அரஹத் பிக்குணீமார்களால் போதிக்கப்பட்ட செய்யுள்கள்.
(தேரி காதை)
அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரங்கள்.
ஒரு செய்யுள் என்ற வீதத்தில் மொழிந்த பகுதி.
1.1
ஒரு அரஹத் தேரியின் செய்யுள்
1. புண்ணியமிகு பிக்குணீ, பான்சகூல வஸ்திரத்தினால் தைத்துக் கொண்ட சீவரத்தை போர்த்திய பிறகு சுகமாக வசிக்க முடியும். அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்திலிருந்த கீரை தீய்ந்து போனதைப் போன்று உங்கள் மனதிலிருந்த வேட்கையும் இல்லாமல் போய்விட்டது.
இந்த செய்யுள் ஒரு அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.2.
முத்தா தேரியின் செய்யுள்கள்.
2. புண்ணியமிகு முத்தா, ராகுவின் பிடியிலிருந்து வெண்ணிலவு விடுபடுவதைப் போன்று மாரனது பிடியிலிருந்து நீயும் விடுபட்டு போக வேண்டும். கிலேசங்களில் இருந்து விடுதலையடைந்த மனதுடன், யாருக்கும் கடனின்றி ஐயமேற்ற உணவை சாப்பிட வேண்டும்.
இந்த செய்யுள் முத்தா அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.3.
புண்ணா தேரியின் செய்யுள்கள்
3. புண்ணியமிகு புண்ணா, பௌர்ணமி நிலவைப் போன்று உன்னத நற்குணங்களால் வாழ்வினை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஞானத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டு இந்த அஞ்ஞானம் எனும் காரிருளை பிளந்துவிட வேண்டும்.
இந்த செய்யுள் புண்ணா அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.4.
திஸ்ஸா தேரியின் செய்யுள்கள்.
4. புண்ணியமிகு திஸ்ஸா, சீலம், சமாதி (திடமான மன ஒருங்கிணைவு), ஞானம் என்பவற்றை நன்கு உங்களுள் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். இந்த அரிய வாய்ப்பை நழுவவிட வேண்டாம்! அனைத்து விதமான பிணைப்புக்களில் இருந்து விடுதலை அடையுங்கள். கிலேசங்களற்ற ஒருவராக இந்த உலகில் வாழுங்கள்.
இந்த செய்யுள் திஸ்ஸா அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.5.
திஸ்ஸா தேரியின் செய்யுள்கள்.
5. புண்ணியமிகு திஸ்ஸா, தர்மத்தில் ஈடுபடுங்கள். இந்த அரிய வாய்ப்பை நழுவவிட வேண்டாம்! இந்த உன்னத வாய்ப்பை நழுவவிட்டுக் கொண்டவர்கள் நரகத்தில் பிறந்து அநேகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
இந்த செய்யுள் திஸ்ஸா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.6.
தீரா தேரியின் செய்யுள்கள்.
6. புண்ணியமிகு தீரா, துக்க அழிவு எனும் மோட்சத்தையே உறுதி செய்ய வேண்டும். அகுசல சமிக்ஞைகளை (இனங்காணல்களை) தணித்துக் கொள்வதே சுகமாகும். எனவே இந்த கிலேசங்களில் இருந்து விடுதலையான உன்னத மோட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த செய்யுள் தீரா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.7.
வீரா தேரியின் செய்யுள்கள்.
7. புண்ணியமிகு பிக்குணியே வீரா! சிரத்தை உள்ளிட்ட இந்திரிய தர்மங்களை, இடைவிடாத பலத்த வீரியத்துடன் விருத்தி செய்யுங்கள். தாமதமின்றி தர்மத்திலேயே ஈடுபடுங்கள். படைகளுடன் கூடிய மாரனை தோற்கடித்து, இறுதி உடலை கொண்டிருங்கள்.
இந்த செய்யுள்; வீரா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.8.
மித்தா தேரியின் செய்யுள்கள்.
8. புண்ணியமிகு மித்தா சிரத்தையுடன் துறவு பூண்ட நீங்கள், சத்புரு~ நண்பர்களுடன் பழகுவதற்கே விரும்ப வேண்டும். உத்தம நிலையான அரஹத் நிலையை அடைவதற்காகவே குசல தர்மங்களை விருத்தி செய்து கொள்ளுங்கள்.
இந்த செய்யுள்; மித்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.9.
பத்திரா தேரியின் செய்யுள்கள்.
9. புண்ணியமிகு பத்திரா, சிரத்தையை அடிப்படையாகக் கொண்டே நீங்களும் துறவறம் மேற்கொண்டீர்கள். எனவே நீங்களும் அந்த அதி சுந்தரமான தர்மத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் வாழுங்கள். உத்தம நிலையான அரஹத் நிலையை அடைவதற்காகவே போதிசார் தர்மங்களை விருத்தி செய்து கொள்ளுங்கள்
இந்த செய்யுள் பத்திரா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.10.
உபசமா தேரியின் செய்யுள்கள்.
10. புண்ணியமிகு உபசமா, இந்த மாரனது இராசதானியிலிருந்து மீள்வது மிக மிக கடினாகும். எப்படியாவது பிறவிப்பயணம் எனும் காட்டாற்றிலிருந்து கரையேறுங்கள். சேனைகளுடன் கூடிய மாரனை தோற்கடித்து இறுதி உடலை கொண்டிருங்கள்.
இந்த செய்யுள்; உபசமா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.11.
முத்தா தேரியின் செய்யுள்கள்.
11. நான் எல்லாவற்றிலிருந்தும் மீண்டமையே நல்லது. மூன்று கூனல்களில் இருந்தும் நீங்கிவிட்டேன். அதாவது உரலில் இருந்தும் மீண்டுவிட்டேன். உலக்கையிலிருந்தும் மீண்டுவிட்டேன். கணவரிடமிருந்தும் மீண்டுவிட்டேன். பிறந்து மடியும் உலகத்திலிருநதும் மீண்டுவிட்டேன். பிறப்பிற்கு வழிவகுக்கும் வேட்கையிலிருந்தும் மீண்டுவிட்டேன்.
இந்த செய்யுள்; முத்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.12.
12. தம்மதின்னா தேரியின் செய்யுள்கள்.
மோட்சத்தை உறுதி செய்ய வேண்டும் எனும் ஆசையே மனதில் இருந்தது. வேறு எவை மீதும் என் மனம் வசப்படவில்லை. மனதினால் மோட்சத்தை ஸ்பரிசம் செய்துவிட்டேன். காமங்கள் தொடர்பாக மனம் பிணைந்து போகாத வாழ்க்கையை வாழ்பவரை “எதிர்நீச்சல் செய்பவள்” என்றே கூறுவார்கள்.
இந்த செய்யுள் தம்மதின்னா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.13.
விசாகா தேரியின் செய்யுள்கள்.
13. ஏதேனும் செய்த பின்னர் அது தொடர்பாக பின்வருந்தாமல் இருக்க வேண்டுமாயின், அத்தகைய புத்த அறிவுரைகளையே செய்ய வேண்டும். உடனே பாதங்களை கழுவிக்கொண்டு ஓர் புறத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
இந்த செய்யுள் விசாகா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.14.
சுமணா தேரியின் செய்யுள்கள்.
14.
இந்த நால்வகை தாதுக்களின் நிலவுகையை துக்கத்திற்குரியனவாக உய்த்துணர்ந்து கொண்ட பின்னர், மீண்டும் பிறக்கும் நிலையை தருகின்ற இந்த சன்சாரத்திற்கு வராதீர்கள். பிறப்புக்கள் தொடர்பாக இருக்கும் ஆசையை அழித்து கொண்டு பரம ~hந்தமான மனதுடன் வசியுங்கள்.
இந்த செய்யுள் சுமணா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.15.
உத்தரா தேரியின் செய்யுள்கள்.
15. நான் உடலையும் அடக்கிக் கொண்டேன். வார்த்தையையும் அடக்கிக் கொண்டேன். மனதையும் அடக்கிக் கொண்டேன். வேட்கையை வேரறுத்துவிட்டேன். குளிர்ந்துவிட்டேன். அணைந்து போனேன்.
இந்த செய்யுள் உத்தரா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.16. முதுமையடைந்த பின்னர் துறவறம் மேற்கொண்ட சுமணா தேரியின் செய்யுள்.
16. புண்ணியமிகு முதியவளே, பான்சகூல துணியினால் தயாரித்துக்கொண்ட சீவரங்களை போர்த்திக்கொண்டு சுகமாக சயனியுங்கள். உங்களது வேட்கை தணிந்துள்ளது. எனவே குளிர்ந்து அணைந்துவிடுங்கள்.
இந்த செய்யுள் முதுமையடைந்த பின்னர் துறவறம் மேற்கொண்ட சுமணா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.17.
தம்மா தேரியின் செய்யுள்கள்.
17. நான் மிகவும் பலவீனமடைந்து இருந்தேன். ஊன்றுகோளின் உதவியோடு ஐயமேற்க செல்லும் போது எனது கைகால்கள் நடுங்கின. எனவே நான் அங்கேயே சரிந்து விழுங்தேன். அந்த சமயத்தில் எனக்கு இந்த உடலின் பிரதிகூலங்கள் நன்கு புரிந்தன. எனது மனம் கிலேசங்களில் இருந்து விடுதலையடைந்தது.
இந்த செய்யுள் தம்மா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
1.18.
சங்கா தேரியின் செய்யுள்கள்.
18. எனக்கு பிரியமான எனது பிள்ளைகளை கைவிட்டேன். மந்தைகளை கைவிட்டேன். இல்லறத்தை துறந்தேன். துறவறத்தை மேற்கொண்டேன். இறுதியாக ஆசை, கோபம் என்பனவற்றையும் கைவிட்டேன். அஞ்ஞானத்தையும் இல்லாமல் செய்து கொண்டேன். வேட்கையையும் வேரறுத்துவிட்டேன். பரம ~hந்த நிலையை அடைந்தேன். அணைந்த ஒருவரானேன்.
இந்த செய்யுள்; சங்கா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டதாகும்.
ஒரு செய்யுள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்.
(ஏகக நிபாதோ நிட்டிதோ)
இரு செய்யுள் என்ற வகையில் மொழிந்த பகுதி
(துக நிபாதோ)
2.1.
அபிரூபி நந்தா தேரியின் செய்யுள்கள்.
19. புண்ணியமிகு நந்தா, எந்நேரமும் நோய் நொடிகளால் பீடிக்கப்படும், அழுகிப்போகும் இந்த அருவருப்புமிக்க உடலை அறிவை அடிப்படையாகக் கொண்டு பாருங்கள். மனதை நன்றாக ஒருங்கிணைத்துக் கொண்டு அசுப தியானத்தில் ஈடுபடுங்கள்.
20. கிலேச குறிப்புகள் இல்லாத விபஸ்ஸனாவை மேம்படுத்துங்கள். மனதிலிருக்கும் ஆணவத்தை பிடுங்கியெறிந்து விடுங்கள். உய்த்துணர்வுடன் ஆணவத்தை அழித்து பரம ~hந்த நிலையுடன் வசியுங்கள்.
இந்த செய்யுள்களானவை, பாக்கியமுள்ள புத்த பகவானால் நந்தா எனும் பிக்குணிக்கு அறிவுரை செய்த செய்யுள்களாகும்.
2.2.
ஜென்தா தேரியின் செய்யுள்கள்.
21. மோட்சத்திற்கு இ;ட்டுச்செல்லும் மார்க்கமான இந்த போதியங்க தர்மங்களை புத்த பகவானே போதித்தார். எனவே நானும் அந்த தர்மங்கள் அனைத்தையும் என்னுள் விருத்தி செய்து கொண்டேன்.
22. நானும் தர்மத்தின் மூலம் புத்த பகவானை கண்டு கொண்டேன். இதுவே எனது இறுதி உடலாகும். பிறந்து மடியும் பயணம் முடிந்துவிட்டது. இனிமேலும் எனக்கு மறுபிறவிகள் கிடையாது.
இந்த செய்யுள்கள் ஜென்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.3.
சுமங்கல மாதா தேரியின் செய்யுள்கள்.
23. எல்லாவற்றிலிருந்தும் விடுதலையடைந்த நீ, அனைத்திலிருந்தும் விடுதலையடைந்த நீ, உலக்கையிலிருந்தும் விடுதலையடைந்ததே நல்லது. எனது கணவர் எவ்வித வெட்கங்களும் அற்றவர். நான் அவரது குடையைக் கூட விரும்பவில்லை. நான் சமைத்த சோற்று பானையிலிருந்தும் அழுகிய வாடையே வந்தது.
24. “சிடி சிடி” எனும் சப்தத்தினால் நான் இந்த ஆசை, கோபம், அறியாமை என்பனவற்றை அழித்துவிட்டேன். ஏதேனும் ஒரு மரநிழலுக்கு சென்ற பின்னர், ஆஹா! என்னவொரு சுகம்! நான் மிகவும் சுகமாக த்யான நிலைகளை மேம்படுத்துகிறேன்.
இந்த செய்யுள்கள் சுமங்கல மாதா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.4.
அட்டகாசி தேரியின் செய்யுள்கள்.
25. முன்னர் எனக்கு “காசி” குடியரசிற்கு கிடைக்கும் வருமான வரிக்கு நிகரான வருமானம் கிடைத்தது. அந்த சிறு நகரில் வாழ்ந்த மக்கள், அந்த வருமானத்தின் பெறுமதியை சரிபாதியாக அளவிட்டு, என்னை “விலைமாது:” எனும் பதவியில் வைத்தார்கள்.
26. ஆனால் நான் இப்போது உய்த்துணர்வுடனேயே இந்த உடலை அருவருத்திருக்கிறேன். அதன் காரணமாக நிராசை எனும் நிலையை அடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் பிறந்து மடியும் இழிநிலை கொண்ட பிறவிப்பயணத்தை நோக்கி நான் மேலும் ஓடமாட்டேன். நான் மூவகை ஞானங்களையும் பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் அட்டகாசி எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.5.
சித்தா தேரியின் செய்யுள்கள்.
27. நான் மிகவும் மெலிவானவள். நோயுற்று மிகவும் பலவீனமாக இருக்கிறேன். ஆனாலும் ஊன்றுகோலின் உதவியோடு கிஜ்ஜகூட மலைக்கு ஏறினேன்.
28. ஐயக்கொள்கலனை ஒரு புறத்தில் கவிழ்த்து வைத்தேன். இரு மடிப்புடைய சீவரத்தையும் மடித்து ஒரு பக்கமாக வைத்தேன். கற்பர்வதத்தின் மீது உட்கார்ந்து கொண்டேன். இந்த வாழ்வை சூழ்ந்திருந்த “அஞ்ஞானம்” எனும் காரிருளைக் கொண்ட கிலேசங்களை அழித்துவிட்டேன்.
இந்த செய்யுள்கள் சித்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.6.
மெத்திகா தேரியின் செய்யுள்கள்.
29. நான் மிகவும் துயரத்திற்கு உள்ளாகியிருந்தேன். பலவீனமாக இருந்தேன். என் இளைமைக்காலம் முடிந்திருந்தது. ஆனாலும் நான் ஊன்றுகோலின் உதவியோடு கிஜ்ஜகூட மலைக்கு ஏறினேன்.
30. ஐயக்கொள்கலனை கவிழ்த்து ஒருபுறம் வைத்தேன். இரு மடிப்புடைய சீவரத்தையும் மடித்து ஒரு பக்கமாக வைத்தேன். கற்பர்வதத்தின் மீது உட்கார்ந்து கொண்டேன். அங்குதான் என் மனம் ஆஸவங்களில் இருந்து விடுதலையடைந்தது. நானும் மூவகை ஞானங்களை பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் மெத்திகா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.7.
மெத்தா தேரியின் செய்யுள்கள்.
31. நான் முன்னர் தேவலோகத்தில் பிறக்க வேண்டும் என்றே பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். மாதத்தின் நான்கு வகையான பூரணை தினங்களிலும் அட்டாங்க உபோசத சீலத்தை அனு~;டித்தேன்.
32. ஆனால் இப்போது நான், ஒருவேளை உணவை மாத்திரம் தான் உட்கொள்கிறேன். தலைமுடியை மழித்துக்கொண்டு ஐயக்கொள்கலன் மற்றும் சீவரங்களுடனே இருக்கிறேன். மனதில் இருந்த அனைத்து கிலேசங்களையும் அழித்துவிட்டேன். இப்போது நான் தேவலோகத்தில் பிறக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதில்லை.
இந்த செய்யுள்கள் மெத்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.8.
அபய மாதா தேரியின் செய்யுள்கள்.
33. புண்ணியமிகு தாயே, இந்த பாதங்களில் இருந்து மேலாகவும், உச்சந்தலையிலிருந்து கீழாகவும் தோலினால் போர்த்தப்பட்டிருக்கும், அழுகிப்போகும் இயல்புடைய அருவருப்பு மிகுந்த இந்த உடலை அறிவை முதற்கொண்டு பாருங்கள்.
34. (தன் புதல்வராகிய அபய தேரரின் அறிவுரையின் படி) நான் அந்த வகையிலேயே இந்த உடலை அறிவை முதற்கொண்டு பார்த்தேன். அனைத்து விதமான வேட்கைகளையும் அழித்துவிட்டேன். இப்போது நான் குளிர்ந்துள்ளேன். அணைந்துள்ளேன்.
இந்த செய்யுள்கள் அபய மாதா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.9.
அபயா தேரியின் செய்யுள்கள்.
35. புண்ணியமிகு அபய, புதுஜ்ஜனர்கள் (தர்மத்தினை அறியாதவர்கள்) விருப்புடன் ஒட்டியிருக்கும் இந்த உடலானது நொறுங்கி போகும் இயல்புடையதாகும். நான் இந்த விடயத்தை உய்த்துணர்ந்து கொண்டு மிகவும் விழிப்புணர்வுடன் எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இந்த உடலை துறந்து விடுவேன்.
36. துயரங்கள் நிறைந்த இந்த வாழ்வினுள் நான் விரும்பியதெல்லாம் தாமதமின்றி தர்மத்தில் ஈடுபடவே. ஆசை அழிந்துவிட்டது. நான் மோட்சத்தை உறுதிசெய்து விட்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் அபயா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
2.10.
சாமா தேரியின் செய்யுள்கள்.
37. முன்னர் என்னுள் மன ஒருமைப்பாடு இருக்கவில்i. இந்த மனதை எவ்விதத்திலும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை ஆராமத்தில் இருந்து வெளியே சென்றேன்.
38. ஆனால் இம்முறை, எட்டாவது தினத்தின் இரவுப்பொழுது கழியும்போது நான் வேட்கையை அடியோடு இல்லாமல் செய்து கொண்டேன். இந்த துயர் மிகுந்த வாழ்வின் காரணமாகவே நான் (தர்மத்தில் ஈடுபடுவதற்கான) தாமதமின்மை எனும் குணத்தை மிகவும் விரும்பினேன். வேட்கை அழிந்துவிட்டது. என்னால் மோட்சம் உறுத்pசெய்து கொள்ளப்பட்டது.
இந்த செய்யுள்கள் சாமா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
இரு செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்.
(துக நிபாதோ நிட்டிதோ)
மூன்று செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி
(திக நிபாதோ நிட்டிதோ)
3.1.
சாமா தேரியின் செய்யுள்கள்.
39. நான் துறவறம் மேற்கொண்டு இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. இதுவரை காலத்தினுள் என் மனதில் சிறிதளவு சமாதி நிலையேனும் தோன்றவில்லை.
40. மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், உளச்சமாதியை தோற்றுவித்துக் கொள்ள முடியாமல், புத்த பகவானது அறிவுரைகளை நினைவுகூறிக்கொண்டு நான் மிகவும் வருந்தினேன்.
41. இந்த துயர் மிகுந்த வாழ்வின் காரணமாகவே நான் (தர்மத்தில் ஈடுபடுவதற்கான) தாமதமின்மை எனும் குணத்தை மிகவும் விரும்பினேன். வேட்கை அழிந்துவிட்டது. மோட்சத்தை உறுதி செய்துவிட்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன். நான் வேட்கையை முழுமையாக என் மனதிலிருந்து அழித்து இன்றோடு ஏழு நாட்களாகின்றன.
இந்த செய்யுள்கள் சாமா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.2.
உத்தமா தேரியின் செய்யுள்கள்.
42. என்னால் மன ஒருமைப்பாட்டை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எவ்விதத்திலும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை ஆராமத்தில் இருந்து வெளியே சென்றேன்.
43. நான் ஒரு தேரியின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தேன். நான் அந்த பிக்குணியிடம் சென்றேன். அந்த உத்தமி எனக்கு ஸ்கந்தங்கள், தாதுக்கள், புலன்கள் என்பன தொடர்பாக தர்மத்தை போதித்தார்கள்.
44. (அவர் எனக்கு அறிவுரை செய்த வகையில்) அவர் போதிக்கும் தர்ம உபதேசத்தை நன்கு செவிசாய்த்துக் கொண்டிருக்கும் போது என் மனதில் பெரும் சுகம் தோன்றியது. நான் (அட்டணை காலிட்டு) அமர்ந்த வண்ணமே ஏழு நாட்கள் தொடர்ந்திருந்தேன். இந்த அஞ்ஞான காரிருள் மிகுந்த கிலேச மலையை பிளந்த நான் எட்டாவது நாளன்றே எனது கால்களை நீட்டினேன்.
இந்த செய்யுள்கள் உத்தமா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.3.
உத்தமா தேரியின் செய்யுள்கள்.
45. மோட்சத்திற்கு இ;ட்டுச்செல்லும் மார்க்கமான இந்த போதியங்க தர்மங்களை புத்த பகவானே போதித்தார். எனவே நானும் அந்த தர்மங்கள் அனைத்தையும் என்னுள் விருத்தி செய்து கொண்டேன்.
46. நான் விரும்பும் வகையில் சூன்ய சமாபத்தி, அநிமித்த சமாபத்தி எனும் சமாதி நிலைகளை பெற்றுக் கொண்டேன். இப்போது நான் புத்த பகவானது இதய கமலத்திலே தோன்றிய புதல்வியாவேன். நான் எந்நேரமும் மோட்சத்திலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.
47. தேவ மற்றும் மனித காமங்களை (அவற்றின் மீதான ஆசையை) முற்றாக அழித்து விட்டேன். பிறவிப்பயணத்தை முடித்துவிட்டேன். இப்போது எனக்கு மறுபிறவிகள் கிடையாது.
இந்த செய்யுள்கள் உத்தமா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.4.
தன்திகா தேரியின் செய்யுள்கள்.
48. நான் பகற்பொழுதை கிஜ்ஜகூட பர்வதத்தில் கழித்துவிட்டு அங்கிருந்து இறங்கிச் செல்லும் போது, ஆற்றியிலிருந்து கரையேறியதொரு யானை ஆற்றங்கரையில் நின்றுக் கொண்டிருப்பதை கண்டேன்.
49. அங்குசத்தை கையில் எடுத்த ஒருவன் அந்த யானையிடம் காலை நீட்டுமாறு உத்தரவிட்டான். உடனே அந்த யானை தன் முன்காலை நீட்டியது. அந்த மனிதன் அந்த காலில் ஏறியே யானை மீது ஏறினான்.
50. இந்த யானை முன்னர் இவ்வாறு அடங்கியதல்ல. மனிதர்கள் தான் இந்த யானையை இவ்வாறு முறையாக அடக்கியிருக்கிறார்கள். மனிதர்களால் முறையாக அடக்கப்பட்ட இந்த யானையை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியை நான் நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டேன். நான் வனத்தினுள் சென்று மனதை சிறப்பான வகையில் அடக்கி ஒருமுகப்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் தன்திகா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.5.
உப்பரீ தேரியின் செய்யுள்கள்.
51. இந்த வனத்தினுள் நுழைந்து, “என்னுடைய மகளே, ஜீவா” என்று புலம்பி அழுது கொண்டிருக்கிறாய். நீ அறிவாயா? இந்த மயானத்தில் மாத்திரம் எண்பத்து நான்காயிரம் (மரணித்த) மக்கள் தகனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரதும் பெயர் ஜீவ என்பதாகும். நீ அதில் யாரை நினைத்து அழுகின்றாய்?
52. அச்சமயம் எனது இந்த இதயத்திற்கு வேதனையளித்த யாரும் காணாத புத்திர சோகம் எனும் கொடிய வேலினை அகற்றிக் கொண்டேன்.
53. நான் இன்று அந்த சோகம் எனும் கொடிய வேலினை பிடுங்கியெறிந்தே இருக்கிறேன். ஆசையை அழித்து அணைந்து போயுள்ளேன். புத்த பகவானையும் உத்தம தர்மத்தையும் உன்னத சஙகையரையும் நான் எனது ஒரே புகலிடமாகக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் உப்பரீ எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.6.
சுக்கா தேரியின் செய்யுள்கள்.
54. புத்த பகவான் போதித்த உத்தம தர்மத்தையே சுக்கா தேரியும் போதிக்கின்றார். இந்த தர்மத்தை கேட்க இந்த மனிதர்கள் வராவிட்டால், இந்த இராஜகிருஹ நகரின் மக்கள் மதுபானம் அருந்தி போதையில் தூங்கிக் கொண்டிருக்கும் மக்களை போன்றோர்களாவர்.
55. அறிவுள்ள மனிதர்கள் இந்த தர்மத்தை விடமாட்டார்கள். இந்த தர்மமானது இயல்பாகவே சுவை மிகுந்ததாகும். நற்குணங்கள் எனும் சுவை மிகுந்த திரவத்தை உடையது. இந்த தர்மத்தை பாலைநிலத்தில் இருக்கும் ஒருவர் மழைநீரை அருந்துவதைப் போன்றே செவிமடுக்க வேண்டும்.
