சச்ச விபங்க சூத்திரம்
(ஆரிய சத்தியங்களை விரிவாக விபரித்துக் கூறும் போதனை)

என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயம் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசியின் இசிபத்தனம் எனும் மான்களின் அபயபூமியில் தரித்திருந்தார். அப்போது புத்த பகவான் ‘புண்ணியமிகு பிக்குகளே, என சங்கையரை விழித்தார். அந்த பிக்குமாரும் ‘பாக்கியமுள்ள பகவானே!’ என மறுமொழி தெரிவித்தனர். பகவான் பின்வருமாறு மொழிந்தார்.

‘புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் சம்மா சம்புத்த நிலையை அடைந்த ததாகதரால், வாரணாசியின் இசிபத்தனம் எனும் மான்களின் அபயபூமியில் அதியுன்னதமான தர்ம சக்கரம் சுழற்றப்பட்டது. உலகின் எவ்விதமான சிரமணருக்கோ, அந்தணருக்கோ, தேவருக்கோ, மாரனுக்கோ பிரம்மனுக்கோ அல்லது வேறு யாராலுமோ அந்த தர்ம சக்கரத்தினை மாற்ற முடியாது. (இங்கு தர்ம சக்கரம் எனப்படுவது நாற்பேருண்மைகளாகும்) அதாவது இந்த நால்வகை பேருண்மைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

அவை எவ்வகையான நாற்பேருண்மைகள்?

துக்கம் எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும், மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.
துக்க அழிவிற்கான மார்க்கம் எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் சம்மா சம்புத்த ததாகதரால் வாரணாசியின் இசிபத்தனம் எனும் மான்களின் அபயபூமியில் அதியுன்னதமான தர்ம சக்கரம் சுழற்றப்பட்டது. உலகின் எவ்வித சிரமணராலோ, பிராம்மணராலோ, தேவராலோ, மாரனாலோ அல்லது, உலகின் எவராலுமோ அதனை மாற்ற முடியாது.
அதாவது இந்த நால்வகை பேருண்மைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.
புண்ணியமிகு பிக்குகளே, சாரிபுத்தர் மற்றும் மொக்கல்லான என்போருடன் பழக வேண்டும். அவர்கள் ஞானிகளாவர். அவர்கள் தம்மோடு வசிக்கும் பிக்குமாரை தர்மத்தில் ஈடுபடுவதற்கு அனுசரணை அளிப்போராவர்.
புண்ணியமிகு பிக்குகளே, பிள்ளைகளை ஈன்றெடுக்கும் ஒரு தாயைப்போன்றவரே சாரிபுத்தர். பிறந்த குழந்தையை போசிப்பவரைப் போன்றவரே மொக்கல்லானர். புண்ணியமிகு பிக்குளே, சாரிபுத்தர் தர்மத்தினை செவிமடுப்போர்களை சோதாபண்ண நிலையை எய்தும் பொருட்டு தர்மத்தினை உபதேசிப்பார். மொக்கல்லான ஏனைய உயர் பெறுபேறுகள் அடையும் பொருட்டு தர்மத்தினை போதிப்பார்.

புண்ணியமிகு பிக்குகளே, சாரிபுத்தர் நாற்பேருண்மைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு, போதிப்பதற்கு, ஆக்ஞை பிறப்பிப்பதற்கு, நிலைநிறுத்துவதற்கு, விபரித்தலுக்கு, மென்மேலும் உலகறியச்செய்தலுக்கு மிகவும் திறமைசாலியாவார். பாக்கியமுள்ள பகவான் இவ்வாறாக மொழிந்து ஆசனத்திலிருந்து எழுந்து தம் சேனாசனத்தை நோக்கிச்சென்றார்.

