நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ!
அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும்.

லோகாவபோதசுத்தங்
(உலகினை உய்த்துணர்ந்து கொள்வது தொடர்பாக மொழிந்த போதனை)

வுத்தங் ஹேதங் பகவதா வுத்தமரஹதா’தி மே சுதங்

பாக்கியமுள்ள புத்த பகவானால் இந்த போதனை மொழியப்பட்டது. அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானால் மொழிந்த போதனை ஒன்று என்றே என்னால் கேட்டறிந்துக்கொள்ளப்பட்டது.

லோகோ பிக்கவே ததாகதேன அபிசம்புத்தோ. லோகஸ்மா ததாகதோ விசஞ்ஞ}த்தோ. லோகசமுதயோ பிக்கவே ததாகதேன அபிசம்புத்தோ லோகசமுதயோ ததாகதஸ்ஸ பஹீனோ. லோகநிரோதோ பிக்கவே ததாகதேன அபிசம்புத்தோ. லோகநிரோதோ ததாகதஸ்ஸ சச்சிகதோ. லோகநிரோதகாமினி படிபதா பிக்கவே ததாகதேன அபிசம்புத்தா. லோகநிரோதகாமினி படிபதா ததாகதஸ்ஸ பாவிதா

புண்ணியமிகு பிக்குகளே, இந்த முழு உலகங்கள் தொடர்பாகவும் ததாகதரால் மிகவும் நன்றாக உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது. ததாகதர் இந்த உலகினோடு ஒண்றிக்காமலேயே வசிக்கின்றார். புண்ணியமிகு பிக்குகளே, இந்த உலகின் தோற்றம் ததாகதர் மிகவும் நன்றாக உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது. ததாகதர் உலகின் தோற்றத்தினை இல்லாமல் செய்தார். உலக அழிவு ததாகதரால் முழுமையாக உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது. உலக அழிவு ததாகதர் பரிபூரணமாக உறுதி செய்து கொள்ளப்பட்டது. புண்ணியமிகு பிக்குகளே, உலகங்கள் இல்லாமல் போவதற்காக இருக்கும் செயற்பாடு ததாகதரால் நன்கு உய்த்துணரந்து கொள்ளப்பட்டது. உலகங்கள் இல்லாமல் போவதற்காக இருக்கும் செயற்பாடு ததாகதரால் நன்கு மேன்மை செய்து கொள்ளப்பட்டது.

யங் பிக்கவே சதேவகஸ்ஸ லோகஸ்ஸ சமாரகஸ்ஸ சப்ரஹ்மகஸ்ஸ, சஸ்ஸமணப்ராஹ்மணியா பஸாய சதேவமனுஸ்ஸாய திட்டங் சுதங் முதங் விஞ்ஞாதங் பத்தங் பரியேசிதங் ஆனுவிசரிதங் மனசா, யஹ்மா தங் ததாகதேன அபிசம்புத்தங் தஸ்மா ததாகதோ’தி வுச்சதி.

புண்ணியமிகு பிக்குகளே, தேவர்கள், பிரம்மர்கள், மாரன், சிரமணர்கள், அந்தணர்கள் உட்பட்ட இந்த தேவ மனிதர்களினால் கண்ணால் கண்ட ஏதேனும் இருப்பின், காதால் கேட்ட ஏதேனும் இருப்பின், நுகரப்பட்ட ஏதேனும் இருப்பின், சுவைக்கப்பட்ட ஏதேனும் இருப்பின், உடலால் உணரப்பட்ட ஏதேனும் இருப்பின், மனதினால் அறிந்து கொண்ட ஏதேனும் இருப்பின் பெற்றுக்கொண்ட ஏதேனும் இருப்பின், தேடிக்கொண்ட ஏதேனும் இருப்பின், மனதினால் ஆராய்ந்த ஏதேனும் இருப்பின், அவ் அனைத்தினையும் பகவான் உய்த்துணர்ந்து கொண்டதால் ‘ததாதகர்’ என பகவான் அழைக்கப்படுகிறார்.