56. சுக்கா பிக்குணி குசல தர்மங்களுடன் கூடியவராவார். அவர் வேட்கையின்றியே இருக்கிறார். ஒருங்கிணைந்த மனதுடனேயே இருக்கிறார். சேனைகளுடன் கூடிய மாரனை அவர் தோற்கடித்துவிட்டார். இப்போது தம் இறுதி உடலையே தாங்கியிருக்கிறார்.
இந்த செய்யுள்கள் சுக்கா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.7.
சேலா தேரியின் செய்யுள்கள்.
57. (மாரன்) இந்த உலகில் “மோட்சம்” என்று ஒன்றில்லை. எனவே நீ ஏன் இவ்வாறு தனிமையில் ஓய்வுடன் இருக்கிறாய்? சென்று காம சுகங்களை அனுபவி. பிற்காலத்தில் அதனை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
58. (ஏய் மாரனே) இந்த காமங்கள் என்பன வி~மூட்டப்பட்ட ஆயுதங்கள் போன்றவையாகும். ஐவகை உபாதானஸ்கந்தங்கள் என்பன இறைச்சி துண்டுகளை போன்றனவாகும். நீ விரும்புவதாக கூறும் இந்த (காமங்கள்) விடயங்கள் மீது எனக்கென்றால் விருப்பமில்லை.
59. அவ் அனைத்தின் மீதான விருப்பை நான் அழித்துவிட்டேன். அஞ்ஞான காரிருள் மிகுந்த கிலேச மலையை நான் பிளந்துவிட்டேன். மாரனே, அப்படியாயின் என்னை நீ அறிந்து கொள். இந்த விடயத்தில் தோல்வியுற்றது நீயே.
இந்த செய்யுள்கள் சேலா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
3.8.
சோமா எனும் தேரியின் செய்யுள்கள்.
60. (மாரன்) இந்த ‘அரஹத் நிலை’ என்பது உய்த்துணர்வதற்கும் உறுதி செய்து கொள்வதற்கும் மிக மிக கடினமான அருஞ்செயலாகும். புத்தர்மார்கள் மகா முனிவர்கள் என்போரே இதனை உய்த்துணர்ந்து கொள்வார்கள். இந்த இரண்டு விரல்களின் (சோற்றுப்பருக்கையை பதம் பார்ப்பதற்காக இரு விரல்களை பயன்படுத்தும்) சிறு அறிவுடைய பெண்ணால் அத்தகைய அருஞ்செயலை செய்துவிட முடியுமா?
61. (ஏய் மாரனே) மனம் ஒருங்கிணைந்து இருக்குமாயின் எமது பெண்மை தொடர்பாக என்ன செய்துவிட முடியும்? இந்த தர்மங்களை நன்கு விபஸ்ஸனா செய்து ஞானத்தை விருத்தி செய்து கொண்ட பின்னர் எமது பெண்மை தொடர்பாக என்ன செய்துவிட முடியும்?
62. எல்லாவற்றின் மீதும் கொண்டிருந்த ஆசையை அழித்துவிட்டேன். அஞ்ஞான காரிருள் மிகுந்த கிலேச மலையை நான் பிளந்துவிட்டேன். மாரனே, இவ்வாறாகத்தான் நீ இவ்விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.. இந்த விடயத்தில் தோல்வியுற்றது நீயே.
இந்த செய்யுள்கள் சோமா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
மூன்று செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்.
(திக நிபாதோ நிட்டிதோ)
நான்கு செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி
(சதுக்க நிபாதோ)
4.1.
பத்தாகாபிலானி தேரியின் செய்யுள்கள்.
63. மகா காஸ்யப தேரர் புத்த பகவானின் செல்வமாவார். புத்த பகவானது புத்திர மாணிக்கமாவார். ஒருங்கிணைந்த மனமுடைய அந்த உத்தமர் தம் திவ்விய விழிகளால் தம் முற்பிறப்புகளையும், தேவலோகங்களையும் நரகலோகங்களையும் காண்பார்.
64. அந்த மகா உத்தமர் பிறப்பை அழித்துவிட்டு அரஹத் நிலையை அடைந்துள்ளார். மூவகை ஞானங்களையும் பெற்றிருக்கிறார். அந்த உத்தமர் உண்மையிலேயே பிராம்மணராவர்.
65. பத்தாகாபிலானியும் அப்படித்தான். மூவகை ஞானங்களையும் பெற்றிருக்கிறார். சேனைகளுடன் கூடிய மாரனை தோற்கடித்தே இருக்கிறார். இப்போது அவளும் தம் இறுதி உடலையே தாங்கியிருக்கிறார்.
66. நாம் இருவரும் பிறவிப்பயணத்தின் பயங்கர நிலையை கண்டே துறவறத்தை மேற்கொண்டோம். நாம் இருவரும் (தர்மத்தினுள்) அடங்கிவிட்டோம். அரஹத் நிலையடைந்து விட்டோம். குளிர்ந்தோம். அணைந்துவிட்டோம்.
இந்த செய்யுள்கள் பத்தாகாபிலானி எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
நான்கு செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்.
(சதுக்க நிபாதோ நிட்டிதோ)
ஐந்து செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி
(பஞ்சக நிபாதோ)
5.1.
ஒரு தேரியின் செய்யுள்கள்.
67. நான் துறவறம் மேற்கொண்டு இருபத்தைந்து வருடங்களாகின்றன. இதுவரை ஒரு நொடிப்பொழுதேனும் என்னால் என் மனதை ஒருங்கிணைத்துக் கொள்ள முடியவில்லை.
68. மன ஒருமைப்பாட்டை பெற்றுக் கொள்ள முடியாமல், காம வேட்கையால் நனைந்த மனதுடன் நான் இருந்தேன். நான் என் இரு கைகளை தலையில் வைத்துக் கொண்டு அழுது புலம்பியபடி ஆராமத்தினுள் சென்றேன்.
69. நான் ஒரு தேரியின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தேன். நான் அந்த பிக்குணியிடம் சென்றேன். அந்த உத்தமி எனக்கு ஸ்கந்தங்கள், தாதுக்கள், புலன்கள் என்பன தொடர்பாக தர்மத்தை போதித்தார்கள்.
70. அந்த பிக்குணீ அவர்கள் போதித்த தர்மத்தை நான் நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டேன். ஒருபுறத்தில் அமர்ந்தேன் (தியானம் செய்தேன்). என்னால் இப்போது என் முற்பிறவிகளை காண முடியும். திவ்விய விழிகளையும் பெற்றுக் கொண்டேன்.
71. ஏனையோரது மனதை காணும் ஞானமும் இருக்கிறது. திவ்விய செவிகளையும் தூய்மைப்படுத்திக் கொண்டேன். சித்தாற்றல்களும் இருக்கின்றன. ஆஸவங்களை அழித்து அரஹத் நிலையையும் அடைந்தன்.
நான் எல்லா வகையான அபிக்ஞைகளையும் பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் ஒரு அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.2.
விமலா தேரியின் செய்யுள்கள்.
72. முன்னர் நான் மிக்க அழகாக இருந்தேன். அனைத்து வகையான சுகபோகங்களுடன் இருந்தேன். நான் அவற்றில் திளைத்திருந்தேன். இளமை எனும் மமதையால் மதி மயங்கியிருந்தேன். மிகுந்த அகங்காரத்துடன் இருந்தேன். ஏனைய பெண்களை இழிவானவர்களாக நினைத்திருந்தேன்.
73. நான் அந்நாட்களில் அழகாக ஆடை ஆபரணங்களால் இந்த உடலை அலங்கரித்துக் கொண்டேன். முட்டாள் மக்களின் வருனணைகளுக்கு ஏற்றாற்போன்று என்னை அழகுபடுத்திக் கொண்டு “கணிகையர் வீட்டு” முற்றத்தில் மான்களை வேட்டையாடுவதற்காக பொறி வைத்து காத்திருக்கும் வேடனைப் போன்று பார்த்திருந்தேன்.
74. நான் அந்நாட்களில் மறைத்துக் கொள்ள வேண்டிய உடற்பாகங்கள் வெளியே தெரியுமாறே ஆடைகளை அணிந்தேன். முட்டாள் மனிதர்கள் என்னிடம் இலகுவாகவே ஈர்க்கப்பட்டு வந்தார்கள். நான் குரலை உயர்த்தி தாழ்ந்தி சிரித்து பல்வேறு மாயைகளை செய்தேன்.
75. ஆனால் நான் இன்று என் தலைமுடியை மழித்து, இரு மடிப்புடைய சீவரத்தை தரித்து, வீடு வீடாக சென்று ஐயமேற்று வாழ்கிறேன். மரநிழல்களில் வசிக்கிறேன். த்யான நிலைகளுடன் கூடிய தியானங்களை செய்கிறேன். என்னுள் ஒருங்கிணைந்த மனமே இருக்கிறது.
76. திவ்வியமான கட்டுக்களையும் மனித கட்டுக்களையும் நான் இல்லாமல் செய்து கொண்டேன். அனைத்து ஆஸவங்களையும் அழித்துவிட்மேன். குளிர்ந்தேன். அணைந்தேன்.
இந்த செய்யுள்கள் விமலா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.3.
சீஹா தேரியின் செய்யுள்கள்.
77. முன்னர் நான் தவறான முறையிலேயே சிந்தித்தேன். காம இச்சையால் இந்த மனம் பெரிதும் பாடுபட்டது. என்னால் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமலே இருந்தேன். மனம் சிதறியே இருந்தது.
78. நான் இந்த எண்ணங்களை சுபமான வகையில் ஏற்றுக்கொண்டதாலேயே கிலேசங்களினால் தோன்றும் பீடைகள் தோன்றின. ஆசையில் மனம் மூழ்கி கொண்டமையினாலேயே உளச்சமாதி நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயிற்று.
79. நான் அந்நாட்களில் மிகவும் மெலிவாக இருந்தேன். உடல் விகாரமாகி அவலட்சணமாக இருந்தேன். ஏழு வருடங்களாக நான் இவ்வாறு துயர் அனுபவித்தேன். கிலேசங்களால் துக்கங்கள் அனுபவித்த என்னால், கழிந்த ஒவ்வொரு இரவு பகல் எனும் எந்நேரத்திலும் துறவறச்சுகத்தை (உளச்சமாதியை) பெற முடியாமல் போயிற்று.
80. கடைசியில் நான் கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு காட்டிற்கு சென்றேன். இழிவான இல்லற வாழ்வை நாடுவதை விட என் உயிரை மாய்த்துக்கொள்வதே உத்தமம் என்று நினைத்தேன்.
81. தூக்குக்கயிற்றை நன்கு ஒழுங்கமைத்துக் கொண்டு அதனை மரக்கிளையில் கட்டினேன். மறுமுனையை கழுத்தில் மாட்டிக்கொண்டேன். அச்சமயத்தில் இந்த மனம் அனைத்து விதமான கிலேசங்களில் இருந்தும் விடுதலை அடைந்தது.
இந்த செய்யுள்கள் சீஹா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.4.
சுந்தரீ நந்தா தேரியின் செய்யுள்கள்.
82. புண்ணியமிகு நந்தா, நோய்நொடிகள் தொற்றி கொள்ளும், அசுத்தமான, துர்நாற்றம் வீசும் இந்த உடலை தர்ம அறிவை அடிப்படையாகக் கொண்டு பாருங்கள். மனதை நன்கு ஒருங்கிணைத்துக் கொண்டு அசுப தியானத்தை செய்யுங்கள்.
83. இந்த உடலும் பிணத்தை போன்றதே. பிணமும் இந்த உடலை போன்றதே. பிணத்தில் இருப்பவையே இந்த உடலிலும் இருக்கின்றன. இந்த உடல் துர்நாற்றம் மிக்கது. எந்நேரமும் இதிலிருந்து அசுத்தமானவையே வெளியேறுகின்றன. ஆனால் முட்டாள் மனிதர்கள் இன்பத்தோடு ஏற்றுக்கொள்வதும் இந்த உடலையே.
84. இரவு பகல் எனும் இரு வேளைகளிலும் இவ்வாறாக உடலை அசுபமானதாக அறிவினால் ஆராயுங்கள். என்னுள்ளே பிறப்பித்துக் கொண்ட ஞானத்தினாhல் இதன் உண்மை நிலையை நான் கண்டுகொண்டேன்.
85. இவ்வாறாக தாமதமின்றி அறிவினால் ஆராயும் போது ‘தாம்’ என்று சொல்லிக்கொள்ளும் இந்த உடலும் பிறர் என்று சொல்லிக்கொள்ளும் பிற உடல்களும் உண்மையாகவே எத்தகையன என்பதனை உய்த்துணர்ந்து கொண்டேன்.
86. நான் அதன் மூலம் உய்த்துணர்வுடனேயே வெறுப்படைந்தேன். என்னுள்ளே நான் வேட்கையற்ற நிலையை தோற்றுவித்துக் கொண்டேன். தாமதின்றி அனைத்து கிலேசங்களில் இருந்தும் விடுதலையடைந்தேன். பரம ~hந்த நிலையை அடைந்தேன். அணைந்துவிட்டேன்.
இந்த செய்யுள்கள் சுந்தரீ நந்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.5.
நந்துத்தரா தேரியின் செய்யுள்கள்.
87. முன்னர் நான் அக்கினி தேவர், சந்திர தேவர், சூரிய தேவர் என்போரையே வணங்கினேன். கங்கைகளின் புண்ணிய தீர்த்தங்களை தேடிச்சென்று அந்த நீரில் இறங்கி பாவங்களை கழுவினேன்.
88. பல்வேறு வகையான விரதங்களை கடைபிடித்தேன். பாதி தலைமுiடியை மழித்துக் கொண்டேன். தரையில் படுத்து உறங்கினேன். எந்த உணவையும் இரவு வேளையில் உட்கொள்ளவில்லை.
89. அந்த குறிப்பிட்ட காலத்தை அவ்வாறு கழித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவேன். நன்றாக உடலை தேய்த்து தண்;ணீர் குளித்து என்னை தூய்மையாக்கிக் கொள்வேன். அதன் பின்னர் அழகாக ஆடை ஆபரணங்களை அணிந்து என்னை அலங்கரித்துக் கொள்வேன். காமவேட்கையில் மூழ்கி இந்த உடலை அதன் மூலம் தணித்துக் கொள்வேன்.
90. ஆனால் இப்போது நான் அவ்வாறில்லை. புத்த சாசனம் தொடர்பாக பெரும் பக்தி என்னுள் தோன்றியது. நான் இந்த புத்த சாசனத்தில் துறவறத்தை மேற்கொண்டேன். இந்த உடலில் உண்மை நிலையை பார்க்கும் போது காமவேட்கை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
91. பிறப்பிற்கு வழிவகுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் முழுமையாக அழித்துவிட்டேன். விரும்பும் விடயங்கள், இப்போது என்னுள் பிரார்த்திக்கும் விடயங்கள் இல்லை. அனைத்து கிலேசங்களில் இருந்தும் விடுதலையடைந்து மனச்சாந்தியை பெற்றுக்கொண்டேன்.
இந்த செய்யுள்கள் நந்துத்தரா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.6.
மித்தாகாலீ தேரியின் செய்யுள்கள்.
92. நான் சிரத்தையை அடிப்படையாகக் கொண்டே இல்லறத்தை விட்டு துறவறத்தை மேற்கொண்டேன். துறவறத்தை மேற்கொண்ட பின்னர் நான் இலாப உபசாரங்களுக்கு ஏமாறினேன். நான் அவற்றையே தேடி அலைந்தேன்.
93. உண்மையிலேயே நான் பெறுமதியான அர்த்தத்தை (தர்மத்தை) விட்டு இழிவான விடயத்தையே தேடி அலைந்திருக்கிறேன். ஞானப்பேற்று நிலைகள் தொடர்பாக என்னுள் எவ்வித புரிதலும் இருக்கவில்லை.
94. நான் என் குடிலில் இருக்கும்போது என்னுள் பெரும் சங்கட நிலை தோன்றியது. “ஆசையால் திளைத்த காரணத்தினால் தானே நான் தவறான பாதையில் பயணித்தேன்” என்று.
95. எனக்கு வாழ்வதற்கு இன்னும் சிறிது காலமே இருக்கிறது. அதன் பிறகு முதுமையும் நோய்களும் என்னை அடிமைப்படுத்திவிடும். கடைசியில் இந்த உடல் முதுமையடைந்து இற்றுப்போய் அழிந்துவிடும். இனிமேலும் தாமதிக்க காலம் இல்லை.
96. ஐவகை உபாதானஸ்கந்தங்கள் ஒழுங்கமையும் முறை மற்றும் அழிந்துபோகும் விதம் எனும் நிலைகளை நான் அறிவினால் ஆராய துவங்கினேன். அதன் மூலம் நான் கிலேசங்களில் இருந்து விடுதலையடைந்து மோட்சத்தை உறுதி செய்தேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் மித்தாகாலீ எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.7.
சகுலா தேரியின் செய்யுள்கள்.
97. நான் வீட்டில் வாழ்ந்திருக்கும் காலத்தில் ஒரு பிக்குவின் மூலம் தர்மத்தை கேட்டறிந்து கொண்டேன். அந்த தர்மத்தை கேட்ட பின்னர் நான் கிலேசங்களற்ற மரணங்களற்ற மோட்சத்தை கண்டு கொண்டேன்.
98. அதன் பின்னர் நான் என் மகனையும் மகளையும் துறந்தேன். சொத்து சுகங்களை கைவிட்டேன். தலைமுடியை மழித்துக் கொண்டு நான் துறவறத்தை மேற்கொண்டேன்.
99. சிக்கமாணவியாக இருக்கும் காலத்திலேயே நான் மோட்ச மார்க்கத்தை பயிற்சி செய்வதற்கு ஆரம்பித்தேன். அதன் பின்னர் நான் ஆசை கோபம் இரண்டுடன் இருக்கும் கிலேசங்களை அழித்துக் கொண்டேன்.
100. காரணங்களால் தோற்றம் பெற்ற அழிந்து ஒழிந்து போகும் சங்ஸ்காரங்களை நான் ஆத்மமற்ற வகையில் கண்டு கொண்டேன். அனைத்து வகையான ஆஸவங்களையும் அழித்துக் கொண்டேன். குளிர்ந்த நிலையடைந்தேன். அணைந்து போனேன்.
இந்த செய்யுள்கள் சகுலா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.8.
சோணா தேரியின் செய்யுள்கள்.
102. இந்த உடலின் காரணத்தால் நான் பத்து பிள்ளைகளை ஈன்றெடுக்க வேண்டியதாயிற்று. அதன் காரணமாகவே நான் மிகவும் பலவீனமானேன். கடைசியில் நான் ஒரு பிக்குணியிடம் சென்றேன்.
103. அந்த பிக்குணி எனக்கு ஸ்கந்தங்கள், தாதுக்கள் மற்றும் புலன்கள் தொடர்பாக தர்மத்தை போதித்தார். நான் கேட்ட அந்த தர்மத்தை நன்கு நினைவில் வைத்துக் கொண்டேன். தலைமுடியை மழித்துக் கொண்டு துறவறத்தை மேற்கொண்டேன்.
104. நான் சிக்கமாணவியாக இருக்கும் காலத்திலேதான் நான் எனது திவ்விய கண்கள் எனும் ஞானத்தை பெற்றுக் கொண்டேன். நான் இதற்கு முன் வாழ்ந்த பிறப்புகள் தொடர்பாக புப்பேனிவாச ஞானத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.
105. நான் என் மனதை முறையாக ஒருங்கிணைத்து விபஸ்ஸனா செய்தேன். அதன் மூலம் அரஹத் நிலையடைந்தேன். பிணைப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு நிரந்தரமாக அணைந்துவிட்டேன்.
106. ஐவகை உபாதானஸ்கந்தங்களை நான் ஊடுருவிக் கண்டு கொண்டமையால் இப்போது அவை வேர்களின்றியே இருக்கின்றன. ஏய், இழிவான முதுமையையே உனக்கு நிந்தனைகளாகட்டும்! இப்போது எனக்கு மேலும் பிறப்பதற்கு மறுபிறவிகள் இல்லை.
இந்த செய்யுள்கள் சோணா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.9.
பத்தாகுண்டலகேசா தேரியின் செய்யுள்கள்.
107. நான் முன்னர் ஒரு விகாரமானதொரு வாழ்க்கையையே வாழ்ந்தேன். பனங்கொட்டைகளை பயன்படுத்தி தலைமுடியை பிடுங்கினேன். பல் துலக்கவில்லை. ஒரு துணியை மட்டும் அணிந்து கொண்டு வாழ்ந்தேன். அந்த காலத்தில் நான் சரியான விடயங்களை பிழையான விடயங்களாகவும் பிழையான விடயங்களை சரியானவையாகவும் கருதி வாழ்ந்து வந்தேன்.
108. அன்று பகல் பொழுதிற்கு பின்னர் சங்கையர் புடைசூழ கிஜ்ஜகூட பர்வதத்தில் இருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த புத்த பகவானைக் கண்டேன்.
109. நான் புத்த பகவான் முன்னிலைக்கு சென்றேன். மண்டியிட்டு இருகைகளை கூப்பி அந்த புருN~hத்தமரை வணங்கினேன். “புண்ணியமிகு பத்தா, இங்கு வாருங்கள்” என்று புருN~hத்தமர் என்னைப் பார்த்து கூறினார். அதுவே எனது உபசம்பதாவாகும்
110. நான் முன்னர் அங்க தேசம், மகத தேசம் வஜ்ஜி, காசி, கோசலை எனும் குடியரசுகளின் நடந்து திரிந்தேன். இப்போதும் நான் அங்கு நடந்து செல்கிறேன். ஆனால் கடன்களின்றி. அரஹத் பிக்குணியாக ஐயமேற்கும் அன்னத்தை உண்பதற்கு ஆரம்பித்து இப்போது ஐம்பது வருடங்களாகின்றன.
111. இந்த ஞானமுள்ள உபாசகர், உண்மையிலேயே பெரும் புண்ணியத்தை தம் வாழ்விற்கு சேகரித்துக் கொண்டார். அனைத்து விதமான கிலேசங்களில் இருந்தும் விடுதலையடைந்த பத்திரா பிக்குணிக்கே அவர் இந்த சீவரத்தை பூஜித்தார் (அளித்தார்).
இந்த செய்யுள்கள் பத்தாகுண்டலகேசா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.10.
பட்டாசாரா எனும் தேரியின் செய்யுள்கள்.
112. இந்த மனிதர்கள் கலப்பைகளினால் வயல்களை உழுது, வயலில் நெல் விதைத்து, மனைவி மக்களை போசிப்பதற்காக செல்வம் ஈட்டுகின்றனர்.
113. ஒழுக்கமாக வாழ்ந்து கொண்டு புத்த சாசனத்தில் ஈடுபடுகின்ற, சோம்பலற்ற, அகங்காரங்களற்ற நான் மோட்சத்தை உய்த்துணராமல் எப்படி இருக்க முடியும்?
114. நான் எனது பாதங்களை கழுவி கொள்வதற்காக தண்ணீரை எடுத்து பாதத்தில் ஊற்றினேன். பாதங்களை ஊற்றிக்கொண்ட அந்த தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி வலிந்தோடுவதை நான் கண்டேன்.
115. உயர் வகை குதிரையைப் போன்று நான் அந்த விடயத்தை நன்றாக என் மனதில் பதித்துக் கொண்டேன். அதன் பிற்கு நான் விளக்கை எடுத்துக் கொண்டு குடிலுக்குள் சென்றேன்.
116. விளக்கொளியால் கட்டிலை கண்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டேன். விளக்கை அணைப்பதற்காக விளக்குத்திரியை கீழிறக்கினேன். அந்த விளக்கு அணைந்து போவதைப் போன்று இந்த மனம் கிலேசங்களில் இருந்து விடுதலையடைந்தது.
இந்த செய்யுள்கள் பட்டாசாரா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
5.11
முப்பது தேரிக்களின் செய்யுள்கள்.
117. மனிதர்கள் உலக்கைகளால் தானியங்களை இடிக்கின்றனர். (அதன் மூலம்) அவர்கள் தம் மனைவி மக்களையும் போசித்துக்கொண்டு செல்வத்தையும் ஈட்டிக்கொள்கின்றனர்.
118. ஏதேனும் செய்த பின்னர் அதனை நினைத்து பின்வருந்தாவிடில், அத்தகைய புத்த அறிவுரைகளையே செய்ய வேண்டும். விரைவாக பாதங்களை கழுவிக்கொள்ளுங்கள். சுதந்திரமான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொள்ளுங்கள்.
119. பட்டாசாரா எனும் மகா தேரியே இவ்வாறாக அந்த பிக்குணீமார்களுக்கு அறிவுரை செய்தார். அந்த பிக்குணீமார்களும் இந்த அறிவுரையை நன்றாக செவிமடுத்துக் கொண்டனர். கால்களை கழுவிக் கொண்டனர். தனிமையான இடங்களில் அமர்ந்து கொண்டனர். மன ஒருமைப்பாட்டை தம்முள் தோற்றுவித்துக் கொண்டனர். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டனர்.
120. அன்று இரவின் முதலாம் சாமத்தில் முற்பிறவிகளை காணும் ஞானமான புப்பேனிவாசானுஸ்ஸதி எனும் ஞானத்தை தோற்றுவித்துக் கொண்டனர். நடுசாமத்தில் திவ்விய கண்களை (சுதூபபாத ஞானத்தை) தூய்மைப்படுத்திக் கொண்டனர். மூன்றாம் சாமத்தில் அஞ்ஞானம் எனும் காரிருளிலான கிலேச மலையை பிளந்துவிட்டனர்.