அப்போது சாரிபுத்த மகா தேரர், ‘சக பிக்குமாரே, என பிக்குமாரை விழித்தார். அவர்களும் பிரியமான ஆவுசோவே! (தன்னை விட தவத்தினால் இளைய அல்லது தமக்கு சமமான தவ வலிமை கொண்டோரை விழித்து பேசிய ஒரு சொல்லாகும்) என மறுமொழியளித்தனர்.
மகா சாரிபுத்த தேரர் இந்த போதனையை மொழிந்தருளினார். புண்ணியமிகு ஆவுசோக்களே, அரஹத் சம்மா சம்புத்த நிலையை அடைந்த ததாகதரால் வாரணாசியின் இசிபத்தனம் எனும் மான்களின் அபயபூமியில் அதியுன்னதமான தர்ம சக்கரம் சுழற்றப்பட்டது. உலகின் எவ்விதமான சிரமணருக்கோ, அந்தணருக்கோ, தேவருக்கோ, மாரனுக்கோ பிரம்மனுக்கோ அல்லது வேறு யாராலுமோ அதனை மாற்ற முடியாது. அதாவது இந்த நால்வகை பேருண்மைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

எவ்வகையான நாற்பேருண்மைகள் தொடர்பானது?

துக்கம் எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

துக்க அழிவிற்கான மார்க்கம் எனும் ஆரிய சத்தியம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.

புண்ணியமிக்க சக ஆவுசோக்களே, துக்கம் எனும் ஆரிய சத்தியம் என்றால் என்ன?

பிறப்பு துக்கமாகும். முதுமையடைவது துக்கமாகும். நோய்நொய்கடிகளுக்கு உள்ளாகுவது துக்கமாகும். மரணமடைதல் துக்கமாகும். சோகம், புலம்பல் என்பன துக்கமாகும். உடல் உள கவலைகளும், வேதனைகளும் துக்கமாகும். விரும்புவன கிடைக்காமை துக்கமாகும். சுருங்கக்கூறுவதாயின் இந்த பஞ்ச உபாதானஸ்கந்தங்களும் துக்கமேயாகும்.

புண்ணியமிகு சக ஆவுசோக்களே, பிறப்பு என்றால் என்ன?

உயிர்கள் தத்தமக்குரிய (கர்மங்களுக்கு அமைவாக) உலகங்களில் பிறப்பதாயின், தோற்றம் இருப்பதாயின், கருவரையில் இரங்கிக்கொள்வதாயின், விசேடமான தோன்றுவதாயின், உபாதானஸ்கந்தங்களின் தோற்றம் இருக்குமாயின், கண், காது, நாசி, நாவு, உடல், மனம் எனும் அறுவகை புலன்களும் கிடைத்தலாகும். சக ஆவுசோக்களே, இதுவே பிறப்பு எனப்படுகிறது.

புண்ணியமிகு சக ஆவுசோக்களே, முதுமையடைதல் என்றால் என்ன?

உயிர்கள் தத்தமக்குரிய (கர்மங்களுக்கு அமைவாக) உலகங்களில் உக்கிப்போதல் இருக்குமாயின், உக்கிபோகும் இயல்பு இருக்குமாயின், பற்கள் என்பன உடைதல், முடி மயிர் என்பன நரைக்குமாயின், தோல் என்பன சுருங்குமாயின், ஆயுளின் முடிவு இருக்குமாயின், கண்கள், காதுகள் என்பன நன்கு முதிர்ச்சி அடையுமாயின், பிரியமான ஆவுசோக்களே இதுவே முதுமை எனப்படுகிறது.

புண்ணியமிகு சக ஆவுசோக்களே, மரணம் என்றால் என்ன?