யஞ்ச பிக்கவே ரத்திங் ததாகதோ அனுத்தரங் சம்மாசம்போதிங் அபிசம்புஜ்ஜதி,யஞ்ச ரத்திங அனுபாதிசேசாய நிப்பாணதாதுயா பரிநிப்பாயதி, யங் ஏதஸ்மிங் அன்தரே பாசதி லபதி நித்திசதி, சப்பங் தங் தங் ததேவ ஹோதி. நோ அஞ்ஞதா. தஸ்மா ததாகதோ’தி வுச்சதி

புண்ணியமிகு பிக்குகளே, ஒரு ராத்திரிப்பொழுதில் ததாகதர் உத்தம சம்மா சம்போதி நிலையை அடைந்தார், அதேபோல் ஒரு ராத்திரி பொழுதில் ததாகதர் பரிணிர்வானத்தை எய்துவார். அந்த இடைப்பட்ட காலத்தில் ததாகதர் ஏதேனும் மொழிவாராயின், தெரிவிப்பாராயின், சிபாரிசு செய்வாராயின், ஆக்ஞை பிறப்பிப்பாராயின் அவ் அனைத்தும் அவ்வாறே நிகழும். வேறு விதமாக நிகழாது. அதனால் பகவான் ‘ததாகதர்’ எனப்படுகிறார்.

யதாவாதி பிக்கவே ததாகதோ ததாகாரீ. யதாகாரீ ததாகதோ ததாவாதி. இதி யதாவாதி ததாகாரி, யதாகாரீ ததாவாதீ. தஸ்மா ததாகதோ’தி வுச்சதி.

புண்ணியமிகு பிக்குகளே, ததாகதர் எவ்வாறு மொழிகின்றாரோ அம் முறையிலேயே செயற்படுவார். ததாகதர் எவ்வாறு செயற்படுகிறாரோ அதனையே தெரிவிப்பார். இவ்வாறாக எதனை தெரிவிக்கிறாரோ அதேபோல் நடத்தையுடையவராவார். எவ்வாறு நடந்துகொள்கிறாரோ அவ்வாறே தெரிவிப்பார். இக்காரணத்தினாலும் பகவான் ‘ததாகதர்’ எனப்படுவார்.

சதேவகே பிக்கவே, லோகே சமாரகே சப்ரஹ்மகே சஸ்ஸமணப்ராஹ்மணியா பஜாய சதேவ மனுஸ்ஸாய ததாகதோ அபிபூ அனபிபூதோ. அஞ்ஞதத்துதசோ வசவத்தீ. தஸ்மா ததாகதோ’தி வுச்சதி.

புண்ணியமிகு பிக்குகளே, தேவர்கள், பிரம்மர்கள், மாரன், சிரமணர்கள், அந்தணர்கள் உட்பட்ட உலகின், இந்த தேவ மனிதர்களின் மத்தியில் பகவான் அனைத்தையும் தன்னுள் அடக்கியே கொண்டுள்ளார். அனபிபவனீய நிலையை கொண்டுள்ளார். உறுதியாகவே அனைத்தையும் உய்த்துணர்ந்து கொண்டவராவார். அனைத்தையும் தன் வசமாக்கிக் கொண்டவராவார். இக் காரணத்தினாலும் பகவான் ‘ததாகதர்’ எனப்படுகிறார்.

ஏதமத்தங் பகவா அவோச. தத்தேதங் இதி வுச்சதி.

பாக்கியமுள்ள பகவான் இந்த விடயத்தினை இவ்வாறாக மொழிந்தருளினார். இந்த உத்தம விடயம் இவ்வாறாகவும் குறிப்பிடப்படுகிறது.

