அழகிய வண்ணத்துப்பூச்சி
எனது அப்பா அம்மாவை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது குழந்தை பருவம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் நான் ஒரு கொன்றை மரத்திலுள்ள பிஞ்சு இலை ஒன்றை கடித்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது நான் சிறியதொரு கம்பளிப+ச்சியாக இருந்தேன். அப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டின் மீதான விருப்பம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய்விட்டது. எனது உடம்பு வலிக்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் எனது வாயிலிருந்து ஏதோ ஒருவகையான திரவம் ஒன்று வெளியே ஊற்றியது. அப்போது.. நான் அந்த திரவத்தினை எனது உடம்பு முழுவதும் பூசிக்கொண்டேன். அதன் காரணமாக ஒரு கூடு போன்றதொரு சிறியவலையினால் எனது முழு உடலும் மறைந்துவிட்டது.
அதன் பின் நான் தூங்கிவிட்டேன். நான் வெகுநேரமாக நன்றாக தூங்கினேன்இ என்றே நினைக்கிறேன். அந்நேரத்திற்குள் எனது உடல் முழுமையாக மாற்றமடைந்துவிட்டது போலும். அந்த கம்பளி புழுவினது உடல் முழுவதுமாக மறைந்து அதற்கு மாறாக மிகவூம் அழகிய செந்நிற கோடுகள் விழுந்த மஞ்சள் நிற இறக்கைகள் இருந்தன… என்னால் மேலும் அந்த கூட்டுக்குள் இருக்க முடியவில்லை. மிகுந்த முயற்சி செய்து ஒருவாராக அந்த கூட்டிலிருந்து வெளியிலே வந்து விட்டேன். ஆஹா… என்ன அருமை நான் லாவகமாக எனது இறக்கைகளை அசைக்கும் போதே மேலே மிதந்து சென்றேன். ஹா… ஹா.. ! இப்போது என்னாலும் பறக்க முடியூம். முன்பு போல் என்னால் இலைகளை உண்ண முடியாது. இப்போது என் வாயினுள் சிறியதொரு குழாய் ஒன்று இருக்கிறது. அதனால் மலர்களின் தேனை உறிஞ்சலாம். ஆகையால் மலர்களது தேனை தேடியவாறு நான் பல மலர்களை தேடிச்சென்றேன். ஆனால்… ஒரு பூவிலேனும் தேனிருக்கவில்லை. அப்போது அழகிய மலர்கள் பூத்து குலுங்கும் ஒரு பூந்தோட்டம் இருக்கும் ஒரு வீட்டினை கண்டேன். நான் எனது அழகிய இறக்கைகளை அசைத்த வண்ணம் ஆனந்தத்துடன் அத்திசையை நோக்கி பறந்து சென்றேன். ஷஅங்கே பார் அழகானதொரு வண்ணத்துப்பூச்சி… வா சீக்கிரம் பிடிப்போம்.| என சிறுவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். ஐயோ நான் மிகவூம் பயந்துவிட்டேன். பயம் மேலிட்டு என்னை அறியாமலேயே பெரும் சத்தமிட்டேன். வேகமாக இறக்கைகளை அடித்து கொள்ள முடியாமல் தடுமாறினேன். இருப்பினும் மிகவூம் வீரியம் கொண்டு மேல் நோக்கி பறந்தேன். அருகில் இருந்த ஒரு மரத்தின் இலையின் பின்னால் மறைந்து கொண்டேன்… அப்போது என்னை போன்றே இன்னுமொரு வண்ணத்துப்பூச்சி அலரும் சப்தம் கேட்டது.
ஷஐயகோ…ஆஹ்…மிகவூம் வலிக்கிறது…என்னை விட்டுவிடுங்கள்| என அந்த வண்ணத்துப+ச்சி கதறிக்கொண்டிருந்தது. ஒரு சிறுவன் மிகவூம் அழகியதொரு வண்ணத்துப்ப+ச்சியின் இறக்கைகளை இரு விரல்களால் இறுக பற்றியபடி இருந்தான். அந்த வண்ணத்துப்ப+ச்சியின் வேதனை தொடர்பாக எவ்வித கவலையூம் அவனிடம் இருக்கவில்லை.
நான் சீக்கிரமாகவே அவ்விடத்தினை விட்டு அகன்றுவிட்டேன். காடு போன்று காட்சியளித்த சிறிய புதர்கள் நிறைந்த ஒரு திறந்த வெளியை நோக்கி நான் பறந்து வந்தேன். இன்னுமொரு வண்ணத்துப்பூச்சியின் அலறல் சப்தம் ஒன்றும் கேட்டது. என்னையறியாமலே நான் அலறல் சப்தம் வந்த திசையை பார்த்தேன். சிறியதொரு முதலையை போன்ற கொடிய தோற்றமுடைய பயங்கரமானதொரு ஓணான் அந்த வண்ணத்துப்ப+ச்சியை வாயினால் இறுக பற்றியபடி மென்று விழுங்கியது. நான் மிகவூம் அச்சம் கொண்டேன். அங்கிருந்தும் சீக்கிரமாகவே அகன்று விட்டேன்.
