நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ!
அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும்.
ஏவங் மே சுதங் ஏகங் சமயங் பகவா பாராணசியங் விஹரதி இசிபதனே மிகதாயே. தத்ர கோ பகவா பஞ்சவக்கியே பிக்கூ ஆமன்தேசி
என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசி இசிபத்தன எனும் மான்கள் அபய பூமியில் தரித்திருந்தார். அச்சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் ஐந்து பிக்குமார்களை நோக்கி இந்த தம்மசக்க பவத்தன சூத்திரத்தை மொழிந்தருளினார்.
த்வே மே பிக்கவே, அன்தா பப்பஜிதேன ந சேவிதப்பா
புண்ணியமிகு பிக்குகளே, துறவிகளால் மேற்கொள்ளக்கூடாத அந்தங்கள் இரண்டு உள்ளது.
யோசா’யங் காமேசு காமசுகல்லிகானுயோகோ ஹீனோ கம்மோ போதுஜ்ஜனிகோ அனரியோ அனத்தசங்ஹிதோ
(துறவை மேற்கொண்டவர்) இந்த காமத்தினோடு, காம சுகத்தின் மீது ஒட்டி உறவாடி வசிப்பாராயின் அது இழிவானதாகும். கீழ்த்தரமானதாகும். போதுஜ்ஜனர் பழக்கப்படுத்தும் ஒன்றாகும். உத்தம மனிதர்கள் பழக்கப்படுத்தாத ஒன்றாகும். அர்த்தமற்றதாகும்.
யோசா’யங் அத்தகிலமதானுயோகோ துக்கோ அனரியோ அனத்தசங்ஹிதோ
(துறவை மேற்கொண்டவர்) தன்னை வருத்திக்கொள்ளும் ஏதேனும் செயற்பாடுகளை தன் விடுதலை மார்க்கமாகக்கொண்டு செய்வாராயின் அது துக்கத்திற்குரியதாகும். உத்தம மா மனிதர்கள் பழக்கப்படுத்தாததாகும். அர்த்தமற்றதாகும்.
ஏதே தே பிக்கவே, உபோ அன்தே அனுபகம்ம மஜ்ஜிமா படிபதா ததாகதேன அபிசம்புத்தா சக்குகரணீ ஞானகரணீ உபசமாய அபிஞ்ஞாய சம்போதாய நிப்பாணாய சங்வத்ததி
புண்ணியமிகு பிக்குகளே, இந்த இரு அந்தங்களுக்குள் பிரவேசிக்காது, ததாகதரால் மத்தியஸ்த செயற்பாடு உய்த்துணரப்பட்டது. இந்த மத்தியஸ்த செயற்பாடு தர்ம விழிகளை பெற்றுக்கொடுக்கும். அறிவை தோற்றுவிக்கும். உள்ளத்தணிவை ஏற்படுத்தும். விசேட ஞானத்தினை தரும். உய்த்துணர்வினை ஏற்படுத்தும். மோட்சத்திற்காகவே வழி வகுக்கும்.
கதமா ச சா பிக்கவே, மஜ்ஜிமா படிபதா ததாகதேன அபிசம்புத்தா சக்குகரணீ ஞானகரணீ உபசமாய அபிஞ்ஞாய சம்போதாய நிப்பாணாய சங்வத்ததி?
புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரால் உய்த்துணரப்பட்ட, தர்ம விழிகளை பெற்றுக்கொடுக்கும், அறிவை தோற்றுவிக்கும், உள்ளத்தணிவை ஏற்படுத்தும், விசேட ஞானத்தினை தரும், உய்த்துணர்வினை ஏற்படுத்தும், மோட்சத்திற்காகவே வழி வகுக்கும் அந்த மத்தியஸ்த செயற்பாடு என்றால் என்ன?
அயமேவ அரியோ அட்டங்கிகோ மக்கோ. செய்யதீதங்: சம்மாதிட்டி சம்மாசங்கப்போ சம்மாவாசா சம்மாகம்மன்தோ சம்மா ஆஜீவோ சம்மாவாயாமோ சம்மாசதி சம்மாசமாதி
அது என்றால் இந்த ஆரிய எண் சீர் வழியேயாகும். அவையாவன, நற் பார்வை, நற் சிந்தனை, நல் வார்த்தை, நற் செயல், நல் ஜீவனோபாயம், நல் வீரியம், நல்ல விழிப்புணர்வு, நல் உளச்சமாதி எனும் இவையே ஆகும்.
அயங் கோ சா பிக்கவே, மஜ்ஜிமா படிபதா ததாகதேன அபிசம்புத்தா சக்குகரணீ ஞானகரணீ உபசமாய அபிஞ்ஞாய சம்போதாய நிப்பாணாய சங்வத்ததி
புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரால் உய்த்துணரப்பட்ட, தர்ம விழிகளை பெற்றுக்கொடுக்கும், அறிவை தோற்றுவிக்கும், தணிவை ஏற்படுத்தும், விசேட ஞானத்தினை தரும், உய்த்துணர்வினை ஏற்படுத்தும், மோட்சத்திற்காகவே வழி வகுக்கும் அந்த மத்தியஸ்த செயற்பாடு இதுவே.