121. “நாம் தங்களது அறிவுரையின் படி நடந்து கொண்டோம்” என்று அந்த பிக்குணியர் பட்டாசாரா எனும் மகா தேரியின் பாதங்களை வணங்கினர். சுர அசுர யுத்தத்தை வென்ற பின்னர் தாவதின்ச தேவலோக தேவர்கள் தேவேந்திரனை எவ்வாறு போற்றுவார்களோ அதேபோன்று நாமும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்போம். நாம் அனைவரும் மூவகை ஞானங்களை பெற்றுக்கொண்டு கிலேசங்களற்று இருக்கின்றோம்.
இந்த செய்யுள்கள் முப்பது தேரிக்களினால் மொழியப்பட்டவையாகும்.
5.12.
சந்தா மேரியின் செய்யுள்கள்.
122. முன்னர் நான் கணவரின்றி பிள்ளைகளுமின்றி மிக்க துயரத்துடன் வாழ்ந்து வந்தேன். உற்றார் உறவினர்களும் இல்லாமல் வாழ்ந்த எனக்கு சாப்பிடுவதற்கு உணவோ உடுத்துவதற்கு உடையோ இருக்கவில்லை.
123. நான் மற்பாத்திரமொன்றை கையில் எடுத்துக்கொண்டு ஊன்றுகோலை ஊன்றிக்கொண்டு வீடு வீடாக பிச்சை எடுத்து சாப்பிட்டேன். வெயிலினால் காய்ந்தும் மழையினால் நனைந்தும் பெரும் அவஸ்தை பட்டேன். இவ்வாறாக ஏழு வருடங்கள் வாழ்ந்து வந்தேன்.
124. ஒருநாள் அன்னம் நிறைய கிடைக்கும் பட்டாசாரா தேரியை கண்டேன். அந்த உத்தமியிடம் சென்று நான் என்னையும் துறவு பூணச்செய்யுங்கள் என வேண்டி நின்றேன்.
125. அந்த மகா உத்தமியான பட்டாசாரா தேரி என் மீது மிகவும் அனுதாபம் கொண்டார்கள். என்னை துறவுபூணச் செய்தார்கள். எனக்கு தர்ம அறிவுரைகள் செய்து என்னை உன்னதமான வாழ்வில் ஈடுபடுத்தினார்கள்.
126. அந்த மகா உத்தமியின் பேச்சைக் கேட்ட நான் அந்த அறிவுரைகளை பின்பற்றினேன். அந்த மகா தேரியின் அறிவுரைகள் வெறுமையானவையல்ல. இப்போது நானும் மூவகை ஞானங்களை பெற்ற நிக்கிலேசமான ஒருவர்.
இந்த செய்யுள்கள சந்தா எனும் அரஹத்; தேரியால் மொழியப்பட்டவையாகும்.
ஐந்து செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி முற்றும்.
(பஞ்சக நிபாதோ நிட்டிதோ)
ஆறு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(சக்க நிபாதோ)
6.1.
ஐந்நூறு தேரிக்களின் செய்யுள்கள்.
127. இந்த உலகிற்கு எங்கிருந்து வந்தோம் என்பதனையும் அறியோம். இந்த உலகிலிருந்து எங்கே போவோம் என்பதனையும் அறியோம். இவ்வறாக வந்த வழியும் அறியாமல் போகும் வழியும் தெரியாமல் எங்கிருந்து வந்த ஒருவரைப் பற்றி “எனது மகனே” என்று அழுகிறீர்கள்?
128. இந்த உலகிற்கு எவ்வாறு வந்தோம் என்பதனையும் அறியாமல், இந்த உலகிலிருந்து போவது தொடர்பாகவும் அறியாத இந்த பிறவிப்பயணம் தொடர்பாக எவரேனும் அறிந்து கொண்டால் அவர் சோகங்கொள்ள மாட்டார். இது உயிர்களின் இயல்பு என்பதனை அவர் உய்த்துணர்ந்து கொள்வார்.
129. வேண்டிக்கொள்ளாமலேயே இந்த உலகிற்கு வந்தோம். அனுமதி பெறாமலேயே இந்த உலகிலிருந்து செல்கிறோம். ஏதேனும் உலகிலிருந்து இங்கு வந்து சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் வேறு உலகிற்கு செல்வோம். மீண்டும் அந்த உலகிலிருந்து மறைந்து வேறு உலகில் பிறக்க வேண்டியதுதான்.
130. மரணித்தவர் இங்கு மனிதராக நடமாடி மீண்டும் சென்றுவிட்டார். எவ்வாறு வந்தோரோ அவ்வாறே சென்றுவிட்டார். அது அப்படியாயின் அது தொடர்பாக அழுது புலம்புவதற்கு என்ன இருக்கிறது.
131. நான் புத்திர சோகத்தால் மிக்க துயரத்துடனேயே இருந்தேன். அந்த மகா தேரி என் இதயத்தில் குத்தப்பட்டிருந்த காண்பதற்கு கடினமான புத்திர சோகம் எனும் கூரிய ஈட்டியை பிடுங்கியெறிந்தார்.
132. இன்று நான் அந்த சோகம் எனும் ஈட்டியை பிடுங்கியெறிந்து இருக்கிறேன். அணைந்து போயிருக்கிறேன். வேட்கையை முழுமையாக அழித்தே இருக்கிறேன். நான் புத்த பகவான், உத்தம தர்மம், உன்னத சங்கையர் எனும் இந்த மும்மணிகளின் புகலிடத்தை அடைந்தேன்.
இந்த செய்யுள்கள் ஐந்நூறு தேரிக்களினால் மொழியப்பட்டவையாகும்.
6.2.
வாசெட்டி தேரியின் செய்யுள்கள்.
133. என் மகன் இறந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. சுயவுணர்வு இல்லாமல் போய்விட்டது. உடம்பில் இருந்த உடை கூட இல்லாமல் போனதை நான் உணரவில்லை. தலைமுடியை அவிழ்த்து கொண்டு ஆடையின்றி வீதி வீதியாக அலைந்து திரியும் நிலைதான் எனக்கு கிடைத்தது.
134. குப்பைக்குழிகள், இடுகாடுகள், வண்டி தரிப்பிடங்கள் என்பவற்றில் மூன்று வருடங்களான நான் அலைந்து திரிந்தேன். பசியாலும் தாகத்தாலும் நான் பெரும் அவதியடைந்தேன்.
135. புத்த பகவான் மிதிலை நகருக்கு வருகை தருவதை நானும் கண்டேன். அடக்கமில்லாத உயிர்களை தர்மத்தின் வழி அடக்குகின்ற எவ்விதமான பயங்களுமற்ற அந்த சம்புத்த மகா முனிவரை நான் கண்டு கொண்டேன்.
136. அந்த புருN~hத்தமரை கண்ட நொடியிலேயே நான் சுயவுணர்வை பெற்றேன். நான் பகவானது அருகே சென்று அந்த உத்தமரை வணங்கி நின்றேன். அந்த கௌதம மகா முனிவர் என் மீது அனுதாபம் கொண்டு தர்மத்தை போதித்தார்.
137. அந்த உத்தம தர்மத்தை செவிமடுத்த நான் புத்த சாசனத்தில் துறவறம் மேற்கொண்N;டன். அந்த மகா வழிகாட்டியின் அறிவுரைகளுக்கேற்ப வாழ்வை நடாத்திய நான் அந்த மோட்சத்தை உறுதி செய்து கொண்டேன்.
138. அனைத்து விதமான சோகங்களும், கவலைகளும் முற்று முழுதாக அழிந்துவிட்டன. சோகத்தினால் தோன்றுகின்ற அவ் அனைத்து எண்ணங்களையும் நான் ஊடுருவிக்கண்டேன்.
இந்த செய்யுள்கள் வாசெட்டி எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
6.3.
கேமா தேரியின் செய்யுள்கள்.
139. அன்பிற்குரிய கேமா, நீங்கள் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள். நானும் ஒரு இளைஞனாவேன். வாருங்கள். இனிமையான இன்னிசையை அனுபவித்தபடி காம சுகத்தில் திளைத்திருப்போம்.
140. (ஏய் மாரனே) அடிக்கடி நோய்களால் பீடிக்கப்படும், சீக்கிரமாகவே அழிந்து போகும் அசுத்தம் நிறைந்த இந்த உடலை நான் அருவருக்கிறேன். இந்த உடலைப் பற்றி நான் வெட்கம் அடைகிறேன். காம வேட்கையின் வேர்களைக் கூட நான் அழித்துவிட்டேன்.
141. காமங்கள் என்பன வி~மூட்டப்பட்ட ஆயுதங்களை போன்றனவாகும். ஐவகை உபாதானஸ்கந்தங்கள் என்பன மாமிசத்துண்டுகளை போன்றனவாகும். நீ சொல்லும் காம ரதி (ஆசை) என்பது எனக்கு அரதி (நிராசை) ஆகும்.
142. அனைத்து விடயங்களின் மீதான வேட்கைகளையும் நான் துறந்துவிட்டேன். ‘அஞ்ஞானம்’ எனும் கிலேச தொகுதியை நான் உடைத்தெறிந்து விட்டேன். மாரனே, அதனை இவ்வாறாக உணர்ந்து கொள்ள வேண்டும். மாரனே, இந்த விடயத்தில் நீயே தோல்வியுற்றாய்!.
143. அஞ்ஞான மனிதர்கள் முகூர்த்தங்களை வணங்கிக் கொண்டு, வனத்தில் அக்கினி தேவரை வணங்கிக் கொண்டு உண்மை நிலையை காணாமல் பரிசுத்தத்தை தேடுகிறார்கள்.
144. ஆனால் நான் வணங்குவதோ அந்த புருN~hத்தமரான புத்த பகவானையே. நான் அந்த வழிகாட்டியின் சாசனத்தை பின்பற்றிக் கொண்டு அனைத்து துக்கங்களில் இருந்தும் நீங்கிய ஒருவராவேன்.
இந்த செய்யுள்கள் கேமா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
6.4.
சுஜாதா தேரியின் செய்யுள்கள்.
145. நான் அன்று அழகாக ஆடை ஆபரணங்கள் அணிந்து என்னை அலங்கரித்துக் கொண்டு இருந்தேன். மலர் மாலைகளை சூடியிருந்தேன். சந்தனத்தை உடலில் பூசியபடி ஒளிவீசும் ஆபரங்களால் என்னை அலங்கரித்துக் கொண்டு தாசிகள் சூழ இருந்தேன்.
146. நிறைய அன்ன வகைகளையும் பான வகைகளையும் தயார் செய்து கொண்டு நந்தவனத்திற்கு களியாட்டத்திற்காக சென்றேன்.
147. நந்தவனத்திற்கு சென்று உண்டு களித்து சந்தோ~மாக இருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது சாகேத நகரின் அஞ்சன வனத்தின் விகாரையை பார்க்கச் சென்றேன்.
148. மூவுலகையும் பிரகாசிக்கும் சூரியனைப் போன்று அங்கே புத்த பகவான் வீற்றிருந்தார். நான் பகவானது அருகே சென்று வணங்கி நின்றேன். தர்மவிழிகளை கொண்ட புத்த பகவான் என் மீது அனுதாபம் கொண்டு தர்மத்தை போதித்தார்.
149. அவர் மாபெரும் முனிவராவார். அந்த புத்த பகவானது தர்மத்தை செவிமடுத்த நான் நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொண்டேன். நான் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருக்கும் போதே என்னால் வேட்கைகளற்ற மோட்சத்தை உறுதி செய்யக்கூடியதாக இருந்தது.
150. இவ்வாறாக தர்மத்தை அறிந்தே நான் புத்த சாசனத்தில் துறவறம் மேற்கொண்னே;. நானும் மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டேன். புத்த சாசனம் என்பது வெறுமையானதல்ல.
இந்த செய்யுள்கள் சுஜாதா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
6.5.
அனுபமா தேரியின் செய்யுள்கள்.
151. பெரும் செல்வச்செழிப்புடைய உயர் குடும்பத்திலேயே நான் பிறந்தேன். நான் ‘மேக’ சீமானின் புதல்வியாவேன். அக்காலத்தில் நான் மிகவும் அழகாக இருந்தேன்.
152. அரச குமாரர்களும் செல்வந்த குமரர்களும் என்னை மிகவும் விரும்பினார்கள். “அனுபமாவை எனக்கு மணம் முடித்து தாருங்கள்” என்று என் தந்தையாருக்கு தூதர்களை அனுப்பினார்கள்.
153. “உங்களது அனுபமா மகளை தராசின் ஒரு பக்கம் வைத்து அடுத்த பக்க தட்டில் அவளது எடைக்கு நிகரான செல்வத்தை அளிப்பதற்கு வேண்டுமென்றால், நாம் அதனில் எட்டு மடங்கு அதிகமாக பொன்னையும் மாணிக்கங்களையும் தருகிறோம்” (என்று அவர்கள் தூதர்களிடம் செய்தி அனுப்பினார்கள்).
154. ஆனால் முழு உலகிற்கும் மேன்மையாளரான புருN~hத்தமரான புத்த பகவானை நான் கண்டேன். அந்த பரமோத்தமரது திருப்பாதங்களை வணங்கி ஒருபுறத்தில் அமர்ந்து கொண்டேன்.
155. கௌதம புத்த பகவான் என் மீது அனுதாபம் கொண்டு எனக்கு தர்மத்தை போதித்தார். நான் அந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போதே அநாகாமீ எனும் ஞானப்பேற்று நிலையை அடைந்தேன்.
156. அதன் பின்னர் நான் எனது தலைமுடியை மழித்துக் கொண்டு துறவறத்தை மேற்கொண்டேன். வேட்கையை முழுமையாக இல்லாதொழித்து இன்றைக்கு ஏழு நாட்களாகின்றன.
இந்த செய்யுள்கள் அனுபமா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
6.6.
மகா பிரஜாபதீ தேரியின் செய்யுள்கள்.
157. அனைத்து உயிர்களக்கும் மேன்மையான உத்தம சம்மா சம்புத்த வீரரே, தங்களுக்கு எனது வந்தனங்கள்! என்னையும் ஏனைய எண்ணிலடங்காத உயிர்களையும் இந்த பிறவிப்பயணத்திலிருந்து கரையேற்றியவர் தாங்களே.
158. நான் இந்த துக்கத்தை ஊடுருவிக்கண்டு கொண்டேன். துக்கத்தை தோற்றுவிக்கும் வேட்கையை முழுமையாகவே இல்லாதொழித்தேன். ஆரிய எண்சீர் வழியை பரிபூரணமாக்கிக் கொண்டேன். துக்க அழிவு எனும் மோட்சத்தையும் உறுதி செய்து கொண்டேன்.
159. வாழ்வின் உண்மையான இயல்பு எனும் யதார்த்தத்தை அறியாமல் எவ்வித புகலிடமுமின்றி பிறவிப்பயணத்தில் பயணிக்கும் போது நான் சில பிறவிகளில் தாயானேன். சில பிறவிகளில் மகனானேன். வேறு சில பிறப்புகளில் தந்தையானேன். சில பிறப்புகளில் சகோதரரானேன். சில பிறவிகளில் பாட்டியானேன்.
160. நான் தர்மத்தினூடாக பாக்கியமுள்ள புத்த பகவானை கண்டு கொண்டேன். நான் இப்போது என் இறுதி உடலையே தாங்கிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மீண்டும் பிறக்கின்ற பிறவிப்பயணம் தேய்ந்து போய்விட்டது. எனக்கென்றால் மீண்டும் மறுபிறவிகள் இல்லை.
161. துவங்கப்பட்ட வீரியத்துடனேயே இருக்கின்ற, உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தர்மத்திலேயே ஈடுபட்ட, எந்நேரமும் வீர பராக்கிரமத்துடன் இருக்கின்ற, ஒற்றுமையான பகவானது சீடர்களான சங்கையரை காணுங்கள். புத்த வந்தனம் என்று சொல்லப்படுவது அதற்கே.
162. மகாமாயா தேவியார், அநேக உயிர்களின் உய்விற்காகவே சித்தார்த்த கௌதமரை இவ்வுலகிற்கு ஈன்றெடுத்தார். அதன் காரணமாகவே நோய்நொடிகளாலும் மரணத்தாலும் பீடிக்கப்பட்ட இந்த உயிர்களின் துக்கங்கள் அகன்று போயின.
இந்த செய்யுள்கள் மகா பிரஜாபதீ எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
6.7.
குத்தா தேரியின் செய்யுள்கள்.
163. புண்ணியமிகு குத்தா, நீங்கள் உங்கள் அன்பிற்குரிய பிள்ளைகள், சொத்துக்கள் என்பனவற்றை துறந்து, புனிதமான அர்த்தத்துடனேயே துறவறத்தை மேற்கொண்டீர்கள். எனவே நீங்கள் அதன்படியே நடந்து கொள்ள வேண்டும். மனதிற்கு ஒருபோதும்; ஏமாற வேண்டாம்!
164. இந்த உயிர்கள் மனதிற்கே ஏமாறுகின்றனர். அதன் பின்னர் மாரனது இலக்குகளில் ஒட்டி வாழ்கின்றனர். அவர்களால் உண்மையை காண முடியாது. இறுதியில் அவர்கள் பல்வேறு பிறவிகளில் பிறந்து இறந்து இந்த சன்சாரப்பயணத்தில் பயணிக்க வேண்டிய நிலையே ஏற்படுகிறது.
165. காம வேட்கை, கோபம், சக்காய திட்டி (நான், எனது, என்னுடைய ஆத்மம் எனும் திரு~;டி), சிPலப்பத பராமாசம் (தவறான விரதங்கள்), விசிகிச்ச (தர்மத்தின் மீதான ஐயம்) எனும் இந்த ஐந்து விடயங்கள்.
166. (பிறவிப்பயணத்தில் உயிர்களை கட்டுண்டு வைத்திருக்கும்) இந்த சங்யோஜனங்கள் ஐந்தையும் அழித்த பின்னர் அந்த பிக்குணீ மீண்டும் காமம் சார்ந்த உலகில் பிறக்கமாட்டார்.
167. மீதமான ஐந்து வகை சங்யோஜனங்களான : ரூப ராக, அரூப ராக, மான, உத்தச்ச, அவிஜ்ஜா எனும் இந்த ஐந்தையும் அழித்துக்கொண்டு எல்லா துக்கங்களையும் முடித்துவிடுங்கள்.
168. மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இயல்புடைய பிறவிப்பயணத்தை முடித்துக்கொண்டு, துக்கத்தை அழித்து, இந்த வாழ்விலேயே வேட்கையை இல்லாதொழித்து, பரம ~hந்த நிலையுடன் வசித்திருங்கள்.
இந்த செய்யுள்கள் குத்தா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
6.8.
விஜயா தேரியின் செய்யுள்கள்.
169. என்னுள் மன ஒருமைப்பாடு சிறிதளவேனும் இருக்கவில்லை. மனதில் எவ்வித கட்டுபாடுகளும் இருக்கவில்லை. நான் நான்கைந்து முறை ஆராமத்தில் இருந்து வெளியேறிச் சென்றேன்.
170. இறுதியாக நான் கேமா எனும் மகா தேரியிடம் சென்றேன்;. நான் அவர்களிடமிருந்து தர்ம விடயங்கள் தொடர்பாக நன்கு கேட்டறிந்து கொண்டேன். அந்த உத்தமி எனக்கு தாதுக்கள், புலன்கள் என்பன தொடர்பாக தர்மத்தை போதித்தார்கள்.
171. உன்னத மோட்சத்திற்கு இட்டுச்செல்லும், அந்த நாற்பேருண்மைகள், ஐவகை இந்திரிய தர்மங்கள், ஐவகை சக்தி தர்மங்கள், எழுவகை போதியங்க தர்மங்கள், ஆரிய எண்சீர் வழி என்பனவற்றையும் அவர்கள் எனக்கு போதித்தார்கள்.
172. அந்த உத்தமியின் மூலம் சம்மா சம்புத்த பகவானது அறிவுரைகளை அறிந்து கொண்ட நான் அந்த அறிவுரைகளின்படி நடந்து கொண்டேன். அன்று இரவின் முதலாம் சாமத்தில் புப்பேனிவாசானுஸ்ஸதி எனும் ஞானத்தை பெற்று கொண்டேன்.
173. நடுசாமத்தில் திவ்விய கண்களை (சுதூபபாத ஞானத்தை) தூய்மைப்படுத்திக் கொண்டேன். அதிகாலைப் பொழுதில் அஞ்ஞானம் எனும் காரிருளிலான கிலேச மலையை பிளந்துவிட்டேன்.
174. நான் அப்போது பேரின்பத்தையும் சுகத்தையும் உடல் முழுவதும் பரப்பியபடியே இருந்தேன். அஞ்ஞான காரிருளை அழித்தொழித் நான் ஏழாவது தினத்தன்றே மடித்திருந்த கால்களை நீட்டினேன்.
இந்த செய்யுள்கள் விஜயா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
ஆறு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி முற்றும்.
(சக்க நிபாதோ நிட்டிதோ)
ஏழு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(சத்தக நிபாதோ)
7.1.
உத்தரா தேரியின் செய்யுள்கள்.
175. மனிதர்கள் உலக்கைகளால் தானியங்களை இடித்துக் கொள்கின்றனர். (அதன் மூலம்) அவர்கள் தம் மனைவி மக்களையும் போசித்துக்கொண்டு செல்வத்தையும் ஈட்டிக்கொள்கின்றனர்.
176. ஏதேனும் செய்த பின்னர் அதனை நினைத்து பின்வருந்தாவிடில், அத்தகைய புத்த அறிவுரைகளையே செய்ய வேண்டும். விரைவாக பாதங்களை கழுவிக்கொள்ளுங்கள். தனிமையான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
177. நன்றாக மனதை ஒருங்கிணைத்துக் கொண்டு, மனதை நிலைநிறுத்திக் கொண்டு, இந்த சங்ஸ்காரங்கள் (காரண காரியங்களால் தோற்றம் பெற்றவை) அநாத்மமானவையாக (தம் வசத்தில் வைத்திருக்க முடியாத ஆத்மமற்றவைகளாக) அறிவினால் காணுங்கள். ஆத்மமானவையாக நினைக்க வேண்டாம்.
178. அந்த மகா தேரியின் இந்த அறிவுரையை நன்றாக மனதில் ஏற்றிக்கொண்டேன். அந்த அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்து கொண்டேன். கால்களை கழுவிக் கொண்டேன். தனிமையானதொரு இடத்தில் அமர்ந்து கொண்டேன்.
179. அன்று இரவின் முதலாம் சாமத்தில் புப்பேனிவாசானுஸ்ஸதி எனும் ஞானத்தை தோற்றுவித்துக் கொண்டேன். இரவு நடுசாமத்தில் திவ்விய கண்களை (சுதூபபாத ஞானத்தை) தூய்மைப்படுத்திக் கொண்டனர்.
180. இரவு முடியும் அதிகாலைப் பொழுதில் அஞ்ஞானம் எனும் காரிருளிலான கிலேச மலையை பிளந்துவிட்டேன். அன்று காலை நான் உட்கார்ந்திருந்த அந்த இடத்திலிருந்து மூவகை ஞானங்களை பெற்றவராகவே எழுந்தேன்.
181. தாவதின்ச தேவலோக தேவர்கள், சுர அசுர யுத்தத்தில் வென்ற தேவேந்திரனை எவ்வாறு வணங்குவார்களோ, அதேபோன்று நானும் தங்களை முன்னிலைப்படுத்தியே இருக்கிறேன். நானும் மூவகை ஞானங்களை பெற்ற நிக்கிலேசமானவராவேன்.
இந்த செய்யுள்கள் உத்தரா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
7.2.
சாலா தேரியின் செய்யுள்கள்.
182. அந்த பிக்குணி சிரத்தை உட்பட்ட இந்திரிய தர்மங்களை தன்னுள் நன்கு விருத்தி செய்து கொண்டே இருக்கிறார். மிக சிறப்பான முறையில் விழிப்புணர்வை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். சங்ஸ்காரங்களை தணித்துக் கொண்டதால் தோன்றும் பேரின்பத்தை கொண்டிருக்கிறார். சங்ஸ்காரங்களை தணித்துக் கொள்வதன் பேரின்பமான பரம ~hந்தமான மோட்சத்தை உய்த்துணர்ந்தே இருக்கிறார்.
183. (மாரன்) நீ உன் தலைமுடியை யாருக்காக மழித்துக் கொண்டாய்? சிரமணியைப் போன்றே தோற்றமளிக்கிறாய். தவசியாவதை ஏன் விரும்பவில்லை. அறியாமையில் திளைத்திருக்கிறாய் அல்லவா?
184. (ஏய் மாரனே) தவசிகள் புத்த சாசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் பல்வேறு கருத்து வாதங்களில் சிக்கியே இருக்கிறார்கள். அவர்களால் இந்த தர்மத்தை காண முடியாது. அவர்கள் இந்த தர்மத்தை காண்பதற்கான திறமையற்றவர்கள்.
185. ஆனால் சாக்கிய வம்சத்தில் தோன்றிய ஒப்புவமையற்ற மகா முனிவரே புத்த பகவான். அந்த மகா உத்தமர், இவ் அனைத்து த்ரு~;டிக்களையும் மீறிச்செல்லும் தர்மத்தையே எனக்கு போதித்தார்.
186. அந்த தர்மமானது இந்த நாற்பேருண்மைகளாகும். துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்கத்தின் அழிவு, துக்கத்தை அழிக்கும் மார்க்கம் எனும் இவையாகும்.
187. அந்த பரமோத்தமரது புனிதமான வார்த்தைகளை கேட்டறிந்து கொண்டதன் பின்னர் நான் இந்த புத்த சாசனத்தில் விருப்புடன் ஈடுபட்டேன். நானும் மூவகை ஞானங்களை பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
188. எல்லாவற்றின் மீதும் கொண்டிருந்த ஆசையை அழித்துவிட்டேன். அறியாமை எனும் காரிருளை போக்கிவிட்டேன். மாரனே, நீ இவ் விடயத்தை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் நீயே தோல்வியுற்றாய்.
