இதோ நீங்கள் தேடும் தேவதூதன்!

புண்ணியமிக்கவர்களே!

நாம் இன்று செவிமடுக்கப்போவது மிகவும் விசேடமான போதனை ஒன்றையே! மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து போதித்த முக்கிய போதனைகளில் இந்த போதனையும் அடங்கும். இந்த போதனை ‘‘மஜ்ஜிம நிகாயம்” எனும் புனித நூலில் அடங்குகிறது. இந்த போதனையின் பெயர் தேவதூத சூத்திரமாகும்.

போதுஜ்ஜனரால் நினைத்து கூட பார்க்க முடியாது.

நாம் இதுவரை அறிந்திராத பல விடயங்கள் இந்த போதனையில் குறிப்பிடப்படுகிறது. கர்மம் மற்றும் கர்ம வினைப்பயன்  தொடர்பாக நம்பிக்கையற்றோருக்கு, உள்ளதை உள்ளபடி அறிய முடியாதோருக்கு நினைத்து கூட பார்க்க முடியாத விடயம்தான் இந்த போதனையில் கூறப்படுகிறது. அதுதான் நரகம். ஆம், இந்த போதனையில் நரகத்தினை பற்றியே குறிப்பிடப்படுகிறது.

ஏமாற வேண்டாம்.

 இந்த நரகத்திலிருந்து உயிர்கள் நிரந்தரமாக மீள்வதற்காகவே  புத்தபகவான் ஒருவர் தோன்றி தர்மத்தினை அதாவது நாற்பேருண்மைகளைழூழூ போதிக்கிறார். பாருங்கள், இப்போது நாம் மானிட உலகில் பிறந்திருக்கிறோம். நாம் இவ்வுலகத்திலுள்ள பல விடயங்களுக்கு ஏமாறுகிறோம். நாம் அவ்வாறு ஏமாறியவை பின்னாலேயே இடைவிடாது தொடர்ந்து, முதுமையடைகிறோம். திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறோம். எமது கர்மத்தின் படி நாம் மரணித்து எங்கு சென்று பிறக்கின்றோம், என யாராலுமே கூற முடியாது.

ஆனால் எமக்கு ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது. இந்த மனதின் இயல்பினை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்பதே அது. இந்த மனதில் நன்மை மற்றும் தீமை என இரு பிரிவுகள் உள்ளன. நன்மையான பகுதியை எம்முள் தோற்றுவிப்பதற்கு நாம் பெரும் சிரமத்தினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மனதின் தீமையான பகுதியை தோற்றுவிப்பதற்கு நாம் எவ்வித சிரமத்தினையும் மேற்கொள்ள வேண்டியதில்லை.

செய்பவருக்கே சிரமம் தெரியும்.

பாருங்கள், சரியான முறையில் சீலத்தினை (ஒழுக்கத்தினை) நாம் எமது

வாழ்விற்கு பழக்கப்படுத்திக்கொள்வது எவ்வளவு கடினமான விடயம். மிகவும் முயற்சியுடனும் வீரியத்துடனும்தான் அதனை செய்ய வேண்டிதாக இருக்கிறது. உளச்சமாதிழூ நிலையாயினும் அப்படியே.ஆனால் ஏதாவது தீயதை செய்வது மிக எளிது. நாம் எமது வாழ்க்கையையே மீண்டும் திரும்பி பார்த்தால்  எமது வாழ்க்கையில் நாம் தவறிய அனைத்து சம்பவங்களிலும்; எமது மனதில் தோன்றிய தீய குணங்களின் தாக்கமே இருந்தது , என்பது தெளிவாகும். நன்றாக தத்தமது வாழ்க்கை தொடர்பாக சிந்தித்து பாருங்கள்.

புத்தபகவான் ‘‘இரும்பு அழிவுறுவது இரும்பிலேயே தோன்றும் துருவினால்தான்.” என மொழிந்துள்ளார். அவ்வாறே எமது வாழ்வு அழிவுறுவதும் எம்முள்ளே தோன்றும் ஆசை, கோபம் மற்றும் அறியாமை என்பவற்றினாலேயே. இந்த மனமாசுகள் எம்முள் இருப்பதனால் எம் வாழ்க்கை முடிவுறும்போது  எம்மால் சேகரிக்கப்பட்ட கர்மத்தினால் நாம் நரகம் வரை இழுத்து செல்லப்படலாம். அவ்வாறில்லாவிடில் மிருகலோகத்தில் பிறக்கச்செய்யவும் நாம் சேகரித்து கொண்ட கர்மம் காரணமாகலாம்.

பரிசோதனை குழாயினூN;ட பார்த்தாலும் புலப்படாதன.

தர்மத்தினை பின்பற்றும் திறன் உள்ளவரால் இதனிலிருந்து மீள முடியும். அவ்வாறில்லாவிடில் அதனிலிருந்து ஒருவர் மீள்வது மிகவும் கடினமாகும். தன்னால் தன்னை பாதுகாத்து கொள்ளும் செயற்பாடே இந்த தர்மத்தில் உள்ளது. இதனை விடாமுயற்சி, தைரியம், வீரியம், மற்றும் தியாகத்துடனேயே செய்ய வேண்டியுள்ளது. அதனால் இந்த தர்மத்தினை பழக்கப்படுத்துவது மிக மிக கடினமானதாகும். புத்தபகவான் இந்த நரகத்தின் இயல்பினை முற்றாக உணர்ந்திருந்தார். புத்தபகவான் நரகத்தினை கண்டது சாதாரண கண்களினால் அல்;ல. பரிசோதனை குழாயினூடாக அல்ல. பரிசோதனை குழாய் ஒன்றினூடாகவோ அல்லது வேறுவிதமான

பொருள்களினூடாகவோ இதனை யாராலும் காண முடியாது. புத்தபகவான் இதனை கண்ணுற்றது ‘‘சுதூபபாத” எனும் ஞானத்திலாகும்.

எம் கண்களுக்கு புலப்படாத விடயங்கள் தெரியும்

நான்காம் படிமுறை தியானம் வரை தன் மனதை மேன்மைபடுத்திக்கொண்ட புத்தபகவானால் உயிர்கள் மரணிப்பதனையும் மரணித்து மீண்டும் பிறப்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு உயிர் மறைவதனை எம்மால் காண முடியுமா? முடியாது. ஒருவர் மரணிக்கும் போது அவரது இதயத்துடிப்பு நின்றுவிடும். இரத்த ஓட்டம் நின்றுவிடும். உடல் மரத்துபோய்விடும். அவ்வளவே எமக்கு தெரியும். அப்போது நாம் அவர் மரணித்து விட்டதாக கூறுவோம்.

நாம் ஒருவரது உடலிலிருந்து பஞ்ச உபாதானஸ்கந்தங்கள்ழூ வெளியேறுவதை கண்டிருக்கிறோமா? இல்லை. அப்படியாயின் எம்மால் ஒருவரது உயிர் பிரிவதனை காண முடியாது. அதேபோல் மீண்டும் ஒரு உயிர் பிறப்பதனையும் காண முடியாது. ஆனால் புத்தபகவான் உயிர்கள் மரணிப்பதனையும் மரணித்து பிறப்பதனையும் காணக்கூடிய ஞானத்தினை உடையவராக இருந்தார்.

போவதும் வருவதும் தெரியும்

புத்தபகவான் இதனை இவ்வாறுதான் பார்த்தார். கதவுகள் திறந்தபடியான இருவீடுகள் இருக்கின்றன. அவ்விரு வீடுகளையும் பார்த்தபடி ஒருவர் அவ்வீடுகளுக்கு முன்னால் இருக்கிறார். அப்போது அவருக்கு தெரிகிறது. அந்த வீடுகளுக்கு மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள். வெளியே சென்றவர்கள். மீண்டும் வீட்டினுள் செல்கிறார்கள். அவ்வாறு வீட்டினுள் செல்வோர் வீட்டினுள் நடமாடுகிறார்கள். அந்த வீட்டினிலிருந்து மீண்டும் அடுத்த வீட்டுக்குள் மாறிச்செல்கிறார்கள். அது போன்றதுதான் இந்த உயிரினங்களது வாழ்க்கையுமாகும். சில உயிரினங்கள் மனம், வாக்கு, காயம் என்பவற்றினால் நன்மையை செய்து நல்ல வாழ்வினை வாழ்கிறார்கள்.

அவர்கள் அந்தணர்கள், துறவிகளை தூற்றாது, தர்மத்தினை இகழாது,                   மூட பார்வைகள்;ழூ என்பன பின்பற்றாது வாழ்ந்து மரணிக்கின்றனர். அவர்கள்தான் மரணித்து சுவர்க்கத்தில் பிறப்பார்கள். அல்லது மீண்டும் மனித உலகில் பிறவியெடுப்பார்கள்.

இவை இருந்தால் மாத்திரம் தான்

அவ்வாறாயின் நீங்கள் மரணித்த பின் ஏன் மனித உலகத்தில் மீண்டும் பிறந்தீர்கள்? காரணம் என்ன? மனம், வாக்கு உடல் என்பவற்றினால்  நன்மையை செய்ததினாலேயே. துறவிகளை ஏளனம் செய்யாததினாலேயே. தர்மத்தினை ஏளனம் செய்யாததினாலேயே. மூட பார்வை அற்று இருந்ததினாலேயே. அதேபோல் நீங்கள் மரணித்த பின் சுவர்க்கத்தினை அடைய வேண்டுமானாலும் உங்களிடம் இந்த இலட்சணங்களே இருக்க வேண்டும். உங்களிடம் இந்த இலட்சணங்கள் இருப்பின் ‘‘நான் மரணித்த பின் சுவர்க்கத்தில்தான் பிறப்பேன்” என நினைத்து கொள்ளுங்கள்.

இறுதி சடங்கினால் ஒருவர் சுவர்க்கத்தினை அடையமாட்டார்.

அப்படியாயின், இறந்தவர் ஈமக்கிரியைகளினால் சுவர்க்கத்தினை அடையமாட்டார். நாம் ஏன் ஈமக்கிரியைகளை செய்கிறோம்? ‘‘மரணித்தவர் துன்பமனுபவிக்கும் இடத்தில் பிறந்திருந்தால் அவர் அதிலிருந்து நீங்கி சுகம் அனுபவிக்க வேண்டும்” என்றல்லவா? எம்மால் அவ்வாறு செய்ய முடியுமா? முடியாது. அவ்வாறு நடக்குமாயின் அதனை எமக்கு முதலில் அறியத்தருவது புத்தபகவானே. ஏனெனில் அவர் பெருங்கருணை படைத்தவர். ஒருவர் மரணித்த பின்னராவது இவ்வாறாக சுவர்க்கத்தில் பிறந்து சுகம் அனுபவிக்க முடியுமாயின் அதனை புத்தபகவானே முதலில் கூறியிருப்பார்.

நேற்று நிகழ்ச்சியொன்றின் போது ஒருவர் என்னிடம் வந்து கேட்டார். ‘‘இறந்தவருக்கு அதிகமாக புண்ணியம் கிடைப்பது இந்த சடலத்தை  தகனம் செய்யும்போதா? அல்லது புதைக்கும்போதா?” என்று.

