2019-05-27T07:35:28+05:30

maithree meditation தமிழ் பௌத்தம்

தன்னை எவரேனும் துன்புறுத்துவது தனக்கு பிடிக்காது. அதேபோன்று ஏனையோர்களும் அவர்களை துன்புறுத்துவதனை விரும்ப மாட்டார்கள். இதனை நன்கு உணர்ந்தவர் தன்னை உவமையாகக்கொண்டு ஏனையோரை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். எல்லா உயிரினங்கள் மீதும் எல்லைகளற்ற அன்பினையே பரப்ப வேண்டும். _புத்த பகவான்_

2018-04-19T05:28:21+05:30

கோபம் என்பது வீரமல்ல. அது மனதை பலவீனப்படுத்தும் ஒரு கிலேசமாகும். கோபத்தினால் துக்கமும், பயமும், பின்வருந்துதலுமே எஞ்சுகின்றது. நண்பர்களை பகையாளிகளாக்கும், ஏனையோரின் வெறுப்பிற்கு பாத்திரமாகும் கோபத்தினை எவ்வாறு அழிப்பது? முழுமையாக கோபத்தினை மனதில் இருந்து அகற்ற முடியுமா?

2017-02-06T09:15:55+05:30

சாக்கிய முனி வந்தனம் சேதவ்ய நகரிற்கும் உக்கட்டா நகரிற்கும் இடையே ஒரு பாதை இருந்தது. அஞ்ஞான இருளை போக்கும் ஆதவனாக அவதரித்த உலகின் அனைத்து பாக்கியங்களையும் தன்னுள்ளே தாங்கிய புத்த பகவான் தன் திருவடிகளின் சுவடுகள் பாதையில் பதியுமாறு பயணித்துக்கொண்டிருந்தார். அவ்வேளை அவ் வழியே தேகலட்ணவியலில் கரைதேர்ந்த துரோணர் எனும் பிராம்மணரும் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவருக்கு பகவானது திருவடிகளின் சுவடுகளை [...]

2017-01-03T12:34:46+05:30

சுந்தரமான மனிதநேயம்

உங்களால் என்ன செய்ய முடியும், உங்களுக்கு பிடித்தமானவை எவை? சாப்பிடுவது, குளிப்பது, உடுப்பது போன்ற அன்றாட செயற்பாடுகளை தவிர நீங்கள் வேறு என்ன செய்வதற்கு விரும்புகிறீர்கள்? நீங்கள் சரி.. உங்களால் பாடுவதற்கு முடியும், நடனம் ஆடுவதற்கு, நன்றாக கல்வி கற்பதற்கு... இன்னும் எவ்வளவு எவ்வளவோ உங்களால் முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அவற்றை உங்களால் மட்டும்தான் செய்ய முடியுமா? ஒப்பிட்டு [...]