உண்மையான மனைவி யார்..?
மனிதர்களாக வாழும் எல்லோருக்கும் இவ்வாழ்வினை உய்த்துணரும் பாக்கியம் கிடைப்பதில்லை. புத்தபகவானின் தர்மத்தினை செவிமடுத்த, சிந்திக்கும் திறனுடைய ஒருவருக்கே இந்த பாக்கியம் கிடைக்கிறது. புத்தபகவானின் தர்மம் கிடைக்காவிடின் சிந்திக்கும் ஆற்றல் இருந்தாலும் அதிலிருந்து தம் வாழ்விற்கு பிரயோசனமானதை தேர்ந்தெடுக்க முடியாது. சிந்திக்கும் ஆற்றல் இருக்கும் ஒருவரிடம் புத்தபகவானின் தர்மம் கிடைப்பது என்பது உலகின் மிக அரியதொரு விடயமாகும். புத்தபகவானின் தர்மத்தை செவிமடுக்க கிடைப்பது நல்வழிகாட்டும் சத்புருஷர்கள் மூலமே. நல்வழிகாட்டும் சத்புருடர்கள் இல்லாவிடில் இந்த தர்மத்தை எம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த உன்னதமான தர்மம் எமக்கு கிடைக்காவிடில் பிறப்பு இறப்புக்களுக்கு அடிமையாகி சம்சார பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கியமே கிட்டும்.
கைவிட்டுப்போன அதிஷ்டம்.
தர்மத்தை உய்த்துணர்ந்துக் கொள்ள கிடைத்திருக்கும் இந்த அரிதான சந்தர்ப்;பத்தை நாம் தவறவிட்டால் நாம் எவ் உலகில் பிறந்து எவ்வகையான துன்பத்தை அனுபவிப்போம் என யாராலும் சொல்ல முடியாது. புண்ணியவான்களே! சிந்திக்கும் ஆற்றல் எம் வாழ்க்கையில் எப்போதும்;, நிலைத்திருக்கும் ஒன்றல்ல.
ஒரு நாள் வயது முதிர்ந்த ஒரு தம்பதியினர் ஒரு சிரட்டையை கையில் ஏந்தியவாறு யாசகத்தில் செல்கின்றனர். புத்தபகவான் இதனை கண்ணுற்று புன்முறுவல் பூத்தார். அப்போது ஆனந்த தேரர் ‘புத்தபகவானே, அந்த யாசகர்களை பார்த்து புன்முறுவல் பூத்ததன் காரணம் என்ன?’ என்று வினவினார். புத்தபகவான்; மொழிந்தார், ‘புண்ணியமிகு ஆனந்த, இவ் இருவரும்தான் இந்த நகரில் வாழ்ந்த பெரும் சீமானும் சீமாட்டியும், இவ்விருவரும் இளமை பருவத்திலே புத்த சாசனத்தில் நுழைந்திருப்பின் அரஹத்ழூ நிலையை அடைந்திருப்பர். அவ்வாறில்லாது இடைப்பட்ட பருவத்தில் இந்த புத்த சாசனத்தில் சரணடைந்திருப்பின் ஏனைய வீடுபேற்றுழூழூ நிலைகளையோ உறுதி செய்திருப்பார்கள். இப்போது அவ்வனைத்தையும் இழந்து விட்டனர்.’ என்று.
அனைவருக்கும் பாதுகாப்பு தர்மம் மாத்திரமே!