‘‘இறந்தவருக்கு அது தேவையில்லாத விடயம். இறந்த பின்னர் அவரது உடல் வாகனத்தில் நசுங்கினாலும் எந்தவித பிரச்சினையும் இல்லை” என்றேன். பிணங்களை பராமரிப்பதால் இறந்தவரை எவ்வாறு சுவர்க்கத்தில் பிறக்கச்செய்ய முடியும்? பிணத்தினை நாய்கள் இழுத்துச் சென்றாலும் பரவாயில்லை. முக்கியத்துவம் இருப்பது பிணத்திலல்ல. அவர் வாழ்ந்த வாழ்க்கை முறையிலாகும்..

உடம்பினால் செய்யும் பாவம்

புத்தபகவான் ‘‘இவ்வுலகில் வாழும் உயிர்கள் உடலினால் மூன்று வகையான பாவங்களை செய்கின்றனர்”. என மொழிந்தார். அதில் முதலாவதே ‘‘‘‘பாணாதிபாதா”“ அதாவது உயிர்களை கொல்லுதலாகும். புத்த போதனைகளில் உயிர்களை கொல்வது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘லுத்தோ” கொடூர மிகுந்த ‘‘லோஹிதபாணி” இரத்ததிலான கரத்தினோடு ‘‘ஹதபஹதே நிவிட்டோ” அடித்து குத்தி கொல்லும் மனப்பான்மையோடு ‘‘அதயாபன்னோ சப்பபான பூதேசு” உயிர்கள் மீது எவ்வித கருணையுமற்று ஒருவர் உயிர்களை கொல்வாராயின் அது பாணாதிபாதா அதாவது உயிர் வதையாகும்.

களவும் உடலினால் செய்யும் பாவமாகும்…

அடுத்ததாக களவு தொடர்பாக விபரிக்கப்படுகிறது. ஊரிலாகட்டும் நகரத்திலாகட்டும் தனக்கு உரித்தில்லாததை  திருடும் மனப்பான்மையில் ஒருவர் எடுப்பாராயின் அது திருட்டாகும். ஒருவரது தோட்டத்திலிருந்து பூக்கன்று ஒன்றினை உரியவரது அனுமதியின்றி எடுத்தாலும் அது திருட்டேயாகும். அதேபோல் இலஞ்சம் வாங்குதல், வஞ்சனை செய்தல் என்பனவும் களவாகும்.

அடுத்ததாக புத்தபகவான் தகாத காமசெயல் தொடர்பாக விபரிக்கிறார். தாய், தந்தை, பெற்றோர், சகோதரன், சகோதரி, உறவினர், கணவன், மனைவி, என்போரால் பாதுகாக்கப்படும் ஒருவரோடு எவராயினும் ஒருவர் காம செயலில் ஈடுபடுவாராயின் அது தகாத காம செயலாகும். இவை உடம்பினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளும் பாவ செயல்களாகும்.

பேசும் பாக்கியம் கிடைத்தது புறங்கூறுவதற்காக அல்ல.

அடுத்ததாக புத்தபகவான் வார்த்தையினால் செய்யும் நான்கு வகையான பாவங்கள் தொடர்பாக குறிப்பிடுகிறார். முதலாவது பாவம் தான் பொய் கூறல்.  எமக்கு பேசும் திறமை கிடைத்தது பொய்யுரைப்பதற்காக அல்ல. உலகிற்கு நன்மையை விளைவிப்பதற்காகவே. நீங்கள் பாம்புகளை கண்டிருப்பீர்கள். அவைகளது உலகில் வார்த்தைகள் இல்லை. அவை மனிதர்களாக பிறந்திருக்கும் போது பொய்யுரைத்ததினாலயே அந்த துர்ப்பாக்கியம் கிட்டியது.

அடுத்ததாக புறங்கூறல். நன்கு ஆராய்ந்து பாருங்கள். வீடுகளில் பிரச்சினை ஏற்பட புறங்கூறுதலே காரணமாகவிருக்கும். அநேகமாக சண்டை சச்சரவுகள், சந்தேகங்கள், குழப்பங்கள் என்பன ஏற்படவும் இதுவே காரணமாக அமைகிறது. புறங்கூறும் அனைவருமே வார்த்தையினால் பாவத்தினை தேடிக்கொள்கின்றனர். எமக்கு பேசும் திறமையிருப்பது புறங்கூறுவதற்காக அல்ல. நீங்கள் பேச முடியாதவர்களை பார்த்திருப்பீர்கள். அதேபோல் திக்கி பேசுவோர்களையும் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம் அவர்கள் வார்த்தையினால் சேகரித்துக்கொண்ட பாவங்களேயாகும்.

அர்த்தமற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

வார்த்தையினால் செய்யும் அடுத்த பாவம் தான் கொடிய சொற்களை பிரயோகித்தல். புறங்கூறுவதால் ஏற்படும் பிரச்சினைகளின் போது கொடிய (கெட்ட) வார்த்தைகளையே பிரயோகிக்கின்றனர்.

அடுத்தது தான் அர்த்தமற்ற பேச்சுக்கள். நடிகர்கள், விளையாட்டுக்கள், அரசியல்வாதிகள் தொடர்பான பேச்சுக்களை (32 வகையான பேச்சுக்கள் இதிலடங்கும்.) பேசிக்கொண்டிருத்தல். இவையனைத்தும் வார்த்தையினால் செய்யும் பாவங்களேயாகும்.

எமது கை கால்களிலே சக்தி இருக்கும் வரை எம்மால் இதனை விளங்கிக்கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் எமது உடல் சக்தியிழந்து, பலமற்று நாம் ஓரிடத்திற்கு வரையறுக்கப்பட்டதன் பின்னர் அதாவது எமது இறுதி காலத்தில் எமக்கென்று நன்மை

பயக்கும் ஒன்றுமே எஞ்சுவதில்லை. அன்றைய நாள் இதுவரை உடலினாலும், வாக்கினாலும், மனதினாலும் சேர்த்துக்கொண்டவையை பொதிசெய்து ‘‘இந்தா! நீ இதுவரை சேர்த்து கொண்டவையை அள்ளிக்கொண்டு போ!” என்று எமக்கு தரப்படும். அவற்றை எடுத்து கொண்டுதான் நாம் செல்ல வேண்டியதாக இருக்கும்.

மனதினால் செய்யும் பாவங்கள்.

 அடுத்ததாக மனதினால் செய்யக்கூடிய மூன்று வகையான பாவங்களை புத்தபகவான் மொழிந்துள்ளார். நாம் அழகிய ஒரு வீட்டினை கண்டதுமே ‘‘ஆ!  அந்த வீடு என்னுடையதாக இருந்தால்” என தோன்றும். சொகுசான வாகனமொன்றினை கண்டாலும் ‘‘அந்த வாகனம் எனக்கு இருந்தால்”. என தோன்றும். அழகியதொரு சேலையை கண்டாலும் ‘‘அந்த சேலை எனக்கிருந்தால்..” என தோன்றும். அழகிய தோற்றமுடைய ஒருவரை கண்டாலும் ‘‘எனக்கு இவர் துணையாக அமைந்தால்..” எனவும் தோன்றும். இவ்வாறு ஏனையோருக்கு உரித்தானவற்றை பார்த்து ஏங்கிக்கொண்டு பெருமூச்சு விட்டபடி வாழ்கிறோம். எமக்கு இவ்வாறான அனுபவங்கள் இல்லையா? இருக்கின்றன. அப்படியாயின் பாருங்கள், எமது வாழ்வானது தீமையான திசையை நோக்கியே செல்கின்றதல்லவா? இரும்பினிலே தோன்றும் துருவானது எவ்வாறு  அந்த இரும்பையே அழிக்கிறதோ அவ்வாறே எம் வாழ்வினை அழிக்கவல்ல தீய சக்திகளும் எம்முள்ளேதான் இருக்கின்றன.

மனதினால் செய்கின்ற இன்னுமொரு பாவத்தினை பற்றி புத்தபகவான் விளக்கியுள்ளார். நாம், ‘‘இவர்கள் நாசமாகத்தான் போக வேண்டும்” ‘‘அழிய வேண்டும்” , ‘‘செய்யும் ஒரு காரியமும் சரிவரக்கூடாது.” இவ்வாறு நினைக்கும் சந்தர்ப்பங்கள் இல்லையா? இருக்கிறது. இவ்வாறாக நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் மனதினால் பாவத்தினையே சேகரிக்கிறோம்.

ஒவ்வொரு பிறப்பிலும் நான் உன்னை பழிவாங்குவேன்.

ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்கள் ஏனையோரின் புறங்கூறுதலை

கேட்டு அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் பிரச்சினைகளை ஏற்படுத்திகொண்டு மனதினால் இவ்வாறு நினைப்பார்கள். ‘‘நான் ஒவ்வொரு பிறப்பிலும் உன்னை விரட்டி விரட்டி பழிவாங்காமல் விட்டால் பார்த்துகொள்” என்று. மனதினால் மட்டும் நினைத்துவிடாது வார்த்தையினாலும் அதனை வெளிப்படுத்துகிறார்கள். அவ் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் மனதினால் மட்டுமல்லாது வார்த்தையினாலும் பாவத்தை சேகரித்து கொள்கிறார்.

அடுத்ததாக மனதினால் பாவம் சேரும் மிகவும் பயங்கரமான விடயம்தான் மூடபார்வைகள் . அந்த மூடபார்வைகளாவன. ஒருவர், ‘‘தானம் அளிப்பதால் நல்விளைவுகள் ஏற்படும்” என்பதனை ஏற்றுகொள்ள மாட்டார். அதேபோல் ‘‘சேவையின் (பிரதிபலன்கள்) விளைவுகள் உண்டு” என்பதனை ஏற்றுகொள்ளார். இங்கு சேவை எனப்படுவது தனது தொழிலாகும். அந்த தொழிலை ஒருவர் சரிவரச்செய்வாராயின் அது மிகப்பெரிய புண்ணியமாகும். நாம் ஆசிரியர்களை எடுத்து கொண்டால் அந்த தொழிலினூடாக ஒருவர் மிகவும் புண்ணியத்தினை ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வைத்திய தொழிலிலும் புண்ணியத்தினை சேகரித்து கொள்ளலாம். அலுவலக சேவகருக்கு கூட அப்படித்தான். வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட அவர்களுடைய அந்த தொழிலை சரிவர செய்வதால் அளப்பரிய புண்ணியத்தினை தத்தமது வாழ்விற்கு ஈட்டிக்கொள்ளலாம். அதேபோல் ஒரு வியாபாரி தன் வியாபாரத்தை வஞ்சனையின்றி செய்வாராயின் அதன் மூலம் அவர்  மரணத்தின் பின்னர்  சுவர்க்கத்தில் கூட பிறக்கும் அளவிற்கு புண்ணியத்தினை சேகரித்து கொள்ளலாம். ‘‘சேவை செய்வதால் பாவம், புண்ணியம் எனும் விளைவுகள் கிடைக்கும்” என்பதனை ஒருவர் நம்ப வேண்டும். இதனை நம்பாவிட்டால் அவர் மூடபார்வைகள் கொண்டவராவார்.