உயிர்கள் தத்தமக்குரிய (கர்மங்களுக்கு அமைவாக) உலகங்களில் மறைவது இருக்குமாயின், மறையும் இயல்பு இருக்குமாயின், உடைந்து போகும் இயல்பு இருக்குமாயின், மரணத்தினை அடையும் இயல்பு இருக்குமாயின், சாகும் இயல்பு இருக்குமாயின், பஞ்ச உபாதானஸ்கந்தங்களின் சிதறுதல் இருக்குமாயின், உடலை துறக்கும் இயல்பு இருக்குமாயின், பிரியமான ஆவுசோக்களே இதுவே மரணம் எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே சோகம் என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே, பல்வேறு விபத்துக்களில் மத்தியில் ஏதாவது விபத்தினால் துன்புறும் ஒருவருக்கு, பொறுத்துக்கொள்ள முடியாத, சகிக்க முடியாத துன்பம் அனுபவிப்பவருக்கு சோகமிருக்குமாயின், சோகத்தினால் மூழ்கிய நிலையிருக்குமாயின், மனதை எரியவைக்கும் சோகமிருக்குமாயின், மனம் முழுவதும் வியாபித்து மனதை சூழ்ந்து எரித்துக்கொண்டிருக்கும் சோகம் இருக்குமாயின், பிரியமான ஆவுசோக்களே, இதுவே சோகம் எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே அழுது புலம்பல் என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே, பல்வேறு விபத்துக்களில் மத்தியில் ஏதாவது விபத்தினால் துன்புறும் ஒருவருக்கு, பொறுத்துக்கொள்ள முடியாத, சகிக்க முடியாத துன்பம் அனுபவிப்பவர் அழுது புலம்புவதாயின், பெயர் விபரங்கள் என்பன சொல்லிக்கொண்டு புலம்புவதாயின், அவ்வாறு புலம்பும் இயல்பிருக்குமாயின், பிரியமான ஆவுசோக்களே, இதுவே அழுது புலம்பல் எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே உடல் சார்ந்த துக்கம் என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே,உடலியல் ரீதியாக தோன்றும் பொறுது;துக்கொள்ள முடியாத ஏதேனும் துன்பம் இருக்குமாயின், உடலியல் ரீதியான வேதனைகள் இருக்குமாயின், உடலுணர்வினால் ஏற்படும் துக்கம் இருக்குமாயின், பிரியமான ஆவுசோக்களே, இதுவே உடல் சார்ந்த துக்கம் எனப்படும்.

பிரியமான ஆவுசோக்களே, மானசீக துக்கம் என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே, மானசீக ரீதியாக தோன்றும் பொறுத்துக்கொள்ள முடியாத ஏதேனுமு; துக்கம் இருக்குமாயின், சகிக்க முடியாத துன்பம் இருக்குமாயின், மனதின் ஸ்பரிசத்தினால் தோன்றும் கொடுமையான துக்கத்தினை அனுபவிக்கும் இயல்பு இருக்குமாயின், பிரியமான ஆவுசோக்களே, இதுவே மானசீக துக்கம் எனப்படும்.

பிரியமான ஆவுசோ, துக்கங்களை நினைத்து வருந்துதல் என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே, பல்வேறு விபத்துக்களில் மத்தியில் ஏதாவது விபத்தினால் துன்புறும் ஒருவருக்கு தோன்றும் ஏதேனும் சோர்வு இருக்குமாயின், அதனையே (அந்த துன்பத்தினையே) நினைத்து நினைத்து ஏங்குவதாயின், சோகமடைவதாயின், சோர்வடைவதாயின், இதுவே துக்கங்களை நினைத்து வருந்துதல் எனப்படும்.