இந்த செய்யுள்கள் சாலா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
7.3.
உபசாலா தேரியின் செய்யுள்கள்.
189. அந்த பிக்குணி மிக சிறப்பான முறையில் விழிப்புணர்வை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் தர்மவிழிகள இருக்கின்றன. சிரத்தை உட்பட்ட இந்திரிய தர்மங்களை தன்னுள் நன்கு விருத்தி செய்து கொண்டே இருக்கிறார். சத்புரு~ சகவாசத்தினால் அந்த பிக்குணியும் பரம ~hந்தமான மோட்சத்தை உறுதி செய்து கொண்டார்.
190. (மாரன்) ஏன் நீ பிறப்பதற்கு விரும்பவில்லை? பிறப்பதன் மூலமே காம சுகங்களை அனுபவிக்க முடியும்? காம சுகங்களை விரும்பி இந்த ஐவகை காமங்களை அனுபவித்து வாழ். பின்னர் வருந்த வேண்டாம்!
191. (ஏய் மாரனே) பிறக்கும் ஒருவருக்கே மரணம் இருக்கிறது. பிறக்கும் ஒருவருக்கே கைகால் முறிவுகள் ஏற்படும். பிறப்பவருக்கே சித்திர வதைகள் அனுபவிக்க நேரிடும். பிறக்கும் ஒருவருக்கே கிலேசங்கள் தோன்றும். பிறக்கும் ஒருவரே துக்கங்களுக்கு ஆளாவார்.
192. சாக்கிய வம்சத்தில் தோன்றிய தோல்விகளற்ற புத்த பகவான் தரித்திருக்கிறார். அந்த புருN~hத்தமரே பிறப்புகளை மீறிச்செல்லும் இந்த தர்மத்தை மொழிந்தருளினார்.
193. துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்கத்தின் அழிவு, துக்கத்தை அழிக்கும் மார்க்கம் எனும் இந்த நாற்பேருண்மைகளே அந்த தர்மமாகும்.
194. அந்த பரமோத்தமரது புனிதமான வார்த்தைகளை கேட்டறிந்து கொண்டதன் பின்னர் நான் இந்த புத்த சாசனத்தில் விருப்புடன் ஈடுபட்டேன். நானும் மூவகை ஞானங்களை பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
195. எல்லாவற்றின் மீதும் கொண்டிருந்த ஆசையை அழித்துவிட்டேன். அறியாமை எனும் காரிருளை போக்கிவிட்டேன். மாரனே, நீ இவ் விடயத்தை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் நீயே தோல்வியுற்றாய்.
இந்த செய்யுள்கள் உபசாலா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
ஏழு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி முற்றும்.
(சத்தக நிபாதோ நிட்டிதோ)
எட்டு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(அட்டக நிபாதோ)
8.1.
சிசூபசாலா தேரியின் செய்யுள்கள்.
196. அந்த பிக்குணி மிகவும் ஒழுக்கமானவர். புலன்களை முறையாக அடக்கியே இருக்கிறார். இயல்பாகவே மிகவும் இனிமையான, மோட்ச சுவையை அவர் சுவைத்திருக்கிறார்.
197. (மாரன்) தாவதின்ச தேவலோகம், யாம தேவலோகம், துசித தேவலோகம், பரிநிம்மித வசவத்தீ தேவலோகம் போன்ற சுகம் நிறைந்த தேவலோகங்களில் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். நீங்களும் முன்னர் அந்த தேவலோகங்களில் தானே இருந்தீர்கள். அந்த சுகம் நிறைந்த தேவலோகங்களில் பிறப்பதற்காக உங்கள் மனதை நிலைப்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
198. (ஏய் மாரனே) தாவதின்ச தேவலோகம், யாம தேவலோகம், துசித தேவலோகம், பரிநிம்மித வசவத்தீ தேவலோகம் எனும் தேவலோகங்களில் வாழும் தேவர்கள்,
199. காலத்திற்கு காலம் ஒரு பிறப்பிலிருந்து இன்னுமொரு பிறப்பிற்கு இந்த ஐவகை உபாதானஸ்கந்தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டே பயணிக்கின்றனர். அவர்களால் இந்த ஐவகை உபாதானஸ்கந்தங்களை மீறிச்செல்ல முடியாது. அவர்கள் பிறந்து மடியும் பிறவிப்பயணத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
200. அனைத்து உலகங்களிலும் கிலேசங்களால் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. எல்லா உலகங்களும் இந்த இழிவான கிலேசங்களால் தீப்பற்றி எரிந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து உலகங்களையும் இந்த கிலேச தீச்சுவாலைகளே சூழ்ந்திருக்கின்றன. அனைத்து உலகங்களும் கிலேசங்களாலேயே கலக்கமுற்று இருக்கின்றன.
201. ஆனால் புத்த பகவான் நடுக்கங்களற்றவர். கலக்கமற்றவர். ஒப்பற்றவர். அந்த உத்தமருடன் புதுஜ்ஜன நிலையை மீறிச்சென்ற சத்புரு~ர்களே சூழ்ந்திருக்கிறார்கள். அந்த மகா புருN~hத்தமரே இந்த மேன்மையான தர்மத்தை போதித்தார். என் மனதில் எந்நேரமும் அந்த தர்மமே நிலைத்திருக்கிறது.
202. அந்த புருN~hத்தமரிடமிருந்து புனிதமான சொற்களை கேட்டறிந்து கொண்டேன். நான் இந்த புத்த சாசனத்தில் விருப்புடன் ஈடுபட்டேன். நானும் மூவகை ஞானங்களை பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
195. எல்லாவற்றின் மீதும் கொண்டிருந்த ஆசையை அழித்துவிட்டேன். அறியாமை எனும் காரிருளை போக்கிவிட்டேன். மாரனே, நீ இவ் விடயத்தை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் நீயே தோல்வியுற்றாய்.
இந்த செய்யுள்கள் சிசூபசாலா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
எட்டு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(அட்டக நிபாதோ நிட்டிதோ)
ஒன்பது செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(நவக நிபாதோ)
9.1.
வட்டமாதா தேரியின் செய்யுள்கள்.
204. மகனே வட்ட, இந்த உலகினுள் உங்களுக்கு கிலேச வனத்தை உருவாக்கிக் கொள்ள இடமளிக்க வேண்டாம் ! மகனே, மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும் இந்த துக்கத்தின் உடமையாளராக வேண்டாம்!
205. வட்ட, கிலேசங்களை அழித்த, சந்தேகங்களை அழித்த முனிவர்கள் மிகவும் சுகமாக வாழ்கின்றனர். அந்த நிக்கிலேச முனிவர்கள் தன்னை தர்மத்தினூடாக முறையாக அடக்கி தம்முள்ளே குளிர்ந்திருக்கின்றனர்.
206. வட்ட, நீங்களும் அந்த மகா ரி~pகள் பயிற்சி செய்த பாதையில் பயணியுங்கள். தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்ளுங்கள். துக்கங்களை முடித்துக் கொள்வதற்காக முயற்சி செய்யுங்கள்.
207. அன்னையே, தாங்கள் எவ்விதமான பயமும் அற்ற வகையிலேயே இந்த தர்மத்தை போதிக்கிறீர்கள். எனது அன்னையே, உண்மையாகவே உங்களுள் எவ்வித கிலேசங்களையும் காண முடியவில்லை.
208. மகனே வட்ட, இழிவான, உயர்வான, மத்தியஸ்தமான, எவ்வித சங்ஸ்காரங்களின் மீது அணுவளவேனும் என்னுள் வேட்கை இல்லை.
209. நான் தாமதமின்றி த்யான நிலைகளை மேம்படுத்தினேன். என் மனதில் இருந்த அனைத்து ஆஸவங்களும் அழிந்துவிட்டன. மூவகை ஞானங்களையும் பெற்றுக்கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
210. உண்மையிலேயே எனது தாயார் மேன்மையான சொற்களையே பேசினார். என் மீது பெரும் அனுதாபத்துடன் அர்த்தம் நிறைந்த அறிவுரைகள் செய்தார்.
211. எனது அம்மா சொல்லிக் கொடுத்த உன்னதமான அறிவுரைகளை கேட்டறிந்து கொண்டேன். அந்த அறிவுரைகளில் என்னை நிலைக்கச் செய்து கொண்டேன். மோட்சத்தை உய்த்துணர வேண்டும் எனும் பெரும் இலட்சியத்தை மனதில் கொண்டேன்.
212. இரவு பகலாக நான் இடைவிடாமல் முயற்சி செய்தேன். உயிரை பொருட்படுத்தாமல் தர்மத்தில் ஈடுபட்டேன். தர்மத்தில் ஈடுபட வேண்டும் எனும் உத்வேகத்தை மனதில் ஏற்படுத்திக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் வட்டமாதா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
ஒன்பது செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(நவக நிபாதோ நிட்டிதோ)
பதினொறு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(ஏகாதச நிபாதோ)
11.1.
கிசாகோதமீ தேரியின் செய்யுள்கள்.
213. எமது மகா முனிவர் சத்புரு~ நண்பர்களி;ன சகவாசமானது உயிர்களின் நன்மைக்கு காரணமாகும் விடயமாகவே வருணித்து பேசினார். சத்புரு~ நண்பர்களுடன் பழகும் முட்டாள் கூட அறிவாளியாவான்.
214. சத்புரு~ர்களுடனேயே பழக வேண்டும். சத்புரு~ சகவாசத்தினாலேயே ஞானம் வளரும். சத்புரு~ர்களுடன் பழகுபவர் அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுதலை அடைவார்.
215. சத்புரு~ சகவாசம் கொண்டிருப்பவர் துக்கத்தை உய்த்துணர்ந்து கொள்வார். துக்கத்தின் தோற்றத்தை அழித்துக் கொள்வார். துக்க அழிவு எனப்படும் மோட்சத்தை உறுதி செய்து கொள்வார். ஆரிய எண்சீர் வழி எனும்; துக்க அழிவிற்கான மார்க்கத்தை பயிற்சி செய்வார். நாற்பேருண்மைகளை உய்த்துணர்ந்து கொள்வார்.
216. புரிசதம்மசாரதி குணம் படைத்த புத்த பகவான் பெண்களின் வாழ்க்கை துயரமானது என்று போதித்திருக்கிறார். ஒரு கணவரின் கீழ் சம மனைவியாக (ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருள் ஒருத்தியாக) இருப்பதும் துக்கமாகும். ஒரு சில பெண்கள் தம் வாழ்வில் ஒரு தடவையே பிள்ளையை பெறுவாள்.
217. வேதனையை தாங்க முடியாமல் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விடுவார்கள். அந்த மென்மையான பெண்கள் வி~ம் அருந்தி மரணிப்பார்கள். சிலவேளை தாய்வயிற்றில் குழந்தை இறுகி அதன் காரணமாக தாயும் பிள்ளையும எனும் இருவரும் இறந்துவிடுவார்கள்.
218. பிள்ளை பிறக்கப்போவதை நான் உணர்ந்தேன். எனவே நான் எனது தாய்வீட்டை நோக்கி புறப்பட்டேன. ஆனால் என்னால் அங்கு செய்ய முடியவில்லை. வழியிலேயே குழந்தையை பிரசவித்தேன். வழியில் என் அன்பு கணவர் இறந்திருப்பதை நான் கண்டேன்.
219. மிகவும் துயரத்திற்கு உள்ளாகியிருந்த வேளை எனது இரு குழந்தைகளும் இறந்தனர். எனது அன்பிற்குரிய கணவரும் இறந்தார். எனது தாய் தந்தை மற்றும் சகோதரரின் உடல்கள் ஒரே சுடலையில் எரிவதை கண்டேன்.
220. செல்வம் அழிந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவளே, நீ எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தாய். சன்சாரத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான பிறப்புகளில் உன்னுள் கண்ணீரே இருந்தது.
221. பிறவிப்பயணத்தின் போது பல பிறப்புகளில் நீ மயானங்களை உனது வசிப்பிடமாகக் கொண்டாய். தான் ஈன்ற பிள்ளைகளது மாமிசத்தை உண்டாய். எல்லோரும் என்னை துரத்தினார்கள். குடும்பம் அழிந்தது. கணவர் இறந்தார். ஆனால் நான் மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.
222. மோட்சத்திற்கான ஒரே வழியான அந்த ஆரிய எண்சீர் வழியையே நான் பயிற்சி செய்தேன். மோட்சத்தை உறுதி செய்து கொண்டேன். நான் இவ் அனைத்து விடயங்களையும் தர்ம கண்ணாடியின் மூலம் காண்கிறேன்.
223. நான் என்னுள் குத்தப்பட்டிருந்த அனைத்து சோக ஈட்டிகளையும் பிடுங்கியெறிந்து விட்டேன். கிலேச சுமையை இறக்கி ஒரு புறத்தில் வைத்துவிட்டேன். செய்ய வேண்டியவற்றை செய்து முடித்துக் கொண்டேன். கிலேசங்களில் இருந்து விடுதலையடைந்த கிசாகோதமி தேரியே இந்த விடயங்களை சொல்கின்றார்.
இந்த செய்யுள்கள் கிசாகோதமி எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
பதினொறு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி முற்றும்.
(ஏகாதச நிபாதோ நிட்டிதோ)
பன்னிரெண்டு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(த்வாதச நிபாதோ)
12.1.
உப்பலவண்ணா தேரியின் செய்யுள்கள்.
224. நாம் இருவரும் தாயும் மகளுமாவோம். நாம் இருவரும் ஒரே கணவரின் மனைவியர்களாக இருந்தோம். இந்த நிகழ்வு என் வாழ்வின் பயங்கரமானதும் மயிர்கூச்சம் ஏற்படும் விடயமாகவும் இருந்தது.
225. இந்த இழிவான காமங்களுக்கு நிந்தனைகளாகட்டும். இந்த காமங்கள் மிகவும் அசுத்தமானவையாகும். துர்நாற்றம் மிகுந்தவை. பெருந்தொல்லைகளை பெற்றுத்தருபவை. இந்த காமங்களின் காரணமாகவே தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரின் மனைவியராக நேர்ந்தது.
226. நான் இந்த காமங்களின் தீமைகளை நன்றாக கண்டு கொண்டேன். காமங்களில் இருந்து விடுதலையடைவதே மேன்மையானது என்பதனை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு அவள் (நான்) இராஜகிருஹ நகரில் துறவு பூண்டாள்.
227. நான் இப்போது புப்பேனிவாசானுஸ்ஸதி ஞானத்தை பெற்றுக்கொண்டேன். திவ்விய நேத்திரங்களையும், திவ்விய செவிகளையும் தூய்மைப்படுத்திக் கொண்டேன். ஏனையோரின் மனதை அறிந்து கொள்ளும் ஞானத்தையும் பெற்றுக் கொண்டேன்.
228. இருத்தி ஆற்றல்களை பெற்றுக் கொண்டேன். நான் இந்த ஆறு வகையான அபிக்ஞைகளையும் பெற்றுக் கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
229. நான் இருத்தி பலத்தினை உபயோகப்படுத்தி நான்கு குதிரை வண்டிகளை தோற்றுவித்துக் கொண்டேன். உலகநாதரான நடுக்கங்களற்ற மனம் படைத்த மேன்மையான மனம் கொண்ட புத்த பகவானை காணச் சென்றேன். அந்த பரமோத்தமரது திருப்பாத கமலங்களை வணங்கினேன்.
230. (மாரன்) கிளைகளின் நுனியில் இருந்தே மலர்கள் பூத்துக் குலுங்கும் சால மரநிழலில் நீ தனிமையாக இருக்கிறாய். அக்கம் பக்கம் யாருமே இல்லை. ஏய் முட்டாள் பெண்ணே பெண்பித்து பிடித்த காமுகர்களை பற்றி உனக்கு பயமில்லையா?
231. (ஏய் மாரனே) நீ கூறும் பெண் பித்து பிடித்தவர்கள் ஆயிரக்கணக்கில் வந்தாலும் என் உடம்பில் இருக்கின்ற ஒரு மயிர்கூட அச்சத்தால் நடுங்காது. கலக்கமடையாது. மாரனே. அது அப்படியிருக்க நான் தனிமையில் இருப்பதைப் பற்றி உனக்கென்ன?
232. மாரனே, நீ என் முன்னிலையில் இருக்கும் போதே உன்னால் கண்டுபிடிக்க முடியாதபடி என்னால் மறைய முடியும். உனக்கே தெரியாமல் உன் வயிற்றில் நுழைவதற்கு என்னால் முடியும். உன் புருவங்களுக்கிடையே நிற்க முடியும். நான் அப்படி இருக்குமு; போது உன்னால் என்னை கண்டுபிடிக்க முடியாது.
233. தர்மத்தின் வழி நன்கு அடக்கப்பட்ட மனமே என்னிடம் இருக்கிறது. நான் இருத்தி பாதங்களை மேன்மை செய்த ஒருவராவேன். நான் ஆறுவகையான அபிக்ஞைகளையும் பெற்றுக்கொண்டு இருக்கிறேன். புத்த சாசனத்தை பரிபூணரப்படுத்திக் கொண்டேன்.
234. காமங்கள் என்பன வி~மூட்டப்பட்ட ஆயுதத்தை போன்றவையாகும். ஐவகை உபாதானஸ்கந்தங்கள் என்பன மாமிச துண்டுகளை போன்றனவாகும். நீ சொல்லும் காமங்களின் மீதான விருப்பு எனக்கு அருவருப்பானதாகும்.
235. எல்லாவற்றின் மீதும் கொண்டிருந்த ஆசையை அழித்துவிட்டேன். அறியாமை எனும் காரிருளை போக்கிவிட்டேன். மாரனே, நீ இவ் விடயத்தை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் நீயே தோல்வியுற்றாய்.
இந்த செய்யுள்கள் உப்பலவண்ணா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
பன்னிரெண்டு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி முற்றும்.
(த்வாதச நிபாதோ நிட்டிதோ)
பதினாறு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(சோலச நிபாதோ)
16.1.
புண்ணா தேரியின் செய்யுள்கள்.
236. நான் கடுங்குளிர் காலங்களிலும் தண்ணீர் சுமந்தேன். எந்நேரமும் ஆற்றில் இறங்கினேன். எனது எஜமானரின் தண்டனைகளுக்கு பயந்தே நான் இவ்வாறு வேலை செய்தேன். எஜமானர் திட்டுவதற்கு பயந்தே இவ்வாறு வேலை செய்தேன். நான் ஏதேனும் தவறுகள் செய்துவிடுவேனோ என்ற பயத்தினாலேயே நான் இவ்வாறு கடினமான வேலைகளை செய்தேன்.
237. ஆனால் பிராம்மணரே, தாங்கள் யார் மீது கொண்ட பயத்தினால் இவ்வாறு எந்நாளும் தண்ணீரில் இறங்குகிறீர்கள்? யார் மீது கொண்ட பயத்தினால் கடுங்குளிரினால் கைகால்கள் நடுங்க நடுங்க துன்புறுகிறீர்கள்?
238. புண்ணா, நீ இதை அறிந்தே என்னிடம் கேட்கிறாய். நான் என் பாவங்களை கழுவியகற்றி குசலங்களை சேகரித்துக் கொள்வதையே செய்கிறேன்.
239. முதியவனாக இருந்தாலும் இளைஞனாக இருந்தாலும், ஒருவன் ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் அவன் அந்த பாவங்களில் இருந்து இவ்வாறாக ஸ்நானம் செய்வதாலேயே தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
240. பிராம்மணரே, கர்மங்கள் எவ்வாறு விளைவுகள் தரும் என்பதனை அறியாத உங்களிடம,; இவ்வாறாக ‘தண்ணீரில் இறங்கி நீராடுவதன் மூலம் செய்த பாவ கர்மங்களில் இருந்து விடுதலையடைய முடியும்’ என்று சொன்னவர் யார்? கர்மங்கள் விளைவுகள் அளிக்கும் முறையை அறிந்திராத, அவர் யார்?
241. நீங்கள் சொல்கின்ற இந்த விடயம் உண்மை என்றால் இந்த தண்ணீரிலேயே தம் வாழ்வை நடாத்தும் தவளைகள், ஆமைகள், மீன்கள் முதலைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தும் கண்டிப்பாக சுவர்க்கலோகத்தில் தான் பிறக்க வேண்டும்.
242. இந்த விடயம் உண்மை என்றால், ஆடுகளை கொல்கின்றவர்கள், பன்றிகளை வதம் செய்கின்றவர்கள், மீன்களை பிடிப்பவர்கள், மிருகங்களை கொல்பவர்கள், திருடர்கள், கொலைகாரர்கள் மேலும் பல இன்னோரன்ன பாவங்களை செய்தவர்கள் அனைவரும் இந்த நதியில் நீராடி தம் பாவங்களை கழுவிக் கொள்ள முடியும் அல்லவா?
243. நீங்கள் செய்த பாவங்களை இந்த நதிகள் கழுவிகற்றும் என்றால் நீங்கள் செய்த புண்ணியங்களையும் இந்த நதிகள் கழுவியகற்றிவிடும் அல்லவா? அப்படியாயின் இப்போது நீங்கள் செய்த புண்ணியங்களையும் இழந்தவராவீர்கள்.
244. அந்தணரே, நீங்கள் பாவங்களுக்கு இருக்கின்ற பயத்தின் காரணமாகத்தானே இவ்வாறு எந்நாளும் இந்த கடுங்குளிரில் நீராடுகிறீர்கள்? நீங்கள் பாவங்களை செய்யாதிருங்கள். இந்த கொடுமையான குளிர் கொண்ட நீர் தங்கள் சருமத்தை வதைக்காதிருப்பதாக!
245. புண்ணியமிக்கவளே, உண்மையை சொல்வதென்றால் நான் தவறான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன். இந்த நீராடலில் இருந்து என்னை விடுவித்து ஆரிய மார்க்கத்திற்கான வழியை காண்பித்தவள் நீயே. எனவே நான் இந்த சால்வைகளை உனக்கு அளிக்கிறேன். பெற்றுக் கொள்.
246. பிராம்மணரே, இந்த சால்வைகளை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். சால்வைகளை பெற்றுக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை. நீங்கள் துக்கம் அனுபவிக்க பயப்படுகின்றீர்கள் என்றால், துக்கத்தை விரும்பவில்லை என்றால்,
247. இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பாவங்கள் செய்யாதீர்கள் ! நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் பாவங்கள் செய்வீர்களாயின், இப்போது செய்கின்றீர்களாயின்,
248. எவ்வளவுதான் அறிந்தே தப்பிக்க முயன்றாலும் அந்த பாவங்களின் கொடிய விளைவுகளில் இருந்து தப்பிக்கவே முடியாது. எனவே நீங்கள் துக்கம் அனுபவிக்க பயப்படுகின்றீர்கள் என்றால், துக்கத்தை விரும்பவில்லை என்றால்,
249. களங்கமில்லாத, கலக்கமில்லாத மனம் படைத்த புத்த பகவானையும் உத்தம தர்மத்தையும் சங்கையரையும் சரணடையுங்கள். சீலங்களை அனு~;டியுங்கள். அது உங்களுக்கு நீண்ட காலங்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களாக அமையும்.
250. புண்ணியமிக்கவளே, ஆம்! நான் கலக்கமில்லாத மனம் படைத்த புத்த பகவானையும் உத்தம தர்மத்தையும் சங்கையரையும் சரணடைவேன். சீலங்களை அனு~;டிப்பேன். அது என் வாழ்விற்கு மிக மிக நன்மையானதாக அமையும்.
251. நான் பிராம்மண குலத்தில் பிறந்தமையால் என்னை ‘பிரம்மபந்து’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் இப்போதே உண்மையான பிராம்மணரானேன். நானும் மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டேன். மோட்சத்தை உறுதி செய்து கொண்டேன். நன்மையான நிலையை அடைந்தேன். கிலேசங்களை நிரந்தரமாகவே கழுவியகற்றிக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் புண்ணா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
பதினாறு செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி முற்றும்.
(சோலச நிபாதோ நிட்டிதோ)
இருபது செய்யுள்கள் என்ற வகையில் போதிக்கப்பட்ட பகுதி
(வீசதி நிபாதோ)
20.1.
அம்பபாலி தேரியின் செய்யுள்கள்.