தர்மத்தினை உய்த்துணர்ந்துக் கொள்ளும் திறனுடையவராக ஒருவர் மனித குலத்திலே பிறக்கிறார். ஆனாலும் தனக்குள் அவ்வாறு ஒரு திறமை உண்டு என அறிந்து கொள்ளாவிட்டால், அதேபோல் தர்மத்தினை நோக்கி வராவிட்டால் பலனில்லாத விடயங்களுள் உழன்று அந்த பெரும் வாய்ப்பினை இழந்து விடுகிறார். ஷக்ஷண சம்பத்தியம|; அற்று போதல் எனக்கூறுவது இதற்கு தான். எனவேதான் இந்த உன்னதமான வாய்ப்பினை இழந்து விடாமல் தர்மத்தினை நோக்கியே செல்ல வேண்டும். இந்த தர்மத்தினை உய்த்துணர வேண்டும் என்ற எண்ணம் எம்முள் இருக்க வேண்டும். இந்த எண்ணம் எம்முள் இருந்தால் புத்த சாசனமும் மனித வாழ்வும் கிடைத்த இந்த அரிதான சந்தர்ப்பத்தின் மூலம் சிறந்த பயனை பெறலாம்.
மனைவிமாரது விபரங்கள்
இன்று நாம் பார்க்கப்போவது புத்தபகவானால் போதிக்கப்பட்ட மிகவும் உன்னதமான போதனை ஒன்றையே. இந்த போதனை ஏனைய போதனைகளை விட சற்று வித்தியாசமானதாகும். இந்த போதனையில் சதுர் ஆர்ய சத்தியத்தை (நாற்பேருண்மைகளை)ழூ முதன்மை படுத்தி கூறாமையே அதற்கு காரணமாகும். ஆனால் அனைத்து புத்த போதனைகளிலும் இருக்கும் பொதுவான இலட்சணங்கள் இந்த போதனையிலும் உள்ளடங்கி இருக்கின்றன. அவைதான் இவ்வாழ்வை சுமுகமாக்குதல் மற்றும் மறுவாழ்வில் சுவர்க்கத்தை அடைய நெறிப்படுத்தல் என்பனவாகும். இந்த போதனையானது எம் வாழ்விற்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். இந்த போதனையின் பெயர் ஷசப்த பார்யா சூத்திரம்| அதாவது ஏழு வகையான மனைவியரை பற்றி கூறப்பட்ட போதனையாகும். இந்த போதனை அங்குத்தர நிக்காயம் எனும் புனித நூலின் ஏழாவது பகுதியில் அடங்கியுள்ளது.
சண்டை பிடிக்கும் மருமகள்.
அந்த நாட்களில் சாவத்திய நகரின் ஜேத்தவனராமத்தில் புத்தபகவான் வசித்திருந்தார். அன்று புத்தபகவான் தனது உணவு பாத்திரத்தை கையில் ஏந்தியபடி அனேபிண்டு எனும் செல்வந்தரின் வீட்டிற்கு வருகை தந்து பூஜிக்கப்பட்ட ஆசனத்திலே அமர்ந்திருந்தார்.
அச்சமயம் வீட்டின் பிற்புறத்திலிருந்து பெரும் சண்டை சச்சரவுகளின் சப்தம் கேட்கிறது. அப்போது புத்தபகவான் அனேபிண்டு சீமானிடம், ‘புண்ணியமிகு இல்லத்தலைவரே, வீட்டின் பிற்புறத்தே நடக்கும் சச்சரவு என்ன? மீன்களுக்காக சண்டையிடும் காக்கைகளை போல் அங்கே கூச்சலிடுவது யார்?’ என வினவினார். அதற்கு அனேபிண்டு சீமான் ‘பாக்கியமுள்ள பகவானே! அங்கே சண்டையிடுவது எனது மருமகள். பணக்கார குடும்பத்திலிருந்து நாம் ஒரு மருமகளை கொண்டு வந்தோம். அவள் மாமனாரை மதிப்பதுவுமில்லை, மாமியாரை மதிப்பதுவுமில்லை, கணவனுக்கோ, விருந்தினருக்கோ பணிவிடை செய்வதுமில்லை. புத்தபகவானே! தங்களையும் அவள் மதிப்பதில்லை. அவளின் பெயர்தான் சுஜாதா’ எனக்கூறலானார். அந்த சமயம் புத்தபகவான் சுஜாதாவை அழைக்க அவளும் வந்து புத்தபகவானை வணங்கி ஒரு புறத்தில் அமர்ந்தாள்.