பிரியமான ஆவுசோ, விரும்பியன கிடைக்காமையால் தோன்றும் துக்கம் என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே, பிறப்பினை உரித்தாக கொண்ட உயிர்களுக்கு இவ்வாறானதொரு விருப்பம் தோன்றும். ‘நாம் இந்த பிறவிகள் அற்றவர்களாக இருப்போமானால் எவ்வளவு நன்று? பிறப்பு எம்மை நோக்கி வராவிட்டால் எவ்வளவு நன்று’ என்று. எனினும் இதனை விருப்பினால் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. இதுவும் விரும்பியன கிடைக்காமையால் ஏற்படும் துக்கமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, முதுமையை உடைமையாகக்கொண்ட உயிர்களுக்கு இவ்வாறானதொரு விருப்பம் தோன்றும். ‘நாம் முதுமை அடையும் இயல்பு அற்றவர்களாக இருப்போமானால் எவ்வளவு நன்று? முதுமை எம்மை நோக்கி வராவிட்டால் எவ்வளவு நன்று’ என்று. எனினும் இதனை விருப்பினால் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. இதுவும் விரும்பியன கிடைக்காமையால் ஏற்படும் துக்கமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, நோயுறும் உடைமையாகக்கொண்ட உயிர்களுக்கு இவ்வாறானதொரு விருப்பம் தோன்றும். ‘நாம் நோயுறும் இயல்பு அற்றவர்களாக இருப்போமானால் எவ்வளவு நன்று? நோய்நொடிகள் எம்மை நோக்கி வராவிட்டால் எவ்வளவு நன்று’ என்று. எனினும் இதனை விருப்பினால் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. இதுவும் விரும்பியன கிடைக்காமையால் ஏற்படும் துக்கமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, மரணத்தினை உடைமையாகக்கொண்ட உயிர்களுக்கு இவ்வாறானதொரு விருப்பம் தோன்றும். ‘நாம் மரணிக்கும் இயல்பு அற்றவர்களாக இருப்போமானால் எவ்வளவு நன்று? மரணம் எம்மை நோக்கி வராவிட்டால் எவ்வளவு நன்று’ என்று. எனினும் இதனை விருப்பினால் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. இதுவும் விரும்பியன கிடைக்காமையால் ஏற்படும் துக்கமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, சோகங்கள், துக்கங்கள், புலம்பல்கள் என்பன உடைமையாகக்கொண்ட உயிர்களுக்கு இவ்வாறானதொரு விருப்பம் தோன்றும். ‘நாம சோகங்கள், துக்கங்கள், புலம்பல்கள் என்பன அற்றவர்களாக இருப்போமானால் எவ்வளவு நன்று? சோகங்கள், துக்கங்கள், புலம்பல்கள் என்பன எம்மை நோக்கி வராவிட்டால் எவ்வளவு நன்று’ என்று. எனினும் இதனை விருப்பினால் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. இதுவும் விரும்பியன கிடைக்காமையால் ஏற்படும் துக்கமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, சுருங்கக்கூறின் பஞ்ச உபாதானஸ்கந்தங்களும் துக்கம் என்றால் என்ன?
அதாவது இந்த உருவ உபாதானஸ்கந்தமாகும். அனுபவிப்பு உபாதானஸ்கந்தமாகும். சமிக்ஞை உபாதானஸ்கந்தமாகும். சங்ஸ்கார உபாதானஸ்கந்தமாகும். விஞ்ஞான உபாதானஸ்கந்தமாகும். பிரியமான ஆவுசோக்களே, சுருங்கக்கூறின் பஞ்ச உபாதானஸ்கந்தங்களும் துக்கம் எனக்கூறுவது இந்த துக்கத்தினையே.

பிரியமான ஆவுசோக்களே, துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் என்றால் என்ன?

புனர்பவத்தினை (மீண்டும் மீண்டும் பிறப்பதனை) ஏற்படுத்தும், விருப்பத்துடன் ஒட்டிக்கொள்ளும், அவ் அவ் இடத்தினை (பிறக்கும் பிறவிகளை) சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும், தண்ஹா (ஆசை) இருக்குமாயின் அதுவே துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியம் என்றால் என்ன?

அந்த தண்ஹாவே (ஆசையே) மீதமின்றி விருப்பின்றி அழிந்துபொதல் இருக்குமாயின், கைவிடுவதாயின், அழிப்பதாயின், விடுதலை அடைவதாயின், விருப்பு இல்லாமல் போவதாயின் அதுவே துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியமாகும்.

பிரியமான ஆவுசோக்களே, துக்க அழிவிற்கான மார்க்கம் எனப்பும் ஆரிய சத்தியம் என்றால் என்ன?

அதுவே இந்த ஆரிய எண்சீர் வழியாகும். அவையாவன, சம்மா திட்டி (நற்காட்சி), சம்மா சங்கல்ப்பம் (நற்சிந்தனை), சம்மா வாசா (நல்பேச்சு), சம்மா கம்மன்த (நற்கருமம்), சம்மா ஆஜீவ (நல் ஜீவனோபாயம்) , சம்மா வாயாம (நல் வீரியம்), வம்மா சதி (நல் விழிப்புணர்வு), சம்மா சமாதி (நல் உளச்சமாதி) என்பவையாகும்.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா திட்டி (நற்காட்சி) என்றால் என்ன?

ஆவுசோக்களே, துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்க அழிவு, துக்க அழிவிற்கான மார்க்கம் எனும் ஆரிய சத்தியங்கள் தொடர்பாக இருக்கும் உய்த்துணர்வினாலான ஞானம் இருக்குமாயின் அதுவே நற்பார்வை எனும் சம்மா திட்டியாகும்.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா சங்கல்ப்பம் (நற்சிந்தனை) என்றால் என்ன?