அனைத்து உலகங்களும் இங்கு இல்லை…

அரும்பாடுபட்டு தம்மை ஈன்றெடுத்து, வளர்த்தெடுத்த பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது அளவிட முடியாத அன்பினை கொண்டவர்கள் என்பதனை ஏற்காதோரும் எம்மத்தியில் வாழ்கின்றனர். அதேபோல்

ஒருவர் பெற்றோர்களுக்கு சேவை செய்வதில் பாவ புண்ணிய விளைவுகள் உண்டென ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுவும் ஒரு மூடபார்வையாகும்.அடுத்த மூடபார்வைதான், தாய் தந்தை அற்று பிறக்கும் பிறவிகள் அதாவது ஓபபாதிக பிறப்புகள்ழூ  உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ளாமை

உலகம் என்பது நாம் காண்பவை மட்டுமல்ல.

அடுத்த மூடபார்வைதான், இவ்வுலகினை உய்த்தறிந்த துறவிகள், அந்தணர்கள் இல்லை. எனும் நிலைப்பாடு. சிலர் தம் கண்ணுக்கு தெரிபவை மட்டும் தான் உலகம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த கருத்து சரியா? பிழையா? பிழையாகும்.

புத்தபகவானுக்கு இவ்வுலகில் சாதாரண கண்களுக்கு புலப்படாத பல விடயங்களை காணும் திறமையிருந்தது. புத்தபகவான் இவ்வாறு போதித்தார். இவ்வாறான மூடபார்வைகளை கொண்டிருக்கும் ஒருவர் புத்தபகவான் உட்பட பிக்கு, துறவிகளை நிந்தனை செய்வார். மோட்சத்திற்கு வழிகாட்டும் உன்னதமான தர்மத்தினையும் நிந்தனை செய்வார். இவ்வாறு பலவகையான நிந்தனைகள் செய்து அதன் விளைவால் நரகத்தில் பிறப்பார்.

ஐயோ! அம்மா..தீச்சுவாலைகள் என்னை சுட்டெரிக்கின்றன!

புத்தபகவான் நரகத்தினை பற்றி விபரிக்கிறார். நரகத்தில் பிறப்பது ‘‘‘‘ஓபபாதிக”“ முறையிலாகும். ஒருவரின்; இறுதி மூச்சு நிற்கும் போதே நரகத்தில் பிறவி கிடைக்கும். நரகத்தில் அவர் பிறந்ததுமே அவரை இயமனின் சேவகர்கள் வந்து பிடித்து கொள்வார்கள்.

இலங்கையில் நடந்த சம்பவொன்றை கூறுகின்றேன். ஒரு மகள் இருந்தாள். அவள் ஒரு ஆசிரியை. அவள் காணி பிரச்சினை ஒன்றுக்காக தன் தாயோடு பகைமை கொண்டிருந்தாள். அவள் அதன் காரணமாக தனது தாயை ஏசிக்கொண்டும், தூற்றிக்கொண்டும் பகைமை கொண்டிருந்தாள். இப்படி இருக்கும் போது அந்த மகளுக்கு

புற்றுநோய் ஒன்று ஏற்பட்டது. ‘குணப்படுத்த முடியாது, இவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்’. என வைத்தியர்கள் கூறிவிட்டார்கள். இவள் நன்கு வாழும்போது தனது தாயை வீட்டிற்குக்கூட வர அனுமதிக்கவில்லை. ‘‘வீட்டிற்கு வந்தால் அடிதான் கிடைக்கும்” என கூறியிருந்தாள். ஆனால் மகள் நோயால் துன்புறும்போது தாய்தான் பணிவிடை செய்தாள். இவ்வாறு இருக்கும் போது ஒருநாள் இந்த மகள் படுத்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து பலத்த சத்தத்தோடு ‘‘‘‘அம்மா வீடு எரிகிறது… வீட்டினுள் தீ வருகிறது”“ என கூச்சலிட்டாள். வீட்டினுள் வெயில் வருவதால் தான் இவ்வாறு கூச்சலிடுகிறாள் என்று, அந்த தாய் கதவினை மூடினாள். இவ்வாறு மூடும் போது ‘‘‘‘அம்மா, சிவப்பு  நிற ஆடை அணிந்தோர் வந்து என்னை இழுக்கின்றனர் ஆ!!”“ என கத்திக்கொண்டே மரணித்தாள். மரணத்தருவாயில் இருக்கும் சிலருக்கு மனித உலகில் இருக்கும் போதே நரகத்தில் பிறப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.

எமக்கும் அப்படியான மரணம் நிகழ்ந்தால்..?

ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறில்லை. நல்ல சுகமாக வயிறுமுட்ட சாப்பிட்டு தூங்குவார்கள்.  அந்த தூக்கதிலேயே அவர் மரணிப்பார். இதை கேள்வியுறும் மக்களும் மரண சடங்கில் வருணித்து பேசுவார்கள். ‘‘நல்ல மரணம் ஒன்று. சுகமாகவே அவர் இறந்தார். எவ்வித வேதனையையும் அனுபவிக்கவில்லை. அதிஷ்டமானதொரு மரணம்” என்று . ஆனால் அவர் மரணத்தின் பின் பிறப்பது எங்கே நரகத்தில்தான். அவர் அங்கு பிறந்த உடனே அவரை இயமனின் சேவகர்கள் பிடித்து கொள்வார்கள். இதனிலிருந்து புலப்படுவது என்னவெனில் அவருக்கு அதிலிருந்து மீள்வதற்கு எவ்வித அவகாசமும் கிடையாது என்பதாகும்.

இயம அரசன்..

இவ்வளவு ஏன்? நாம் ஒரு சிறிய விடயத்தினை பார்ப்போம். நாம் கனவு ஒன்றினை காண்கிறோம், என்று வைத்துக்கொள்வோம். அந்த கனவினை காணும் போது எம்மால் அதனை தடுத்து நிறுத்த முடியுமா?

முடியாது. நாம் விரும்பாத ஒன்றை கனவில் காண்கிறோம். ஆனால் அதனை எம்மால் அந்நேரம் நிறுத்த முடியாது. அந்த கனவினை நாம் தொடர்ந்தும் காண்கிறோம். ஆம், நாம் விரும்பாவிட்டாலும் அதனை காண வேண்டியதாக இருக்கிறது. பாருங்கள் எவ்வளவு அநாத்மம் (எம்மால் கட்டுப்படுத்த முடியாத தன்மை) என்று. ஒருவர் நரகத்தில்ஓபபாதிக முறையில் பிறந்தவுடனே இயமனின் சேவகர்களால் அவர் இழுத்து செல்லப்படுகிறார். அவ்வாறு இழுத்து செல்லப்படும் போது அவர் செய்த அனைத்து பாவங்களும் அவர் முன்னே தென்படும். அவரை இயமனின் சேவகர்கள் இயம அரசனின் முன் நிறுத்துவர்.  புத்தபகவான் ‘‘புண்ணியமிகு பிக்குகளே! நரகத்தில் பிறந்த ஒருவரிடம் இயமன் கேள்விகள் கேட்பார்” என மொழிந்தார்.

இயமன் நரகத்தில் பிறந்த அவ்வுயிரிடம் பின்வருமாறு கேள்விகளை கேட்பார். ‘‘நீ மனித உலகில் வாழும் போது முதலாவது தேவதூதனை காணவில்லையா?”

‘‘ஐயோ நான் காணவில்லையே!”

‘‘என்ன? நீ மனித உலகில், தன்னுடைய மலம் மற்றும் சிறுநீரினை உடலில் பூசிக்கொண்டபடி புரண்டிருக்கும் அக்கணம் பிறந்த குழந்தைகளை கண்டதில்லையா?”

‘‘பிரபுவே! நான் கண்டிருக்கிருக்கிறேன்.”

‘‘அப்படியாயின் உனக்கு ‘நானும் இவ்வாறு தான் பிறந்தேன். மீண்டும் மீண்டும் பிறக்கும் இயல்பினை உடையவனாகவே நான் இருக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் பிறப்பதால் நான் செய்யும் தவறான செயல்களை விடுத்து தர்மத்தில் ஈடுபட வேண்டும். என நீ நினைக்கவில்லையா?”

நரகத்தில் பிறந்த இவ்வுயிர்க்கு தான் செய்த அத்தனை தவறுகளும் கண் முன்னே தெரியும். அதனால் பொய்யுரைக்கவும் முடியாது. அதனால் நரகத்தில் பிறந்தவர் பின்வருமாறு கூறுவார். ‘‘ஐயோ பிரபுவே! என்னால் தர்மத்தில் ஈடுபட முடியாமல் போய் விட்டது. நான் தாமதமாகிவிட்டேன்”

அப்போது இயம அரசன் ‘‘உனக்கு நன்மையான செயல்களை செய்ய முடியாமல் போய் விட்டது. நீ தாமதமாகிவிட்டாய்! செய்வதற்கு வேறு வழியில்லை. இந்த கர்மம் உன்னாலேயே செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால் செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை.   நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.” என்று கூறுவார்.

முதியவர்களை கண்டதில்லையா?

அடுத்ததாக இயம அரசன் இரண்டாவது கேள்வியை கேட்பார்.

‘‘மானுடனே! நீ இரண்டாவது தேவதூதனை கண்டதில்லையா?”

‘‘சுவாமி நான் கண்டதில்லையே!”

‘‘ஏன் நீ கண்டதில்லையா? 80-90 வயது கொண்ட நன்கு முதுமையடைந்த, ஊன்றுகோலை ஊன்றிச்செல்லும் முதியோரை நீ கண்டதில்லையா? முடி நரைத்து, பற்கள் விழுந்து, தோல் சுருங்கி, கூன் விழுந்திருக்கும் முதியோரை நீ கண்டதில்லையா?”

‘‘பிரபுவே! நான் கண்டிருக்கிறேன்”

‘‘அப்படியாயின் நீ நினைக்கவில்லையா? நானும் இவ்வாறு முதுமையடைவேன். நானும் பலவீனமடைவேன், என்னுடைய இந்த கை கால்கள் தளர்ந்து போகும். அதனால் நான் இவ்வாறாக முதுமை அடைவதற்கு முதல் எப்படியாவது அதர்மத்திலிருந்து விலகி தர்மத்தை பின்பற்ற வேண்டும். என்று நீ நினைக்கவில்லையா?”

‘‘ஐயோ பிரபுவே! என்னால் தர்மத்தில் ஈடுபட முடியாமல்

போய்விட்டது. நான் தாமதித்துவிட்டேன்”

‘‘தாமதமாகியதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.  இந்த கர்மம் உன்னாலேயே செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல.

உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால் செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை.   நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.” என்று கூறுவார்.

ஏன் நோயாளிகளை கண்டதில்லையா?

புத்தபகவான் அடுத்ததாக ‘‘இவ்வாறு நரகத்தில் பிறந்த மனிதரிடம் இயம அரசன் மூன்றாவது கேள்வியையும் கேட்பார்” என மொழிந்தார்.

‘‘மானுடனே! நீ மனித உலகில் இருக்கும் போது மூன்றாவது தேவதூதனை காணவில்லையா?”

‘‘ஐயோ! சுவாமி நான் கண்டதில்லையே!”

