யானீத பூதானி சமாகதானி
பும்மானி வா யானிவ அன்தலிக்கே
சப்பேவ பூதா சுமணா பவன்து
அதோபி சக்கச்ச சுணந்து பாசிதங்
இப்போது மண்ணிலும் விண்ணிலும் கூடியிருக்கும்
தேவர்கள் உட்பட்ட அனைத்து பூதகனங்களும்
சுகம் கொண்ட மனமுடையவராகட்டும் அதேபோல்
நான் இப்போது கூறும் விடயத்திற்கு நன்கு செவிசாயுங்கள்.
தஸ்மா ஹி பூதா நிசாமேத சப்பே
மெத்தங் கரோத மானுசியா பஜாய
திவா ச சத்தோ ச ஹரன்தி யே பலிங்
தஜ்மா ஹி னே ரக்கத அப்பமத்தா
அனைவரும் இதனை நன்கு கேளுங்கள்.
அனைத்து மனிதர்கள் மீதும் அன்பினை செலுத்துங்கள்.
யங் கிஞ்சி வித்தங் இத வா ஹுரங் வா
சக்கேஸு வா யங் ரதனங் பணீதங்
ந நோ சமங் அத்தி ததாகதேன
இதம்பி புத்தே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
இவ் உலகிலோ பரலோகத்திலோ இருக்கும் ஏதேனும் உயர் செல்வத்திற்கு
அல்லது தேவலோகத்திலேனும் இருக்கும் உன்னத மாணிக்கத்திற்கு
புத்த பகவானை ஒருபோதும் நிகர்படுத்த முடியாது.
இது பகவானுள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
கயங் விராகங் அமதங் பணீதங்
யதஜ்ஜகா சக்யமுனீ சமாஹிதோ
ந தேன தம்மேன சமத்தி கிஞ்சி
இதம்பி தம்மே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
பகவான் உய்த்துணர்ந்த இந்த தர்மம் கிலேசங்களை வேரறுக்கும்
நிராசையை தோற்றுவிக்கும் அமிர்தம் போன்ற மோட்சத்தினையுடையது
அந்த உத்தம தர்மத்திற்கு சமம்படுத்தக்கூடிய எதுவும் எங்குமில்லை
இது தர்மத்தில் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
யங் புத்தசெட்டோ பரிவண்ணயீ சுசிங்
சமாதிமானன்தரிகஞ்ஞமாஹு
சமாதினா தேன சமோ ந விஜ்ஜதி
இதம்பி தம்மே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
புத்த பகவான் நன்மை எனக்கூறியது
எங்கும் தங்கிராத நிலைகொண்ட உளச்சாமதிக்காகும்.
அந்த உயர் சமாதிக்கு நிகரானது எதுவுமேயில்லை
இது தர்மத்தில் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
யே புக்கலா அட்ட சதங் பசத்தா
சத்தாரி ஏதானி யுகானி ஹொன்தி
தே தக்கிணெய்யா சுகதஸ்ஸ சாவகா
ஏதேசு தின்னானி மஹப்பலானி
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
சிறந்தவர்கள் போற்றும் எண்வகையோர் உள்ளனர்.
சோடிகளாக அந்த உத்தமர்கள் நால்வகையானோர்
இவர்களே தானமேற்க தகுதியுடைய புத்த சீடர்களாவர்
இவர்களுக்கு அளிக்கும் தானம் பெரும் புண்ணிய விளைவுகளைத் தரும்
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
யே சுப்பயுத்தா மனசா தழ்ஹேன
நிக்காமினோ கோதமசாசனம்ஹி
தே பத்திபத்தா அமதங் விகய்ஹ
லத்தா முதா நிப்புதிங் புஞ்ஜமானா
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
திடமான மனதுடன் எவரேனும் இந்த தர்மத்தில் ஈடுபடுவாராயின்
அவர்கள் இந்த புத்தசாசனத்திலே அனைத்து கிலேசங்களில் இருந்தும் நீங்கிவிடுவார்கள்
அவர்கள் அதி சுந்தரமான மோட்சத்தினை உறுதி செய்த பின்னர்
உன்னத முக்தியை தாம் விரும்பிய விரும்பியபடி அனுபவிப்பார்கள்.
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
யதின்தகீலோ படவின்சிதோசியா
சதுப்பி வாதேபி அசம்பகம்பியோ
ததூபமங் சப்புரிசங் வதாமி
யோ அரியசச்சானி அவெச்ச பஸ்ஸதி
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
நிலத்தில் உறுதியாக ஊன்றிவிட்ட கற்றூண் நாற்றிசையிலிருந்து எவ்வளவு பெரிய காற்று வீசினாலும் அசையாது.
ஆரிய சத்தியங்களை உறுதி செய்த அந்த சத்புருஷரை நான் இவ்வாறான உறுதியான கற்றூனிற்கே உவமித்துக் கூறுவேன்.
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
யே அரிய சச்சானி விபாவயன்தி
கம்பீரபஞ்ஞேன சுதேசிதானி
கிஞ்சாபி தே ஹொன்தி புசப்பமத்தா
ந தே பவங் அட்டமங் ஆதியன்தி
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
ஆழ்ந்த ஞானமிகுந்த பகவான் மொழிந்தருளிய ஆரிய சத்தியங்களை உய்த்துணர்ந்தவர்கள்
சன்சாரத்தில் எவ்வளவு தாமதமாகினாலும் அவர்களுக்கு ஒருபோதும் எட்டாவது பிறப்பில்லை.