நிஷ்காமிய சிந்தனை, முரண்பாடுகளற்ற கோபத்தினை தூண்டாத சிந்தனைகள், அஹிம்சையான சிந்தனைகள் என்பனவையே நற்சிந்தனைகள் எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா வாசா (நற்பேச்சு) என்றால் என்ன?

பொய் பேசாதிருத்தல், புறம் பேசாதிருத்தல், கொடிய பேச்சுக்களை பேசாதிருத்தல், வெறுமையான வீண் பேச்சுக்களை பேசாதித்தல் என்பனவாகும்.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா கம்மன்த (நற்காரியம்) என்றால் என்ன?

உயிர்களை கொல்லாதிருத்தல், களவு எடுக்காதிருத்தல், தகாத காம செயலில் இருந்து தவிர்த்திருத்தல் என்பனவே நற்காரியங்கள் எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா ஆஜீவ என்றால் என்ன?

ஆரிய சீடன் பிழையான ஜீவனோபாயங்களில் இருந்து தவிர்த்து நல்வழியிலான ஜீவனோபாயங்களுடன் வாழ்வதே நல் ஜீவனோபாயம் எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா வாயாம (நல்ல வீரியம்) என்றால் என்ன?

பிரியமான ஆவுசோக்களே, பிக்கு தன்னுள் இதுவரை தோன்றியிராத அகுசலங்கள் இனிமேலும் தோன்றாமலிக்க விரும்புவார். அதற்காக முயற்சி செய்வார். வீரியத்தினை ஆரம்பிப்பார். மனதை உறுதிசெய்துகொண்டு பெரும் முயற்சி செய்வார்.
தன்னுள் தோன்றியிருக்கும் அகுசலங்களை அழிப்பதற்காக விருப்பத்தினை தோற்றுவித்துக்கொள்வார். அதற்காக முயற்சி செய்வார். வீரியத்தினை ஆரம்பிப்பார். மனதை உறுதிசெய்துகொண்டு பெரும் முயற்சி செய்வார்.
தன்னுள் இதுவரை தோன்றியிராத குசல தர்மங்களை தன்னுள் தோற்றுவித்துக்கொள்ள பெரும் விருப்பங்கொள்வார். அதற்காக முயற்சி செய்வார். வீரியத்தினை ஆரம்பிப்பார். மனதை உறுதிசெய்துகொண்டு பெரும் முயற்சி செய்வார்.
தன்னுள் தோன்றியிருக்கும் குசலங்கள் நிலைத்திருக்கும் பொருட்டு, அவை அழிந்து போகாமல் இருப்பதற்காக, மென்மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக, வளர்ச்சி செய்து கொள்வதற்காக, தியானங்களினால் பரிபூரணப்படுத்திக்கொள்வதற்காக பெரும் விருப்பினை கொள்வார். அதற்காக முயற்சி செய்வார். வீரியத்தினை ஆரம்பிப்பார். மனதை உறுதிசெய்துகொண்டு பெரும் முயற்சி செய்வார்.
பிரியமான ஆவுசோக்களே, இதுவே சம்மா வாயாம எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே, சம்மா சதி (நல்விழிப்புணர்வு) என்றால் என்ன?

ஒரு பிக்கு, உடல் மீதான மனதில் உள்ள கிலேசங்கள் அழியும் பொருட்டு வீரியம், அறிவு, என்பன முதன்மையாகக்கொண்ட விழிப்புணர்வுடன் உலகின் மீதான விருப்பு வெறுப்பு அழியும் வண்ணம் காயானுபஸ்ஸனா தியானத்தினை செய்த வண்ணம் வாழ்வார்.
ஒரு பிக்கு, அனுபவிப்புக்கள் மீதான மனதில் உள்ள கிலேசங்கள் அழியும் பொருட்டு வீரியம், அறிவு, என்பன முதன்மையாகக்கொண்ட விழிப்புணர்வுடன் உலகின் மீதான விருப்பு வெறுப்பு அழியும் வண்ணம் வேதனானுபஸ்ஸனா தியானத்தினை செய்த வண்ணம் வாழ்வார். ஒரு பிக்கு, மனம் தொடர்பான கிலேசங்கள் அழியும் பொருட்டு வீரியம், அறிவு, என்பன முதன்மையாகக்கொண்ட விழிப்புணர்வுடன் உலகின் மீதான விருப்பு வெறுப்பு அழியும் வண்ணம் சித்தானுபஸ்ஸனா தியானத்தினை செய்த வண்ணம் வாழ்வார்.
ஒரு பிக்கு, தர்மங்கள் தொடர்பாக மனதில் உள்ள கிலேசங்கள் அழியும் பொருட்டு வீரியம், அறிவு, என்பன முதன்மையாகக்கொண்ட விழிப்புணர்வுடன் உலகின் மீதான விருப்பு வெறுப்பு அழியும் வண்ணம் தம்மானுபஸ்ஸனா தியானத்தினை செய்த வண்ணம் வாழ்வார். பிரியமான ஆவுசோக்களே, இதுவே சம்மா சதி (நல்விழிப்புணர்வு) எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே. சம்மா சமாதி என்றால் என்ன?