252. முன்பு எனது கூந்தல் கருமை நிறமாக இருந்தது. கருவண்டைப் போன்று அடர்கரு நிறமாக இருந்தது. என் நீளமான கூந்தல் அழகாக மேல் நோக்கி சுருண்டிருந்தது. ஆனால் இப்போது முதுமையடைந்து ஆளிச் செடியின் சணலைப் போன்றிருக்கிறது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
253. முன்பு நான் என் கூந்தலில் நறுமணம் மிகுந்த மலர்களைச் சூடிக் கொள்வேன். அவ்வாறு மலர்களை சூடிக்கொள்ளும் போது நறுமணம் மிகுந்த பேழையைப் போன்று என் கூந்தலில் இருந்து வாசன வீசும். ஆனால் இப்போது முயலின் மயிர் போன்று நாற்றம் வீசுகிறது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
254. அழகாகவும் நேர்த்தியாவும் பூஞ்செடிகளை வளர்த்திருக்கும் வாசலைப் போன்று நான் சீப்பை பயன்படுத்தி அழகாக தலைமுடியை வாரிக்கொள்வேன். முடியின் சிக்கல்களை நீக்கி பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை பயன்படுத்தி அழகாக சரிசெய்து கொள்வேன். ஆனால் இப்போது முதுமையினால் எனது தலைமுடி உதிர்ந்து ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக இருக்கிறது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
255. நாகத்தை போன்ற கருங்கூந்தலை அழகாக பின்னலிட்டு, பொன் ஆபரணங்களால் அலங்கரித்த பின்னர் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இப்போது முதுமையால் அந்த தலைமுடிகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
256. முன்னர் எனது புருவங்கள் திறமையான ஒவியக் கலைஞன் அழகாக தீட்டிய இரேகைகளை போன்று நேர்த்தியாக இருந்தன. ஆனால் இப்போது முதுமையால் அவை இரு சுருக்கங்களைப் போன்று நெற்றியில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
257. முன்னர் எனது கண்கள் நீளமானகவும் பெரிதாகவும் இருந்தன. நீல மாணிக்கங்களை போன்று ஜொலித்தன. ஆனால் இப்போது முதுமையால் அந்த கண்கள் விகாரமாகியிருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
258. முன்னர் எனது நாசி மென்மையானதாக சற்று உயர்ந்து இருந்தது. அந்த நேர்த்தியான நாசியால் எனது முகம் மேலும் அழகாகியது. ஆனால் இப்போது முதுமையால் அந்த நாசி சுருக்கப்பட்டுள்ளது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
259. முன்னர் எனது காது மடல்கள் பொன்னால் செய்யப்பட்ட பொன் வளையல்கைள போன்று இருந்தன. ஆனால் இப்போது முதுமையால் அந்த காது மடல்கள் சுருங்கி தொங்குகின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
260. முன்பு எனது பற்கள் முல்லை மலர்களை போன்று வெண்ணிறமாக அழகாக இருந்தன. ஆனால் இப்போது முதுமையால் அந்த பற்கள் உடைந்து பழுப்பு நிறமடைந்திருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
261. முன்பு எனது குரல் மிக இனிமையாக இருந்து. வனத்தின் மரங்களிடையே இனிமையாக ஓசையெழுப்பும் குயிலின் ஓசையைப் போன்று இனிமையாக இருந்தது. ஆனால் இப்போது முதுமையால் என்னுடைய குரல் அந்த இனிமையை இழந்துவிட்டது. பேசும்போது இடையிடையே தட்டுத்தடுமாறுகிறது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
262. முன்பு எனது கழுத்து, பொன்னால் தீட்டப்பட்ட பிரகாசமான கழுத்தாக இருந்தது. ஆனால் இப்போது முதுமையால் அந்த கழுத்து சுருங்கியுள்ளது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
263. முன்பு எனது இரு கைகளும் பொன்னால் செய்யப்பட்டவை போன்றிருந்தன. ஆனால் இப்போது முதுமையின் காரணமாக அவை …….. மரத்தின் இரு கிளைகளைப் போன்றே இருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
264. முன்னர் எனது கைவிரல்கள் பொன்னால் வார்க்கப்பட்டதை போன்று நேர்த்தியானவையாக இருந்தன. பொன் வளையல்கள். மோதிரங்கள் என்பன அணிந்திருந்தமையால் அவை மென்மேலும் அழகாக ஜொலித்தன. ஆனால் இப்போது முதுமையின் காரணமாக அவை மரவேர்களை போன்று கடினமாக இருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
265. முன்னர் எனது மார்பகங்கள் இரண்டும் ஒன்றாக சேர்ந்து மேல் நோக்கி திரும்பி அழகாக இருந்தன. ஆனால் இப்போது முதுமையால் அவை தண்ணீர் வற்றிய தண்ணீர்வடிகளை போன்று இருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
266. முன்னர் எனது உடம்பு பட்டை தீட்டப்பட்ட பொற்சிலை போன்றிருந்தது. ஆனால் இப்போது முதுமையின் காரணமாக அதே உடலின் தோல் சுருங்கி தொங்குகின்றது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
267. முன்பு எனது தொடைகள் அழகிய யானையின் தும்பிக்கையை போன்று இருந்தன. ஆனால் இப்போது முதுமையின் காரணமாக அவை காய்ந்த மூங்கில்களை போன்று இருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
268. முன்பு எனது பாதங்கள் பொன் கொலுசுகளினால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது முதுமையின் காரணமாக அவை பனை மட்டைகளை போன்றிருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
269. முன்னர் எனது பாதங்கள் பஞ்சு நிரப்பிய பையைப் போன்று மிக மிக மென்மையானாக இருந்தன. ஆனால் இப்போது முதுமைடைந்திருக்கின்றன. பாதங்கள் வெடித்து சுருக்கங்கள் விழுந்திருக்கின்றன. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
270. இதுவே இந்த உடலின் உண்மையான நிலையாகும். முதுமையால் அதிர்ந்து போகும் இயல்புடையது. பெரும்பாலான துக்கங்களின் உறைவிடமே இந்த உடம்பாகும். இப்போது இந்த உடலானது, புனரமைக்க முடியாதளவு இற்றுப்போய், இடிந்து விழக்காத்திருக்கும் ஒரு குடிலைப் போன்றே இருக்கிறது. சத்தியவாதியான புத்த பகவான் போதித்தவை ஒருபோதும் மாற்றமடைவதில்லை.
இந்த செய்யுள்கள் அம்பபாலீ எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
20.2.
றோஹினீ தேரியின் செய்யுள்கள்.
271. புண்ணியமிக்க மகளே, நீ சிரமணர்களைப் பற்றி பேசிய படியே தூங்க செல்கிறாய். சிரமணர்களைப் பற்றி பேசிய படியே தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறாய். சிரமணர்களின் புகழையே சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்ன? உனக்கும் சிரமண நிலையை அடையும் எண்ணம் வந்துவிட்டதா?
272. நீ சிரமணர்களுக்கே அன்னதானம் அளிக்கிறாய். மகளே, றோஹினீ, நான் உன்னிடம் கேட்பது இந்த விடயத்தையே. சிரமணர்களை நீ இவ்வளவு விரும்புவதற்கான காரணம் என்ன?
273. அவர்கள் வேலைவெட்டி செய்வதற்கு ஆர்வம் இல்லாதவர்கள். சோம்பேறியானவர்கள். ஏனையோர் கொடுக்கும் உணவினால் தான் வாழ்கிறார்கள். ஏனையோரிடம் இருப்பவற்றையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நல்ல விடயங்களையே விரும்புவார்கள். அப்படியிருக்க அத்தகைய சிரமணர்கள் மீது உன் மனதில் இவ்வளவு விருப்;பு தோன்றுவதற்கு காரணம் என்ன?
274. தந்தையே, தாங்கள் மிக நீண்ட காலத்திற்கு பின்னரே என்னிடம் சிரமணர்களைப் பற்றி கேட்டீர்கள். நான் இப்போது உங்களிடம் அந்த சிரணமர்களின் ஞானம், சீலம் மற்றும் வீரியம் தொடர்பாக சொல்கிறேன். கேளுங்கள்.
275. அந்த சிரமணர்கள் மோட்சத்தை உறுதி செய்வதற்கு மிகவும் விருப்பம் உடையவர்கள். சோம்பலற்றவர்கள். உலகிலுள்ள மேன்மையான செயற்பாட்டையே அவர்கள் செய்கிறார்கள். ஆசை, கோபம், அறியாமை எனும் கிலேசங்களை மனதிலிருந்து நீக்குவதே அந்த உன்னத செயற்பாடாகும். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
276. தூய்மையான வாழ்வை நடத்துபவர்கள். அந்த சிரமணர்கள் தம் மனதிலிருந்து ஆசை, கோபம், அறியாமை என்பனவற்றை நீக்குவார்கள். அரஹத் நிலையை அடைந்து அனைத்து பாவங்களையும் இல்லாதொழிப்பார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
277. பரிசுத்தமான விடயங்களையே அவர்கள் செய்கிறார்கள். தூய்மையான பேச்சினையே பேசுகிறார்கள். தூய்மையான விடயங்களையே நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
278. அந்த சிரமணர்கள் அக ரீதியாகவும் தூய்மையானவர்கள். புற ரீதியாகவும் தூய்மையானவர்கள். தூய்மையான முத்துக்களை போன்றவர்கள். அவர்கள் குசல தர்மங்களால் நிரம்பியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
279. அந்த சிரமணர்கள் புத்த பகவானிடமிருந்து நிறைய தர்மத்தை கேட்டறிந்து கொண்டிருக்கிறார்கள். கேட்ட அந்த தர்மத்தை நன்கு நினைவில் வைத்திருக்கிறார்கள். தார்மீகமான வாழ்வினாலேயே உத்தம நிலையை அடைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
280. அந்த சிரமணர்கள் புத்த பகவானிடமிருந்து நிறைய தர்மத்தை கேட்டறிந்து கொண்டிருக்கிறார்கள். கேட்ட அந்த தர்மத்தை நன்கு நினைவில் வைத்திருக்கிறார்கள். தார்மீகமான வாழ்வினாலேயே உத்தம நிலையை அடைந்திருக்கிறார்கள். ஒருங்கிணைந்த மனதுடனும் சிறப்பான விழி;புணர்வுடனுமே இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
281. மனிதர்களிடமிருந்து தொலைவில்; அமைந்திருக்கும் சேனாசனங்களிலேயே வசித்திருக்கிறார்கள். சிறப்பான விழிப்புணர்வுடனேயே காலம் கழிக்கின்றனர். அறிவை முதற்கொண்டே அவர்கள் பேசுவார்கள். மிகவும் பணிவான குணம் படைத்தவர்கள். துக்கத்தின் முடிவான மோட்சத்தை அறிந்தே இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
282. அந்த சிரமணர்கள் ஒரு ஊரிலிருந்து இன்னுமொரு கிராமத்திற்கு எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றியே செல்வார்கள். மீண்டும் திரும்பி பார்க்க மாட்டார்கள். இருந்த இடம் தொடர்பாகவோ போகும் புதிய இடம் தொடர்பாகவோ எவ்வித எதிர்ப்பார்புகளுமின்றியே செல்வார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
283. அந்த சிரமணர்கள் தம்முடையன என எவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்ளமாட்டார்கள். சட்டி முட்டிகளில் மறைத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். பைகளில் மறைத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். யாருடைய வீட்டிலாவது சமைக்கப்படுகின்ற சிறிதளவு சோற்றையே தேடிச் செல்வார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
284. அந்த சிரணமர்கள் காசு, பணம் என்பவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொன், வெள்ளி என்பவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த நேரத்திற்கு கிடைப்பவற்றால் (அன்னத்தால்) வாழ்வார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
285. அந்த சிரணமர்கள் பல்வேறு குலங்களில் இருந்தும் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் வந்து துறவு பூண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வித வேற்றுமைகளுமின்றி அன்பை அடிப்படையாகக் கொண்ட உள்ளத்துடனேயே வசிக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் சிரமணர்களை மிகவும் விரும்புகிறேன்.
286. புண்ணியமிகு மகளே, றோஹினி, உன்னுடைய மனதில் அந்த புத்த பகவானைப் பற்றியும் தர்மத்தின் மீதும் சங்கையர் மீதும் பெரும்; சிரத்தையும் மரியாதையும் இருக்கிறது. உண்மையிலேயே நீ எமது பெரும் அதி~;டத்தினாலேயே இந்த குடும்பத்தில் பிறந்தாய்.
287. மேன்மையான புண்ணிய வயலைப் பற்றியே நீ இவ்வாறு அறிந்து வைத்திருக்கிறாய். அந்த சிரமண உத்தமர்கள் எம் அன்னதானத்தை ஏற்று கொள்வார்களாயின் அது எமக்கு பெரும் நல்விளைவுகளை தரும் விடயமாகும்.
288. தந்தையே, நீங்கள் துக்கம் அனுபவிக்க பயப்படுகின்றீர்கள் என்றால், துக்கத்தை விரும்பவில்லை என்றால், களங்கமில்லாத, கலக்கமில்லாத மனம் படைத்த புத்த பகவானையும் உத்தம தர்மத்தையும் சங்கையரையும் சரணடையுங்கள். சீலங்களை அனு~;டியுங்கள். அதுவே உங்களுக்கு நீண்ட காலங்களுக்கு நன்மை பயக்கும் விடயமாக அமையும்.
250. ஆம் மகளே, நானும் கலக்கமில்லாத மனம் படைத்த புத்த பகவானையும் உத்தம தர்மத்தையும் சங்கையரையும் சரணடைவேன். சீலங்களை அனு~;டிப்பேன். அது என் வாழ்விற்கு மிக மிக நன்மையானதாக அமையும்.
251. நான் பிராம்மண குலத்தில் பிறந்தமையால் என்னை ‘பிரம்மபந்து’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் இப்போதே உண்மையான பிராம்மணரானேன். நானும் மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டேன். மோட்சத்தை உறுதி செய்து கொண்டேன். நன்மையான நிலையை அடைந்தேன். கிலேசங்களை நிரந்தரமாகவே கழுவியகற்றிக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் றோஹினி எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
20.3.
சாபா தேரியின் செய்யுள்கள்.
291. (உபக:) அவன் முன்பு தவசிகளுக்குரிய பரி~;காரங்களையே வைத்திருந்தான். ஆனால் இப்போது அவன் மான்களை வேட்டையாடுகிறான். ஆசையின் காரணமாக காமம் எனும் சேற்றிலிருந்து மீண்டு அக்கரையை அடைய முடியாமல் போயிற்றே.
292. நான் இன்னும் சாபா மீது காதல் வசப்பட்டிருப்பதாகவே சாபா நினைக்கிறாள். அவள் மகனை தாலாட்டத் தொடங்கிவிட்டாள். ஆனால் சாபா மீது என் மனதில் இருக்கும் பிணைப்பை நீக்கிக்கொண்டு நான் மீண்டும் துறவு பூண வேண்டும்.
293. (சாபா:) மகா வீரரே, என் மீது கோபம் கொள்ள வேண்டாம். மகா முனிவரே என் மீது கோபங்கொள்ள வேண்டாம். கோபத்திற்கு அடிமையாகும் மனதுடையவரால் தூய்மை தோன்றாது. தவத்தை பற்றி பேசவும் வேண்டுமா?
294. (உபக:) நான் நாலா எனும் இந்த ஊரை விட்டு போகப்போகிறேன். இந்த ‘நாலா’ ஊரில் யார் இருப்பார்கள்? தார்மீகமாக வாழ்ந்த சிரமணர்களின் வாழ்க்கைiயும் கட்டி வைத்துக் கொண்டது இந்த பெண்னின் உருவமே.
295. (சாபா:) கறுப்பு! (சாபா தன் கணவனை அன்புடன் அழைப்பதற்காக பயன்படுத்தி சொல்), இங்கு வாருங்கள். இங்கேயே இருங்கள். முன்பு இருந்ததைப் போன்று இந்த காம சுகங்களை அனுபவித்துக் கொண்டிருங்கள். நானும் என் உறவினர்களும் உன் மீது மிகுந்த விருப்பத்துடனேயே இருக்கிறோம்.
296. (உபக:) சாபா, நீ என்னிடம் சொல்லும் இந்த விடயங்களின் நான்கில் ஒரு பங்கு விடயத்தை உன்னை விரும்பும் யாரிடமாவது சொன்னால், அது அவனுக்கு பென்னம் பெரிய விடயமாக இருக்கும்.
297. (சாபா:) கறுப்பு, மலை உச்சியில் இளமையானதொரு கோங்கை மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் கிளைகளிலே அழகிய பொன்னிற பூக்கள் பூத்திருக்கின்றன. அதைப் போன்றே அழகாக பூத்துக்குழுங்கும் மாதுள மரமொன்று இருக்கிறது. தீவின் நடுவே அழகாக பூச்சொரியும் அம்புவாகினி மரமொன்று இருக்கிறது.
298. செஞ்சந்தனத்தை உடலெங்கும் பூசி, பெறுமதியான காசி பட்டுத்துணி உடுத்தியிருக்கின்ற அழகிய பெண்ணான என்னை கைவிட்டுச்செல்ல யாரால் முடியும்?
299. (உபக:) ஒரு வேடன் தகைவிலான் பறவையொன்றை கூண்டில் அடைத்து வைக்க நினைத்தான். ஆனால் உன் அழகால் என்னை அடைத்து வைக்க முடியாது.
300. (சாபா:) கறுப்பு, என் மகனை உன்னாலே பெற்றெடுத்தேன். மகன் இருக்கும் ஒரு பெண்ணை கைவிட்டுச் செல்ல யார் தான் நினைப்பார்கள்?
301. (உபக:) ஞானமுள்ளவர்கள் பிள்ளைகளை மட்டுமல்ல, தம் சொத்து சுகங்கள் எனும் அனைத்தையும் கைவிடுவார்கள். பென்னம் பெரிய யானை சங்கிலிகளை உடைத்துக் கொண்டு செல்வதைப் போல இல்லற பிணைப்புக்களை உடைத்தெறிந்து துறவு பூணுவார்.
302. (சாபா:) ஆ… அப்படியா சொல்கிறாய்? நான் இப்போதே ஒரு கட்டையால் அடித்தோ அல்லது கத்தியால் குத்தியோ மகனை கொன்று விடுகிறேன். நிலத்தில் அடித்தாவது கொன்று விடுகிறேன். அதன் பின்னர் மகன் காரணமாக சோகம் கொள்ளும் உன்னால் இந்த பயணத்தை தொடர முடியாது.
303. (உபக:) ஏய் முட்டாள் பெண்ணே, நீ மகனை நாய் நரிகளுக்கு சாப்பிட கொடுத்தாலும் எனக்கு பயனில்லை. மகனின் காரணமாக என்னை வீட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று மட்டும் நினைக்காதே.
304. (சாபா:) கறுப்பு, எனது சுவாமியே, சரி நல்லது. அப்படியாயின் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று சொல்லுங்கள். எந்த கிராமத்திற்கு செல்கிறீர்கள்? எந்த உப நகரத்திற்கு செல்கிறீர்கள்? எந்த நகரத்திற்கு செல்கிறீர்கள்? எந்த நாட்டிற்கு செல்கிறீர்கள்?
305. (உபக:) முன்பு நாம் சிரமணர்களாக இல்லாத போது எம்மை சிரமணர்களாக நினைத்திருந்தோம். எனவே மக்கள் சூழ கிராமத்திலிருந்து கிராமத்திற்கும், நகரங்களில் இருந்து வேறு நகரங்களுக்கும், தேசங்களில் இருந்து வேறு வேறு தேசங்களுக்கும் பயணித்துக் கொண்டிருந்தோம்.
306. ஆனால் அங்கே, பாக்கியமுள்ள புத்த பகவான் நேரஞ்சரா நதிக்கரையிலே இருந்து கொண்டு அனைத்து துக்கங்களையும் அழித்து விடுகின்ற தர்மத்தை போதிக்கிறார். நான் இம்முறை அந்த புருN~hத்தமரிடம் செல்லப் போகின்றேன். அந்த மகா உத்தமரே எனது வழிகாட்டியாவார்.
307. (சாபா:) ஆ.. அப்படியாயின் உலகநாதரான ஒப்புவமையில்லாத மகா முனிவரை நானும் வணங்கியதாக சொல்லுங்கள். அந்த புருN~hத்தமரை வலம் வந்து வணங்கி அந்த புண்ணியத்தை எனக்கு தாருங்கள்.
308. (உபக:) ஆம் ! நீ சொல்லும்படியே அந்த புண்ணியங்களை உன்னால் பெற முடியும். உலகநாதரான ஒப்புவமையில்லாத மகா முனிவரிடம் உன் வந்தனத்தை சொல்கிறேன். அந்த புருN~hத்தமரை வலம் வந்து வணங்கி அந்த புண்ணியத்தை நான் உனக்கு அளிக்கிறேன்.
309. அதன் பிறகு கறுப்பு (உபக) நேரஞ்சரா நதிக்கரை வரை சென்றார். அங்கு அவர் அமிர்தம் போன்ற தர்மத்தை போதிக்கும் மகா முனிவரை கண்டு கொண்டார்.
310. துக்கம், துக்கத்தின் தோற்றம், துக்க நிவாரணம் மற்றும் துக்க நிவாரண மார்க்கம் எனும் நாற்பேருண்மைகளே அந்த தர்மமாகும்.
311. அவர் புத்த பகவானது திருப்பாதங்களை வணங்கினார். அந்த புருN~hத்தமரை வலம் வந்து வணங்கி பெற்றுக் கொண்ட பெரும் புண்ணியத்தை சாபாவிற்கு வழங்கினார். புத்த சாசனத்தில் துறவறத்தை மேற்கொண்டார். மூவகையான ஞானங்களையும் பெற்றுக் கொண்டார். புத்த சாசனத்தை பரிபூரணமாக்கிக் கொண்டார்.
இந்த செய்யுள்கள் சாபா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
20.4.
சுந்தரீ தேரியின் செய்யுள்கள்.
312. புண்ணியமிக்கவளே, நீ உன் முற்பிறவிகளில் இறந்த பிள்ளைகளை சாப்பிட்டே வாழ்ந்து வந்தாய். நீ அக்காலத்தில் இரவு பகல் எனும் இருவேளைகளிலும் சோகத்துடனேயே இருந்தாய்.
313. பிராம்மண பெண்ணே வாசெட்டி, நீ இவ்வாறாக நூற்றுக்கணக்கான பிள்ளைகளை சாப்பிட்டு, இன்று மனங்கலங்காமல் எப்படி இருக்கிறாய்? எப்படி இத்தகைய திடமான மனதுடன் இருக்கிறாய்?
314. பிராம்மணரே, முற்பிறவிகளில் நான் மட்டுமல்ல, நீங்களும் நூற்றுக்கணக்கான பிள்ளைகளையும் உறவினர்களையும் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
315. ஆனால் இப்போது நான் பிறந்து மடியும் உலகிலிருந்து விடுதலையடைந்து மோட்சத்தை உறுதி செய்திருக்கிறேன். எனவே நான் சோகங்கொள்வதில்லை. அழுவதில்லை. வருந்துவதில்லை.
316. வாசெட்டி, மிகவும் அற்புதமான விடயத்தையல்லவா நீ சொல்கிறாய்? நீ யாருடைய தர்மத்தை அறிந்து இவ்வாறு திடமாக பேசுகிறாய்?
317. பிராம்மணரே, அந்த சம்மா சம்புத்த பகவான், அச்சமயத்தில் மிதிலை நகரில் தரித்திருந்தார். அனைத்து உயிர்களினதும் துக்கங்களை நீக்குவதற்காகவே அந்த புருN~hத்தமர் தர்மத்தை உபதேசிக்கிறார்.
318. பிராம்மணரே, அந்த அரஹத் சம்மா சம்புத்த பகவானிடமிருந்து கிலேசங்களற்ற தர்மத்தை நான் கேட்டறிந்து கொண்டேன். அந்த புனித தர்மத்தை கேட்ட பின்னரே எனது புத்திர சோகம் இல்லாமல் போனது.
319. அப்படியென்றால் நானும் மிதிலைக்கு போகின்றேன். அந்த பாக்கியம் நிறைந்த பகவான் என்னுள் உறைந்திருக்கும் துக்கங்களையும் நீக்குவாரென்றால் எவ்வளவு நன்று? அந்த பிராம்மணரும் அனைத்து துக்கங்களில் இருந்தும் நீங்கினார். அவரும் கிலேசங்களற்ற புத்த பகவானை கண்டு கொண்டார்.
320. அனைத்து துக்கங்களிலிருந்தும் கரையேறிய புத்த பகவான் அவருக்கும் தர்மத்தை போதித்தார். துக்கம், துக்கத்திற்கான தோற்றம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் எனும் நாற்பேருண்மைகளை மொழிந்தருளினார்.
321. அவர் உத்தம தர்மத்தை உய்த்துணர்ந்து கொண்டார். துறவறத்தை மேற்கொள்ள விரும்பினார். நன்மையான பிறப்புடைய அந்த பிராம்மணர் மூன்று இரவுகளினுள் மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டார்.
322. புண்ணியமிகு சாரதியே, இங்கே வா. நீ இப்போது வீட்டிற்கு செல். இந்த ரதத்தை என் மனைவியிடம் கொடு. நான் சுகமாக இருப்பதாகவும் சொல். இப்போது அந்த சுஜாத பிராம்மணர் துறவறத்தை மேற்கொண்டு மூன்று இரவுகளுக்குள் மூவகை ஞானங்களையும் பெற்றுக் கொண்டதாக சொல்.
323. அந்த சாரதி, ரதத்தையும் ஆயிரம் பொற்காசுகளையும் பிராம்மண பெண்ணிடம் கொடுத்தான். பிராம்மணர் சுகமாகவும் நலமாகவும் இருப்பதாக சொன்னான். அந்த சுஜாத பிராம்மணன் மூன்று இரவுகளுக்குள் மூவகை ஞானங்களையும் பெற்றுக் கொண்டதாகவும் சொன்னான்.
324. புண்ணியமிகு சாரதியே, எமது பிராம்மணர் மூவகை ஞானங்களையும் பெற்றுக் கொண்டதை அறிந்து கொண்டதால் இந்த குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தையும், ஆயிரம் பொற்காசுகளையும் உனக்கே காணிக்கையாக அளிக்கிறேன். பெற்றுக்கொள்.
325. புண்ணியமிகு உத்தமியே, இந்த குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தையும், ஆயிரம் பொற்காசுகளையும் நான் தங்களிடமே திரும்ப அளிக்கிறேன். நானும் அந்த உயர்ந்த ஞானமுடைய புருN~hத்தமரிடம் துறவறம் மேற்கொள்ள போகின்றேன்.
326. (பிராம்மண தாய்) மகளே, சுந்தரீ, உன் தந்தையார் இந்த யானைகள், குதிரைகள், பசுக்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், வீடு வாசல்கள் எனும் அனைத்தையும் துறந்து துறவறத்தை மேற்கொண்டுள்ளார். எனவே இப்போது இந்த அனைத்து சொத்து சுகங்களையும் நீயே அனுபவிக்க வேண்டும். எமது குடும்பத்தின் சொத்து உனக்குத்தானே சொந்தமாக வேண்டும்.