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
சஹாவஸ்ஸ தஸ்ஸனசம்பதாய
தயஸ்ஸு தம்மா ஜஹிதா பவன்தி
சக்காயதிட்டி விசிகிச்சிதஞ்ச
சீலப்பதங்வாபி யதத்தி கிஞ்சி
சதூஹபாயேஹி ச விப்பமுத்தோ
சசாபி டானானி அபப்போகாதுங்
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
அவர் (முதலாவது) ஞானப்பேற்று நிலையை அடையும்போதே
அகத்தில் இருக்கும் மூவகை பிணைப்புகள் அழிந்துபோகும்.
சக்காய திட்டியுடன் கூடிய தர்மத்தின் மீதான ஐயமும் தவறான விரதங்கள் என்பவையே அவையாம்.
நால்வகை நரகங்களில் ஒருபோதும் பிறவாத அவர் அங்கு நேரடியாக பிறக்க வழிவகுக்கும் அறுவகை பாவங்களையும் செய்யார்.
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
கிஞ்சாபி சோ கம்மங் கரோதி பாபகங்
காயேன வாசா உத சேதசா வா
அபப்போ சோ தஸ்ஸ படிச்சாதாய
அபப்பதா திட்டபதஸ்ஸ வுத்தா
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
மனம், வாக்கு காயம் என்பவற்றை கொண்டு அவர் ஏதேனும் சிறு பாவங்களை
செய்தாரேயானாலும் அவர் அதனை மறைத்துக்கொள்ள மாட்டார்.
தர்மத்தினை உய்த்துணர்ந்தோருள் இருக்கும் ஒரு நியதியே இதுவாகும்.
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
வனப்பகும்பே யதாபுஸ்ஸிதக்கே
கிம்ஹானமாசே படமஸ்மிங்கிம்ஹே
ததூபமங் தம்மவரங் அதேசயீ
நிப்பாணகாமிங் பரமங் ஹிதாய
இதம்பி புத்தே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
கோடைக் காலத்திற்கு முன் வரும் வசந்தகாலத்தில்
சோலைகள் மலர்களினாலும் காய்கனிகளினாலும் நிரம்பி வனப்பினைத் தருகிறது.
அதைப்போன்றே பகவான் இந்த உத்தம தர்மத்தினை மொழிந்தருளினார்.
அந்த தர்மம் பரம சுகமான மோட்சத்திற்கே வழிவகுக்கிறது.
இது பகவானுள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
வரோ வரஞ்ஞ} வரதோ வராஹரோ
அனுத்தரோ தம்மவரங் அதேசயீ
இதம்பி புத்தே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
உத்தம மகா முனியான பகவான் உத்தம தர்மத்தினை அறிந்து
உத்தமமான முறையில் அதை உலகிற்கு மொழிந்தருளினார்.
இது பகவானுள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
கீணங் புராணங் நவங் நத்தி சம்பவங்
விரத்தசித்தா ஆயதிகே பவஸ்மிங்
தே கீணபீஜா அவிரூள்ஹிச்சன்தா
நிப்பன்தி தீரா யதாயம்பதீபோ
இதம்பி சங்கே ரதனங் பணீதங்
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
பழைய கர்மங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன
மீண்டும் விளைவுகள் தரும் கர்மங்கள் சேர்வதில்லை
அழிந்த விதை மீண்டும் முளையாதது போல் அந்த நிக்கிலேச மனம்
எந்த பிறப்பிலும் ஒட்டிக்கொள்ளாது.
இந்த தீபம் அனைந்துவிடுவதைப்போன்று அந்த அரஹத் தேரர்களும் அணைந்துவிடுவார்கள்.
இது சங்கையருள் நிலைத்திருக்கும் உன்னத இரத்தினமாகும்.
இந்த சத்திய சொல்லால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.
யானீத பூதானி சமாகதானி
பும்மானி வா யானிவ அன்தலிக்கே
ததாகதங் தேவ மனுஸ்ஸ பூஜிதங்
புத்தங் நமஸ்ஸாம சுவத்தி ஹோது
இச்சமயத்தில் மண்ணிலும் விண்ணிலும் அனைத்து வித தேவர்களும் இங்கு கூடியிருக்கிறார்கள்.
தேவ மனிதர்களின் பூஜைக்கு பாத்திரமாகும் அந்த புத்த பகவானை இப்போதும் வணங்குவோம்.
அதன் காரணமாக அனைவருக்கும் நன்மை உண்டாகுக!
யானீத பூதானி சமாகதானி
பும்மானி வா யானிவ அன்தலிக்கே
ததாகதங் தேவ மனுஸ்ஸ பூஜிதங்
தம்மங் நமஸ்ஸாம சுவத்தி ஹோது
மண்ணிலும் விண்ணிலும் அனைத்து வித தேவர்களும் இங்கு கூடியிருக்கிறார்கள்.
தேவ மனிதர்களின் பூஜைக்கு பாத்திரமாகும் அந்த புத்த பகவானது தர்மத்தினை இப்போதும் வணங்குவோம்.
அதன் காரணமாக அனைவருக்கும் நன்மை உண்டாகுக!
யானீத பூதானி சமாகதானி
பும்மானி வா யானிவ அன்தலிக்கே
ததாகதங் தேவ மனுஸ்ஸ பூஜிதங்
சங்கங் நமஸ்ஸாம சுவத்தி ஹோது
மண்ணிலும் விண்ணிலும் அனைத்து வித தேவர்களும் இங்கு கூடியிருக்கிறார்கள்.
தேவ மனிதர்களின் பூஜைக்கு பாத்திரமாகும் அந்த புத்த பகவனது சங்கையரை இப்போதும் வணங்குவோம்.
அதன் காரணமாக அனைவருக்கும் நன்மை உண்டாகுக!
ஏதேன சச்சேன சுவத்தி ஹோது
இந்த சத்தியத்தின் பலத்தினால் அனைவருக்கும் நன்மை உண்டாகுக!