எழுவகை மனைவியர்
புத்தபகவான் சுஜாதவிடம் கூறுகிறார். ‘புண்ணியமிகு சுஜாதா! இந்த உலகில் ஏழு வகையான மனைவியர் உள்ளனர். அவர்கள் தான்
- (வதக்க பார்யா) கொடூர மனைவி
- (சோரி பார்யா) திருட்டு குணமுள்ள மனைவி
- (ஆர்யா பார்யா) எஜமானி போன்ற மனைவி
- (மாத்ரூ பார்யா) தாயை போன்ற மனைவி
- (பகினி பார்யா) சகோதரியை போன்ற மனைவி
- (சக்கீ பார்யா) தோழியை போன்ற மனைவி
- (தாசீ பார்யா) பணிப்பெண்ணை போன்ற மனைவி
புத்தபகவான் சுஜாதாவிடம், புண்ணியமிகு சுஜாதா இந்த மனைவிமார்களுள் நீ எந்த வகையில் அடங்குகிறாய்?’ என வினவினார். அதற்கு சுஜாதா ‘பாக்கியமுள்ள பகவானே! தாங்கள் சுருக்கமாக உரைத்த விடயத்தை பற்றி நான் விரிவாக எதனையும் அறியேன். எனவே சுருங்க கூறிய இவ்விடயத்தை சற்று விரிவாக எனக்கு உபதேசிப்பீராக!’ எனக்கூறினாள். அப்போது தான் புத்தபகவான் இந்த போதனையை மொழிகிறார்.
ஏன் மனைவிக்கு மாத்திரமா, எமக்கு இல்லையா?
பாருங்கள், இந்த போதனையை புத்தபகவான் சுஜாதாவின் சச்சரவை முன்னிட்டே போதித்தார். இந்த போதனையை பற்றி நான் போதனைகள் நடாத்திய பின் சிலர் என்னிடம் வந்து ‘ஏன் மனைவியரை பற்றி மாத்திரம் உபதேசித்தீர்கள்? கணவன்மார்கள் தொடர்பில் அவ்வாறான உபதேசங்கள் இல்லையா?’ என கேட்பார்கள். புத்தபகவான் பிரசன்னமான சந்தர்ப்பங்களில் கணவன்மார்கள் சச்சரவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் நன்றாக கேட்க கிடைத்திருக்கும். கணவர்மாரது துரதிஷ்;டம் தான் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால் அழிவு தான்
புத்தபகவான், ‘அவ்வாறாயின் சுஜாதா நன்றாக கேட்டுக்கொள்வாயாக!’ என போதனை செய்யத்துவங்கினார்.
கொடூர மனைவி
முதலாவது மனைவிதான் கொடூர மனைவி. புத்தபகவான் அதனை பின்வறுமாறு விபரிக்கிறார். (பதுட்டசித்தா) இந்த கொடூர மனைவி, எப்போதும் தன் கணவன் பற்றிய கொடூர சிந்தனையுடன் இருப்பாள். (அஹிதானுகம்பினி) கணவனுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் சிறிதளவேனும் இல்லை. ஏதேனும் தீங்கு செய்வதே ஒரே நோக்கமாக இருக்கும்.(அஞ்ஞேசு ரத்தா) வேறு ஆண்களை பற்றி சதா எண்ணிக்கொண்டிருப்பாள். (அதிமஞ்ஞதே பதிங்) தனது கணவனை மீறி வேறு ஆண்களோடு உறவு வைத்து கொள்வாள். (தனேன கீதஸ்ஸ வதாய உஸ்சுகா) தனது கணவன் உழைக்கும் பணத்தை வீணாக்கியபடி, கணவனை இம்சித்து குறை கூறுவாள். இவளை தான் (வதக பார்யா) கொடூர மனைவி என புத்தபகவான் மொழிந்தார்.