327. (தாயே) எனது தந்தையார் புத்திர சோகத்தால் பெரிதும் வருந்தினார். இறுதியில் இந்த யானைகள், குதிரைகள், பசுக்கள், முத்துக்கள் மாணிக்கங்கள், வீடு வாசல்கள் எனும் அனைத்தையும் துறந்து துறவறத்தை மேற்கொண்டார். சகோதர துக்கத்தால் வாடும் நானும் துறவறத்தையே விரும்புகிறேன்.
328. மகளே, சுந்தரீ நீயும் உத்தம வாழ்வான துறவறத்தை விரும்புவாயானால் உனது அந்த நி~;காமிய எதிர்பார்ப்பு நிறைவேறுவதாக! வீடு வீடாக சென்று ஐயமேற்று வாழ நேரிடும். பான்சகூல சீவரங்களைத்தான் தரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை பெற்றுக்கொண்டு கிலேசங்களற்ற வாழ்வை மேற்கொள்ளுங்கள்.
329. ஆரியாங்கனையே, அச்சமயம் நான் சிக்கமாணவியாக இருந்தேன். நான் திவ்விய கண்களை தூய்மைப்படுத்திக் கொண்டேன். எனது முற்பிறவிகளை அறிந்து கொள்ளக்கூடிய புப்பேனிவாசானுஸ்ஸதி ஞானத்தை பெற்றுக்கொண்டேன்.
330. பிக்குணி சங்கையரை அலங்கரிக்கும், சத்புரு~ நண்பியான ஆரியாங்கனையே, நான் உங்கள் உதவியாலேயே மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டேன். புத்த சாசனத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டேன்.
331. ஆரியங்கனையே, எனக்கும் சாவத்திய நகரிற்கு செல்வதற்கு அனுமதி தாருங்கள். பரமோத்தமரான புத்த பகவான் முன்னிலையில் நானும் சிங்கநாதம் செய்வதற்கு விரும்புகிறேன்.
332. சுந்தரீ அப்படியாயின் பொன்னிறத்தால் பிரகாசிக்கும் எமது மாபெரும் வழிகாட்டியை தரிசிக்க செல்லுங்கள். (தர்மத்திற்கு) பணியாத உயிர்களை பணிய வைக்கும், எவ்விதமான பயங்களும் பதற்றங்களுமற்ற புத்த பகவானை தரிசியுங்கள்.
333. சுந்தரீ நீங்களும், அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுதலையடைந்த, கிலேசங்களற்ற, வேட்கைகளற்ற, எவற்றோடும் தொடர்புராத, தர்ம மார்க்கத்தை பரிபூரணமாக விருத்தி செய்த, மனமாசுகளற்ற புத்த பகவானை தரிசியுங்கள்.
334. மகா வீரரே, நான் தங்களை தரிசிப்பதற்காக வாரணாசியிலிருநு;து இங்கு வந்தேன். தங்களின் சீடத்துவத்தை பெற்ற சுந்தரீ. நான் தங்களது திருப்பாத கமலங்களை வணங்குகின்றேன்.
335. மகா பிராம்மண முனிவரே, தாங்கள் மாபெரும் புருN~hத்தமரான ‘புத்த’ ஆவீர்கள். எம் அனைவரின் மாபெரும் வழிகாட்டியாவீர்கள். நானும் தங்களது இதயக்கமலத்திலேயே பிறந்தேன். மோட்ச மார்க்கத்தின் மூலம் பிறந்தேன். நான் தாங்கள் மொழிந்தருளிய மோட்சமார்க்கத்தை பரிபூரணப்படுத்திய கிலேசங்களற்ற புதல்வியாவேன்.
336. சுந்தரீ, உன்னுடைய இந்த வருகை நன்மையானது. (தர்மத்தினுள்) அடங்கிய சீடர்கள் இப்படித்தான். வேட்கைகளற்று எவற்றோடும் ஒன்றிக்காமல், மோட்ச மார்க்கத்தை பரிபூரணப்படுத்திக் கொண்டு, நிக்கிலேசமான மனதுடன் உயர் வழிகாட்டியின் பாதக்கமலங்களை வணங்க வருவார்.
இந்த செய்யுள்கள் சுந்தரீ எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
20.5.
பொற்கொல்லனின் மகளான சுபா தேரியின் செய்யுள்கள்.
337. அப்போது நான் என் இளமைப்பருவத்தில் இருந்தேன். வெண்ணிற ஆடையை அணிந்து நானும் புத்த பகவானிடமிருந்து தர்மத்தை கேட்டறிந்து கொள்வதற்காக சென்றேன். அவ்விடத்தில் தாமதமின்றி விழிப்புணர்வையும் அறிவையும் நிலைநிறுத்தி தர்மத்தை செவிமடுத்த நான், தர்மத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.
338. அப்போதிருந்து காமங்களின் மீது எனக்கு எவ்வித விருப்பும் தோன்றவில்லை. ஐவகை உபாதானஸ்கந்தங்களின் மீதான ஆசையை நான் பயங்கரமன விடயமாகவே உணர்ந்தேன். எனவே நான் துறவறத்தை மேற்கொள்ள விரும்பினேன்.
339. கடைசியில் உறவினர்கள், சேவகர்கள், வேலையாட்கள், செழிப்பு மிகுந்த வயல்வெளிகள், தோட்டந்துறவுகள், மனதை மகிழ்விக்கும் சுகபோகங்கள் எனும் அனைத்தையும் கைவிட்டேன்.
340. நான் இவ்வாறாக நிறைய சுகபோகங்களை கைவிட்டேன். மோட்ச மார்க்கத்தை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டும் இந்த சாசனத்தில் நான் சிரத்தையை அடிப்படையாகக் கொண்டே துறவறத்தை மேற்கொண்டேன். எனவே மீண்டும் பொன், வெள்ளி என்பனவற்றைக் கொண்டு வேலைகள் செய்வது உசிதமில்லை. நான் மோட்சத்தையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
341. பொன் வெள்ளி என்பவற்றிலான பொருட்களை ஒருவர் கைவிட்ட பின்னர் அவற்றை மீண்டும் ஏற்றுக் கொண்டால் அது பெருந்தவறாகும். தர்ம உய்த்துணர்விற்கு இந்த பொன் வெள்ளி என்பன உதவாது. அதேபோல் அவை ஒருபோதும் சிரமணர்களுக்கு பொருந்தாதவையாகும். அது ஆரிய (சிரே~;ட) செல்வமாகாது.
342. அவை ஆசையையும் அகங்காரத்தையும் தூண்டுவதை மாத்திரமே செய்யும். அதன் பிறகு (அதன் உண்மைநிலை அறியாமல்) ஏமாற்றமடைவதால் மனதில் கிலேசங்களே வளரும். சந்தேகங்களும் ஐயப்பாடுகளுமே விருத்தியடையும். நிலையான அர்த்தமுடைய எவையும் அவற்றில் இல்லை.
343. மனிதர்கள் அவற்றின் மீது ஒட்டிக்கொள்வார்கள். அதன் காரணமாக (தர்மத்தில் ஈடுபடுவதற்கு) தாமதிப்பார்கள். மனதை அசுத்தப்படுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் எதிரிகளாக கருதுவார்கள். பெரும் கலகங்கள் செய்து கொள்வார்கள்.
344. இந்த காமங்களிலேயே மூழ்கியிருப்பவர்களிடம் காணக்கிடைப்பதெல்லாம் சித்திர வதைகள் தான். பல்வேறு கிலேசங்களும் அழுகைகளுமே காண முடியும். பல்வேறு தொல்லைகள் மட்டுமே காண முடியும்.
345. நீங்கள் எனது உறவினர்களாக இருந்தும், என் எதிரிகளைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? ஏன் இந்த காமங்களில் என்னை ஈடுபடுத்த முயற்சிக்கிறீர்கள்?
346. பொற்காசுகளால் ஆஸவங்கள் அழிவதில்லை. நிம்மதிக்கு எதிரிகள் இந்த காமங்களேயாகும். காமங்கள் உயிர்களின் நண்பர்களல்ல. சோகம் எனும் கொடிய வேல்கள் இந்த மனதில் காமங்களின் காரணமாகவே குத்தப்படுகின்றன.
347. நீங்கள் எனது உறவினர்களாக இருந்தும், என் எதிரிகளைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? ஏன் இந்த காமங்களில் என்னை ஈடுபடுத்த முயற்சிக்கிறீர்கள்? என்னை புரிந்து கொள்ளுங்கள். நான் என் தலைமுடியை மழித்துக் கொண்டு சீவரத்தை தரித்திருக்கிறேன். நான் துறவறத்தை மேற்கொண்டவள்.
348. வீட வீடாகச் சென்று ஐயமேற்று அந்த உணவை உண்டு வாழ்கிறேன். பான்சகூல வஸ்திரங்களையே சீவரமாகக் கொண்டு அணிந்திருக்கிறேன். எனவே எனக்கு துறவிகளுக்கு அவசியமான பரி~;காரங்களே உகந்தவையாகும்.
349. மகா ரி~pமார்கள் தேவ மனிதர்களுக்குரிய அனைத்து வகையான காமங்களையும் கைவிடுவார்கள். அந்த உத்தமர்கள் மோட்சத்தையே தம் ஒரே புகலிடமாகக் கொண்டிருப்பார்கள். விமோட்சனமடைந்த மனதுடனேயே வசித்திருப்பார்கள். ஒருபோதும் மாற்றமுறாத சுகத்தை அடைந்தே இருக்கிறார்கள்.
350. காமங்களுடன் எனக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது. காமங்களினால் எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதாக நான் காணவில்லை. காமங்கள் நண்பர்களல்ல. அவை சித்திரவதைகள் தரும் கொடிய குணம் படைத்தவர்கள் போன்றனவாகும். எரிமலைகளைப் போல் துன்பத்தையே அளிக்கும்.
351. இந்த காமங்கள் என்பன அச்சத்திற்குரியனவாகும். தொல்லைகளாகும். பெரும் பீடைகளாகும். பெரும் சித்திரவதைகளாகும். அசுத்தமானவையாகும். வேற்றுமையானவையாகும். உயிர்களை ஏமாற்றுபவையாகும். உயிர்களை ஏமாற்றும் பெரும் நுழைவாயில் என்றால் அது இந்த காமங்களேயாகும்.
352. காமங்களானவை பெரும் அனர்த்தங்களாகும். பயங்கரமான நச்சுடைய பாம்பின் தலைப்பகுதியைப் போன்றதாகும். ஆனால் தர்மத்தை அறியாத குருட்டுத்தனமான புதுஜ்ஜனர்கள் இத்தகைய காமங்களை பெரும் ஆசையுடன் ஏற்றுக்கொள்வார்கள்.
353. காமம் எனும் சேற்றில் மூழ்கியிருக்கும் இந்த உயிர்கள் அறியாமையுடனேயே இருக்கின்றனர். இறந்து மடியும் இந்த உலகின் முடிவை அவர்களால் ஒருபோதும் காண முடியாது.
354. மனிதர்கள் இந்த காமங்களின் காரணமாக துன்பம் நிறைந்த உலகங்களுக்கு வழிவகுக்கும் பாதைகளிலேயே இறங்கியிருக்கின்றனர். தமக்கு பெரும் நோய்களை தோற்றுவித்துக் கொடுக்கும் காமங்களிலேயே அவர்கள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
355. இந்த காமங்கள் ஒருவருக்கு எதிரிகளையே உருவாக்கித்தரும். துக்கங்களையும் சோகங்களையும் இந்த காமங்கள் உருவாக்கி தருகின்றன. மனதை மாசுபடுத்துகின்றன. உலகத்தோரை இன்புறச்செய்யும் ஒரே விடயம் இவையே எனும் நிலைக்குட்படுத்துகின்றன. கிலேசங்களில் கட்டி வைக்கின்றன. மரணத்திற்கும் பிணைத்து வைக்கின்றன.
356. இந்த காமங்கள் பைத்தியம் பிடிக்க வைப்பவையாகும். பைத்தியம் பிடிக்கச் செய்து உளறிக்கொண்டிருப்பதற்கு ஆளாக்குபவை. உயிர்களை அசுத்தபடுத்துபவை. மாரன் உயிர்களுக்காக வைத்த பொறியை போன்றதாகும்.
357. இந்த காமங்களுள் எண்ணிலடங்காத தீமைகளே அதிகமாகும். நிறைய துக்கங்கள் காமங்களினுள் பொதிந்திருக்கின்றன. நச்சு நிறைந்தவை. இந்த காமங்களினால் மிகவும் சொற்பமான சுகமே கிடைக்கின்றன. ஆனால் நிறைய ஆசைகளை வளர்த்துவிடும் இயல்பிலானவையாகும். காமங்கள் குசல தர்மங்களை உலர வைத்துவிடுவனவாகும்.
358. இந்த காமங்களினால் தோன்றும் பெருந்துன்பங்களை நான் காண்பதால், காமங்களின் பக்கம் ஒருபோதும் திரும்பிப் போகமாட்டேன். நான் மோட்சத்திலேயே ஒட்டிக்கொண்டிருப்பேன்.
359. நான் விரும்புவதெல்லாம் அரஹத் நிலை எனும் நிக்கிலேச நிலையையே. காமங்களுக்கான வேட்கையை கைவிட்டிருக்கிறேன். அனைத்து பிணைப்புக்களையும் இல்லாமல் செய்து தாமதமின்றி தர்மத்தில் ஈடுபடுகின்றேன்.
360. மகா ரி~pமார்கள் இந்த வழியின் மூலமாகவே சன்சாரத்திலிருந்து கரையேறினார்கள். எனவே நானும் சோகங்கள் இல்லாத, கிலேசங்கள் இல்லாத, பயங்கள் இல்லாத, நேர் வழியான ஆரிய எண்சீர் வழியிலேயே பயணிக்கிறேன்.
361. தர்மத்தில் மனதை நிலைநிறுத்தியிருக்கின்ற இந்த ‘சுபா’வை பாருங்கள். பொற்கொல்லனின் மகளைப் பாருங்கள். அவள் வேட்கையின்றியே இருக்கின்றாள். நிக்கிலேச நிலையை அடைந்தே இருக்கின்றாள். அவள் மரநிழலில் அமர்ந்து தியானம் செய்கின்றாள்.
362. நான் துறவறம் பூண்டு இன்றுடன் எட்டு நாட்களாகின்றன. சிரத்தை மிகுந்த, தர்மத்தினால் சுந்தரமான, உப்பலவண்ணா பிக்குணியே என்னை இந்த தர்மத்தில் பயிற்றுவித்தார். மாரனை தோற்கடித்து நானும் மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டேன்.
363. இந்த சுபா தேரி தவறுகள் இல்லாதவர். கடன்கள் இல்லாதவர். விருத்தி செய்த சிரத்தை உட்பட்ட இந்திரிய தர்மங்களுடன் கூடியவர். அனைத்து விதமான பிணைப்புகளில் இருந்தும் விடுதலையடைந்த மோட்ச மார்க்கத்தை பரிபூரணப்படுத்தியே இருக்கிறார். மிகவும் சுதந்திரமானவராகவே இருக்கிறார்.
364. தேவலோகத்திற்கு அதிபதியான தேவேந்திரன் தம் தேவர் குலாம் புடைசூழ பொற்கொல்லனின் மகளான சுபா எனும் தேரியையே வணங்குகிறார்.
இந்த செய்யுள்கள் பொற்கொல்லனின் மகளான சுபா எனும் தேரி மொழிந்தவையாகும்.
இருபது செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்
(வீசதி நிபாதோ நிட்டிதோ)
முப்பது செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி
(திங்சதி நிபாதோ)
30.1.
ஜீவக எனும் மாஞ்சோலையில் வசித்த சுபா தேரியின் செய்யுள்கள்.
365. அன்று சுபா தேரி ஜீவக என்று அழைக்கப்பட்ட அழகிய மாஞ்சோலையினுள்ளே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அச்சமயம் காமுகன் ஒருவன் சுபா தேரியின் வழியை மறித்து நின்றான். சுபா தேரி அவனிடம் இவ்வாறு சொன்னார்.
366. நான் உங்களுக்கு என்ன தவறு செய்தேன். நான் பயணிக்கும் பாதையை ஏன் மறித்து நிற்கின்றீர்கள்? துறவறம் மேற்கொண்ட ஒருத்தி ஒரு ஆணை தீண்டுவது பொருந்தாத செயலாகும்.
367. எம் மாபெரும் வழிகாட்டியின் சாசனத்தின் மீது நான் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன். அந்த சுகத ததாகதர் எமக்கு ஒழுக்க கோட்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கிறார். நான் அந்த ஒழுக்க நெறிமுறைகளை பிழைகளின்றி அனுசரித்து வாழ்கின்றேன். நான் நிக்கிலேசமான வாழ்வையே வாழ்கிறேன். நீங்கள் இவ்வாறு நான் செல்லும் பாதையை மறித்து நிற்பதேன்?
368. உங்களிடம் ஆர்ப்பரிக்கும் மனமே இருக்கிறது. ஆனால் என்னிடம் அமைதியானதொரு மனமே இருக்கிறது. நீங்கள் கிலேசங்களுடன் கூடியவராவீர்கள். ஆனால் நான் கிலேசங்களிலிருந்து விடுதலை அடைந்தவராவேன். இத்தகைய நான் பயணிக்கும் பாதையை மறித்து நிற்பதற்கான காரணம் என்ன?
369. (காமுகன்) இல்லை. நீ இன்னும் இளமையுடன் இருக்கிறாய். நீ சிறுபிள்ளையல்ல. இந்த துறவு வாழ்வினால் என்ன செய்துவிட முடியும்? இந்த சீவர வஸ்திரத்தை தூரத்தில் எறிந்துவிடு. பூக்கள் பூத்து குலுங்கும் இந்த நந்தவனத்தில் நாம் இன்புறுவோம் வா…
370. இனிமையான சுகந்தத்துடன் கூடிய தென்றல் காற்று வீசுகின்றது. பூக்களின் அரும்புகளைப் போன்றே இந்த மரங்களும் புதர்களும் இருக்கின்றன. இன்னும் இது வசந்த காலத்தின் ஆரம்ப பருவமாகும். மிகவும் சுகமான காலநிலை. வா… அன்பே.. பூக்கள் நிறைந்திருக்கும் இந்த வனத்தில் நாம் சந்தோ~த்துடன் இருப்போம்.
371. கிளைகளின் நுனியில் அழகிய வண்ண மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அவை தென்றல் காற்றினால் மெதுவாக பாடுவதைப் போன்று அசைந்தாடுகின்றன. தன்னந்தனியாக இந்த கானகத்தில் நுழைந்திருக்கும் நீ விரும்புவது என்ன?
372. இங்கு மிருகங்கள் வாழ்கின்றன. மதம் பிடித்த யானைகள் இருக்கின்றன. உயர்ந்து வளர்ந்த பெண் யானைகளும் இருக்கின்றன. மனிதர்கள் யாருமே இல்லை. இத்தகைய பயங்கரமான வனத்தில் தனிமையாக செல்வதற்கா விரும்புகிறாய்?
373. உன் அழகை உவமைகளால் கூட வருணிக்க முடியாது. காசி நாட்டின் மென்மையான உடையால் அலங்கரித்த பொற்சிலையைப் போன்று இருக்கிறாய். சித்திரரத வனத்தில் இருக்கின்ற பேரழகு கொண்ட பொன்னுருவத்தை போன்று இருக்கின்றாய். சித்திரரத வனத்தில் இருக்கின்ற பேரழகு கொண்ட தேவதையை போன்றிருக்கிறாய்.
374. உண்மையாகவே நான் உன் வசமாகிவிட்டேன். யாருமற்ற இந்த காட்டினுள் நாம் சேர்ந்திருப்போம். அழகிய கடற்கன்னியின் விழிகளைப் போன்ற பார்வையே உன்னிடம் இருக்கிறது. உன் மீது என் மனம் மையல் கொண்டதைப் போன்று இதுவரை யார் மீதும் இத்தகைய விருப்பு தோன்றியதில்லை.
376. நான் சொல்வதை நீ செய்வாயானால், நாம் வீட்டிற்கு போவோம். நாம் சந்தோ~மாக வாழ்வோம். யன்னல்கள் கொண்ட அழகிய வீடொன்று உனக்காக கிடைக்கும். உனக்கு பணிவிடைகள் செய்வதற்கு நிறைய பணிப்பெண்களும் கிடைப்பார்கள்.
376. இந்த சீவரத்திற்கு பதில் அதி மென்மையான காசி நாட்டு வஸ்திரங்களை நீ தரித்துக் கொள்ள முடியும். மலர்களாலும் வாசனை திரவியங்களாலும் உன் உடலை அலங்கரித்துக் கொள்ள முடியும். பொன், முத்து மாணிக்கங்களுடன் கூடிய ஆபரணங்களால் உன்னை அலங்கரித்துக் கொள்ளவும் முடியும்.
377. அந்த வீட்டில் நன்கு கழுவி சுத்தம் செய்த கூரை விரிப்புகளை உடைய, புதிய மயிரினால் செய்யப்பட்ட கட்டில் விரிப்புகளையுடைய, சொகுசான மெத்தையை கொண்ட சந்தன பலகையால் செய்யப்பட்ட கட்டில் ஒன்று இருக்கிறது. நீ அந்த கட்டிலில் சுகமாக தூங்க முடியும்.
378. இது என்ன கோலம்? உன்னுடைய வாழ்க்கை ஒரு இராட்சசனின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நீல அல்லிகள் கொண்ட குளத்தை போன்றதாகும். உன்னுடைய இந்த பிரம்மச்சரிய வாழ்வின் காரணமாக உன் அழகிய உடல் யாரும் பயன்படுத்தாமலேயே முதுமையடைந்து அழிந்து போகும்.
379. (சுபா) அருவருப்பான மலம் நிறைந்த இந்த உடலை, மயானங்களை நிரப்புகின்ற இந்த உடலை, நீங்கள் எப்படி இவ்வாறு சாரமுடையதாக காணுகின்றீர்கள்? உடைந்து அழிந்து போகும் இயல்புடைய இந்த உடலை பார்க்கும்போது எனக்கென்றால் அருவருப்பே தோன்றுகின்றது.
380. (காமுகன்) உன் இரு கண்களும் மானின் கண்களைப் போன்று அழகியவை. மலைகளிடையே வசிக்கும் தேவதையைப் போன்று அழகாக இருக்கிறாய். உன்னுடைய இந்த கண்களை பார்க்கும் போதெல்லாம் என் மனதில் இடைவிடாது ஆசையே ஊற்றெடுக்கிறது.
381. தங்கத்தால் செய்த சிலையைப் போன்று பேரழகுடன் இருக்கிறாய். உன் சந்திரனைப் போன்ற முகத்தில் இருக்கின்ற இந்த இரண்டு கண்களும் கருவிளை மலரின் இதழ்களை போன்றிருக்கின்றன. உன்னுடைய இந்த மோகனக்கண்களை பார்க்கும் போது என்னுள் வற்றாத ஆசையே ஊற்றெடுக்கிறது.
382. நீண்ட அழகிய நீல விழிகளையுடைய உன்னை, அழகிய பொற்சிலை போன்ற உன்னை, தேவதையைப் போன்று ஓரளவு திறந்திருக்கும் இமைகளையுடைய கண்களையுடைய உன்னை நான் எவ்வாறு விட்டுச் செல்வேன். எவ்வளவு தூரம் சென்றாலும் உன் கண்களே என் நினைவிற்கு வரும். நான் உன் கண்களை விட வேறைதையும் விரும்பவில்லை.
383. (சுபா தேரி) நீங்கள் தவறான பாதையில் செல்ல முயற்சிக்கிறீர்கள். நீங்கள் அந்த சந்திரனை உங்கள் விளையாட்டுப் பொருளாக எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்கள். நீங்கள் மகாமேரு பர்வதத்தை தாண்டியோட முயற்சிக்கிறீர்கள். என்னை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் நான் புத்த பகவானது புதல்வியாவேன்.
384. என்னுள் ஆசையை தோற்றுவிக்கக்கூடிய எதுவுமே இந்த தேவ மனித உலகங்களில் இல்லை. மோகம் என்பது எத்தகையது என்பது கூட எனக்கு தெரியாது. மோட்ச மார்க்கத்தில் பயணித்த நான் ஆசையை வேரறுத்துவிட்டேன்.
385. தீக்குழியொன்று காற்றினால் அணைந்து போவதைப் போல், வி~ம் நிறைந்த பாத்திரத்தை அழித்து விடுவதைப் போல் என் மனதிலிருந்து மோகத்தை அழித்தொழித்த நான் அந்த மோகம் எத்தகையது என்பதைக்கூட அறியாதிருக்கிறேன். மோட்ச மார்க்கத்தில் பயணித்த நான் ஆசையை வேரறுத்துவிட்டேன்.
386. அறிவினால் சிந்திக்காத பெண்ணையோ அல்லது அந்த மாபெரும் வழிகாட்டியை தர்மத்தினூடாக காணாத பெண்ணையோ உங்களால் இசைய வைத்திருக்க முடியும். ஆனால் வாழ்வின் உண்மையை உய்த்துணர்ந்த என்னையே நீங்கள் இவ்வாறு தொந்தரவு செய்கிறீர்கள்.
387. எனக்கு நிந்தனைகள் செய்தாலும் தூற்றினாலும், என்னை வணங்கினாலும் நான் அவற்றின் முன்னிலையில் விழிப்புணர்வுடனேயே இருக்கிறேன். காரணங்களால் தோன்றிய இவ் அனைத்தும் அசுபத்திற்குரியவையாக நான் உய்த்துணர்ந்தே இருக்கிறேன். எவ்விடத்திலும் என் மனம் ஒட்டிக்கொள்ளாது.