பிக்கு காமங்களில் இருந்து நீங்கி, அகுசலங்களில் இருந்து நீங்கி, விதர்க்க விசாரங்களுடைய ஓய்வினால் கிடைக்கும் சந்தோஷமும் சுகமும் உடைய முதலாவதுமு தியான நிலையை தோற்றுவித்துக்கொண்டு வசிப்பார்.

விதர்க்க விசாரங்கள் தணிவதனால் தம் அகத்தினிலே தோன்றும் (குசலத்தின் மீதான) பலமான விருப்பத்துடனான மன ஒருங்கிணைவுடன் கூடிய விதர்க்க விசாரங்கள் அற்ற சமாதியினால் தோன்றும் சந்தோஷமும் சுகமும் உடைய இரண்டாவது தியான நிலையை தோற்றுவித்துக்கொண்டு வசிப்பார்.
இவ்வாறாக தோன்றிய இன்பத்தின் மீது பற்றுக்கொள்ளாது, விழிப்புணர்வு மற்றும் அறிவுடன் உடலினால் சுகத்தினை அனுபவித்துக்கொண்டு சமநிலை மனதுடன் விழிப்புணர்வுடன் இருப்பார். இவ்வாறாக சமனிலை மனதுடன் விழிப்புணர்டனும் சுகமாக உளச்சமாதியுடன் வசித்திருப்பதே மூன்றாவது தியான நிலையாகும்.
சுகத்தினையும் துக்கத்தினையும் இல்லாமல் செய்வதன் மூலம் சுகமே துக்கமோ பரிசுத்தமான விழிப்புணர்வுடன் கூடிய அற்ற உபேக்கா (சமனிலை) மனதுடன் இருப்பதுவே நான்காம் நிலை தியானமர்கும்.

பிரியமான ஆவுசோக்களே, இதுவே சம்மா சமாதி எனப்படுகிறது.

பிரியமான ஆவுசோக்களே, இதுவே துக்க அழிவிற்கான மார்க்கம் எனப்படும் ஆரிய சத்தியம் எனப்படுகிறது.
புண்ணியமிகு ஆவுசோக்களே, அரஹத் சம்மா சம்புத்த நிலையை அடைந்த ததாகதரால் வாரணாசியின் இசிபத்தன எனும் மான்களின் அபயபூமியில் அதியுன்னதமான தர்ம சக்கரம் சுழற்றப்பட்டது. உலகின் எவ்விதமான சிரமணருக்கோ, அந்தணருக்கோ, தேவருக்கோ, மாரனுக்கோ பிரம்மனுக்கோ அல்லது வேறு யாராலுமோ மாற்ற முடியாது. . அதாவது இந்த நால்வகை பேருண்மைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும், போதிப்பதாகும், ஆக்ஞை பிறப்பிப்பதாகும், நிலைநிறுத்துவதாகும், விபரித்தலாகும். மென்மேலும் உலகறியச்செய்தலாகும்.
மகா சாரிபுத்த தேரர் இந்த போதனையை போதித்தார். இப் போதனையை செவிமடுத்த அந்த பிக்குமாரும் அதனை இன்பத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
இந்த சத்தியத்தின் மகிமையால் அனைவருக்கும் நன்மை உண்டாகுக!