என்ன? நீ நோயாளிகளை கண்டதில்லையா? தன்னுடைய மலக்கழிவுகளிலேயே படுத்திருக்கும் நோயாளிகளை நீ கண்டதில்லையா? ஏனையோரின் உதவியின்றி எழ முடியாத, உணவு உண்ண முடியாத, நீராட முடியாத நோயாளிகளை நீ கண்டதில்லையா?

‘‘பிரபுவே! நான் கண்டிருக்கிறேன்”

நீ கண்டவுடன் சிந்தித்திருக்க வேண்டுமல்லவா? ‘‘நானும் நோயுறும் இயல்பினை கொண்டவன். நானும் இவ்வாறு ஒரு நாள் நோயால் பீடிக்கப்படலாம். அதனால் நான் செய்யும் தவறான செயல்களை தவிர்க்க வேண்டும். நானும் தர்மத்தின் படி வாழ வேண்டும்.” என்று.

‘‘ஐயோ பிரபுவே! என்னால் முடியாமல் போய்விட்டது.”

‘‘தர்மத்தினை பின்பற்ற தாமதமாகியவருக்கு தீமையான விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். இந்த கர்மம் உன்னாலேயே செய்யப்பட்டது. உன் தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால் செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை.   நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய்.

எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.” என்று பதிலுரைப்பார். பாருங்கள். இயம அரசர் எவ்வாறு செய்த தீய கர்மத்தினை ஒப்புவிக்கிறார் என்று. மனித உலகில் என்றால் நாம் தவறொன்றினை செய்து ஏனையோர் மீது ‘‘அவர் தான் இதனை செய்தார்” என குற்றத்தை சுமத்தி தப்பித்துவிடலாம். ஆனால் தனது மனசாட்சியிலிருந்து தப்பிக்கமுடியாது. அப்படியாயின் நரகத்தில் சென்று செயற்படுவது மனசாட்சியை அடிப்படையாக கொண்டே என்பதனை உணரலாம்.

தண்டனை அனுபவிப்பதை கண்டதில்லையா?

 இயம அரசன் எனக்கூறப்படுபவர், ஒருவர் நரகத்தில் பிறந்ததுமே தண்டனையை வழங்குவதில்லை. இயம அரசன் மீண்டும் நரகத்தில் பிறந்த மானுடரை பார்த்து கேட்கிறார். ‘‘மானுடனே! நான்காவது தேவதூதனை நீ காணவில்லையா?” என்று.

‘‘ஐயோ சுவாமியே நான் கண்டதில்லையே!”

‘‘ஏன் நீ தண்டனை அனுபவிக்கும் மனிதர்களை கண்டதி;ல்லையா? தவறுகளை செய்து அதன் விளைவாக சாட்டையடி வாங்கும் மக்கள், கல்லடிபட்டு இறந்து போகும் மக்கள், கைகால் வெட்டப்படும் மக்கள், சிறையிலடைக்கப்படுவோர், பல்வேறான  சித்திர வகைகளை கொடுத்து உயிருடன் எரிக்கப்படும் மக்களை கண்டதில்லையா?” என்று இயம அரசன் கேட்பார்.

நாம் வாழும் மனித உலகில் மனிதர்களை சித்திரவதை செய்வதை நாம் கடந்த காலங்களில் கேட்டிருக்கிறோம். கண்களினால் பார்த்தோர்களும் உள்ளனர். ஒருவரை நிலத்தில் சரிய வைத்து ஒரு காதில் ஆணியை அடுத்த காதில் வெளிவருமாறு சுத்தியலால் அடித்தல். மண்டையோடு சிதறும் வண்ணம் ஆணியை கொண்டு சுத்தியலால் அடித்தல். போன்றவை அவற்றில் ஒரு சிலதான். மனித உலகில் சித்திரவதைகள் இப்படியென்றால் நரகலோகத்தில் எவ்வாறானதாக இருக்கும்?

இயம அரசன் இந்த சித்திரவதைகளை விளக்கி கேட்கிறார்.

‘உனக்கு இந்த தண்டனைகளை பார்த்து ‘‘இந்த பிழைகளில் இருந்து நான் மீள வேண்டும்” என்று தோன்றவில்லையா?’

‘‘ஐயோ சுவாமியே! எனக்கு அவ்வாறு தோன்றவில்லையே!”

அப்போது இயம அரசன் ‘‘தர்மத்தினை பின்பற்ற தாமதமாகியவருக்கு தீமையான விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். இந்த கர்மம் உன்னாலேயே செய்யப்பட்டது.  உன் தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால் செய்யவில்லை. அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை.   நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.” என்று கூறுவார்.

போதுஜ்ஜனரின் வாழ்க்;கையானது ஒரு நீர் குவளையை போன்றதே…

புத்தபகவானது போதனை ஒன்றுள்ளது போதுஜ்ஜனர் தொடர்பாக. அந்த போதனையில் புத்தபகவான் போதுஜ்ஜனரின்ழூ குணவியல்பினை ஒரு நீர் குவளைக்கு உவமித்து கூறுகிறார். அதேபோல் ஆர்ய (உன்னத) தர்மத்தினை பின்பற்றும் மோட்ச பாதையில் பயணிக்கும் ஆர்ய சீடனின் வாழ்வினை ஒரு நதிக்கும் உவமித்து கூறியுள்ளார். புத்தபகவான் தம் சீடர்களிடம்  வினவுகிறார். ‘‘புண்ணியமிகு பிக்குகளே! ஒரேயளவிலான இரு உப்பு கற்களை எடுத்து ஒன்றினை நீர்க்குவளைக்கும் மற்றதை கங்கைக்கும் இட்டால் ஏற்படும் மாற்றம் என்ன? என்று. அதற்கு பிக்குமார்கள் ‘‘பாக்கியமுள்ள பகவானே! உப்புக்கல் இடப்பட்ட நீர்க்குவளையின் நீரானது விரைவிலேயே உப்பு சுவையுள்ளதாக மாறும். ஆனால் கங்கையின் நீரில் அதனால் மாற்றமேதும் ஏற்படுவதில்லை.” என மறுமொழி தெரிவித்தனர். அதனை செவிமடுத்த புத்தபகவான் ‘‘இப்படித்தான் ஒரு சிறு பாவத்தை செய்த போதுஜ்ஜனருக்கு நரகத்தில் பிறக்க அதுவே காரணமாகிறது. ஆனால் மோட்சத்தினை சாட்ஷாத் (உறுதி) செய்துள்ள ஒரு ஆரிய

சீடனுக்கு அது பாதிப்பு செலுத்தாது. பாருங்கள் தர்மத்தின் படி தம் வாழ்வினை நடத்தும் ஒருவருக்கு கர்ம விளைவுகளில் இருந்து எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கின்றது என்பதனை.

பிணங்களை கண்டதில்லையா?

அடுத்ததாக இயம அரசன் ஐந்தாவது தேவதூதனை பற்றி கேட்கிறார்.

‘‘மானுடனே! நீ மனித உலகில் வாழும்போது ஐந்தாவது தேவதூதனை காணவில்லையா?”

‘‘ஐயகோ! நான் கண்டதில்லையே!”

‘‘ஏன் நீ மனிதர்கள் இறந்து கிடப்பதை கண்டதில்லையா? அழுகிய பிணங்களை கண்டதில்லையா?”

‘‘பிரபுவே! நான் கண்டிருக்கிறேன்”

அதனை பார்த்ததும் ‘‘நானும் ஒருநாள் இப்படி மரணிப்பேன் அல்லவா? அவ்வாறு மரணிப்பதற்கு முன்பு நான் பாவசெயல்களிலிருந்து தவிர்ந்து தர்மத்தின் படி வாழ வேண்டும். புண்ணியங்களை செய்ய வேண்டும். என்று ஏன் நீ நினைக்கவில்லை?”

‘‘ஐயோ! பிரபுவே என்னால் அவ்வாறு சிந்திக்க முடியாமல் போய்விட்டது. நான் தாமதித்துவிட்டேன்.”

‘‘அப்படியாயின் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தர்மத்தில் ஈடுபட தாமதித்தவனுக்கு எந்த துன்பத்தை அனுபவிக்க நேரிடுமோ அதை நீ இப்போது அனுபவித்தேயாக வேண்டும். இந்த கர்மம் உன்னாலேயே செய்யப்பட்டது.  உன் தந்தையால் அல்ல. உன் தாய். மனைவி, பிள்ளைகள், உறவினர், சகோதர சகோதரிகள், உன் நண்பர்களால் செய்யப்படவில்லை. அல்லது வேறு தேவர்கள், துறவிகள், அந்தணர்கள் செய்யவில்லை.   நீயே இந்த கர்மத்தினை சேகரித்துகொண்டாய். எனவே அதன் தீய விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்.” என்று இயம அரசர் அமைதியாகிவிடுவார்.

இவ்வாறு ஐந்து வகையாக தர்மத்தில் ஈடுபட தாமதமாகியதை சுட்டிக்காட்டிய பின்பே அவர் மௌனமாவார். எந்த விதத்திலாவது அந்த மானுடனை அவரால் காப்பாற்ற முடியுமாயின், அவர் இந்த துன்பத்திலிருந்து காப்பார்.

அநித்திய தியானத்தின் மகிமை

நரகத்திற்கு சென்று இயம அரசரிடமிருந்து தப்பி வந்த ஒருவர் இருக்கிறார். இவர் இப்போது பிக்குவாக துறவு பூண்டிருக்கிறார். இந்த பிக்குவுக்கு நரகத்தில் நடந்தவை நினைவில் இருக்கிறது. அவர் மனித உலகில் வாழும் போது ‘‘அநித்திய”ழூ தியானத்தை செய்துள்ளார். இயம அரசன் இவ்வாறு ஐந்து கேள்விகளையும் கேட்டு இறுதியாக ‘‘ஏன் நீ இவ்வாறு செய்தாய்” என கேட்டுள்ளார். ‘‘சுவாமியே! நான் துறவு பூணுவதற்காகத்தான் இருந்தேன். அதற்கிடையில் மரணித்து விட்டேன்” என பதிலளித்துள்ளார். இவர் நரகத்தின் வாசல் வரை சென்று தப்பியவராவார். தப்பிக்க காரணம்தான் அநித்திய தியானத்தை செய்திருந்தமை ஆகும். இயம அரசர் கூறினாராம். ‘‘உனக்கு நீ செய்த புண்ணியம் ஒன்று உள்ளது. இந்த புண்ணியத்தினால் நீ மீண்டும் மனித உலகில் பிறக்கலாம்”. என்று. அங்கிருந்த இன்னுமொருவர் கூறியிருக்கிறார். ‘‘நீ மனித உலகில் பிறந்தாலும் அந்த மனித வாழ்வின் அரைவாசி காலத்தில் மிகுந்த துன்பத்தினையே அனுபவிப்பாய்!” என்று.

துன்பங்களை அனுபவித்தே துறவியானேன்.