388. நான் சுகத ததாகதரின் புதல்வியாவேன். நான் எண்சீர் மார்க்கம் எனும் ரதத்திலேயே பயணிக்கிறேன். வேட்கை எனும் ஈட்டிகளை நான் பிடுங்கியெறிந்திருக்கிறேன். ஆஸவங்களை இல்லாதொழித்து விட்டேன். என் மனம் வெறுமையான குடிலையே நாடுகின்றது.
389. மரக்குச்சிகளால் உருவாக்கிய அழகாக வேலைப்பாடுகள் செய்திருக்கும் பொம்மைகளை நான் கண்டிருக்கிறேன். நூல்களால் கட்டப்பட்ட அந்த பொம்மைகளை ஒவ்வொருவிதமாக ஆட்டுவிக்க முடியும். (பொம்பலாட்டம்)
390. அந்த நூல், மரக்குச்சிகள் என்பனவற்றை உடைத்து ஒவ்வொரு இடமாக வீசிய பின்னர் மீண்டும் அந்த பொம்மையை காண முடியாது. அந்த பொம்மைகளின் எந்த பாகத்தில் மனதை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்?
391. இந்த உடலும் பொம்மையை போன்றதே. நிலவுகைக்கு துணை புரியும் விடயங்கள் இல்லாமல் நிலைத்திருக்காது. நிலவுகைக்கு துணை புரியும் விடயங்கள் இல்லாமல் நிலைத்திருக்காத இந்த உடலின் எதன் மீது மனதை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்?
392. ஒரு ஓவியன் சுவற்றில் வரைந்த ஒரு ஓவியத்தை போன்றதே இந்த வாழ்க்கை. ஒரு பெண்ணின் உருவம் சுவற்றில் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தை பார்த்து அது உண்மையான மனித பெண் என நினைப்பதற்கு காரணம் தவறான சமிக்ஞையாகும்.
393. நீங்கள் ஒரு குருடர். மயாவியின் மாயைகளுக்குள் சிக்கிக் கொண்ட ஒருவரைப் போல், கனவில் பொற்சிலையை கண்டது போல், ஒரு வித்தைக்காரன் மக்கள் மத்தியில் தோற்றுவித்துக் காட்டிய உடைந்து அழிந்துபோகும் உருவத்தை கண்டது போன்று வெறுமையான விடயத்திற்குள் அகப்பட்டிருக்கிறீர்கள்.
394. மரப்பொந்தில் இருக்கின்ற பசையைப் போன்று , கண்ணீருடன் கூடியதொரு உருண்டையே இந்த கண். இந்த கண்கள் பீளையுடனும் பிசுபிசுப்பான கண்ணீருடனும் கலந்தே இருக்கின்றன.
395. அழகிய தோற்றமுடைய அந்த சுபா தேரி எவற்றின் மீதும் பற்று கொள்ளவில்லை. கிலேசங்களற்ற மனதுடைய சுபா தேரி ஒரு நொடியிலேயே அவரது ஒரு கண்ணை பிடுங்கி கையில் எடுத்து “ இதோ உங்கள் கண், இதை எடுத்துக் கொண்டு போங்கள்”. என்று அந்த காமுகனிடம் நீட்டினார்.
396. அந்த நொடியிலேயே அந்த காமுகனின் மோகம் இல்லாமல் போய்விட்டது. அவ்விடத்திலேயே வீழ்ந்து வணங்கினான். சுபா தேரியிடம் மன்னிப்பு கேட்டான். “பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் உத்தமியே, தாங்கள் சுகம் பெறுவதாக! மீண்டும் இதுபோன்ற செயல் நடக்காது.”
397. இத்தகைய உத்தமியுடன் மோதுவதானது கொழுந்து விட்டெரியும் நெருப்பை வாரியணைத்துக் கொள்வதற்கு சமமானதாகும். கொடிய வி~முடைய சரப்பத்தை கையால் பிடிப்பதற்கு நிகரானதொரு செயலாகும். ஒருபோதும் நன்மையைத் தராது. எமக்கு மன்னிப்பு தாருங்கள்.
398. அந்த பிக்குணீ அந்த காமுகனிடமிருந்து தப்பித்து பரமோத்தம புத்த பகவானிடம் சென்றார். உத்தமமான புண்ணியங்களினால் பரிபூரணமடைந்த புத்த பகவானை காணும்போதே சுபா தேரியின் கண் முன்னரைப் போன்று சுகமடைந்தது.
இந்த செய்யுள்கள் ஜீவக எனும் மாஞ்சோலையில் வசித்திருந்த சுபா எனும் அரஹத் தேரி மொழிந்தவையாகும்.
முப்பது செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்.
(திங்சதி நிபாதோ நிட்டிதோ)
நாற்பது செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி
(சத்தாலீச நிபாதோ)
40.1.
இசிதாசீ தேரியின் செய்யுள்கள்.
399. குசுமபுரம் என அழைப்பட்ட பாட்டலீ நகரம் இந்த பூமியின் ஒரு ஆபரணமாகும். சாக்கிய குலத்தில் தோன்றிய நற்குணங்களுடைய இரு பிக்குணீமார்கள் அந்த நகரத்தில் வசித்திருக்கின்றனர்.
400. ஒரு பிக்குணீ இசிதாசி எனும் தேரியாவார். இரண்டாமவரின் பெயர் போதி என்பதாகும். அந்த இருவரும் த்யானங்களினால் கிடைக்கும் சுகத்துடன் வசிக்கின்றனர். புத்த பகவானது தர்மத்தை நன்கு கேட்டறிந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று அந்த இரு தேரியரும் நிக்கிலேசமானவர்கள்.
401. ஒருநாள் அந்த இரு பிக்குணியரும் ஐயமேற்பதற்காக சென்றனர். ஐயமேற்ற பின்னர் அந்த அன்னத்தை உட்கொண்டு பாதங்களை கழுவி ஓய்வான இடத்தில் அமர்ந்திருக்கும் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
402. “உத்தம நிலையடைந்த இசிதாசி, தாங்கள் அழகானவர். இன்னும் இளமையான வயதிலேயே இருக்கிறீர்கள். இல்லறத்தின் எவ்வித குறைபாட்டை கண்டதனால் நீங்கள் துறவறம் மேற்கொண்டீர்கள்?”
403. ஓய்வானதொரு இடத்தில் இவ்வாறு கேட்டபோது, தர்மத்தை உபதேசிப்பதில் திறமையான அந்த இசிதாசீ தேரி இவ்வாறாக பதில் அளித்தார். “அப்படியாயின் புண்ணியமிகு போதி, நான் துறவறம் மேற்கொண்ட விதத்தை கேட்டுக்கொள்ளுங்கள்”
404. எனது தந்தையார் மிகவும் ஒழுக்கமானவர். அவர் உதேனி நகரில் வாழ்ந்த ஒரு சீமானாவார். அவர்களின் ஒரே மகள் நான். எந் பெற்றோர்கள் என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள்.
405. சாகேத நகரில் வசிக்கும் ஒரு உயர்குலத்திலிருந்து என்னை பெண்கேட்டு வந்தார்கள். அந்த சீமானுக்கும் நிறைய செல்வங்கள் இருந்தன. அந்த பெருஞ்சீமானின் மகனுக்கு என் அப்பா என்னை மணம் முடித்து கொடுத்தார்.
406. நான் காலையும் மாலையும் என் கணவரின் பெற்றோர்களின் பாதங்களை வணங்கினேன். அவர்கள் சொல்வதை மட்டுமே செய்தேன்.
407. நான் எனது கணவரையோ அல்லது அவரது சகோதர சகோதரிகளையோ கண்டவுடன் நான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழுந்து மரியாதை செலுத்தி அவர்களை அமரச்செய்தேன்.
408. அவர்கள் விரும்பும் உணவு வகைகள் தின்பண்டங்கள் என்பன செய்து கொடுத்து அவர்களை சந்தோ~ப்படுத்தினேன். நான் அவர்களுக்கு நன்றாக பணிவிடைகள் செய்தேன்.
409. நேரத்திற்கு நேரம் அவர்களுக்கு அவசியமானவற்றை தேடிப்பார்த்து பணிவிடைகள் செய்தேன். நான் எனது கைகளால் எனது கணவரின் பாதங்களை கழுவி வீட்டிற்குள் வர வைத்தேன். என் கணவரிடம் நான் வணங்கியபடியே சென்றேன்.
410. நான் சீப்பு, வாசனை திரவியங்கள், மற்றும் பிற அலங்கார பொருட்களையும் கண்ணாடியையும் எடுத்துக் கொண்டு என் கணவரிடம் செல்வேன். என் கைகளாலேயே அவரை அலங்காரம் செய்தேன்.
411. என் கைகளாலேயே சோறு சமைத்தேன். பாத்திரங்களை கழுவினேன். ஒரு தாய் தன் ஒரே பிள்ளையை கவனிப்பதைப் போன்று நான் என் கணவரை அன்புடன் கவனித்தேன்.
412. அவர் மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருந்தாலும், பணிப்பெண்னைப் போன்று பணிவடைகள் செய்தாலும், பணிவன்போடு அனைத்தையும் தேடிப்பார்த்து செய்தாலும், சோம்பலற்று ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்த என்னையே அவர் திட்டுவார்.
413. இறுதியில் அவர் தம் பெற்றோர்களுக்கு இவ்வாறு சொன்னார். “நான் இந்த வீட்டை விட்டு போகின்றேன். இந்த இசிதாசியுடன் குடும்பம் நடத்த எனக்கு எவ்வித அவசியமும் இல்லை” என்று.
414. “மகனே அப்படிச் சொல்ல வேண்டாம். இந்த இசிதாசி அறிவுள்ள ஒரு பெண்தானே. அதி~;டமானவள். சோம்பலற்றவள். இப்படி இருக்கையில் நீங்கள் இசிதாசியை வெறுப்பதற்கு என்ன காரணம்?
415. ஆம் ! அவள் எனக்கு எவ்வித தவறும் செய்ததில்லை. ஆனாலும் இந்த இசிதாசியுடன் என்னால் வாழ முடியாது. எனக்கு அவளை பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது. அவளிடமிருந்து எனக்கு எதுவும் அவசியமில்லை. நீங்கள் தொடர்ந்து இவளை இந்த வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பினால் வைத்துக் கொள்ளுங்கள். நான் யாரிடமும் சொல்லாமல் இந்த வீட்டை விட்டு போகின்றேன்.
416. என் அத்தையும் மாமனாரும் அவரது பேச்சை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் என்னிடம் இவ்வாறு கேட்டார்கள் “மகளே, நீ எம் மகனுக்கு என்ன தவறு செய்தாய்? பயமின்றி சொல்” என்று.
417. “நான் அவருக்கு எவ்விதமான தவறுகளும் செய்ததில்லை. அவரை இம்சித்ததில்லை. தவறாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. உத்தமியே, இவ்வாறு நான் இருக்கையில் என் மீது இவ்வளவு கோபம் கொண்டால் நான் என்ன செய்வேன்?”
418. “எம் மகனை அன்புடன் கவனித்த திருமகளை எமது குடும்பம் இழந்துவிட்டது” என்று என்னை மீண்டும் என் தந்தையாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
419. இந்த முறை என் தந்தையார் எம்மை விட அரைவாசி வரிவருமானமுடைய செல்வந்த குடும்பத்திற்கு என்னை மணமுடித்து கொடுத்தார்.
420. ஒரு மாதம் தான் நான் அவ்வீட்டில் இருந்தேன். அடக்கமும் பணிவுமுடைய பணிப்பெண்ணைப் போன்று பணிவிடைகள் செய்த போதிலும், துரோகம் செய்யாமல் ஒழுக்கமாக இருந்த போதிலும் அந்த வீட்டிலிருந்தும் என்னை அனுப்பிவிட்டார்கள்.
421. இறுதியில் என் தந்தையார் வீடு வீடாக பிச்சை எடுத்து சாப்பிடும் ஒரு பிச்சைக்காரனை வீட்டிற்கு அழைத்து வந்தார். “ மகனே, உன்னுடைய இந்த கந்தை துணிகளையும் இந்த தட்டையும் வீசிவிடு. என் மகளை திருமணம் செய்துகொள்” என்று சொன்னார்.
422. அந்த மனிதன் என்னுடன் சிறிது காலம் இருந்தார். அவரும் என்னை விட்டு போனார். அவர் போகும் நாள் என் தந்தையாரிடம் “என்னுடைய கந்தை துணிகளும் என் தட்டையும் எனக்கு திருப்பி கொடுங்கள். நான் திரும்பவும் பிச்சையெடுத்தே வாழ்கிறேன்” என்று.
423. அச்சமயம் எனது தாயும் தந்தையும் அவரிடம் இவ்வாறு சொன்னார்கள். “இந்த வீட்டில் உனக்கு என்ன கிடைக்கவில்லை? எது வேண்டுமானாலும் தயங்காமல் சொல். நாம் அவற்றை செய்து தருகின்றோம்.”
424. எனது பெற்றோர்கள் இவ்வாறு சொல்லும் போதும் அவர் “இல்லை. இல்லை. இன்னும் என்னிடம் வாழக்கூடிய வலிமை இருக்கிறது. எனக்கு இந்த இசிதாசியினால் எவ்வித பயனும் இல்லை. எனக்கு இசிதாசியுடன் குடும்பம் நடத்துவதற்கு எவ்வித அவசியமும் இல்லை.” என்று.
425. பிச்சை எடுத்து சாப்பிட்டு பிழைப்பு நடத்திய அந்த மனிதனும் என்னை வேண்டாம் என்று விட்டுச்சென்று விட்டார். நான் இவ்வாறு முடிவெடுத்தேன். ஒன்று நான் யாரிடமும் சொல்லாமல் தற்கொலை செய்து கொள்வேன். அல்லது துறவறம் மேற்கொள்வேன் என்று.
426. உயர் ஒழுக்கமுடைய, தர்மத்தை நன்கறிந்த சீலமிகுந்த ஒரு பிக்குணி இருந்தார். ஆரியங்கனையான அந்த ஜினதத்தா எனும் பிக்குணி ஐயமேற்க வீடு வீடாக செல்லும்போது எம் வீட்டிற்கும் வருகை தந்தார்கள்.
427. அந்த உத்தமியை கண்டவுடன், நாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமரச்செய்தோம். அவ் இருக்கையில் அமர்ந்த அந்த உத்தம பிக்குணியின் பாதங்களை வணங்கி அன்னத்தை அளித்தோம்.
428. அன்னதானங்களையும் திண்பண்டங்களையும் அவர்களுக்கு அளித்தோம். அதன் பின்னர் நான் “உத்தமியே, நானும் துறவறம் மேற்கொள்ள விரும்புகிறேன்.” என்றேன்.
429. அச்சமயம் எனது தந்தையார் என்னிடம் இப்படிச் சொன்னார். “மகளே, நீ இந்த மாளிகையில் இருந்து கொண்டே தர்மத்தில் ஈடுபடு. சிரமணர்களுக்கு தானமளித்து உபசாரம் செய்” என்று.
430. நான் என் தந்தையாரிடம் அழுது புலம்பினேன். “இல்லை தந்தையாரே, நான் செய்து கொண்ட பாவங்களையே இப்படி அனுபவிக்கிறேன். அந்த பாவங்களை நான் முடித்துக் கொள்ள வேண்டும்;” என்று.
431. அதன் பிறகு என் தந்தையார் இ;வ்வாறு பதிலளித்தார். புருN~hத்தமரான புத்த பகவான் ஏதேனும் உத்தம தர்மத்தை உய்த்துணர்ந்து கொண்டாராயின், நீயும் அந்த உத்தம தர்மத்தை உய்த்துணரந்து கொள். மோட்சத்தை உறுதி செய்துகொள்.”
432. நான் என் பெற்றோர்களையும் உறவினர்களையும் வணங்கி விடைபெற்றேன். நானும் துறவறம் பூண்டேன். துறவறம் மேற்கொண்டு ஏழாவது நாளன்று நானும் மூவகை ஞானங்களை பெற்றுக் கொண்டேன்.
433. என்னால் என்னுடைய கடந்த ஏழு முற்பிறவிகளை காணக்கூடியதாக இருந்தது. நான் முற்பிறப்பில் செய்த பாவத்தின் விளைவையே இந்த வாழ்வில் அனுபவித்தேன். நான் அதனை தங்களுக்கு சொல்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.
434. இதற்கு ஏழு பிறவிகளுக்கு முன் நான் ஏரகச்ச எனும் நகரில் பெருஞ்செல்வம் படைத்த பொற்கொல்லனாக இருந்திருக்கிறேன். அப்பிறவியில் நான் இளமையால் மதிமயங்கி பல பெண்களின் பின்னால் சென்றேன்.
435. அந்த பிறவியில் நான் மரணித்து நரகத்தில் பிறந்தேன். நரகத்தில் பிறந்த நான் பல்வேறு துன்பங்களை அனுபவித்தேன். மிக நீண்ட காலங்கள் கொடிய துன்பங்களை அனுபவித்து அங்கிருந்து மறைந்து ஒரு பெண்குரங்கின் வயிற்றில் கருவுற்றேன்.
436. நான் பிறந்து ஏழு நாட்களாகியிருந்தன. அந்த குரங்கு கூட்டத்தின் தலைமை குரங்கு என் ஆண் உறுப்பை பிடுங்கி எறிந்தது. ஏனையோரின் பெண்களுடன் தகாத உறவு கொண்டதன் விளைவையே நான் இவ்வாறு அனுபவித்தேன்.
437. நான் அந்த குரங்கு பிறப்பிலிருந்து மறைந்தேன். சிந்தவ எனும் வனத்தில் ஒரு கண் குருடாகிய கூனிப்போன ஒரு பெண்கழுதை இருந்தது. இம்முறை நான் அந்த கழுதையின் வயிற்றில் கருவுற்றேன்.
438. (கழுதையாக இருக்கும்போது) என் சிறு வயதில் விதைப்பையை அடித்தார்கள். பன்னிரெண்டு வருடங்களாக நான் பிள்ளைகளை சுமந்து நடந்தேன். ஆனால் விதைப்பையை அடித்த இடம் காயமாகியிருந்தது. அந்த காயத்தில் புழுக்கள் தோன்றி நான் நோயுற்றேன். பெண்களுடன் தகாத உறவு கொண்டதன் விளைவையே நான் இவ்வாறு அனுபவித்தேன்.
439. நான் அங்கிருந்து மறைந்தேன். மாடுகளை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியின் பசுவின் வயற்றில் கருவுற்றேன். நான் செந்நிறமான ஒரு கன்றாக இருந்தேன். என் பன்னிரெண்டாம் மாதத்தில் முன்பைப் போன்றே என் விதைப்பையை அடித்தார்கள்.
440. நான் ஏர்களில் பூட்டப்பட்டேன். சுமையிழுத்தேன். குருடனைப் போன்று ஏனையோரின் பெண்களுடன் உறவு கொண்டதன் விளைவால் நான் அந்த பிறவியில் குருடாகி நோயுற்றேன்.
441. நான் அங்கிருந்து மறைந்தேன். நகர வீதியில் வசிக்கும் ஒரு தாச குலத்தில் பிறந்தேன். ஏனையோரின் பெண்களுடன் உறவு கொண்டதன் விளைவை பாருங்கள். நான் இம்முறை ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. அலியாக பிறந்தேன்!
442. நான் அப்பிறவியில் என் முப்பதாவது வயதில் இறந்தேன். நான் நிறைய துன்பங்களை அனுபவித்தேன். அங்கிருந்து மறைந்த நான், கடன் தொல்லைகளால் பீடிக்கப்பட்டிருந்த, சுமைகளை சுமந்து செல்லும் குடும்பத்தில் இம்முறை பெண்ணாக பிறந்தேன்.
443. எம் குடும்பத்தினரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதன் காரணமாக சுமையிழுக்கும் கூட்டத்தின் தலைவன் எம் வீட்டினுள் நுழைந்து என்னை பலாத்காரமாக இழுத்துச் சென்றான்.
444. அப்போது எனக்கு பதினாறு வயது. நான் இளமையாக இருந்தேன். அந்த தலைவனின் ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் கிரிதாச. அவன் என்னை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
445. அவனுக்கு ஒழுக்கமான, சுவாமி பக்தியுடைய, நற்குணமுள்ள ஒரு மனைவி இருந்தாள். நான் அவள் மீது பொறாமை கொண்டேன். அதன் காரணமாக மனைவி மீது கோபம் தோன்றும் வகையிலான சதி வேலைகளை செய்தேன்.
446. நான் ஒரு பணிப்பெண்ணைப் போன்று கணவருக்கு பணிவிடைகள் செய்யும் போதும் அந்த கணவர் என்னை விட்டு பிரிந்து செல்வதற்கு காரணம் இந்த பாவச்செயலின் விளைவேயாகும். இப்போது அந்த கர்மத்தையும் முடித்துக் கொண்டேன்.
இந்த செய்யுள்கள் இசிதாசி எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
நாற்பது செய்யுள்கள் என்ற வகையில் மொழிந்த பகுதி முற்றும்.
(சத்தாலீச நிபாதோ நிட்டிதோ)
பல செய்யுள்களை உள்ளடக்கிய பெரும் பகுதி
(மகா நிபாதோ)
சுமேதா தேரியின் செய்யுள்கள்.
447. மன்தாவதீ நகரின் கொஞ்ச்ச எனும் அரசனின் பட்டமகி~pக்கு ஒரு புதல்வி இருந்தாள். அவளது பெயர் சுமேதா. அவள் புத்த சாசனத்தின் மீது பெரும் பக்தி கொண்டிருந்தாள்.
448. அவள் ஒழுக்கமிகுந்தவள். அழகாகவும் இனிமையாகவும் பேசுபவள். அதேபோன்று அவள் நிறைய தர்ம விடயங்களை அறிந்திருந்தாள். அவள் புத்த சாசனத்தில் அடங்கியிருக்கிறாள். அவள் தம் பெற்றோர்களிடம் சென்று இவ்வாறு கூறினாள். “நீங்கள் இருவரும் நான் சொல்லும் இந்த விடயத்தை சற்று கேளுங்கள்”.
449. நான் மோட்சத்தை மாத்திரமே விரும்புகிறேன். தேவலோகத்தில் பிறந்தால் கூட அந்த பிறப்பு நிரந்தரமற்றது. மனித உலக காம சுகங்களை பற்றி பேசவே தேவையில்லை. அவை மிக மிக இழிவானவை. அவற்றில் மிகச்சிறிய சுகமே இருக்கிறது. ஆனால் அவற்றினால் உயிர்களுக்கு கிடைக்கும் தீமைகளே அதிகம்.”
450. முட்டாள் மனிதர்கள் இந்த காமங்களிலேயே திளைத்து வாழ்ந்தாலும், காமங்கள் என்பன மிக மிக கொடியவை. பயங்கரமான சர்ப்பத்தின் வி~த்தை போன்றதே காமங்கள். முட்டாள் மனிதர்கள் இத்தகைய காமங்களின் பின்னே சென்று இறுதியில் நரகத்தில் பிறந்து அநேக துன்பங்களை அனுபவிப்பார்கள்.
451. பாவமிகுந்த மனதுடன் பாவங்கள் செய்து, மனம், வாக்கு, காயம் எனும் மூவகை கதவுகளினாலும் பாவங்கள் செய்து, நரகத்தில் பிறந்து சோகிப்பார்கள்.
452. ஞானமற்ற, சிந்திக்கும் திறனற்ற அந்த முட்டாள் மனிதர்கள் துக்க தோற்றத்திலே (ஆசையில்) மூழ்கிக் கொண்டு சன்சாரப்பயணத்தில் அலைந்து திரிகிறார்கள். ஆரிய சத்தியங்கள் தெளிவாக போதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை புரிந்து கொள்ள மாட்டார்கள். உய்த்துணர்ந்து கொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள்.
453. அன்னையே, புருN~hத்தமரான புத்த பகவான் மொழிந்தருளிய நாற்பேருண்மைகளை அறியாத மக்களின் எண்ணிக்கையே அதிகம். அவர்கள் மீண்டும் தேவலோகத்தில் பிறக்கவே விரும்புகிறார்கள்.
454. பிறப்பிற்குரிய அனைத்து விடயங்களும நிரந்தரமற்றவையாகும். எனவே தேவலோக பிறப்புகளும் நிரந்தரமற்றவையே. ஆனால் அந்த அஞ்ஞான மாந்தர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு எவ்வித பயமும் அற்றவர்கள்.
455. நால்வகை நரகங்களை உள்ளடக்கிய இந்த உலகில், தேவ மனித உலகங்களில் பிறப்பதுவும் மிக மிக கடினமானதாகும். நரகலோகங்களில் பிறந்த ஒருவருக்கு இந்த மனிதலோகத்தில் போன்ற புனிதமான துறவறம் கிடையாது.
456. எனவே நீங்கள் இருவரும் தச பலங்கள் (பத்து வகையான ஞானங்கள்) கொண்ட புத்த பகவானின் உத்தம சாசனத்தில் துறவறத்தை மேற்கொள்வதற்கு எனக்கு அனுமதி தாருங்கள். பிறப்பும் மரணமும் கொண்ட இந்த இழிவான பிறவிப்பயணத்தை முடித்துக் கொள்வதற்கு நான் தீவிரமாக முயற்சிக்கிறேன்.
457. இந்த உடல் சாரமற்றதாகும். அந்த பிறப்புக்களை ஏற்றுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைதான் என்ன? பிறப்பிற்கான ஆசையை இல்லாதொழிப்பதற்காகவே நான் துறவறத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். எனவே அதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்.