பார்வைக்கு இவர்கள் நல்லவர்களாக தென்பட்டாலும், இவ்வாறானவர்கள் உலகத்தில் நிறையவே இருக்கிறார்கள். மாங்கன்றுகள் சிலவற்றை வரிசையாக ஒன்றாக நாம் நட்டுவிட்டால் சிறுவயதில் இம்மரங்களின் மாற்றங்கள் தெரியாது. ஒரே விதமாக இம்மாமரங்கள் பலன் தரும் என்றே நினைப்போம். ஆயினும் சிலகாலம் சென்று அவை வளர்ந்து பலன்தர ஆரம்பிக்கும் போதுதான், இது பெட்டிமாங்காய், இது கருத்த கொழும்பான், இது கிளிமூக்கு என்று வேறுபாடுகளை அறிய முடிகிறது. அது போலத்தான் ஆரம்பத்தில் எவரையும் சரியாக அறிய முடிவதில்லை. திருமணம் ஆகி சிலகாலம் கடந்த பின்பு தான் இந்த இலட்சணங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இவ்வாறானவள் தனது கணவனை இம்சித்து, வஞ்சித்து இறுதியில் துன்பமிகுந்த நரகத்திலே பிறக்கிறாள்.
காதலிக்கும் போது எருமை, கழுதை, மாடு என்று சொல்லவில்லை.
யாருக்கேனும் இவ்வாறான கொடூர மனைவி கிடைத்தால் அந்த கணவன் இது என் தலைவிதிதான் என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தில் எவ்வித சந்தோஷமுமின்றி மரணிக்கும் வரை துன்பத்துடனேயே தான் வாழ வேண்டும். இதனை சொல்லும் போது எனக்கு ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு நாள் என்னிடம் ஒருவர் வந்து ‘சுவாமியே! எனக்கு இந்த குடும்ப வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஒரு மிருகமாக கருதியே என் மனைவி என்னை ஏசுகிறாள்.’ என்று கூறினார். நான் அவரிடம் உங்களை எவ்வாறு அழைக்கிறாள்? என்று கேட்டேன். ‘இங்கே வா மாடு, எருமை, கழுதை’ என்று பல மிருகங்களின் பெயரை சொல்லிக்கொண்டு போனார். இறுதியில் நான் அவரிடம். ‘ஐயா இதுவென்றால் உங்களுடைய தலைவிதிதான். பகைமையை ஏற்படுத்திக்கொள்ளாமல் மைத்ரீ குணத்தோடு (பரந்தளவிலாக அன்பினை பரப்பிக்கொண்டு) இருங்கள்’ என கூறினேன்.
மகளே! இங்கே பார் நான் எப்படி வாழ்கிறேன் என்று.
தன் கணவனை அடக்கி மிதித்து கொண்டிருக்க வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நடக்கிறது. இவ்வாறான கொடூர மனைவிகளுக்கு பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அந்த குழந்தைகளுக்கும் அழிவுதான். ஏனெனில் தன் பிள்ளைகளிடம் ‘இங்கே பார் மகளே! நான் எப்படி உன் அப்பாவை அடக்கி வைத்துள்ளேன் என்று. நீயும் உன் புருஷனை அடக்கி வைத்திரு. அவனுக்கு தேவையான முறையில் ஆடாதே!’ என அறிவுரை கூறுவாள். பின்னர் அந்த பிள்ளைகளும் ஓர் நாள் திருமணம் முடித்து குடும்ப வாழ்வை தொடங்கும் போது தனது தாயை போலவே வாழ்வதற்கு முற்படுவர். அம்மா அப்படி செய்தாலும் நான் அப்படிச்செய்ய மாட்டேன் என்று நினைக்கும் புண்ணியமுள்ள ஒரு பெண்ணாலேயே இதிலிருந்து மீள முடியும்.