அதோ என்னை விடவூம் மிகவூம் அழகானதொரு வண்ணத்துப்ப+ச்சி ஒன்று பறந்து வருகிறது. அதனிடமாவது தேனிருக்கும் மலர்கள் எங்குள்ளது என்று கேட்க வேண்டும். ஐயோ…ஈட்டியை போல் வேகமாக பறந்து வந்த ஒரு பறவை அந்த வண்ணத்துப்பூச்சியை விழுங்கிவிட்டதே! நான் அதிர்ச்சியால் பெரும் சப்தமிட்டேன். ஐயோ…! நான் என்ன செய்வேன்…? எனக்கு மிகவூம் பயமாக உள்ளது… பசி வயிற்றை கிள்ளுகிறதே… தேனிருக்கும் மலர்களுமில்லையே… என்ன செய்வேன்?
நான் இன்னும் வெகு தூரம் பறந்து சென்றேன். ஆ… இன்னுமொரு வண்ணத்துப்பூச்சி இப்பக்கமாக பறந்து வருகிறதே. அவதனிடமாவது கேட்க வேண்டும். ஷதோழரே! தேனிருக்கும் மலர்கள் இருக்கும் ஒரு இடத்தினை காணவில்லையா?|
ஷஆ… உங்களுக்கு இன்னும் மலர் தேன் கிடைக்கவில்லையா? சரி… இன்னும் கொஞ்ச தூரம் அத்திசையை நோக்கி பறந்து செல்லுங்கள். இரயில் வீதியின் அருகே தேனிருக்கும் மலர்கள் மலர்ந்துள்ளன. நானும் அங்கு தான் தேனை அருந்தினேன். இன்னும் அந்த மலர்களில் தேனுள்ளது… ஆனால் வானத்தினை பாருங்கள். இருண்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யப்போகிறது… அதற்கு முன்னர் முடியூமென்றால் சென்று பசியாறுங்கள்…
நானும் சீக்கிரமாகவே அவ்விடத்தை அடைய வேண்டும் என பறந்து சென்றேன். தேன் நிறைந்திருக்கும் மலர்களை கண்ணால் காணக்கிடைத்தும் பருக முடியவில்லை. ஐயகோ! பாருங்கள்… மழை வந்துவிட்டது… ஐயோ! எனது இறக்கைகள் நனைகின்றனவே…என்னால் பறக்க முடியவில்லையே… அந்த மரத்திற்காகவாவது செல்ல வேண்டும். எனக்கு மிகவூம் பசிக்கிறது. ஆனாலும் என்னால் இனியூம்; பறப்பதற்கு மிகவூம் கடினமாக இருக்கிறதே. என்னால் பறக்கவூம் முடியவில்லை. நான் மழையிலே நன்றாக நனைந்துவிட்டேன். இன்னும் சற்று நேரத்திலேயே நான் இறந்துவிடுவேன். நான் முற்பிறவிகளில் ஏதேனும் கொடிய பாவங்களை செய்திருக்க வேண்டும். அதனால்தான் வண்ணத்துப்ப+ச்சியாக பிறந்து இவ்வளவூ துன்பத்தினை அனுபவிக்க நேரிட்டது. இனிமேல் ஒருபோதும் எனக்கு இம்மாதிரியான வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை என்றால் வேண்டாம்…! என்னை போல் தாகத்தினாலும்இ பட்டினியாலும் எத்தனை வண்ணத்துப்ப+ச்சிகள் இறக்கின்றனவோ…?
குழந்தைகளே… என்னை போன்ற வண்ணத்துப்ப+ச்சிகளை பிடிக்க வேண்டாம். எமது இறக்கைகள் மிக மிக மென்மையானவை. சீக்கிரமாகவே உடைந்துவிடும். அப்போது நாம் மிகுந்த வேதனையால் துடித்து போகிறௌம். எம்மீது கருணை காட்டுங்கள். குறைந்தபட்சம் இந்த துரதி~;டம் மிக்க வண்ணத்துப்ப+ச்சி வாழ்க்கை முடிவூறுவதற்கு முன்னர் வயிறு நிறைய தேனை உட்கொள்ளுவதற்காவது தேனிருக்கும் மலர்செடிகளை நடுங்கள்.
ஐயோ! அங்கே பாருங்கள். சிவப்பு நிற கொம்புகள் இருக்கும் கூரிய பற்கள் இருக்கும் கொடிய வகையான எறும்புகள் என்னை நோக்கி ஓடோடி வந்து கொண்டிருக்கின்றன. ஐயோ…! என்னால் பறக்கவூம் முடியவில்லையே… ஐயோ… வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள்… ஆ… ஆ…
அழகிய இறகுகள் இருந்தாலும் – அதில் வண்ணங்கள் நிறைந்திருந்தாலும்
பருகுவதற்கு தேனில்லையெனில் – எந்நாளும் பசியினது கொடுமையே
பறந்து பறந்து செல்லும் நான் – சிறிது காலம் வாழும் நான்
எங்கு செல்வேன் என அறியாது – மரணத்தினையே நெருங்குகிறேன்.
என் மீது கருணை கொண்டு அழகில்லாவிடிலும் – தேனிருக்கும் மலர்களையே நட்டு வைப்பீர் சிறுவர்களே…!