458. இது புத்தோத்பாத (புத்த பகவான் ஒருவர் தோன்றி அவரது தர்மம் நிலைத்திருக்கும்) காலமாகும். தர்மத்தினை உய்த்துணர்ந்து கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் இருந்து நான் மீண்டிருக்கிறேன். (தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்வதற்கான) உன்னதமான வாய்ப்பே எனக்கு கிடைத்துள்ளது. ஒழுக்கமான சீலமிகுந்த வாழ்க்கையும் பரிசுத்தமான பிரம்மச்சரியத்தையும் என் வாழ்நாள் முழுவதும்; காத்துக்கொள்வேன்.
459. சுமேதா தம் பெற்றோர்களுக்கு இந்த விடயத்தையும் சொன்னாள். எனக்கு துறவறம் பூணுவதற்கான அனுமதி தராவிடில் சாப்பிடாமல் இருந்தே இறந்துவிடுவேன்.
460. சுமேதாவின் தாயார் துக்கத்தினால் அழுக ஆரம்பித்தார். தந்தையாரும் கண்ணீருடன் கூடிய கண்களோடு சுமேதாவிற்கு இல்லறத்தில் நாட்டத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து முயற்சித்தார்.
461. மகளே, எழுந்திரு. இவ்வாறாக துயரடைவதன் பலன் என்ன? நாம் உன்னை “வாரணவதீ தேசத்தின் அரசருக்கு நிச்சயித்திருக்கிறோம் அல்லவா? அவர் மிகவும் அழகானவர். உன்னை அந்த அரசருக்கே நிச்சயித்திருக்கிறோம்.
462. அனீகதத்த அரசரின் மனைவியான பின்னர் நீயே பட்டமகி~pயாவாய். மகளே, நீ சொல்லும் இந்த ஒழுக்க நெறிகள், துறவறம் என்பன மிக மிக கடினமானவையாகும்.
463. அனீக அரசரின் மனைவியான பின்னர் உன்னால் அவரது சாம்ராஜ்யத்தில் உன் இ~;டப்படி வாழ முடியும். அந்த குடுப்பத்திற்கும் செல்வத்திற்கும் உன்னால் அதிபதியாக முடியும். அதன் மூலம் அனைத்து வகையான சுகங்களையும் உன்னால் அனுபவிக்க முடியும். மகளே, நீ இன்னும் மிகவும் இளமையான வயதிலேயே இருக்கிறாய். இந்த சிற்றின்பங்களை அனுபவி. மகளே.. உன் திருமணம் இனிதே இடம் பெறுவதாக!
464. சுமேதா தம் பெற்றோர்களிடம் மீண்டும் இவ்வாறு சொன்னாள். எவ்விதமான சாரமுமற்ற பிறப்பிற்கு வழிவகுக்கும் எவையும் எனக்கு வேண்டாம். நான் துறவறத்தை மேற்கொள்வேன். இல்லையென்றால் மரணத்தை தழுவிக்கொள்வேன். திருமணமென்றால் ஒருபோதும் நடக்காது.
465. பல்வேறு அழுக்குகள் நிறைந்த இந்த உடல் அசுத்தமானதாகும். நாற்றம் மிக்கதாகும். பயங்கரமான கழிவுகள் நிறைந்ததாகும். இந்த இழிவான உடம்பிலிருந்து எந்நேரமும் கழிவுகள் வெளியேறிக் கொண்டேயிருக்கின்றன. மலக்கழிவுகள் நிறைத்திருக்கும் ஒரு பாத்திரத்தை போன்றதே இந்த உடல். எனவே இத்தகைய அருவருப்புமிக்க கழிவுகள் நிறைந்த உடலுடன் நான் எப்படி சேருவேன்?
466. தசையும் இரத்தமும் நிறைந்த இ;வ்வுடலை நான் பெரிதும் அருவருக்கிறேன். நான் இந்த உடலின் உண்மை நிலையை உய்த்துணர்ந்தே இருக்கிறேன். புழுக்களின் வசிப்பிடமே இந்த உடலாகும். கழுகுகளுக்கு உணவாகும் இந்த உடலை யாருக்குத்தான் கொடுக்க முடியும்?
467. சிறிது காலத்தின் பின்னர் இந்த உடலில் இருந்து விஞ்ஞானம் (நுண்ணுணர்வு) வெளியேறிய பின்பு உறவினர்களே இந்த உடலை அருவருப்பார்கள். மரக்கட்டையை வீசுவதைப் போன்று இடுகாட்டில் இந்த உடலை விட்டு வீடு திரும்புவார்கள்.
468. அதன் பிறகு நாய்களுக்கும் நரிகளுக்கும் இந்த உடல் உணவாகிவிடும். மயானத்தில் பிணத்தை விட்டு வந்த பின்னர் பெற்றோர்களும் அதனை அருவருத்து தலை குளிப்பார்கள். அனைவருக்கும் பொதுவான இந்த நிலையைப் பற்றி மேலும் பேசுவதற்கு ஒன்றுமில்லை.
469. எலும்புகளாலும் நரம்புகளாலும் பிணையப்பட்டே இந்த உடல் இருக்கிறது. எச்சில், கண்ணீர், மலம், சிறுநீர் என்பன நிறைந்திருக்கின்றன. ஆனால் முட்டாள் மனிதர்கள் இந்த உடலை மிகவும் விரும்புகிறார்கள்.
470. இந்த உடலை வேறுபடுத்தினால் இந்த உடலின் உள்ளே இருக்கும் பாகங்களை காண முடியாமல் அருவருப்பார்கள்.
471. ஸ்கந்தங்கள், தாதுக்கள், அறுவகை நிறுவனங்கள் (புலன்கள்) எனும் இவை காரணங்களால் தோற்றம் பெற்றவையாகவும், பிறந்ததனால் தோன்றிய துக்கங்கள் என்பதனையும் நான் உய்த்துணர்ந்திருக்கிறேன். இவ்வாறாக அறிவினால் காணும் நான் எவ்வாறு திருமணத்திற்கு சம்மதிக்க முடியும்?
472. இரும்புக் கோலினால் அன்றாடம் முந்நூறு முறை அடிவாங்கி, நூறு வருடங்கள் தொடர்ந்து இத்தகைய அடிகளை வாங்கி முடித்த பிறகு இந்த பிறவிப்பயண துக்கம் முடிவுறுமாயின் அதுவும் எனக்கு உத்தமமானதாகும்.
473. எம் வழிகாட்டி இவ்வாறாகவே மொழிந்திருக்கிறார். அந்த உத்தம அறிவுரைகளை அறிந்தறிந்தே இந்த பிறந்து மடியும் பிறவிப்பயணத்தை ஏற்றுக்கொண்டால், அத்தகையவர்களுக்கே இந்த சன்சாரம் மேலும் மேலும நீளமானதாகின்றது.
474. இந்த மனித உலகம், தேவ உலகங்கள், மிருகலோகங்கள், அசுர உலகங்கள், பிரேத உலகங்கள், நரகலோகங்கள் எனும் அனைத்திடங்களிலும் முடிவில்லாத துன்பங்களே இருக்கின்றன.
475. நரகலோகம், மிருகலோகம் எனும் துர் உலகங்களில் பிறக்க நேரிட்டால் சொற்களால் சொல்லி முடிக்க இயலாதபடி பல்வேறு துன்பங்களையே அனுபவிக்க நேரிடும். தேவர்கள் மத்தியில் பிறந்தாலும் நிரந்தரமான பாதுகாப்பு இல்லை. எனவே மோட்சத்திற்கு நிகரான உத்தமமான சுகம் வேறெதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும்.
476. தசபலங்களுடைய புத்த பகவானது அறிவுரைகளுக்கேற்ப நடந்து கொண்டால், பிறந்து மடியும் இந்த பிறவிப்பயணத்தை முடித்துக் கொள்வதற்கு எவரேனும் முயற்சித்தால், அவர்கள் அந்த உத்தம சுகமான மோட்சத்தையே உறுதி செய்வார்கள்.
477. தந்தையாரே, நான் இன்றைய தினமே இல்லறத்தை துறந்துவிடப் போகின்றேன். இந்த அர்த்தமற்ற செல்வங்களினால் எனக்கு எவ்வித பயன்களும் இல்லை. நான் இந்த காமங்களை வாந்தியெடுத்தைப் போன்றே கைவிட்டிருக்கிறேன். பனை மரத்தின் குருத்தை வெட்டியகற்றிதைப் போன்றே இந்த காமங்களை துறந்தேன்.
478. அவள் தம் தந்தையாரான அரசரிடம் இவ்வாறாக கூறினாள். அச்சமயம் அனீகதத்த அரசர் திருமணத்திற்காக வாரணவதீ நகரில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.
479. அச்சமயம் சுமேதா அவளது கருநீல நிறமான கூந்தலை வாளால் வெட்டி வீசினாள். தம் அரண்மணை அறையின் கதவுகளை பூட்டிக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தாள். முதலாம் படிமுறை த்யான நிலையை அடைந்தாள்.
480. அவள் இவ்வாறாக மனதை ஒருங்கிணைத்து சமாதியில் இருக்கும்போது, அனீகதத்த அரசர் மன்தாவதீ நகரிற்கு வருகை தந்தார். சுமேதா தம் அறையில் அமர்ந்து அனிச்ச சமிக்ஞையை (நிலையிலா தன்மையை) மனதில் விருத்தி செய்து கொண்டிருந்தாள்.
481. அவள் இவ்வாறாக நிலையாமையை நினைவுகூறும் போது அனீதத்த அரசர் பொன் ஆபரணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டு மாளிகையினுள் நுழைந்தார். அனீகதத்த அரசர் சுமேதாவிடம் கைகளைக் கூப்பிக்கொண்டு இவ்வாறாக மன்றாடினார்.
482. அரசின் அதிகாரத்தையும், அனைத்து செல்வங்களையும், அனைத்து வளங்களையும் உனக்காகவே அளிக்கிறேன். நீ இன்னும் இளமையாகவே இருக்கிறாய். மனதிற்கு சுகமான காமங்களை அனுபவிப்பாயாக! காம சுகங்கள் என்பன இவ் உலகில் மிகவும் அரிதாக கிடைப்பனவாகும்.
483. உனக்காக என் மணிமகுடத்தையே நான் அர்ப்பணித்திருக்கிறேன். சுகம் நிறைந்த ஐவகை காமங்களை அனுபவிப்பாயாக! நீ விரும்பும் வகையில் அன்னதானங்களை அளித்து புண்ணியங்களை செய்து கொள். சோகம் கொள்ள வேண்டாம். உன் பெற்றோர்களும் மிக்க துயரத்துடனேயே இருக்கின்றனர்.
484. சுமேதா அவருக்கு இ;வ்வாறாக பதில் அளித்தாள். “நீங்களும் இந்த காமங்களை விரும்ப வேண்டாம். காமங்களினால் ஏற்படும் அனர்ந்தங்களை நினைத்து பாருங்கள்.
485. மகா மந்தாது எனும் சக்கரவர்த்தி மாமன்னர் நாற்பெரும் தீபகற்பங்களுக்கே அதிபதியாக இருந்தார். காமங்களுக்கு அதிபதியாக இருந்தார். ஆனால் அவர் இறுதியில் காமங்களினால் திருப்தியடையாமலேயே மரணத்தை தழுவினார். அத்தகையவருடைய ஆசைகூட நிறைவேறவில்லை.
486. எழுவகையான மாணிக்கங்களை கொண்ட மாமழையே பொழிந்தாலும் காமங்கள் தொடர்பாக திருப்தியடையாத மக்கள் திருப்தியற்றே மரணிப்பார்கள்.
487. காமங்கள் என்பன : வாளும் இறைச்சித் துண்டையும் போன்றனவாகும். பயங்கரமான சர்ப்பத்தின் தலைப்பகுதியைப் போன்றனவாகும். எரிமலையை போன்று பயங்கரமானவையாகும். என்புக்கூட்டைப் போன்றனவாகும்.
488. காமங்கள் நிலையற்றவை. நிரந்தரமற்றவை. பெருந்துக்கங்களை கொண்டவை. நாள் முழுவதும் சூடாக்கப்பட்ட இரும்பு பந்தைப் போன்றதே காமம். அனைத்து துக்கங்களுக்கும் வேரைப் போன்றது. மரத்தின் கனியைப் போன்றது.
489. இந்த காமங்கள் : மரங்களின் காய்களைப் போன்றனவாகும். இறைச்சி துண்டுகளை போன்றனவாகும். இந்த காமங்கள் துன்பங்களையே உருவாக்கித் தருகின்றன. கனவில் ஏமாறியதைப் போன்றதாகும். கடனுக்;கு பெற்றதைப் போன்றனவாகும்.
490. இந்த காமங்கள் வி~மூட்டிய ஆயுதத்தை போன்றனவாகும். கொடிய வேதனைகளை தருவதாகும். காயத்தை போன்று வேதனைகளையே தருவனவாகும். மரணத்தை நோக்கி இழுத்துச் செல்வனவாகும். தீக்குழியைப் போன்று பயங்கரமானவையாகும். சித்திர வதைகள் செய்பவனைப் போன்றனவாகும்.
491. இந்த காமங்கள் துக்கங்கள் நிறைந்தவை என்றே சொல்லப்படுகிறது. ஆபத்தானவை. எனவே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். தனக்குரிய எதுவுமே இந்த பிறவிச்செயற்பாட்டில் இருப்பதாக நான் நம்பமாட்டேன்.
492. தன்னுடைய தலை தீப்பற்றி எரியும் போது வேறு எதைப்பற்றியும் நினைக்க நேரமில்லை. முதுமையும் மரணமும் பின்தொடர்ந்து வரும்போது அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்க வேண்டும்.
493. நான் அறையின் கதவை திறந்தேன். என்னுடைய பெற்றோர்களும் அனீகதத்த அரசரும் தறையில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் இப்படி சொன்னேன்.
494. இந்த பிறவிப்பயணத்திற்கு முடிவில்லை. தந்தையின் மரணத்தின் போது, சகோதரன் வதைக்கப்படும் போது, தான் சித்திர வதைகள் அனுபவிக்கும் போது, மீண்டும் மீண்டும் அழுது புலம்பும் அஞ்ஞான மாந்தர்களுக்கு இந்த பிறவிப்பயணம் மிகவும் நீளமானதாகும்.
495. நாம் முடிவற்ற இந்த பிறவிப்பயணத்தின் ஒவ்வொரு பிறப்புகளில் பிறந்திருந்த போது அழுத கண்ணீர், குடித்த தாய்ப்பால், கொலையுண்டு இறந்து போகும் போது வடிந்தோடிய இரத்தம் எவ்வளவு என்பதை நினைத்து பாருங்கள். உயிர்கள் மரணிப்பதால் மீதமாகும் எலும்பு கூடுகளின் எண்ணிக்கையை நினைத்து பாருங்கள்.
496. ‘நாம் பிறவிப்பயணத்தின் போது இதுவரை அழுத கண்ணீர் இந்த நாற்பெருங்கடல்களின் நீரை விஞ்சும்’ என்றே புத்த பகவான் போதித்தார். குடித்த தாய்பாலையும் அவ்வாறே நினைக்கும் படி போதித்தார். நாம் ஒரு கற்ப காலத்தில் இறப்பதால் எஞ்சும்; எலும்பு கூடுகளை வேபுல்ல மலையின் உயரத்திற்கு நிகராகவே நினைக்க வேண்டும் என போதித்தார்.
497. நாவலந்தீவு உட்பட்ட இந்த பெரும் நிலத்திற்குரிய மண்ணை, உலங்காரை (வெரளுக்காய்) அளவிற்கு உருண்டை பிடித்து குவியல்களாக்கி அதில் ஒவ்வொன்றாக எடுத்து இது இந்த பிறவியின் அம்மா, இது அந்த அம்மாவின் அம்மா என சொல்லி வைத்தால் அந்த மண் உருண்டைகள் முடிந்து போகுமே மவிர தாய்மார்களின் எண்ணிக்கை முடிவுறாது.
498. இந்த உலகில் உள்ள அனைத்து மரஞ்செடி கொடிகளையும் ஒன்று சேர்த்து நான்கு அங்குல நீளத்திற்கு அவற்றை வெட்டி அவை ஒவ்வொன்றை எடுத்து பிறவிப்பயணத்தில் கிடைத்த தந்தைமார்களின் எண்ணிக்கைய அளவிட்டாலும் அந்த மரக்குச்சிகள் முடியுமே தவிர இந்த பிறவிப்பயணத்தின் போது எமக்கு கிடைத்த தந்தைமார்களின் எண்ணிக்கை முடியாது. அந்த உவமையையும் நினைவு கூறுங்கள்.
499. நூறு வருடங்களுக்கு ஒருமுறை கடலில் வாழும் ஒரு கண் குருடாகிய கடலாமையொன்று மேலே வருகின்றது. அவ்வாறு வரும் போது கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஏர் ஒன்றின் துவாரத்தின் வழியாக அந்த கடலாமையின் தலை நுழைந்து வானத்தை பார்ப்பதைப் போன்று இந்த மனித பிறவி கிடைப்பதானது, அதனிலும் பார்க்க அரிதானதாகும்.
500. சாரமற்ற இந்த உடலை நுரைக்கட்டியைப் போன்று பாருங்கள். நிலையற்ற இந்த ஐவகை உபாதானஸ்கந்தங்களை பாருங்கள். நரகத்தில் அனுபவிக்க நேரிடும் சொல்லால் வருணிக்க முடியாத துன்பங்களை நினைத்து பாருங்கள்.
501. பல்வேறு பிறப்புக்களில் பிறந்து இறந்து மயானங்களை நிரப்பியதை நினைவுகூர்ந்து பாருங்கள். உணவிற்கு இருக்கின்ற விருப்பைப பற்றி கூறப்படுகின்ற முதலை பயத்தை நினைவு கூறுங்கள். நாற்பேருண்மைகளை நினைவு கூறுங்கள்.
502. புத்த பகவான் ஒருவரது தர்மம் இருக்கின்ற இந்த காலத்தில் காமங்களை தேடியலைவது எதற்காக? இவ் அனைத்து விதமான காம ஆசைகளும் மிகவும் கொடியவையாகும்.
503. அமிர்தத்திலும் இனிய தர்மம் இருக்கும் காலத்தில்; எதனை கண்டதால் காமங்களை விரும்ப வேண்டும்? காமங்களின் மீதான இந்த விருப்பானது தீயைப் போன்றதாகும். அர்த்தமற்றதாகும். பெரும் நடுக்கமாகும். வருத்தமாகும்.
504. துறவு வாழ்க்கைக்கு எதிரிகள் இல்லை. ஆனால் காமங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். உங்களுக்கு இந்த காமங்களினால் என்ன பயன் கிடைக்கிறது? அரசாணைகளுக்கு, தீக்கு, திருடர்களுக்கு, நீரிற்கு இந்த காமங்கள் இரையாகும். தாம் விரும்பாத நபர்களுக்கு இந்த காமங்கள் உடைமையாகும். காமங்களின் காரணமாக புதிது புதிதாக எதிரிகள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்.
505. அமிர்த மோட்சம் இருக்கும் இந்த காலத்தில், இந்த காமங்களில் ஒன்றித்து, ஏன் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டும்? இந்த காமங்களால் உங்களுக்கு எத்தகைய பிரயோசனம் கிடைக்கிறது? இந்த காமங்கள் இழிவான காரணத்தினாலேயே இவ்வளவு துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படுகின்றன.
506. எரிந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையை கையில் எடுத்தால்தான் அது சுடும். கைவிட்டால் மேலும் சுடாது. காமங்களும் எரிகின்ற கொள்ளிக்கட்டையைப் போன்றதே. கைவிடும் வரை அவை உயிர்களை எரித்துக் கொண்டேயிருக்கும்.
507. இந்த அற்பமாக சொற்பமான காம சுகத்திற்காக உத்தமமான ஆன்மீக சுகத்தை இழந்து விடாதீர்கள்.
508. இந்த கண், காது, உட்பட்ட இந்திரியங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை தர்மத்தின் வழி அடக்கிக் கொள்ளுங்கள். சங்கிலியால் கட்டப்பட்ட நாய் குட்டியைப் போன்று இந்த உயிர்கள் காமங்களில் கட்டுண்டு இருக்கின்றனர். பசியினால் வாடும் சண்டாள மனிதர்கள் நாயை அடித்துக்கொன்று விடுவதைப் போல இந்த காமங்களும் உங்களுக்கு அதே நிலையை தந்துவிடும்.
509. நீங்கள் அனைவரும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் எண்ணற்ற துன்பங்களை அனுபவிப்பதற்கான காரணம் இந்த காமங்களேயாகும். எனவே இந்த நிலையற்ற காமங்களை கைவிடுங்கள்.
510. இந்த காமங்கள் இருந்தால் அவ் அனைத்து பிறப்புக்களிலும் முதுமையும் மரணமும் மாத்திரமே கிடைக்கும். ஆனால் முதுமை மரணமற்ற மோட்சம் இருக்கின்ற இந்த நேரத்தில் உங்களுக்கு இந்த காமங்களினால் கிடைக்கும் பிரயோசனம் என்ன?
511. இந்த மோட்சம் முதுமையற்றது. மரணமற்றது. அமரர் நிலையடைவற்கு அடிப்படை இந்த மோட்சமேயாகும். இந்த மோட்சம் சோகங்களற்றதாகும். புலம்பல்கள் அழுகைகள் அற்றதாகும். கிலேச கட்டுக்கள், கிலேச தடைகள் அற்றதாகும். துர்நடத்தைகள் அழுக்குகள் அற்றதாகும். பயங்களற்றதாகும். கவலைகள் அற்றதாகும்.
512. நிறைய மக்கள் இந்த மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள். எனவே இப்போது கூட புத்த பகவான் மொழிந்த வகையில் அறிவினால் ஆராயும் ஒருவரால் மோட்சத்தை உய்த்துணர்ந்து கொள்ள முடியும். முயற்சிக்காவிட்டால் முடியாது.
513. பிறவிப்பயணத்தை விரும்பாத சுமேதா இவ்வாறு கூறினாள். அதேபோன்று அனீகதத்த அரசர் அறிந்து கொள்ளும் வகையில் தாம் வாளால் வெட்டிய கூந்தலை கீழே போட்டாள்.
514. அச்சமயம் அனீகதத்த அரசர் எழுந்திருந்தார். சுமேதா இளவரசியின் தந்தையாரின் பக்கம் திரும்பி கைகூப்பி இவ்வாறு யாசித்தார். “துறவறம் மேற்கொள்வதற்கு சுமேதாவிற்கு இடமளியுங்கள். அந்த உத்தமி மாற்றமடையாத விமோட்சனத்தை காண்பதாக!”
515. தந்தையாரும் அவளை விட்டுவிட்டார். துக்கத்திற்கு அஞ்சிய சுமேதா துறவறத்தை மேற்கொண்டார். சிக்கமாணவியாகினார். அறுவகை அபிக்ஞைகளையும் பெற்றுக் கொண்டார். மேன்மை நிலையான அரஹத் நிலையை அடைந்தார்.
516. இளவரசியான சுமேதா தேரிக்கு அந்த மோட்ச சுகம் அற்புதமானதாகவும் ஆச்சரியம் மிக்கதாகவும் இருந்தது. அந்த உத்தமி தம் இறுதி காலத்தில் புப்பேனிவாசானுஸ்ஸதி ஞானத்தின் மூலம் தாம் அறிந்து கொண்ட முற்பிறப்பு வரலாற்றை இவ்வாறாக தெரியப்படுத்தினார்.
517. ‘கோணாகமன’ புத்த பகவான் உலகில் தோன்றியிருந்த காலத்தில் சங்கையருக்கான ஆராமம் ஒன்று கட்டுவிக்கப்பட்டது. அக்காலத்தில் நானும் தனஞ்சானியும், கேமாவும் ஒன்றாக சேர்ந்து விகாரை ஒன்றை சங்கையருக்காக அளித்தோம்.
518. அந்த புண்ணியத்தின் விளைவினால் நூறாயிரம் முறை, பத்தாயிரம் முறை நாம் தேவர்கள் மத்தியில் பிறந்தோம் மனித உலகில் பிறந்த எண்ணிக்கையைப் பற்றி பேசவும் வேண்டுமா?
519. தேவர்கள் மத்தியில் பிறந்த பிறப்புக்களிளும் நாம் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தோம். மனித உலகில் பிறந்த பிறப்புக்களின் தன்மையை பேசவும் வேண்டுமா? எழுவகை மாணிக்கங்களை கொண்ட சக்கரவர்த்தி மாமன்னரது பெண் மாணிக்கம் எனப்படும் பட்டமகி~pயாகவும் நான் பிறந்திருந்தேன்.
520. இவை அனைத்திற்கும் காரணம் நாம் கோணாகமன புத்த பகவானது காலத்தில் செய்து கொண்ட புண்ணியங்களின் விளைவேயாகும். இந்த வாழ்வில் மோட்சத்தை உறுதி செய்து கொண்டேன். தர்மத்தில் ஒட்டிக்கொண்ட சுமேதா தேரி மோட்சத்தை உறுதி செய்து கொண்டார்.
521. மேன்மையான ஞானம் படைத்த புத்த பகவானது உத்தம அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அவ்வாறே நடந்து கொள்வதாயின் அத்தகையவர்கள் பிறப்பிற்கு வழிவகுக்கும் எல்லா விடயங்கள் தொடர்பாகவும் உய்த்துணர்வுடன் வெறுப்பார்கள். அவர்கள் மோட்சத்தை நோக்கியே செல்வார்கள்.
இந்த செய்யுள்கள் சுமேதா எனும் அரஹத் தேரியால் மொழியப்பட்டவையாகும்.
பல செய்யுள்களை உள்ளடக்கிய பெரும் பகுதி முற்றும்
(மகா நிபாதோ நிட்டிதோ)