பாருங்கள், இவ்வாறான கொடிய மனைவியாவதால் எத்தனை பேருக்கு துன்பம் என்று. எவரேனும் ஒருவர் கொடூர மனைவியாக வாழ்ந்து அதனிலிருந்து மீளாமலே மரணிப்பாராயின் அவர் மரணித்த பின் துன்பம் மிகுந்த நரகத்திலே பிறவியெடுப்பார் என புத்தபகவான் மொழிந்துள்ளார். கொடூர மனைவியாக வாழ்பவள் இவ்வாழ்வினையும் மறுவாழ்வினையும் சுமுகமாக்கி கொள்ள தவறிவிடுகிறாள். இவ்வாறு வாழும் ஒரு பெண்ணிடம் தர்மம் நிலைத்திருக்காது.
வீட்டினுள் வாழும் திருடிகள்
அடுத்த மனைவிதான் ‘சோரி பார்யாவ’ அதாவது திருட்டு குணம் கொண்ட மனைவி. புத்தபகவான் இவ்வாறு விபரிக்கிறார். (யங் இத்தியா விந்ததி சாமிகோ தனங்) திருட்டு குணம் கொண்ட மனைவி தன் கணவன் உழைக்கும் பணத்தினை திருடுவாள். தனது கணவன் மிகவும் முயற்சியோடு தொழிற்கலைகளை கற்று கஷ்டப்பட்டு உழைத்து கொண்டு வரும் பணம் இவளுக்கு போதாது. இவள் கணவனின் பணத்தின் ஒரு பகுதியை திருடி அதனை தனக்கு தேவையான முறைகளில் செலவு செய்வாள். அதுமட்டுமல்லாது இறுதியில் தன் கணவனையே ‘நீ உழைப்பது திரும்ப கூட போதாது’ என சண்டை போடுவாள். தனது கணவனை இம்சிப்பாள். (அப்பம்பி தஸ்மா அபஹாது மிச்சதி) எவ்வளவுதான் பணமிருந்தாலும் அதனை சிக்கனமின்றி ஊதாரித்தனமாக செலவு செய்வாள். அதேபோல் பணத்தினை திருடி அனாவசியமான முறையில் செலவு செய்து அது தொடர்பாக கணவன் கேட்கும் போது இல்லாத பொல்லாத விடயங்களை கூறி கணவனோடு சண்டை போடுவாள்.
சற்று சிந்தித்து பாருங்கள், கணவன் உழைக்கும் பணத்தை மனைவியே திருடுவது என்றால் அது ஒரு மிகம்பெரும் பாவமாகும். அதுமட்டுமல்ல தாய் செய்யும் இந்த செயலை காணும் பிள்ளைகளுக்கும் இது பழகிவிடும். அந்த பிள்ளைகள் நிதமும் தன் தாய் திருடுவதையும் ஊதாரித்தனமாக செலவு செய்வதையுமே காண்பதால் பிள்ளைகளும் அதனையே பின்பற்றுவர்.
தர்மத்தை பின்பற்றுவதே பாதுகாப்பு.
அதேபோல இந்த திருட்டுக்களை பார்க்கும் பிள்ளைகள் தனது தாயிடம் திருடுவதற்கு பழகிவிடுவர். அப்படியில்லையேல் தாயை மிரட்டி பணத்தை பறிக்கவும் முற்படுவார்கள். எமக்கு தெரியும் அப்படிப்பட்ட பல பிள்ளைகள் இருக்கின்றனர். தனது தாயை மிரட்டி பணம் கேட்டு அவள் கொடுக்காத சந்தர்ப்பங்களில் ‘அம்மா நீங்கள் அப்பாவிடமிருந்து இவ்வளவு பணம் திருடியிருக்கீங்க. நீங்க இப்ப காசு கொடுக்கவில்லை என்றால் அதனை அப்பாவிடம் சொல்லுவேன்’ என மிரட்டும் போது அந்த தாய்; பயந்து உடனே பணத்தை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பிள்ளைகளும் வீணாகிவிடுகின்றனர். இதனால் முழுக்குடும்பமே அழிந்து விடுகின்றது. யாரேனும் ஒருவருக்கு இம்மாதிரியான ஒரு மனைவி கிடைத்தால் அது அவருடைய துரதிஷ்டம்தான். திருட்டு குணமுள்ள மனைவி தர்மத்தினை பின்பற்றுவதனாலேயே அதனிலிருந்து மீள முடியும்.