அந்த பிக்குவானவர் கூறுகிறார், ‘‘நான் வாழ்வின் அரைவாசி காலத்தை துன்பத்தினாலயே அனுபவிப்பேன்”. என கூறியது மாரனேழூ என்பதாக. இவர் நரகத்திலிருந்து நீங்கி மனித உலகில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தினசரி குடிபோதையில் வந்து தாயை துன்புறுத்துவாராம். இந்த பிக்குவை பாடசாலைக்கு கூட அனுப்பியதில்லை. ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு

வெளியேறி, ஒரு தொழிலைத்தேட ஆரம்பித்தார். அதன் விளைவாக இவருக்கு பாண் பேக்கரி ஒன்றில் அடுப்பிற்கு விறகு போடும் தொழில் கிடைத்தது. அதனால் இவர் வருடக்கணக்கில் நெருப்பினால் மிகுந்த துன்பம் அனுபவித்துள்ளார். இவரின் சிறு வயதில் இருந்தே நரகத்தில் இடம்பெற்ற சம்பவம் இவருக்கு அடிக்கடி ஞாபகம் வந்துள்ளது. அதேபோல் சிறுவயதிலிருந்தே அவருக்கு துறவு பூண வேண்டும் எனும் ஆசை இருந்தாலும் எவருமே அவரை துறவு பூணுவதற்காக ஏற்றுக்கொள்ளவில்லை. நாற்பது வயது வரை பெரும் துன்பத்தினை அனுபவித்து வாழ்ந்து தனது நாற்பதாவது வயதினில் பிக்குவாக துறவறம் பூண்டார். வாழ்வின் பெரும்பகுதியை அவர் துன்பத்திலேயே கடந்தார். இறுதியில் அவர் துறவு பூண்டாலும் நரகத்தில் இடம்பெற்ற சம்பவம் நினைவிற்கு வருவதினால் அவரால் மனதினை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தல், தர்மத்தினை அறிவால் ஆராய்தல் போன்ற செயற்பாடுகளை செய்வது கடினமாக இருக்கிறது. ;என அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதிகமாக புண்ணியங்களை செய்கிறார். அதனால் அவர் மரணத்தின் பின் சுவர்க்கத்தில் பிறப்பார்.

நூற்றிற்கு தொண்ணூற்றொன்பது வீதம் நால்வகை நரகத்தில் தான்.

நீங்கள் நினைக்கும் வகையில் இலங்கையில் வாழும் எத்தனை பேர் மரணித்து சுவர்க்கத்தில் பிறப்பார்கள்? நூற்றிற்கு ஒரு தசம் என்ற வீதத்திலேயே சுவர்க்கத்தில் பிறப்பார்கள். மீதி தொண்னூற்றொன்பது தசம் ஒன்பது வீதமானோர் நரகத்திலோ, மிருகலோகத்திலோ, அல்லது பிசாசு உலகத்திலோ பிறப்பார்கள். காரணம் என்ன? மூடபார்வையில் மூழ்கி இருப்பதாகும். தானமும் அளிப்பார்கள், சீலத்தினையும் அனுஷ்டிப்பார்கள். ஆனால் மூடபார்வைகளை, மூடநம்பிக்கைகளை  சரணடைந்து அவற்றிலேயே திளைத்துள்ளனர். புத்தபகவான் ‘‘மூடபார்வை கொண்டு வாழ்பவனுக்கு இருவகையான பிறப்புக்களே உள்ளன என மொழிந்துள்ளார். ஒன்று மிருகலோக பிறப்பு, இரண்டாவது நரகத்தில் பிறப்பது”.  சம்மா திட்டி (தெளிவான பார்வை) அற்று மூடபார்வை கொண்டு அவற்றை  சரணடைபவர்கள் நரகத்திலேயே பிறப்பார்கள். இறப்போர் அனைவரும் நரகத்தில் பிறப்பதற்கான இரகசியம் இதுவேயாகும்.

துணிவு வேண்டும்.

நன்றாக சிந்தித்து பாருங்கள். இந்த மூடபார்வையை விடுத்து மும்மணிகளை மாத்திரம் சரணடைவதற்கு ஒருவருக்கு ஆத்மபலம் வேண்டும். ஒருவருக்கு இம்மாதிரியான நம்பிக்கைகளை விடுத்து புத்தபகவானை சரணடைவதற்கு பெரும் போராட்டம் தன்னோடு தானே செய்ய வேண்டியதாக இருக்கும். ஏன்? மனப்பயமே காரணம். ஏனெனில் இவ்வளவு நாள் தான் நம்பிக்கொண்டிருந்தவையே கைவிட வேண்டும். ஒருவர் இவற்றை கைவிட்டு மும்மணிகளை சரணடைவாராயின் அவருக்குதான் பாதுகாப்பு கிடைக்கிறது. மும்மணிகளை கைவிட்டு ஒருவர் வேறு விடயங்களை சரணடைவாராயின், அது அவருக்கு துர்ப்பாக்கியத்திற்கே வழி காட்டும். அதனால் தான்; பெரும்பாலானோர் மரணத்தின் பின்னர் நரகத்தில் பிறக்கின்றனர்.

பழுக்கக்காய்ச்சிய இரும்புக்கோல்

முன்பு கூறியதை போல் இயம அரசன் மௌனமாகியதன் பின்னர் நரக வாசிகள் இந்த மனிதரை அவ்விடத்திலிருந்து  இழுத்துச் செல்வார்கள். இழுத்துச் சென்று தீயிலிடப்பட்ட பழுக்கக்காய்ச்சிய இரும்புக்கோலினால் இடது கையில் குத்துவார்கள். வலது கையிலும் கால்களிரண்டிற்கும் மார்பிற்கும் குத்துவார்கள். ஆனால், அவர் அந்த கர்ம வினை அனுபவித்து தீர்;க்கப்படும் வரை துடித்து கொண்டிருப்பாரே அன்றி மரணிக்கமாட்டார்.

இவற்றை கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது.

அடுத்ததாக, அந்த மனிதனை அவ்விடத்திலிருந்து இழுத்தெடுப்பார்கள். எடுத்து என்ன செய்வார்கள்?  கோடரி ஒன்றினால் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள். இவ்வாறு கைகால்கள் துண்டித்து வேறாக்கிய போதும் வேதனையால் அவர் துடிப்பாரே தவிர மரணிக்கமாட்டார். சற்று நேரத்தில் மீண்டும் இந்த கைகால்கள் தாமாகவே அவரது உடம்பில் இணைந்து கொள்ளும். அவரை நரகவாசி ஒருவர் மட்டும் துன்புறுத்துவதில்லை. பலர் ஒன்றாக

சேர்ந்துதான் துன்புறுத்துவார்கள். அதன் பின்னர் இந்த மனிதரை (நரகத்தில் பிறந்த நரக உயிரினை) இழுத்துச் சென்று நன்கு சூடாகிய இரும்புத் தரையில் வைப்பார்கள்.  அத்தரையின் மீது இவரை படுக்கச்செய்து வெப்பமிகுந்த சில்லுக்களையுடைய வாகனங்களில் ஏறி; நரகவாசிகள் இவரின் உடலின் மேல் அங்குமிங்குமாக பயணிப்பார்கள். நரகத்தில் பிறந்த  மானுடன் வேதனையால் துடித்துக் கொண்டும் கத்திக்கொண்டும் இருப்பான். ஆனால் மரணிக்கமாட்டான்; சொல்லொணா துன்பத்தை அனுபவிப்பான். அதன்பின்னர் இந்த நரக உயிரினை தீக்கட்டிகள் இருக்கும் ஒரு மலையின் மீது அடித்து துன்புறுத்திய வண்ணம் ஏறச்செய்வார்கள். இவ்வாறு ஏற்றி முடித்த பின்னர் அந்த மலை உச்சியிலிருந்து அவரை ஒரு குழிக்குள் தள்ளி விடுவார்கள். அது ‘‘லோகும்பு நரகம்” எனப்படும். இந்த குழியில் கொதித்துகொண்டிருக்கும் உலோகத்திரவம் நிரம்பியிருக்கும்.

உணவு வகைகள் வேகுவது  போலவே தம் உடம்பும் வேகும்.

புத்தபகவான், உயிர்கள் இந்த கொதிக்கின்ற உலோக திரவ குழியில் அனுபவிக்கும் துன்பத்தினை மிக அழகாக விளக்கிக் கூறியுள்ளார். நரகத்தில் பிறந்த அந்த நரக உயிர் இந்த குழியில் விழுந்ததன் பின்னர் அவனின் உடல் நுரை போன்று ஆகிவிடும். அந்த குழியி;ன் ஆழத்தில் அமிழ்ந்தும் மீண்டும் மேற்பரப்பின் மீது வருவதுமாக அவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் அதில் அவிந்து கொண்டே இருப்பார். அதற்கான கர்மவினை முடியும் வரை அவர் அதிலே வார்த்தையால் விபரித்துக் கூற முடியாத வண்ணம் துயரத்தை அனுபவித்தபடி இறவாதிருப்பான். இந்த நரகத்தின் துன்பமனுபவிக்கும் காலம் முடிந்த பின்னர் நரகவாசிகள் அவரை பெருந்தூண்டில்களினால் பிடித்து மண்டபம் போன்று அமைந்த ஓரிடத்திற்கு வீசுவார்கள். ‘‘மகா நரகம்” என்பது அதன் பெயராகும். புத்தபகவான் அதனை மேலும் விபரிக்கிறார். ‘‘இதன் மேல் பாகம்; கீழ் பாகம், இரண்டும் முழுமையான இரும்பிலானது.  நாற்புறச்சுவர்களும் இரும்பினலானது. அதன் நாற்புறமும் தீ கொழுந்து விட்டு எரியும்.

இது சிறியதொரு இடமல்ல. மிக மிக விசாலமானதாகும். இதனுள் துன்புறுவது இந்த நரக உயிர் மட்டுமல்ல. கோடிக்கணக்கான பேர் துன்பமனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு மகா நரகத்துள் தூக்கி வீசப்பட்டோருக்கு தூரத்தே ஒரு கதவு திறப்பது தென்படும்.  அப்போது அதனுள் இருக்கும் அனைவரும் அந்தக்கதவினூடாக வெளியேறிவிடலாம் எனும் நம்பிக்கையோடு அந்த திசையை நோக்கி ஓடுவார்கள். அந்தக்கதவினை நெருங்கும் போது அந்த கதவினூடாக கொழுந்து விட்டு எரிகி;ற நெருப்பு உள்ளே வரும். அந்த நெருப்பினால் தோல் எரிந்து, தசை எரிந்து, எழும்புகளிலிருந்து புகை வெளிவரும்”, என புத்தபகவான் மொழிந்துள்ளார். இவ்வாறு துன்பத்தினை அனுபவித்து கொண்டு அக்கதவினை அடையும் போது அக்கதவு மூடப்படும்.

கர்மம் தீரும் வரை வேதனை அனுபவிப்பர்

அந்த கதவு மூடப்படும் போதே இன்னுமொரு பக்கம் கதவு திறக்கும். மீண்டும் அவர்கள் இங்கிருந்து கதவு திறப்பட்ட திசையை நோக்கி ஓடுவார்கள். தாங்க முடியாத வேதனையால் கூட்டமாக கத்திக்கொண்டு அக்கதவினை நோக்கி செல்லும் போது என்ன நடக்கும்? அவ்வாறே அந்த கதவினூடாகவும் கொழுந்து விட்டு எரிகி;ற பெருநெருப்பு உள்ளே வரும். அந்த நெருப்பினால் தோல் எரிந்து தசை எரிந்து, எழும்புகளிலிருந்து புகை வெளிவரும், என புத்தபகவான் மொழிந்துள்ளார். இவ்வாறு துன்பத்தினை அனுபவித்து கொண்டு அக்கதவினை அடையும் போது அக்கதவும் மூடப்படும்.