சப்பலோகங் அபிஞ்ஞாய – சப்பலோகே யதா ததங்
சப்பலோகவிசங்யுத்தோ – சப்பலோகே அனூபயோ

அனைத்து உலகங்களையும் உய்த்துணர்ர்து கொண்ட
அனைத்து உலக உண்மைகளையும் அறிந்த
அனைத்து லோகத்திலிருந்தும் விலகி இருந்த
அனைத்து லோகத்திற்குமான ஆசையை துறந்த

சப்பே சப்பாபிபூ தீரோ – சப்பகந்தப்பமோசனோ
புட்டஸ்ஸ பரமா சந்தி – நிப்பாணங் அகுதோபயங்

அனைத்தையும் அடக்கிய மகா முனிவரே
கிலேச கட்டுக்களை அவிழ்த்த மகா ரிஷியே
தாங்கள் கண்ட அந்த உத்தம முக்தியும்
எவ்வித பயமிலா உன்னத முக்தியே

ஏஸ கீணாசவோ புத்தோ – அனீகோ சின்னசங்சயோ
சப்பகம்மக்கயங் பத்தோ – விமுத்தோ உபதிசங்கயோ

கிலேசங்களற்ற மகா வீரரே
துக்கமற்ற சந்தேகங்களற்ற மகா முனிவரே
எல்லா கர்மத்தினை அழித்த முனியே…
அகுசலங்களற்ற அரஹத் முனியே…

ஏச சோ பகவா புத்தோ – ஏச சீஹோ அனுத்தரோ
சதேவகஸ்ஸ லோகஸ்ஸ – ப்ரஹ்மசக்கங் பவத்தயீ

எம் பாக்கியமுள்ள பகவானே…
உலகின் உன்னத மகா அரியே…
தேவ மனிதர்களுக்கு சுகத்தை அளிக்கும்
தர்ம சில்லை சுழற்றும் முனியே…

இதி தேவா மனுஸ்ஸா ச – யே புத்தங் சரணங் கதா
சங்கம்ம தங் நமஸ்ஸன்தி – மஹன்தங் வீதசாரதங்

உலகின் அறிவுள்ள தேவ மாந்தர்…
பகவானையே சரணடைந்தோர்…
விசாரத குணப்பெருங்கடலை..
காணும் அனைவரும் வீழ்ந்தே வணங்கினர்.

தன்தோ தமயதங் செட்டோ – சன்தோ சமயதங் இசி
முத்தோ மோசயதங் அக்கோ திண்ணோ தாரயதஹ் வரோ

அடங்கிய மனம் கொண்ட புத்த பகவானே…
ஏனையோரை அடக்கும் மகா பகவானே..
சாந்த மனம் கொண்ட புத்த பகவானே..
ஏனையோரை சுhந்தப்படுத்தும் மகா பகவானே…
துக்கத்திலிருந்து மீண்ட புத்த பகவானே…
ஏனையோரையும் மீட்கும் மகா பகவானே…
உலகிலிருந்து கரையேறிய புத்த பகவானே…
ஏனையோரை கரையேற்றும் மகா பகவானே…

இதி ஹேதங் நமஸ்ஸன்தி மஹன்தங் வீதசாரதங்
சதேவகஸ்மிங் லோகஸ்மிங் நத்தி தே படிபுக்கலோ’தி

உலகின் மகா குணப்பெருங்கடலே
தங்களை தேவ மாந்தரும் வணங்குவர்..
மூவுலகிலும் தங்களுக்கு நிகரான எவரும் இல்லை.
தாங்களே எமது மகா பகவான்…

அயம்பி அத்தோ வுத்தோ பகவதா இதி மே சுதந்தி
பாக்கியமுள்ள பகவானால் இவ்வாறாக இந்த அர்த்தம் மொழியப்பட்டது. என்னால் இவ்வாறே கேட்கப்பட்டது.

ஏதேன சச்சேன சுவத்தி ஹோது இந்த சத்தியத்தின் பலத்தினால் அனைவருக்கும் நன்மை கிட்ட வேண்டும்.