தர்மத்தின் முன்னால் ஜொலிப்பது குணநலன்கள் மாத்திரமே!
எவ்வளவு கவனமாக ஜாதகப்பொருத்தம் பார்த்து, திருமண மேடை அமைத்து சுபவேளை பார்த்து தாலியை கட்டினாலும் மனைவியானவள் கொடியவளாயின் அந்த திருமணம் சிறப்பாகாது. அப்படியென்றால் எமக்கு தெளிவாக விளங்கும் ஒன்றுதான் திருமண மேடையிலோ அல்லது ஜாதகத்திலோ பிரச்சினை இல்லை. இந்த மனிதர்களின் வாழ்வில் தர்மம் இல்லாமையே பிரச்சினையாகும். பாருங்கள், புத்தபகவானின் தர்மத்தின் முன்னே ஏனையவை எவ்வித பயனுமற்ற போலியானவை ஆகிவிடுகின்றன அல்லவா? புத்தபகவானது தர்மத்தின் முன் பிரகாசிப்பது குணநலன்கள் மாத்திரமே. புத்தபகவான் ‘(சோரி) திருட்டு குணம் கொண்ட மனைவியானவள் திருந்தி தர்மத்தின் படி தம் வாழ்வினை நடத்தா விட்டால் மரணத்தின் பின் நரகத்திலே பிறப்பாள்’ என மொழிந்தார்.
எஜமானி அம்மாவும் நரகத்திற்குதான்
புத்தபகவான் மொழிந்த அடுத்த மனைவிதான் ‘ஆர்யா பாரி’ அதாவது ‘எஜமானி போன்ற மனைவி’. அவளை புத்தபகவான் இவ்வாறு விபரிக்கிறார். அவள் (அகம்மகாமா) வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள். தனது கணவனுக்கு உதவமாட்டாள். பிள்ளைகளை கவனிக்கவும் மாட்டாள். எவ்வித வேலையும் செய்யாமல் அந்த வேலைகளை ஒவ்வொருவர் மூலம் செய்வித்து கொண்டு ஓய்வோடு இருப்பாள். (அலசா) இவள் மிகுந்த சோம்பல் குணம் கொண்டவள். (மஹக்கஸா) எந்நேரமும் எதையாவது வயிறு நிறைய சாப்பிட்டுக்கொண்டே இருப்பாள்.
அதுமட்டுமல்லாது புத்தபகவான் மேலும் இவ்வாறு விபரிக்கிறார். இந்த எஜமானி போன்ற மனைவி (பருஸா) மிகவும் கொடூரமானவள். தனது கணவனை தகாத கொடிய வார்த்தைகளால்; திட்டுவாள். வீட்டிற்கு உறவினரோ நண்பர்களோ வந்தால் முகத்திற்கே ஏசிவிடுவாள். எவருடைய நன்மையையும் கூற மாட்டாள், நினைக்கவும் மாட்டாள். (சண்டீ ச துருத்தவாதினீ) எந்நேரமும் கொடிய வார்த்தைகளை உபயோகித்து கொண்டு அகந்தையினால் ஏனையோரை அடக்கிக்கொண்டிருப்பாள். (உட்டானகானங் அபிபுய்ஹ வத்ததி) கணவன் உழைத்து கொண்டுவரும் அனைத்தினையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பாள். தனது மூர்க்கத்தனத்தினாலும் அகந்தையினாலும் ஏனையோரை படாதபாடு படுத்துவாள். எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பாளே தவிர அவை தொடர்பாக தேடி பார்ப்பது இல்லை. பல்வேறு வகையான உணவு வகைகளை சாப்பிட்டு கொண்டு, ஏனையோரை தூ-ற்றிக்கொண்டு சோம்பலுடன் காலம் தள்ளுவாள். இந்த வகையான மனைவியர் ஏராளம் பேர் எம்மை சுற்றியே உள்ளனர். இந்த மனைவி இறந்த பின்னும் நரகத்திலே பிறவி எடுக்க நேரிடும் என புத்தபகவான் மொழிந்தார். இதுவரை நாம் மூன்று வகையான மனைவியரை பார்த்தோம். இந்த மூன்று வகையான மனைவியரது வாழ்வும் தோல்வியிலே முடியும். நரகத்திலே மறுபிறவி கிடைக்கும். இவர்கள் மரணத்தின் பின் நரகத்தில் பிறவாதிருக்க வேண்டுமானால் அவர்கள் தர்மத்தின் வழி தமது வாழ்வினை நடத்த வேண்டும்.