நாம் நினைப்போம், கிழக்கு நோக்கி ஓடும் போது  கிழக்குத் திசை கதவுதான் இப்போது மூடப்பட்டதென்று. மீண்டும் திரும்பி பார்க்கும் போது மேற்கு திசையில் அமைந்த கதவு திறக்கப்படும். அத்திசையை நோக்கி ஓடும் போதும் அந்த கதவினூடாக கொழுந்து விட்டு எரிகி;ற நெருப்பு உள்ளே வரும். அந்த நெருப்பினால் தோல் எரிந்து தசை எரிந்து, எழும்புகளிலிருந்து புகை வெளிவரும். என புத்தபகவான் மொழிந்துள்ளார். இவ்வாறு துன்பத்தினை அனுபவித்து கொண்டு அக்கதவினை அடையும் போது அக்கதவும் மூடப்படும். அங்கிருந்து

திரும்பி பார்க்கும் போது தென் திசையில் ஒரு கதவு திறப்பது தென்படும். அந்தத்திசையை நோக்கி ஓடும்போது முன்பு குறிப்பிட்டது போன்றே அக்கதவும் மூடப்படும். அங்கிருந்து பார்க்கும் போது வடக்கு திசையில் கதவு திறப்பதனை காண்பார்கள். மீண்டும் அத்திசையை நோக்கி ஓடுவார்கள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக துன்பமே!

இங்கு கூறப்படும் ஒரு கதவினை நோக்கி ஓடுவதற்கு  பல்லாயிரக்கணக்கான வருடங்களாகும். இவ்வாறு அந்த நரகத்தில் அனுபவிக்கும் காலம் முடிவடைந்து வரும்போது கிழக்கு திசையின் கதவு திறப்பதனை காண்பார்கள். மீண்டும் அத்திசையை நோக்கி தீயினால் எரிந்தபடி தோல் எரிந்து, தசை எரிந்து, நரம்புகள் எரிந்து, எழும்புகளிலிருந்து புகை வெளிவரும் வண்ணம் ஓடுவார்கள். ஆனால் இம்முறை அக்கதவு மூடப்படாது. அக்கதவிலிருந்து வெளியில் வீசியெறியப்பட்டு ஒரு பென்னம்பெரிய மலக்கழிவுக்குழியில் விழுவார்கள்.

நாமறிந்த புழுக்கள் அல்ல அவை

புத்தபகவான், ‘‘அந்த மலக்கழிவுக்குழியில் ஊசியை போன்ற ஒருவித புழுக்கள் நிறைந்திருக்கும், என மொழிந்துள்ளார். இன்ஜெக்ஷன் போடும் போது சருமத்தினையும் தசையினையும் ஊடுருவி ஊசி உள்ளே போகும் போது ஏற்படும் நுண்ணிய வேதனையை நாம் அனுபவித்திருப்போமல்லவா? அதேபோல் இந்த மலக்கழிவுக்குழியில் வாழும் புழுக்கள் அந்த குழியில் விழுந்தவரின் உடலை மூடுவதாக பற்றிகொள்ளும். அவ்வாறு உடலை மூடிக்கொண்டு கண்களை துளையிடும், காதுகளை ஊடுருவிச்செல்லும். மூக்கினை துளையிடும், வாயை துளையிடும். கைகால்களையும் இவ்வாறு துளையிடும். அவ்வாறாக முழு உடம்பையும் தோல், தசை, நரம்பு, என்பு என்பன ஊடுருவி சென்று என்பு மச்சையினை (சாற்றினை) உறிஞ்சி குடிக்கும். இந்த நரகம் ‘‘கூத நரகம்” எனப்படும். அவர் அந்த துன்பத்தினை அனுபவித்த வண்ணம் அதனிலிருந்து மீளும் வழியை தேடுவார். ஆயிரக்கணக்கான வருடங்கள் அதில் துன்பமனுபவித்தன் பின்னர்

அதனிலிருந்து அவன் வெளியே வருவான். அவன் அதனிலிருந்து வெளிவரும் போதே நரகவாசிகள் அவரை ‘‘குக்குல” என கூறப்படும் நரகத்திற்கு வீசிவிடுவார்கள். நீங்கள்; பார்த்திருப்பீர்கள் சில பௌத்த விகாரைகளில் நரகத்தில் இருக்கும் மரங்கள் என ஒரு வகையான மரத்தினை செதுக்கியிருப்பார்கள்.

பயத்தினை உண்டாக்க கூறிய கதைகளாகவே நினைத்தோம்.

நான் தர்மத்தினை அறிந்து கொள்ளும் வரை இவை எம்மை பயமுறுத்துவதற்காக கூறிய கட்டுக்கதைகள் என்றே நினைத்தேன். ஆனால் புத்த போதனைகளை படிக்கும் போதுதான் இவை புத்தபகவானாலேயே மொழியப்பட்டவை என தெரிந்து கொண்டேன். அப்போது தான் இவை உண்மையே என உணர்ந்துகொண்டேன். புத்தபகவான் இந்த போதனையில் ‘‘நரகத்தில் கூரிய பெரும் முற்களையுடைய தீயினால் எரிந்து கொண்டிருக்கும் மரம் இருக்கிறது” என மொழிந்துள்ளார்.  அந்த மரத்தில் அடித்து துன்புறுத்தி ஏறவிடுவார்கள். அதற்கான கர்மவினை முடியும்வரை அந்த கொடிய துன்பத்தினை அனுபவித்த பின்னர் இவர் அதனிலிருந்து ஒரு காட்டிற்கு தூக்கி வீசப்படுவார்.

வாள் வனம்.

இப்போது அவர் அந்தக்காட்டினுள் ஓடுகிறார். அந்த வனத்தில் உள்ள மரங்களிலிருப்பது இருபுறமும் வெட்டும் தன்மை கொண்ட ஒருவகை  இலைகளாகும். அவர் அந்த காட்டில் ஓடும்போது கூர்மையான அந்த இலைகள் விழுந்து அவரது நாசி ,காதுகள், கை கால்கள், தலை என்பன வெட்டுப்படும். இவ்வாறாக கைகால்களை அறுத்து கொண்டு நாசி, காதுகள் என்பன அறுத்து கொண்டும் இவர் அந்த காட்டிலிருந்து தப்புவதற்காக அங்கும் இங்குமாக  வனம் முழுதும் ஓடுவார். ஆயிரக்கணக்கான வருடங்களாக இவ்வாறு திக்குத்தெரியாமல் அவர் ஓடிக்கொண்டிருப்பார். இவ்வாறாக ஓடிக்கொண்டிருக்கையில், அவர் அந்த காட்டில்  கங்கையொன்றினை காண்கிறார். இந்த கங்கை சுடுநீரினை கொண்டதாகும். அவர் அந்த வனத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழி இல்லாததால் இந்த ஆற்றினுள் குதித்துவிடுகிறார். இவர்

ஆயிரக்கணக்கான வருடங்கள் அதில் அவிந்து கொண்டிருக்கும் போது நரகவாசிகள் அவனை மீனை தூண்டில் போட்டு மேலே எடுப்பது போல் கொக்கிகளால் இழுத்து மேலே எடுப்பார்கள்.

இரும்பு கொக்கிகள்.

நரக வாசிகள் அவரை இவ்வாறு இழுத்து எடுத்த ‘‘உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்பார்கள். அதற்கு அவர் ‘‘சுவாமியே! எனக்கு மிகவும் பசிக்கிறது”.  ‘‘ஆ! அப்படியா? இரு” என்று அவரது வாயை இரும்பு கொக்கிகளால் பிளந்து  தீப்பந்தொன்றினை விடுவார்கள். புத்தபகவான் அதனை பின்வருமாறு விபரிக்கிறார். ‘‘இந்த தீப்பந்தானது அவரின் உதடுகள், நா, தொண்டை, மற்றும் குடலனைத்தையும் எரித்துக் கொண்டு பின்புறமாக வெளியேறும்” என்று.  அவர் வேதனையால் கத்திகொண்டிருப்பாரே தவிர இறக்கமாட்டார். அனுபவிக்க வேண்டிய கர்மவினை முடியும் வரை அவருக்கு மீண்டும் மீண்டும் உடம்புகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

தாகத்திற்கு கிடைப்பது உலோக திரவமே..

அதன் பின்னர் மீண்டும் இவரை நரகவாசிகள் இழுத்துக்  கொண்டு போவார்கள். ‘‘இப்போது உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்பார்கள். அதற்கு அவர் ‘‘சுவாமியே! எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது” என்பார். ‘‘ஆ! அப்படியா? இரு! என்று அவரது வாயை இரும்பு கொக்கிகள் கொண்டு பிளந்து வாயினுள் கொதிக்கின்ற உலோகத் திரவத்தினை ஊற்றிவிடுவார்கள். இந்த உலோகத்திரவம் அவரின் உதடுகளை, நாவினை, தொண்டையினை மற்றும் குடலனைத்தையும் எரித்து கொண்டு பின்புறமாக வெளியேறும். அவரின் தாகம் இல்லாமல் போகும் வரை இவ்வாறு செய்துகொண்டேயிருப்பார்கள். அவர் வேதனையால் கத்திகொண்டிருப்பாரே தவிர இறக்கமாட்டார். அனுபவிக்க வேண்டிய கர்மவினை முடியும் வரை அவருக்கு மீண்டும் மீண்டும் உடம்பு தோன்றிக்கொண்டே இருக்கும். புத்தபகவான் மேலும் விபரிக்கிறார். ‘‘இவ்வனைத்து துன்பங்களை அனுபவித்த பின்னரும் இந்த மானுடன் வேதனையால் கதறக்கதற நரகவாசிகள் மீண்டும் அவரை ஆறு பக்கங்களும் இரும்பினால் செய்யப்பட்ட மகா

நரகத்திற்குள் வீசிவிடுவார்கள்.

இவற்றை காணும்போது யாருக்குத்தான் இவ்வாறு நினைக்கத் தோன்றாது

பாருங்கள், புத்தபகவான் நரகத்தின் இயம அரசன் நினைக்கும் எண்ணங்களைக் கூட அறிந்து கொள்கிறார். புத்தபகவான் இவ்வாறு மொழிகிறார்.  ‘‘புண்ணியமிகு பிக்குகளே, இயம அரசனுக்கு, ‘‘பாவம், இந்த உயிர்கள்; பாவங்களை செய்து பல்வேறு விதமாக கர்மத்தின் படி துன்பங்கள் அனுபவிக்கின்றன. ஐயோ! என்னாலும் இந்த இயம அரசர் எனும் பதவியிலிருந்து நீங்கி மனித உலகில் பிறந்து சம்மா சம்புத்தபகவான் ஒருவருடைய தர்மத்தினை செவிமடுத்து உன்னதமான மோட்சத்தினை அடைய முடியுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று தோன்றுமாம்.

இவற்றை கூறி எவருக்கும் பயத்தினை உருவாக்க எவ்வித தேவையும் புத்தபகவானுக்கு இருக்கவில்லை.