இதங் கோ பன பிக்கவே, துக்கங் அரியசச்சங். ஜாதி’பி துக்கா ஜரா’பி துக்கா வ்யாதி’பி துக்கோ மரணம்பி’துக்கங் அப்பியேஹி சம்பயோகோ துக்கோ பியேஹி விப்பயோகோ துக்கோ யம்பிச்சங் ந லபதி தம்பி துக்கங் சங்கித்தேன பஞ்சுபாதானக்கந்தா துக்கா.
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கம் எனும் ஆரிய சத்தியமாகும். பிறப்பு துக்கமாகும். முதுமையடைவது துக்கமாகும். நோய் நொடிகள் ஏற்படுவதும் துக்கமாகும். மரணமடைவதும் துக்கமாகும். பிரியமற்ற நபர்களுடனும் பிரியமற்ற வஸ்துக்களுடனும் சேர்ந்து வாழ்தல் துக்கமாகும். பிரியமான நபர்கள், பிரியமான வஸ்துக்கள் என்பன இல்லாது பிரிந்து வாழ்தலும் துக்கமாகும். விரும்பும் ஏதேனும் இருப்பின் அவை கிடைக்காமையும் துக்கமாகும். சுருங்கக்கூறின் இந்த பஞ்ச உபாதானஸ்கந்தங்களுமே துக்கமாகும்.
இதங் கோ பன பிக்கவே, துக்கசமுதயங் அரியசச்சங். யாயங் தண்ஹா போனோபவிகா நந்திராக சஹகதா தத்ரதத்ராபிநந்தினி. செய்யதீதங்: காம தண்ஹா பவ தண்ஹா விபவ தண்ஹா
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியமாகும். மறு பிறவியினை ஏற்படுத்திக்கொடுக்கும், விருப்புடன் ஒட்டிக்கொள்ளும், அவ் அவ் இடத்தினை இன்பத்தோடு ஏற்றுக்கொள்ளும் தண்ஹா இருப்பின் அதுவே துக்கத்தின் தோற்றமாகும். அவையாவன, காம தண்ஹா, பவ தண்ஹா, விபவ தண்ஹா என்பவையாகும்.
இதங் கோ பன பிக்கவே, துக்க நிரோதங் அரியசச்சங் யோ தஸ்ஸாயேவ தண்ஹாய அசேசவிராகநிரோதோ சாகோ படிநிஸ்ஸக்கோ முத்தி அனாலயோ.
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியமாகும். (மேற்குறிப்பிட்ட) அந்த தண்ஹாவே மீதமின்றி விருப்பின்றி இல்லாமல் போகுமாயின், கை விடுவதாயின், அழியுமாயின், அந்த தண்ஹாவிலிருந்து மீள்வதாயின் விருப்பு இல்லாமல் போவதாயின் அதுவே துக்கத்தின் அழிவாகும்.
இதங் கோ பன பிக்கவே, துக்கநிரோதகாமினிபடிபதா அரியசச்சங். அயமேவ அரியோ அட்டங்கிகோ மக்கோ. செய்யதீதங்: சம்மாதிட்டி சம்மாசங்கப்போ சம்மாவாசா சம்மாகம்மன்தோ சம்மா ஆஜீவோ சம்மாவாயாமோ சம்மாசதி சம்மாசமாதி.
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்க அழிவிற்கான செயற்பாடு எனும்; ஆரிய சத்தியமாகும். அதுவே இந்த ஆரிய எண்சீர் வழியாகும். அவையாவன, நற்பார்வை, நற்சிந்தனை, நல் வார்த்தை, நற் செயல், நல் ஜீவனோபாயம், நல் வீரியம், நல்ல விழிப்புணர்வு, நல் உளச்சமாதி எனும் இவையே.
இதங் துக்கங் அரியசச்சந்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கம் எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.
தங் கோ பனிதங் துக்கங் அரியசச்சங் பரிஞ்ஞெய்யந்தி மே பிக்கவே, , புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கம் எனும் ஆரிய சத்தியத்தினை பரிபூரணமாக உய்த்துணர வேண்டும் என எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.
தங் கோ பனிதங் துக்கங் அரியசச்சங் பரிஞ்ஞாதன்தி மே பிக்கவே, , புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கம் எனும் ஆரிய சத்தியம் என்னால் பரிபூரணமாக உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது என எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.
இதங் துக்கசமுதயங் அரியசச்சன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.
தங் கோ பனிதங் துக்கசமுதயங் அரியசச்சங் பஹாதப்பன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியத்தினை பரிபூரணமாக அழிக்க வேண்டும் என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.
தங் கோ பனிதங் துக்க சமுதயங் அரியசச்சங் பஹீனந்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இந்த துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம் என்னால் பரிபூரணமாக அழிக்கப்பட்டது என்று எனக்கு இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.
இதங் துக்கநிரோதங் அரியசச்சன்தி மே பிக்கவே, புப்பே அனனுஸ்சுதேசு தம்மேசு சக்குங் உதபாதி ஞானங் உதபாதி பஞ்ஞா உதபாதி விஜ்ஜா உதபாதி ஆலோகோ உதபாதி
புண்ணியமிகு பிக்குகளே, இதுவே துக்கத்தின் அழிவு எனும் ஆரிய சத்தியம் என்று இதுவரை ஒருபோதும் கேட்டிராத தர்மங்களில் எனக்கு தர்ம விழிகள் தோன்றின. ஞானம் உதித்தது. பிரக்ஞை உதித்தது. மெய்யொளி தோன்றியது. ஒளி தோன்றியது.