக்களை துறந்து, வேட்கைகளை கைவிட்டு, வேட்கைகளை இல்லாதொழித்து நிகரற்ற ஈடு இணையற்ற நிலையான சம்மா சம்புத்த நிலையை அடைந்தமையே இதற்கு காரணமாகும்”.

பாக்கியம் நிறைந்த புத்த பகவான் இந்த போதனையை மொழிந்தருளினார். எனினும் இந்த போதனையை செவிமடுத்த அந்த பிக்குமார்களால் பாக்கியமுள்ள பகவானால் மொழியப்பட்ட இந்த போதனையை புரிந்து கொள்ள முடியாமையால் இந்த போதனையை சந்தோ~த்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நன்று! நன்று!! நன்று!!!
அனைத்து விடயத்திற்கும் அடிப்படையானதை பற்றி மொழிந்த போதனை முற்றும்.