புத்தபகவான் ஒரு போதனையிலே பின்வருமாறு அழகாக மொழிந்துள்ளார். இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் சத்தாழூ இல்லாதவர்கள் இவற்றை சந்தேகிக்கலாம்  என்றே. புத்தபகவான் போதிக்கிறார், ‘(தங் கோ பன அஹங் பிக்கவே) புண்ணியமிகு பிக்குகளே! நான்; இவ்வாறு கூறும் விடயங்கள்… (நாஞ்ஞஸ்ஸ சமணஸ்ஸ வா பிராஹ்மனஸ்ஸ வா சுத்வா வதாமி) நான் யாரிடமும் கேட்டு தெரிந்து கொண்டவை அல்ல. (அபி ச்ச யதேவ மே சாமஞ்ஞாதங்) நான் சுயமாக உய்த்தறிந்து கொண்ட விடயங்களேயாகும். (சாமங் திட்டங்) நான் கண்டவையே! (சாமங் விதிதங்) என்னால் உறுதி செய்யப்பட்டவையே. (தமேவாஹங் வதாமி) இவற்றையே நான் உங்களுக்கு கூறுகிறேன்…’ என்பதாக.

ஞானமுள்ளவர்களுக்கு மாத்திரமே  புரியும்.

பாருங்கள், இப்போதனைகளை வாசிக்கும் போது சோவான்ழூ நிலையை அடைவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதனை உணர்ந்து கொள்ளலாம். நடுநிலையிலிருந்து நீங்கள் உங்களை பற்றி நினைத்து பாருங்கள். இவ்வாறாக இவ்வனைத்தும் கர்மத்தின் படியே நடக்கும் என்றால் நாம் இதற்கு முன் நரகத்தில் பிறந்தவர்களா..? இல்லையா? ஆம்.  பிறந்தவர்களே. இங்கு கூறப்பட்ட வேதனைகளையும் அனுபவித்தவர்களே. ஆனால் எமக்கு இவை ஒன்றும் நினைவில் இல்லை. எப்படியாவது நாம் செய்த புண்ணியத்தினால் மனித உலகில் மனிதர்களாக பிறந்து விட்டோம்.  இவ்வனைத்து துன்பங்களிலிருந்தும் நீங்கி வந்து நாம் மீண்டும் மூடபார்வைகளில் அல்லவா மூழ்கி இருக்கிறோம்? பாருங்கள் புண்ணியவான்களே! இவ்வாறான துன்பசாகரத்தில் பயணிக்கும் எமக்கு மூடபார்வைகளினால் உள்ள பயன் என்ன? இயம அரசனிடம் செல்லுகையில், ஐயோ! இவர் அறியாமையால்;தானே பாவம் செய்தார். இவரை விட்டுவிடுவோம், என நினைப்பாரா? இல்லை.  நரகத்தில் பிறந்தவரது சடலத்தை, எரித்தார்களா? புதைத்தார்களா? இல்லை தூக்கி வீசினார்களா? என பார்ப்பாரா இல்லை. மாறாக நரகத்திற்கு சென்ற போது, பார்க்கும் ஒரே ஒரு விடயம் மனதினால் நினைத்தவை, உடம்பினால் செய்தவை, வார்த்தையினால் பேசியவை என்பன தவிர வேறொன்றுமில்லை.

எம் அனைவரினதும் நிம்மதி மோட்சம் ஒன்றே…

இப்படியாக எமது வாழ்வினை பார்க்கும்போது எமது வாழ்விற்கு தர்மம் ஒன்றுதான் ஒரே புகலிடம். அதனைதவிர வேறொன்றுமில்லை. ஆம்.. வேறெந்த பாதுகாப்புமில்லை. ஏனெனில் எமது வாழ்வு எவ்வாறு முடிவுறும் என்பதனை நாமறியோம். நாம் எங்கிருந்து வந்து மனித உலகில் பிறந்தோம்? என்பதனையும் அறியோம். இருப்பினும் இப்போது நாம் மனிதர்களாக பிறந்துள்ளோம். எமது மூதாதையர் எமக்கு மூடபார்வைகளை பழக்கிக் கொடுத்;திருந்தனர். நாமும் மூடர்களாக அவர்களை பின்பற்றியபடி அவற்றினை தலையில் தூக்கியபடி அவ்வாறே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் எமது அதிஷ்டவசத்தால் எமக்கு புத்தபகவான் ஒருவர் கிடைத்தார். அவரது உத்தம தர்மம் கிடைத்தது. அந்த தர்மம் எமக்கு கிடைத்திராவிடில் இன்னும் நாம் குருடர்கள் போலவே வாழ வேண்டியிருக்கும்.

நகத்தினால் எடுக்கப்பட்ட மண் போன்று குறைவான எண்ணிக்கையானோரே…

நாம் மரணித்து இன்னுமோர் இடத்தில் பிறக்கும் வரை நாம் அதனை அறியோம். புத்தபகவான் தன் திருக்கரத்தின் பெருவிரல் நகத்தின் மீது கொஞ்சம் மண்ணை எடுத்தவாறு இவ்வாறு மொழிந்தார். ‘‘‘‘நரகத்தில் பிறந்த ஒருவர் மீண்டும் மனித உலகில் பிறப்பதாயின் அது எனது கரத்தின் பெருவிரல் நகத்தின் மீதிருக்கும் சிறிதளவான  மண்ணைப் போன்று மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே”“ என்று. அதன் அர்த்தம் என்ன?  நரகத்தில் விழுந்த எவரும் மீண்டும் மனித உலகிற்கு வருவதில்லை என்பதாகும். இதனையிட்டு புத்தபகவான் இன்னுமொரு உவமையை மொழிந்துள்ளார். நீங்கள் சிலவேளை அந்த உவமையை கேட்டிருக்கலாம். அதுதான், ஒரு கண் தெரியாத கடலாமை ஒன்று ஏர் துவாரத்தினூடாக வானத்தினைப் பார்ப்பது போன்று மனித வாழ்வினை ஒருவர் பெற்றுக்கொள்வதாயின் அது மிக அரிதானதே என்பதாகும்.

இறக்கும் அனைவருமே மனித பிறவி கிட்டும் வரை அந்தரத்தில் சுற்றி திரிபவர்களா?

‘‘சம்யுக்த நிகாயம்”  எனும் புனித நூலில் ‘‘ஜிக்கல” எனும் சூத்திரத்தில் புத்தபகவான், ‘‘‘‘ஒரு மனிதன் நரகத்தில் பிறந்து மீண்டும் மனித பிறவியை எய்துவதை விட கடலாமை ஒன்று ஏர் துவாரத்தின் வழியே வானத்தை பார்ப்பது இலகுவானது’ என்று மொழிந்துள்ளார். எமது உறவினர்கள், நண்பர்கள் எத்னையோ பேர் மரணித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மீண்டும் மனித பிறவி கிட்டும் வரை அவகாசத்தில் சுற்றி திரிகிறார்கள், என்றே நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்பது அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். மனித வாழ்வில் அவரது இறுதி மூச்சு நிற்கும் போதே ஒருவர் ஒரு முட்டையினுள் சென்று பிறக்கிறார் அதற்கு ‘‘அண்டஜ” சூழலில் (முட்டையினுள் பிறக்கும் பிறவிகளை குறிப்பிடும் பாளி சொல்) பிறத்தல் எனக்கூறப்படும். அவ்வாறில்லாவிடில் ஒரு ஈரலிப்பான சூழலில் பிறப்பார். அதாவது மலக்கழிவு குழிகளில், ஏனைய உயிர்களின் வயிற்றுக்குடல்களில், பழுதடைந்த உணவுகளில் சென்று பிறப்பார். அவ்வாறு ஈரலிப்பான சூழலில் பிறப்பதனை

‘‘சங்சேதஜ பிறப்புகள்;” என புத்தபகவான் குறிப்பிட்டுள்ளார். சிலர் மனித உலகில் இறுதி மூச்சு நிற்கும் போதே நரகத்தில் பிறந்துவிடுவார்கள்;. சிலர் பிரேத உலகத்தில் பிறந்திருப்பார்கள். சிலர் தேவர்களாக பிறந்திருப்பார்கள். இதனை ‘‘ஓபபாதிக பிறப்புக்கள்” என புத்தபகவான் மொழிந்துள்ளார்.

ஆதி புலப்படாத நீண்ட சன்சாரத்தில் பயணிக்கும் பயணிகளே நாம்!

மனித உலகில் பிறக்கவிருக்கும் ஒருவர் வேண்டுமானால் சில குறுகிய காலம் அவகாசத்தில் இருக்கக்கூடும். ஆனால் உயிர்கள் ஒவ்வொரு பிறவிகளில் பயணிப்பதானது மனித வாழ்விலிருந்து நரகத்திற்கு, அதிலிருந்து மிருக உலகிற்கு, அங்கிருந்து பிரேத (பிசாசு) உலகிற்கு, அங்கிருந்து சிலநேரம்   மீண்டும் மிருகலோகத்தில் பிறக்க நேரிடும். இவ்வாறாக சில உயிர்கள் பல கோடி வருடங்கள்  நால்வகை நரகங்களிலே பிறந்து அரிதாகவே மனித உலகிலோ அல்லது தேவ உலகிலோ பிறக்க முடியும். இவ்வாறு நாம் சம்சாரத்தில் பயணிப்பதனை அர்த்தமுள்ளதென நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாம் இப்போதே மோட்சமடைய தேவையில்லை! நால்வகை நரகங்களுக்கே போக வேண்டும்.

இவை தோன்றுவது படிச்சசமுப்பாதத்திலாகும் (காரணகாரிய செயற்பாட்டினிலாகும்.) இந்த துக்கத்தினை ஒருவர் உய்த்தறிந்தால் அவர் படிச்சமுப்பாதத்தினை உய்த்தறிந்தவராவார். படிச்சமுப்பாதத்தினை உய்த்தறிந்தால் அவர் துக்கத்தினை உய்த்தறிந்தவராவார். அதனால் தான் புத்தபகவான், ‘‘தலை தீ பற்றி எரியும் போது அதனை அணைப்பதற்காக எடுக்கும் முயற்சியிலும் பார்க்க ஒருவர் நாற்பேருண்மைகளை உய்த்துணர முயற்சி எடுக்க வேண்டும்” என மொழிந்தார்.

நீங்கள் சிலவேளை கேட்டிருப்பீர்கள். சிலருக்கு, ‘‘தர்மத்தின் படி வாழுங்கள்” எனக்கூறும் போது அவர்கள் ‘‘ஐயோ எங்களுக்கு நேரமில்லையே! என்று கூறுவார்கள். எங்களுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இப்போதே முடியாது, எங்களுக்கு ஓய்வு நேரமே

இல்லை. பின்பு எவ்வாறுதான் இவற்றை செய்ய முடியும்?  எமக்கு இப்போதே மோட்சமடைய முடியாது. இன்னும் வேலை இருக்கிறது. என கூறுபவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாயின் புத்தபகவானும் ‘‘நேரம் கிடைக்கும் போது தர்மத்தினை நீங்கள் பழக்கப்படுத்துங்கள்” என கூறியிருக்கலாமே! அவ்வாறில்லாமல் தலை தீ பற்றி எரியும் போது அதனை அணைப்பதற்காக எடுக்கும் முயற்சியிலும் பார்க்க ஒருவர் நாற்பேருண்மைகளை உய்த்துணர முயற்சி எடுக்க வேண்டும், என கூறுவதற்கு காரணம் புத்தபகவான் இந்த சன்சார பயணத்தின் பயங்கரத்தினை கண்டதனாலேயே ஆகும்.