மகளிர் பத்திரிக்கைகளில் வெளியிடப்படாதவை.
எமது நாட்டில் பெண்மணிகள் நலனுக்காக தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பு சேவைகளிலும் எத்தனை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவை எவற்றிலாவது நாம் இங்கு குறிப்பிடப்படும் மனைவியர் தொடர்பாக பேசப்பட்டுள்ளதா? இல்லை. அதேபோல் பெண்களுக்கான எத்தனையோ பத்திரிக்கைகள் எம் நாட்டில் உள்ளன. இந்த பத்திரிக்கை ஒன்றிலாவது இத்தகைய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை. இவற்றில் பிரசுரிக்கப்படுபவை பயனற்ற வெகுளித்தனமான விடயங்களே. இந்த பத்திரிக்கைகளை வாசிப்பதால் வாழ்வு தொடர்பான எவ்வித தெளிவையும் பெற முடியாது.
நான் நல்ல மனைவியாவேன்
புத்தபகவானது தர்மம் தொடர்பாக அறிந்திராத காரணத்தினால் கொடூர மனைவியான ஒரு பெண்ணுக்கு இந்த தர்மத்தினை கேட்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது என நினைப்போம். அவள் அதன் பின்னர் ‘நான் எவ்வாறாவது நல்ல மனைவியாக மாற வேண்டும்’ என இலக்கொன்றை தன் மனதில் ஏற்படுத்தி கொள்கிறாள். இவ்வாறு நினைத்து அதன்படி நல்வாழ்வு வாழும் அந்தப்பெண் சுவர்க்கத்திலே பிறவியெடுப்பாள். அதேபோல் இன்னொரு பெண் இருக்கிறாள். அவளும் புத்தபகவானது தர்மம் தொடர்பாக அறிந்திராத காரணத்தினால் திருட்டு குணம் படைத்த மனைவியானாள். அவளுக்கும் இந்த தர்மத்தினை கேட்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவள் அதன் பின்னர் ‘நான் எவ்வாறாவது நல்ல மனைவியாக மாற வேண்டும்’ என இலக்கொன்றை தன் மனதில் ஏற்படுத்தி கொள்கிறாள். இவ்வாறு நினைத்து அதன்படி நல்வாழ்வு வாழும் அந்தப்பெண் சுவர்க்கத்திலே பிறவியெடுப்பாள்.
இன்னுமொரு பெண் இருக்கிறாள். அவளும் புத்தபகவானது தர்மம் தொடர்பாக அறிந்திராத காரணத்தினால் எஜமானி மனைவியானாள். அவளுக்கும் இந்த தர்மத்தினை கேட்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவள் அதன் பின்னர் ‘நான் எவ்வாறாவது நல்ல மனைவியாக மாற வேண்டும்’ என இலக்கொன்றை தன் மனதில் ஏற்படுத்தி கொள்கிறாள். இவ்வாறு நினைத்து அதன்படி நல்வாழ்வு வாழும் அந்தப்பெண் சுவர்க்கத்திலே பிறவியெடுப்பாள். அவ்வாறில்லாது தொடர்ந்தும் அந்த பாவமிகுந்த வாழ்வினையே வாழ்ந்து வந்தால் அவர்கள் நிச்சயமாக மரணத்தின் பின் நரகத்திலேயே பிறக்க நேரிடும் என புத்தபகவான் மொழிந்தார்.