நால்வகை நரகங்களில் வீழ்வதற்கு சிறு பாவம் போதும்

நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொண்டிராத ஒருவருக்கு நரகத்தில் பிறப்பதற்கான சந்தர்ப்பமே அதிகம். அதனால்தான் நான் போதுஜ்ஜனரின் வாழ்வு நீர் குவளைக்கும் மோட்சத்தினை சாட்ஷாத் (உறுதி) செய்துள்ள ஒரு ஆரிய சீடனுடைய வாழ்வினை கங்கைக்கும் ஒப்பிட்டு புத்தபகவான் மொழிந்த உவமையை கூறினேன். கங்கையை போன்ற மனம் படைத்த ஒருவருக்கு தான் ஓரளவேனும் பாதுகாப்பு கிடைக்கின்றது.

விளக்கேற்றாவிட்டாலும் இரவிற்கு அஞ்சாதீர்கள்

ஒரு சில வேளைகளில் நாம் எமக்கு பாதுகாப்பிற்காக ஏற்படுத்திகொள்ளும் விடயங்களே எம்மை அச்சத்திற்கும் உள்ளாக்குகின்றன. என்னிடம் நேற்று ஒருவர்;, ‘‘சுவாமியே, நான் வருடக்கணக்காக ஒரு வகையான விளக்கு பூஜையை செய்கிறேன். நான் இந்த தர்மத்தினை பின்பற்றும் போது அது ஒரு மூடபார்வைகள் என்பதனை உணர்ந்து கொண்டேன். இப்போது நான் அதனைவிட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் பயமாக இருக்கிறது” எனக்கூறினார். பாருங்கள் , புண்ணியவான்களே! தனக்கு பாதுகாப்பிற்காக செய்த விடயமே தற்போது பயத்திற்கும் காரணமாகியுள்ளது. பார்த்தீர்களா? மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதால் இருக்கிற அபாயத்தினை.

பலனில்லாத மூட பார்வைகள்.

பாருங்கள், தனக்கு பாதுகாப்பிற்கு செய்து கொண்ட மூடபார்வைகள் தனக்கே எவ்வாறு பயத்தினை உருவாக்குகிறது, என்பதனை. இந்த மூடபார்வைகளினால் எத்தனை பேர் தர்மத்தினை உய்த்தறியும் வாய்ப்பினை இழந்திருப்பார்கள்?  இவற்றை செய்தபடி வாழ்ந்து இறுதியில் மிருகலோகத்திலோ அல்லது பிரேதலோகத்திலோ பிறக்க வேண்டியதுதான். பிரேதலோகத்தில் பிறந்தாலாவது ஏனையோரது  புண்ணியங்களையாவது ஏற்றுக்கொள்ளலாம். நரகத்தில் பிறந்தால் அதுவும் இல்லை.

அனைவராலும் புண்ணியத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒருநாள் ‘‘ஜானுஸ்ஸோனி” எனும் அந்தணன் புத்தபகவானிடம் ‘‘பாக்கியமுள்ள பகவானே! இறந்தவர்களுக்கு புண்ணியம் கிட்டுவதற்கு புண்ணியங்களை வழங்குவார்கள்.  இறந்த அனைவராலும் இவ்வாறு வழங்கப்படும் புண்ணியத்தினை பெற்றுகொள்ள முடியுமா?” என்று கேட்டார். அதற்கு புத்தபகவான் ‘‘இல்லை” என மொழிந்தார். அத்தோடு ‘‘இறந்தவர் நரகத்தில் பிறந்திருப்பாராயின் அவர் தீப்பந்துகளை  சாப்பிட்டு கொண்டிருக்க வேண்டியதுதான். அவரால் புண்ணியத்தினை பெற முடியாது. இறந்தவர் மிருகலோகத்தில் பிறந்திருப்பாராயின், அவர் பிறந்த இடத்திற்கு ஏற்றாற்போல் உணவினை உட்கொண்டிருப்பாரே தவிர புண்ணியத்தினை பெற முடியாது. அதேபோல் இறந்தவர் மனித உலகில் பிறந்திருப்பாராயின், அந்த உணவினை உட்கொண்டபடி இருப்பாரே தவிர, அந்த புண்ணியத்தினை பெற முடியாது.; இறந்தவர் தேவ உலகில் பிறந்திருப்பாராயின் திவ்விய உணவினை உட்கொண்டபடி திவ்விய சுகத்தில் திளைத்திருப்பாரே அன்றி, அந்த புண்ணியத்தினை பெறும் தேவை அவருக்கு இருக்காது. இறந்தவர் பிரேத உலகில் பிறந்தால் மாத்திரம் தான் புண்ணியத்தினை ஏற்றுக்கொள்ளலாம்”, என மொழிந்தருளினார்.

தனக்கு தானே துணை

இறந்த அனைவரும் பிரேத உலகில் பிறப்பார்கள் என நினைக்கிறீர்களா?

ஒரு போதும் இல்லை. ஏனையோரை விடுத்து நாம் எம்மை பற்றி நினைத்து பார்ப்போம். எம்மோடு வாழும் அனைவரையும் எம்மால் சுவர்க்கத்தில் பிறக்கச்செய்யவதற்கு முடியாது. ஆனால் நாம் எம்மை பற்றி நினைத்து எம்மை பாதுகாப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். இப்படித்தான் தன்னை பாதுகாக்க வேண்டும். மும்மணிகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும். அப்படிப்பட்டவர்களது பாதுகாப்பினை புத்தபகவான் பின்வறுமாறு உறுதிபடுத்தியுள்ளார் ‘‘யே கேசி புத்தங் சரணங் கதாஸே ந தே கமிஸ்ஸன்தி அபாயங்” எவராயினும் ஒருவர் புத்தபகவானை முழு மனதோடு சரணடைவாராயின் ஸ்ரீ சத்தர்மத்தினை சரணடைவாராயின் ஆரிய சங்கையரை சரணடைவாராயின் அவர் நரகத்தில் பிறக்கமாட்டார் என்று. அத்தோடு ‘‘பஹாய மானுஸங் தேஹங்” மனித தேகத்தினை நீங்கியதும் ‘‘தேவகாயா பரிபூரெஸ்ஸந்தி” தேவ உலகில் பிறப்பார்) என்று.

மீண்டும் மனிதனாக பிறந்தால்..

நாம் நினைப்பதனை போல் தேவ உலகத்தில் பிறப்பது இலகுவானதல்ல. மனித உலகில் பிறப்பதுவும் இலகுவானதல்ல. நாம் செய்த ஏதேனும் புண்ணியத்தின் விளைவாக நாம் மீண்டும் மனிதராக பிறக்கும் போது மூடபார்வைகள்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தோமென்றால் அது எமது அழிவேயாகும்.

இருளை அகற்றும் ஒளி

ஒளியையும் இருளையும் ஒன்றாக வைக்க முடியுமா? முடியாது. ஒளி இருக்கும்போது இருள் அகன்று விடும். இருள் சூழும் போது ஒளி அகன்றுவிடுகிறது. அதேபோல் மூடநம்பிக்கைகளை  கொண்டு புத்தபகவானை சரணடைய முடியாது. சம்மா திட்டி (தெளிவான பார்வை) என்றால் அது மட்டும்தான். அதனில் மூடபார்வைகளுக்கு இடமில்லை. மூடபார்வைகளையும் சம்மா திட்டியையும் கலந்து கொண்டு இவற்றினை செய்ய முடியாது.

ஐயோ! எம்மை விட்டு போகாதீர்கள்.

ஒருவர் இறந்துவிட்டார். அவரை சுற்றி அவரது உறவினர்கள் ஒப்பாரி வைத்தபடி இருக்கின்றனர். அப்போது நினைவில் புத்தபகவானே வரவேண்டும். அவரது தர்மமே நினைவில் வரவேண்டும். ‘‘நான் இப்போது பிரியமானவர்களின் பிரிவின் துயரத்தினை அல்லவா அனுபவிக்கிறேன்.. இன்னும் எத்தனை பிறப்புக்களுக்கு நான் இதனை அனுபவிக்க வேண்டும்..? வெகு சீக்கிரமாகவே இந்த சன்சாரத்திலிருந்து மீள வேண்டும்” எனும் எண்ணம் நினைவில் வர வேண்டும்.

நீங்கள் மரண வீடுகளில் ‘‘பிரியமானவர்களிடமிருந்து பிரிவது துன்பத்தினையே தருகிறது. அதனைத்தானே புத்தபகவான் மொழிந்தார்..அது உண்மையே..அந்த உண்மையை நான் உணருகிறேன்..” எனக்கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ‘‘ஐயோ எங்களை விட்டு போகாதீர்கள்! இனிமேல் எப்போது வருவீர்கள்? சொல்லுங்கள்!” என பிணத்தை கட்டிபிடித்து அழுவதையே நாம் பார்த்திருக்கிறோம். அதில் உறைந்திருப்பது அஞ்ஞானமே. யதார்த்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். தவறுதலாக சரி திடீரென்று அந்த பிணம் எழுந்து ‘‘சரி சரி அழுக வேண்டாம் நான் வந்து விட்டேன்தானே!” எனக்கூறினால் எப்படியிருக்கும்..? கும்பிட்டுக்கொண்டு திசை தெரியாமல் ஓடிவிடுவார்கள் ‘‘ஐயோ! நாம் சும்மா தான் சொல்லி பார்த்தோம்” என கூறுவார்களாயிருக்கும். ஆம்… அப்பேர்பட்டதொரு அழுகையே மக்களிடம் இருக்கிறது.

ஞாபகப்படுத்தி அழ வேண்டிய விடயங்கள் இதோ..!

தமது வாழ்வினை உய்த்துணர்வோடும் ஞானத்தோடும் பார்க்கும் ஒருவருக்கு அழ வேண்டுமானால் அழ வேண்டிய விடயங்கள் இவையே! ஆம் எமது மனதில் தோன்றும் பாவ சிந்தனைகளை நினைத்தே அழ வேண்டும். பஞ்ச நீவரணங்களை (மன ஒருமைபாட்டினை  தடுக்கும் ஐந்து விடயங்கள்) நினைத்தே அழ வேண்டும். நாற்பேருண்மைகளை

உய்த்துணர்ந்து கொள்ள முடியாததை நினைத்தே அழ வேண்டும். எம் வாழ்வில் உள்ள பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு இருக்கும் ஒரே வழி நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொள்வதாகும். அதுவே எமக்குள்ள ஒரே பாதுகாப்பு, அரவணைப்பு மற்றும் புகலிடமுமாகும்.

இதனை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் இந்த கௌதம புத்தபகவானது புத்த சாசனத்திலேயே உன்னதமான சத்தியத்தை உய்த்துணர்ந்து கொள்வோம், என திடமான இலட்சியத்தினை ஏற்படுத்தி கொள்வோம்.

சாது! சாது!! சாது!!!

Naragam – இதோ நீங்கள் தேடும் தேவதூதன்! – Tamil Buddhist